நீர்கொழும்பு விஜயரட்ணம் இந்து மத்திய கல்லூரி அதிபரும் 85 மாணவர்களும் டெங்கு காய்ச்சலால் பீடிப்பு!!

நீர்கொழும்பு விஜயரட்ணம் இந்து மத்திய கல்லூரி அதிபரும் 85 மாணவர்களும் டெங்கு காய்ச்சலால் பீடிப்பு

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சல் காரணமாக அநேகமான வைத்தியசாலைகளின் நோயாளர் விடுதிகள் நிரம்பியுள்ளன.

இந்த நிலையில், நீர்கொழும்பு விஜயரட்ணம் இந்து மத்திய கல்லூரியின் அதிபர் மற்றும் 85 க்கும் மேற்பட்ட மாணவர்கள் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த இரண்டு மாதங்களில் மாத்திரம் இப்பாடசாலையில் 85 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் டெங்குவால் பீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலையின் சூழலை சுத்தமாகப் பேணுவதற்கு பாடசாலை நிர்வாகமும் மாணவர்களும் பல முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர்.

சிவில் பாதுகாப்பு படையினர் இன்றைய தினம் பாடசாலை வளாகத்தை சோதனைக்கு உட்படுத்தியபோதிலும், டெங்கு நுளம்பு பெருகுவதற்கான சூழல் அங்கு அவதானிக்கப்படவில்லை என எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், பாடசாலையின் வெளிப்புறத்தில் அநேகமான இடங்களில் டெங்கு நுளம்பு பெருகுவதற்கான இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

கல்லூரியை அண்மித்த ஒருசில வீடுகளின் கூரைகளில் நுளம்பு பெருகுவதற்கு ஏதுவாக நீர் தேங்கியுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த வீடுகளின் உரிமையாளர்களுக்கு டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை அழிப்பதற்காக மூன்று நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஒரு சிலரின் பொறுப்பற்ற செயற்பாடுகள் பலரது உயிர்களுக்கு அச்சுறுத்தலாக மாறிவிடுகிறது.

பிறப்பிலேயே வாய்பேச முடியாத 9 வயதுச் சிறுவனை பேச வைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சை வெற்றி!!

மட்­டக்­க­ளப்பு போதனா வைத்­தி­ய­சா­லையில் வாய் பேச­மு­டி­யாத சிறுவன் ஒரு­வனை பேச வைப்­ப­தற்­கான சத்­திர சிகிச்சை  புதன்­கி­ழமை மேற்­கொள்­ளப்­பட்­ட­தாக மட்­டக்­க­ளப்பு போதனா வைத்­தி­ய­சாலை வட்­டா­ரங்கள் தெரி­வித்­தன.  ஏறாவூரைச் சேர்ந்த சிறு­வ­னுக்கே இந்த சத்­திர சிகிச்சை மேற் கொள்­ளப்­பட்­டது.

மட்­டக்­க­ளப்பு போதனா வைத்­தி­ய­சா­லையின் காது மூக்கு தொண்டை வைத்­திய சத்­திர சிகிச்சை நிபுணர் டாக்டர் எஸ்.ஜீவதாஸ் தலை­மையில் கொழும்­பி­லி­ருந்து வருகை தந்த விசேட வைத்­தி­யர்கள் குழு இந்த சத்­திர சிகிச்­சையை மேற் கொண்­டது.

பிறப்­பி­லி­ருந்தே வாய் பேச­மு­டி­யாத இந்த சிறு­வ­னுக்கு பேச வைப்­ப­தற்­கான இந்த சத்­திர சிகிச்சை ஆறரை மணித்­தி­யா­ல­யங்கள் நடை­பெற்­ற­துடன் வெற்­றி­க­ர­மாக இந்த சத்­திர சிகிச்சை மேற் கொள்ளப்­பட்­ட­தாக மட்­டக்­க­ளப்பு போதனா வைத்­தி­ய­சாலை வட்­டா­ரங்கள் மேலும் தெரி­வித்­தன.

இந்த சிறு­வ­னுக்­கான  சத்­திர சிகிச்­சையை மேற்­கொள்­வ­தற்கு  ஏறாவூர் முக்­கி­யஸ்­தரும் திடீர் மரண விசா­ரணை அதி­கா­ரி­யு­மான நசீர் ஹாஜியார் பல்­வேறு முயற்­சி­களை மேற் கொண்­டி­ருந்தார்.

இந்த சத்திர சிகிச்சையை வெளியில் தனியார் வைத்திய சாலையில் செய்வதாயின் பல இலட்சம் ரூபா செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக்கில் மூலம் மலர்ந்த காதல் : மாணவியை உயிரோடு எரித்த காதலன்!!

பேஸ்புக் மூலம் அறிமுகமான நபரினால் தன் வாழ்க்கையும் முகத்தையும் சென்னையினை சேர்ந்த மாணவியொருவர் பறிகொடுத்த சம்பவம் மக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கானாஞ்சாவடி கிராமத்தில் பஸ் நிறுத்தும் இடத்தின் அருகே கடந்த முதலாம் திகதி காலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த 23 வயது மதிக்கதக்க மாணவி மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த பெண் சுயநினைவு அடைந்தமையால் அவருக்கு நடந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சுயநினைவுக்கு வந்த பெண்ணிடம் பொலிஸார் விசாரணை நடத்திய போது அந்த இளம்பெண் கூறியதாவது..

எனது பெயர் சக்தி. சொந்த ஊர் சென்னை கொளத்தூர். நான் சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாவது வருட பட்டப்படிப்பு படித்து வருகிறேன். எனக்கும், சேலத்தைச் சேர்ந்த லொறி சாரதி முரளி என்பவருக்கும் இடையே பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

பின்னர் எங்களுக்குள் காதல் மலர்ந்தது. அப்போது முரளி என்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறினார். அவரை நான் நம்பினேன். கடந்த மாதம் 28 ஆம் திகதி அவர் சென்னைக்கு வந்து என்னை ஒரு காரில் அழைத்து சென்றார்.

அங்கிருந்து நாங்கள் மதுரை, தஞ்சாவூர் போன்ற ஊர்களுக்கு சென்றோம். பின்னர் பெங்களூர் சென்று திருமணம் செய்து கொள்ளலாம் என்று முரளி கூறினார். திடீரென்று பண்ருட்டிக்கு காரில் அழைத்து வந்தார். அங்குள்ள வீதியோர கோவிலில் வைத்து என்னை திருமணம் செய்து கொண்டார்.

நாங்கள் சந்தோ‌ஷமாக இருந்தோம். அப்போது நமக்கு வாழ்க்கை நடத்த போதிய பணமில்லை. மேலும் பெற்றோருக்கு தெரியாமல் நாம் திருமணம் செய்து கொண்டதால் அவர்கள் வருத்தப்படுவார்கள். இதனால் நாம் தற்கொலை செய்து கொள்வோம் என்று முரளி கூறினார்.

இதையடுத்து இருவரும் பண்ருட்டி அருகே உள்ள ஒரு முந்திரி காட்டுக்கு சென்றோம். அப்போது முரளி முதலில் நீ இறந்து விடு. என்னை ஒரு பெண் ஏமாற்றி விட்டாள். அவளை கொன்று விட்டு இதே இடத்துக்கு வந்து நானும் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று கூறினார்.

திடீரென்று அவர் எனது உடலில் டீசலை ஊற்றி தீ வைத்தார். நான் அலறினேன். அவர் கண்டுகொள்ளவில்லை. அங்கிருந்து காரில் தப்பி சென்று விட்டார். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் என்னை காப்பாற்றி விட்டனர் என்று தெரிவித்துள்ளார்.

மாணவியை ஏமாற்றி அழைத்துச்சென்று திருமணம் செய்து தீ வைத்து எரித்துக் கொல்ல முயன்ற காதலன் முரளி தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

காதலியை சிகையலங்காரம் செய்வதற்கு நிலையத்தில் விட்டு 6000 ரூபா கட்டணம் செலுத்தாது தலைமறைவான காதலன்!!

சிகை­ய­லங்­காரம் செய்­வ­தற்­காக சிகை­ய­லங்­கார நிலை­ய­மொன்­றுக்கு 18 வய­தான காத­லியை அழைத்துச் சென்ற இளைஞர் ஒருவர் தனது காத­லியை அவ்­வி­டத்தில் விட்­டு­விட்டு சிகை­ய­லங்­கா­ரத்­துக்­கான பணத்தை வங்­கியில் எடுத்­து­வ­ரு­வ­தாக கூறி தப்­பிச்­சென்ற சம்­ப­வ­மொன்று அநு­ரா­த­புரம் பிரதேசத்தில் இடம்­பெற்­றுள்­ளது.

இந்­நபர் தனது காத­லிக்கு சிகை­ய­லங்­காரம் செய்­வ­தற்­காக அநு­ரா­த­புரம் நக­ரி­லுள்ள சிகை­ய­லங்­கார நிலை­யத்­துக்கு அழைத்து சென்­றுள்ள நிலையில் அவ­ருக்கு சிகை­ய­லங்­காரம் செய்து முடி­வ­டை­வ­தற்குள் அதற்­கான கட்­ட­ண­மான 6000 ரூபாவை எடுத்து வரு­வ­தாக கூறி 22 வய­தான காதலன் தனது காத­லியை விட்டுச் சென்­றுள்ளார்.

பதி­னெட்டு வய­தான யுவதி சிகை­ய­லங்­கா­ரத்தை முடித்துக் கொண்டு தனது காதலன் வரு­கைக்­காக சுமார் 4 மணித்­தி­யா­லங்கள் காத்­தி­ருந்த போதிலும் அவர் வராத கார­ணத்­தினால் மேற்­படி சிகை­ய­லங்­கார உரி­மை­யாளர், யுவ­தியை நேற்­று­முன்­தினம் மாலை அநு­ரா­த­புரம் பொலி­ஸா­ரிடம் ஒப்படைத்துள்ளார்.

கம்­பஹா வெலி­வே­ரிய பிர­தே­சத்தை சேர்ந்த 18 வய­தான யுவதியே இவ்­வாறு பொலிஸ் நிலை­யத்தில் ஒப்­ப­டைக்­கப்­பட்ட நிலையில், அதன்­பின்னர் பொலிஸார் இது­தொ­டர்பில் அநுராத­புரம் பொலிஸ் மூலம் யுவ­தியின் பெற்­றோ­ருக்கு அறிவித்­தி­ருந்­தனர்.

தப்பிச் சென்ற தனது காதலன் குரு­ணாகல் பிர­தே­சத்தை சேர்ந்த­வ­ரெ­னவும் கடந்த 4 மாதங்­க­ளாக தாம் காத­லித்து வருவ­தா­கவும் யுவ­தி­யிடம் மேற்­கொள்­ளப்­பட்ட விசாரணையில் தெரி­ய­வந்­துள்­ளது.

சில தினங்­க­ளுக்கு முன்னர் காத­லனின் சகோ­தரி உயி­ரி­ழந்­தி­ருந்­த­மை­யினால் அவ­ரது மரண நிகழ்வில் கலந்­து­கொள்­வ­தற்­காக இந்த யுவதி குரு­ணா­க­லி­லுள்ள காதலன் வீட்­டுக்கு சென்­றுள்ளார். இறுதிச் சடங்­குகள் நிறை­வ­டைந்­ததன் பின்னர் இவ்­வி­ரு­வரும் வழி­பா­டு­களை மேற்­கொள்­வ­தற்­காக மூன்று நாட்­க­ளுக்கு முன்னர் அநு­ரா­த­புரம் நோக்கி சென்­றுள்­ள­தாக பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

இளைஞனின் பெற்றோருக்கு இவர்களது காதல் விவகார தெரிந்திருந்ததுடன் திருமணத்துக்கு சம்மதமும் தெரிவித்துள்ளனர். எனினும் யுவதியின் வீட்டாருக்கு இது தொடர்பில் எவ்வித தகவலும் தெரிந்திருக்கவில்லையென பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா வேப்பங்குளம் அன்பகமே எனது பேத்தியின் கொலைக்கு முழுக் காரணம் : தாத்தா, தாய் கதறல்!!

அன்பகத்தில் அடிக்கின்றார்கள், துன்புறுத்துகின்றார்கள், இங்கு என்னால் இருக்க முடியவில்லை என நான் அங்கு செல்லும் போதெல்லாம் என்னிடம் பேத்தி தெரிவிப்பார் என  வவுனியா வேப்பங்குளம் அன்பகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சிறுமியின் தாத்தா இ.சவரியாஸ் தெரிவித்தார். இது தொடர்பாக மேலும் தெரிவித்த அவர்..

கடந்த சில தினங்களுக்கு முன்னர் வவுனியா வேப்பங்குளம் சிறுவர் இல்லத்தில்  தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படும் றொக்சிகா எனது பேத்தியாவார்.

புளியங்குளத்தில்  ஏற்பட்ட சிறு பிரச்சனை காரணமாக  நீதிமன்றத்தின் ஊடாக வேப்பங்குளம் சிறுவர் இல்லத்திற்கு எனது பேத்தியினை சேர்த்தனர். நான் எனது பேத்தியினை மாதாந்தம் சென்று பார்வையிட்டுவருகின்றேன்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர்  நான் சென்ற சமயத்தில் என்னால் இங்கு இருக்க முடியவில்லை,  சின்னப் பிள்ளைகளின் உடைகளை துவைக்கச் சொல்கின்றார்கள்,  எனக்கு நிறைய வேலைகள்,  இந்த அன்பகத்தில் என்னால் இருக்க முடியாது என்னை வேறு அன்பத்திற்கு மாற்றி விடுங்கள், இவற்றை அம்மாவிடம் சொல்லவும் இல்லை என்றால் அம்மாவின் தொலைபேசி இலக்கத்தினை தாருங்கள் என்று கேட்டார். நான் அம்மாவின் தொலைபேசி இலக்கத்தினை வழங்கியுள்ளேன். ஆனால் அம்மாவிடம் அவர் கதைக்கவும் இல்லை.

எனது பேத்திக்கு இங்கு இருக்க விருப்பம் இல்லை, வேறு அன்பகத்திற்கு மாற்றித்தருமாறு அன்பக பொறுப்பாளரை சந்தித்து தெரிவித்தேன். ஆனால் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து எங்களிடம் வேறு அன்பகங்கள் உள்ளன இவற்றில் ஒன்றில் சேர்த்து விடுவதாக தெரிவித்தார். ஆனால்  மாற்றவில்லை.

எனது பேத்தி தற்கொலை செய்துள்ளார் என்று தெரிவிக்கின்றனர். ஆனால் எனக்கு மரணத்தில் சந்தேகம் உள்ளது. எனது பேத்தியின் தலையினை தங்கியிருந்த அறை சுவற்றில் அடித்தது போன்று சடலம் இருந்தது. கயிறு முடிச்சே போடத்தெரியாத எனது பேத்தி எவ்வாறு தற்கொலை செய்து கொள்வார்?

எனது பேத்தியின் மரணத்திற்கு நீதியான தீர்வு வேண்டும். அன்பகப் பொறுப்பாளருக்கு சரியான தண்டணையினை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

 

திருகோணமலையில் 13 வயதான சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் : 26 வயதான நபர் கைது!!

திருகோணமலை, கோமரங்கடவல பகுதியில் 13 வயதான சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கோமரங்கடவல பொலிஸ் நிலையத்தில் உறவினர்களால் நேற்று (04) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

கோமரங்கடவல, பம்புருகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 26 வயதான ஒருவரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

 

வவுனியாவில் கட்டுப்பாட்டு விலைக்கு அரிசியை பெற்றக்கொள்ள முடியவில்லை : சிறு வியாபாரிகள் விசனம்!!

வவுனியாவில் கிராமப்புறங்களில் கடைகளில் அரிசி கட்டுப்பாட்டு விலைக்கு விற்க முடியாதள்ளதாக சிறு வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

அரசு அறிவித்துள்ள கட்டுப்பாட்டு விலைக்கு அரிசியை கொள்வனவு செய்ய முடியாத நிலைமை காணப்படுவதாகவும் விலையை அதிகரித்து விற்பனை செய்தால் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையானது சிறுவியாபாரிகள் மீது வழக்கு பதிவு செய்கிறார்கள் என குற்றஞ்சாட்டினர்.

ஆட்டக்காரி, சிவப்பு நாடு, கோரா, வெள்ளை நாடு ஆகிய அரிசி வகைகள் 72 ரூபா கட்டுப்பாட்டு விலைக்கு பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை காணப்படுகிறது. மொத்த வியாபாரிகள் மேற்குறிப்பிட்ட அரிசியை கட்டுப்பாட்டு விலையை மீறி 90 ரூபாவிற்கு சிறு வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருகிறார்கள். இதன் காரணமாக கிராமம்புறங்களில் கடைகளில் அரிசிக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.

அரிசியின் பெயர்களை மாற்றி மொத்த வியாபாரிகள் ரசீது வழங்குவதிலும் முறைகேட்டில் ஈடுபடுவதாக சிறு வியாபாரிகள் சுட்டிக்காட்டினர். இதன் காரணமாக விடயம் தெரியாத கிராமத்து சிறு வியாபாரிகள் அரிசியை கொள்வனவு செய்து அதிகவிலைக்கு விற்பதன் காரணமாக சட்டநடவடிக்கை எதிர்கொண்டுள்ளனர்.

இவ்விடயம் சம்பந்தமாக அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தப்பட்டபோதிலும் மொத்த வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவதாக சிறு வியாபாரிகள் விசனம் வெளியிட்டனர்.

மட்டக்களப்பு பச்சையரிசியை மாத்திரம் விலைக்கட்டுப்பாட்டிற்கு விற்கக்கூடியதாக உள்ளது. அத்துடன் விலைக்கட்டுப்பாடு நீக்கப்பட்ட பொன்னி மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளைநாடு போன்றவைகளையே விற்பனை செய்யக்கூடியதாக உள்ளது என சிறு வியாபாரிகள் தெரிவித்தனர்.

மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வழங்க முடியாத நிலைமை காணப்படுவதுடன் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை ஆகியவற்றிற்கு முறைப்பாடுகள் செய்தபோதும் சிறு வியாபாரிகளின் பிரச்சனைக்கு தீர்வுகள் எட்டப்படவில்லை. இதன் காரணமாக சிறு வியாபாரிகள் பாதிக்கப்படுவதாக கவலை வெளியிட்டனர்.

இலங்கை அணி அபார வெற்றி : தொடரில் 2-1 என முன்னிலை!!

 
சிம்பாப்வே அணிக்கெதிரான 3 ஆவது போட்டியில் 8 விக்கெட்டுகளால் வெற்றிபெற்ற இலங்கை அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2:1 என முன்னிலை பெற்றுள்ளது.

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சிம்பாப்வே அணி இலங்கை அணியுடன் 5 ஒருநாள் போட்டிகளிலும் ஒரு டெஸ்ட் போட்டியிலும் விளையாடவுள்ளது.

காலியில் இடம்பெற்ற முதலிரு போட்டிகளிலும் இரு அணிகளும் தலா ஒவ்வொரு போட்டியில் வெற்றி பெற்று 1:1 என்ற புள்ளிகள் அடிப்படையில் சமநிலை பெற்றிருந்த நிலையில் இன்று இடம்பெற்ற 3 ஆவது போட்டியில்இலங்கை அணி 8 விக்கெட்டுகளால் அபார வெற்றி பெற்று ஒருநாள் தொடரில் 2:1 என முன்றிலை பெற்றுள்ளது.

இன்றைய 3 ஆவது போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

அதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 310 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் சிம்பாப்வே அணி சார்பாக மசகட்சா 111 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக வனிது ஹசரங்க மற்றும் அசேல குணவர்தன ஆகியோர் தல 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

311 என்ற இமாலய இலக்கை வெற்றியிலக்காகக் கொண்டு களமிறங்கிய இலங்கை அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களின் அதிரடியில் இலங்கை அணி 16 பந்துகள் மீதமிருக்க 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்து 8 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது இலங்கை அணி.

இதன்போது இலங்கை அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களான நிரோஷன் டிக்வெல்ல மற்றும் தனுஷ்க குணதிலக்க ஆகியுார் தமது கன்னிச் சதத்தைப் பூர்திசெய்தனர்.

நிரோஷன் டிக்வெல்ல 116 பந்துகளில் 102 ஓட்டங்களையும் குணதிக்க 111 பந்துகளில் 116 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர்.

வவுனியாவில் மாற்றுத்திறனாளிகளுடனான அணுகுமுறை தொடர்பான கருத்தரங்கு!!

 
இன்றைய தினம் (06.07) மனித உரிமைகள் வவுனியா காரியாலயத்தில் மாற்றுத்திறனாளிகளுடன் அணுகுமுறை தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

கலந்துரையாடல் வன்னி பிராந்தியத்தில் பணியாற்றுகின்ற மாற்றுத்திறனாளிகளுடைய உரிமைகள் தொடர்பில் பணியாற்றுகின்றவர்களுடன் கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.

வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் போன்ற பகுதிகளில் இருந்து செயற்பாட்டாளர்கள் வருகை தந்திருந்தார்கள். அவர்களுடன் விஷேட விதமாக மாற்றுத்திறனாளிகளுடன் எவ்வாறு அணுகுதல் தொடர்பாக மனித உரிமை அலுவலகத்தில் கலந்துரையாடப்பட்டது.

அவர்கள் பொதுஇடங்களை அல்லது தனியார் இடங்களை, அரச கட்டிடங்களை வந்து அணுகிகொள்வதற்கு ,சேவைகளை பெற்றுக்கொள்வதற்கு அவர்களுக்கு இருக்கின்ற உரிமைகள் தொடர்பில் குறிப்பாக வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் போன்ற பகுதிகளில் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு தெரியப்படுத்தியிருக்கிறார்கள்.

மனித உரிமை ஆணைகுழு அவர்களுடைய பிரச்சினை தொடர்பில் கேட்டறிந்திருக்கின்றார்கள். எதிர்வரும் காலங்களில் அவ்வாறான பிரச்சினை தொடர்பில் முன்னெடுத்து செல்ல இருக்கின்றது.

குறிப்பாக அவர்கள் வங்கிகளில் சேவையில் ஈடுபடும் போது, வைத்தியசாலையில் அணுகுவதில் , அரச ஸ்தாபனங்களில் அணுகுவதில் பிரச்சினை இருப்பதாக முறையிட்டிருக்கின்றார்கள். கூடுதலாக நகரசபையிலும், உள்ளுராட்சி மன்றங்களின் மத்தியில் பிரச்சினை எதிர் நோக்குவதாக தெரிவித்திருக்கின்றார்கள்.

அது தொடர்பில் பல்வேறு விதமான பிரச்சனைகளை முன்கொண்டுவந்திருக்கின்றார்கள். மனித உரிமைகள் ஆணைகுழு எதிர்வரும் காலங்களில் விரைவான நடவடிகையில் செல்ல இருக்கின்றார்கள்.

இக் கலந்துரையாடலில் அரச அதிகாரிகள், தனியார் நிறுவனங்கள், இச் செயற்பாட்டாளர்கள் உள்ளடங்கியதாக இம் மாதம் (27.07) இது சம்பந்தமான நிகழ்வு ஒன்று வவுனியாவில் இடம்பெற திட்டமிடப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில் மனித உரிமைகள் வன்னிப்பிராந்திய பொறுப்பதிகாரி எம்.ஆர்.பிரியதர்சன, வவுனியா பிராந்திய காரியாலய சட்ட அதிகாரி சட்டத்தரணி ஆர். எல்.வசந்தராஜா, உயிரிழை, வரோட், ஓகன் போன்ற நிறுவனத்தின் அதிகாரிகள், வவுனியா , மன்னார், முல்லைத்தீவை சேர்ந்த மாற்று திறனாளிகள் போன்றோர் கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியா கூமாங்குளம் கிராமத்திற்கென பொதுநோக்கு மண்டபம்!!

 
வட மாகாண சபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராஜாவின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கூமாங்குளம் கிராமத்திற்கென பொதுநோக்கு மண்டம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த நேற்று (05.07.2017) இடம்பெற்றது.

நோக்கு மண்டபமானது கூமாங்குளம் கிராம அபிவிருத்தி சங்க காணியில் அமையவுள்ளது. இவ் அடிக்கல் நாட்டு விழாவில் வட மாகாண சபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராஜா, கூமாங்குளம் கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவர், செயலாளர், பொருளாளர், மற்றும் உறுப்பினர்கள், சித்தி விநாயகர் ஆலயம், முத்துமாரி அம்மன் ஆலய தலைவர்கள், கமக்காரர் அமைப்பின் தலைவர், முதியோர் சங்க தலைவர், விளையாட்டுக்கழக தலைவர் உள்ளிட்ட பொது அமைப்புக்களின் தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டறியும் அலுவலகம் தேவையில்லை!!(காணொளி)

 
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டு வரும் சுழற்றிமுறையிலான உண்ணாவிரதப்போராட்டம் இன்றுடன் (06.07) 132வது நாட்களை எட்டியுள்ள நிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தின் தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்..

இலங்கை அரசாங்கத்திடம் எங்கள் பிள்ளைகள் தொடர்பான ஆதாரங்களை கொடுத்து கடந்த 132 நாட்களாக தொடர்ச்சியாக இரவு பகல் என்று பாராமல் பிள்ளைகளை தொலைத்த தாய்மார்களின் பங்களிப்புடன் நாங்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில் 2015 ஆண்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டறியும் அலுவலகம் அமைக்கப்படவுள்ளதாக அறிவித்த சர்வதேசம் இலங்கை அனுமதி அளிக்கவில்லை என்று காரணம் கூறி இன்று வரை தட்டிக்களித்துவந்துள்ளது.

07-2017 ஆம் மாதத்திற்கு பிறகு காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டறியும் அலுவலகம் அமைத்து இனி எத்தனைவருடங்களுக்கு பிறகு எமது பிள்ளைகளை விடுதலை செய்யப்போகிறார்கள் என கேள்வி எழுப்பினார்.

அத்துடன் பல போராட்டங்கள் ஊடாகவும் உறுதியான ஆதாரங்கள் ஊடாகவும் எங்கள் பிள்ளைகள் உயிருடன் இருக்கிறார்கள் என்று அரசாங்கத்திற்கு தெரிவித்துள்ளோம். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டத்தை மழுங்கடிக்கவே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அலுவலகம் அமைப்பது தொடர்பான செய்திகள் வெளிவந்துகொண்டிருக்கும் நிலையில் எத்தனை அலுவலகங்களை அமைத்தாலும் எத்தனை வருடங்கள் ஆனாலும் போராட்டம் கைவிடப்பட முடியாது எங்கள் பிள்ளைகள் தொடர்பான சரியான தீர்வு வழங்கப்படும் வரை போராட்டம் தொடரும் எனத் தெரிவித்தார்.

வவுனியாவில் தொடர்ச்சியாக சுழற்சி முறையிலான உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தாய்மார்களை சந்தித்து கலந்துரையாடிய ஐக்கிய தேசியக் கட்சியின் வவுனியா மாவட்ட முன்னாள் வேட்பாளர் எ.எஸ்.எம்.தாயுன் கருத்து தெரிவிக்கையில்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சனைக்கு அரசாங்கம் தீர்வுத்திட்டம் ஒன்றை முன்வைக்காமல் இருப்பது கவலையளிப்பதுடன் வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களிலும் உள்ள மக்களே அதிகமாக காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். அவர்களில் யுத்தத்தில் இறந்தவர்கள் போக மற்றவர்கள் தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டு புனர்வாழ்வு அளிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் அவர்களை வடக்கு கிழக்கு பகுதிகளில் வைத்து புனர்வாழ்வு அளிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

வடக்கு கிழக்கு பகுதிகளில் யுத்தத்தின் காரணமாக காணாமல் ஆக்கப்படடவர்கள். விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து பிடிக்கப்படடடவர்கள், விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு உதவி செய்து கைது செய்யப்பட்டவர்கள் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தாலும் அவர்களுடைய மாகாணத்தில் புனர்வாழ்வளிப்பதன் ஊடாக அவர்களின் உறவுகள் பார்வையிட வசதியாக இருக்கும் என தெரிவித்தார்.

வவுனியாவில் பாடசாலை மாணவி மீதான பாலியல் துன்புறுத்தல் திட்டமிட்டு இருட்டடிப்பு : சமூக ஆர்வலர்கள் கண்டனம்!!

வவுனியாவில் கடந்த 22ஆம் திகதி பாடசாலை ஒன்றில் ஆசிரியர் ஒருவரினால் அதே பாடசாலையில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் பாலியல் ரீதியில் துன்பறுத்தப்பட்டுள்ளார். இதையடுத்து பாடசாலை சிறுமியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டபோது சிறுவர் விவகாரங்களுக்கு பொறுப்பாக உள்ள உத்தியோகத்தரிடம் தகவல் கிடைத்தபோது தகவல் வழங்க மாணவி மறுத்துவிட்டார்.

எனவே குறித்த ஆசிரியரின் திட்டமிட்ட செயற்பாட்டையடுத்தே இருட்டடிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனவே மேலதிக விசாரணைகளுக்கு மாணவியின் தரப்பிலிருந்து பொலிசாருக்கு தகவல் மேற்கொள்ளச் சென்றபோது அதைமறித்து விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று தெரியவருகின்றது. எனவே குறித்த சம்பவத்தை திட்டமிட்ட வகையில் இருட்டடிப்புச் செய்வதாக சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து குறித்த ஆசிரியரை தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் சிறுவர் நன்நடத்தை உத்தியோகத்தர்கள் விசாரணைகளை மேற்கொள்ளச் சென்றபோது குறித்த சம்பவம் திட்டமிட்டு மறைக்கப்பட்டுவிட்டது என்பது தெரியவந்துள்ளது.

வவுனியாவில் வங்கியில் வைப்பிலிடப்பட்ட 20 இலட்சம் ரூபா மாயம் : பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!!

வவுனியாவில் வங்கி ஒன்றில் வைப்பிலிடப்பட்ட 20 இலட்சம் ரூபாவை வேறு ஒருவர் கையாடல் செய்து பணத்தைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்து வவுனியா பொலிஸ் நிலையத்தில் இன்று (06.07)முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா வங்கியில் கடந்த 05.06.2017 அன்று புதிய வங்கிக் கணக்கு ஒன்று ஆரம்பித்து வெளிநாட்டிற்கு சுற்றுலா செல்வதற்கு குறித்த நபர் இருபத்திரெண்டு இலட்சத்தி இருநூற்றி ஐம்பது ரூபாவினை வைப்பிலிட்டு புதிய கணக்கு ஒன்றினை ஆரம்பித்துள்ளார்.

இதையடுத்து தனது வெளிநாட்டு சுற்றுலா செல்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வரும் முகவர் ஒருவரிடம் தனது வங்கி புத்தகம் கடவுச்சீட்டு என்பனவற்றை பயண ஒழுங்குகள் மேற்கொள்வதற்காக ஒப்படைத்துள்ளார்.

கடந்த சில தினங்களாக குறித்த முகவரை தொடர்புகொள்ள முடியவில்லை. இதையடுத்து சந்தேகம் ஏற்பட்டு நேற்று (05.07) வங்கிக்கணக்கை சரிபார்த்தபோது வங்கியின் கணக்கில் 20 இலட்சம் ரூபா நாரமல என்ற பகுதியிலுள்ள வங்கியிலிருந்து கடந்த 29ம் திகதி பணம் மீளப்பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது வாடிக்கையாளருக்கு தெரியவந்துள்ளது.

இதையடுத்து வவுனியா வங்கி முகாமையாளருடன் ஏனைய விபரங்கள் ஆலோசனைகள் பெறப்பட்டதையடுத்து இன்று வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வங்கியில் கணக்கு இலக்கத்தில் வைப்பிடப்பட்ட பணத்தை வேறு ஒருவர் எவ்வாறு மீளப்பெற்றுக்கொள்ள முடியும்? வங்கிப் புத்தகத்தினை வைத்தே பணத்தை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

குறித்த முகவராலே பணம் பெற்றுக்கொள்ளப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தை : தமிழ் மொழி சேவைப்பிரிவிற்கு முறைப்பாடு!!

வவுனியா தாலிக்குளம் பகுதியிலுள்ள 14 வயதுச் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக வன்னி பிரதிப் பொலிஸ்மா அதிபர் தலைமையில் செயற்படும் தமிழ் மொழி சேவைப்பிரிவிற்கு முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்..

கடந்த 03ம் திகதி பூவரசங்குளம் பகுதி வைத்திசாலைக்கு சிறுமி ஒருவரை அழைத்துச் சென்றபோது அச்சிறுமி கர்ப்பம் தரித்துள்ளதாகவும் உடனடியாக பொலிஸ் நிலையத்திற்குச் செல்லுமாறு வைத்தியர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதையடுத்து அவர்கள் பொலிஸ் நிலையம் செல்லவில்லை. அப்பகுதியில் செயற்படும் சிறுவர் பாதுகாப்புக் குழுவினரால் வன்னிப்பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் தமிழ் மொழி சேவைப்பிரிவிற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழ் மொழி சேவைப் பொலிசார் பூவரசங்குளம் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்வதற்கு பொலிசார் சென்றபோது சிறுமியின் வீட்டில் எவரும் இருக்கவில்லை. இதையடுத்து அருகிலுள்ளவர்களிடம் பொலிஸ் நிலையத்துடன் தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுநாள் 4ஆம் திகதி பொலிஸ் நிலையத்திற்குச் சென்ற தாயார் சிறுமியை தனது கணவரே பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பொலிசார் கணவனின் ஊரான அங்குறுவத்தோட்ட பகுதி பொலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்கப்பட்டு கணவனைக் கைது செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிறுமி மருத்துவப் பரிசோதனைகளுக்காக வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது வன்னி பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தலைமையில் செயற்படும் தமிழ் மொழி 0766224949 சேவைப்பிரிவிற்கு அதிகளவான முறைப்பாடுகள் கிடைத்து வருகின்றன. அதற்கான உடனடி நடவடிக்கைகள் துரிதமாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி!!

வவுனியா,கனகராயன்குளம் குறிசுட்டகுளம் பகுதியில் இன்று (06.07.2017) காலை துவிச்சக்கரவண்டியில் சென்றவர் மீது வேன் மோதியதில் துவிச்சக்கரவண்டியினை செலுத்திச்சென்றவர் சம்பவ இடத்திலிலேயே உயிரிழந்துள்ளார். இவ் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

குறிசுட்டான் பகுதியிலிருந்து கனகராயன்குளம் நோக்கி பயணித்த துவிச்சக்கரவண்டி மீது கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வேன் மோதியதில் துவிச்சக்கரவண்டியினை செலுத்திச்சென்ற வடிவேல் இரத்தினகுமார் (வயது 58 ) என்பவர் சம்பவ இடத்திலிலேயே உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கனகராயன்குளம் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

மனைவி வெளிநாடு சென்ற 10 நாட்களில் கணவர் டெங்குக்கு பலியான பரிதாபம்!!

குடும்பத்தின் பொருளாதாரப் பிரச்சினையால் மனைவி வெளிநாடொன்றுக்குபணிப்பெண்ணாகச் சென்ற பத்து நாட்களில் கணவர் டெங்கு நோய்க்குப் பலியான பரிதாபசம்பவமொன்று நாவலப்பிட்டியில் நடந்துள்ளது.

நாவலப்பிட்டி, கெட்டபூலா பிரதேசத்தைச் சேர்ந்த பெரியசாமி தியாகராஜா (வயது 44)எனும் இரு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்திருக்கிறார்.

தோட்டத் தொழிலாளியான இவருக்கு பத்து மற்றும் ஆறு வயதுகளில் இரண்டு பிள்ளைகள்உள்ளனர்.

சரியான வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டதால் இவரது மனைவி பத்துநாட்களுக்கு முன்னர் பணிப்பெண்ணாக மத்திய கிழக்கு நாடு ஒன்றுக்கு சென்றார்.

கட்டுநாயக்க விமானநிலையத்தில் மனைவியை வழியனுப்பிவிட்டு வந்த கணவருக்குகாய்ச்சல் ஏற்பட்டதால் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார்.