கொலை மற்றும் போதை மருந்து கடத்தல் வழக்கில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட ஏழு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவின் உள்துறை அமைச்சகம் இது தொடர்பான செய்தியை வெளியிட்டுள்ளது. இதில் ஆறு பேர் ஏமன் நாட்டை சேர்ந்தவர்கள் ஆவர்கள். இவர்கள் ஒரு குழுவாக உருவாகி சவுதியின் அசிர் பகுதியில் உள்ள வீடுகளில் புகுந்து ஒரு பெண் உட்பட மூவரை கொலை செய்துள்ளனர்.
அப்போது வீடுகளில் இருந்த பணம் மற்றும் சில பொருட்களையும் திருடியுள்ளனர். இந்த குற்றங்கள் நிரூப்பிக்கப்பட்டதால் ஆறு பேருக்கும் Abha நகரில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
ஏழாவது நபர் சவுதியை சேர்ந்தவராவார். இவர் போதை மாத்திரைகளை கடத்தியாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில் அது நிரூபிக்கப்பட்டதால் தபூக் நகரில் அவருக்கு மரண தண்டனை தரப்பட்டது.
இந்த தண்டனைகள் அனைத்தும் கடந்த செவ்வாய்க் கிழமை நிறைவேற்றப்பட்டது. இது போன்ற குற்றங்களுக்கு சவுதியில், பொது மக்கள் மத்தியில் குற்றவாளியின் தலை வாளால் வெட்டப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரான்ஸின் பல பகுதிகளில் பனிக்கொட்டும் நிலையில் அது சம்மந்தமான வீடியோவும், புகைப்படங்களும் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
பிரான்ஸில் குளிர்காலம் தொடங்கியதையடுத்து அதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து பல இடங்களில் பனிக்கொட்டி வருகிறது, நாட்டின் Haute-Savoie பகுதியில் அமைந்திருக்கும் அனீசி ஏரியை சுற்றி பனி சூழ்ந்துள்ளது.
மத்திய பிரான்ஸில் உள்ள அலீர் பகுதியில் எங்கு பார்த்தாலும் பனிகள் தான் உள்ளன. பல இடங்களில் உள்ள வீடுகள் மீது பனி சூழ்ந்து மொத்த இடமும் வெள்ளையாக காட்சியளிக்கிறது. இது போன்ற நிலையே நாட்டின் பல பகுதிகளில் இருந்து வருகிறது, இது சம்மந்தமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகியுள்ளது.
People walk in the snowfall in a park in Strasbourg, eastern France on January 08, 2017, as a cold wave hits much of Europe. / AFP PHOTO / PATRICK HERTZOG
ஆஜென்டினாவில் இரண்டு வயது குழந்தையை கொலை செய்த தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஜெண்டினாவின் ப்ளோரின்சியோ வரீலா நகரில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது.
கரீனா கோமீஸ் (26) என்ற பெண் தனது பெண் குழந்தை மிலீனா (2) மற்றும் உறவுக்கார பெண்ணுடன் ஒரு வீட்டில் வசித்து வந்தார். வேலை எதுவும் செய்யாத கரீனா அரசாங்கம் தரும் மானியத்தை நம்பியே வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில், தனது குழந்தை மலீனாவுக்கு உணவளிக்க முடியவில்லை என வருத்தப்பட்ட கரீனா, இதன் காரணமாக குழந்தை பாதிக்கபடுவதை தடுக்க கொலை செய்ய முடிவெடுத்தார்.
அதன்படி மிலீனாவின் கைகளை சொக்ஸால் கட்டி பின்னர் மூச்சு திணறடித்து கொன்றுள்ளார். இது குறித்து கரீனாவுடன் அதே வீட்டில் வசிக்கும் உறவினர் கூறுகையில்,
தனது அறையிலிருந்து சில மணி நேரம் கழித்து போர்வையில் குழந்தையை சுற்றி எடுத்தபடி கரீனா வெளியில் வந்தார். பின்னர் வீட்டிலிருந்து சாலையில் ஓடினார். அவரை அங்கிருந்தவர்கள் பிடித்து மலீனாவை மீட்டோம்.
உடனடியாக குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் மருத்துவர்களால் மலீனாவை காப்பாற்ற முடியவில்லை என கூறியுள்ளார்.
இதையடுத்து பொலிசார் கரீனாவை கைது செய்து அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஓகி புயலால் தென் தமிழகத்தில் சூறைக்காற்றுடன் 16 மணிநேரத்துக்கு மேலாக கனமழை பொழிந்தது.
இதில் 20000 மரங்கள் வேரோடு சரிந்ததுடன், 950 மின்கம்பங்கள் சாய்ந்தன. இரவும், பகலும் இடைவிடாது கடும் சத்தத்துடன் காற்று வீசியதால், கடற்கரை கிராமங்களின் வீடுகள் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டன. கடலும் கொந்தளிப்புடன் காணப்பட்டது, படகுகள் சேதமடைந்தன.
பல வீடுகளில் சுவர்கள், சுற்றுச்சுவர்கள் இடிந்து விழுந்தன, முக்கிய பகுதிகளில் மின்கம்பங்கள் சாய்ந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சூறைக்காற்றால் வடசேரி, நாகர்கோவில், தக்கலை, மார்த்தாண்டம், குளச்சல், கன்னியாகுமரி, ஈத்தாமொழி உட்பட மாவட்டம் முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான தனியார் தொலைதொடர்பு கோபுரங்கள் செயல் இழந்ததால் செல்போன் சேவை முடங்கியது.
கார்த்திகைவடலியில் வீட்டின் முன்பகுதியிலிருந்த தென்னை மரம் விழுந்து ராஜேந்திரன்(40), ஈத்தாமொழி குமரேசன்(55) ஆகியோரும், பளுகளில் வீடு இடிந்து அலெக்ஸாண்டர்(55) என்பவரும் பலியானார்கள். மண்டைக்காடு பகுதியிலும் ஒருவர் உயிரிழந்தார்.
கர்நாடகாவில் தொலைக்காட்சி தொடரைப் பார்த்து, அதில் வருவது போல நெருப்பினைப் பற்ற வைத்துக் கொண்டு நடனமாடிய 7 வயது சிறுமி தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம், தாவணகெரே மாவட்டம் ஹரிஹரா டவுனைச் சேர்ந்தவர் மஞ்சுநாத். கூலித் தொழிலாளியான, இவரது 7 வயது மகள் பிரார்த்தனா 2ஆம் வகுப்பு படித்து வந்தார்.
அவர் வீட்டில் வழக்கமாக ஒரு கன்னட தொடரைப் பார்த்து வந்தார். இந்நிலையில், அந்த தொடரில் வரும் நடிகை ஒருவர், தன் கை மற்றும் கால்களில் தீ வைத்துக் கொண்டு, தீப்பந்தம் ஏந்தி நடனமாடுவது போன்ற காட்சிகள் வந்துள்ளன.
அதைப் பார்த்த பிரார்த்தனாவும், அதே போல கடந்த 11ஆம் திகதி, தானும் கையில் ஒரு காகிதத்தினை எடுத்து தீ வைத்துக் கொண்டு நடனமாடியிருக்கிறார். அப்போது அவரின் ஆடையில் தீப்பற்றிக் கொண்டுள்ளது.
சிறுமின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, தீயை அணைத்து அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
15 நாட்களுக்கும் மேலாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், பிரார்த்தனா சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து, சிறுமியின் தந்தை மஞ்சுநாத், ஹரிஹரா பொலிசில் புகார் அளித்தார். பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தாவணகெரே மாவட்ட நிர்வாகம், தொலைக்காட்சித் தொடர் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
ஜெயலலிதாவின் மகளை பற்றிய முழு விவரம் சசிகலாவிற்கும், நடராஜனுக்கும் தான் தெரியும் என அவரின் அண்ணன் வாசுதேவன் கூறியுள்ளார்.
கர்நாடக மாநிலம் மைசூர் ஶ்ரீரங்கராஜபுரத்தில் வசிக்கும் வாசுதேவன் அளித்துள்ள பேட்டியில், நான் ஜெயலலிதாவின் தந்தை ஜெயராமனுக்கும் அவரது முதல் மனைவியான ஜெயம்மாளுக்கும் பிறந்த ஒரே மகன்.
அந்த முறையில் ஜெயலலிதா எனது தங்கையாவார். ஜெயலலிதாவின் அம்மா வேதாவும் கலை இயக்குனர் தாமோதரப்பிள்ளைக்கும் பிறந்த மகள் சைலஜா என்று மீடியாவில் வந்தது.
அதையடுத்து நான் சைலஜாவை சந்திக்க நினைத்த நிலையில் வயது முதிர்வால் முடியவில்லை. ஆனால் என்னை பற்றி அறிந்த சைலஜா குடும்பத்தோடு என்னை பார்க்க வந்திருந்த நிலையில் அவரின் குடும்ப வரலாறை என்னிடம் கூறினார். அவர் சொன்ன அனைத்தும் உண்மையாக இருந்ததால், அவர் ஜெயலலிதாவின் தங்கை என்பதை உணர்ந்தேன்.
அப்போது சைலஜா தன்னுடைய மகள் அமிர்தாவை என்னிடம் அறிமுகம் செய்தார். பின்னர் சைலஜா உடல் நிலை சரியில்லாமல் மரணம் அடைந்த நிலையில் நான்கு மாதங்கள் கழித்து அமிர்தாவின் தந்தை பார்த்தசாரதியும் மரணம் அடைந்தார்.
அப்போது எங்கள் தந்தையின் உறவினர்களான ரஜினிநாத், லலிதாவை அமிர்தாவிற்கு அறிமுகம் செய்து வைத்தேன்.
தற்போது என்ன காரணமோ தெரியவில்லை. இவர்கள் அனைவரும் கூட்டுச் சேர்ந்து அமிர்தாவை ஜெயலலிதாவின் மகள் என சொல்லி இருக்கிறார்கள். இது தவறான தகவல்.
ஜெயலலிதாவிற்கு லலிதா பிரசவம் பார்த்தார் என்று சொல்லுவது தவறு, ஏனென்றால் ஜெயலலிதா எங்கள் குடும்ப உறுப்பினர்கள் யாரோடும் தொடர்பு வைத்துக் கொள்ளவில்லை.
நான் இளமை காலத்தில் சென்னைக்கு வந்தபோது நடிகர் சிவாஜி, நடிகை ராஜ சுலோக்ஷனா என சென்னையில் பலரையும் தெரியும். அவர்கள் என்னிடம் ஜெயலலிதாவிற்கும் ஷோபன்பாபுவிற்கும் ஹைதராபாத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்ததாக சொன்னார்கள்.
பிறகு ஹைதராபாத் திராட்சை தோட்டத்தில் வளர்க்கப்பட்டு வெளிநாட்டின் திருமணம் செய்து கொடுத்துள்ளதாக கேள்விப்பட்டேன். ஆனால் இது குறித்த அனைத்து உண்மைகளும் சசிகலாவிற்கும், நடராஜனுக்கும் நிச்சயம் தெரியும். அவர்கள் இதை மக்களுக்கு சொல்ல வேண்டும் என கூறியுள்ளார்.
திருகோணமலை, கிண்ணியா பகுதியில் கடந்த 23ஆம் திகதி நடைபெற்ற கொலை சம்பவமொன்றின் நான்காவது சந்தேகநபரை இம்மாதம் 7ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு நேற்றைய தினம் திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எம்.எச்.எம்.ஹம்ஸா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் நான்காவது சந்தேகநபராக கண்டலடியூற்று, ஜித்தா நகர் பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கிண்ணியா கங்கை பாலத்துக்கு அருகிலுள்ள வீடொன்றுக்கு முன்னால் இருந்து வெட்டுக் காயங்களுடன் சடலமொன்று கடந்த 23ஆம் திகதி பொலிஸாரினால் மீட்கப்பட்டது.
இந்த கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் என்ற அடிப்படையில் மூவர் விளக்கமறியலில் இருந்து வருகின்ற நிலையில் கொலை செய்யப்பட்டவருடன் தொலைபேசியில் உரையாடியவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் குறித்த நபர் கடந்த 29ஆம் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபரை திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார். சம்பவம் தொடர்பான விரிவான விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலையின் காரணமாக தாழ்நிலப் பகுதிகள் பல வெள்ள அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதோடு பெருமளவிலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், காலியில் டொர்னடோ சூறாவளி ஏற்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் காணொளியொன்றும் பரவி வருகின்றது.
காலி மாவட்டத்தின் பிரதான ஆறான கிங்கங்கையில் தற்போதைக்கு வௌ்ள அபாயம் ஏற்படுமளவுக்கு நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, காலி மாவட்டத்தின் நீர்ப்பாசனத் திணைக்களம் இது தொடர்பான அறிவித்தலை விடுத்துள்ளது.
இதன் காரணமாக காலி மாவட்டத்தின் பல பிரதேசங்கள் வௌ்ளத்தில் மூழ்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதுடன், தொடங்கொட பிரதேசத்தின் தாழ்நிலப் பிரதேசங்கள் தற்போதைக்கு வௌ்ளத்தில் மூழ்கியுள்ளன.
பெந்தறை மாதுகங்கையிலும் நீர்மட்டம் தொடர்ந்தும் உயர்ந்து வருவதால் மாதுகங்கையின் அயற்பிரதேசங்களில் வசிக்கும் மக்களை கவனமாக இருக்கும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே காலியில் தொடர்ந்தும் கடுமையான மழை பெய்து கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
மேலும், களுத்துறை மற்றும் புளத்சிங்கள பகுதிகளில் அநேகமான தாழ் நிலப் பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளதாகவும் கடந்த நாட்களில் ஏற்பட்ட கடும் மழையுடனான காலநிலையின் காரணமாக இவ்வாறு தாழ் நிலப் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் மாத்தறை நில்வலா கங்கைக்கு அண்மித்த சில பிரதேசங்கள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளதாக இன்று அதிகாலை இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
மேலும் நில்வலா கங்கையின் நீர்மட்டம் வேகமாக அதிகரிப்பதாகவும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது. பாணதுகம மற்றும் அதற்கு கீழ் உள்ள நில்வலா கங்கையின் இரு கரைப்புறங்களிலும் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயருமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாத்தறை மாவட்டத்தில் வீதிகள் பல வெள்ள நீரினால் மூழ்கியுள்ளன. பாணதுகம – அகுரெஸ்ஸ, அகுரெஸ்ஸ – முலடியன மற்றும் கம்புருபிட்டிய – முலடியன ஆகிய வீதிகள் இவ்வாறு வெள்ள நீரினால் மூழ்கியுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.
காலி மாவட்டத்திலும் வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. நாகொட – பத்தேகம, மாபல கம – எல்பிட்டிய, நாகொட – உடுகம, காலி, வக்வெல்ல ஆகிய வீதிகளும் நீரில் மூழ்கியுள்ளன. இதன்காரணமாக பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரித்துள்ளது.
திட்டமிட்டு சேதப்படுத்தப்பட்ட அல்லது மாற்றப்பட்ட நாணயத்தாள்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 31ஆம் திகதிக்கு பின்னர் இவ்வாறான நாணயத்தாளின் மூலம் எந்தவொரு வங்கியிலும் கொடுக்கல் வாங்கல் மேற்கொள்ள முடியாதென இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
சேதப்படுத்தப்படும் நாணயம் தொடர்பில் இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக நாணய திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய அவ்வாறு சேதமடைந்த அல்லது மாற்றப்பட்ட நாணய தாள்கள் இருப்பின் அதனை டிசம்பர் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் வர்த்தக வங்கிகள் ஊடாக மாற்றிக் கொள்ளுமாறு இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
பாடசாலைக்கு செல்லாத மகனை நல்வழிப்படுத்தும் நோக்கில் தாய் ஒருவர் எடுத்த முடிவு, அவரது உயிரைப் பறித்த சம்பவம் பிங்கிரிய பிரதேசத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாடசாலைக்கு செல்லாது இருக்கும் தனது மகனை அச்சுறுத்தும் நோக்கில் பொய்யாக உடலுக்கு தீ மூட்டிக் கொள்வதாக பசாங்கு செய்த தாய் உடல் கருகி உயிரிழந்துள்ளார்.
தனது ஒரே மகனை திருத்தும் நோக்கில் தாய் மண்ணெண்ணையை உடலில் ஊற்றிக் கொண்டு தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தீ குச்சியை பற்ற வைத்து எச்சரிக்கை விடுத்த போது தவறுதலாக உடலில் தீ பற்றி உடல் முழுவதும் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பனாவ – போவத்தவத்த பகுதியைச் சேர்ந்த 58 வயதான ஜயசிங்க காஞ்சன மாலாகே கமலாவதி என்னும் பெண்ணே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
மனைவிக்கும் மகனுக்கும் இடையில் அடிக்கடி சண்டைகள் இடம்பெற்று வருவதாகவும் இதன்போது பல தடவைகள் இவ்வாறு தனது மனைவி தற்கொலை செய்வதாக மகனை எச்சரித்துள்ளதாகவும் உயிரிழந்த பெண்ணின் கணவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாகவும் நஞ்சு அருந்தி, தூக்க மாத்திரை விழுங்கி, மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு தற்கொலை செய்த கொள்வதாக தமது மனைவி மகனை எச்சரித்திருந்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சம்பவம் இடம்பெற்ற தினமும் இவ்வாறு செய்த போது உண்மையாகவே தீப்பற்றிக் கொண்டது என அவர் தெரிவித்துள்ளார்.
தீயை அனைத்து மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் போது முகம் கருகிவிட்டதா? என மனைவி கேட்டதாகவும், ஏன் இவ்வாறு செய்தீர்கள் என கேட்ட போது, மகனை மிரட்டவே இவ்வாறு செய்தேன் என மனைவி கூறியதாகவும் அவர் மரண விசாரணையின் பொழுது தெரிவித்துள்ளார்.
அதிக தீக்காயங்களுக்கு உள்ளான காரணத்தினால் பிங்கிரிய வைத்தியசாலையிலிருந்து சிலாபம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி குறித்த பெண் அண்மையில் உயிரிழந்துள்ளார்.
சோமாலியா தலைநகர் மொகடிசுவில் உள்ள ஓட்டலில் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பலியானவர்கள் எண்ணிக்கை 500 ஐ தாண்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சோமாலியா நாட்டின் தலைநகர் மொகடிசுவில் கடந்த மாதம் 2 வெடிகுண்டு தாக்குதல்கள் நடைபெற்றன. மொகாடிசுவில் வெளியுறவு துறை அமைச்சகம் அருகே உள்ள சபாரி என்ற ஓட்டல் மீது தீவிரவாதிகள் வெடிகுண்டு நிரப்பிய லொரியை மோதி வெடிக்க செய்தனர்.
அதில் ஓட்டலில் பெரும் பகுதியும், அதன் அருகே இருந்த பல கட்டிடங்களும் இடிந்து தரைமட்டமாயின. ரோட்டில் நிறுத்தியிருந்த கார்கள், லாரிகள், வேன்கள் எரிந்தன. குண்டு வெடித்ததால் பீதி அடைந்த மக்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். தாக்குதல் நடந்த இடத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. ரத்தம் தோய்ந்த செருப்புகளும், ஷூக்களும் சிதறி கிடந்தன.
இந்த பயங்கர வெடிகுண்டு தாக்குதலில் அக்டோபர் இறுதி வரை 358 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், ஏராளமானோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில், இந்த தாக்குதல் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை கமிட்டி அதிகாரிகள், வெடிகுண்டு தாக்குதலில் பலியானவர்கள் எண்ணிக்கை 500-ஐ தாண்டியுள்ளது என தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் கூறுகையில், சோமாலியாவில் உள்ள ஓட்டலில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் கடந்த அக்டோபர் மாதம் இறுதி வரை 358 பேர் பலியாகி இருந்தனர். பலர் சிகிச்சை பெற்று வந்தனர்.
இதற்கிடையே, கடந்த ஒரு மாதத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பலர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 521 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 300க்கு மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என குறிப்பிட்டுள்ளனர்.
சோமாலியாவில் 2007-ம் ஆண்டு முதல் தீவிரவாதிகளின் தாக்குதல் தொடங்கியது. அவர்கள் நடத்திய தாக்குதலில் இதுவே மிக மோசமானதாக கருதப்படுகிறது. தாக்குதலில் பலியானோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சோமாலியாவில் 3 நாள் துக்கம் கடைப்பிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அம்பலாங்கொட, பலப்பிட்டிய பிரதேசத்தில் கடலில் நீராடச் சென்ற வௌிநாட்டுப் பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
வௌிநாட்டு ஜோடி ஒன்று கடலுக்கு குளிக்கச் சென்ற வேளை நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் பிரதேசவாசிகளால் பெண் காப்பாற்றப்பட்டுள்ளதுடன் ஆண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அம்பலாங்கொட பொலிஸார் தெரிவித்தனர்.
28 வயதுடைய உக்ரைன் நாட்டுப் பிரஜை ஒருவர் காணாமல் போயுள்ளார்.
கடற்படை மற்றும் பொலிஸாருடன் பிரதேசவாசிகளும் இணைந்து காணாமல் போயுள்ள நபரை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று இலங்கையின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
அதன்படி வடக்கு, வட மத்திய, ஊவா, தெற்கு, மேற்கு, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் மழை பெய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.
விஷேடமாக தெற்கு, மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் மழை பெய்யும் வேளையில் பலத்த காற்று வீசும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை மேற்கு மற்றும் தெற்கு திசை கரைக்கு அப்பால் கடற் பகுதியில் மணித்தியாலத்திற்கு 70 முதல் 80 இற்கு இடைப்பட்ட கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
ஏனைய கடற் பிரதேசங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதுடன், மேற்கு மற்றும் தெற்கு கடற் பகுதியில் கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கடல் நடவடிக்கையில் ஈடுபடுவோர் தவிந்து இருக்குமாறு வானிலை அவதான நிலையம் கேட்டுக் கொண்டுள்ளது.
அதேவேளை மேற்கு திசையில் இருந்து அரேபிய கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள சூறாவளி தற்போது கொழும்பிலிருந்து 600 கிலோ மீற்றர் தொலைவில் இருப்பதாகவும், தற்போது அது இலங்கையில் இருந்து விலகிச் சென்று கொண்டிருப்பதாகவும் வானிலை அவதான நிலையம் கூறியுள்ளது.
கனடாவில் இருந்து இலங்கை மாணவியும் அவரது குடும்பத்தினரும் தாய்நாட்டுக்கு நாடு கடத்தப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
21 வயதான லியோனி பவித்ரா லோரன்ஸ் என்ற மாணவியின் குடியுரிமையில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக அவரும் அவரது குடும்பத்தினரும் நாடு கடத்தப்படவுள்ளனர்.
இவர்களின் நாடு கடத்தலை தடுத்து நிறுத்துமாறு கனேடிய அரசியல்வாதிகள் மற்றும் அந்நாட்டு மக்கள் அழுத்தம் கொடுத்த போதும், அது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கை குடும்பத்தை நாடு கடத்த எடுத்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக திய ஜனநாயக கட்சி உறுப்பினர் Alexandre Boulerice தெரிவித்துள்ளார்.
21 வயதான லியோனி பவித்ரா லோரன்ஸ் எதிர்வரும், ஞாயிற்றுக்கிழமை தனது குடும்பத்துடன் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளார் என கனேடிய ஊடகம் குறிப்பிட்டிருந்தது.
பிரஞ்சு சரளமாக பேச கூடிய குறித்த மாணவி scolaire de Montréal ஆணையத்தினால் விருதொன்றையும் பெற்றிருக்க வேண்டியவர் என குறிப்பிடப்படுகின்றது. நாடு கடத்தலுக்கு எதிராக கனேடிய ஊடகங்கள் உட்பட ஐம்பத்திற்கு மேற்பட்ட தொலைபேசி அழைப்புக்கள் வந்துள்ளதாக மாணவியின் தந்தை ரொபர்ட் ராஜரட்ணம் லோரன்ஸ் தெரிவித்துள்ளார்.
கணிதத்தில் 94 வீத சித்தியை பெற்ற திறமையான இந்த மாணவியின் குடியுரிமை நிலை தொடர்பில் கவனம் செலுத்த அனுமதித்தால் அவரால் கனேடிய சமூகம் பெரிதும் பயன் பெறும் என்று நம்புவதாக scolaire de Montréal ஆணையத்தின் தலைவர் Catherine Harel-Bourdon மாணவிக்கு ஆதரவாக எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
scolaire de Montréal ஆணையத்தின் ஆணையர்கள், புதனன்று அரசியல் அதிகாரிகளுக்கு எதிராக அழுத்தம் கொடுப்பதற்காக தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டுள்ளனர்.
லியோனி பவித்ரா மற்றும் அவரது குடும்பத்தின் நாடு கடத்தல் தொடர்பில் கனேடிய பிரதமர் கவனம் செலுத்துவதுடன் ஊடாக இதற்கு நல்ல தீர்வு கிடைக்கும் என நம்புவதாக கியூபெக் solidaire இன் அமீர் காடிர் தெரிவித்துள்ளார்.
கியூபெக் ஏற்றுக்கொண்டமை மற்றும் கற்பதற்கான அனுமதி வழங்கப்பட்டமைக்கான சான்றிதழ்களை மாணவி பெற்றுள்ளார். இந்த நிலையில் கல்லூரி அவரை ஏற்றுக் கொண்டாலும் பவித்திரா வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பொது நிர்வாகத்தில் காணப்படுகின்ற முரண்பாடே இதற்கு காரணம் என Boulerice தெரிவித்துள்ளார்.
இதேவேளை, புகலிடம் கோரிய விண்ணப்பங்கள் தொடர்பில் மாகாண அரசாங்கத்திற்கு எந்த அதிகாரமும் வழங்கவில்லை என Heurtel அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இலங்கை மாணவி மற்றும் குடும்பத்தினரின் நாடு கடத்தல் பிரச்சினை ஆபத்தான நிலையை எட்டியுள்ளதாக கனேடிய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை பூண்டுலோயா பிரதான வீதியில் வட்டக்கொடை கீழ்பிரிவு தோட்ட அருகாமையில் இன்று (01) காலை 9.30 மணிளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞர் ஓருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் புஸ்ஸல்லாவ நவகடதுர பகுதியைச் சேர்ந்தவரும் நுவரெலியா பெயின்டர் சிங்கள பாடசாலையில் ஆசிரியராக கடமையாற்றி வரும் முத்திக்க சமிந்த ஹெட்டிகெதர (வயது 30) என்பவராவார்.
குறித்த இளைஞர் 1.12.2017 காலை தனது மோட்டார் சைக்கிளில் புஸ்ஸல்லாவ பகுதியிலிருந்து தலவாக்கலை நோக்கி வந்துக்கொண்டிருந்த வேளை, தலவாக்கலையிலிருந்து பூண்டுலோயா நோக்கிச் சென்றுக்கொண்டிருந்த அரச பேருந்தில் மோதி பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்குண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய அரச பேருந்தின் சாரதியை கைதுசெய்துள்ள தலவாக்கலை பொலிஸார் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்திசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் குரங்குகள் ஒன்றரை வயது குழந்தையை காலை 6 மணிக்கு எழுப்பிவிடும் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கர்நாடகா மாநிலம் ஹூப்ளியில் குரங்குகளுக்கு நண்பனாகவும், தேவைப்படும் பொழுது குரங்குகளுக்கு உணவுகளை வழங்கும் குழந்தையாக ஒன்றரை வயது சிறுவன் ஒருவன் உள்ளான்.<
இது குறித்து குழந்தையின் பெற்றோர் கூறுகையில், தினந்தோறும் காலை 6 மணிக்கு குரங்குகள் தான் அவனை வந்து எழுப்பி விடும். அதன் பின், குரங்குகளுடன் விளையாடுவதும், அதுகளுக்கு நண்பனாக திகழ்வதும், உணவுகள் வழங்குவதும் தான் நடந்து வருகிறது.
தற்போது வரை, குரங்குகளை அவனும் அடித்ததும் இல்லை, அதே போன்று குரங்குகளும், எங்களுடைய மகனை அடித்ததும் இல்லை என்று கூறியுள்ளனர்.