தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இடத்தில் இருப்பவர் விஜய். சமீபத்தில் வெளிவந்த மெர்சல் படம் தமிழ்நாட்டில் மட்டுமே 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளது.
இந்நிலையில் பிக்பாஸ் புகழ் நடிகை ஆர்த்தியுடன் விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் மோதி வருகின்றனர்.
ஆர்த்தி அஜித்தின் தீவிர ரசிகை என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம் என்பதால் இந்த மோதலில் ஆச்சர்யம் எதுவும் இல்லை என்றாலும், அவர் விஜய் ரசிகர்களுக்கு பதிலடி கொடுப்பதற்காக பல்வேறு ட்விட்களில் விஜய்யை விமர்சித்துள்ளார்.
“சுறா படம் பார்த்த பிறகு நான் அஜித் ரசிகை ஆகிவிட்டேன்”, “அஜித்தால் எந்த தயாரிப்பாளருக்கும் நட்டமில்லை ஆனால் உங்களை வைத்து எடுத்த பல தயாரிப்பாளர்கள் எங்கனே தெரியல..” என பல்வேறு ட்விட்களில் ஆர்த்தி விஜய்யை நேரடியாகவே விமர்சித்துள்ளார்.
அயர்லாந்தில் ஏற்பட்ட ஒபிலியா புயலால் விவவசாயிகள் நன்மை அடைந்துள்ளனர். ஒபிலியா புயல் அங்கு மிக மோசமான சேதங்களை உண்டுபண்ணியிருக்கிறது. கட்டிடங்கள், வீடுகளின் மேற்கூரைகள் இதனால் சேதமடைந்துள்ளன.
ஆனால் டிப்பெயரி பகுதி ஆப்பிள் தோட்ட விவசாயிகளுக்கு மட்டும் ஒபிலியா புயல் உதவி செய்திருக்கிறது.
இந்த சீசனில் ஆப்பிள்கள் அதிகமாக தோட்டத்தில் விளைந்திருந்தன. இதனைப் பறிப்பது என்பது பல வாரங்களுக்கு செய்ய வேண்டிய கடினமான பணி என்று அவர்கள் நினைத்திருந்தனர்.
ஆனால், ஒபிலியா புயல் ஒரே இரவில் அனைத்து ஆப்பிள்களையும் நிலத்தில் தள்ளிவிட்டது. மழையில் ஆப்பிள்கள் அடித்துச் செல்லப்படவில்லை.
போர்வை விரித்ததுபோல் நிலமே தெரியாதபடி ஆப்பிள்களால் தோட்டம் மூடப்பட்டிருந்தது. மேலும், இந்த புயலால் பழங்கள் எந்த விதத்திலும் சேதமடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
புற்றுநோயாளிகளுக்காகவே நவீன தொழில்நுட்பத்துடனான முகம் பார்க்கும் கண்ணாடியை துருக்கியைச் சேர்ந்த பெர்க் இல்ஹான் என்பவர் உருவாக்கியுள்ளார்.
இந்த கண்ணாடி சிரித்தால் மட்டுமே முகத்தைக் காட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. டேப்லட் போலவே இருக்கும் இந்தக் கருவியில் கண்ணாடியும் கெமராவும் பொருத்தப்பட்டுள்ளன.
முக உணர்ச்சிகளைக் கண்காணித்து, சிரித்தவுடன் சட்டென்று கண்ணாடியில் முகத்தைக் காட்டும். சிரிக்கவில்லை என்றால் கண்ணாடியில் முகம் தெரியாது.
வழக்கமான கண்ணாடி போலவே சுவரில் மாட்டவோ மேசையில் வைக்கவோ முடியும்.
சுமார் 2,000 டொலர்கள் முதல் 3,000 டொலர்கள் வரையான விலையில் இந்தக் கண்ணாடி விற்கப்படுகிறது.
”எந்த கஷ்டம் வந்தாலும் அதைக்கண்டு துவண்டு போகாமல், நம்பிக்கையோடும் புன்னகையோடும் எதிர்கொண்டால் நோய் விரைவில் குணமாகும். அல்லது மரணமாவது தள்ளிப்போகக்கூடும். நியூயார்க்கில் படிப்பை முடித்தவுடன் சில புற்றுநோய் மருத்துவமனைகளுக்கு சென்று ஆய்வு நடத்தினேன். சிரிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியும் ஆயுளும் அதிகரிக்கும் என்பதை அறிந்துகொண்டேன். புற்றுநோயாளிகளிடமும் மருத்துவர்களிடமும் பேசினேன். 2 ஆண்டுகள் கடுமையாக உழைத்து, சிரித்தால் முகம் காட்டும் கண்ணாடியை உருவாக்கினேன்,” என பெர்க் இல்ஹான் கூறியுள்ளார்.
ஆளுனர் மாளிகையில் ஆளுனரின் இருக்கையில் சிறுவன் ஒருவன் அமர்ந்திருக்கும் படம் வெளியாகியுள்ளது. இந்த படத்தை அவரே சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
புதுவை ஆளுனராக கிரண்பேடி பதவியேற்ற நாள் முதல் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். மேலும் நேரடியாக கள ஆய்வு, தூய்மைப்பணி எனவும் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
ஆளுனர் மாளிகையை பொதுமக்கள் பார்வையிடவும் திறந்து விட்டுள்ளார். அத்துடன் ஆளுனர் மாளிகையை பார்வையிட வருபவர்களுடன் கிரண்பேடி புகைப்படமும் எடுத்துக் கொள்கிறார்.
வார இறுதி நாட்களில் மாணவர்களுக்காக சொற்பொழிவுகள் நடத்தப்படுவதுடன் திரைப்படங்களும் ஆளுனர் மாளிகையில் காட்டப்படுகிறது.
இந்த நிலையில் ஆளுனர் மாளிகையில் ஆளுனரின் இருக்கையில் சிறுவன் ஒருவன் அமர்ந்திருக்கும் படம் வெளியாகி உள்ளது.
அருகே ஆளுனர் கிரண்பேடி நிற்கிறார். இந்த படத்தை அவரே சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த படம் தொடர்பாக ஆளுனர் கிரண்பேடி வெளியிட்டுள்ள பதிவில், ‘ஆளுனனர் மாளிகையை பார்வையிட வரும் சிறுவர்கள் பலர் கவர்னரின் இருக்கையில் அமர வைக்கப்படுகின்றனர்.
அவர்களில் ஒருவர் எதிர்காலத்தில் ஆளுனராக வந்தாலும் வரலாம். யார் அறிவார்?’ என்று அதில் அவர் வினா எழுப்பி உள்ளார்.
இளவாளைப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
50 வயதுடைய குறித்த நபருக்கு, இளவாளைப் பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவருடன் தொடர்பு இருந்துள்ளதாக தெரிகிறது. அதனை அறிந்த அப் பெண்ணின் கணவரே இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.
இதனையடுத்து படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த குறித்த நபர் நேற்று (30) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அவுஸ்திரேலிய செய்தி நிறுவனத்திற்கு எதிராக கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் தொடர்ந்த வழக்கில் வெற்றி பெற்றார்.
பஃயர் பேக்ஸ் கடந்த 2015ம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணியின் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் குறித்து தவறான கருத்துகளை வெளியிட்டது.
பத்திரிக்கை வெளியிட்ட அறிக்கையில் கிறிஸ் கெய்ல் 2015ம் ஆண்டு உலக கோப்பையின் போது வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு உதவியாக இருந்த பெண்ணிடம் அநாகரீகமாக நடந்து கொண்டதாக தெரிவிப்பட்டிருந்தது.
இதற்கு கெய்ல் மறுப்பு தெரிவித்தார். இருப்பினும் அந்த நிறுவனத்தை தொடர்ந்து அவுஸ்திரேலியாவில் உள்ள பல பத்திரிக்கைகள் இந்த செய்தியை வெளியிட்டன.
இதனால் மிகவும் கோபமடைந்த கெய்ல் பேர் பேக்ஸ் நிறுவனம் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கிற்கு நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
கிறிஸ் கெய்லிற்கு எதிராக ருசேல் என்ற அவுஸ்திரேலியா பெண் சாட்சி கூறினார்.
ஆனால் அவர் தகுந்த ஆதாரங்கள் வழங்காததால் இந்த வழக்கு கிறிஸ் கெய்லிற்கு சாதகமாக முடிவடைந்தது.
இதுகுறித்து கிறிஸ் கெய்ல், ´நான் எந்த தவறும் செய்ய வில்லை. வழக்கில் வெற்றி பெற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது´ என சிட்னியில் உள்ள உச்சநீதிமன்ற வளாகத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக இன்று (30.10.2017) மதியம் 12.15 மணியளவில் இடம்பெற்ற பட்டா – மோட்டார் சைக்கில் விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டடுள்ளார். இவ் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்.
வைத்தியசாலைக்கு முன்பாக அமைந்துள்ள சுற்றுவட்டத்தில் மோட்டார் சைக்கில் திரும்ப முற்பட்ட சமயத்தில் கொரவப்பொத்தானை வீதியிலிருந்து யாழ் வீதி நோக்கி பயணித்த பட்டா ரக வாகனம் மோட்டார் சைக்கிலிலுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இவ் விபத்தில் மோட்டார் சைக்கிலில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா பேரூந்து நிலையத்தில் 4 கிலோ 96 கிராம் கேரள கஞ்சாவுடன் மாத்தளை பிரதேசத்தை சேர்ந்த இளைஞன் ஒருவரை வவுனியா வவுனியா போதை பொருள் ஒழிப்பு பிரிவுப் பொலிசார் கைது செய்துள்ளனர்.
வவுனியா பேரூந்து நிலையத்தில் இன்று (30.10) காலை 10.30 மணியளவில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
யாழில் இருந்து தம்புள்ள நோக்கிச் செல்லும் பேரூந்தில் பயணித்த இளைஞன் ஒருவரின் செயற்பாட்டில் சந்தேகம் அடைந்த வவுனியா போதைப் பொருள் ஒழிப்பு பிரிவுப் பொலிசார் வவுனியா பேரூந்து நிலையத்தில் வைத்து குறித்த இளைஞனின் பையினை சோதனை செய்த போது அதில் 4 கிலோ 96 கிராம் கேரளா கஞ்சா கண்டு பிடிக்கப்பட்டது.
இதனையடுத்து குறித்த கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதுடன் குறித்த இளைஞரும் கைது செய்யப்பட்டுள்ளார். மாத்தளை பிரதேசத்தை சேர்ந்த இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை வவுனியா போதைப்பொருள் தடுப்பு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா கோயில்புளியங்குளம் முத்தமிழ் வித்தியால மாணவர்கள், பெற்றோர்கள் ஒன்றிணைந்து ஆசிரியரை இடமாற்ற வேண்டாமென எதிர்ப்பு தெரிவித்து இன்று (30.10.2017) காலை 8 மணி தொடக்கம் 9.30 மணிவரை பாடசாலை வாயிலுக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கணித பாட ஆசிரியரின் இடமாற்றத்தினை தடை செய், கல்வி எங்கள் எதிர்காலம் சிதைக்காதே , கல்வி வலயமே பதில் கூறு, வேண்டும் வேண்டும் எங்கள் கணித பாட ஆசிரியர் என பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு சுமார் 90 நிமிடங்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்ட இடத்திற்கு விரைந்த வவுனியா வடக்கு கோட்டக்கல்வி அதிகாரி ( ஓமந்தை ) சசிகுமார் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள், பெற்றோர்களுடன் கலந்துரையாடி ஆசிரியரின் இடமாற்றத்தினை இரத்து செய்வதற்கான நடவடிக்கையினை மேற்கொள்வதாக வாக்குறுதியளித்தார்.
அதனையடுத்து மாணவர்கள் கற்றல் நடவடிக்கைளுக்காக பாடசாலைக்குள் சென்றனர்.
வவுனியாவில் ஈரப்பெரியகுளம் பகுதியில் இன்று (30.10.2017) காலை 6.30 மணியளவில் இராணுவ உயர் அதிகாரி பயணித்த சொகுசு கார் மோட்டார் சைக்கிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இராணுவ அதிகாரி பயணித்த சொகுசு ரக கார் ஈரப்பெரியகுளம் பகுதியில் மோட்டார் சைக்கிலுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இவ் விபத்தில் மோட்டார் சைக்கிலில் பயணித்த உதயலக பிரியதர்சன (21வயது) இளைஞன் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சொகுசு ரக காரில் பயணித்த இராணுவ அதிகாரி மாங்குளம் இரானுவ முகாமில் பணியாற்றுவதாகவும் மேலதிக விசாரணைகனை மேற்கொண்டு வருவதாவும் போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா ஒமந்தை பகுதியில் இன்று (30.10.2017) காலை 6 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 24 பேர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா ஒமந்தை பனிக்கர்நீராவி பகுதியில் புளியங்குளத்திலிருந்து வவுனியா நோக்கி ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றி வந்த தனியார் பேரூந்து வவுனியாவிலிருந்து யாழ் நோக்கி பயணித்த பால் கொள்கலன் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் பேரூந்தில் பயணித்த 24 ஆடைத்தொழிற்சாலை பணியாளர்கள் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் சிலர் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஒமந்தை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
குஜராத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் 9 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் 5 குழந்தைகள் குறைந்த எடையுடன் பிறந்துள்ளன. இதே போன்று மற்றொரு அரசு மருத்துவமனையிலும் 4 குழந்தைகள் பிறந்துள்ளன.
அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில், இந்த 9 குழந்தைகளும் உயிரழந்துவிட்டன. 24 மணி நேரத்தில், 9 குழந்தைகள் அடுத்தடுத்து உயிரழந்த இந்த துயர சம்பவம பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து அம்மாநில முதல்வர் விஜய் ரூபானி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Nibiru என்ற Planet X காரணமாக நவம்பர் 19 ஆம் திகதி பூமியில் பேரழிவு ஏற்படும் என்று வெளியான தகவலை நாசா ஆய்வு மையம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
Planet XNews.com என்ற தளத்தில் சமீபகாலமாக நிபுரு கோள் பற்றிய செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன. அதாவது, இந்த நிபுரு கோள் ஒரு கருப்பு நட்சத்திரம் என்று அழைக்கப்படுகிறது, இது ஒரு வாயுக் கோள் என்றும், நட்சத்திரமாக மாற முயற்சித்து தோல்வியடைந்ததால், அது வாயு கோளாக மாறியது என கூறப்பட்டுள்ளது.
சூரியக் குடும்பத்தில் கடைசியாக இருக்கும் இந்த கோள் சூரியனை சுற்றி வர 3,600 ஆண்டுகள் ஆகும் என்றும் கூறப்படுகிறது.
தற்போது இந்த நிபுரு கோளின் ஈர்ப்பு சக்தி காரணமாக பூமியில் பூகம்பம் ஏற்படுவதும், எரிமலைகள் வெடிப்பதும் அதிகரிக்கும். இறுதியாக வரும் நவம்பர் 19ம் தேதி ‘Armageddon’ என்ற மிகப்பெரிய பூகம்பம் ஏற்படும் என செய்தி வெளியானது.
இந்த பூகம்பத்தால், பிரான்ஸ், இத்தாலியிலிருந்து அலாஸ்கா மற்றும் ரஷ்யா வரையும், அமெரிக்க மேற்கு கரையோர பகுதியிலும், இந்தோனேஷியா, ஜப்பான் போன்ற பகுதிகளிலும் கோடிக்கணக்கான அளவில் உயிரிழப்பு ஏற்படும் என டெரல் கிராப்ட் என்ற எழுத்தாளர் தெரிவித்தார்.
இந்த தகவலை அமெரிக்காவின் நாசா மையம் முற்றிலும் மறுத்துள்ளது. நிபுரு என்ற கோளே இல்லை. இவை அனைத்தும் வதந்திகள் என்றும் நவம்பர் 19ம் திகதி மிகப் பெரியளவில் பூகம்பம் ஏற்படும் என்பதற்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை.
நிபுரு என்ற கோள் உண்மையாக இருந்திருந்தால், அதை விண்வெளி விஞ்ஞானிகள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடித்திருப்பர். அர்மஜெட்டான் பூகம்பம் நடக்கப்போவதே இல்லை எனவும் நாசா கூறியுள்ளது.
குருணாகலில் செயற்படும் சர்வதேச பாடசாலை நிர்வாகத்தின் செயற்பாடு காரணமாக குற்றசாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அந்தப் பகுதியிலுள்ள சர்வதேச பாடசாலையில் தமது பிள்ளைகளை அனுமதித்த பெற்றோர் பாரிய சிக்கல் ஒன்றுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
பழைய வீடு ஒன்றில் நடத்தி செல்லப்படுகின்ற இந்த சர்வதேச பாடசாலையின் அனைத்து ஜன்னல் மற்றும் கதவுகளை முடிவிட்டு, ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு பேய் படம் ஒன்று காட்டப்பட்டுள்ளது.
பெரியவர்கள் உட்பட அச்சமடையும் படத்தை சிறுவர்களுக்கு காட்டியுள்ளமையினால் இந்த மாணவர்கள் வீட்டை விட்டு வெளியே வருவதற்கு அச்சமடைவதாக அவர்களின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
மன ரீதியான தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளமையினால் குறித்த மாணவர்கள் பாடசாலைக்கு செல்ல மறுப்பதாக பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
வெளிநாடுகளில் கொண்டாடப்படும் பேய்கள் தினத்தினை முன்னிட்டு குறித்த பாடசாலையில் பேய்ப் படம் மாணவர்களுக்கு காட்டப்பட்டுள்ளது.
வெளிநாட்டு கலாச்சாரத்திற்கு அமைய இலங்கையிலும் அதனை திணித்தமையினால் மாணவர்களின் நிலை பரிதாபத்திற்குரியதாக மாறியுள்ளதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பண கொடுக்கல் வாங்கலில் ஏமாற்றம் காரணமாக ஒரு குடும்பமே உயிரிழந்த சம்பவம் ஒட்டு மொத்த இலங்கையையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியள்ளது.
ஒரு கோடிக்கும் அதிகமான பணத்தை வாங்கிய நபர்கள், ஏமாற்றியமையால் ஐந்து பேர் கொண்ட குடும்பம் தற்கொலை செய்து கொண்டது.
குறித்த குடும்பத்தின் தலைவர் கடந்த மாதம் தற்கொலை செய்து கொண்ட நிலையில், தாய் மற்றும் பிள்ளைகள் நேற்று முன்தினம் விஷமருந்து உயிரிழந்தனர்.
தாய் மற்றும் மூன்று பிள்ளைகளின் இறுதி மரண சடங்குகள் நேற்று உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
இந்நிலையில் தாயின் மூலம் விஷம் கொடுக்கப்பட்ட உயிரிழந்த குழந்தைகளிடம் இலங்கை அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க முன்னிப்பு கோரியுள்ளார்.
நேற்று நடைபெற்ற இறுதி அஞ்சலி நிகழ்வின் போது வைக்கப்பட்டிருந்த சடலங்கள் தொடர்பான புகைப்படம் ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட ரஞ்சன் ராமநாயக்க, உயிரிழந்த குழந்தைகளிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
“மிகவும் வருத்தமாக உள்ளது. மன்னித்து விடுங்கள் மகனே, மகளே. உங்கள் மரணத்திற்கு நாங்களும் பொறுப்பு கூற வேண்டும். ஒரு குழு மகிழ்ச்சியை அனுபவிக்க இன்றும் ஒரு குழுவினர் கடன் செலுத்த முடியாமல் உயிரிழக்கும் இந்த சமுதாய முறையை மாற்ற வேண்டும்” என ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
அவர் தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் இந்த பதிவையிட்டு மன்னிப்பு கோரியிருந்தார்.
ரயில் என்ஜினுடன் வான் ஒன்று மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த அனர்த்தம் மீட்டியாகொட, தலவத்துமுல்ல பகுதியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
குறித்த ரயில் என்ஜின் காலியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துள்ளது. வானில் பயணித்த பிக்கு ஒருவரும் 12 பெண்களும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மீட்டியாகொட மற்றும் தெல்வத்தை பிரதேசத்தை சேர்ந்த இரண்டு பெண்களே விபத்தில் உயிரிழந்துள்ளனர். அவர்கள் 37 மற்றும் 49 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து தொடர்பில் வான் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு எவ்வித காயமும் ஏற்படாத நிலையில் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.