முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு விசேட படுக்கை மெத்தைகள் வழங்கிவைப்பு!!

 
இறுதிப் போரின்போது காயமடைந்து முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டநிலையில் படுக்கையில் இருக்கும் நோயளிகளுக்கு விசேட காற்று நிரப்பும் படுக்கை மெத்தைகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் வழங்கி வைக்கப்பட்டன.

வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் அனுசரணையுடன் சுகாதார மேம்பாட்டு நிறுவனத்தினால் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான நடமாடும் மருத்துவ சேவைபெறும் பயனாளிகளுக்கே இந்த விசேட படுக்கை மெத்தைகள் இன்று (08.05.2017) வழங்கிவைக்கப்பட்டன.

மோட்டிவேசன் லங்கா நிறுவனத்தினால் 10 நோயாளர்களுக்கு இந்த விசேட படுக்கை மெத்தைகள் வழங்கிவைக்கப்பட்டன
.
இந்த நிகழ்வில் மோட்டிவேசன் லங்கா நிறுவனத்தின் வைகறை நிலைய பொறுப்பாளர் முகுந்தன், சுகாதார மேம்பாட்டு நிறுவனத்தின் பொருளாளர் ஜனார்த்தனன் மற்றும் நடமாடும் மருத்துவ சேவை திட்ட அலுவலர்களும் கலந்துகொண்டனர்.

நோயாளிகளின் வீடுகளுக்கு சென்று சிகிச்சையளிக்கும் இந்த திட்டத்திற்கு கனடிய தமிழர் தேசிய அவை எனும் புலம்பெயர் அமைப்பு நிதியுதவி வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

வவுனியாவில் 74வது நாளாக இடம்பெறும் போராட்டம்!!

 
வவுனியாவில் கடந்த 74 நாட்களாக தமதுபோராட்டத்தினை மேற்கொண்டு வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தொடர்ந்தும் சுழற்சி முறையில் இன்று (08.05.2017) 74வது நாளாக தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

கையளிக்கப்பட்ட தமது உறவினர்களை விடுவிக்கக்கோரியும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரியும் அவசரகாலச்சட்டத்தினை நீக்குமாறு கோரி தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

தீர்வு கிடைக்கும் வரை சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் உலக செஞ்சிலுவை தினத்தினை முன்னிட்டு தாகசாந்தி நிகழ்வு!!

 
வவுனியாவில் உலக செஞ்சிலுவையும் செம்பிறையும் தினத்தினை முன்னிட்டு இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் அன்டன் புனிதநாயகம் தலமையில் இன்று (08.05.2017) காலை 8 மணி தொடக்கம் மதியம் 1 மணி வரை சுகாதார சேவைகள் பணிமனைக்கு முன்பாக தாகசாந்தி நிகழ்வு நடைபெற்றது.

இதன் போது இலங்கை செங்சிலுவை சங்கத்திற்கு புதிய உறுப்பினர்கள் பதிவு மேற்கொள்ளப்பட்டதுடன் இரத்த தானத்திற்கான பதிவுகளும் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை செஞ்சி லுவை சங்கத்தின் வவுனியா கிளை உத்தியோகத்தர்கள், தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

வவுனியாவில் கடும் வெப்பநிலை நிலவும் இந் நிலையில் இவர்களின் இச் சேவை சிறப்பானது என பொதுமக்கள் தெரிவித்தனர்.

வவுனியாவில் குளவித்தாக்குதலுக்குள்ளான பொலிசார் வைத்தியசாலையில் அனுமதி!!

வவுனியாவில் நேற்று (07.05) மதியம் 12 மணியளவில் பொலிசார் ஒருவர் குளவித் தாக்குதலுக்கு இலக்கான நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா தோணிக்கல், ஆலடி பகுதியிலுள்ள புகையிரதக்கடவையில் கடமையிலிருந்த பொலிசார் ஒருவர் மதியம் குளவி தாக்கிய நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதியிலிருந்து காற்றிற்கு கலைந்த குளவி கடமையிலிருந்த பி.என்.நிமால் 40 வயதுடைய பொலிசார் மீது கொட்டியுள்ளது.

இதையடுத்து அவரை உடனடியாக வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீரில் எலுமிச்சை சாற்றை அதிகம் கலந்து குடிக்காதீர்கள்!!

எலுமிச்சை பழத்தில் உடலுக்கு தேவையான விட்டமின் C, பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து போன்றவை அதிகமாக உள்ளது.

ஆனால் எலுமிச்சை சாற்றை நீரில் அளவுக்கு அதிகமாக கலந்து குடித்தால், பல்வேறு பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பது உங்களுக்கு தெரியுமா?

எலுமிச்சை சாற்றை நீரில் கலந்து குடிப்பதால் ஏற்படும் பக்கவிளைவுகள்

எலுமிச்சை பழத்தில் உள்ள அதிகப்படியான அமிலம் பற்களில் உள்ள எனாமலை அரித்து, பற்களின் ஆரோக்கியத்தை குறைக்கிறது. எனவே நீரில் எலுமிச்சை சாற்றை அதிகமாக கலந்துக் குடிக்கக் கூடாது.

நீரில் அளவுக்கு அதிகமாக எலுமிச்சை சாற்றினை கலந்து குடித்தால், நெஞ்செரிச்சல், நெஞ்சு வலி பிரச்சனைகள் ஏற்படும். எனவே அமிலம் நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதை தவிர்ப்பது நல்லது.

எலுமிச்சையில் விட்டமின் C மற்றும் அஸ்கார்பிக் ஆசிட் ஏராளமாக உள்ளதால், இது சிறுநீரகத்தில் சிறுநீர் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து, அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனையை ஏற்படுத்துகிறது.

லெமன் ஜூஸ் செய்யும் போது அதிக அளவில் எலுமிச்சை சாறு சேர்க்கப்படுகிறது. எனவே இந்த லெமன் ஜூஸை அதிகமாக குடித்தால், அது உடல் வறட்சியை ஏற்படுத்துகிறது.

குறிப்பு
எலுமிச்சை சாற்றினால் ஏற்படும் பக்கவிளைவுகளை தடுக்க, ஒரு டம்ளர் தண்ணீரில் பாதி பழத்தின் எலுமிச்சை சாற்றினை மட்டும் கலந்து குடிக்கலாம்.

செவ்வாய்க் கிரகத்தில் விவசாயம் செய்யப்போகும் நாசா : ஆச்சரிய தகவல்கள்!!

 
உலகளவில் வளர்ந்து வரும் தொழில்நுட்பம் மூலம் விவசாயம் பல்வேறு கட்ட மாறுதல்களை சந்தித்து வருகிறது. இதன் உச்சகட்டமாக செவ்வாய் கிரகம் அல்லது நிலாவில் விவசாயம் செய்ய நாசா திட்டமிட்டுள்ளது.

அரிஜோனா பல்கலைகழக ஆராய்ச்சியாளர்களும், நாசா விஞ்ஞானிகளும் இணைந்து விவசாய ஆராய்ச்சியில் ஈடுபடப் போகிறார்கள்.

விண்வெளியில் விவசாயம் செய்ய நிச்சயம் சாத்திய கூறுகள் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

செவ்வாயில் மேற்கொள்ளபடும் விவசாயம் மூலம் ஒரு வருடத்துக்கு தேவையான உணவுகளை உற்பத்தி செய்து கொள்ள முடியும்.

ஏற்கனவே பசுமைகுடில் தொழில்நுட்பம் மூலம் விவசாயம் நடைபெறுகிறது. இதை இன்னும் கடினமான உலோகங்கள் கொண்டு மெறுகேற்றி அதை விண்வெளி வீரர்கள் தங்கிருக்கும் அறைகளில் அமைக்க திட்டமிடபட்டுள்ளது.

இந்த முழுமையான வடிவமைப்பும், தொழில்நுட்பமும் பூமியில் விவசாயம் செய்யும் தொழில்நுட்பத்தை போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதாவது, செவ்வாயில் எந்தெந்த தாவரங்கள், விதைகள் தேவை என்பது குறித்து ஆராய்சிகள் நடைபெற்று வருகிறது.

விண்வெளியில், தாவரங்களுக்கு சூரிய ஒளிக்குப் பதிலாக சிறப்பு வாய்ந்த விளக்குகளால் ஒளி கொடுக்கப்படும்.

தற்போது இந்தச் சோதனைகள் பூமியில் நடைபெற்று வருகிறது. ஆனாலும், சர்வதேச விண்வெளி நிலையத்தில் விவசாயத்தில் விளையும் உணவுகளை சாப்பிடும் நடைமுறை சவால்கள் குறித்து பரிசோதனை நடைபெற்று வருகிறது.

கெய்லாக மாறிய சுனில் நரைன் :15 பந்துகளில் அரைசதம் : திணறிய பந்துவீச்சாளர்கள்!!

பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் 46வது லீக் போட்டியில் கொல்கத்தா வீரர் சுனில் நரைன், அதிவேக அரைசதம் அடித்து அசத்தியுள்ளார்.

இரு அணிகளுக்கு இடையேயான 46-வது லீக் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னச் சாமி மைதானத்தில் நடைபெற்றது.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 158 ஓட்டங்கள் எடுத்தது.

இதைத் தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு துவக்க வீரர் சுனில் நரைன், திடீரென்று விஸ்வரூபம் எடுத்து ஆடினார். அதில் அவர் அடித்த ஒரு சில ஷாட்கள் கெய்ல் போன்றே இருந்தது.

இதில் அவர்17 பந்தில் 54 ஓட்டங்கள் எடுத்த போது ஆட்டமிழந்தார். இருப்பினும் ஐபிஎல் வரலாற்றில் அதிவேக அரை சதமடித்த என்ற பெருமையை பெற்றார்.

சுனில் நரைன் 15 பந்தில் இந்த அரைசதத்தை கடந்துள்ளார். இவரைத் தொடர்ந்து யூசப் பதானும் 15 பந்துகளில் அடித்துள்ளார்.

சுரேஷ் ரெய்னா 16 பந்துகளிலும் மற்றும் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் 17 பந்துகளிலும் அடித்துள்ளனர்.

வவுனியா தச்சநாதன்குளம் பண்டாரிகுளம் ஸ்ரீ வலம்புரி விநாயகர் ஆலய வருடாந்த உற்சவம்!!

 
வவுனியா தச்சநாதன்குளம் பண்டாரிகுளம் அருள்மிகு ஸ்ரீ வலம்புரி விநாயகர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ பெருவிழாவும் 10.05.2017 முதல் 19.05.2017 வரை நடைபெறவுள்ளது.

கோவில் மணிக்கோபுர கும்பாபிசேக ம் 10.05.2017 அன்று நடைபெறஉள்ளது. இதில் அனைத்து பக்கதர்களையும் கலந்து சிறப்பிக்குமாறு ஆலய பரிபாலன சபையினர் கேட்டுக்கொள்கின்றனர்.

நடுவானில் விமானத்தில் தூங்கிய விமானி : புகைப்படத்தை வெளியிட்ட பயணி!!

 
பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த பயணிகள் விமானம் ஒன்றில் பயிற்சி விமானியிடம் பணியை ஒப்படைத்து விட்டு முதன்மை விமானி இரண்டு மணி நேரம் தூங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த Pakistan International Airlines விமானத்தில் Amir Akhtar Hashmi என்பவர் விமானியாகவும் Ali Hassan Yazdani துணை விமானியாகவும் பணியாற்றி வருகின்றனர்.

துணை விமானி பயிற்சியில் இருப்பதால் அவரும் விமானிகளின் அறையில் அமர்ந்து விமானத்தை இயக்குவது எப்படி என கவனித்து வந்துள்ளார்.

இந்நிலையில், 304 பயணிகளுடன் சில தினங்களுக்கு முன்னர் இஸ்லாமாபாத்தில் இருந்து லண்டன் நகருக்கு விமானம் புறப்பட்டுள்ளது.

விமானம் நடுவானில் பறந்துக்கொண்டு இருந்தபோது பயிற்சி விமானியிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு விமானி முதல் வகுப்பிற்கு சென்றுள்ளார்.

பின்னர், அங்கிருந்து இருக்கையில் படுத்துக்கொண்ட விமானி சுமார் இரண்டு மணி நேரம் தூங்கியுள்ளார்.

இருக்கையில் படுத்து விமானி தூங்கிக்கொண்டு இருந்தபோது பயிற்சி விமானி தான் விமானத்தை இயக்கியுள்ளார்.

இந்நிலையில், முதன்மை விமானி தூங்கிக்கொண்டு இருந்ததை பயணி ஒருவர் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனை தனது கைப்பேசியில் புகைப்படம் எடுத்த பிறகு விமானப்பணியாளர்களிடம் புகார் அளித்துள்ளார்.

இச்சம்பவத்திற்கு பின்னர், விமானம் பத்திரமாக லண்டனில் தரையிறங்கியது.

இவ்விவகாரம் ஆதாரப்பூர்வமாக தற்போது வெளியாகியுள்ள நிலையில் இச்சம்பவம் குறித்து விரவான விசாரணை நடத்தப்படும் என விமான நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கனவு கண்டதால் மாணவி எடுத்த விபரீத முடிவு!!

தற்கொலை செய்வது போல கனவு தொடர்ந்து வந்தததால் விரக்தியடைந்த பள்ளி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் சென்னை நகரின் தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் வேலு. இவர் மனைவி சரஸ்வதி. இவர்களுக்கு துர்கா (16) என்னும் மகள் உள்ளார். துர்கா அங்குள்ள அரசு பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு படித்து வந்தார்.

துர்காவின் கனவில் அடிக்கடி யாரோ தன்னை கொலை செய்வது போலவும், தானே தற்கொலை செய்து கொள்வது போலவும் காட்சிகள் தோன்றியுள்ளது.

இதில் மன உளைச்சலுக்கு ஆளான அவர் இது குறித்து தனது அம்மாவிடம் கூற, அவர் துர்காவுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தனக்கு வரும் கனவுகள் குறித்து துர்காவுக்கு மன விரக்தி அதிகமாக திடீரென நேற்று முன் தினம் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்துள்ளார்.

பின்னர் வலியால் துடித்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனிளிக்காமல் அவர் உயிரிழந்தார்.

இந்நிலையில், மாணவியின் தற்கொலைக்கு காரணம் கனவின் விரக்தியா அல்லது வேறு எதாவதா என பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கள்ளக்தாதலனோடு சேர்ந்து கணவரை கொன்ற மனைவி : இருவருக்கும் ஆப்பு வைத்த தொலைபேசி!!

பெங்களூருவில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்த மனைவியின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு ஜேசி நகர் பகுதியைச் சேர்ந்தவர் மான் சிங் (57). இவர் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார். அவரது மனைவி சந்திரா பாய் (35). அவரும் கணவர் பணியாற்றும் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

சம்பங்கிராம்நகரைச் சேர்ந்த அசோக் (37) அவர் தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் சந்திரா பணியாற்றும் நிறுவனம் கேட்டுக் கொண்டதன் பேரில் அசோக்கின் நிறுவனத்திற்கு சந்திரா அங்கு சென்று வேலை செய்து வந்துள்ளார். அப்போது சந்திராவுக்கும், அசோக்கிற்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது.

இதனால் அவ்வப்போது தனிமையில் சந்தித்து தங்கள் காதலை வளர்த்து வந்தனர். இந்நிலையில் கடந்த 4-ஆம் தேதி மான் சிங் வேலை காரணமாக பெங்களூரு அருகே உள்ள கிராமத்திற்கு சென்றுள்ளார்.

மான் சிங் இல்லாததை அறிந்த அசோக் அவரின் வீட்டிற்கு சென்று சந்திராவுடன் தனிமையில் இருந்துள்ளார். திடீரென்று இரவு வீடு திரும்பிய மான் சிங் இருவரையும் கையும் களவுமாக பிடித்துள்ளார்.

அப்போது தன் மனைவியான சந்திராவை தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அசோக், மான் சிங் மீது பாய்ந்து அவரை சரமாரியாக தாக்கினார்.

அப்போது மான் சிங்குடன் தான் வாழ விரும்பவில்லை எனவும் அவரை கொன்று விடுமாறு அசோக்கிடம் கூறியுள்ளார். இதனால் அசோக் அருகே இருந்த அங்கிருந்த துணியால் மான் சிங்கின் கழுத்தை நெரித்து கொன்றார்.

பின்னர் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் மான் சிங் மூச்சு முட்ட குடித்துவிட்டு இறந்துவிட்டதாக கூறியுள்ளார்.

ஆனால் சந்திராவின் கள்ளக்காதல் விஷயம் யாருக்கு தெரியவர அவர்கள் உடனடியாக பொலிசாருக்கு தொலைப்பேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளனர்.

அதன் பின்னர் பொலிசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் இருவரும் கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர். சந்திரா மற்றும் அசோக் இருவரையும் பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் ஆலய வீதி குறியீடு மீது விசமிகள் கைவரிசை : மீள செப்பனிட்ட சிறுவர்கள்!!

 
வவுனியா, சிந்தாமணி ஆலய வீதியில் அமைக்கப்பட்டிருந்த இரு வீதி குறியீட்டு சமிக்ஞைகள் விசமிகளால் நேற்று சேதமாக்கப்பட்டுள்ளது.

நேற்று காலையில் இருந்தே குறித்த இரு வீதி குறியீட்டு கம்பங்களும் விசமிகளால் வீதியில் வளைத்து போடப்பட்டிருந்தன.

இதனை அவதானித்த சிறுவர்கள் மற்றும் தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பினர் இணைந்து அதனை மீள நிலை நிறுத்தி வீதிக் குறியீட்டை செப்பனிட்டனர்.

இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள் என்பதற்கு இணங்க இவர்கள் செய்த இந்த செயல் பலருக்கும் முன்மாதிரியாக அமைந்துள்ளது.

வவுனியா பொது வைத்தியசாலையில் புதுவருட கொண்டாட்டங்கள்!!

 
வவுனியா பொது வைத்தியசாலையில் சிங்கள, தமிழ் புது வருடத்தினை முன்னிட்டு விளையாட்டு நிகழ்வுகள் நேற்று(07.05) நடைபெற்றன.

இந்த நிகழ்வுகள் வைத்தியசாலையின் பணிப்பாளர் கு.அகிலேந்திரன் தலைமையில் வைத்தியசாலை வளாகத்தில் இடம்பெற்றன.

புதுவருடத்தினை முன்னிட்டு வருடாந்தம் நடத்தப்படும் கிராமிய பாரம்பரிய கலாசார விளையாட்டுக்களான கயிறு இழுத்தல், சைக்கிள் ஓட்டம், முட்டி உடைத்தல், கபடி மற்றும் ஓட்டப்பந்தய நிகழ்வுகள் நடைபெற்றதுடன் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் வவுனியா வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உலகின் மிகப்பெரிய ஆமை இலங்கையில் கண்டுபிடிப்பு!!

 
உலகில் பதிவாகிய மிகப்பெரிய நட்சத்திர ஆமை இலங்கையின் பிரதான தேசிய பூங்கா ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இதற்கு முன்னர் உலகில் இவ்வளவு பெரிய ஆமை ஒன்று நேரடியாக கண்டுபிடிக்கப்படவில்லை என வனவிலங்கு கால்நடை வைத்திய சங்கத்தின் தலைவர் கால் நடை வைத்தியர் விஜித பெரேரா தெரிவித்துள்ளார்.

கடந்த 30ஆம் திகதி பூங்காவில் கண்காணிப்பில் ஈடுப்பட்டிருந்த காவலர் இந்த ஆமையை அடையாளம் கண்டுள்ளார்.

நேற்று கால்நடை வைத்தியர் விஜித பெரேரா உட்பட ஆய்வாளர்கள் குழுவினால் இந்த ஆமை கண்காணிக்கப்பட்டதன் பின்னர் ஆமையின் நிறை 14 கிலோ கிராம் எனவும், கீழ் பகுதி (carapace ) 45 சென்றி மீற்றர் எனவும், ஆமையின் மேல் ஓடு 22 சென்றீ மீற்றர் எனவும், நீளம் 42 சென்றி மீற்றர் எனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆமைகளுக்குள் நட்சத்திர ஆமை உலக நாடுகளுக்குள் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய மூன்று நாடுகளுக்குள் உள்ளதாகவும், இந்த நட்சத்திர ஆமை உலகின் மிகப்பெரிய ஆமை என அந்த சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆமையின் நிறை மற்றும் அளவு ஆகியவைகளின் தகவல்களின் அடிப்படையில் பார்த்தால், இதற்கு முன்னர் இருந்த மிகப்பெரிய ஆமைகளை விடவும் இந்த ஆமை இரண்டு மடங்கு பெரியதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆமை விசேட விலங்காக கருதப்படுகின்றது. இது தொடர்பில் மேலதிக தகவல்களை ஆராய்ந்து பார்க்க வேண்டும். எனினும் ஆராய்ந்து பார்த்த அளவிற்கு உலக சாதனையாக பதிவாக கூடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வீதி விபத்தில் தெய்வாதீனமாக உயிர் தப்பிய பயணிகள்!!

 
மட்டக்களப்பு திருகோணமலை வீதி தான் டவன் வெளியில் இடம்பெற்ற வாகன விபத்தில் வாகனம் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் அதில் பயணித்தவர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.

நேற்று மாலை இடம் பெற்ற இந்த விபத்தின் போது, கார் முற்றாக சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
லொறியும் காரும் ஒன்றுடன் ஒன்று மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

கம்பளை குழந்தை கடத்தலின் பின்னணியில் பலர் : கைதான உறவினர், இரு பெண்கள் விளக்கமறியலில்!!

கம்­பளை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட கங்க வட்ட வீதி பகு­தியில் தனது பெற்­றோ­ருடன் வசித்து வந்த இரண்­டரை வயது குழந்­தையை கடத்­தி­யமை, சட்டபூர்­வ­மான பாது­காப்­பி­லி­ருந்து குழந்­தையை பிரித்­தமை, தடுத்து வைத்­தமை மற்றும் கப்பம் கோரி­யமை தொடர்பில் கைது செய்­யப்­பட்ட மூவ­ரையும் எதிர்­வரும் 18 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டுள்­ளது.

குழந்­தை­யுடன் மாய­மான பின்னர் கடத்­தலின் பிர­தான சூத்­தி­ர­தாரி எனக் கண்­ட­றி­யப்பட்ட மாமா உறவு முறை இளைஞர் முஹம்மத் அசாம் மற்றும் குழந்­தையை தடுப்பில் வைத்­தி­ருந்த இரு பெண்­க­ளை­யுமே இவ்­வாறு விளக்­க­ம­றி­யலில் வைக்க கம்­பளை மேல­திக நீதிவான் உத்­தர­விட்­டுள்ளார்.

இந்தக் கடத்­தலை, குழந்­தையை இறு­தி­யாக அழைத்துச் சென்ற மாமா முறை இளை­ஞரே நடத்­தி­யுள்­ள­தாக கூறும் பொலிஸார், பிறி­தொரு குழுவும் இத­னுடன் தொடர்­புபட்டுள்­ளதைக் கண்­ட­றிந்­துள்­ள­துடன் அவர்­களைக் கைது செய்ய நட­வ­டிக்­கைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாகவும் பொலிஸ் பேச்­சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரி­யந்த ஜய­கொடி தெரி­வித்தார்.

பொலிஸ் மா அதி­பரின் விசேட உத்­த­ர­வுக்­க­மைய மத்­திய மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜய­சிங்க, கண்டி – மாத்­தளை பிரதிப் பொலிஸ் மா அதிபர் மஹிந்த ஏக்­க­நா­யக்க ஆகி­யோரின் கீழ் அமைக்­கப்­பட்­டுள்ள தனிப் பிரி­வுகள் இரண்டின் கீழ் இந்த விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.

இது தொடர்­பி­லான நட­வ­டிக்­கை­களை வழி நடத்தும் பொறுப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சகர் எம்.என்.எஸ். மெண்­டி­ஸிடம் வழங்­கப்பட்­டுள்­ள­துடன், உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் ஞான­சே­னவின் அறி­வு­றுத்­த­லுக்கு அமைய இவ்­விரு குழுக்­களும் மேல­திக நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­துள்­ளன.

அதன்­படி ஒரு குழு கம்­பளை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி பிரதான பொலிஸ் பரிசோதகர் எஸ். கிரிசாந்தவின் கீழும், மற்றைய குழு கம்பளை பிராந்திய குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரியின் கீழும் அமைக்கப்பட்டுள்ளன.
.