வவுனியாவிலிருந்து கிராம அலுவலர் நியமனத்துக்கு தெரிவானவர்களின் விபரம்!!

2015 இல் விண்ணப்பம் கோரப்பட்டு, 2016 இல் எழுத்துப் பரீட்சையும், 2017 இல் நேர்முகத் தேர்வும் எழுதியவர்களில் கிராம அலுவலர் நியமனத்துக்கு தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர் விபரங்களை உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ளது.

வடக்கில் 267 கிராம சேவையாளர் பிரிவுகளில் பணி வெற்றிடம் காணப்படுவதாக வழங்கப்பட்ட மாவட்டச் செயலகங்களின் தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.

அதனடிப்படையில் நேர்முகத் தேர்வில் தெரிவு செய்யப்பட்டவர்களின் விவரங்களே தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இதில் 1668 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இதில் வவுனியாவிலிருந்து தெரிவுசெய்யப்பட்டவர்களின் விபரம் வருமாறு..

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் இனி தூக்கு : உடனடியாக அமுலுக்கு வருகிறது அவசர சட்டம்!!

இந்தியாவில் 12 வயது வரையிலான சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் அவசரச் சட்டம் கொண்டு வருவதற்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.

சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிப்பதற்கென புதிதாக விரைவு நீதிமன்றங்கள் அமைக்கவும், பாலியல் பலாத்கார சம்பவங்களில் தடயவியல் பரிசோதனை செய்வதற்காக, அனைத்து வைத்தியசாலையிலும், பொலிஸ் நிலையங்களுக்கும் சிறப்பு பரிசோதனை சாதனங்கள் வழங்கவும் இந்த அவசரச் சட்டம் வழிவகை செய்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம், உன்னாவ் மாவட்டத்தில் இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். ஜம்மு-காஷ்மீர் மாநிலம், கதுவாவில் 8 வயது சிறுமி, ஒரு கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டமை, கடந்த சில தினங்களுக்கு முன் சூரத் நகரில் சிறுமி ஒருவர் பலாத்காரம் செய்து, கொல்லப்பட்டார். தொடரும் இந்தச் சம்பவங்களைத் தடுக்கவும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை அளிக்கவும் இந்த அவசரச் சட்டத்தை கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்தது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் டில்லியில் சனிக்கிழமை நடைபெற்றது. அதில், சிறுவர்களை பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் அவசரச் சட்டம் கொண்டு வருவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த அவசரச் சட்டம், குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. அவர் ஒப்புதல் அளித்தவுடன் இந்தச் சட்டம் நடைமுறைக்கு வரும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்த வகையில் மத்திய அரசின் அவசர சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். குடியரசுத் தலைவர் ஒப்புதலை அடுத்து உடனடியாக சட்டம் அமலுக்கு வருகிறது. இந்தச் சட்டத்தின் அம்சங்கள் குறித்து சட்ட அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில்,

இந்தியாவில் தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்தின்படி, சிறார்களை பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனையும், குறைந்தபட்சமாக 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் விதிக்கப்படுகிறது.

புதிய அவசரச் சட்டத்தின்படி, பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளின் குறைந்தபட்ச சிறைத் தண்டனை 7 ஆண்டில் இருந்து 10 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் 16 வயதுக்கும் குறைவானவராக இருந்தால், குற்றவாளிகளுக்கு குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் முதல் வாழ்நாள் வரை தண்டனை விதிக்கப்படும்.

பாதிக்கப்பட்ட சிறுமி 12 வயதுக்கும் குறைவானவராக இருந்தால், குற்றவாளிகளுக்கு குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். அதிகபட்சமாக, ஆயுள் தண்டனை முதல் மரண தண்டனை வரை விதிக்கப்படும். பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு உதவுவதற்காக அனைத்து மாவட்டங்களிலும் உதவி மையம் அமைக்கப்படும்.

சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றச் சம்பவங்களில் விரைவில் விசாரணை நடத்தி முடிக்கப்பட வேண்டும். அதாவது, அனைத்து பாலியல் பலாத்கார சம்பவங்களிலும் 2 மாதங்களில் வழக்கு விசாரணை முடிக்கப்பட வேண்டும்.

இதுதொடர்பான மேல்முறையீட்டு வழக்குகளில் 6 மாதங்களில் விசாரணை முடிக்கப்பட வேண்டும் என புதிய அவசரச் சட்டம் பரிந்துரை செய்கிறது.

16 வயது வரையிலான சிறுமிகளை பலாத்காரம் செய்ததாகக் குற்றம் சாட்டப்படும் நபர்கள் முன்ஜாமீன் கோர முடியாது. அவர்களுக்கு முன்ஜாமீன் வழங்கப்பட மாட்டாது. அவர்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டுமெனில், பாதிக்கப்பட்ட சிறுமி தரப்பு மற்றும் அரசு தரப்பின் கருத்தைக் கேட்ட பிறகே நீதிமன்றம் முடிவு செய்ய வேண்டும்” என குறிப்பிட்டார்.

பிரித்தானியாவில் டீ விற்று கோடீஸ்வரரானவர் : வெற்றியின் இரகசியம் இது தான்!!

 

இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்தவர் Rupesh Thomas (39), வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதற்காக 600 பவுண்டுகளுடன் பிரித்தானியா வந்தவர் தனது கடின உழைப்பால் இன்று விம்பிள்டனில் வீடு வாங்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார்.

15 ஆண்டுகளுக்குமுன் பிரித்தானியா வந்த அவர் டீ விற்பனை மூலம் ஒரு வெற்றிகரமான பிஸினஸ் மேன் ஆகியிருக்கிறார். இப்போது 30 வயதாகும் Thomas விம்பிள்டனில் ஒரு மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள ஒரு வீட்டுக்கு சொந்தக்காரர்.

அது மட்டுமின்றி தெற்கு லண்டனில் 350,000 பவுண்டுகள் மதிப்புள்ள இரண்டாவது வீட்டையும் வாங்கிவிட்டார். அவரது டீ வியாபாரத்தால் 2 மில்லியன் பவுண்டுகள் அளவிற்கு அவருக்கு வருமானம் வருகிறது.

இன்று ஆடம்பர பல்பொருள் அங்காடியான Harvey Nicholsக்கும் அவர் டீ சப்ளை செய்கிறார். கேரளாவில் பிறந்த அவருக்கு எப்போதுமே பிரித்தானியாவின்மீது ஒரு கண் இருந்தது.

பட்டப்படிப்புக்குப்பின் லண்டனுக்கு வந்திறங்கிய அவர் McDonald’sஇல் வேலைக்கு சேர்ந்தார். தொடர்ந்து பல இடங்களில் வேலை செய்த அவர் கடினமாக உழைத்தார்.

2007ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த Alexandraவைத் திருமணம் செய்து கொண்டார். Alexandraவுடன் கேரளாவுக்கு செல்லும்போது அவர் கேரளா டீயை ரசித்துக் குடிப்பதைக் கவனித்தார்.

Alexandra ஒரு நாளைக்கு 10 கப் கேரளா டீ வரை குடிப்பார். இதைப் பார்த்ததும் Thomasக்கு ஒரு விடயம் நன்கு புரிந்தது. பிரித்தானியர்களுக்கு டீ பிடிக்கும் என்றாலும் அங்கு கேரளா டீயைப்போன்ற சுவையான டீ கிடைப்பதில்லை.

இதுதான் தனது அதிருஷ்ட தொழில் என்பதைக் கண்டுகொண்ட Thomas, பிரித்தானியாவில் டீ சப்ளை செய்யத்தொடங்கினார். பிரித்தானியர்கள் Thomasஇன் டீக்கு அடிமையானார்கள்.

டீ வியாபாரம் பிய்த்துக்கொண்டுபோனது. பல பிரபல கடைகளுக்கு டீ சப்ளை செய்யத் தொடங்கிய Thomasஇன் கடின உழைப்பு இன்று அவரை ஒரு கோடீஸ்வரராக்கியிருக்கிறது என்று சொன்னால் மிகையாகாது.

பிரபாகரன் புலிகளின் சீருடையை சீமானுக்கு அணிய அனுமதிக்கவில்லை!!

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இல்லை என நினைத்துக்கொண்டு புலிகளின் சின்னத்தைத் தனது கொடியில் வைத்துக்கொண்டுள்ளார் சீமான் என வைக்கோ இந்திய ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். அவர் அப்பேட்டியில் சீமான் குறித்து மேலும் தெரிவிக்கையில்,

சீமான், பிரபாகரனுடன் தான் பலநாள்கள் இருந்ததாகவும், வேட்டைக்குச் சென்றதாகவும், ஆமைக்கறி சாப்பிட்டதாகவும் பொய் சொன்னார். இவரை வெறும் எட்டு நிமிடம்தான் பார்க்க அனுமதித்தார் பிரபாகரன். புகைப்படம் எடுக்க அனுமதிக்கவில்லை. ‘புலிகள் சீருடை அணிந்து உங்களுடன் போட்டோ எடுத்துக்கொள்ளலாமா?’ என்று சீமான் கேட்டதற்கு மறுத்துவிட்டார் பிரபாகரன். பிரபாகரனுடன் போட்டோ எடுத்ததுபோல கிராஃபிக்ஸ் செய்துகொண்டார்.

நான் புலிகள் சீருடையில், ஒரு மாதம் அந்தக் காட்டில் பிரபாகரனுடன் இருந்தவன், பிரபாகரனிடம் ராணுவப் பயிற்சி பெற்றவன். நூலிழையில் உயிர்பிழைத்து வந்தவன் நான். இதையெல்லாம் நான் விளம்பரம் செய்யவில்லை.” ஆனால் சீமான் கொடியில் புலிகள் சின்னத்தை வைத்து விளம்பரம் செய்கிறார்.

“எட்டு ஆண்டுகளாகவே நான் பொறுமையாக இருக்கிறேன். தமிழன் இல்லை, தெலுங்கன் என்று என்னைச் சீமான் கீழ்த்தரமாகப் பேசுவதோடு, ‘ஈரோடு ராமசாமி நாயக்கன்’ என்று பெரியாரை எல்லா மேடைகளிலும் பேசினார்.

இந்த அண்ணாதுரை என்ற முட்டாள், தமிழ்நாட்டைக் கெடுத்துவிட்டான்…’ என்று தொடக்க காலத்தில் பேசினார். அண்ணாவையும், பெரியாரையும் இப்படி ஏசுகிறாரே என்று சகித்துக்கொண்டே இருந்தேன்.

பின்னர் நண்பர்கள் சொன்னார்கள், ‘பெரியாரைத் தாக்குவது உங்களை காலி பண்ணுவதற்காகத்தான்’ என்று. இதைப் பற்றி நான் வெளியில் பேசுவதில்லை.

நான் மதுரையிலிருந்து புறப்படும்போது புலி, வில், கயல் கொடி பிடித்து நடந்துவந்ததைப் பார்த்து, மறுநாளே தனது முகநூலில் அதே போல் கலர் மாற்றிப் போட்டுக்கொண்டார் சீமான் என்று தெரிவித்துள்ளார்.

வவுனியா வைரவர் புளியங்குளம் குளத்தில் மலசலகூடக் கழிவுகள்!!

 

வவுனியா வைரவர் புளியங்குளத்தில் அமைந்துள்ள ஆதிவிநாயகர் ஆலயத்தின் மலசல கூட கழிவுகள் குளத்தினுள் செல்வதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் கமநல திணைக்களத்தின் உதவி ஆணையாளர் விஜயகுமார் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இவ்விடயம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

வைரவர்புளியங்குளத்தில் அமைந்துள்ள ஆதிவிநாயகர் ஆலயத்தில் புதிதாக மலசல கூடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. குறித்த மலசல கூடத்தின் கழிவு செல்லும் குழியானது (பிட்) குளத்தின் எல்லைப்பகுதியில் காணப்படுவதுடன் அதன் கழிவுகள் குளத்து நீரில் சேர்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.

மேலும் குளத்தை சுற்றியுள்ள வயல்களுக்கு கூட குறித்த கழிவு கலந்த நீரே செல்கிறது. இது குறித்து கமக்கார அமைப்பின் தலைவரை தொடர்புகொண்ட போது, தாம் அப்படியான ஒரு வேலையும் செய்யவில்லை என்றும் இது வீண் பழி என்று கூறியதுடன் ஆலய எல்லைக்குள்ளேயே தாம் மலசல கூடம் கட்டியுள்ளதாக தெரிவித்தார்.

எனினும் இது சம்பந்தமாக கமநல திணைக்களத்தின் உதவி ஆணையாளரை அணுகிய பொழுது, குறித்த மலசல கூடம் குளத்தின் எல்லைக்குள் இருப்பதாகவும் இது நீரை மாசுபடுத்தும் ஒரு செயல் என்பதுடன் அதனை உடனடியாக அகற்றுமாறும் தவறும் பட்சத்தில் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்படும் என்றும் கடிதம் அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தார்.

குறித்த கமக்கார அமைப்பின் தலைவரும் சம்பந்தப் பட்ட கோவிலின் தலைவர் ஒருவர் என்பதுடன் குறித்த நபர் நகர சபையின் உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின்-

வெளிநாடு செல்லும் இலங்கை பெண்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்ணாக செல்லும் பெண்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அவ்வாறு பணிப்பெண்களை அனுப்பும் போது பணி செய்யும் இடம் மற்றும் வீட்டின் உரிமையாளர்கள் தொடர்பில் தகவல் பெறுகையில், அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் உடல் மனரீதியான தன்மை தொடர்பிலும் தகவல் பெற்றுக் கொள்ள வேண்டும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பிரதி அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வீட்டு பணிப்பெண்களை அனுப்பும் போது சேவை செய்யும் வீட்டில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை, வீட்டின் அளவு, உரிமையாளரின் தொழில் ஆகிய தகவல்களை பெற்றுக் கொள்ளப்படுது. எனினும் உடல் மற்றும் மன நிலைமை தொடர்பில் தகவல் பெற்றுகொள்வதில்லை என அமைச்சர் கூறியுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் சேவை செய்த வீட்டின் உறுப்பினரால் இலங்கை பணிப்பெண் சுட்டு கொல்லப்பட்டார். அவர் ஒரு மன நோயாளி என பின்னரே தெரியவந்தது. இவ்வாறான நிலைமைகளை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்களுக்கு அவசர எச்சரிக்கை!!

இலங்கையில் நடைபெறும் பாரிய நிதி மோசடி தொடர்பில் இடம்பெறுவதாக சுங்க பிரிவு பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. பேஸ்புக் ஊடாக பாரிய மோசடிகள் தொடர்ந்தும் இடம்பெறுவதாக சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

பேஸ்புக் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக லொத்தர் சீட்டினால் பல்வேறு பரிசுகள் கிடைத்துள்ளாதாக இலங்கையர்களுக்கு அறிவிக்கப்படுகிறது. அதனையடுத்து சுங்க பிரிவு ஊடாக அந்த பரிசு பொருட்களை அனுப்புவதற்கு பணம் பெற்று கொள்ளும் மோசடியில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என இலங்கை சுங்க திணைக்களம் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த காலங்களினுள் வெளிநாட்டில் வசிப்பதாக கூறி வெற்றியாளர்களுக்கு கிடைத்துள்ள பரிசினை அனுப்புவதற்கு பாரிய அளவு பணம் மோசடி செய்துள்ள சம்பவங்கள் தொடர்பில் சுங்க பிரிவிற்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

அதற்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் பல்வேறு குழுக்கள் இந்த மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பேஸ்புக் ஊடாக லொத்தர் பரிசு கிடைத்துள்ளதாக கூறி இலங்கை தொலைபேசி இலக்கத்திலிருந்து அழைப்பினை ஏற்படுத்துவர். இந்த பரிசினை விடுவித்து கொள்வதற்காக சுங்க பிரிவிற்கு பணம் செலுத்த வேண்டும் என்று வங்கிக் கணக்கு ஒன்றை வழங்குகின்றனர். இதனால் ஏமாற்றம் அடைந்த பலர் பெருந்தொகை பணத்தை அந்த வங்கிக் கணக்கில் வைப்பு செய்துள்ளனர்.

இந்த மோசடி நடவடிக்கையின் மூலம் இலங்கையர்கள் பலர் கோடிக்கணக்கான பணத்தை இழந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சட்டவிரோத நடவடிக்கை தொடர்பில் 0112 47 14 71 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக இலங்கை சுங்க திணைக்கள விசாரணை பிரிவுக்கு அறிவிக்க முடியும் என சுங்க பிரிவு இயக்குனர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு, வெள்ளவத்தையில் நள்ளிரவு நேரங்களில் அச்சுறுத்தும் மர்மநபர் : காணொளி அம்பலம்!!

கொழும்பு, வெள்ளவத்தையில் நள்ளிரவில் செல்லும் வாகனங்களை அச்சுறுத்தும் நபர் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது. வெள்ளவத்தையின் மெரின் ட்ரைவ் வீதிக்கு அருகில் அடையாளம் தெரியாத இளைஞன் ஒருவர் இரவு நேரங்களில் செல்லும் வாகனங்களை மறித்து நிறுத்துவதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. மெரின் ட்ரைவ் வீதியில் பயணிக்கும் போது எதிர்பாராத விதமாக அவர் வீதிக்கு நடுவில் சென்று வாகனங்களை நிறுத்துவதற்கு இந்த இளைஞன் நடவடிக்கை மேற்கொள்கின்றார்.

இவ்வாறான அச்சுறுத்தலுக்கு பலர் முகங்கொடுத்துள்ள நிலையில், இதனை துணிச்சலாக சாரதி ஒருவர் காணொளியாக பதிவு செய்துள்ளார்.

இளைஞனின் செயற்பாட்டின் காரணமாக வாகனத்தை பின் பக்கமாக ஓட்டிச் சென்று அந்த இடத்தை விட்டு சென்று விடுகின்றார்.

இது தொடர்பான காணொளியை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்த சாரதி, இரவில் தனியாக செல்லும் போது மிகுந்த அவதானத்துடன் இருக்கமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

திடீரென வீதிக்கு வந்த கடல் நீர் : பதற்றமடைந்த மக்கள்: கடல் அலை மேலும் உயரும் ஆபத்து!!

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை காலை வரை பல பகுதிகளில் கடல் அலை உயரும் சாத்தியம் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் அத்துல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை காலை 8 மணி வரை புத்தளத்தில் இருந்து கொழும்பு, காலி ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பிரதேசங்களில் 2.5 மீற்றர் முதல் 3.5 மீற்றர் வரை கடல் அலை உயரலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கடல் அலை அதிகரிப்பு காரணமாக ஹிக்கடுவ பிரதேசத்திலும், ஹபராதுவ மற்றும் உணவட்டுண பிரதேசத்திலும் நீர் பெருகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் காலி பிராந்திய உதவிப் பணிப்பாளர் லெப்ரினன் கேணல் சம்பத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நேற்றிரவு 7.30 அளவில் திடீரென கடல் நீர் ஹிக்கடுவ பிரதேசத்தின் பிரதான பாதைக்கு வந்துள்ளது.

இதனால் அப்பகுதி மக்கள் பதற்ற மடைந்ததுடன், குறித்த பகுதியில் வாகனப் போக்குவரத்து தடைப்பட்டதாகவும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் அத்துல கருணாநாயக்க தெரிவித்தார்.

யாழில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்த இளைஞன் மரணம்!!

யாழில் உதைபந்தாட்டப் போட்டியின் போது இளைஞர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நேற்று உதைப்பந்தாட்ட போட்டி இடம்பெற்றுள்ளது.

இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கு இடையிலான உதைப்பந்தாட்ட போட்டி நடைபெற்றுள்ளது. இதன்போது, குருநகர் பகுதியை சேர்ந்த 27 வயதுடைய பத்மராஜன் எனும் இளைஞர் மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

யாழ்ப்பாணம் உட்பட வடக்கில் கடும் வெப்பம் நிலவிவருகின்றது . இந்த நிலையிலேயே யாழில் உதைபந்தாட்டப் போட்டியின் போது இளைஞர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

இசை நிகழ்ச்சியில் திடீரென நடந்த அனர்த்தம் : ஒருவர் பலி, பலர் காயம்!!

நிட்டம்புவ அத்தனகல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றின் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். அத்தனகல்ல விஹாரைக்கு அருகாமையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் போது இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. சம்பவத்தில் மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.

நேற்றைய தினம் நடைபெற்ற புத்தாண்டு விளையாட்டுப் போட்டிகளின் பின்னர், இரவு இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. இதன்போது இனம் தெரியாத நபர்களினால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஹெய்யாந்துடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதான வர்த்தகர் ஒருவரே இவ்வாறு சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். இசை நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் மங்கள குத்து விளக்கு ஏற்றும் நிகழ்விலும் இந்த வர்த்தகர் பங்கேற்றிருந்தார். துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவரும் உள்ளடங்குகின்றார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணங்கள் இதுவரையில் கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியா வசந்தி திரையரங்கில் ஈழத்தில் சாதனை படைத்த சாலைப் பூக்கள் திரைப்படம்!!

 

ஈழத்தின் கலைத்துறையில் சிறப்போடு தன் தனித்துவ ஆற்றலை வெளிப்படுத்தி வரும் சுதர்சன் றட்ணம் அவர்களின் இயக்கத்திலும் நிர்மலனின் இசையிலும் பல இளம் புதிய படைப்பாளிகளின் சிறப்புமிகு நடிப்பிலும் உருவாகிய சாலைப் பூக்கள் திரைப்படம் இன்றைய ஈழ சினிமா வரலாற்றில் முக்கிய பங்காக விளங்குவதோடு ஈழத்திலும் மற்றும் புலம்பெயர் தேசத்திலும் வெற்றிவாகை சூடி இன்று ஓடிக்கொண்டிருக்கிறது.

யாழ்ப்பாண செல்வா திரையரங்கில் வெளியிடப்பட்டு ராஜா திரையரங்கு, திருகோணமலை சரஸ்வதி, திரையரங்கு என்று பல இடங்களிலும் திரைப்படம் காண்பிக்கப்படுகிறது

சாலைப் பூக்கள் திரைப்பட நிகழ்வின் போது இந்திய நடிகர்கள் மற்றும் படைப்பாளிகளின் பேராதரவோடு உலகமெங்கும் வியாபித்தெழும் சாலைப் பூக்கள் திரைப்பட நிகழ்வில் இந்திய திரையுலக நகைச்சுவை நடிகர் வையாபுரி மற்றும் பிக் போஸ் நிகழ்ச்சி புகழ் கவிஞர் சிநேகன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்ததோடு

மக்களாலும் படைப்பாளிகளாலும் ஆதரவோடு கூடிய வரவேற்பை பெற்ற முதல் படமாக சாலைப் பூக்கள் திரைப்படம் இன்றைய ஈழ சினிமா வரலாற்றில் மகுடம் சூடி விளங்குகின்றது.

சாலைப் பூக்கள் திரைப்படம் தாய் தந்தை உறவுகள் இழந்த சிறுவர்களின் இன்றைய நிலையை எடுத்துக் காட்டுவதோடு அவர்கள் சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி பார்வையாகவும் தனிமனித சிந்தனை மீண்டும் மீண்டும் உறக்கம் கலைத்து எழுந்து புரட்சி செய்யும் விதமாகவும் சிறப்போடு பல விறுவிறுப்பான காட்சிகளோடு உணர்வுகளை வருடும் பாடலோடும் கலைத்துறையில் மேன்மையடைந்திருக்கிறது சாலைப் பூக்கள் திரைப்படம்.

இன்று வவுனியா வசந்தி திரையரங்கில் முதல் காட்சியாக சாலைப் பூக்கள் திரைப்படம் காண்பிக்கப்பட இருக்கிறது.

சுதர்சன் றட்ணம் அவர்களின் அசாத்திய இயக்கம் பலரையும் வியப்பில் உறைய வைத்திருப்பது ஈழத்து சினிமாவின் பெரும் வெற்றியாக பலரினால் பேசப்படுவதும் குறிப்பிடத்தக்கது. சாலைப் பூக்கள் திரைப்பட குழுவினருக்கு வாழ்த்துகள்.

இலங்கையில் திடீரென தாழிறங்கிய நிலப்பரப்பு : பதறியடித்து ஓடிய மக்கள்!!

இலங்கையின் மலைநாட்டு பகுதியில் திடீரென நிலம் தாழிறங்கியமையால், அச்சமடைந்த மக்கள் பதறியடித்து ஓடியதாக தகவல் வெளியாகி உள்ளது. பண்டாரவளை, லியன்கஹவெல பிரதேசத்தின் நிலப்பரப்பு திடீரென தாழிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அச்சம் காரணமாக உடனடியாக அங்கிருந்த பல வீடுகளைச் சேர்ந்தவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைத்ததாக, பதுளை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

தாழிறக்கம் காரணமாக எவருக்கும் ஆபத்து ஏற்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது. மழை பெய்யாத நிலையில் இவ்வாறு தாழிறக்கம் ஏற்பட்டுள்ளமைக்காக காரணம் இதுவரையில் வெளியாகவில்லை.

இது தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதற்காகவும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகள், சம்பவ இடத்தில் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆபத்தான நிலைமை ஏற்பட்டுவிடும் என்ற சந்தேகத்திற்கமைய அந்த இடத்தில் உள்ள மக்களை அங்கிருந்து அனுப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய நிலைய முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினரின் போராட்டத்தில் விஜய் நற்பணி மன்றத்தினர்!!

 

கிளிநொச்சி மாவட்ட விஜய் நற்பணி மன்றத்தினர் கிளிநொச்சி மாவட்டத்தில் பல சமூக நற்பணி செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நற்பணி மன்றத்தின் ஊடாக இலங்கையில் இறுதிப் பேரில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுடன் இணைந்து எமது ஆதரவினை இன்று தெரிவித்து இருந்தனர். கிளிநொச்சி மாவட்டத்தில் ஈழப்போரில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளில் பெற்றோர் தமது பிள்ளைகளை மீட்டுதர வேண்டும் என 429 நாட்களாக கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் திடலில் போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களுக்கு ஆதரவு வழங்கும் நோக்குடன் இந்த நற்பணி மன்றம் இளைஞர்களுடன் இணைத்து தமது ஆதரவை வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

குழந்தையின் தலையை வெட்டி கொன்று இளம் தாய் செய்த செயல் : அதிர்ச்சி சம்பவம்!!

இந்தியாவின் டெல்லியில் மனநலம் பாதிக்கப்பட்ட தாய் தனது 8 மாத குழந்தையை கொலை செய்துவிட்டு தானும் கழுத்தை அறுத்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரி ஷங்கர் – சரிகா தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகளும், சிராக் என்ற எட்டு மாத ஆண் குழந்தையும் உள்ளார்கள். இந்நிலையில் வேலை முடிந்து நேற்றிரவு ஹரி வீட்டுக்கு வந்த போது வீடு உள்பக்கம் பூட்டப்பட்டிருந்தது. ஜன்னல் வழியாக பார்த்த போது குழந்தை சிராக்கின் தலை மட்டும் வெட்டப்பட்டு தனியாக இருந்துள்ளது.

அருகிலேயே ரத்த வெள்ளத்தில் கழுத்து அறுப்பட்டு கிடந்த சரிகா மீது சிராக்கின் உடல் பகுதி சடலமாக இருந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஹரி பொலிசுக்கு தகவல் கொடுக்க, சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் உயிருக்கு போராடிய சரிகாவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

விசாரணையில் சரிகா மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததும் அவரே தனது மகன் தலையை வெட்டி கொலை செய்து, தன் கழுத்தை அறுத்து கொண்டதும் தெரியவந்தது.

இதனிடையில் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் சரிகாவின் ஒன்றரை வயது மகன் மர்மமாக இறந்துள்ளான்.

இந்த மரணம் குறித்து குடும்பத்தார் யாரும் அதிக கவனம் செலுத்தாத நிலையில், சரிகாவே அவனையும் கொலை செய்திருக்கலாம் என தற்போது தெரிவித்துள்ளனர்.

நான் சாகப் போகிறேன் : நகைச்சுவையில் முடிந்த தற்கொலை!!

தமிழகத்தில் மனைவியுடன் ஏற்பட்ட சண்டை காரணமாக தற்கொலைக்கு முயன்ற நபரின் செயல் கடைசியில் காமெடியில் போய் முடிந்துள்ளது. சென்னை அடையார் கூவம் ஆற்றில் மதுபோதையில் நின்று கொண்டிருந்த நபர் மனைவியுடன் ஏற்பட்ட சண்டை காரணமாக, அங்கிருந்தவர்களிடம் நான் சாகப் போகிறேன் டாடா பை பை என்று கூறிவிட்டு அங்கிருந்து குதித்துள்ளார்.

தற்போது சென்னை நிலவும் தண்ணீர் பஞ்சத்திற்கு எந்த ஆற்றில் குதித்தாலும், மார்பளவில் கூட தண்ணீர் இல்லை, இவர் குதித்ததோ கூவம் ஆற்றில் என்பதால் அங்கு இடுப்பளவிலே தண்ணீர் இருந்தது.

இதனால் தற்கொலை செய்ய முடியவில்லையே என்று நீரில் மூழ்க முடியாமல் நின்று கொண்டிருந்தார். இது குறித்த தகவல் பொலிசாருக்கு தெரியவந்ததால் காவல்துறையினர், தீயணைப்புத்துறையினர், போக்குவரத்து காவல்துறையினர் அங்கு விரைந்து பத்திரமாக அவரை மீட்டனர்.

முப்படைகளின் உதவியோடு மீட்கப்பட்ட அவர் டாடா காட்டி கொண்டே வி.ஐ.பி. போல் மேலே வந்தார். அப்போது இதைக் கண்டவர்கள் இதுக்கா இந்த பில்ட் அப் என்று கிண்டலடித்தபடி சென்றுள்ளனர்.