தொண்ணூறு நிமிட தாமதத்துக்கு ஆறு மாத சிறைத்தண்டனை!!

விசா காலம் முடிவடைந்து மேலதிகமாகத் தொண்ணூறு நிமிடங்களை மட்டுமே தங்கியிருந்த அவுஸ்திரேலியப் பிரஜை ஒருவரை அமெரிக்க குடிவரவு அதிகாரிகள் கைது செய்து சிறையிலடைத்தனர்.

பாக்ஸ்டர் ரீட் (26) என்ற அவுஸ்திரேலிய இளைஞர், கடந்த மாதம் தனது அமெரிக்க தோழியுடன் நியூயோர்க் சென்றிருந்தார். அங்கிருந்து கனடாவுக்குச் செல்ல நினைத்த ரீட், அமெரிக்க-கனடிய எல்லைக்குச் சென்றார்.

ரீட்டின் விசா காலம் ஏப்ரல் 23ம் திகதி நள்ளிரவுடன் முடிவுக்கு வரவிருந்தது. கனடிய எல்லைப் பகுதிக்கு அமெரிக்க நேரப்படி இரவு 10 மணிக்குச் சென்றார் ரீட். அவரைக் காத்திருக்குமாறு கூறிய கனடிய குடிவரவு அதிகாரிகள் சிலர், அதிகாலை ஒன்றரை மணியளவில், ரீடுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகத் தெரிவித்ததுடன், ரீடை அமெரிக்க அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

விசா காலம் முடிவடைந்து தொண்ணூறு நிமிடங்கள் கடந்ததைக் காரணம் காட்டிய அமெரிக்க அதிகாரிகள் ரீடை பஃபலோ சிறைச்சாலையில் அடைத்ததுடன், அடுத்த ஆறு மாதங்களின் பின்னரே ரீட் நீதிபதி முன் நிறுத்தப்படுவார் என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்தச் செய்தியை அறிந்த ரீடின் பெற்றோர், தமது மகனை மீட்டுத் தருமாறு அவுஸ்திரேலிய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விற்பனைக்கு வந்த பாகுபலி 2 சேலைகள்!!

 
சமீபத்தில் வெளியான பாகுபலி-2 திரைப்படம் இந்திய அளவில் மட்டுமின்றி புதிய உலக சாதனையையும் படைத்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய 4 மொழிகளில் நேரடியாக இந்த படம் வெளியாகியுள்ளது. கன்னடத்திலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. வெளிநாடுகளிலும் இதே மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.

உலகளவில் தினமும் 9000 காட்சிகளும், இந்தியாவில் மட்டும் தினமும் 6500 காட்சிகளும் திரையிடப்பட்டன. கோடைகால விடுமுறையில் வெளிவந்துள்ள பாகுபலி-2 திரைப்படம் உலக மக்கள் அனைவரும் பேசும் வகையில் மிகப்பிரமாண்டமாக உள்ளது. பிரபாஸ் – ராணா, அனுஷ்கா – ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ்- நாசர் ஆகிய 6 பேரும் ஒருவருக்கொருவர் போட்டி போட்டு நடித்துள்ளனர்.

போர்க்கள காட்சிகள் பிரமாண்டமாக படமாக்கப்பட்டுள்ளது. உணர்வுப்பூர்வ கதையம்சம் கொண்டுள்ள இந்த படம் இந்திய ரசிகர்களை மட்டுமின்றி உலக சினிமா ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. இதனால் இப்போதைக்கு எங்கு பார்த்தாலும் பாகுபலி பற்றிய பேச்சாகவே உள்ளது.

பாகுபலி-2 படம் வெளியான 3 நாட்களில் 540 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் 3 நாட்களில் 415 கோடியும், வெளிநாடுகளில் 3 நாட்களில் 125 கோடியும் வசூலாகியுள்ளது. 1 வாரத்தில் 1000 கோடியை தாண்டி வசூலாகும் என்று எதிர்பார்கக்ப்படுகிறது.

பாகுபலியை கட்டப்பா எதற்காக கொன்றார் என்ற கேள்விக்கு விடை கிடைத்துவிட்டதாக இணையதளங்களில் ரசிகர்கள் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர்.

பாகுபலி படத்தில் பிரபாஸ் – அனுஷ்கா இருவரும் சேர்ந்து வில்-அம்புடன் கூடிய சண்டைக் காட்சியில் கலக்கி இருக்கிறார்கள். வில்லில் இருந்து அம்புவை எய்வதற்கு பிரபாஸ்-அனுஷ்கா இருவரும் தயாராவது போன்ற ஸ்டில் பிரபலம்.
இந்த உருவப்படம் பொறித்த பாகுபலி சேலைகள் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த சேலைகளை வாங்க பெண்கள் மத்தியில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

பல பெண்கள் பாகுபலி சேலை அணிந்து புகைப்படம் எடுத்து அதை பேஸ்புக், வட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் உலவ விட்டுள்ளனர். இதனால் பாகுபலி சேலைகளுக்கு மவுசு அதிகரித்துள்ளது.

100 கோடியிலில் இடம் பிடித்த அமலாபால்!!

அமலாபால், அவரது கணவர் இயக்குனர் விஜய்யை பிரிந்த பிறகு மீண்டும் படங்களில் தீவிரமாக நடித்து வருகிறார்.

சமீபத்தில் கன்னடத்தில் கிருஷ்ணா இயக்கத்தில், கிச்சா சூதிப் நடிப்பில் வெளியான ஹெப்புலி படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

படம் 100 கோடிகளை வசூலித்து 75 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இதன் மூலம் 100 கோடிகளை வசூலித்த படங்களில் நடித்த நடிகைகளின் பட்டியலில் நடிகை அமலாபாலும் இடம் பிடித்துள்ளார்.

தற்போது சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுசுடன் வேலையில்லா பட்டதாரி-2, கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரிப்பில் சுசிகணேசன் இயக்கும் திருட்டு பயலே, முண்டாசுப்பட்டி ராம் இயக்கும் மின்மினி தயாரிப்பாளர் முருகன் தயாரிப்பில் சித்திக் இயக்கத்தில் அரவிந்தசாமி ஜோடியாக நடிக்கும் பாஸ்கர் ஒரு ராஸ்கல் படங்களில் நாயகியாக நடித்து வருகிறார்.

அடுத்து 3 மலையாள படங்களில் நடிக்கிறார். தொடர்ந்து வாய்ப்புகள் தேடி வருகின்றன. தற்போது பிசியாக நடிப்பது குறித்து கூறிய அமலாபால்…

“ஒவ்வொரு படத்திலும் நான் நடிக்கும் கதாபாத்திரம் வித்தியாசமாக உள்ளது. நடிப்பு திறமையை மெருகேற்றும் வாய்ப்பும் கிடைக்கிறது. இது மிகுந்த உற்சாகம் தருகிறது” என்றார்.

வவுனியா மாவட்ட வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகசபைத் தெரிவும்!!

வவுனியா மாவட்ட சிக்கன கடனுதவி கூட்டுறவுச் சங்க சமாசத்தின் 2017ஆம் ஆண்டுக்கான வருடாந்த பொதுச்சபைக்கூட்டம் நடத்தப்படவுள்ளது.

எதிர்வரும் 6ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு சமாசத்தின் தலைவர் நா. சேனாதிராசா தலைமையில் சமாச அலுவலக மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இதன்போது, கடந்த 2015ஆம் ஆண்டுக்கான சமாசத்தின் கணக்காய்வறிக்கை, 2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம், 2016ஆம் ஆண்டு சமாசத்தில் கடனைப் பெற்று சீராக மீளச்செலுத்திய சிறந்த சிக்கன கடனுதவி கூட்டுறவுச்சங்களுக்கு நினைவுப்பரிசில் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கூடுதலான சேமிப்பு வைப்புக்களை மேற்கொண்ட சிக்கன கடனுதவி கூட்டுறவுச் சங்கங்களை கௌரவிப்பது மட்டும் இன்றி புதிய இயக்குனர் சபை தெரிவு என்பனவும் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்திற்கு பிரதமவிருந்தினராக வவுனியா மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் வி. கே. இராவீந்திரநாதன், கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் க. சிறிகரன், கணக்காய்வாளர் எஸ். சிவாகரன், மற்றும் கூட்டுறவுச்சங்க பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

வவுனியாவில் போராட்டம் மேற்கொள்ளும் உறவுகளுக்கு ஆதரவாக மன்னார் பொது அமைப்புக்கள்!!

 
வவுனியாவில் கடந்த 69 நாட்களாக காணாமற்போன உறவுகளினால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டத்திற்கு இன்று (03.05.2017) மாலை 3 மணியளவில் போராட்ட இடத்திற்குச் சென்ற மன்னார் மாவட்ட காணாமற்போன உறவுகளின் சங்கம், மன்னார் மாவட்ட பெண்கள் சமாசம், மன்னார் மாவட்ட மகளிர் அமைப்புக்களின் உறுப்பினர்கள் ஒன்றிணைந்து தமது ஆதரவினை வழங்கியிருந்தனர்.

வவுனியாவில் போராட்டம் மேற்கொண்டு வரும் உறவுகள் படையினரிடம் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை விடுதலை செய்யக்கோரியும், அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்யக்கோரியும், அவசரகாலச்சட்டத்தினை இரத்துச் செயக்கோரியும் சுழற்சி முறையில் தமது உணவு தவிர்ப்புப் போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா புதுக்குளம் பாடசாலை அதிபரைப்பற்றி வெளியான செய்திக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்!!

 
வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயத்தின் பாடசாலை ஆசிரியர்களுக்கும் அதிபருக்கும் அவதூறு ஏற்படுத்துமுகமாக இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டிருப்பதாக கூறி இன்று (03.05.2017) காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது.

புதுக்குளம் மகாவித்தியாலயத்தின் மாணவர்களின் பெற்றோர்களால் ஏற்பாடுசெய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பாடசாலை சமூகத்தைச் சேர்ந்த பலர் பங்கேற்றிருந்ததுடன் பாடசாலையின் முன்னால் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக சுமார் 1 மணிநேரம் வீதி போக்குவரத்தும் பாதிப்படைந்தது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் கிராம மாணவர்களின் கல்வியை அழிக்காதே, எங்கள் பாடசாலை சிறந்த பாடசாலை என நிரூபிக்க வேண்டுமா உனக்கு, வன்னி என்ற சொல்லின் பெருமை தெரியுமா உனக்கு, வன்னி மக்களிடம் பரிதாபப்பட நீ யார் போன்ற பதாதைகளை தாங்கி நின்றனர்.

ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்திற்கு வருகை தந்திருந்த வடமாகாண சுகாதார அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் ப.சத்தியசீலன் நிலைமைகளை கேட்டறிந்து கொண்டார்.

வவுனியாவில் 69ஆவது நாளாகவும் தொடரும் போராட்டம்!!

 
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வெளிப்படுத்தலை வலியுறுத்தி அவர்களது உறவினர்கள் மேற்கொண்டு வரும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் 69ஆவது நாளாவும் இன்று(03.05.2017) தொடர்கிறது.

குறித்த போராட்டம் கையளிக்கப்பட்ட தமது உறவினர்களை விடுவிக்கக்கோரியும், அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரியும் மற்றும் அவசரகாலச் சட்டத்தினை நீக்குமாறு கோரியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இன்றுடன் 69ஆவது நாளாகவும் வீதியோரத்தில் இருக்கின்றோம். இதுவரை அரசாங்கம் எந்த ஒரு பதிலையும் தராது கண்டுகொள்ளாதது போல் இருப்பது ஏன் என காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதேவேளை இந்த போராட்டம் தீர்வு கிடைக்கும் வரை தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

கோஹ்லியின் காதலி அனுஷ்கா சர்மாவுக்கு போன் செய்த ஆப்கான் இளம் வீரர்!!

இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் வீராட் கோஹ்லியின் காதலியான பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவிற்கு ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் ஆப்கான் வீரர் போன் பண்ணி வாழ்த்து கூறியுள்ளார்.

பாலிவுட் நடிகையான அனுஷ்கா சர்மா தனது 29வது பிறந்த மே 1ம் திகதி கொண்டாடினார். இந்நிலையில், அனுஷ்கா பிறந்தநாளில் காலையிலேயே போன்செய்த ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷித் கான் வாழ்த்துச்சொல்லியுள்ளார்.

எனக்கு எப்போதும் பிடித்த ஒரே நடிகை நீங்கள் தான், உங்களை நேரில் பார்க்கணும் என்று கோரி அசத்தியுள்ளார்.

19 வயதான ரஷித் கான் தற்போது ஐதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வங்கதேச பந்து வீச்சாளர்களுக்கு 10 ஆண்டு தடை : காரணம் என்ன தெரியுமா?

டாக்கா 2வது டிவிசன் லீக் கிரிக்கெட்டில், 4 பந்தில் மொத்தம் 92 ஓட்டங்களை வாரி வழங்கிய பந்து வீச்சாளருக்கு பத்து ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வங்காளதேசத்தில் சமீபத்தில் நடந்த உள்ளூர் போட்டியான டாக்கா 2-வது டிவிசன் லீக் கிரிக்கெட்டில், பந்து வீச்சாளர் வேண்டுமென்றே ஓட்டங்களை வாரி வழங்கிய சம்பவம் பலத்த சர்ச்சையை கிளப்பியது.

ஆக்சியம் கிரிக்கெட்டர்ஸ் கிளப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் லால்மதியா கிளப் பந்து வீச்சாளர் சுஜோன் முகமது 4 பந்தில் மொத்தம் 92 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார். இதில் 15 நோ-பால்களையும், 13 வைடுகளையும் அவர் வீசியதும் அடங்கும். இவை அனைத்தும் பவுண்டரிக்கும் ஓடியது.

விக்கெட் தடுப்பாளர் எந்த பந்தையும் பிடிக்கவில்லை. நடுவரின் ஒருதலைபட்சமான தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இவ்வாறு நடந்து கொண்டது தெரிய வந்தது.

இதே போல் நடுவருக்கு தங்களது எதிர்ப்பை காட்டும் விதமாக பியர் பைட்டர்ஸ் ஸ்போர்ட்டிங் கிளப் பந்துவீச்சாளர் தஸ்னிம் ஹசன் ஒரு ஆட்டத்தில் உதிரிகளை அள்ளி தெளித்ததோடு, 7 பந்தில் 69 ஓட்டங்களை வாரி வழங்கினார்.

இது குறித்து விசாரணை மேற்கொண்ட வங்காளதேச கிரிக்கெட் வாரியம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி பந்து வீச்சாளர்கள் சுஜோன் முகமது, தஸ்னிம் ஹசன் ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகளும், அவர்களது அணித்தலைவர்கள், பயிற்சியாளர், மேலாளர்களுக்கு தலா 5 ஆண்டுகளும் தடை விதிக்க முடிவு செய்தனர்.

மேலும் இவ்விரு கிளப்புகளுக்கும் உள்ளூர் போட்டிகளில் பங்கேற்க காலவரையின்றி தடையும் விதிக்கப்பட்டு இருக்கிறது. அணி நிர்வாகம் உத்தரவு இன்றி குறித்த பந்து வீச்சாளர் இவ்வாறு செய்திருக்க வாய்ப்பில்லை என்பதால் அணிகள் மீதும் நடவடிக்கை பாய்ந்திருப்பதாக வங்காளதேச கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.

கர்ப்பம் எனத்தெரியாமல் வாழ்ந்த பெண் : ஷொப்பிங் சென்றபோது நிகழ்ந்த அதிசயம்!!

கனடாவில் கர்ப்பம் எனத்தெரியாமல் வாழ்ந்து வந்த பெண் ஒருவர் ஷொப்பிங் சென்றபோது திடீரென பிரசவம் நிகழ்ந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நோவா ஸ்கோசியா மாகாணத்தில் உள்ள ஹேலிபேக்ஸ் நகரில் தான் இந்த அதிசய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதே நகரில் வசித்து வந்த Ashleigh Miller Cross என்ற பெண் கடந்த வெள்ளிக்கிழமை அன்று சூப்பர் மார்க்கெட் ஒன்றிற்கு சென்றுள்ளார். அப்போது, திடீரென உடலில் மாற்றம் ஏற்பட அங்குள்ள ஊழியர்களை உதவிக்கு அழைத்துள்ளார். பின்னர், குளியலறைக்கு கொண்டு சென்ற பிறகு அப்பெண்ணிற்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

பொருட்கள் வாங்க சென்றுவிட்டு குழந்தையுடன் வீடு திரும்பியவரை கண்டு குடும்ப உறுப்பினர்கள் வியப்படைந்துள்ளனர். சூப்பர் மார்க்கெட்டில் நிகழ்ந்தவற்றை தாயார் கூறிய பிறகு அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுக் குறித்து தாயார் பேசுகையில், ‘பத்து மாதங்களுக்கு முன்னர் எனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. முதல் பிரசவத்திற்கு பிறகு எனது உடல் எடையில் எவ்வித மாற்றம் ஏற்படவில்லை. வயிறு குண்டாகவே இருந்துள்ளது. இதனால் கர்ப்பம் தரித்ததை நான் உணரவே இல்லை.

இதுமட்டுமில்லாமல், வயிற்றில் குழந்தை இருப்பதற்கான அறிகுறிகளும் எனக்கு ஏற்படவில்லை.

ஷொப்பிங் சென்றபோது திடீரென பிரசவம் நிகழ்ந்துள்ளது மிகவும் வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது என தாயார் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளார்.

அணு ஆயுதங்களை உலகம் முழுவதும் அனுப்பும் வட கொரியா : எந்நேரத்திலும் வெடிக்கலாம்!!

பயங்கரமான அணு ஆயுதங்களை உலகின் பல்வேறு நாடுகளுக்கு வட கொரியா கப்பலில் அனுப்புவதாக திடுக்கிடும் செய்திகள் வெளியாகியுள்ளது.

உலகில் நடக்கும் பல்வேறு விடயங்களை பற்றி ஆராய்ச்சி செய்யும் அவுஸ்ரேலியாவின் think-tank நிறுவனம் வெளியிட்டுள்ள முக்கிய செய்தி குறிப்பில், வட கொரியா அணு ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகளை கப்பலில் கடத்துகிறது.

அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை தொழில்நுட்பத்தை சார்ந்தே வட கொரியாவுக்கு அமெரிக்காவை தாக்கும் திறன் உள்ளதா என மதிப்பிட முடியும்.

தங்களால் இது முடியும் என காட்ட தான் வட கொரியா சீனா வழியாக மீன் பிடி கப்பல் மற்றும் நீர் மூழ்கி கப்பல் மூலம் அணு ஆயுதங்களை கடத்தி உலக நாடுகளுக்கு எடுத்து செல்வதாக அதில் கூறப்பட்டுள்ளது.

கப்பலின் கண்டெயினர்களில் அணு ஆயுதங்கள் கடத்தபடுவதாகவும், கப்பல் அதிகாரிகளுக்கு லஞ்சம் தரப்படுவதால் அதை அவர்கள் அனுமதிக்கிறார்கள்.

வட கொரியாவிலிருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு அணு ஆயுதங்களை கடத்தி சென்று அதை அங்கு வெடிக்க செய்வதாக பயமுறுத்தினால், தங்களை தாக்க நினைக்கும் அமெரிக்கா அதிலிருந்து பின் வாங்கும் என வட கொரியா நினைக்கிறது.

உலகம் முழுவதும் 17 மில்லியன் கண்டெய்னர்கள் கப்பல்களில் உலா வருவதால் அணு ஆயுதங்கள் உள்ள கண்டெய்னர்களை கண்டுபிடிப்பது கடினம் என்பதை உணர்ந்தே வட கொரியா இதை செய்வதாக think-tank அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.

வட கொரியாவை குறைத்து மதிப்பிட்டால் மிக பெரிய உயிர் இழப்புகளும், பொருளாதார இழப்புகளையும் உலகம் சந்திக்ககூடும் எனவும் think-tank எச்சரித்துள்ளது.

ஊழியரின் உடலுக்குள் இருந்து 75 ஊசிகள் : அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள்!!

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ரயில்வே ஊழியரின் உடலுக்குள் 70 ஊசிகள் இருந்ததை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பத்ரிலால் (56) என்பவர் ரயில்வே ஊழியராக பணியாற்றிவருகிறார். இவருக்கு சமீபத்தில் கால் பாதத்தில் வலி ஏற்பட்டதையடுத்து, மருத்துவரிடம் சென்று பரிசோதித்ததில் இவரது காலுக்குள் ஊசி புகுந்திருப்பதை கண்டறிந்த மருத்துவர்கள் அதனை அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர்.

இந்நிலையில்,இவருக்கு மீண்டும் கழுத்தில் வலி ஏற்பட்டுள்ளது. அப்போது எக்ஸ்ரே எடுத்து பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இவரது தொண்டை முழுவதும் ஊசிகள் தொங்கி கொண்டிருந்துள்ளன.

மொத்தம் 75 ஊசிகள். கழுத்தில் மட்டும் 40 ஊசிகள் இருந்துள்ளன. ஆனால் ஊசிகள் அனைத்தும் உடலின் உள் உறுப்புகளை ஒன்றுமே செய்ய இயலவில்லை. அறுவை சிசிச்சை செய்தால் மட்டுமே இந்த ஊசிகளை அகற்ற இயலும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், இவருக்கு நீரிழிவு நோய் இருக்கிறது என்றும் ஏற்கனவே உடல்நலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் இது ஆபத்தில் முடிய வாய்ப்பிருக்கிறது என்று பத்ரிலாலின் மகன் கூறியுள்ளார்.

மேலும், இதுகுறித்து மருத்துவரிடம் ஆலோசித்து வருகிறோம் எனவும் தெரிவித்துள்ளார். ஆனால் தனது உடலில் எவ்வாறு ஊசி சென்றது என்பது குறித்து தனக்கு தெரியாது என பத்ரிலால் கூறியுள்ளார்.

பேஸ்புக்கால் வாழ்க்கையை தொலைத்த சிறுமி!!

முகநூலை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தியதால் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி இரண்டு நபர்களில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூரை சேர்ந்த சங்கீதா என்ற 13 வயது சிறுமி 8 ஆம் வகுப்பு படிக்கிறார். இவர் தனது தந்தையின் கைப்பேசியினை அதிகமாக பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அப்போது, முகநூலின் வாயிலாக இப்ராஹிம் என்ற 21 வயது ஆணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இப்ராஹிம்மின் காதல் வசனங்களால் மயங்கிய சங்கீதா அவருடன் தொடர்ந்து பழக்கத்தில் இருந்து வந்துள்ளார்.

ஒருமுறை இப்ராஹிம், சங்கீதாவின் வீட்டுக்கு சென்று அவரை பார்த்து பேசியுள்ளார். இதனை அறிந்த சங்கீதாவின் தாயார், இவர்கள் இருவரையும் கண்டித்துள்ளார்.

இந்நிலையில், வீட்டில் இருந்த 5000 ரூபாயை எடுத்துக்கொண்டு இப்ராஹிம்முடன் சங்கீதா ஓடியுள்ளார். காரைக்காலில் லாட்ஜ் எடுத்து தங்கிய இவர்கள், ஒன்றாக பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளனர்.

மேலும், இப்ராஹிம், சங்கீதாவை பலாத்காரம் செய்துள்ளார். இதற்கிடையில் லாட்ஜில் வைத்து இவர்கள் இருவருக்கும் சண்டை ஏற்பட்டதையடுத்து, இப்ராஹிம்டன் செல்வதற்கு சங்கீதா மறுத்துள்ளார்.

இதனை கவனித்த லாட்ஜ் உரிமையாளர் பிரபாகரன், நான் உன்னை திருப்பூருக்கு அழைத்து செல்கிறேன் எனக்கூறி இரண்டு நாட்கள் சங்கீதாவுக்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் வாங்கி கொடுத்துள்ளார்.

இவரும் சங்கீதாவை பலாத்காரம் செய்துள்ளார். ஒரு கட்டத்தில் இதற்கு சங்கீதா எதிர்ப்பு தெரிவிக்கவே, அச்சிறுமியை காரைக்கால் பேருந்து நிலையத்தில் கொண்டுபோய் விட்டுள்ளார்.

இதற்கிடையில், தங்கள் மகளை காணவில்லை என சங்கீதாவின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் பொலிசார் சங்கீதாவை மீட்டுள்ளனர்.

மேலும், இப்ராஹிம் மற்றும் லொட்ஜ் உரிமையாளர் பிரபாகரன் ஆகிய இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்படவுள்ள ஆபத்து!!

கட்டுநாயக்க விமான நிலையத்தின் இரண்டாவது பிரதான தீர்வை வரியற்ற கடைகளுக்கான கேள்விப் பத்திரம் கோரப்பட்டுள்ளது.

இதற்காக இரண்டு நிறுவனங்கள் பெறுமதியான விலைக்கோரலை சமர்ப்பித்துள்ளதாக அனைத்து நிறுவன ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இப்படியொரு ஏல பெறுமதிக்காக விலைக்கோரல் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமையினால் சில நெருக்கடிகள் காணப்படுவதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த 26ஆம் திகதி நிறைவடைந்த கேள்விபத்திர அழைப்பிற்கு 5 நிறுவனங்கள் இணங்கியுள்ளன. இருந்த போதிலும் இரண்டு நிறுவனங்கள் மாத்திரமே தங்கள் விலைக்கோரலை சமர்ப்பித்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தற்போது இடம்பெற்றுக் கொண்டிருப்பது சில சூழ்ச்சிகளின் முடிவாக இது இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பில் அதிகாரிகள் கவனம் செலுத்தவில்லை என்றால் எதிர்வரும் காலங்களில் அந்த நிறுவனங்களின் கிட்டத்தட்ட 300 ஊழியர்கள் தமது தொழில்களை இழக்கும் அபாயம் உள்ளதாக சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

ஒரு கர்ப்பிணி உட்பட இரண்டு பெண்கள் வெட்டிக்கொலை!!

ஹம்பாந்தோட்டை – ஹூங்கம, குருபொக்குன பிரதேசத்தில் இரண்டு பெண்கள் கூரிய ஆயுதங்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் அவசர அழைப்பு இலக்கத்திற்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய இந்த கொலைகள் தொடர்பான தகவல்களை இன்று மதியம் கண்டறிந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

72 வயதான வயோதிப பெண்ணும் கர்ப்பிணியான 32 வயதான அவரது மகளும் இவ்வாறு வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.

பெண்கள் கொலை செய்யப்பட்டிருந்த வீட்டில் உள்ள அலுமாரிகள் அனைத்து கிளறப்பட்டு காணப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

கொலை செய்யப்பட்ட வயோதிப பெண் சூரியவெவ பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் காரியவசம் என்பவரின் தாய் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கொலை செய்யப்பட்ட கர்ப்பிணி பெண்ணின் கணவர் ஹம்பாந்தோட்டை தொழிற்நுட்ப கல்லூரிக்கு பாடநெறிக்காக சென்றிருந்தார். அவர் வீடு திரும்பிய போது வீட்டின் முன்பக்க வாசல் கதவு திறந்து காணப்பட்டுள்ளது.

வீட்டுக்குள் சென்று பார்த்த போது மனைவியும், மாமியாரும் கொலை செய்யப்பட்டு கிடந்ததாக கர்ப்பிணி பெண்ணின் கணவரான ஜயசிங்க கோரளே ஆராச்சிகே சம்பத் என்பவர் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

இணையத்தில் அதிகம் பயன்படும் மொழி தமிழ்!!

இணையத்தில் இந்திய மொழிகளின் பயன்பாடு மற்றும் வளர்ச்சி குறித்து கருத்துக்கணிப்பு ஒன்று எடுக்கப்பட்டது.

இதை கூகுள் நிறுவனமும் சர்வதேச அளவில் முதன்மை புள்ளியல் நிறுவனமான ‘கே.பி.எம்.ஜி’யும் இணைந்து நடத்தியது.

இந்த ஆய்வின் முடிவில் பல்வேறு டேட்டாக்கள் கிடைத்துள்ளன. அதில் உலக அளவில் அதிகம் பயன்படுத்தப்படும் இந்திய மொழிகளில் தமிழ் முதல் மொழியாக இருக்கிறது.

அந்த ஆய்வு குறித்த இன்போகிராபிக்ஸ்.