திடீரென மரணமடைந்த பிரபல கால்பந்து வீரர் : மகன் செய்த மனதை உருக்கும் செயல்!!

 
மாரடைப்பு காரணமாக திடீரென மரணமடைந்த கால்பந்து வீரர் Cheick Tioteன் மூன்று வயது மகன் Rafael ’RIP Daddy’ என்ற வாசகத்தை தனது டீ-சர்டில் பொறித்து தந்தைக்கு உருக்கமான அஞ்சலியை செலுத்தியுள்ளான்.

மேற்கு ஆப்பிரிக்க நாடான Ivory Coastல் பிறந்தவர் Cheick Tiote (30), பிரபல கால்பந்து வீரரான இவர் அந்நாட்டு அணிக்காகவும், பல்வேறு உள்ளூர் அணிக்காகவும் கால்பந்து விளையாடி வருகிறார்.

உலக புகழ்பெற்ற பிரித்தானியாவின் Newcastle யுனைடெட் கால்பந்து கிளப்பிலும் Cheick நட்சத்திர வீரராக விளையாடி வருகிறார்.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் சீனாவில் கால்பந்து பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது திடீரென Cheick மைதானத்தில் சுருண்டு விழுந்தார்.

பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் மாரடைப்பால் மரணமடைந்து விட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

Cheickக்கு மனைவியும், மூன்று பிள்ளைகளும் உள்ளனர். விரைவில் நான்காவது குழந்தைக்கு தந்தையாக இருந்த நிலையில் அவர் மரணமடைந்துள்ளார்.

இந்நிலையில் Cheickவின் கடைசி மகனான Rafael மறைந்த தனது தந்தைக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, கால்பந்து விளையாட்டின் போது Cheick அணியும், 24 என்ற எண் கொண்ட டீ-சர்டில் RIP Daddy என்ற வாசகத்தை பொறித்தும் தனது உருக்கமான அஞ்சலியை செலுத்தியுள்ளான்.

24 என்ற எண் கொண்ட டீ-சர்டை Cheick கடந்த ஏழு ஆண்டுகளாக கால்பந்து விளையாடிய போது அணிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையில் Cheick இறப்பிற்கு பல்வேறு கால்பந்து வீரர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இரத்தத்தை குடித்து அன்பை பரிமாறும் காதல் ஜோடி!!

சினிமா, நாவல்களில் வரும் ரத்தம் குடிக்கும் ட்ராகுலா போன்று நிஜமாகவே வாழ்ந்து வரும் ஒரு இத்தாலிய ஜோடி குறித்த தகவல் இணையத்தில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

திகில் படங்கள் போன்று திகில் சம்பவங்களை விரும்பும் இத்தாலிய காதல் ஜோடி ஒன்று அவர்களுடைய இரத்தத்தை ஒருவருக்கொருவர் பருகும் சம்பவத்தை கேள்விப்பட்டு பலர் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு டென்னிஸ் (30) என்பவருக்கு இலரியா (20) என்ற இளம்பெண் பேஸ்புக் மூலம் அறிமுகமாகியுள்ளார். இவர்கள் இருவருவரும் ஒருவருக்கொருவர் பேஸ்புக்கில் அவர்களுடைய கருத்துக்களை பகிர்ந்து வந்துள்ளனர்.

இதில் ஒருவருக்கொருவர் ஈர்ப்பு ஏற்பட்டு அவர்கள் நாளடைவில் நண்பர்களாகினர். பின்னர் ஒருவருக்கொருவர் காதலர்களாகவும் மாறியுள்ளனர்.

இவர்கள் இருவரும் அவர்களுக்கு இடையே உள்ள நெருக்கத்தையும், நேசத்தையும் பரிமாற்றிக் கொள்வதற்கு ஏற்ற வழியாக டெனிஸ் ஆல்பர்ட்டோ மற்றும் அவரது பெண் தோழி தெரிவு செய்தது ஒருவரது ரத்தத்தை மற்றவர் குடிப்பதுதான்.

ஆனால் கதைகளில் வருவதைப் போல் நேரடியாகக் கழுத்தில் கடித்து ரத்தத்தை உறிஞ்சுவதற்கு பதில் சிரிஞ்சுகளையும், ஊசிகளையும் இவர்கள் பயன்படுத்தியுள்ளனர்.

மேலும் இவர்கள் இருவரும் பார்ப்பதற்கு Vampire போன்று காட்சியளிப்பதற்காக, அவர்களுடைய பற்களை பல் மருத்துவர்களை கொண்டு கூர்மையாக்கியுள்ளனர்.

மட்டுமின்றி வேம்பயர் போன்று காட்சியளிப்பதற்கு ஏதுவான ஆடைகளையே தெரிவு செய்து அவர்கள் அணிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை த்ரிஷா மீதான வழக்கு ஒத்திவைப்பு!!

வருமானத்தை மறைத்ததாக நடிகை த்ரிஷாவுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்யும் உத்தரவுக்கு எதிராக வருமான வரித்துறை நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

பிரபல திரைப்பட நடிகை த்ரிஷா கடந்த 2010-11ம் நிதி ஆண்டில் தனது வருமானமாக 89 லட்சம் ரூபாய் கணக்கு காட்டியிருந்தார்.

ஆனால் 2011-2012ல் ஒப்பந்தமான படங்களுக்கு 2010-2011ம் ஆண்டே பெற்ற ஊதியம் மூன்று கோடியே 50 லட்சம் ரூபாயை கணக்கில் காட்டாமல் நடிகை த்ரிஷா வருமான வரித்துறையை ஏமாற்றியதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

பின்னர் தான் மறைத்த வருமானத்தை த்ரிஷா கணக்கில் காட்டினார். ஆனால் வருமான வரி ஏய்ப்பு செய்ததாக நடிகை த்ரிஷாவுக்கு 1 கோடியே 11 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த அபராத தொகையை ரத்து செய்யக்கோரி த்ரிஷா சென்னையில் உள்ள வருமான வரி தீர்ப்பாயத்தில் முறையீடு செய்தார்.

இதை விசாரித்த தீர்பாயம் த்ரிஷாவுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்தது. இந்நிலையில், அபராத ரத்து உத்தரவை எதிர்த்து வருமான வரித்துறை சார்பில் உயர்நீதிமன்றத்தில் தற்போது மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

நேற்று விசாரணைக்கு வந்த மனுவை நீதிமன்றம் அடுத்து வாரத்துக்கு ஒத்தி வைத்துள்ளது.

தற்கொலை செய்து கொண்ட திருநங்கை!!

சென்னையை சேர்ந்த திருநங்கை ஒருவர் கூவம் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் உள்ள சிந்தாரிப்பேட்டையை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் மணிகண்டன் (என்ற) தேவயானி.

திருநங்கையான தேவயானி நேற்று முன்தினம் இரவு சென்னை சிம்சன் அருகே அவரது நண்பர்களுடன் பேசி கொண்டிருந்தார்.

அப்போது திடீரென அருகில் இருந்த கூவம் ஆற்றில் தேவயானி குதித்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் நண்பர்கள் இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் கூவத்தில் இறங்கி தேவயானியை தேடும் பணியில் ஈடுப்பட்டனர்.

வெகுநேரம் ஆகியும் தேவயானி கிடைக்காததால், மேலும் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு இரவு முழுவதும் தேடும் பணி நடைப்பெற்றது.

இந்நிலையில், நேற்று காலை தேவயானியின் சடலம் கூவம் ஆற்றில் மிதப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து தீயணைப்பு வீரர்கள் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார் தேவயானி தற்கொலை செய்து கொண்ட காரணம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.

காதலனை பார்க்க சென்ற காதலி மண்ணில் புதைவு : சடலத்தை தேடி கண்டுபிடித்த நாய்!!

அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக பலர் உயிரிழந்த நிலையில், பலர் மண் சரிவில் சிக்கி காணாமல் போயுள்ளனர்.

சுமார் 70 பேர் வரையில் காணாமல் போயுள்ள நிலையில், அவர்கள் உயிருடன் வருவார்கள் என உறவினர்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் மண்சரிவில் காணாமல் போன இளம் யுவுதி ஒருவரின் சடலத்தை நாயொன்று கண்டுபிடித்துள்ளது.

23 வயதான நிரோஷா ஷயாமலி குணரத்ன என்ற இளம் யுவதியின் சடலமே 5 நாட்களின் பின்னர் நாயினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 26ஆம் திகதி எஹெலியகொட, மாரபே, போகொட பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் குறித்த யுவதி மாண்டு போயிருந்தார்.

இந்த இளம் பெண், தனது காதலனின் வீட்டுக்கு அருகில் ஏற்பட்ட மண் சரிவை பார்த்து கொண்டிருந்த போது திடீரென வெடிப்புடனான மண் சரிவு ஒன்று ஏற்பட்டுள்ளது. அங்கு அருகில் இருந்தவர்கள் உயிரை காப்பாற்றி கொள்வதற்காக பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடியுள்ளனர். எனினும் இந்த பெண் தனது வீட்டை நோக்கி ஓடும் போது மண்ணில் புதைந்துள்ளார்.

5 நாட்களாக பிரதேச மக்கள், இராணுவத்தினர் மற்றும் பொலிஸ் அதிகாரிகள், பெக்கோ இயந்திரங்களை பயன்படுத்தி தேடியுள்ளனர். 31ஆம் திகதி 5.30 மணியளவில் நாய் ஒன்று அந்த இடத்தை மோப்பம் பிடித்த நிலையில் ரத்வீர என்ற நபர் அதனை அவதானித்துள்ளார்.

அந்த நாய் மண் மற்றும் கற்கள் நிறைந்த இடம் ஒன்றில் தரையை தோண்டிய நிலையில் ரத்வீரவை நோக்கி பார்த்துள்ளது.

பின்னர் அங்கிருந்த இருவருடன் நாய் காட்டிய இடத்திற்கு சென்றுள்ளனர். இதன்போது அந்த நாய் ரத்வீரவின் நெஞ்சு பகுதியில் தனது இரண்டு கால்களை வைத்து அவரிடம் உரிய இடம் தொடர்பில் தனது மொழியில் தெளிவுபடுத்தியுள்ளது.

பின்னர் நாய் கூறிய இடத்தில் தேடி பார்த்த போது காணாமல் போன பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த பெண்ணுக்காக காத்திருந்த தந்தை கடந்த 30ஆம் திகதி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

பிளாஸ்டிக் முட்டை, அரிசியை அடுத்து, பிளாஸ்டிக் சீனி!! 

நாட்டில் பல்வேறு இடங்களில் பிளாஸ்டிக் அரிசி மற்றும் பிளாஸ்டிக் சர்க்கரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக வெளியான தகவல் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா, கர்நாடகத்தில் உள்ள ஹசன் மாவட்டத்தில் விற்கப்பட்ட சீனியை ஆய்வுக்கு அனுப்பி விசாரணை நடத்தி வருவதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.

மேற்கு வங்கம், உத்தராகண்ட், கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் அரிசி மற்றும் சீனியில், பிளாஸ்டிக் அரிசி மற்றும் பிளாஸ்டிக் சீனி கலக்கப்பட்டிருந்தது சோதனையில் கண்டறியப்பட்டது.

ஹசன் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஓருவர் அங்குள்ள ஒரு மளிகை கடையில் ஒரு கிலோ சீனி வாங்கியுள்ளார். வீட்டுக்கு வந்து கொதிக்கும் பாலில் சீனியை போட்டுள்ளார். அப்போது பிளாஸ்டிக் உருகி வாசனை வந்துள்ளது.

இதையடுத்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண் சீனியை கீழே கொட்டி பார்த்த போது வெள்ளை மணி போன்ற‌ பிளாஸ்டிக் சீனி கலக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து வாடிக்கையாளர்கள் அந்த மளிகைக் கடையை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக தகவல் அறிந்த ஹசன் மாவட்ட பொறுப்பு அமைச்சர் மஞ்சு சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்.

மளிகை கடைக்காரருக்கும் வாடிக்கையாளருக்கும் இடையே சமரசம் செய்த அமைச்சர் மஞ்சு, பிளாஸ்டிக் சீனி தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

போலீஸார் சம்பந்தப்பட்ட கடையில் சோதனை நடத்தி, பிளாஸ்டிக் சீனி மாதிரிகளை சேகரித்து சோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து செய்தியாளரிடம் பேசிய கர்நாடக அமைச்சர் மஞ்சு,

பிளாஸ்டிக் சீனி விற்கப்படுவதாக வந்த தகவலை அடுத்து சோதனை நடத்தப்பட்டதாக குறிப்பிட்டார். மாதிரியை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளதாக கூறினார்.

இதுகுறித்து கர்நாடக உணவுத் துறை அமைச்சர் யு.டி.காதர் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசும் போது, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஒரே நேரத்தில் பிளாஸ்டிக் சீனி தொடர்பாக புகார் எழுந்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. இது தொடர்பாக விசாரிக்க தனியாக குழு அமைக்கப்பட் டுள்ளது.

இக்குழுவினர் அறிக்கை தாக்கல் செய்த பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பிளாஸ்டிக் சீனி எங்கிருந்து கொண்டு வரப்படுகிறது என்றும் எங்கு கலக்கப்படுகிறது என்றும் விசாரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

பிளாஸ்டிக் முட்டை விற்பனை நாடெங்கும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது பிளாஸ்டிக் அரிசி மற்றும் பிளாஸ்டிக் சீனி விற்பனை விவகாரம் மக்களிடையே கடும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

லண்டன் தாக்குதலில் கதாநாயகியாக செயற்பட்ட அவுஸ்திரேலிய பெண்!!

லண்டனில் கடந்த மூன்றாம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த அவுஸ்திரேலிய நாட்டு பிரஜையை லண்டன் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

லண்டனில் நடத்தப்பட்ட பயங்கவாத தாக்குதலில் தற்போது வரையில் 8 பேர் பலியானதுடன், 48 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட அவுஸ்திரேலிய நாட்டு பிரஜையான Kirsty Boden என்ற பெண்ணின் பெயரை புகைப்படத்துடன் லண்டன் பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

Kirsty Boden என்ற 28 வயதுடைய குறித்த அவுஸ்திரேலிய நாட்டு பெண், லண்டன் நகரில் தொழில் புரிந்து வந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

இந்நிலையில், Kirsty Boden இன் மரணம் தொடர்பில் அவரது குடும்பத்தினர் பின்வருமாறு கருத்து தெரிவித்துள்ளனர்,

“குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் காதலனால் நேசிக்கப்பட்டவர். மக்களை நேசிப்பதில் மிகவும் பிரியமானவர். அளவுக் கடந்த அன்பு கொண்டவர்.

தாதியாக பணிபுரிந்த Kirsty Boden, தாக்குதல் நடந்த போது மக்களுக்கு உதவும் நோக்குடன் ஓடினார். எனினும், துரதிஷ்டவசமாக அவர் தன் வாழ்க்கையை இழந்துள்ளார்.

Kirsty Boden இன் தைரியமான செயல்களுக்கு நாம் பெருமிதம் கொள்கிறோம். சுயநலமின்றி, அக்கறையுடன் ஒரு கதாநாயகி போல் அவர் செற்பட்டுள்ளார்.

இது எங்களுக்கு பெருமையாகவே உள்ளது” என அவரின் குடும்ப உறுப்பினர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஜேர்மன் தேசிய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்த தமிழர்!!

ஐ.பி.எல் உள்ளிட்ட கிரிக்கெட் தொடரில் விளையாடிய தமிழகத்தை சேர்ந்த வெங்கட்ராமன் கணேசன் ஜெர்மன் தேசிய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்துள்ளார்.

2012ஆம் ஆண்டு பணி நிமிர்த்தம் ஜெர்மன் சென்ற வெங்கட்ராமன் கணேசன் அங்கு கிரிக்கெட்டை தொடர்ந்த நிலையில் தற்போது அந்நாட்டு தேசிய அணியில் இடம்பிடித்துள்ளார்.

இது குறித்து சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த வெங்கட்ராமன் கணேசன், “இதனை நான் ஒருபோதும் எதிர்பார்த்திருக்க வில்லை.

குடும்ப சூழல் காரணமாக 2006ஆம் ஆண்டு கிரிக்கெட்டை கைவிட நேர்ந்தது. இந்நிலையில், என்னுடைய குடும்பத்தின் ஆதரவுடன் ஜெர்மன் நாட்டு தேசிய அணியில் இடம்பிடிக்க முடிந்தது.

கால் பந்து போட்டிகளில் ஆர்வம் காட்டும் ஜெர்மனியில், கிரிக்கெட் போட்டிகளுக்கு எதிர்காலம் இருக்கின்றது என்பதை உணர்ந்து தொடர்ந்தும் பயிற்சிகளில் ஈடுபட்டேன்.

எனது மாநில அணியான வெஸ்டன் ஈகிள்ஸ் அணிக்காக விளையாடி அதிக சதங்களை பெற்றுக்கொண்டேன். இதன் அடிப்படையில் தற்போது தேசிய அணியில் இடம்கிடைத்துள்ளது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஏழு மாதக் குழந்தையை கொலை செய்த தாய்!!

ஹக்மன பகுதியில் ஏழு மாத குழந்தையொன்று கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தெனகம, பெலும்கல பிரதேசத்தில் நேற்று மாலை கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குடும்ப பிரச்சினை காரணமாக தாய் இந்த கொலையை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் கொல்லப்பட்ட குழந்தையினை தாயார் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹக்மன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ். மற்றும் கொழும்பை சேர்ந்த இருவருக்கு சர்வதேச ரீதியில் கிடைத்த வாய்ப்பு!!

ஜெர்மன் ஊடக அபிவிருத்தி விருதிற்காக முதன் முறையாக இரண்டு இலங்கை ஊடகவியலாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பைச் சேர்ந்த டிலிஷா அபேசுந்தர மற்றும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த சன்முகராசா வடிவேல் ஆகியோரே இந்த விருதிற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த ஊடகவியலாளர்கள் இருவரும் இந்த விருதினைப் பெற்றுக் கொள்வதற்காக ஜெர்மன் செல்லவுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

ஜெர்மன் – பேர்லினில் உள்ள ஊடக அபிவிருத்தி அமைப்பு அலுவலகத்தில் இந்த மாதம் 13 ஆம் திகதி இந்த விருது வழங்கி வைக்கப்படவுள்ளது.

கடந்த வருடங்களில் இந்த விருதினை ஈராக், சிரியா மற்றும் சூடான் நாட்டு ஊடகவியலாளர்களே பெற்று வந்துள்ளனர். இந்நிலையில், முறை முதன் முறையாக இலங்கை ஊடகவியலாளர்கள் இந்த விருதிற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

பெர்லினை அடிப்படையாக கொண்ட ஊடக அபிவிருத்தி அமைப்பு, ஊடகவியலாளர் மற்றும் ஒத்துழைப்பு ஊடகங்கள் இணைந்தே இந்த விருதினை வழங்கி வருகின்றது.

மேலும்,குறித்த இருவரும் ஊடக அபிவிருத்தி மற்றும் நல்லிணக்க பொறிமுறைகள் தொடர்பிலான செய்திகளை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையிலேயே, குறித்த இருவரும் இந்த விருதிற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இந்த திட்டம் ஐரோப்பிய ஒன்றியத்தின் 400,000 யூரோவைக் கொண்டு மதிப்பீடு செய்யப்பட்டது.

சமநிலைப்படுத்தப்பட்ட பத்திரிகையை உருவாக்குவதன் மூலம் இனத்துவ சமூகங்களுக்கிடையே பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதோடு, தமிழ் மற்றும் சிங்கள ஊடகங்களுக்கு இடையே பேச்சுவார்த்தைகளை மேம்படுத்தலே இந்த திட்டத்தின் நோக்கமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தலைக்கவசம் அணிந்த நிலையில் திருமண வைபவத்தில் பங்குபற்றிய மணமக்களும் விருந்தினர்களும்!!

 
புன­ர­மைப்புப் பணிகள் மேற்­கொள்­ளப்­பட்டு வந்த தேவா­ல­ய­மொன்றில் திரு­மண வைப­வ­மொன்று நடை­பெற்­றதால், இத்­தி­ரு­மண வைப­வத்தில் கலந்­து­கொண்ட மண­மக்கள் மற்றும் விருந்­தி­னர்கள் அனை­வரும் தலைக்­க­வசம் அணிந்த நிலையில் காணப்­பட்­டனர்.

இங்­கி­லாந்தின் சரே பிராந்­தி­யத்­தி­லுள்ள பான்ஸ்டெட் நகர தேவா­ல­ய­மொன்றில் இத்­தி­ரு­மண வைபவம் நடை­பெற்­றது.

55 வய­தான அன்டி போய்ஸ் என்­ப­வரும் 49 வய­தான சுசான் கெம்பெல் என்­ப­வ­ருக்கும் இடையில் இத்­தி­ரு­மண வைபவம் நடை­பெற்­றது. 23 வரு­டங்­க­ளாக இணைந்து வாழும் ஜோடி இது.

800 வருட காலம் பழைமை வாய்ந்த தேவா­ல­ய­மொன்றில் இவர்கள் திரு­மண வைப­வத்தை நடத்த திட்­ட­மிட்­டி­ருந்­தனர்.
ஆனால், திரு­ம­ணத்­துக்கு சில மாதங்­க­ளுக்கு முன்னர், மேற்படி தேவா­ல­யத்தின் புன­ர­மைப்புப் பணிகள் ஆரம்­பிக்­கப்­பட்­டன.

எனினும், அதே தேவா­ல­யத்தில் தமது திரு­ம­ணத்தை நடத்­து­வ­தற்கு இந்த ஜோடி­யினர் தலைக்­க­வசம் அணிந்த நிலையில் திரு­மண வைப­வத்தில் பங்­கு­பற்­றினர்.

அவர்களைப் போலவே திருமண வைபவத்தில் கலந்துகொண்ட விருந்தினர்களும் தலைக்கவசம் அணிந்திருந்தனர்.

மடிக் கணினியை மார்பின் மீது வைத்துக் கொண்டு கிரிக்கெட் பார்த்த 17 வயது மாணவன் மரணம்!!

லெப்டொப் கணி­னியை மார்பின் மீது வைத்துக் கொண்டு கிரிக்கெட் போட்­டி­யொன்றை பார்த்துக் கொண்­டி­ருந்­த­போது உயி­ரி­ழந்த இளை­ஞ­னின் மரணம் தொடர்­பாக அரச இர­சா­யன பகுப்­பாய்­வாளர் மேற்­கொண்ட ஆய்வில் கண­னி­யி­லி­ருந்து வெளி­யே­றிய இரு­வி­த­மான வாயுக்­களை சுவா­சித்­ததால் மரணம் சம்­ப­வித்­துள்­ள­தாக கொழும்பு திடீர் மரண விசா­ரணை அதி­காரி எம். அஷ்ரப் ரூமி தெரி­வித்­துள்ளார்.

லெப்டொப் கண­னியை மார்பின் மீது வைத்துக் கொண்­டி­ருந்த கொழும்பு 14 கிராண்ட்பாஸ் வீதியைச் சேர்ந்த 17 வய­தான மாண­வனே உயி­ரி­ழந்தார்.

இர­சா­யன பகுப்­பாய்வு அறிக்கை மாணவன் உயி­ரி­ழந்த சுமார் பத்து மாதங்­க­ளுக்குப் பின்னர் வெளி­யி­டப்­பட்­டி­ருப்­பது குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

இந்த மாணவனின் மரண விசா­ரணை சட்ட வைத்­திய அதி­காரி டாக்டர் எம். ஓகல் சங்­கரால் மேற்­கொள்­ளப்­பட்­ட­துடன், மர­ணத்­துக்­கான கார­ணத்தை கண்­டு­பி­டிக்க முடி­யாமற் போனதால் உடற்­பா­கங்கள் இர­சா­யன பகுப்­பாய்­வா­ள­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டன.

இந்தப் பகுப்­பாய்வு அறிக்­கை­யின்­படி Diazepam மற்றும் imperamine என்ற இரு விஷ வாயுக்­களை சுவா­சித்து சுவாசக் குழாய் வழியாக விஷம் உடலில் கலந்ததால் இம்மரணம் சம்பவித்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரங்கத்தை அதிரவைத்து, அழவைத்த மாற்றுத்திறனாளிப் பெண்!!(வீடியோ)

அமெரிக்காவில் America’s Got Talent 2017 என்ற நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் திறமை உள்ளவர்கள் எவரும் தங்கள் திறமையை நிரூபிக்கலாம்.

அந்நிகழ்ச்சியில், காது கேட்கும் திறனை இழந்தாலும், மென்டி ஹார்வே எனும் இளம் பெண் ஒருவர் தன்னுடைய இசை அதிர்வுகளை பாதங்களின் வழியே உணர்ந்து பாடிய அதிசயம் நடந்துள்ளது.

இவர் பாடிய பாடலைக் கேட்டு அரங்கில் இருந்த ஒட்டு மொத்த மக்களின் கண்களிலும் கண்ணீர் வந்தது. அந்தளவிற்கு இருந்தது அப்பெண்ணின் திறமை.

அங்கிருந்த நடுவர்களில் சிலரும் தங்கள் கண்களை ஒன்றும் தெரியாதது போல், துடைத்துக் கொண்டனர்.

பாடல் முடிந்தவுடன் அரங்கில் இருந்த அனைவரும் எழுந்து கைதட்டி ஆரவாரம் செய்த போது, அப்பெண் உணர்ச்சியை அடக்கமுடியாமல் அழுதார். இதைக்கண்ட அவரின் தந்தை சற்று நேரம் பிரமித்துப்போய் நின்றார்.

யூடியூப்பில் பதிவேற்றப்பட்டுள்ள மென்டி ஹார்வேயின் பாடலை பலரும் பார்வையிட்டு வருகின்றனர்.

இந்த வீடியோவைப் பார்க்கும் அனைவரும் தமது கண்களிலும் கண்ணீர் வருவதாகக் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

மியன்மாரில் காணாமற்போன விமானம் அந்தமான் கடலில் வீழ்ந்தது : சடலங்கள் கண்டுபிடிப்பு!!

 
மியன்மாரில் காணாமற்போயிருந்த இராணுவ விமானத்தின் பாகங்களும் அதில் பயணித்தவர்களின் சடலங்களும் அந்தமான் கடலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

விமானத்தின் சில பாகங்களும் ஒரு குழந்தை உட்பட மூவரின் சடலங்களும் அவர்களின் பயணப் பொதிகளும் பாதுகாப்புக் கவசங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

மியன்மாரின் தெற்கு கடலோரப் பகுதி நகரான மெய்க்கில் இருந்து மியன்மாரின் மிகப்பெரிய நகரான யாங்கூனுக்கு 116 பயணிகளுடன் புறப்பட்ட இராணுவ விமானம் ஒன்று நேற்று முன்தினம் (07) காணாமற்போனது.

அந்த விமானத்தில் பயணித்தவர்களில் 105 பேர் கடலோரப் பகுதியில் வசிக்கும் இராணுவக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என இராணுவத் தகவல்கள் வெளியாகியிருந்தன.

அந்தமான் கடற்பகுதியில் மேற்கு தவேய் நகரை நெருங்கிப் பறந்து கொண்டிருந்தபோதே விமானத்துடன் இருந்த ரேடார் தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டு மாயமானது.

அதன்பிறகு அந்த விமானம் எங்கே சென்றது என்பதும், அதில் இருந்தவர்களின் கதி என்ன ஆனது என்பது பற்றியும் உடனடியாக எந்தத் தகவலும் தெரியவரவில்லை.

மாயமான விமானத்தைத் தேடும் பணியில் கப்பல்களும் இராணுவ விமானங்களும் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டன.

இந்நிலையில், அந்தமான் கடற்பகுதியில் குறித்த விமானத்தின் உடைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், சடலங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மியன்மார் இராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது.

நேற்று காலை தேடுதல் பணியில் விமானங்களும் கப்பல்களும் ஈடுபட்டிருந்த போதே அவற்றைக் கண்டுபிடித்துள்ளன.

Hall of Fame விருது பெற்று வரலாற்றில் பதிவானார் முத்தையா முரளிதரன்!!

Hall of Fame விருதைப் பெற்ற முதல் இலங்கையராக முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் வரலாற்றில் பதிவாகியுள்ளார்.

இதன் மூலம் சேர். பிரட்மன், இயன் சப்பல், காபில்ட் சோபர்ஸ், கர்ட்லி அம்புரோஸ் ஆகியோரின் வரிசையில் முரளிதரனும் இணைந்து கொண்டுள்ளார்.

கிரிக்கெட் உலகில் அதீத ஆற்றலை வெளிப்படுத்தி புகழ்பூத்த வீரர்களை சர்வதேச கிரிக்கெட் பேரவை Hall of Fame விருது வழங்கி கௌரவிக்கின்றது.

அந்த வகையில், இலங்கையின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் நேற்றைய தினம் Hall of Fame விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

டெஸ்ட் அரங்கில் 800 விக்கெட்டுகளையும் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 534 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ள முரளிதரன் 2011 ஆம் ஆண்டு உலகக்கிண்ணத் தொடருடன் ஓய்வு பெற்றார்.

பிரித்தானிய தேர்தல் : இதுவரை வௌியான பெறுபேறுகள்!!

பிரித்தானிய பொதுத் தேர்தலில் இதுவரை வெளியான பெறுபேறுகளின் படி, தொழிற் கட்சி 195 ஆசனங்களையும், கன்சவேட்டிவ் கட்சி 190 ஆசனங்களையும் பெற்றுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன.

மேலும் தேர்தலுக்கு முன்னர் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளுக்கு அமைய கன்சவேட்டிவ் கட்சி 314 ஆசனங்களையும், தொழிற் கட்சி 266 ஆசனங்களையும் மற்றும் லிப் டெம்ஸ் 14 ஆசனங்களையும் பெற்றுக்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, தற்போது ஆட்சியில் உள்ள கன்சவேட்டிவ் கட்சியினர் தங்களுடைய பெரும்பான்மையை தக்கவைத்துக்கொள்வதில் தோல்வி அடைவார்கள் என்று வாக்களிப்பிறகு பிறகு நடந்த கருத்துக் கணிப்பில் சொல்லப்பட்டதை, பொது தேர்தலின் ஆரம்பகட்ட முடிவுகள் காட்டுகின்றன.