ஸ்மார்ட்போன் பாவிக்கும் குழந்தைகளுக்கு பேசும் திறன் தாமதமாகும் : ஆய்வில் தகவல்!!

 

ஸ்மார்ட்போன், டேப்லட் உள்ளிட்ட மின்னணுக் கருவிகளை குழந்தைகள் பயன்படுத்த அனுமதித்தால் அவர்களின் பேசும் திறன் தாமதமாகலாம் என கனடா விஞ்ஞானிகள் மேற்கொண்ட புதிய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

டொரோண்டோ நகரில் 2011-2015 இடைப்பட்ட காலத்தில் ஆறு மாதம் முதல் இரண்டு வயது வரையான 894 குழந்தைகளிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஒன்றரை வயதின் போது அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தினமும் சராசரியாக 28 நிமிடங்கள் ஸ்மார்ட்போனைப் பயன்படுத்திய குழந்தைகளின் பேசும் திறன் பாதிப்புக்குள்ளானது தெரியவந்தது.

அதன்படி, ஒவ்வொரு 30 நிமிடமும் அதிகமாக ஸ்மார்ட்போனைப் பயன்படுத்தும் குழந்தைகளிடம் இந்த பாதிப்பு ஏற்பட 49 சதவீதம் அதிக வாய்ப்பிருப்பது கண்டறியப்பட்டது.

இருப்பினும், ஸ்மார்ட்போன் பயன்பாடு குழந்தைகளின் சமூகத்துடனான தொடர்பு, அவர்களின் உடல்மொழி ஆகியவற்றில் பாதிப்பு எதையும் ஏற்படுத்தவில்லை.

குழந்தைகளிடம் தற்போது மின்னணுப் பொருட்கள் பயன்பாடு வெகு சகஜமாக உள்ளது. அவர்கள் அதனை அளவோடு பயன்படுத்த கற்றுக்கொடுக்க வேண்டும்.

இந்த ஆய்வைத் தொடர்ந்து, 18 மாதங்களுக்குட்பட்ட குழந்தைகளிடம் ஸ்மார்ட்போன் உள்ளிட்ட தொடுதிரை சாதனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கக்கூடாது என அமெரிக்க சிசு சுகாதார இயல் மருத்துவ சங்கம் பரிந்துரைத்துள்ளது.

கணவனை ஓட ஓட விரட்டி மனைவி துப்பாக்கிச் சூடு : நடுவீதியில் பரபரப்பு!!

கணவனை ஓட ஓட விரட்டி மனைவி துப்பாக்கிச் சூடு நடத்தியதால், பெங்களூரு வீதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஹம்ஸா (48), சாயிராம் (53) இருவரும் பிரிந்து வாழும் தம்பதியினர். எவ்வாறெனினும், நேற்று முன்தினம் (05.05) வெள்ளிக்கிழமை இவர்கள் இருவரும் தமக்குச் சொந்தமான ஆடம்பர வாகனத்தில் தமிழகத்தில் இருந்து பெங்களூரு நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர்.

ஹோசூர் அருகே மதிய உணவருந்தி மீண்டும் தமது பயணத்தைத் தொடர்ந்தனர். அப்போது அவர்கள் இருவருக்கிடையே பிரச்சினை உருவானது. திடீரெனத் தன்னிடமிருந்த துப்பாக்கியை எடுத்த ஹம்ஸா, அவரது கணவரை நோக்கிச் சுட்டார்.

காயமடைந்த சாயிராம் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள எண்ணி, வாகனத்தை நடு வீதியில் விட்டு விட்டு ஓடிச் சென்று, முன்னால் சென்றுகொண்டிருந்த பேருந்தினுள் ஏறினார்.

கோபம் தலைக்கேறிய ஹம்ஸா அவர்களது ஆடம்பர வாகனத்தைச் செலுத்திச் சென்று பேருந்தை மடக்கினார். பின்னர் காரை விட்டிறங்கிய ஹம்ஸா, ஓடிச் சென்று பேருந்தினுள் ஏறி, சாயிராமை நோக்கி மீண்டும் சுடத் தொடங்கினார். பதறிப்போன மக்கள் ஒருவழியாக ஹம்ஸாவை மடக்கிப் பிடித்தனர்.

இதற்கிடையே தகவல் அறிந்த பொலிஸார் ஸ்தலத்துக்கு வந்து, சாயிராமையும், ஹம்ஸாவையும் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மன நிலை பாதிக்கப்பட்டவரா என்ற பரிசோதனைக்குப் பின் ஹம்ஸா மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவுசெய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தான் கடத்தப்பட்டதாக பொய் கூறி மனைவியிடம் கப்பம் கோரியவர் சிக்கினார்!!

தன்னைக் கடத்தியதாக பொய் கூறி மனைவியிடம் இருந்து பணம் பறிக்க முற்பட்ட ஒருவர் களுத்துறை பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கடந்த 5ம் திகதி தனது கணவர் காணாமல் போனதாகவும், நேற்றையதினம் கப்பம் கோரி சிலர் அழைப்பினை மேற்கொண்டதாகவும், பெண் ஒருவர், களுத்துறை தெற்கு பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

மேலும் 30 இலட்சம் ரூபா பணத்தை இவர்கள் கப்பமாக கோரியதாகவும் அவர் தனது முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதன்படி, விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், தான் கடத்தப்பட்டதாக பொய் கூறி சம்பந்தப்பட்ட பெண்ணின் கணவரே கப்பம் கோரியுள்ளதாக தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் இதற்காக பிரிதொரு நபரின் உதவியை நாடியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதனையடுத்து, இவரைக் கைதுசெய்த களுத்துறை தெற்கு பொலிஸார், இது குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறையை உடைத்து 200 க்கும் அதிகமான கைதிகள் தப்பியோட்டம்!!

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவிலுள்ள சிறையை உடைத்து 200 க்கும் அதிகமான கைதிகள் தப்பியுள்ளனர்.

பெகன்பரு எனும் அந்த சிறையின் பக்க வாசல் ஒன்றின் ஊடாக பல கைதிகள் தப்பிச்செல்வது தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பப்பட்டுள்ளது. எனினும், தப்பிச்சென்ற கைதிகளில் சிலர் பொலிஸாரால் மீண்டும் பிடிக்கப்பட்டுள்ளனர்.

300 கைதிகளுக்கு மாத்திரம் இட வசதியுள்ள அந்த சிறையில் 1900 பேர் வரை தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், அங்கு 6 சிறைக்காவலாளிகள் மாத்திரமே பணியில் இருந்ததாகவும் அந்நாட்டின் நீதி அமைச்சின் பிராந்திய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சிறைக்காவலர்கள் தம்மை மோசமாக நடத்தியதாக கைதிகள் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளனர். இந்த சம்பவத்தையடுத்து, நூற்றுக்கணக்கான பொலிஸாரும் இராணுவத்தினரும் சிறைச்சாலையின் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தப்பியவர்களைத் தேடும் பொருட்டு நகரெங்கும் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

வவுனியா பறநட்டகல் பிரதேசத்தில் நள்ளிரவில் காட்டு யானை அட்டகாசம்! உடமைகளுக்கும் சேதம்!(வீடியோ)

 
வவுனியா   பறநட்டகல் பிரதேசத்தில் நேற்று (06.05.2017)  நள்ளிரவில்  புகுந்த  யானை ஒன்று  மேற்படி பிரதேசத்தில் அமைக்கபட்டிருந்த  வீடொன்றின்  மீது தாக்குதல் நடத்தியுள்ளது .

குறித்த கிராமத்திற்குள் புகுந்த தனி யானை ஒன்று  விவசாய நடவடிக்கைகளுக்காக அமைக்கபட்டிருந்த   வீட்டினுள் அத்து மீறி நுழைந்து   அங்கு இரவு காவல் கடமையில் இருந்த காவலாளியின் உடமைகளை சேதப்படுத்தியதுடன் வீட்டையும்  சேதப்படுத்தியுள்ளது.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் வவுனியா – ஈச்சங்குளம் கிராம சேவகர் பிரிவிற்கு உட்பட்ட அம்மிவைத்தான் கிராமத்தில் புகுந்த யானை மூன்று வீடுகளை சேதப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்தமாதம் யானை ஒன்று சுட்டு கொல்லபட்ட சம்பவத்தின் பின்னர் மேற்படி பிரதேசத்தில் தொடர்ச்சியாக காட்டு யானை தாக்குதல் நடத்தி வருவதால் பொதுமக்கள் அச்சத்தின்   மத்தியில் இரவுபொழுதை கழிக்க வேண்டியுள்ளதாக பிரதேசவாசிகள்  தெரிவிக்கின்றனர்.

வவுனியா கல்மடு ஸ்ரீ விநாயகர் ஆலய கும்பாபிசேகம்!(படங்கள்)

வவுனியா கல்மடு ஸ்ரீ விநாயகர் ஆலயத்தின்  கும்பாபிசேகம் கடந்த 29.04.2017 சனிகிழமை காலை இடம்பெற்றது.

மேற்படி கும்பாபிசேகம் சிவஸ்ரீ.திவாகர குருக்கள் தலைமையில் இடம்பெற்றது . ஆலய கும்பாபிஷேக நிகழ்வில்  ஊர்  மக்கள் கலந்து கொண்டனர்.

 

இலங்கையில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட நாய் மீண்டும் அமெரிக்காவில்!!

இலங்கை பாதுகாப்பு படையில் ஆறு வருடங்களாக பணியாற்றிய நாயொன்று மீண்டும் அமெரிக்கா சென்றுள்ளது.

இலங்கை பொறியியல் படையணியில் நிலக்கண்ணி வெடிகள் அடையாளம் காணும் குழுவுடன் இணைந்து செயற்பட்ட ஷீரா – யென்கி என்ற பெயருடைய ஜேர்மன் ஷெபர்ட் வகை நாய் தனது கடமையை நிறைவு செய்துள்ளது.

குறித்த காலப் பகுதியினுள் இந்த நாய் வடக்கு பிரதேசத்தில அதிக அளவிலான நிலக்கண்ணி வெடிகளை அடையாளம் காண உதவி செய்துள்ளது. 62,680 மீற்றர் நீளத்தினை கண்கானிப்பதற்கு இந்த நாய் உதவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஷீரா – யென்கி மற்றும் அந்த படையணியின் அதிகாரி இணைந்து மந்துவில், ஆனந்தபுரம், முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட பல பிரதேசங்களில் நிலக்கண்ணி வெடிகளை தேடும் பணியில் ஈடுப்பட்டுள்ளது. இதன்போது பல்வேறு வெடிபொருட்கள் மற்றும் வெடிகுண்டுகள் இந்த நாயினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

2009ஆம் ஆண்டு ஜுன் மாதம் 5ஆம் திகதி பிறந்த இந்த நாய் 2011ஆம் ஜுன் மாதம் 24ஆம் திகதி இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

2011ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12ஆம் திகதி வரை வழங்கப்பட்ட பயிற்சியின் பின்னர் இராணுவ வெடிகுண்டு கண்கானிப்பு குழுவில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கைக்கு மிகப்பெரிய சேவையை செய்த இந்த நாய் கடந்த வியாழக்கிழமை மீண்டும் அமெரிக்கா நோக்கி அமெரிக்கா பிரதிநிதியுடன் புறப்பட்டு சென்றுள்ளது.

பெற்ற மகளுக்கு தந்தை செய்த கொடூரம் :தாயின் அதிரடி நடவடிக்கை!!

15 மாத குழந்தையை தொடர்ந்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை ஒருவரை கைது செய்துள்ளதாக வனத்தவில்லு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று முன் தினம் மாலை இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்டவர் வனத்தவிலில் வசிக்கும் ஒரு 24 வயதானவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர் இதற்கு முன்னர் போதைப்பொருள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்ததாகவும், பின்னர் மேசனாக வேலைவாய்ப்பு ஒன்றை பெற்றதாவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளார். சந்தேகநபரின் மனைவி வழங்கிய முறைப்பாட்டினை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனது கணவர் தனது மகளை உடல் ரீதியாக தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்வதாக சந்தேக நபரின் 22 வயதுடைய மனைவி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

பலாத்காரத்திற்கு உட்பட்ட மகளை புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கான நடவடிக்கையை வனத்தவில்லு பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

இனியும் பொறுக்க முடியாது : வடகொரியாவின் அணு ஆயுத தளங்களை வேரோடு அழிக்க ஜப்பான் முடிவு!!

வடகொரியாவின் அணு ஆயுத தளங்களை வேரோடு அழிக்க சக்தி வாய்ந்த அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளை தயார் செய்யும் பணியில் ஜப்பான் ஈடுபட்டுள்ளது.

வடகொரியா உலக நாடுகளை அச்சுறுத்தும் வண்ணம் தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது.
இதற்கு ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தாலும் அதற்கு அந்நாடு செவி சாய்க்கவில்லை.

அதுமட்டுமில்லாமல், ஜப்பான் கடலுக்குள் வடகொரியா ஒரு முறை ஏவுகணைகளை செலுத்தி தாங்கள் சக்தி வாய்ந்தவர்கள் என்பதை அந்நாட்டுக்கு காட்டியது.

இனியும் இதையெல்லாம் பொறுக்க முடியாது என வடகொரியாவின் அணு ஆயுத தளங்களை அழிக்க ஜப்பான் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து ஜப்பான் அதிகாரிகள் கூறுகையில், அமெரிக்காவில் தயாரான சக்தி வாய்ந்த ஆயுதங்களை நாங்கள் வாங்கவுள்ளோம்.

Tomahawk ஏவுகணை என்னும் பயங்கர ஏவுகணையை வட கொரியா அணு ஆயுத தளங்களை தகர்க்க பயன்படுத்தவுள்ளோம் என அவர்கள் கூறியுள்ளனர்.

சிரியாவின் விமான தளத்தின் மீது தாக்குதல் நடத்த டொனால்டு டிரம்ப் இந்த Tomahawk ஏவுகணை தான் பயன்படுத்தினார். மேலும், எங்களுக்கு ஆயுதங்களை தர அமெரிக்கா தயாராக இருப்பதாகவும் ஜப்பான் அதிகாரிகள் கூறியுள்ளார்கள்.

வட கொரியா மீண்டும் அணு ஆயுத சோதனையை எந்நேரத்திலும் நடத்தலாம் மற்றும் தங்கள் மீதும் தாக்குதல் நடத்தலாம் என்பதால் தான் ஜப்பான் இதை செய்ய முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.

ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே மற்றும் அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஆகியோர் வட கொரியாவின் அணு ஆயுத மிரட்டல்களை எதிர்கொள்வது குறித்து ஏற்கனவே தீவிர ஆலோசனை நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உறவுமுறையில் இந்த 5 வார்த்தைகளை மட்டும் பயன்படுத்தாதீர்கள்!!

உறவுமுறையில் விரிசல் ஏற்படுவதற்கு சண்டையின் போது தம்பதியினர் பயன்படுத்தும் ஒரு சில மோசமான வார்த்தைகளே காரணம் ஆகும்.

தீயினால் சுட்ட புண் புறத்தே வடு இருந்தாலும் உள்ளே ஆறிவிடும்; ஆனால் நாவினால் தீய சொல் கூறிச் சுடும் வடு என்றும் ஆறாது. இது வள்ளுவரின் வாக்கு.

நாவினால் சுட்ட சொல்லுக்கு, நீங்கள் எந்த வகையில் மன்னிப்பு கேட்டாலும் அது பாதிக்கப்பட்டவர்களின் மனதில் இருந்து ஆறவே ஆறாது.

இந்த உலகில் மன்னிக்க முடியாதது என்ற ஒரு குற்றம் கிடையாது. ஆனால் அதனை மன்னிப்பதற்கு நம் மனது பக்குவப்படவேண்டும். அப்படி நம் மனது பக்குவப்படவில்லையெனில் உறவு முறைகளில் விரிசல் ஏற்படுவது நிச்சயம்.

குடும்ப வாழ்க்கையில் என்னதான் பிரச்சனைகள் வந்தாலும் உங்கள் துணையின் மனதை காயப்படுத்தும் வார்த்தைகளை ஒருபோதும் பயன்படுத்தா வண்ணம் உங்கள் நாக்கை அடக்கிகொள்ள கற்றுக்கொள்ளுங்கள்.

உன்னை விட நான் திறமையானவர் – என்ற வார்த்தையை பயன்படுத்தாதீர்கள். அது தம்பதியினர் இடையே ஏற்ற தாழ்வுகளை ஏற்படுத்தும்.

பக்கத்து வீட்டில் இருப்பவரை பார் – ஊதியம் மற்றும் குணநலன்கள் சார்ந்த விடயத்தில், பக்கத்து வீட்டில் இருப்பவரோடு ஒருபோதும் ஒப்பிட்டுக்கொள்ளாதீர்கள்.

நீ போலியானவன் – சண்டையின் போது என்னிடம் நீ நடிக்கிறாயா? என்ற வார்த்தையை பயன்படுத்தாதீர்கள். ஏனெனில், மனதுக்குள் நம்மை போலியானவன் என்று நினைத்துக்கொண்டுதான் இவ்வளவு நான் நம்முடன் வாழ்ந்துள்ளார் என்று நினைக்கத்தோன்றும்.

நீ ஒரு Waste, எதற்குமே தகுதியில்லாவன் – சண்டைபோட்டுக்கொண்டிருக்கும்போது கோபத்தின் உச்சகட்டத்தில் இருக்கும்போது நீ ஒரு Waste என்று ஒரு வார்த்தையை மட்டும் சொல்லிவிட்டால் போதும், அந்த இடமே ஒரு போர்க்களமாக மாறிவிடும். இந்த உலகில் வாழ தகுதியில்லாவன் என்ற வார்த்தை மனதில் பாய்மரத்து ஆணி போன்று பதிந்துவிடும். காலம் உள்ளவரை அந்த வார்த்தை மனதில் ஒருவித வலியினை ஏற்படுத்திக்கொண்டுதான் இருக்கும்.

முந்தைய காதலை சம்பந்தப்படுத்தி பேசுவது – திருமணம் ஆன புதிதில் தம்பதியினர் தங்களுடைய முந்தைய காதல் பற்றி பேசி சந்தோஷமாக சிரித்துக்கொள்வார்கள். ஆரம்பத்தில் இதுபோன்ற விடயம் தம்பதியினர்களுக்கு பெரிய விடயமாக இருக்காது. ஆனால், காலப்போக்கில் சண்டை ஏற்படும்போது முந்தைய உறவினை சொல்லிக்காட்டும்போது, சந்தேகத்துடன் தான் இவ்வளவு காலம் என்னுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறாயா என்ற கேள்வி அங்கு எழுந்து உறவில் விரிசல் ஏற்படும்.

கடவுச்சொற்களை திருட்டு போகாமல் பாதுகாப்பது எப்படி?

உலகளவில் பாஸ்வேட் உபயோகம் குறித்த விழிப்புணர்வை உருவாக்கும் நோக்கத்துடன் உலகப் பாஸ்வேட் தினம் மே மாதத்தின் முதல் வியாழன் அன்று கடைப்பிடிக்கபடுகிறது.

பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூகவலைதளங்கள், இமெயில், இணைய வணிகம் போன்ற இணையம் சம்மந்தமான எல்லா விடயங்களுக்குமே பாஸ்வேட் என்பது முக்கியமான ஒன்றாகும்.

இன்று உலகளவில் பாஸ்வேட் திருட்டு, இணைய ஹேக்கிங் போன்ற விடயங்கள் அதிகம் நடைபெறுகின்றன. இதன் மூலம் நமது அந்தரங்க விடயங்கள், பதிவுகள், ஆவணங்கள் போன்றவைகள் திருடப்படுகிறது.

நமது பாஸ்வேர்டை பாதுகாப்பது எப்படி?

பலர் தங்களுக்கு பிடித்த பிரபலங்களின் பெயர்கள், செல்ல பிராணிகளின் பெயர்களை பாஸ்வேர்டாக வைத்து கொள்கிறார்கள்.

பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களின் பகிர்வுகள் வாயிலாக உலகில் எவர் வேண்டுமானாலும் இந்தத் தகவல்களை அறிந்துகொள்ள முடியும் என்பதால் அவற்றைத் தவிர்ப்பதே நல்லது.

அதே போல கடினமான பாஸ்வேர்ட்களை வைத்து கொள்கிறவர்கள், அதை மறந்து விட்டு திணறும் விடயங்களும் அதிகம் அரங்கேறுகிறது.

தனக்குச் சுலபமானதாக பிறர் யூகிக்க கடினமானதாக இருப்பதே நல்ல பாஸ்வேர்டுக்கான இலக்கணம் ஆகும்.

பாஸ்வேர்ட் மாற்றம் தேவை

பாஸ்வேர்டுகளை குறிப்பிட்ட கால இடைவெளியில் மாற்ற வேண்டியது அவசியமாகும்.

மேலும், இமெயில், பேஸ்புக், வங்கி உபயோகம் என அனைத்துக்கும் ஒரே பாஸ்வேர்டுகளை உபயோகிக்கக் கூடாது.

அதிகப்படியான பாஸ்வேர்டுகளை உபயோகிப்பவர்கள் குழப்பங்களைத் தவிர்க்க இணையத்தில் கிடைக்கும் பாஸ்வேர்ட் மேனேஜர்கள் உதவியை நாடலாம்.

இணைய திருட்டுகளை பற்றி படிக்க எத்திக்கல் ஹேக்கிங் என்ற தனி பாட பிரிவு கூட உள்ளது.

அடையாள திருட்டுகளை தவிர்க்க

கணினி, ஸ்மார்ட் போன்களில் உரிய ஆண்டி வைரஸ் பாதுகாப்பு அம்சங்களை பொருத்த வேண்டும்.
சமூகவலைதளங்களில் தனிப்பட்ட தகவல்களை பகிர கூடாது.
சந்தேகத்துக்கு இடமான இணைய தளங்கள், இ-மெயில்கள், வங்கி பெயரிலான அழைப்புகளை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.

பொது இடங்களில் இருக்கும் வை-பை இணையத்தின் மூலம் கூட தகவல்களை திருட முடியும் எனபதால் அதை உபயோகபடுத்துவதை தவிர்க்கலாம்.

கடத்தல் வழக்கில் கைதான பிரபல நடிகை முக்கிய வாக்குமூலம் : சிக்கும் பெரும்புள்ளிகள்!!

செம்மர கடத்தலில் ஈடுபட்டு கைதான பிரபல நடிகையும், விமான பணிப்பெண்ணுமான சங்கீதா சாட்டர்ஜி கடத்தலில் சம்மந்தப்பட்ட முக்கிய புள்ளிகள் பற்றி பொலிசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கொல்கத்தாவை சேர்ந்தவர் சங்கீதா சாட்டர்ஜி (26) இவர் பல தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும், விமான பணிப்பெண்ணாகவும் பணியாற்றியுள்ளார்.

இவர் தனது கணவர் லட்சுமணன் என்பவருடன் சேர்ந்து ஆந்திரா மாநிலத்தில் செம்மர கடத்தலில் ஈடுபட்டு வந்தார்.

இதனிடையில் கடந்த 2015ல் லட்சுமணனை பொலிசார் கைது செய்தனர். பின்னர் தனியாக கடத்தலில் ஈடுபட்டு வந்த சங்கீதா பொலிசாரிடம் சிக்காமல் தலைமறைவாக வாழ்ந்து வந்தார்.

பின்னர் கடந்த மார்ச் மாதம் அவரை பொலிசார் கொல்கத்தாவில் கைது செய்தனர். தற்போது பொலிஸ் விசாரணையில், தமிழ்நாடு, கர்நாடகா, கொல்கத்தாவில் எனக்கு முக்கியமான ஆட்களைத் தெரியும்.

அவர்களிடம் ஆர்டர் பெற்று சொன்ன இடத்துக்கு செம்மர கட்டைகளை அனுப்பிவைப்போம் என அவர் கூறியுள்ளார்.

இதையடுத்து அவர் சொன்ன தமிழ்நாடு உள்பட மூன்று மாநில முக்கியப் புள்ளிகளை கைது செய்ய பொலிசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

வவுனியாவில் சிங்கள மாணவிக்கு முதன் முறையாக சலங்கை அணிவிக்கும் நிகழ்வு!!

 
வவுனியாவில் முதன்முறையாக சகோதர இனத்தை சேர்ந்த மாணவி ஒருவருக்கு சலங்கை அணிவிக்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.

வவுனியா கந்தசுவாமி கோவிலில் நாட்டிய ஆசான் செந்தூர் செல்வனின் சிதம்பரேஸ்வரன் நடனாலய கலைக்கூட மாணவியான ஹசினி கவந்தியா (வயது 11) என்ற மாணவிக்கு சலங்கை அணிவிக்கப்பட்டுள்ளதுடன் மாணவியின் நடனமும் இடம்பெற்றுள்ளது.

அனுராதபுரம் தம்புத்தேகம பிரதேசத்தை சேர்ந்த ஹசினி கவந்தியா பரதத்தின் மீது கொண்ட அதீத பற்றுக்காரணமாக தனது 11ஆவது வயதில் தன் காலில் சலங்கையிட்டு பரதம் பயின்றுள்ளார். அத்துடன் அம்மாணவியின் பெற்றோர் இதற்கு உறுதுணையாக இருந்துள்ளனர்.

இதேவேளை, வவுனியாவில் சகோதர இனத்தைச் சேர்ந்த மாணவி ஒருவருக்கு முதல் முறையாக சலங்கையிடும் நிகழ்வானது இடம்பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

லண்டனில் சுத்தியலுடன் கைவரிசையை காட்டிய கொள்ளையர்கள் : பயந்து ஓடிய பொதுமக்கள்!!

 
லண்டனில் இருசக்கர வாகனத்தில் கொள்ளையர்கள் அசுர வேகத்தில் வந்து இளம் பெண் ஒருவரின் மொபைல் போனை பிடிங்கிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் லண்டனில் உள்ள Langham வீதியில் கடந்த வியாழக்கிழமை பிறபகல் 2 மணி அளவில் நான்கு பேர் முகமுடி அணிந்து கொண்டு இருசக்கர வாகனத்தில் சுத்தியலுடன் அசுரவேகத்தில் வந்துள்ளனர்.

அதில் இருசக்கர வாகனத்தின் பின்னால் இருந்த நபர் ஒருவர் கையில் சுத்தியலை வைத்துக் கொண்டு, அங்கும் இங்குமாக பொதுமக்களை மிரட்டிய படி சென்றுள்ளார்.

இதனால் அங்கிருந்த பொதுமக்கள் சிலர் அலறி அடித்துக் கொண்டு ஓடியுள்ளனர். அப்போது இளம் பெண் ஒருவரின் ஐபோன்னை பிடிங்கிச் சென்று தப்பியுள்ளனர். தற்போது அந்த கொள்ளையர்களின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

மேலும் இது குறிந்து அங்கிருந்த நபர் ஒருவர்க் கூறுகையில், முதலில் அவர்கள் இருசக்கர வாகனத்தில் அசுர வேகத்தில் வந்ததாகவும், இதைக் கண்டு ஏதோ போட்டி அல்லது விளையாட்டிற்கு இருக்கும் என்றும் எண்ணியதாகவும், அதன் பின் வண்டியின் பின்னர் இருந்த நபர் சுத்தியலை எடுத்த பின்னரே அவர்கள் கொள்ளையர்கள் என்பதை அறிந்ததாக கூறியுள்ளார்.

அவர்கள் அங்கிருந்த மக்களை சுத்தியலை வைத்து மிரட்டிய படி சென்றதாகவும், அங்கிருந்த பெண் ஒருவரின் ஐபோனை பிடிங்கியவுடன் தான் தன்னுடைய போனை பையில் வைத்து மறைத்துவிட்டதாகவும், அதன் பின் அவர்கள் அங்கிருந்து தப்பிவிட்டதாகவும் கூறியுள்ளார்.

இது தொடர்பாக பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் கொள்ளையர்கள் இந்த துணிச்சல் செயலில் ஈடுபட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாற்பது பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!!

சாட் நாட்டின் இராணுவத் முகாம்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் அதற்குப் பதிலடியாக அந்நாட்டு இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் நாற்பது பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

இது குறித்து சாட் நாட்டின் இராணுவத் தரப்பினர் வெளியிட்டுள்ள செய்தியில், அதிகாலையில் பயங்கரவாதிகள் இராணுவ முகாம் மீது நடத்திய தாக்குதலில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். எனினும் இராணுவத்தினரின் அதிரடித் தாக்குதலின் போது, நாற்பது பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

குறிப்பாக, நைஜீரியா, கமரூன், சாட் மற்றும் நைகர் உள்ளிட்ட பகுதிகளால் சூழப்பட்ட சாட் ஏரி போகோ ஹரம்களின் இலக்காகி வருகிறது.

இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு பயங்கரவாதிகள் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் ஐ.எஸ். சார்பிலும் அச்சுறுத்தலை சாட் எதிர்நோக்கி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதேவேளை, கடந்த எட்டு ஆண்டுகளாக நீடிக்கும் பிரச்சினையில் இதுவரை மொத்தம் 20,000 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 26 லட்சத்திற்கும் அதிகமானோர் தங்களது இருப்பிடங்களை இழந்துள்ளனர்.

இதனால் அந்நாட்டில் அமைதியற்ற சூழ்நிலை நிலவிவருகிறது. அடிக்கடி நிகழும் இந்தத் தாக்குதல்களால் மக்களின் இயல்பு வாழ்க்கை தொடர்ந்தும் பாதிக்கப்படுவதாகவும், இதற்க தீர்வினை அரசாங்கம் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் அந்நாட்டு மக்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து சென்ற தமிழ்ப் பெண்ணின் சாதனை!!

 
இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது புலம்பெயர்ந்து சென்றவர்கள் வெளிநாடுகளில் சாதனை படைக்கும் சம்பவங்கள் தொடர்பிலான செய்திகள் அண்மைய காலங்களில் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

அந்த வகையில் இலங்கையில் இருந்து ஒன்பது வயதில் நோர்வே நாட்டிற்கு புகலிடம் கோரிச் சென்ற யுவதி ஒருவரின் சாதனை தொடர்பில் தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன.

ஹம்சிகா பிரேம்குமார் என்ற 23 வயதுடைய இலங்கைப் பெண்ணே இவ்வாறு சாதனை படைத்துள்ளார். குறித்த யுவதி தற்போது மருத்துவ பீடத்தில் கற்று வருகின்றார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நோர்வே ஹோர்லான்டில் ஐ.நா மாணவர்களின் தலைவராகவும் செயற்படுகின்றார்.

பெர்கன் செஞ்சிலுவை அமைப்பு, நோர்வே புற்றுநோய் சமுதாயம், மற்றும் SOS குழந்தைகளின் கிராமங்கள் போன்ற பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களிலும் பணியாற்றி வருகின்றார்.

இந்நிலையில், தனது வாழ்க்கையின் வெற்றிப் பயணம் தொடர்பிலும் தன் அனுபவங்களும் ஹம்சிகா பகிர்ந்துள்ளார்.

“உள்நாட்டு யுத்தம் இடம்பெற்றமையால் உயிருக்கு பயந்து 2002ஆம் ஆண்டு புகலிடம் கோரி நோர்வே சென்றோம்.
இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தால் வாழ்வதற்கே பயமாக இருந்தது. மருத்துவமனையிலோ, பாடசாலைகளிலோ பாதுகாப்பாக இருக்க முடியாது என்ற அச்ச நிலை நிலவியது.

மேலும், ஒன்பது வயதை அடைந்த போது, குடும்பத்துடன் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என நினைத்தேன்” என்றும் ஹம்சிகா கூறியுள்ளார்.

தற்போது நோர்வேயில் வசிக்கும் ஹம்சிகா பிரேம்குமார், அவரது பயணத்தின் அனுபவத்தை பகிர்ந்துக் கொண்டு அனைவரையும் வெற்றிப் பாதைக்கு கொண்டு செல்ல முயற்சித்து வருகின்றார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

எண்களாகவோ, புள்ளியியல் போன்றோ மனிதர்களை பார்க்காமல், மனிதர்களை மனிதர்களாக கருதப்பட வேண்டும் என ஹம்சிகா அனைவருக்கும் நினைவூட்டியுள்ளார்.