மதவாச்சியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி!!

 
மதவாச்சி ஹிக்கிரிகொலாவ பகுதியில் நேற்று (22.06) மாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டியை செலுத்தி வந்தவர் பலியாகியதாக மதவாச்சி பொலிசார் தெரிவித்தனர்.

அனுராதபுரம் பகுதியில் இருந்து மதவாச்சி நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி எதிர் திசையில் பயணித்த கண்டர் ரக வாகனத்தை முந்திசெல்ல முற்பட்ட போது கண்டர் வாகனத்தின் மீது முச்சக்கர வண்டி மோதுண்டதிலே இவ் விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இதன்போது முற்சக்கரவண்டியின் சாரதி படுகாயமடைந்த நிலையில் றம்பாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

இவ் விபத்து தொடர்பான விசாரணைகளை மதவாச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கணவரை ஏமாற்றி காதலனுடன் சென்ற பெண்ணை வீதியில் பிச்சையெடுக்க வைத்த அவலம்!!

கணவரை ஏமாற்றி காதலனுடன் சென்ற இளம் பெண்ணை, அவனது காதலன் தெருவில் பிச்சையெடுக்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் வேலூர் சங்கரன்பாளையத்தில் அழகுகலை நிபுணராக பணியாற்றி வந்தவர் பிரியா. இவருக்கு சுரேஷ் என்ற கணவர் உள்ளார். இவர்களுக்கு பத்து மாத பெண் குழந்தை ஒன்று உள்ளது.

இந்நிலையில் பிரியா, தனது கணவரை ஏமாற்றி விட்டு, காதலனான மல்லன் என்பவருடன் வீட்டை விட்டுச் சென்றுள்ளார். அதன் பின்னர் பிரியாவிற்கு வேலை இல்லாததால், மல்லன் அவரை கொடுமைபடுத்த ஆரம்பித்துள்ளார்.

அவரை மட்டுமின்றி அவரது குழந்தையையும் கொடுமைபடுத்தியுள்ளார். ஒரு கட்டத்தில் மல்லன் இருவரையும் கோவில் கோவிலாக பிச்சை எடுக்க வைத்துள்ளான்.

இது குறித்து பிரியா கூறுகையில், தான் மற்றொருவருடைய மனைவி என்று தெரிந்தும், பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்தும் நிகழ்ச்சிக்கு என்னை அழைத்துச் சென்று, நான் இல்லை என்றால் இறந்துவிடுவேன் என்று கூறினார்.

அதன் பின் இரண்டு வருடங்களாக நீ இன்னொருவரின் மனைவி என்று கொடுமைபடுத்தினார். அதுமட்டுமின்றி குழந்தையை வைத்து தமிழகத்தின் சில இடங்களில் பிச்சை எடுக்க வைத்ததாக கண்ணீருடன் கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து அவர் கூறுகையில், தன்னுடைய பத்து மாத குழந்தையை யாரோ விலைக்கு கேட்பதாக கூறியதாகவும், அதற்கு தான் மறுப்பு தெரிவித்ததால், தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும், தான் கடைக்கு சென்ற நேரத்தில் தன்னுடைய குழந்தையை எடுத்துச் சென்று விட்டதாகவும், தற்போது குழந்தை எங்கிருக்கிறது, எப்படி இருக்கிறது என்பது தெரியவில்லை என்று கண்ணீர் வடித்துள்ளார் பிரியா.

இது தொடர்பாக பிரியா பொலிசில் புகார் அளித்துள்ளார். பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

பாதி மிருகம் பாதி மனிதன் : பீதியில் உறைந்த மக்கள்!!

தென் ஆபிரிக்காவில் ஆடு ஒன்றிற்கு பிறந்த குட்டி பாதி மனிதன் மற்றும் பாதி ஆடு போன்ற உடலமைப்புடன் பிறந்ததால் பொது மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

தென் ஆப்பிரிக்காவின் கிழக்கு மாகாணத்தில் Chris Hani மாவட்டத்தில் அமைந்துள்ளது Lady Frere என்ற கிராமம். இங்கு 4,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் அங்கு ஆடு ஒன்றிற்கு பாதி மனிதன் மற்றும் பாதி ஆடு போன்ற உடலமைப்புடன் குட்டி ஒன்று பிறந்துள்ளது.

இதைக் கண்ட அக்கிராம மக்கள் இதை தீய சக்தி தான் அனுப்பியுள்ளது என்று கூறியதால், அங்கு பீதி நிலவியது.

அதன் பின் இது தொடர்பான தகவல் அங்குள்ள கிராமப்புற வளர்ச்சி அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. அதைத் தொடர்ந்து கால்நடை மருத்துவர் Lubabalo அதை சோதனை செய்துள்ளார்.

அவர் கூறுகையில், இது கண்டிப்பாக ஆட்டிற்கு பிறந்தது தான் என்றும், இதில் மக்கள் பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை என தெரிவித்துள்ளார். மேலும் இந்த குட்டி பிறக்கும் போதே இறந்த நிலையில் பிறந்துள்ளது.

இக்குட்டி ஆட்டின் வயிற்றில் இருந்த போது நோய் வாய்பட்டுள்ளது. அது மட்டுமின்றி இதன் தாய் ஆடானது Rift Valley என்ற நோயினால் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த நோயின் தாக்கம் காரணமாகவே இக்குட்டி இது போன்ற உடலைப்புடன் பிறந்துள்ளது.

அதனால் பொதுமக்கள் யாரும் பயப்பட வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கூறியும் மக்கள் நம்பாத காரணத்தினால் அந்த ஆட்டுக் குட்டியின் பிரேத பரிசோதனையின் அறிக்கையை மக்கள் முன்னிலையில் தெரிவிக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பேஸ்புக் நட்பால் 11 லட்சத்தை இழந்த பெண்!!

பெண் மருத்துவரிடம் பேஸ்புக்கில் நட்பாக பழகி ரூபாய் 11 லட்சத்து 43 ஆயிரத்தை கொள்ளையடித்த நபரை பொலிசார் தேடி வருகின்றனர்.

மும்பை பரேல் பகுதியில் வசிப்பவர், 38 வயது பெண் மருத்துவர். இவர் கணவர் ஜம்மு – காஷ்மீரில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். சில மாதங்களுக்கு முன் இவருக்கு பேஸ்புக்கில், பியாரோ மேட்ரிக் ஜான் என்பவரிடம் இருந்து ஒரு ஃபிரண்ட் ரெக்வஸ்ட் வந்திருந்தது.

அதை ஓகே செய்துள்ளார். ஜான் இத்தாலியை சேர்ந்தவர் என கூற, முகம் தெரியாத அவருடன் நட்பானார் பெண் மருத்துவர். இதையடுத்து அடிக்கடி பேஸ்புக்கில் பேசி வந்தனர்.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் ரவி சின்கா என்பவரிடம் இருந்து ஓர் அழைப்பு வந்தது. ’டெல்லியிலுள்ள டெல்டா கார்கோ என்ற நிறுவனத்தில் இருந்து பேசுகிறேன். இத்தாலியில் இருந்து ஜான் என்பவர் உங்களுக்கு ஒரு பார்சல் அனுப்பி இருக்கிறார். வரி கட்டவேண்டும். அதைக் கட்டினால் பார்சலை எடுத்துக்கொள்ளலாம்’ என்றார் அவர்.

மருத்துவர் அதை உறுதிப்படுத்திக் கொள்ள பேஸ்புக்கில் ஜானை தொடர்பு கொண்டார்.

‘ஆமா. நான்தான் கிஃப்ட் அனுப்பியிருக்கிறேன்’ என்றார் ஜான். இதை உண்மை என்று நம்பி, ரவி சின்கா குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் ரூ.17 ஆயிரம் பணத்தைக் கட்டினார்.

பிறகு மீண்டும் பேசிய அந்த சின்கா, ‘பார்சலில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள யூரோ இருக்கிறது’ எனக் கூறி மேலும் பணம் செலுத்த வேண்டும் என்று கூறினார். அவர் தெரிவித்த தனித்தனி வங்கி கணக்குகளில் ரூ.11 லட்சத்து 43 ஆயிரம் வரை செலுத்தினார் பெண் மருத்துவர்.

அந்த நபர் இன்னும் பணம் அனுப்ப வேண்டும் என்று கேட்க, சந்தேகம் அடைந்த பெண் மருத்துவர், விமான நிலைய சுங்கத்துறை அலுவலகத்தில் சென்று விசாரித்தபோது, அவருக்கு எந்த பார்சலும் வரவில்லை என்பது தெரியவந்தது.

தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்த பெண் மருத்துவர், தாதர் போய்வாடா பொலிசில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சென்னை சில்க்ஸ் இடிபாடுகளில் புதைந்து கிடந்த நகைப் பெட்டகம் : பல கோடி மதிப்புள்ள தங்கம், வைரம்!!

சென்னை தியாகராயநகரில் உள்ள தி சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் கடந்த 31ம் திகதி தேதி பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தொடர்ந்து மூன்று நாட்கள் எரிந்த இந்த விபத்தால் கடை முற்றிலும் நிலை குலைந்து காணப்பட்டது.

கட்டிடம் முழுவதும் தீ பரவியதால், கட்டிடத்தின் உறுதித்தன்மை மிகவும் மோசமாக உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்திருந்தனர்.

மேலும் தானாக விழுந்தால் பலத்த சேதம் ஏற்படலாம் என்பதால் கட்டிடத்தை இடிக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதைத் தொடர்ந்து கட்டிடம் முழுவதுமாக இடிக்கப்பட்டது.

இந்நிலையில் கட்டிட இடிபாடுகளிலிருந்து இரண்டு பாதுகாப்பு பெட்டகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த பெட்டகங்களில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள வைரம், வெள்ளி மற்றும் தங்க நகைகள் இருக்கலாம் என்றும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூமியைத் தாக்கவரும் விண்கல்லினால் ஆபத்து : லண்டன் விஞ்ஞானிகள் எச்சரிக்கை!!

மிகப்பெரிய விண்கல் ஒன்று பூமியைத் தாக்கக் கூடிய வாய்ப்புகள் உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பூமிக்கு அருகே பல விண்கற்கள் கடந்தவாறே இருக்கும். எனினும் அவை மூலமாக பூமிக்கு ஆபத்து ஏற்படும் சாத்தியக் கூறுகள் குறைவு. இந்த விண்கற்கள் குறித்து விஞ்ஞானிகள் ஆய்வுகளை தொடர்ந்து கொண்டே வருகின்றனர்.

இந்த நிலையில் பூமியை நோக்கி பாரிய விண்கல் ஒன்று வந்து கொண்டிருப்பதாகவும், அது பூமியில் மோதுவதற்கு வாய்ப்பு உண்டு எனவும் தற்போது லண்டன் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், இந்த விண்கல் நிச்சயமாக பூமியைத் தாக்கும் வாய்ப்பு உண்டு. எனினும் அது எப்போது நடக்கும் என்பது தற்போது கணக்கிடப்பட்டுக் கொண்டு வருகின்றது என லண்டனிலுள்ள பெல்பாஸ்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் (ஆய்வாளர்) ஆலன் பிட்ஸ்சிம்மன்ஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பூமியில் தாக்குதல் நடத்தப் போகும் விண்கல்லின் அளவு பற்றி தெளிவாக கணிப்பிட முடியவில்லை எனினும் சைபீரியாவில் விழுந்ததை விடவும் இது பெரிதாக இருக்கும் எனவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

இதன் தாக்கம் காரணமாக பல நகரங்கள் முற்றாக அழிந்து விடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் லண்டன் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் எதிர்வரும் 30ஆம் திகதி சர்வதேச விண்கல் தினத்தன்று இந்த புதிய விண்கல் தொடர்பில் விவாதிக்கப்பட உள்ளது. அன்றைய தினம் நேரலையில் மக்களின் சந்தேகங்களுக்கு விஞ்ஞானிகள் விளக்கம் கொடுக்க உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

பூமியைச் சுற்றிலும் சுமார் 1800 இற்கும் அதிகமான விண்கற்கள் சுற்றிவருகின்றன. அவற்றினை தொடர்ந்தும் விஞ்ஞானிகள் அவதானித்தவாறே இருக்கின்றனர்.

இவை பூமியை நெருங்கி வரும் போதே அதன் தாக்குதலுக்கு இலக்காகும் இடங்கள் அடையாளப்படுத்தப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

விஞ்ஞானிகளையே அதிர வைக்கும் 5 ரோபோக்கள்!!

 
அணுவிபத்து கழிவுகளை சுத்தம் செய்யும் மனிதக் குரங்கு போன்ற ரோபோ முதல் பெரிய பொருட்களை துவக்க உதவும், மின்சக்தியால் இயங்கும் ரோபோ வரை என ரோபோ தொழில்நுட்பங்கள் நம்பமுடியாத அளவிற்கு வேகமாக வளர்ந்து வருகின்றன.

விஞ்ஞானிகளையே ஆச்சரியமடைய வைக்கும் ஐந்து ரோபோக்களைப் பற்றி நாசாவின் ஜெட் புரோபல்ஷன் ஆய்வகத்தில் உள்ள தலைமை பொறியியலாளரான அஷெடி ட்ரெபி ஓளினு தெரிவிக்கையில்,

ரோபோசிமியன்

மீட்பு பணிகளுக்காக தயாரிக்கப்பட்ட மனித குரங்கை போன்ற இந்த ரோபோ பல அங்கங்களைக் கொண்டது. தீ விபத்து, இரசாயனக் கசிவு, அணு விபத்து போன்றவற்றால் பாதிக்கப்பட்ட இடங்களை சுத்தம் செய்வதே இதன் பணி.

கலிபோர்னியா, பசடேனாவில் உள்ள நாசா ஜெட் புரோபல்ஷன் ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்ட இந்த ரோபோவை, எந்தவொரு வேலைக்கும் மறுகட்டமைப்பு செய்யமுடியும் என இதன் படைப்பாளர்கள் கூறுகின்றனர்.

அடா

அடா என்பது 3டி தொழில்நுட்பத்தில் அச்சிடப்பட்ட ரோபோ கை. இதனை பிரிட்டன் நிறுவனமான ஓபன் பையோனிக்ஸ் உருவாக்கியுள்ளது.

இந்த கையின் தொழில்நுட்ப வரைபடம் ஆன்லைனில் கிடைக்க ஏற்பாடு செய்துள்ளனர். இதற்கு பொருத்தமான ப்ரிண்டரை கொண்ட எவரும் இதனை பயன்படுத்தலாம்.

“உற்பத்தி பற்றி நாம் நினைத்துக்கொண்டிருப்பதை, இந்த 3டி பிரிண்டிங் மாற்ற போகிறது” என விளக்குகிறார் ட்ரெபி ஓளினு. “உங்கள் கணினியில் நீங்கள் எதை டிசைன் செய்தாலும் ஒரே பொத்தானை அழுத்தி உருவாக்கலாம்.

இன்னும் சில ஆண்டுகளில் உங்கள் படுக்கையறையில் உங்களுக்கு சொந்தமான ரோபோவை உருவாக்கி அச்சிட முடியும்.”

ஃபீனிக்ஸ்

அமெரிக்காவின் பியோனிக்ஸ்-ல் உருவாக்கப்பட்ட ஃபீனிக்ஸ், சக்தி வாய்ந்த புற உடற்கூடினை கொண்டது. ஒருமுறை சார்ஜ் போட்டால் தொடர்ந்து 4 மணி நேரம் நடக்கும் திறன் கொண்ட ஃபீனிக்ஸ், 12.25 கிலோ எடை கொண்டது என இதனை உருவாக்கிய நிறுவனத்தின் இணையதளம் கூறுகிறது.

“மிகப்பெரிய பொருட்களை தூக்குவது போன்ற, உங்களால் செய்ய முடியாத காரியங்களை செய்வதற்கு இது உதவுகிறது. மாற்றுத்திறனாளிக்கும் இது உதவியாக இருக்கும்.

”மனித மற்றும் ரோபோ கலப்பினமாக மனிதர்கள் பரிணாம வளர்ச்சி பெறுவதற்கு இது உதவும் என நினைக்கிறேன்” என்கிறார் நாசா பொறியியலாளர்.

பெப்பர்

உணர்ச்சி நுண்ணறிவு மிக்க ஒரு மனித உருவமாக பெப்பர் உள்ளது. மற்றவர்கள் உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் தன்மை என்பது ரோபோக்களிடம் இல்லாத ஒரு விடயம்.

”ரோபோக்களுடன் நாம் தொடர்பு கொள்ளும் விதத்தையும், ரோபோக்கள் வீட்டுக்கு எப்படிப் பயன்படுத்தப்படலாம் என்பதையும் இது மாற்றப் போகிறது.”

ஜப்பானில் சாப்ட் வங்கி ரோபாட்டிக்சால் தயாரிக்கப்பட்ட பெப்பர், சில கடைகளில் வாடிக்கையாளர்களை வரவேற்றுக்கொண்டிருக்கிறது.

கியூரியாசிட்டி மார்ஸ் ரோவர்

நாசாவின் முதன்மை பொறியியலாளரின் முதல் ஐந்து பட்டியலில் கடைசியில் இருப்பது, கியூரியாசிட்டி மார்ஸ் ரோவர், இது அவர் பணிபுரிந்த ஒரு திட்டமாகும். அது 2012 ல் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது.

பூமியில், ஓர் அறை அளவு இருக்கக்கூடிய ஒரு கருவியை, ஒரு காலணிப் பெட்டி அளவுக்குக் குறைப்பதன் மூலம், அதை மற்ற கிரகங்களுக்கு அனுப்ப வகை செய்வதே, விஞ்ஞானிகள் முன்னுள்ள சவாலாக இருந்தது. இதற்கு 120 வாட் என்ற மிகக்குறைந்த ஆற்றலே தேவைப்படுகிறது.

ஆனால் பூமியில், தொலைதூரத்தில் உள்ள , எளிதில் அணுகமுடியாத பகுதிகளுக்கு மருத்துவ உபகரணங்களை எடுத்துச் செல்ல இதைப் பயன்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரத்த வெள்ளத்தில் சடலமாக மீட்கப்பட்ட இளம் பெண்!!

கொட்டாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீடு ஒன்றின் மேல் மாடியில் இருந்து இளம் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அவரது உடல் முழுவதும் கூர்மையான ஆயுதத்தினால் தாக்கப்பட்ட அடையாளங்கள் காணப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

26 வயதான தரிந்தி ஆலோக்கா என்ற இளம் பெண்ணே இவ்வாறு சடலாமாக மீட்கப்பட்டுள்ளார். காதல் தொடர்பு காரணமாக இந்த கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

குறித்த பெண்ணின் சடலத்தை பாடசாலை சென்று வீடு திரும்பிய அவரது சகோதரியே முதல் முறையாக அவதானித்துள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கரடியுடன் நேருக்குநேர் சண்டையிட்ட இளைஞன் படுகாயம்!!

பெண் கரடி ஒன்றுடன் இளைஞனொருவன் நேருக்குநேர் சண்டையிட்டுக் கொண்ட சம்பவமொன்று, வில்பத்துவ சரணாலயத்தின் எல்லையில் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவத்தில் கடும் காயமடைந்த இளைஞன், அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

அந்த இளைஞனின் தலை, கைகள், வயிறு மற்றும் முதுகில் கூரிய நகக்கீறல் காயங்கள் மற்றும் கடுமையான கடி காயங்களும் காணப்படுகின்றன.

கடுங்காயங்கள் ஏற்பட்டுள்ளமையால், சத்திர சிகிச்சைக்கும் அவர் உட்படுத்தப்பட்டுள்ளார் என்றும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வில்பத்துச் சரணாலயம் மற்றும் சரணாலயத்தின் எல்லைகளுக்கு நான்கு இளைஞர்கள் சென்று அங்கிருக்கின்ற மரங்களில் ஏறி, பழங்களைப் பிடுங்குவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளனர்.

எனினும், உணவு தேடிக்கொண்டு தன்னுடைய இரண்டு குட்டிகளுடன் வந்த அப்பெண் கரடி, அந்த நால்வரையும் கண்டுவிட்டது.

அச்சமடைந்த அந்த நால்வரும் சத்தமிட்டு, கரடியையும் அதன் குட்டிகளையும் விரட்டுவதற்கு முயன்றுள்ளனர்.

எனினும் பயமின்றி வந்த அந்தப் பெண் கரடி, அந்த இளைஞன் மீது பாய்ந்துள்ளது. அந்த இளைஞனும், பெண் கரடியை ஓங்கி எத்தியுள்ளான்.

அப்போது தூக்கியெறியப்பட்ட கரடி, மிக உயரத்துக்குச் சென்று கீழே விழுந்துள்ளது என்றும் அதன் பின்னரே, அவ்விளைஞனை கரடி சரமாரியாகத் தாக்கியதாக கரடியிடமிருந்து தப்பிய இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

கரடிக்கும் மேற்படி இளைஞனுக்கும் இடையில் நேருக்குநேர் மோதல் இடம்பெற்ற போது, தாங்கள் ஒழிந்திருந்து பார்த்ததாகவும் அப்போது, குட்டிக்கரடிகள் இரண்டு மரத்தின் மீதேறி பார்த்துக்கொண்டிருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இரத்த வெள்ளத்தில் இளைஞன் மயங்கி விழுந்ததையடுத்து, தன்னுடைய குட்டிகளுடன், அக்கரடி காட்டுக்குள் சென்றதையடுத்தே, நண்பனைக் காப்பற்றி வைத்தியசாலையில் சேர்த்ததாக, அந்த இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்

 

ஆபாச வார்த்தையால் ஏற்பட்ட விபரீதம் : கனடாவில் இலங்கையருக்கு ஆயுள் தண்டனை!!

கனடாவில் பக்கத்து வீட்டு நபரை கொலை செய்த இலங்கையருக்கு கனடிய நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

இந்த கொலை தொடர்பான வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றது. இதன்போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும் அவரால் 10 வருட சிறைத்தண்டனையின் பின்னர் வெளியேற முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பக்கத்து வீட்டு நபரான ஜெயராசன் மாணிக்கராஜா என்ற இலங்கையரை கொலை செய்தமை தொடர்பில் அமலன் தண்டபாணிதேசிகர் கடந்த மாதம் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டார்.

2014ம் ஆண்டில் தண்டபாணிதேசிகரின் மனைவியை, பக்கத்து வீட்டுக்காரரான மாணிக்கராஜா கேலி செய்துள்ளார்.

இது தொடர்பில் விசாரிக்க சென்ற தண்டபாணிதேசிகரை, மாணிக்கராஜா ஆபாசமான வார்த்தைகளினால் திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தண்டபாணிதேசிகர், மாணிக்கராஜாவை கொலை செய்துள்ளார்.

இந்நிலையில் குற்றத்தை ஒப்புக்கொண்ட தண்டபாணிதேசிகருக்கு நேற்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. எனினும் நீதிபதி தீர்மானித்த 10 வருட காலத்தின் பின்னர் பிணையில் வெளியில் செல்ல விண்ணப்பிப்பதற்கு தண்டபாணிதேசிகர் தகுதியுடையவராக காணப்பட்டுள்ளார்.

அதற்கமைய 13 வருடங்களின் பின்னர் தண்டபாணிதேசிகர் சிறையிலிருந்து விடுதலையாக விண்ணபிக்க முடியும். அவர் ஏற்கனவே மூன்று வருடங்கள் சிறைத் தண்டனையை அனுபவித்துள்ளார். எனவே 2027ஆம் ஆண்டு பிணைக்கு தகுதியுடையவராக இருப்பார் என கனேடிய நீதிமன்றம் அறிவித்துள்ளது.

-தமிழ்வின்-

டெங்கு நுளம்பு பரவும் வீதம் தொடர்ந்தும் அதிகரிப்பு!!

டெங்கு நுளம்பின் பரவுகை ஆறு சதவீதத்ததால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெங்கு நுளம்பின் அடர்த்தி, கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் ஆறு சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக பூச்சியியல் தொடர்பிலான ஆய்வுகளை நடத்திவரும் அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

டெங்கு நோய்த்தொற்று அதிகரித்துவரும் மாவட்டங்களில், அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் போதே, இவ்விடயம் தொடர்பில் கண்டறியப்பட்டதாக, மேற்படி சங்கத்தின் தலைவர் நஜின் சுமனசேன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, டெங்கு நுளம்புகள் பரவும் இடங்கள் தொடர்பில் காணப்படும் இடர்பாடுகள் காரணமாக டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதிலும் சிக்கல் நிலை எழுந்துள்ளதாக, தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

தற்போது நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலையே டெங்கு நுளம்புகளின் பெருக்கத்தை அதிகரித்துள்ளதாகவும் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது

இலங்கையின் பல பகுதியில் இன்று முதல் அடைமழை!!

இலங்கயின் பல பகுதிகளில் இன்றைய தினம் தென்மேற்கு மழை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

சில இடங்களில் விசேடமாக கொழும்பு, இரத்தினபுரி, கேகாலை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேவேளை ஊவா மாகாணத்திலும், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டத்திலும் பல இடங்களில் பிற்பகல் வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்த பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னலினால் ஏற்படுகின்ற ஆபத்துக்களை குறைத்து கொள்வதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொது மக்களிடம் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.

70 வயது வரை நடிக்கத் தயார்!!

இளைய தளபதி விஜயுடன் பத்ரி, ஸ்ரீகாந்துடன் ரோஜாகூட்டம், சூர்யாவுடன் சில்லுன்னு ஒரு காதல், கார்த்தியுடன் சிறுத்தை உள்ளிட்ட பலபடங்களில் நடித்து பிரபமானவர் நடிகை பூமிகா.

பரத் கபூர் என்ற யோகா மாஸ்டரை திருமணம் செய்து கொண்டபிறகு மிகச்சிலபடங்களில் கதை நன்றாக இருந்தால் மட்டுமே நடித்து வருகிறார் பூமிகா. இது குறித்து அவரிடம் கேட்ட போது,

அண்மையில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற ‘எம் எஸ் டோனி அன்டோல்ட் ஸ்டோரி’ படத்தில் அவரது சகோதரியாக நடித்திருந்தேன். அதே போல் ஹிந்தி,தெலுங்கு, தமிழ் படங்களில் நடிப்பதற்கு ஆர்வமாகயிருக்கிறேன். ஆனால் படத்தின் கதை நன்றாக இருக்கவேண்டும். எனக்கு பொருத்தமானதாக இருக்கவேண்டும். அத்தகைய பாத்திரங்களை மட்டுமே தெரிவு செய்து நடித்து வருகிறேன்.

அந்த வகையில் தற்போது தெலுங்கில் நானி நடிக்கும் படத்தில் ஒருமுக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். இப்படத்தில் பிரபுதேவா மற்றும் தமன்னா ஆகியோர் கௌரவ வேடத்தில் நடிக்கிறார்கள். என்னைக் கேட்டால் எனக்கு பொருந்தும் கதைகளில் 70 வயது வரை நடிக்க தயாராகவே இருக்கிறேன் என்றார்.

900 ஆண்டுகள் பழமையான பள்ளிவாசலை இடித்த ஐஎஸ் தீவிரவாதிகள்!!

ஈராக் மொசூல் நகரில் 900 ஆண்டுகள் பழமையான மசூதியை ஐ.எஸ். தீவிரவாதிகள் குண்டு வைத்து தகர்த்துள்ளனர். மிக புகழ்பெற்ற இந்த மசூதியை ஐ.எஸ். தீவிரவாதிகள் தகர்த்தது ஈராக் மக்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஐ.எஸ். தீவிரவாதிகள் சிரியாவில் ராக்கா நகரம் உள்ளிட்ட பகு திகளையும், ஈராக்கில் மொசூல் நகரத்தையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்த பல பகுதிகளை ராணுவம் ஏற்கனவே மீட்டு விட்டது. கடைசியாக அவர்களிடம் இருந்த மொசூல் நகரை மீட்பதற்காக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ராணுவம் போர் தொடுத்தது.

இந்த ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் நகரை மீட்டு விடுவோம் என்று அறிவித்து இருந்தனர். ஆனால், 8 மாதங்கள் கடந்து விட்ட நிலையிலும் இன்னும் முழுமையாக மொசூல் நகரை மீட்க முடியவில்லை.

அங்குள்ள டைக்ரீஸ் நதிக்கு கிழக்கு பகுதியில் உள்ள இடங்கள் முழுவதும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது.

மேற்கு பகுதியில் ஒரு சில இடங்கள் மட்டும் ராணுவம் வசம் இருக்கிறது. மற்ற இடங்களை இன்னும் ஐ.எஸ். தீவிரவாதிகள் தான் தங்கள் பிடியில் வைத்துள்ளனர். அவற்றை கைப்பற்றுவதற்காக ராணுவம் கடுமையாக போராடி வருகிறது.

மொசூல் நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருக்கும் இடத்தில் அல் நூரி என்ற பழமை வாய்ந்த மசூதி இருந்தது. இது 1172-ம் ஆண்டு கட்டப்பட்டதாகும். இந்த மசூதி ஈராக்கின் முக்கிய அடையாள சின்னமாகவும் இருந்து வந்தது.

இதில், ஹட்பா எனும் புகழ்பெற்ற சாய்வு கோபுரமும், மேலும் பல்வேறு கோபுரங்களும் இருந்தன. மிகப்பிரமாண்ட வளாகத்தில் மசூதி அமைக்கப்பட்டு இருந்தது.

இந்த மசூதியை தற்போது ஐ.எஸ். தீவிரவாதிகள் குண்டு வைத்து தகர்த்துள்ளனர். மிக புகழ்பெற்ற இந்த மசூதியை ஐ.எஸ். தீவிரவாதிகள் தகர்த்தது ஈராக் மக்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

2014-ம் ஆண்டு ஐ.எஸ். தீவிரவாதிகள் இந்த நகரை பிடித்த போது, இந்த மசூதியில் இருந்துதான் அதன் தலைவர் அபுபக்கர் அல்பக்தாதி தனது இயக்கம் பிடித்து வைத்துள்ள இடங்களுக்கு இஸ்லாமிய தேசம் என்று பெயரிட்டார்.

ஒரே நாளில் 30 ஆயிரம் பேர் டெங்குக் காய்ச்சலால் பாதிப்பு!!

கேரள மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் மாநிலம் முழுவதும் 29 ஆயிரத்து 969 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கேரள மாநிலத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. திருவனந்தபுரம், எர்ணாகுளம், மலப்புரம், கோட்டயம், கோழிக்கோடு பகுதிகளில் டெங்கு காய்ச்சலின் பாதிப்பு மிகவும் அதிகமாக உள்ளது.

இதுவரை டெங்கு காய்ச்சலுக்கு மாநிலம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி விட்டனர். தினமும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இதனால் ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளுக்கு போதுமான படுக்கை வசதி கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. பல அரசு ஆஸ்பத்திரிகளில் நோயாளிகள் தரையில் படுத்து சிகிச்சை பெரும் அவல நிலை உள்ளது.

நேற்று ஒரே நாளில் மட்டும் மாநிலம் முழுவதும் 29 ஆயிரத்து 969 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  திருவனந்தபுரத்தில் அதிகபட்சமாக 11 ஆயிரம் பேர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. சுகாதாரத்துறை அதிகாரிகள் வீடு வீடாக சென்று டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றி கணக்கெடுத்துவருகிறார்கள். அரசு ஆஸ்பத்திரிகளில் டாக்டர்கள் 24 மணி நேரமும் பணியில் இருக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

17 ஆண்டுகளுக்குப் பின்னர் புதிதாக இரு நாடுகளுக்கு டெஸ்ட் அந்தஸ்து!!

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் வருடாந்த கூட்டத் தொடரின் போது மேலும் இரு நாடுகளுக்கு டெஸ்ட் அந்தஸ்து வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அண்மைய நாட்களாக மிக திறமையாக கிரிக்கெட் அரங்கில் பிரகாசித்துவரும் ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கே டெஸ்ட் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலமாக டெஸ்ட் விளையாடும் நாடுகளின் எண்ணிக்கை பத்திலிருந்து பன்னிரண்டாக உயர்வடையவுள்ளது.

இறுதியாக 2000 ஆண்டு பங்களாதேஷ் அணிக்கு டெஸ்ட் அந்தஸ்து கிடைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த நாடுகளுக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவையின் நிரந்தர உறுப்புரிமை கிடைக்கின்றமையும் கவனிக்கத்தக்கது.