வவுனியா சிறுவர் இல்லத்தில் 13 வயதுச் சிறுமி பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டதாக புதிய முறைப்பாடு!!

 
கடந்த 2013 ஆம் ஆண்டு வவுனியா, வேப்பங்குளம், அன்பகம் சிறுவர் இல்லத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி, குறித்த சிறுவர் இல்லத்தில் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக அங்கு தங்கியிருந்த சகோதரியும், சிறுமியின் தாயாரும் குற்றம் சாட்டியுள்ளனர்.

குறித்த பாலியல் துஸ்பிரயோகம் குறித்து முன்னரே தெரிந்திருந்த போதும் அதனை வெளிப்படுத்த முடியாத சூழ்நிலை இருந்ததாகவும், தற்போதும் ஒரு சிறுமி மரணமாகியுள்ளமையால் இனிமேலும் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக அதனை வெளிப்படுத்த வேண்டி ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள மரணித்த சிறுமியின் சகோதரி மற்றும் தாயார் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்களிடமும், வவுனியா பொலிஸ் நிலையத்திலும், மனிதவுரிமை ஆணைக்குழுவிலும் கடிதம் மூலம் தமது முறைப்பாட்டினை செய்துள்ளனர். அம் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாவது,

கடந்த 2013ம் ஆண்டு செப்ரெம்பர் 7ம் திகதி அன்பகம் சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த பெ.நிசாந்தினி என்ற 13 வயது சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீடகப்பட்டிருந்தார். அப்போது சகோதரியாகிய என்னுடன் ஏற்பட்ட முரண்பட்டால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் அது உண்மையில்லை. எனது சகோதரி மரணித்தமைக்கு அன்பகத்தில் இடம்பெற்ற பாலியல் வன்புணர்வே காரணம் எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

அன்பகத்தில் தங்கியிருந்த ஆண்கள் சிலர் தனது தங்கையை வன்புணர்விற்கு உட்படுத்தியதாகவும் இந்த விடயம் குறித்து முன்னர் இருந்த சில பிள்ளைகளும் அறிந்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

சாமி அம்மாவும் சில பெண்களுடன் தவறான நடத்தையில் ஈடுபடுவதாகவும் அங்கு தங்கியிருந்த சில மாணவிகளையும் அவர் தனது தவறான நடத்தைக்கு பயன்படுத்தியுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இதனால் முன்னைய சிறுமியின் மரணம் தொடர்பிலும் புதிய சர்ச்சை எழுந்திருக்கிறது. இந்த தகவலை மரணித்த சிறுமியின் தாயும் தெரிவித்துள்ளதுடன், தற்போது கூட ஒரு சிறுமி மரணித்துள்ளதாகவும் இதனால் தான் இனி எவரும் மரணிக்கக் கூடாது என்பதற்காகவே உண்மையை வெளிக் கொண்டு வருவதாகவும் அவர்கள் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.

குறித்த முறைப்பாடு தொடர்பில் இன்று பொலிசார் மரணித்த சிறுமியின் சகோதரியிடம் வாக்குமூலத்தை பதிவு செய்ய வருமாறு அழைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, குறித்த முறைப்பாடு தொடர்பில் அன்பகம் சிறுவர் இல்ல முகாமையாளரை கேட்ட போது அவர் இதனை முழுமையாக மறுத்துள்ளதுடன் இது திட்டமிட்டு புணையப்பட்ட கதை எனவும் தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-

வட கொரியாவுக்கு புதிய தடைகள் : ஆட்டத்தை தொடங்கிய மூன்று நாடுகள்!!

வடகொரியாவின் புதிய ஏவுகணை சோதனைக்கு எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில், புதிய தடைகளை விதிக்க அமெரிக்கா உள்ளிட்ட மூன்று நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

வடகொரியா உலக நாடுகள் மற்றும் ஐ.நாவின் எச்சரிக்கைகளை மீறி தொடர்ந்து ஆணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணை சோதனைகளை செய்து வருகிறது.

கண்டம் விட்டு கண்டம் தாண்டி எதிரிகளின் இலக்கை குறிவைத்து அழிக்கும் புதிய ஏவுகணையை கடந்த 4-ஆம் திகதி வடகொரியா சோதனை செய்தது.

இதை தடுக்கும் விதமாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதில் வடகொரியாவுக்கு புதிய பொருளாதார தடைகள் மற்றும் அந்நாட்டின் மீது ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை அமெரிக்கா முன்வைத்தது.

இதையடுத்து வடகொரியா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஐ.நா கூறியது. ஆனால் இதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்நிலையில், வடகொரியாவுக்கு புதிய தடைகளை விதிக்க வேண்டும் என்று அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென் கொரியா கோரிக்கை விடுத்துள்ளது.

ஜேர்மனியில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் பங்கேற்ற டிரம்ப், தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன் மற்றும் ஜப்பான் பிரதமர் ஷின்சோவின் சந்திப்புக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

காதலியை கொன்றது ஏன் : காதலன் பரபரப்பு வாக்குமூலம்!!

தமிழகத்தில் இளம்பெண்ணை கொலை செய்த வழக்கில் இளைஞரை பொலிசார் கைது செய்துள்ள நிலையில் கொலைக்கான காரணம் குறித்து பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

தமிழ்நாட்டின் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் தங்கராஜ், இவர் மகள் தமிழா (18). சம்பவத்தன்று தமிழா மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளார், மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி தங்கராஜ் பொலிசில் புகார் அளித்தார்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிசார் மகேந்திரன் (24) என்ற இளைஞரை பிடித்து விசாரித்தார்கள்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தமிழாவை கொலை செய்ததை ஒத்துக்கொண்டார். மேலும், கொலை குறித்து மகேந்திரன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:

நானும், தமிழாவும் காதலித்து வந்தோம். இந்நிலையில், தமிழாவுக்கு வேறு இடத்தில் திருமணம் செய்து வைக்க அவர் பெற்றோர் முடிவு செய்ததும் அதற்கு அவர் சம்மதம் தெரிவித்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, தமிழாவை ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள இடத்திற்கு வரவழைத்து அவரிடம் வேறு மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்வது தொடர்பாக நான் கேட்ட போது, எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த நான் தமிழாவின் கழுத்தை அறுத்து கொன்றேன் என கூறியுள்ளார்.

இதையடுத்து மகேந்திரனை கைது செய்த பொலிசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்கள்.

ஒன்றரை வருடத்தில் 85 கிலோ எடையைக் குறைத்த நடன இயக்குநர்!!

இந்தியில் முன்னணி நடன இயக்குனராக இருக்கும் கணேஷ் ஆச்சார்யா ஒன்றரை வருடத்தில் 85 கிலோ குறைத்துள்ளார்.

கணேஷ் ஆச்சார்யாவின் உடல் எடை 200 கிலோ, இதனால் நடக்கமுடியாமல் சிரமப்பட்டு வந்துள்ளார். எனவே கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்த்து அரை சாப்பாடு மட்டுமே சாப்பிட்டு வந்துள்ளார்.

மேலும், உடற்பயிற்சி மையம் சென்று அங்கு அதிக நேரம் பயிற்சி மேற்கொண்டுள்ளார். இதன் மூலம் கடந்த ஒன்றரை வருடத்தில் 85 கிலோ உடல் எடை குறைத்துள்ளார்.

உடல் எடை குறைந்த பிறகு தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் கணேஷ் ஆச்சார்யா. இதைக் கண்டு பலர் ஆச்சரியமடைந்துள்ளனர்.

பார்ப்பவர்கள் எல்லோரும் எப்படி எடையை குறைத்தீர்கள் என்றே கேட்கிறார்களாம். ‘ஒன்றரை வருஷம் அரை சாப்பாட்டைச் சாப்பிட்டு, ஜிம்மே கதின்னு கிடந்து, நான் பட்டபாடு இருக்கே…’ என்று நீண்ட பெருமூச்சு விடுகிறார் கணேஷ் ஆச்சார்யா.

ஜொலிக்கும் சிகப்பழகு வேண்டுமா : இவற்றை முயற்சி செய்யுங்கள்!!

பெண்களில் பெரும்பாலான கருமை நிறம் கொண்டவர்கள், தாங்கள் சிகப்பழகுடன் திகழ வேண்டும் என்பதை விரும்புவதுண்டு. இதற்காக அழகு நிலையங்களிலேயே தஞ்சமடைந்து தங்களது அழகிற்காக பணத்தை செலவளிப்பர்.

ஆனால் அவ்வாறு சிரமப்படாமல் சில ஈஸியான டிப்ஸ்களை பின்பற்றினாலே சில தினங்களில் சிகப்பழகை பெற முடியும். அவற்றை இப்போது நாம் பார்ப்போம்.

ஸ்பெஷல் சீயக்காய்

சிகப்பழகை பெற முகத்தில் அழகு இருப்பது மட்டும் அவசியம் என்பது இல்லை. சருமத்தில் ஓரளவு எண்ணெய் பசை இருப்பது போல பார்த்துக் கொள்ளவும் வேண்டும்.

இப்படி சிகப்பழகூடன் கூடிய சர்மத்தை பெற சீயக்காய் ஒன்றை செய்து தேய்த்து கொண்டால், என்றும் அழகு நமது முகத்தில் ஜொலிக்கும்

தேவையான பொருட்கள்

சீயக்காய்-கால் கிலோ,

பயறு- கால் கிலோ,

வெந்தயம்- கால் கிலோ,

புங்கங்கொட்டை- 100 கிராம்,

பூலான் கிழங்கு – 100 கிராம்.

செய்முறை

இவை அனைத்தையும் நன்றாக அரைத்து வைத்துக் கொண்டால், ஸ்பெஷல் சீயக்காய் பவுடர் ரெடி.

வாரம் இருமுறை உச்சி முதல் உள்ளங்காய் வரை எண்ணெய் தேய்த்து, இந்த ஸ்பெஷல் பொடியை தலையில் நன்கு போட்டு அலசுங்கள்.

இதனால் தலையும் சூப்பராக சுத்தமாகி விடும். மேலும் தோலின் எண்ணெய் பசை ஓரேயடியாக ஓடிப்போகாமல், கருமையும் மறையத் தொடங்கும்.

இலங்கை- இந்தியா தொடர் அட்டவணை வெளியீடு!!

இலங்கைக்கு சுற்றுப்பயணம் செல்லும் இந்திய அணி 3 டெஸ்ட், 5 ஒருநாள், ஒரு டி20 ஆகிய போட்டிகளில் விளையாடவிருக்கிறது.

இதற்கான அட்டவணை விபரம் இதோ,

முதல் டெஸ்ட் – யூலை 23-30

2வது டெஸ்ட் – ஆகஸ்ட் 3 -7

3வது டெஸ்ட் – ஆகஸ்ட் 12- 16

முதல் ஒருநாள் – ஆகஸ்ட் 20

2வது ஒருநாள் – ஆகஸ்ட் 24

3வது ஒருநாள் – ஆகஸ்ட் 27

4வது ஒருநாள் – ஆகஸ்ட் 31

5வது ஒருநாள் – செப்டம்பர் 3

ஒரு டி20 – செப்டம்பர் 6

இதற்கு முன்பு 2009 ல் இந்திய அணி, இலங்கையில் முழுத்தொடரில் பங்கேற்றது.

ஆசிய தடகளத்தில் தங்கம் வென்ற தமிழன்!!

22 வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி இந்தியாவின் புவனேஷ்வரில் நேற்று தொடங்கியுள்ளது. நேற்றைய போட்டியில், பெண்கள் குண்டு எறிதல் போட்டியில் இந்திய வீராங்கனை மன்ப்ரீத் கவுர் தங்கப் பதக்கம் வென்றார்.

அதன் பின்பு நடந்த ஆண்களுக்கான 5,000 மீட்டர் ஓட்டபந்தயத்தில் தமிழகத்தைச் சார்ந்த லக்ஷ்மணன் தங்கப் பதக்கம் வென்றார்.

ஆண்களுக்கான வட்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் விகாஸ் கவுடாவுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.

பெண்களுக்கான நீளம் தாண்டுதலில் இந்தியாவின் நீனா வெள்ளிப் பதக்கமும் , நயனா ஜேம்ஸ் வெண்கலப் பதக்கமும் வென்றனர். பெண்களுக்கான ஈட்டி எறிதலில் அனு ராணி வெண்கலம் வென்றார்.

முதல் நாளான நேற்று இந்தியா இரண்டு தங்கம், ஒரு வெள்ளி, நான்கு வெண்கலம் என்று ஒட்டு மொத்தமாக ஏழு பதக்கங்களுடன் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. சீனா இரண்டு தங்கம் ஒரு வெள்ளி எனப் புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

45 நாடுகளைச் சார்ந்த 655 வீரர்கள் இந்த தடகள போட்டியில் பங்கேற்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கனடாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையருக்கு விமான நிலையத்தில் வைத்து நேர்ந்த கதி!!

கனடாவில் மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டுக்காக நாடு கடத்தப்பட்ட இலங்கையரிடம் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குறித்த நபர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை நேற்று மாலை வந்தடைந்துள்ளார். இவரிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விமான நிலையத்தில் வைத்தே கடுமையான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கனடாவில் நிரந்தர குடியுரிமையை பெற்ற, கொலைக்குற்றம் சுமத்தப்பட்ட சிவலோகநாதன் தனபாலசிங்கம் என்ற இலங்கையரே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வு பிரிவினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்ற நிலையில், விசாரணைகளின் பின்னர் அவர் விடுவிக்கப்படுவார் என தெரிவிக்கப்படுகிறது.

உலக நாடுகளின் சொர்க்கபுரியாக மாறும் மன்னார்!!

இலங்கையின் மன்னார் மாவட்டம் பிரதான சுற்றுலா மையமாக மாற்றப்படவுள்ளதாக சீன அரச ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கையின் சுற்றுலாத்துறை அமைச்சினை மேற்கோள் காட்டி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

வரலாற்று சிறப்புமிக்க மடு தேவாலயம், வில்பத்து தேசிய பூங்கா உள்ளிட்ட சுற்றுலாப் பயணிகளைக் கவரும் பல்வேறு இடங்களை மன்னார் மாவட்டம் கொண்டிருக்கிறது. மேலும் சுற்றுலாப் பயணிகளை கவரும் பல இடங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் மாவட்டமாக, மன்னாரை மாற்றும் வகையில், பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

கடற்கரையுடன் இணைந்த 300 ஏக்கர் பகுதி அடையாளம் காணப்பட்டு, சுற்றுலாப் பயணிகளுக்கான தங்குமிட வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன.

இலங்கையில் நீண்ட காலமாக நிலவிய யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மாவட்டமாக மன்னார் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

பிடிவாதம் பிடிக்கும் கட்டார் : எச்சரிக்கும் சவுதி கூட்டணி!!

கட்டாருக்கு எதிரான புறக்கணிப்பு ஒன்றிற்கு தலைமை வகிக்கும் நான்கு அரபு நாடுகளும், கட்டார் மீதான தடையை விலக்க முன்வைக்கப்பட்ட நிபந்தனைகளை அந்நாடு நிராகரித்துள்ளதை பிராந்திய பாதுகாப்பிற்கு ஓர் அச்சுறுத்தல் என வர்ணித்துள்ளன.

அறிக்கை ஒன்றில், சவுதி அரேபியா, பஹ்ரைன், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் ஆகிய நாடுகள், கத்தாருக்கு எதிராக புதிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரித்துள்ளன. ஆனால் என்ன நடவடிக்கை என்பதைக் குறிப்பிடவில்லை.

கடந்த மாதம், கட்டாருடனான அனைத்து ராஜிய தொடர்புகளை நான்கு நாடுகளும் துண்டித்தன. மேலும், ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள மிகவும் சிறிய நாடான கட்டாருடன் தொடர்புகளைத் துண்டிப்பதாக அறிவித்தன.

கட்டார் அரசிடம், அல் ஜசீரா தொலைக்காட்சியை மூடும்படியும், ஈரானுடனான உறவுகளை குறைத்துக் கொள்ளவும் மற்றும் ஜிஹாதிகளுக்கு வழங்கப்படுவதாக சொல்லப்படும் ஆதரவை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றும் நான்கு நாடுகள் கோரிக்கை விடுத்தன.

சவுதி தலைமையிலான வளைகுடா நாடுகள் விதித்திருந்த நிபந்தனைகளை கட்டார் இந்த வார தொடக்கத்தில் நிராகரித்திருந்தது..

வளைகுடா நெருக்கடிக்கு மத்தியஸ்தம் செய்துவரும் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செயலர் ரெக்ஸ் டில்லர்சன் வரும் திங்களன்று குவைத்திற்கு வருகை புரிவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில், சவுதி அரேபியா, பஹ்ரைன், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள், தங்களுடைய 13 கோரிக்கைகளை கட்டார் நிராகரித்துள்ளது.

அந்நாடு இந்தப் பிராந்தியத்தின் பாதுகாப்பை பலவீனப்படுத்தும் தனது கொள்கையை தொடர்ந்து முன்னெடுப்பதற்கான எண்ணத்தில் இருப்பதையே வெளிப்படுத்துகிறது என்று தெரிவித்துள்ளன.

மேலும், கத்தாருக்கு எதிராக ஒரு புதிய அரசியல் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அவை குறித்த மேற்படி தகவல்கள் எதுவும் கூறப்படவில்லை.

கட்டார் உடனான தொடர்புகளை துண்டித்தது குறித்து கருத்துத் தெரிவித்த அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல்-தானி, ஒரு தெளிவான ஆக்கிரமிப்பு மற்றும் அவமானம் என்று தெரிவித்துள்ளார்.

எங்களது மறுப்புக்கு கூடுதல் தடைகள் மற்றும் எச்சரிக்கை பதிலாக இருக்க முடியாது. பேச்சுவார்த்தை மற்றும் காரணம்தான் முக்கியம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

– BBC தமிழ்-

பெட்ரோல், டீசல் கார் விற்பனையை தடைசெய்யவுள்ளது பிரான்ஸ்!!

2040 ஆம் ஆண்டிற்குள் பெட்ரோல் அல்லது டீசலை எரிபொருளாகப் பயன்படுத்தும் கார் விற்பனையை பிரான்ஸ் தடைசெய்யவுள்ளது.

இதனை ஒரு மாபெரும் புரட்சியென பிரான்ஸின் சூழலியல்துறை அமைச்சர் நிக்கோலஸ் ஹுயுலோ சுட்டிக்காட்டியுள்ளார்.

பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தின் புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக பெட்ரோல், டீசல் மீதான திட்டமிடப்பட்ட தடையை நிக்கோலஸ் ஹுயுலோ அறிவித்துள்ளார்.

2050 ஆம் ஆண்டிற்குள் கார்பன் வெளியீடு இல்லாத நாடாக பிரான்ஸை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரான்ஸில் ஹைபிரிட் கார்களின் சந்தை விற்பனை 3.5% ஆக உள்ளது. அதில், வெறும் மின்சாரத்தை மட்டுமே பயன்படுத்தும் கார்களின் சந்தை விற்பனை 1.2% ஆக உள்ளது.

தற்போது பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களை, 2040 ஆம் ஆண்டிற்குப் பின்னர் என்ன செய்யப் போகிறார்கள் என்பது குறித்த தெளிவான தகவல்கள் இல்லை.

ஒரு மூத்த சுற்றுச்சூழல் பிரசாரகரான ஹுயுலோ, புதிய பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மக்ரோனால் சூழலியல்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

அமெரிக்காவின் சுற்றுச்சூழல் கொள்கைகளை வெளிப்படையாக விமர்சித்துள்ள மக்ரோன், பூமியை மீண்டும் சிறப்பாக்க டொனால்ட் ட்ரம்பை வலியுறுத்தியுள்ளார்.

22ஆவது ஆசிய மெய்வல்லுநர் போட்டியில் இலங்கையின் டில்ஹானிக்கு வெள்ளிப் பதக்கம்!!

இந்தியாவின் ஒடிஷா, புவனேஷ்வர் காலிங்க விளையாட்டரங்கில் வியாழனன்று ஆரம்பமான 22ஆவது ஆசிய மெய்வல்லுநர் போட்டிகளில் இலங்கைக்கான முதலாவது பதக்கத்தை நதீஷா டில்ஹானி லேக்கம் வென்றுகொடுத்தார்.

வியாழன் இரவு 7.45 மணியளவில் ஆரம்பமான பெண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் 58.11 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்து நதீஷா டில்ஹானி வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

முதல் நான்கு முயற்சிகளில் முறையெ 52.92 மீ., 53.03மீ., 56.86 மீ., 55.68 மீ. தூரங்களைப் பதிவு செய்த டில்ஹானி ஐந்தாவது முயற்சியிலேயே 58.11 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்தார்.
கடைசி முயற்சியில் அவரால் 56.14 மீற்றர் தூரத்தையே பதிவு செய்யமுடிந்தது.

இப் போட்டியில் சீனாவின் லீ லிங்வெய் 63.06 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். இவர் நான்கு தடைவைகள் 60 மீற்றர் தூரத்தைக் கடந்ததுடன் இரண்டு தடவைகள் அவரது வீச்சு விதிகளை மீறியதாக அமைந்தன. இந்தியாவின் அனு ராணி (57.32 மீ.) வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

கடலில் மிதந்த சிறுவனின் சடலம் : அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்!!

கேரளாவின் கொல்லத்தை சேர்ந்தவர் சுனிகர், இவர் கடந்த 3ம் திகதி தன்னுடைய மனைவி மற்றும் 2 வயது மகன் சகாயசான்சோவுடன் கன்னியாகுமரியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்துள்ளார்.

விசேஷ வீட்டில் சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த சகாயசான்சோவை காணவில்லை. எங்கும் தேடியும் அவன் கிடைக்காததால் பொலிசில் புகார் அளித்தனர், குமரி மாவட்டத்தில் தொடர்ச்சியாக குழந்தைகள் கடத்தப்பட்டு வருவதால் பொலிசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

இந்நிலையில் இன்று முட்டம் கடல் பகுதியில் சிறுவன் ஒருவரின் சடலம் கிடப்பதாக பொலிசுக்கு தகவல் கிடைத்தது.

சடலத்தை கைப்பற்றிய பொலிசார் விசாரித்ததில், காணாமல் போன சகாயசான்சோ என்பது தெரியவந்தது. உடனடியாக அவனது பெற்றோருக்கு தகவல் அளித்தனர், இறந்தது தன்னுடைய மகன் தான் என உறுதி செய்தனர்.

சிறுவனை கடத்திக் கொன்றது யார்? எதற்காக இப்படி செய்தார்கள்? முன்பகை ஏதும் காரணமா? என்ற கோணத்தில் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

சத்திர சிகிச்சை செய்துக் கொண்ட காஜல் அகர்வால்!!

திரையில் தோன்றும் நட்சத்திரங்கள் தங்களின் அழகை மேலும் அதிகரித்துக் கொள்ள கொஸ்மெடிக் சத்திர சிகிச்சையை செய்து கொள்வார்கள். நடிகை ஸ்ரீதேவி, நடிகை ஸ்ருதி ஹாசன், நடிகை அனுஷ்கா சர்மா ஆகியோர் தங்களின் முக அழகிற்கு இடையூறாக இருந்த மூக்கை கொஸ்மெடிக் சத்திர சிகிச்சை மூலம் சீராக்கிக் கொண்டு நடித்து வருகிறார்கள்.

அந்த பட்டியலில் தற்போது அஜித்துடன் விவேகம் படத்தில் நடித்து வரும் முன்னணி நடிகையான காஜல் அகர்வாலும் தன்னுடைய மூக்கை சத்திர சிகிச்சை மூலம் சீராக்கிக் கொண்டிருக்கிறார். இதைப் பற்றி அவர் தெரிவிக்கும் போது, ‘50 படங்களில் நடித்து முடித்துவிட்டேன். ரசிகர்களுக்கு என்னுடைய முகம் பிடிக்கவேண்டும் என்பதற்காக இந்த சிறிய மாற்றத்தை செய்து கொள்கிறேன்‘ என்று சொல்கிறார்.

ஸ்கைப் செயலியின் அதிரடி மாற்றம்!!

இணைய வழித்தொடர்புகளில் ஸ்கைப் செயலி மிக அதிகப்படியாக அளவிலான மக்கள் பயன்படுத்தி வருகின்றார்கள்.

ஸ்கைப் எப்ளிகேசன் அந்தளவிற்கு உலக பிரசித்தி பெற்ற சேவையாக இருந்து வருகின்றது. தற்போது இதனை கையடக்கத்தொலைபேசி சாதனங்களிலும் பயன்படுத்துவதற்கான செயலிகளும் இருக்கின்றன. இப்போது ஐ.ஓ.எஸ். சாதனங்களுக்கான புதிய பதிப்பு ஒன்று வெளியிடப்பட இருக்கின்றது.

ஸ்கைப்பின் இந்த புதிய பதிப்பானது முற்றிலும் புதிய தோற்றத்தினை கொண்டதாக காணப்படுகின்றது. அது மட்டுமல்லாமல் சில புதிய வசதிகளையும் இது பெற்றுள்ளது. அதில் ஒன்று தான் இன்கால் ரியாக்சன்ஸ் எனப்படுகின்ற வசதியாகும். இதன் மூலமாக அழைப்பில் இருக்கும் போதே லைவ் ஈமோஜிக்கல், லைவ் டெக்ஸ்ட், ரியல் டைம் போட்டோஸ் ஆகியவற்றினை பயன்படுத்திட முடியும்.

இதனில் கூடுதல் வசதியாக மெசேஜ் ரியாக்சன்ஸ் இருக்கின்றது. இதன் மூலமாக குறும் செய்திகளை அனுப்பும் போது எக்ஸ்பிரசிவ் ரியாக்சன்ஸ்களை பயன்படுத்தி உணர்ச்சிகளையும் வெளிப்படுத்திட முடியும். அத்துடன், அன்றாட நடவடிக்கைகளை ஹைலைட் செய்து நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பதிப்பினை ஐ டியூன் தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வவுனியா புதிய பஸ் நிலையம் டெங்கு நுளம்புகளின் இருப்பிடமாக மாறிவரும் அவலம்!!

 
வவுனியா புதிய பஸ் நிலையத்திற்கு முன்பாக அமைந்துள்ள கால்வாயில் நீர் தேங்கி நிற்பதானால் டெங்கு பரவும் இடமாக மாறி வருவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக A9 வீதியருகே காணப்படும் இப் பேரூந்து நிலையத்திற்கு அருகே விவசாய திணைக்களத்தினால் அமைக்கப்பட்ட அம்மாச்சி பாரம்பரிய உணவகத்திற்கு தினசரி பல மக்கள் வந்து செல்லுகின்றனர். எனினும் இவ் வாய்க்காலில் பல வாரங்களாக காணப்படும் நீர் நிலைகளில் குப்பைகள் தேங்கி நிற்கின்றன.

கடந்த சில மாதங்களாக காச்சல் காரணமாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வருகின்ற நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

இவ்விடயம் தொடர்பாக வவுனியா நகரசபை மற்றும் வவுனியா டெங்கு ஒழிப்புப் பிரிவினர் கவனம் செலுத்தவேண்டும் என்பதே மக்களின் கோரிக்கை.