அவுஸ்திரேலியாவில், பசுமைக்கட்சியின் வேட்பாளராக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞரொருவர் களமிறங்கவுள்ளார்.
யாழ். சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த 31 வயதான சுஜன் செல்வன் எனும் குறித்த இளைஞன் 2000ஆம் ஆண்டு அகதியாக அவுஸ்திரேலியா சென்றுள்ளார்.
இறுதி யுத்த காலப்பகுதியான 2009இல் விடுதலைப்போராட்டம் தொடர்பாக அவுஸ்திரேலிய மக்களுக்கு கல்வி சார் விழிப்புணர்வை ஏற்படுத்துவதை அடிப்படையாக கொண்டு “வொய்ஸ் ஒப் தமிழ்” என்னும் அமைப்பினை நிறுவியுள்ளார்.
அத்துடன் அவுஸ்திரேலியாவில் மனித உரிமை ஆர்வலராகவும், அவுஸ்திரேலியாவிற்கு தஞ்சம் கோரி செல்பவர்களின் நலன் சார் நடவடிக்கைகளில் பங்கு கொள்ளும் ஒரு முன்னணி செயற்பாட்டாளராகவும் செயற்பட்டு வந்துள்ளார்.
இந்த நிலையிலேயே அவர் பசுமைக்கட்சியின் வேட்பாளராக சிட்னி தெற்கு பிராந்தியத்தில் தமிழர்கள் அதிகம் வாழும் பிரோஸ்பெக்ட் (Prospect) தொகுதியில் தாம் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
மூன்று வருடத்துக்கு ஒரு முறை நடைபெறும் இத்தேர்தலில் prospect தேர்தல் தொகுதியில் தமிழன் வேட்பாளராக போட்டியிடவுள்ளார்.
தரம் ஐந்தில் படிக்கும் மாணவி ஒருவரின் செயற்பாடு அனைவரின் மனங்களையும் கனக்க வைத்துள்ளது. குறித்த மாணவி உயிரிழந்த தனது தந்தையின் சடலம் வீட்டில் வைக்கப்பட்டிருந்த நிலையில் புலமை பரீட்சைக்கு சென்றுள்ளார். இந்த சம்பவம் சுரியவெவ, விஹாரகல பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
குறித்த மகளின் தந்தை புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் இன்று பரீட்சைக்கு தயாரான மகள் முதலில் தாயாரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டுள்ளார்.
பின்னர் தந்தையின் சடலத்திற்கு அருகில் சென்று வணங்கி பரீட்சை எழுத செல்கிறேன் அப்பா என கூறிவிட்டு கண்ணீருடன் மாணவி சென்றுள்ளார்.
மாணவியின் இந்த செயற்பாடு அங்கிருந்து அனைவருக்கும் வருத்ததை கொடுத்ததுடன், கண்ணீர் சிந்தவும் வைத்துள்ளது.
நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 18ஆம் திகதி கராப்பிட்டிய வைத்தியசாலையில் குறித்த சிறுமியின் தந்தை உயிரிழந்துள்ளார்.
நாடு பூராகவும் தரம் ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சை நேற்று நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி மற்றும் அவரது காதலி அனுஷ்கா சர்மா ஆகியோர் இணைந்து கண்டி நகரில் மரக்கன்றுகளை நட்டு வைத்துள்ளனர்.
இலங்கைக்கு விராட் கோஹ்லி தலைமையிலான கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், நடிகை அனுஷ்கா சர்மாவும் இலங்கை வந்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
அதனை உறுதி செய்யும் வகையில் தற்போது இருவரும் கண்டி நகரில் மரக்கன்றுகளை நட்டு வைத்துள்ளனர். இது குறித்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளதுடன், வைரலாக பரவி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஓய்வு நேரங்களில் விராட் கோஹ்லி இலங்கையின் பல்வேறு இடங்களுக்கு சென்று வந்துள்ள நிலையில், ஏனைய வீரர்களும் நுவரெலியா உள்ளிட்ட இடங்களுக்கு சென்று வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஈழத்தில் புகழ்பெற்ற ஆலயமான யாழ். அழகு பெரும் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் வெகு சிறப்பாக இடம்பெற்றது.
24ஆம் நாளான நேற்றைய தினம் தேர்த்திருவிழாவைக் காண உள்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் பெருந்திரளான பக்தர்கள் அலையென திரண்டு வருகை தந்திருந்தனர்.
மேலும், நாளைய தினம் 25ஆம் நாள் தீர்த்தத் திருவிழாவும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நிரந்தர நியமனம் வழங்கக் கோரி வவுனியாவிலிருந்து பாத யாத்திரையாக சென்று ஜனாதிபதியை சந்திக்கவுள்ளதாக வடக்கு கிழக்கு புகையிரத கடவை காப்பாளர் சங்கத் தலைவர் றொகான் ராஜ்குமார் தெரிவித்தார்.
வவுனியா புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அலுவலகத்தில் நேற்று (19.08.2017) மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், நாளொன்றுக்கு 250 ரூபா கொடுப்பனவில் கடந்த நான்கு வருடங்களாக பொது மக்களின் பாதுகாப்புக்காக கடமையாற்றி வருகின்றோம்.
எதிர்வரும் 25 ஆம் திகதி வவுனியாவிலிருந்து கொழும்புக்கு பாதயாத்திரையாக சென்று ஜனாதிபதியை சந்திக்கவுள்ளோம்,
வடக்கு கிழக்கில் இருக்கக் கூடிய சிவில் அமைப்புக்கள் இளைஞர் கழகங்கள் சமூக ஆர்வலர்கள் எங்களுடன் இணைந்து ஆதரவு கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.
எங்களுடன் இணைய விரும்புகின்றவர்கள் 0775740100 மற்றும் 0775701702 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பாதயாத்திரையில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.
எங்களது நியாயமான கோரிக்கை நிறைவேற வடக்கு கிழக்கிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சி வேறுபாடின்றி எங்கள் கோரிக்கையை கவனத்திலெடுப்பதோடு நாங்கள் ஜனாதிபதியை சந்தித்து எங்கள் கோரிக்கையை முன்வைப்பதற்கு உதவி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் நேற்று (19.08) இரவு 7.45 மணியளவில் கேரளா கஞ்சாவுடன் ஒருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணத்திலிருந்து நீர்கொழும்பு நோக்கி கொண்டு செல்ல முற்பட்ட 2கிலோகிராம் கேரளா கஞ்சா பொதியினை வைத்திருந்த யு.பி.எஸ்.கருணாநாயக்க (வயது 50) என்பவரை நேற்று (19.08) இரவு 7.45 மணியளவில் வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் வைத்து வவுனியா பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இந் நடவடிக்கைக்கு வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபில்யூ.எ.மகிந்த தலைமையிலான உதவி பொலிஸ் பரிசோதகர் சம்பத் மற்றும் போதைபொருள் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த அனுர, கேரத், பிரதீப், கொத்தலாவே ஆகியோர் அடங்கிய குழுவினர் இந் நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.
யாழ்ப்பாணத்தில் 2 கிலோகிராம் கஞ்சாவினை 1,50,000 ரூபாவிற்கு கொள்வனவு செய்து நீர்கொழும்பிற்கு கொண்டு சென்று 3,00,000 ரூபாவிற்கு விற்பனை செய்வதாகவும் சந்தேகநபர் ஒப்புக்கொண்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா சாம்பல் தோட்டத்தில் இன்று (20.08.2017) காலை 11.30 மணியளவில் ஐந்து பிள்ளைகளின் தாய் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்..
வவுனியா நெளுக்குளம் சாம்பல்தோட்டம் பகுதியில் வசித்து வரும் ஐந்து பிள்ளைகளின் தாயான தியாகராசா நகுலேஸ்வரி (வயது 46) என்பவர் இன்று கிணற்றிக்கு அருகே நின்றுள்ளார். பின்னர் தாயைக் காணவில்லை என அவரின் பிள்ளைகள் தேடிய சமயத்தில் கிணற்றில் சடலமாக காணப்பட்டுள்ளார்.
பின்னர் அயலவர்களின் உதவியுடன் சடலம் மீட்டெடுக்கப்பட்டு தற்போது பிரேத பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக குறித்த பெண்ணின் மகளிடம் வினாவிய போது, தாயார் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் எனத் தெரிவித்தார்.
வவுனியா மாவட்டத்தினை பிறப்பிடமாக கொண்டவரும் கொழும்பு பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞான, பொதுக்கொள்கைத்துறையின் சிரேஸ்ட விரிவுரையாளரும், அரசியல் ஆய்வாளருமாகிய கலாநிதி முஹமட் சரீப் அனிஸ் ஈரானிய இஸ்ஸாமிய குடியரசுக்கான இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் தூதுவராக அமைச்சர் அல்ஹாஜ் றிஸாட் பதியுதீனின் பரிந்துரைக்கமைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனை வவுனியா மக்கள், வர்த்தர்கள், சமூக சேவையாளர்கள், நலன்விரும்பிகள் அனைவரும் ஒன்றினைந்து கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (18.08.2017) மாலை 4.30 மணியளவில் வவுனியா முஸ்ஸிம் மகா வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சரும், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவருமான றிஸாட் பதியுதீன், வடமாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வடமாகாண சபை உறுப்பினர் வி.ஜெயதிலக, அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஸ்ஹாக் றகுமான், புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி , திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்றூப், நாச்சியாதுவ உதவி பிரதேச செயலாளர் ஜெ.மஹ்றூப், வவுனியா மேலதிக மாவட்ட செயலாளர் தி.திரேஸ்குமார், வவுனியா மாவட்ட பிரதேச செயலாளர் கா.உதயராசா, பொதுமக்கள், சமுக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
கிளிநொச்சி – சாந்தபுரம் பகுதியில் சிறுமி ஒருவரை நீண்டகாலமாக துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை தொடர்பில் மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கிளிநொச்சி பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றின் பிரகாரம், சிறுமியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட விடயம் தெரியவந்துள்ளது.
இதுபற்றி குறித்த சிறுமி பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
11 வயதான சிறுமி ஒருவர் தனது தாயின் மூன்றாவது கணவரும் அவரின் நண்பரும் நீண்டகாலமாக தன்னை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்ததாகத் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, அவ்விருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும், சிறுமியின் தாயாரையும் பொலிஸார் கைது செய்துள்ளதுடன், சந்தேகநபர்கள் மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
சிறுமியின் வாக்குமூலத்திற்கமைய , இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவரை கைது செய்வதற்கான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
ஓமன் நாட்டை சேர்ந்த 65 வயது ஷேக்கை திருமணம் செய்துகொண்ட 16 வயது சிறுமி தன்னை காப்பாற்ற வேண்டும் என தனது தாயிடம் கதறியுள்ளார்.
கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் ஐதராபாத்தை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், 65 வயது ஷேக்கிற்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.
தற்போது அச்சிறுமி ஷேக்குடன் மஸ்கட்டில் வசித்து வருகிறார், 5 லட்சம் கொடுத்து சிறுமியை விலைக்கு ஷேக் வாங்கியுள்ளதாகவும் இதற்கு தனது கணவரின் அக்கா உடந்தையாக இருந்ததாகவும் சிறுமியின் தாய் புகார் அளித்துள்ளார்.
இவ்விவகாரம் தொடர்பாக மத்திய மந்திரி மேனகா காந்தி வெளியுறவுத்துறை மந்திரிக்கு கோரிக்கை விடுத்து உள்ளார், சிறுமியை மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக் கொண்டு உள்ளார்.
மஸ்கட்டில் இருந்து போனில் பெற்றோர்களிடம் பேசிய சிறுமி, நீங்கள் என்னை இங்கிருந்து காப்பாற்றவில்லை என்றால், நான் இறந்துவிடுவேன்..” என அழுதுள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது.
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களுக்கு உதவி புரியும் நோக்கில், இலங்கையர் ஒருவரை உயிரை பணயம் வைத்து சாகசம் செய்துள்ளதாக பிரித்தானிய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
தனது உயிரை துச்சமென மதித்து ஜோசப் ஜெயகுமார் என்ற 68 வயதுடைய தமிழர் 500 அடி உயரத்தில் இருந்து காற்றில் நடக்கும் சாகசத்தை புரிந்துள்ளார்.
பல ஆண்டுகளாக ஜோசப் ஜெயக்குமார் வறுமையில் வாழும் குழந்தைகளுக்கு உதவும் நிறுவனம் ஒன்றின் நிதி ஆதரவாளராக செயற்பட்டு வருகின்றார்.
அதற்கமைய அவர் கடந்த புதன்கிழமை 8000 பவுண்ட் சேகரிப்பதற்காக சிறிய ரக விமானம் ஒன்றின் உதவியுடன் நாற்காலியில் அமர்ந்து 500 அடி உயரத்திற்கு அனுப்பப்பட்டுள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு போரின் போது காணாமல் போனவர்களின் பிள்ளைகளுக்கு உதவுவதற்காக இந்த நடவடிக்கை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பிரித்தானியாவில் Coppice வீதியின் Woodley பகுதியில் வாழும் ஜெயகுமார் Boeing Stearman என்ற சிறிய ரக விமானத்தில் 135 கிலோ மீற்றர் வேகத்தில் 500 அடி உயரத்திற்கு அனுப்பப்பட்டார்.
அவர் தனது சாகசத்தை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
“நான் இதனை செய்திருக்கிறேன் என்று என்னால் நம்ப முடியவில்லை. இது பயங்கரமானதாக இருந்தாலும், நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன் மற்றும் உற்சாகமாக இருந்தேன், இதுவரை எனக்கு நிதி வழங்கிய அனைவருக்கும் இதயபூர்வமான நன்றியை சொல்ல விரும்புகிறேன். நிதி திரட்டும் பக்கம் நன்கொடைகளுக்கான இன்னமும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. உதவ விரும்புபவர்கள் தொடர்ந்து உதவலாம்.
இலங்கையில் இடம்பெற்ற சிவில் யுத்தத்தில் ஏற்பட்ட அழிவுகளின் விளைவுகளை பயங்கரமானாகும். யுத்த்தில் பெற்றோரை இழந்த நூற்றுக்கணக்கான சிறுவர்களுக்கு நீண்டகால மறுவாழ்வு வழங்குவதே நோக்கமாகும்.
எனது முதுகுவலியால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் இந்த நிதி திரட்டு நிகழ்ச்சிகளை இரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது..” என ஜெயகுமார் குறிப்பிட்டுள்ளார்.
20 ஆண்டுகளுக்கு முன்னர் அரோபனம் சிறுவர் நிதியம் இங்கிலாந்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 20 சிறுவர்களுக்கு உதவி ஆரம்பிக்கப்பட்டு தற்போது அந்த நிதியத்தினால் 600 சிறுவர்களுக்கு உதவிகள் வழங்கும் வரை வளர்ந்துள்ளதாக பிரித்தானிய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கைதி ஒருவருக்கு ஹெரோயின் போதைப்பொருள் கொண்டு சென்ற பெண் ஒருவருக்கு 14 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மாத்தறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவரை பார்வையிடச் சென்ற பெண்ணே இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளார்.
கைதியை பார்வையிடச் சென்ற பெண், பற்பசை டியூப்பில் போதைப் பொருளை நிறைத்து நூதனமான முறையில் கொண்டு சென்றிருந்தார்.
இது தொடர்பான வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட 37 வயதான பெண்ணுக்கு மாத்தறை உயர் நீதிமன்ற நீதிபதி தமித் தொடவத்த பதினான்கு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளார்.
இந்த தண்டனைக்கு மேலதிகமாக இரண்டு லட்சம் ரூபா அபராதம் செலுத்த வேண்டுமெனவும், அவ்வாறு செலுத்த தவறினால் மேலும் இரண்டாண்டுகள் தண்டனை நீடிக்கப்படும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
2010ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18ம் திகதி மாத்தறை சிறைச்சாலையில் கைதி ஒருவரை பார்வையிடச் சென்ற போது இவ்வாறு போதைப் பொருள் எடுத்துச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வவுனியா பாலமோட்டையில் யானை சடலமாக மீட்கப்பட்டள்ளது. வவுனியா பாலமோட்டை, ஊரல்குளத்தில் யானை ஒன்று இறந்து காணப்பட்டதை அவதானித்த ஊர் மக்கள் ஓமந்தை பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.
இதனை அடுத்து ஓமந்தை பொலிஸாரும், வன ஜீவராசிகள் திணைக்களமும் சம்பவ இடத்துக்கு சென்றதுடன், வன ஜீவராசிகள் திணைக்கள வைத்திய அதிகாரியால் யானை இறந்ததற்குரிய காரணம் தொடர்பாக மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
மருத்துவ அறிக்கையின் படி ஐந்து வயதுடைய யானை வெங்காய வெடியினை உண்டதனால் வாயில் ஏற்பட்ட காயம் காரணமாக உணவு உண்ண முடியாமல் இறந்துள்ளது என தெரியவந்துள்ளது.
யானை 7 நாட்களுக்கு முன்னர் இறந்திருக்கலாம் என தெரியவருகின்றது.
வவுனியா சமயபுரம் அம்மன் ஆலயத்திற்கு அருகிலுள்ள வீட்டின் மாமரத்திலிருந்து இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று (19.08.2017) காலை 7.00 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
வவுனியா கணேசபுரம் அம்மன் கோவிலுக்கு அருகில் வசித்து வரும் மாரிமுத்து பிரசாந்தன் 26வயதுடைய இளைஞன் இன்று காலை அவரது வீட்டிலுள்ள மாமரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னரே கட்டார் நாட்டிலிருந்து விடுமுறையில் வீட்டிற்கு வந்துள்ளார். நேற்று இரவு வீட்டிற்கு வந்த இளைஞன் வழமையாக இருந்துள்ளார். எனினும் இன்று அதிகாலை அயலவர்கள் மாமரத்தில் இளைஞன் தூக்கில் தொங்கியுள்ளதாக தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.