மன்னாரில் மீட்கப்பட்ட மர்ம பொதியில் இருந்து கசிந்த இரத்தம்!!

மன்னார் – சௌத்பார் புகையிரத நிலையத்திற்கு செல்லும் பிரதான வீதியில் வீடு ஒன்றுக்கு அருகில் நேற்று மாலை சந்தேகத்திற்கிடமாக கட்டப்பட்ட நிலையில் பொதி ஒன்று காணப்பட்டுள்ளது. எனினும், பிரதேச மக்கள் அது தொடர்பில் எந்த கவனமும் செலுத்தவில்லை.

ஆனால், நேற்று மதியம் குறித்த பொதியினுள் இருந்து துர்நாற்றம் வீசுவதை அவதானித்த மக்கள், அருகில் சென்று பார்த்த போது பொதியில் இருந்து இரத்தம் சிந்துவதை கண்டு அச்சமடைந்துள்ளனர்.

அதனை தொடர்ந்து குறித்த பொதி தொடர்பாக பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்துள்ளனர். விரைந்து செயற்பட்ட பொலிஸார் பொதியினை அவிழ்த்து பார்த்த போது அடித்து கொல்லப்பட்ட நாய் ஒன்றின் சடலம் அதில் இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கனடாவில் காணாமல் போன இலங்கை தமிழ் இளைஞனின் ஆபத்தான நிலை!!

கனடாவில் கடலில் விழுந்து காணாமல் போன இலங்கை தமிழ் இளைஞன் உயிரிழந்திருக்கலாம் என அந்நாட்டு பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கடந்த ஞாயிற்று கிழமை இரவு ஒன்டாரியோ மாகாணத்தில் Bluffers Park அருகே கப்பலில் இருந்து கடலில் விழுந்த தமிழ் இளைஞர் ஒருவர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

கடலில் விழுந்த இளைஞனை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் அவர் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் ஊகித்துள்ளனர்.

கடந்த 10ஆம் திகதி இரவு 10 மணியளில் Bluffers Park அருகே கப்பலில் இருந்து நீரில் விழுந்து தனது நண்பர் காணாமல் போயுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தனது நண்பர் கிடைத்து விடுவார் என்ற நம்பிக்கையில் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அவ்விடத்திற்கு சென்றுள்ளனர்.

காணாமல் போன 27 வயதுடைய பார்த்தீபன் சுப்ரமணியம் என்ற இளைஞர் இலங்கையை சேர்ந்தவர் எனவும், அவர் IT துறையில் பணியாற்றுவதோடு DJ இசை துறையில் ஈடுபடுவதாகவும் அவரது உறவினர் ஒருவர் தெரிவித்திருந்தார்.

பொலிஸார் மற்றும் கடலோர பாதுகாப்பு பிரிவினர் பார்தீபனை தேடும் நடவடிக்கையில் ஈடுபபட்டிருந்தனர். எனினும் அவர் நீரில் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பார்த்தீபன் காணாமல் போவதற்கு முன்னர் இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். எனினும் அந்த வீடியோவில் அவர் தனது பாதுகாப்பிற்காக ஜெக்கட் அணிந்திருக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் சுய முயற்சி சேமிப்பு எனும் தொனிப்பொருளில் சிறுவர் சந்தை!!

வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையில் ‘சிறுவர் சந்தை’ என்ற நிகழ்வு இன்று (14.06) பாடசாலையின் அதிபர் ரட்ணசிங்கம் நவரட்ணம் தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வில் பிரதம விருந்தினராக ஆரம்பபிரிவு உதவிக்கல்வி பணிப்பாளர் சிவலிங்கம் முரளிதரன் கலந்துகொண்டு சிறுவர் சந்தையை திறந்து வைத்தார்.

ஆரம்பபிரிவு மாணவர்களுக்காக தனியார் வங்கி ஒன்றின் அனுசரணையுடன் செயற்படுத்தப்பட்ட அந்நிகழ்வில் சிறுவர்களின் ஆழுமையை வளர்க்கவும் இச்சிறுவர் சந்தையூடாக பெறப்படும் நிதியானது சிறுவர்களின் கணக்கில் வரவு வைக்கப்படும் என பாடசாலையின் அதிபர் தெரிவித்துள்ளார்.

சிறுவர்களின் சந்தை நிகழ்வில் சிறுவர்கள் வியாபாரிகளாகவும், விவசாயிகளாகவும் வேடமிட்டு வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததுடன், அதிதிகள் சிறுவர் சந்தையை பார்வையிட்டு சிறுவர்களை ஊக்குவித்திருந்தனர். மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டு ஆர்வமுடன் பொருட்களை கொள்வனவு செய்தனர்.

நிகழ்வில் பாடசாலைகளுக்கான வலயப் பிரதிநிதி கு.வசந்தகுமாரி, டி.எப்.சி.சி வங்கியின் பிராந்திய முகாமையாளர் ஆர்.ரவீந்திரா, முகாமையாளர் எஸ்.வில்லவராஜன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

கனடா தீ விபத்தில் குடும்பத்தை இழந்தவர் விடுக்கும் எச்சரிக்கை!!

திங்களன்று கனடாவின் வான்கூவரில் நிகழ்ந்த தீ விபத்தில் தனது மனைவியையும் மகனையும் இழந்த ஒரு குடும்பத் தலைவர் மரத்தாலான அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தியை விடுத்துள்ளார்.

Hossein Koshkoye Delshad (52), தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் வடக்கு வான்கூவரிலுள்ள ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பில் வசித்து வந்தார்.

திங்கட்கிழமை நள்ளிரவில் Lynn Valley என்னுமிடத்தில் அமைந்துள்ள Mountain Village Garden அடுக்கு மாடிக் குடியிருப்பில் திடீரென்று தீப்பற்றியது.

மரத்தாலான அந்த கட்டிடத்திலிருந்து 150க்கும் மேலானோர் உடனடியாக வெளியேறும்படி கேட்டுக்கொள்ளப்பட்டார்கள்.

16 பேர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள், அவர்களில் சிலரின் நிலைமை மோசமாக இருந்தது. நள்ளிரவு மணி 1.30க்கு புகை வாடை வீசுவதை உணர்ந்து Delshad தனது குடும்பத்தினரை படபடவென எழுப்பினார்.

கீழே இருந்த ட்ராம்போலினில் குதித்து தப்பி விடலாம் என முடிவு செய்து எல்லோரையும் குதிக்கும்படி கூற அவரது மூத்த மகன் மட்டும் குதித்து விட்டான், ஆனால் அவரது மனைவியும் இளைய மகனும் குதிக்கவில்லை.

படுக்கையறையை விட்டு வெளியே வந்து பால்கனி வழியாக தப்பிக்க ஏதாவது வழி இருக்கிறதா என்று பார்த்துவிட்டு மீண்டும் படுக்கையறையை நெருங்க முயலும்போது நிலைமை கைமீறிப்போய் விட்டதை Delshad உணர்ந்தார்.

பற்றியெரிந்த தீ Delshadஇன் மனைவியையும் இளைய மகனையும் தனது கோரப்பசிக்கு இரையாக்கியிருந்தது.

மோசமான காயங்கள் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள Delshadக்கு அறுவைசிகிச்சை ஒன்று செய்யப்பட உள்ளது.

அந்த நிலைமையிலும் அவர் தன்போல் மர வீடுகளில் வசிப்போருக்கு ஒரு எச்சரிக்கை செய்தியை தெரிவிக்கிறார்.

மர வீடுகள் ஆபத்தானவை என்று கூறும் Delshad, நீங்கள் எவ்வளவு கவனமாக இருந்தாலும் தப்ப முடியாது, அதற்கு திங்கட்கிழமை நடந்த சம்பவமே சாட்சி என்கிறார்

கணவனை கொலை செய்த மனைவி சொன்ன அதிர்ச்சி வாக்குமூலம்!!

தமிழகத்தில் தகாத உறவுக்கு கணவன் இடையூராக இருந்ததால், அவரை கொலை செய்தேன் என்று மனைவி கூறியிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பூதகுடியைச் சேர்ந்தவர் வடிவேல். இவருக்கு செல்லம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் திருமணம் முடிந்த சில மாதங்களிலே வடிவேல் சென்னைக்கு வேலைக்காக சென்றுள்ளார்.
அப்போது வடிவேலுவின் சம்பளம் போதுமானதாக இல்லாத காரணத்தினால், செல்லம்மாள் கூலி வேலைக்கு சென்றுள்ளார்.

வேலைக்கு சென்ற இடத்தில் செல்லம்மாளுக்கு கலையரசன் என்பவர் அறிமுகமாகியுள்ளார். முதலில் நண்பர்களாக பழகிய இவர்களின் நட்பு, நாளைடைவில் தகாத உறவு வைக்கும் அளவிற்கு மாறியுள்ளது.

இந்த தகவல் வடிவேலுவுக்கு தெரியவர உடனே, அவர் மனைவியான செல்லம்மாளுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

தன்னுடைய தகாத உறவுக்கு கணவன் இடையூராக இருப்பதால், அவரை தீர்த்து கட்ட வேண்டும் என்று செல்லம்மாள் முடிவு செய்துள்ளார். இதற்காக கலையரசனையும் உதவிக்கு அழைத்துள்ளார்.

அதன் பின் வடிவேலுவுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது என்பதால், செல்லம்மாள் அவருக்கு மது வாங்கிக் கொடுத்துள்ளார். மது போதையில் தள்ளாடிக் கொண்டிருந்த போது, உடனடியாக கலையரசனை வீட்டிற்கு அழைத்துள்ளார்.

வீட்டிற்கு வந்த அவர் போதையில் இருந்த வடிவேலுவை கம்பியால் தாக்கியுள்ளார். செல்லம்மாளும் கம்பியால் தாக்கியுள்ளார்.

இதனால் பரிதாபமாக இறந்த வடிவேலுவை ஒரு சாக்கு பையில் போட்டு, அதை நான்கு வழிச்சாலை வழியே செல்லும் ஓடையில் வீசியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து மறுநாள் காலை ஒன்றும் தெரியாதது போல், காவல்நிலையத்திற்கு சென்று, கணவனை காணவில்லை என்று புகார் அளித்துள்ளார்.

இந்த சம்பவம் நடந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிய நிலையில், செல்லம்மாளுக்கும், கலையரசனுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது.

இதனால் இருவரும் முன்பு போல் இல்லாத காரணத்தினால், கணவரை கொலை செய்த குற்றத்தை ஒப்புக் கொள்வதற்காக காவல்நிலையத்திற்கு சென்று என் கணவனை நான் தான் கொன்றேன் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து அவர் தந்த தகவல் அடிப்படையில் நான்குவழிச்சாலை ஓடைக்கு சென்ற பொலிசார் அந்த சாக்குப்படையை மீட்டு பார்த்த போது, அதில் வடிவேலுவின் எலும்புக் கூட்டை பார்த்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் கலையரசன் மற்றும் செல்லம்மாளை பொலிசார் கைது செய்துள்ளனர்.

சிறையில் இருந்த காதலனுக்காக காதலி செய்த அதிர்ச்சி செயல்!!

இந்தியாவில் சிறையில் இருந்த காதலனுக்காக போதை பொருள் கடத்திய மாணவியை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மேற்கு வங்கம் பராசத் நகரின் நாபரா பகுதியில் வசித்து வருபவர் சுஷ்மிதா மலாகர் (22). கல்லூரி மாணவியான இவர் போகிராத் சர்கார் என்ற நபரை காதலித்து வந்துள்ளார்.

ஆனால் போகிராத் சர்காரை புர்த்வான் நகரில் பிஜ்பூர் பகுதியில் நடந்த கொலை வழக்கில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டதால், அவர் சர்கார் டம்டம் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் சுஷ்மிதா சிறையில் இருக்கும் காதலனை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது காதலனுக்கு தேவைப்பட்டது என்று கூறி ஹெராயின் என்ற போதை பொருளை கடத்தி கொண்டு சென்றுள்ளார்.

இதை கண்டுபிடித்த பொலிசார் அவர் மேல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணமான 2 வாரத்தில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!!

தமிழகத்தில் திருமணமான இரண்டே வாரத்தில் மனைவியை நண்பர்கள் பாலியல் துஷ்பிரயோகம் செய்வதற்கு விட்டு வந்த கணவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள செட்டிமூலையைச் சேர்ந்தவர் வீரசாமி. விவசாய கூலியான இவருக்கு நீலாவதி என்ற மனைவியும், குமாரி (24) என்ற மகளும் உள்ளனர்.

இந்நிலையில் வீரசாமி தன்னுடைய மகளான குமாரியை திருத்துறைப்பூண்டி அருகே தலைக்காடு கிராமத்தைச் சேர்ந்த ராஜா என்பவருக்கு கடந்த 25-ஆம் திகதி திருமணம் செய்து வைத்துள்ளார்.

இதையடுத்து நேற்று பிறந்த வீட்டில் விருந்து முடிந்து, குமார் புகுந்த வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது குமாரியின் நகையை வாங்கு அடகு வைத்து ராஜா மது அருந்தியுள்ளார்.

அதன் பின் இரவு 11 மணிக்கு குமாரியை, அருகிலிருக்கும் தன்னுடைய நண்பர்களின் வீட்டிற்கு அழைத்துச் சென்று அங்கேயே விட்டு விட்டு வந்துள்ளார்.

இதனால் அந்த நண்பர்களால் குமாரி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து 2 மணிக்கு வீடு திரும்பிய குமாரியை, ராஜா கண்மூடித்தனமாக அடித்துள்ளார்.

இந்த தகவல் குமாரியின் வீட்டிற்கு தெரியவர, அவர்கள் அதிர்ச்சியடைந்து பொலிசாரிடம் புகார் அளித்ததால், தலைமறைவாக உள்ள குமாரியின் கணவர் மற்றும் அவரது நண்பர்களை பொலிசார் தேடி வருகின்றனர்.

25 ஆண்டுகளுக்கு பிறகு பழிக்கு பழி : தமிழகத்தை உலுக்கிய படுகொலை சம்பவம்!!

தமிழகத்தில் 25 ஆண்டுகளுக்கு முன்னர் தந்தை கொல்லப்பட்டதற்கு பழிக்கு பழியாக அவரது மகன் கொலையாளியை நண்பர்களுடன் சேர்ந்து வெட்டிப் படுகொலை செய்துள்ளார்.

நாமக்கல்- சேந்தமங்கலம் சாலையில் உள்ள தாதம்பட்டிமேடு பகுதியை சேர்ந்தவர் நல்லசாமி(வயது 50), மரம் வெட்டும் தொழிலாளியான இவர் கடந்த 10ம் திகதி சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து இவரது மகன் சுரேஷ் பொலிசில் புகார் அளிக்க, தனிப்படை அமைத்து குற்றவாளியை தேடி வந்தனர்.

விசாரணையில் தமிழ்செல்வன் மற்றும் அவரது நண்பர்கள் குமார், வினோத்குமார், முருகேந்திரன் ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் குற்றத்தை ஒப்புக் கொண்டனர்.

அதாவது தமிழ் செல்வனின் தந்தையை நல்லசாமி 25 ஆண்டுகளுக்கு முன்பு அவரது நண்பர் பூபதியுடன் சேர்ந்து கொலை செய்துள்ளார். இதற்காக இருவரும் 9 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அனுபவித்துள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பூபதி கொல்லப்பட்ட நிலையில், தற்போது நல்லசாமியும் இறந்துள்ளார். மகனை பார்க்க வரும் போது நல்லசாமியை தீர்த்துக்கட்ட முடிவு செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

மேலும் சம்பவ தினத்தன்று டாஸ்மாக் கடையில் நல்லசாமியை பார்த்த குமார், தமிழ்செல்வனுக்கு தகவல் அளித்துள்ளார். நண்பர்களுடன் விரைந்து தமிழ்செல்வன் நல்லசாமிக்கு மது வாங்கி கொடுத்து மயக்கமடைய செய்துள்ளார்.

அடுத்து பரமத்திரோட்டில் உள்ள லொறி பட்டறைக்கு அழைத்து சென்று சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளார்.

ஏற்கனவே தமிழ்செல்வன் மீது வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஆணாக மாறிய பெண் காதல் திருமணம் : தீக்குளித்து உயிரிழந்த பரிதாபம் : நடந்தது என்ன?

புதுச்சேரியில் காதலித்து திருமணம் செய்த மனைவி பிரிந்து போனதால் மனமுடைந்த கணவர் தீக்குளித்து உயிரிழந்துள்ளார்.

திருச்செந்தூரைச் சேர்ந்தவர் அக்ஷயதேவ்(வயது 28), புதுச்சேரியில் பணியாற்றி வருகிறார்.

பிறப்பில் பெண்ணாக இருந்த அக்ஷயதேவ், நாளடைவில் ஆணாக மாறினார், இவருக்கும் வடலூரை சேர்ந்த ராஜேஸ்வரி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

நாளடைவில் காதலாக மாறவே, இருவரும் சேர்ந்து வாழ முடிவு செய்தனர், தான் முழுமையான ஆணாக மாறியதும் குடும்ப வாழ்க்கையை தொடங்க முடிவு செய்தனர்.

இதன்படி கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் 30ம் திகதி அறுவை சிகிச்சை செய்து கொண்டார், இதனை தொடர்ந்து 2016ம் ஆண்டு யூன் 6ம் திகதி பெரியவர்கள் முன்னிலையில் இருவருக்கும் திருமணம் நடந்தது.

புதுமண தம்பதிகள் சந்தோஷமாக வாழ்ந்த நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பிலிருந்தே ராஜேஸ்வரிக்கு மனமாற்றம் ஏற்பட்டது.

தினமும் சண்டை போட்டு பிரிந்து செல்ல வழி தேடியுள்ளார், நாட்கள் செல்ல செல்ல சண்டை அதிகமாகி பிரிந்தும் சென்றுள்ளார்.

அக்ஷய்தேவ், உறவினர்கள் சமாதானம் செய்து வைத்தும் ராஜேஸ்வரி மனம் மாறவில்லை, இதனால் மனமுடைந்த அக்ஷய்தேவ், கடந்த 8ம் திகதி ராஜேஸ்வரியிடம் கடைசியாக பேச முடிவு செய்தார்.

அங்கே, மீண்டும் சேர்ந்து வாழலாம் என கெஞ்சியுள்ளார், ஆனால் ராஜேஸ்வரியின் மனம் மாறவில்லை, இதனால் தான் கொண்டு வந்த பெட்ரோலை ஊற்றி தீவைத்துக் கொண்டார்.

அருகிலுள்ள சாக்கடையில் விழ, உடனடியாக பொதுமக்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர்.

75 சதவிகித காயங்களுடன் அக்ஷய்தேவ்க்கு சிகிச்சை நடைபெற்று வந்த நிலையில், ஐந்து நாட்களுக்கு பின்னர் மரணமடைந்துள்ளா

500 அடி பள்ளத்தில் கவிழ்ந்து நொறுங்கிய பேருந்து : உடல்களை மீட்பதில் சிக்கல்!!

தமிழகத்தில் பேருந்து ஒன்று 500 அடி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில், 7 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஊட்டியில் சுற்றுலா பேருந்து ஒன்று, 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. உதகை-குன்னூர் இடையே மந்தாடா எனும் இடத்தில், பேருந்து சென்றுகொண்டிருந்தபோது கனமழை பெய்துள்ளது.

இதனால் நிலைதடுமாறிய அந்த பேருந்து 500 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்தது. பேருந்து முற்றிலும் உடைந்து நொறுங்கியது. இந்த விபத்தில் 7 பேர் பலியாகியதாக கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து, தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், இந்த விபத்தில் 25 பேர் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், பேருந்து இரண்டாக உடைந்ததால், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இச்சம்பவத்தினால் உதகை-குன்னூர் இடையேயான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த கோர சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரியாணியில் லெக் பீஸ் இல்லை : ஹொட்டல் அதிபர் மனைவியின் விரல்களை வெட்டிய ரவுடிகள்!!

திருநெல்வேலியில் பிரியாணியில் லெக் பீஸ் இல்லாத காரணத்தால் ஹொட்டல் அதிபர் மனைவி கை விரல்களை வெட்டி ரவுடிகள் அட்டகாசம் செய்துள்ளனர்.

ஜாகிர் உசேன் என்பவர் நடத்தி வரும் ஒரு ஹொட்டலில் நேற்று மாலையில் ஏழுபேர் கும்பல், பிரியாணி வாங்கிச் சென்றனர்.

கோபால சமுத்திரத்தில் தாமிரபரணியில் குளித்துவிட்டு, மது அருந்திவிட்டு பிரியாணி சாப்பிட்டுள்ளனர். அதில் சிக்கன் லெக் பீஸ் இல்லை என ஆத்திரமுற்றனர்.

அங்கிருந்து கிளம்பிய கும்பல், சுத்தமல்லி ஹொட்டலுக்கு வந்தனர். அங்கு ஜாகீர் உசேனின் மனைவி பானு இருந்தார். அவரை சரமாரியாக தாக்கிய கும்பல் அவரது தலையிலும் கையிலும் அரிவாளால் வெட்டினர்.

இதில் அவரது இடது கை விரல் துண்டிக்கப்பட்டது. கடைக்குள் இருந்த ஜாகீர் உசேன் மீதும் சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இதில் அவரது வலது கையின் நான்கு விரல்களை துண்டித்தனர். ‛லெக் பீஸ் வைக்கமாட்டாயா’ என கேட்டு அவரது காலிலும் வெட்டிவிட்டு தப்பிவிட்டனர்.

காயமுற்ற இருவரும் ஆபத்தான நிலையில் நெல்லை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். குற்றவாளிகளில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி இளைஞனின் உயிரை பறிந்த தாமரை கோபுரம் : இருட்டில் மறைந்திருந்த மர்மம்!!

கொழும்பு தாமரை கோபுரத்திலிருந்து வீழ்ந்து தமிழ் இளைஞன் விழுந்தமைக்கான காரணம் வெளியாகி உள்ளது.

கிளிநொச்சியை சேர்ந்த கோணேஸ்வரன் என்ற இளைஞன் தாமரைக்கோபுரத்தின் மின்தூக்கியிலிருந்து விழுந்து உயிரிழந்திருந்தார்.

மரணத்திற்கான உண்மையான காரணத்தை கொழும்பு திடீர் மரண விசாரணை அதிகாரி இரேஷா சமரவீர வெளியிட்டுள்ளார்.

தாமரைக் கோபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்தூக்கி இதுவரை முழுமையாக செய்து முடிக்கப்படவில்லை. மின்தூக்கி செயற்படுவதற்கான செங்குத்தான வழி மாத்திரமே அமைக்கப்பட்டுள்ளது. எனினும் அந்த பகுதி கடுமையான இருள் நிறைந்ததாக காணப்படுகின்றது. அதற்கான கதவுகளும் பூட்டப்பட்டிருக்கவில்லை.

இந்த நிலையில் புதிதாக பணிகளுக்கு செல்பவர்களுக்கு அது தொடர்பில் அறிவுருத்தப்படுவதும் இல்லை. மின் தூக்கியில் செல்வதற்காக காலடி எடுத்து வைத்தால் எந்த வித தடையுமின்றி விழுந்து உயிரிழக்க நேரிடும்.

அந்த வகையிலேயே குறித்த இளைஞரும் தாமரைக்கோபுரத்தின் 16 ஆவது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்துள்ளார் என திடீர் மரண விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நிர்மாணிக்கப்பட்ட வரும் அதியுயர் கோபுரமான தாமரை கோபுரத்தில் பணியில் ஈடுபட்டிருந்த வேளையில், 19 வயதான கோணேஸ்வரன் உயிரிழந்தார்.

மிகவும் குடும்ப வறுமை காரணமாக தனது மகன் வேலை தேடி கொழும்புக்கு வந்ததாக கோணேஸ்வரனின் தந்தை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு மோகத்தால் பத்தொன்பது இலட்சம் ரூபாயை பறிகொடுத்த நபர்கள்!!

திருகோணமலை – மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பத்தொன்பது இலட்சம் ரூபாய் பணத்தினை மோசடி செய்த நபர் ஒருவரை இம்மாதம் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார். மூதூர் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் நேற்று இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

மக்களடி வீதி, வாழைச்சேனை,பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபரை ஜேர்மனி நாட்டுக்கு அனுப்புவதாக கூறி மூதூர் பகுதியிலுள்ள இருவரிடம் பத்தொன்பது இலட்சம் ரூபாய் பணத்தினை மோசடி செய்துள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஒருவரிடம் பத்து இலட்சம் ரூபாவும், மற்றொருவரிடம் ஒன்பது இலட்சம் ரூபாய் பணத்தினை மோசடி செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் நேற்று பொலிஸார் கைது செய்துள்ளனர். இதேவேளை, சந்தேக நபரை பொலிஸார் மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

முல்லைத்தீவில் பெண்களை படம் பிடித்த நுண்நிதி நிறுவனத்தின் ஊழியர்கள்!!

முல்லைத்தீவு மாவட்டத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் நுண்நிதிக்கடன் பிரச்சினை தொடர்பில் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் அமைதியான முறையில் இன்று மக்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கபட்டுள்ளது.

இதில் முல்லைத்தீவு நகர்பகுதியில் இயங்கிவரும் நுண்நிதி கடன் வழங்கும் நிறுவனத்தின் ஊழியர்கள் எனக் கூறப்படும் சிலர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டுள்ள பெண்களை ஒளிப்படம் எடுத்துள்ளார்கள்.

நுண்நிதி கடன் செயற்பாட்டினால் அசௌகரியங்களை எதிர்நோக்கும் சமூகமாகங்களை பாதுகாக்கும் நோக்கில் குறிப்பாக பெண்களை பாதுகாக்கவும், இந்த நுண்நிதிக்கடன் செயற்பாட்டில் சிக்கியிருக்கும் மக்களை விடுவிக்கும் செயற்பாடுகளை மேற்கொள்ளவும் அரசாங்கத்திற்கும் இலங்கை மத்திய வங்கிக்கும் அழுத்தம் கொடுக்கும் வகையில் வடக்கின் சில மாவட்டங்களில் கவனயீர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

முல்லைத்தீவு மாவட்ட சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் சிவில் சமூக வலையமைப்பின் ஏற்பாட்டில் இன்று காலை முல்லைத்தீவு சுனாமி நினைவாலயத்தில் இருந்து கவனயீர்ப்பு பேரணியாக முல்லைத்தீவு நகர் பகுதி ஊடாக மாவட்ட செயலத்தினை மக்கள் சென்றடைந்துள்ளார்கள்.

இவ்வாறு ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட மக்களை முல்லைத்தீவு நகரில் பிரபல்யமான ஒரு கடன் வழங்கும் நிறுவனத்தின் ஊழியர்கள் ஒளிப்படம் எடுத்து பெண்களை அச்சுறுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதை அவதானிக்க முடிந்துள்ளது.

இதனையும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அவதானித்து கருத்து வெளியிட்டுள்ளார்கள்.

குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு நகர்பகுதியில் எட்டிற்கு மேற்பட்ட நுண்நிதி கடன் வழங்கும் தனியார் நிறுவனங்கள் செயற்பட்டு வருகின்றன.

இவ்வாறு கடன் வழங்கும் நிறுவனங்கள் பெண்களிடம் சென்று குழுக்களாக சேர்ந்து ஆசை வார்த்தை காட்டி கடன்களை வழங்கிவருவதாக பெண்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள்.

1000 ரூபாவுக்கு ஆசைப்பட்ட யுவதிக்கு நேர்ந்த கதி!!

காலியில் உள்ள லொத்தர் சீட்டுக்களை விநியோகிக்கும் அலுவலகத்தில் போலியான லொத்தர் சீட்டை சமர்ப்பித்து பணத்தை பெற்றுக்கொள்ள முயற்சித்த யுவதி ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இந்த யுவதி போலி லொத்தர் சீட்டை சமர்ப்பித்து ஆயிரம் ரூபா பணத்தை பெற்றுக்கொள்ள முயற்சித்துள்ளார்.

யுவதி வழங்கிய லொத்தர் சீட்டு தொடர்பில் சந்தேகம் கொண்ட அதிகாரிகள் அதனை கணனி மூலம் பரிசோதித்துள்ளனர். அப்போது அது போலியான லொத்தர் சீட்டு என்பது தெரியவந்துள்ளது.

காலி, கலஹிட்டியாகம பிரதேசத்தை சேர்ந்த 21 வயதான யுவதியே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளா

வவுனியா இலுப்பையடி வடிகாணில் கொட்டப்படும் கழிவுகளால் மக்கள் அசௌகரியம்!!

 

வவுனியா – இலுப்பையடி பகுதியில் உள்ள வடிகாண்களில் வீசப்பட்டு காணப்படும் கழிவுகளால் அப்பகுதியில் பயணிக்கும் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

வவுனியா, இலுப்பையடி பகுதி சனநெரிசல் மிக்க பகுதியாகவும், அதிக வர்த்தக நிலையங்களை கொண்ட பகுதியாகவும் உள்ளது.

அப்பகுதியில் உள்ள வடிகாணில் கழிவுகள் வீசப்பட்டுள்ளதுடன், அவை அகற்றப்படாமல் காணப்படுகின்றது. இதனால் அவ்வப்போது துர்நாற்றம் வீசுவதுடன் நுளம்பு பெருக்கமும் அதிகரித்துள்ளது.

இது தொடர்பில் வவுனியா நகரசபை கவனம் செலுத்தி அக்கழிவுகளை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அவ் வடிகாணில் கழிவுகள் வீசாத வகையில் ஏற்பாடுகளை செய்ய வேண்டும் எனவும் மக்கள் கோரியுள்ளனர்.