திருகோணமலையில் திருமங்களாய் காட்டுப் பகுதியிலுள்ள அழிவடைந்த சிவாலயத்தில் இருந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டுக்களை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
திருகோணமலை மாவட்டத்திற்கு உட்பட்ட கிளிவெட்டிப் பிரதேசத்தில் பிரதான வீதியிலிருந்து சுமார் 8 கிலோமீற்றர் தொலைவில் உள்ள லிங்கபுரம் என்ற காட்டுப்பிரதேசத்தில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.
செறிவான தமிழ்க் குடியிருப்புக்களைக் கொண்ட இப்பிரதேசத்தில் இருந்து 1964 இன் பின்னர் மக்கள் படிப்படியாக வேறு இடங்களுக்கு சென்று குடியேறியதால் ஏறத்தாழ ஏழு மைல் சுற்று வட்டம் தற்போது பெருங்காடாகவே காணப்படுகிறது.
திருகோணமலையில் திருமங்களாய் சிவன் ஆலயத்தில் ,தொல்லியல் பேராசிரியர் ப. புஸ்பரட்ணம் தலைமையிலான ஆய்வுக் குழுவினர் அண்மையில் நடத்திய ஆய்வுகளின் போது இந்த கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சிவனொளிபாத மலை பருவகாலம்நிறைவடையவுள்ளதனால் இரவு நேரங்களில் சிவனொளிபாத மலை உச்சிக்கு யாத்திரிகள் செல்வது தடை செய்யப்பட்டுள்ளதாக சிவனொளிபதமலை தலைமை விகாராதிதி பெங்கமுவே தம்பதெனிய தேரர் தெரிவித்துள்ளார்.
மேலும் எதிர்வரும் 11 ம் திகதி சினொளிபதமலை யாத்திரிக காலம் நிறைவுபெறுவது குறித்து, நல்லத்தண்ணி பௌத்த மத்திய நிலையத்தில், அரச திணைக்கள அதிகரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அன்மைகாலமாக குறித்த பகுதியில் மூவின மக்களின் ஒற்றுமைக்கும் பங்கம் விளைவிக்கும், சமாதானத்தை சீர்குழைக்கும் வகையிலும் வகையில் சில சம்பவங்கள் இடம்பெற்றதையடுத்தே பருவகால நிறைவடைந்தகாலப்பகுதியில் யாத்திரிகளுக்கு மலையேர தடைவித்திக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இருப்பினும் பகல் வேலைகளில் யாத்திரிகள் மலையேரமுடியும் எனவும், அவ்வாறு மலையேருவோர் நல்லத்தண்ணி பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்தல் வழங்கிய பின்னரே மலைக்கு செல்லமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வத்தளை கெரவலபிடிய சமகி மாவத்த பகுதியில் தந்தையின் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பெயரில் தாய் மற்றும் மகள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொலை செய்யப்பட்ட நபரை 10 நாட்களாக காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து, குறித்த முறைப்பாட்டினை விசாரணை செய்ய பொலிஸார் அவர்களின் வீட்டிற்கு சென்றவேளை அவ்வீட்டிலிருந்து சடலமாக காணமல்போன நபர் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவத்தில் 65 வயதுடைய நபரே கொலை செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதோடு, கொலை செய்தமைக்கான காரணம் இன்னும் கண்டயறிப்படவில்லை எனவும் அதுகுறித்து, பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையான காலாண்டு வர்த்தகச் செயல்பாடு விவரங்களை, ஃபேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதில் லாபம் முந்தைய ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 76.6% உயர்ந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதேகாலத்தில் ஒட்டுமொத்த வருமானம் 8.03 பில்லியன் அமெரிக்க டொலர்களாக வளர்ச்சி அடைந்துள்ளது.
மேலும், விளம்பரங்கள் மூலமான வருமானம் 7.86 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்தும் உள்ளது.
இது ஒட்டுமொத்த வருமானத்தில் 85% பங்களிப்பை கொண்டுள்ளதாக, ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.
2017ம் ஆண்டின் முடிவில், விளம்பர வருமானம் 32 பில்லியன் அமெரிக்க டொலர்களாக வளர்ச்சிபெறும் எனவும் மதிப்பீடு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில், உலகம் முழுவதும் ஃபேஸ்புக் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 194 கோடியாக உள்ளது. விரைவில், இது 200 கோடியை எட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில், மையவாத வேட்பாளரான இம்மானுவல் மேக்ரன், பெரும்பான்மையாக வெற்றி பெற்றிருப்பதாக கணிக்கப்பட்ட முடிவுகள் தெரிவிக்கின்றன.
தீவிர வலதுசாரி வேட்பாளர் மெரைன் லெ பென்னை, 39 வயதான மேக்ரன், 65.5 சதத்துக்கு 34.5 சதம் என்ற வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்திருப்பதாக முடிவுகள் காட்டுகின்றன.
கடந்த 1958-ம் ஆண்டு பிரான்ஸின் நவீன குடியரசு ஏற்படுத்தப்பட்டது முதல், இரண்டு பிரதான கட்சிகளைத் தாண்டி, அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படும் முதல் வேட்பாளர் என்ற பெருமையையும் மேக்ரன் பெறுகிறார்.
தனது வெற்றி குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள மேக்ரன், ஃபிரான்ஸ் வரலாற்றில் புதிய அத்தியாயம் ஆரம்பித்து இருப்பதாகவும், இது நம்பிக்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வெற்றி என்றும் தெரிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரண்டாவது சுற்றுத் தேர்தலுக்குப் பிறகு, முடிவுகள் வெளிவர ஆரம்பித்த நிலையில், மேக்ரனின் ஆதரவாளர்கள், வெற்றியைக் கொண்டாட மத்திய பாரிஸ் நகரில் கூடியுள்ளனர்.
வெற்றி உறுதியானதும் தனது எதிர் வேட்பாளர் லெ பென்னைத் தொடர்பு கொண்டு மரியாதை நிமித்தமாக மேக்ரன் பேசியதாக அவரது பிரசார குழுவினர் தெரிவித்தனர்.
தேர்தல் முடிவு குறித்து பேசிய லெ பென் தனக்கு வாக்களித்த 11 மில்லியன் மக்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
இந்த முடிவுகள் தேசப்பற்றாளர்களுக்கும், உலகமயமாக்கலுக்கு ஆதரவானவர்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பிளவை வெளிப்படுத்துவதாகவும், புதிய அரசியல் சக்தி உருவாக வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.
மேக்ரனின் வெற்றி ஃபிரான்ஸ் மக்கள் ஒருமைப்பாட்டை விரும்புவதை வெளிப்படுத்துவதாக தற்போதைய அதிபர் பிரான்சிஸ் ஒல்லாந்த் தெரிவித்தார்.
இம்மானுவல் மேக்ரனுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரிட்டன் பிரதமர் தெரீசா மே உள்பட பல்வேறு உலகத் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
மேக்ரன் யார்?
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை ஃபிரான்ஸ் மக்களுக்கு, இவர் யார் என்றே தெரியாத நிலையில் மேக்ரனின் வெற்றி பிரமிக்கத்தக்கது என்று பாரிஸில் உள்ள அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
தாராளமய கொள்கை கொண்ட மத்தியவாத மற்றும் வர்த்தகத்துக்கு ஆதரவான ஒருங்கிணைந்த ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஆதரவானவர் மேக்ரன். இவரது எதிர் வேட்பாளர் லெ பென், ஐரோப்பிய ஒன்றியத்துக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டவர்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அதிபர் ஃபிரான்சிஸ் ஒல்லாந்தின் அமைச்சரவையிலிருந்து வெளியேறிய மேக்ரன், இடதுசாரி மற்றும் வலதுசாரி அமைப்புக்களுக்கு மாறாக இடைப்பட்ட நிலைப்பாட்டைக் கொண்ட ஓர் இயக்கத்தை ஆரம்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி-2 இந்திய சினிமாவில் இதுவரை நிகழ்த்திய சாதனைகளை எல்லாம் தகர்த்தெறிந்து சென்று கொண்டிருக்கிறது.
இந்த படம் வெளியாகி 9 நாட்கள் ஆகியுள்ள நிலையிலும், திரையிட்ட அனைத்து திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாகவே ஓடிக்கொண்டிருக்கின்றன.
இதனால், இந்த படத்தின் வசூலும் இந்திய சினிமாவில் யாரும் நிகழ்த்த முடியாத சாதனையை சாதனையை பெற்றுள்ளது.
படம் வெளியான 6 நாட்களிலேயே 800 கோடிக்கும் மேல் வசூலித்து இந்திய சினிமாவிலேயே அதிகமான வசூலை பெற்ற படம் என்ற சாதனையை பெற்றது.
இதைத் தொடர்ந்து இந்த படம் விரைவில் 1000 கோடியை எட்டும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. அந்த சாதனையையும் தற்போது பாகுபலி-2 நிகழ்த்தியுள்ளது. 9 நாட்களில் இந்த படம் 1000 கோடியை எட்டியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்திய சினிமாவிலேயே 1000 கோடியை எட்டிய முதல் படம் இதுதான் என்ற பெருமையை பெற்றுள்ளது. இனிமேல், இந்தியாவில் வெளிவரும் படங்கள்கூட இந்த சாதனையை எட்டுமா என்பது சந்தேகம்தான்.
தமது காருக்குப் பின்னால் இருந்தபடி தொடர்ச்சியாக ஒலியெழுப்பிய வாகனச் சாரதியைத் தாக்க முற்பட்ட இருவரை, பலசாலி சாரதியொருவர் அடித்து வீழ்த்திய காட்சி இணையத்தில் பரபரப்பாகப் பகிரப்பட்டு வருகிறது.
இடம் குறிப்பிடப்படாத இந்தக் காட்சியில், வாகனம் ஒன்று, பின்னால் வரும் வாகனங்களுக்கு வழி விடாதபடி வீதியை மறித்து நிற்கிறது. இதனால், அதன் பின்னால் இருந்த வாகனத்தின் சாரதி, தொடர்ச்சியாக ஒலியெழுப்பினார்.
கோபமுற்ற முதல் வாகனத்தின் சாரதி, காரை விட்டிறங்கி பேஸ்போல் மட்டையொன்றை எடுத்துக்கொண்டு சென்று பின்னால் நின்ற காரின் சாரதியை கெட்ட வார்த்தைகளால் திட்டியதுடன், கையில் இருந்த மட்டையால் காரைத் தாக்கவும் செய்தார்.
அதுவரை பொறுத்துக்கொண்ட பின்னின்ற வாகனத்தின் சாரதி, வாகனத்தை விட்டிறங்கி ஒரே குத்தில் முன்னின்ற வாகனச் சாரதியை வீழ்த்தினார். இதைக் கண்டு முதல் காரில் இருந்த மற்றொருவர் இறங்கி வந்து பின்னால் வந்த காரின் சாரதியைத் தாக்கினார். ஆனால், கொஞ்சமும் சளைக்காமல் இரண்டாவது நபரையும் தாக்கி வீழ்த்திவிட்டு தனது காரில் ஏறிச் சென்றார்.
இந்தக் காணொளி, 4 இலட்சம் முறை பார்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு பாலமீன்மடு பகுதியில் இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று முன்தினம் (05.05) மாலை இடம்பெற்றுள்ளது.
முச்சக்கர வண்டி வேக கட்டுப்பாட்டை இழந்து மின்சார தூணில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.
இதில் பயணம் செய்த ஒருவரும் சாரதியும் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஓட்டமாவடியில் இருந்து மட்டக்களப்பு பாலமீன்மடுவில் உள்ள வெளிச்சவீட்டினை பார்வையிடச்சென்றவர்களே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளனர்.
இதேவேளை, விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
இலங்கைக்கு தாங்கள் மீண்டும் திரும்ப வேண்டும் என்று இலங்கையில் இருந்து தமிழகம் சென்று அகதி முகாம்களில் தங்கியுள்ளவர்கள் விண்ணப்பித்திருக்கிறார்கள்.
தமிழகத்தில் , 119 முகாம்களில், 67 ஆயிரம் இலங்கை அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களில் அதிகளவானவர்கள் சொந்த நாட்டிற்கு திரும்ப வேண்டும் என்று விண்ணப்பித்திருப்பதாக தெரிகிறது.
இதேவேளை, தமிழக காவல்த்துறையினரின் அனுமதியுடன் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை நிமிர்த்தமாக வெவ்வேறு இடங்களில் உள்ளனர்.
கடந்த 2009 மே மாதம், உள்நாட்டு போர் முடிவுக்கு வந்ததும், ஒரே சமயத்தில், 5,000 பேர் இலங்கைக்கு சென்றனர். இந்நிலையிலேயே வேலைவாய்ப்பு தற்போது, இலங்கையில் வசிப்பதற்கு ஏற்ற சூழல் நிலவுவதாலும், அதிகளவில் வேலைவாய்ப்பு கிடைப்பதாலும், தங்கள் சொந்த நாட்டிற்கு செல்ல, அகதிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், அண்மைய நாட்களாக இலங்கைக்கு செல்வதற்கு அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருப்பவர்கள் கவனம் ஆர்வம் காட்டிவருவதாக அகதி முகாம் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, 119 முகாம்களில், 67 ஆயிரம் பேர் அகதிகளாக தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விஞ்ஞானி ஐன்ஸ்டீனை விட அதிக புத்திக்கூர்மையுள்ளவராக இந்திய வம்சாவளி சிறுமியை பிரித்தானியா மென்சா சங்க தங்கள் சங்கத்தில் சேரும்படி அழைப்பு விடுத்துள்ளது.
இந்தியாவை சேர்ந்தவர் டாக்டர் சுராஜ்குமார் பவார். இவரது மகளான ராஜ்கவுரி(12) அல்டிரின்சம் பகுதியில் உள்ள இலக்கண பள்ளியில் படித்து வருகிறார்.
இவர் பிரித்தானியா மென்சா நடத்திய ஐக்கியூ தேர்வில் கடந்த மாதம் கலந்து கொண்டார். இந்த தேர்வில் ராஜ்கவுரி 162 மதிப்பெண்கள் பெற்றார். இது சார்பியல் கோட்பாட்டை கண்டுபிடித்த பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஆல்பிரட் ஐன்ஸ்டீன் மற்றும் பிரபல இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கின்சை விட 2 புள்ளிகள் அதிகம்.
இந்த தேர்வில் அதிகபட்ச திறனளவு 140 மதிப்பெண்கள் என நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் ராஜ்கவுரி கூடுதல் புள்ளிகள் பெற்றார்.
இதனால் ராஜ்கவுரியை தங்கள் சங்கத்தில் சேர பிரித்தானியா மென்சா சங்கத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
புழக்கத்திலுள்ளள 5000 ரூபாய் நாணய தாள் இரத்து செய்யப்படுமா என்பது தொடர்பில் அரசியல் மற்றும் நிதி துறை மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நாணயத்தில் சிங்கப்பூர் குடியுரிமை பெற்ற முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் கையொப்பமிட்டுள்ளமையே இந்த நிலைக்கு காரணமாக கூறப்படுகின்றது.
இரட்டைக் குடியுரிமை பெற்றுக் கொண்ட கீதா குமாரசிங்க, அரசியல் அமைப்பின் அடிப்படையில் இலங்கை நாடாளுமன்றில் அங்கம் வகிக்க முடியாது என மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இதனால் இலங்கை குடியுரிமை அல்லாத அர்ஜுன் மகேந்திரன் கையொப்பமிட்ட 5000 ரூபாய் நாணயத்தாள் செல்லுபடியாகுமா என்பது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.
இது தொடர்பில் பந்துல குணவர்தனவிடம் வினவிய போது, 5000 ரூபாய் நாணயத்தாள் செல்லுபடியாகுமா என்பது தொடர்பில் ஆராய்வதற்கு உயர் நீதிமன்றம் செல்ல தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
-தமிழ்வின்-
மூன்றாம் நாடு ஒன்றில் அடைக்கலம் கோருவதற்காக ஹொங்கொங்கில் தங்கியுள்ள இலங்கையர் நாடு கடத்தப்படலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
அமெரிக்க ரகசியங்களை வெளியிட்ட புலனாய்வு அதிகாரியான எட்வேட் ஸ்நோவ்டென்னுக்கு தம்முடன் தங்க இடமளித்த இலங்கையர்களே இவ்வாறு நாடு கடத்தப்படவுள்ளதாக தெரியவருகிறது.
இந்த சம்பவத்தில் இலங்கை அரசாங்கம் பின்னணியில் இருந்து செயற்படுவதாக குறித்த இலங்கையர்களின் சட்டத்தரணிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்
குறித்த அகதிகளில் ஒருவரான இலங்கையின் முன்னாள் இராணுவ வீரர் அஜித் புஸ்பகுமார, இது தொடர்பில் தகவல் அளிக்கையில், எதிர்வரும் திங்கட்கிழழை தமக்கு குடிவரவு திணைக்களத்தின் இறுதி நேர்முக விசாரணை இடம்பெறவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்
இந்தநிலையில் உரிய ஆவணங்களை தாம் சமர்ப்பித்துள்ள போதும் தாம் கைதுசெய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக அவர் அச்சம் வெளியிட்டுள்ளார்
இவருடன் 2010 ஆம் ஆண்டு முதல் தங்கியுள்ள ஏனைய இரண்டு அகதிகளும் அவரின் பிள்ளைகளும் இதேபோன்ற அச்சத்தை வெளியிட்டுள்ளனர்.
இலங்கையில் உயிரச்சுறுத்தல் என்றுக்கூறி சுப்புன் திலின கல்பாத்த அவருடைய மனைவி நதீகா நோனிஸ் மற்றும் ஹொங்கொங்கில் பிறந்த மூன்று பிள்ளைகளே நாடு கடத்தல் நெருக்குடிக்கு முகங்கொடுத்துள்ளனர்.
துபாயில் 101 நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து காலை உணவு உட்கொண்டதன் மூலம் புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.
ஐக்கிய எமிரேட்ஸில் பல்லினத்துவம் மற்றும் சகவாழ்வு குறித்த சாதகமான ெசய்தியை பரப்பும் நோக்குடன், துபாயிலுள்ள சீக்கியர்களின் ஆலயமான குருத்வாராவினால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
101 நாடுகளைச் சேர்ந்த 600 இற்கும் அதிகமானோர் இந்நிகழ்வில் பங்குபற்றினர். ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கான இந்தியத் தூதுவர் நவ்தீக் சிங் சூரி, ஐக்கிய நாடுகளின் பிரதிநிதி போர்ட் மௌரிங் மற்றும் பல நாடுகளின் ராஜதந்திரிகளும் இந்நிகழ்வில் பங்குபற்றினர். இவர்கள் அனைவரும் தரையில் அமர்ந்து உணவு உட்கொண்டனர்.
மிக அதிக எண்ணிக்கையான நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து காலை உணவு உட்கொண்ட நிகழ்வாக இது கின்னஸ் சாதனை நூலில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
கின்னஸ் சாதனை நூல் வெளியீட்டாளர்களின் நடுவர் ஹோடா கச்சாப் இந்நிகழ்வில் கலந்துகொண்டு ஒவ்வொருவரினதும் கடவுச்சீட்டை பரிசோதித்து அவர்களின் நாடுகளை உறுதிப்படுத்திக்கொண்டார்.
இதற்குமுன் 2015 ஆம் ஆண்டு இத்தாலியில் நடைபெற்ற மிலான் எக்ஸ்போ கண்காட்சியின்போது 55 நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து உணவு உட்கொண்டமையே கின்னஸ் சாதனையாக இருந்தது எனவும் துபாய் நிகழ்வு இந்த எண்ணிக்கையை ஏறத்தாழ இரு மடங்காக அதிகரித்துள்ளது எனவும் நடுவர் ஹோடா கச்சாப் அறிவித்தார்.
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற, நியூயோர்க்கின் மெட்ரோபொலிட்டன் ஆடை வடிமைப்புக் கலை நூதனசாலையின் வருடாந்த பெஷன் விழாவில் (Met Gala) மிக நீண்ட வாற்பகுதி கொண்ட ஆடையை பிரியங்கா சோப்ரா அணிந்திருந்தார்.
அமெரிக்காவின் பிரபல பெஷன் டிஷைனர் ரல்வ் லொரேனினால் வடிவமைக்கப்பட்ட இந்த “ட்ரென்ச் கோட்” ரக ஆடையின் 20 அடி நீளமான வாற்பகுதியைக் கொண்டிருந்தது. இந்த ஆடை முறையாக காட்சியளிப்பதை உறுதிப்படுத்துவதற்காக இரு உதவியாளர்கள் பிரியங்காவுக்கு அருகில் இருந்தனர்.
இவ்விழாவில் பிரபலங்கள் பலரும் பொலிதீன், சாக்கு, உலோகங்கள் என பல்வேறு பொருட்களால் உருவாக்கப்பட்ட ஆடைகளை அணிந்திருந்தனர். இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் இந்த ஆடை குறித்து அதிகம் பேசப்பட்டது. விழாவுக்குப் பொருத்தமான வகையில் அவரின் ஆடை அலங்காரம் இருந்தது என பலர் பாராட்டினர்.
அதேவேளை, பலர் இந்த பிரமாண்ட ஆடையை வேறு எதற்கெல்லாம் பயன்படுத்தலாம் என விளக்கி படங்களை உருவாக்கி டுவிட்டரில் வெளியிட்டு பிரியங்கா சோப்ராவை கலாய்த்தனர். ஆனால், இதற்காக பிரியங்கா கோபப்படவில்லை. மாறாக, இந்த கலாய்ப் புகளில் தனக்கு மிகவும் பிடித்தவற்றை சமூக வலைத்தங்களில் வெளியிட்டார் பிரியங்கா சோப்ரா.
34 வயதான பிரியங்கா சோப்ரா நடித்த முதல் ஹொலிவூட் திரைப்படமான பே வோட்ச் இம்மாதம் 25 ஆம் திகதி அமெரிக்காவில் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாகுபலியில் அனுஷ்கா நடித்த தேவசேனா என்ற பெயரில் கார்த்திகா நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பாகுபலியில் தேவசேனா எனும் கதாப்பாத்திரத்தில் நடித்து இலட்சக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துவிட்டார் அனுஷ்கா.
இந்த கதாப்பாத்திரம் அனைவருக்கும் ஒரு பெரிய உத்வேகத்தைக் கொடுத்திருக்கிறது என்றே சொல்லலாம். அந்தளவிற்கு இந்த கதாப்பாத்திரத்தை செதுக்கியிருந்தார் கதாசிரியர் விஜயேந்திர பிரசாத்.
இந்நிலையில், ஹிந்தியில் தொலைக்காட்சி தொடர் ஒன்றிற்கு கதை எழுதி வரும் விஜயேந்திர பிரசாத், அந்த தொடரில் வரும் கதாநாயகிக்கு தேவசேனா என்று பெயர் வைத்திருக்கிறார்.
அந்த கதாப்பாத்திரத்தில் நடிகை ராதாவின் மகள் கார்த்திகா நாயர் நடிக்கவுள்ளார்.
ஆரம்ப் என்ற அந்த தொடர் புராணக்கதையாக உருவாகவிருக்கிறது. இந்த தொடரில் வரும் தேவசேனா கதாப்பாத்திரம் திராவிட பாரம்பரியத்தில் வந்த வீரமங்கை இளவரசியாக உருவாக்கப்பட்டுள்ளதாம்.
‘கோ’, ‘புறம்போக்கு’ என்று சில வெற்றிப்படங்களை மட்டுமே கொடுத்துவிட்டு, வாய்ப்பில்லாமல் இருக்கும் கார்த்திகாவுக்கு இந்த தொடர் கைகொடுக்கும் என நம்பலாம்.