குறுகிய காலத்தில் இமாலய சாதனை படைத்தது இன்ஸ்டகிராம்!!

பல்வேறு சமூக வலைத்தளங்கள் இன்று இணைய உலகை ஆக்கிரமித்து நிற்கின்றன. இவற்றுள் முன்னணி வலைத்தளங்களுள் ஒன்றாக இன்ஸ்டாகிராமும் காணப்படுகின்றது.

உலக அளவில் பல மில்லியன் கணக்கான பயனர்களை கொண்டுள்ள இத் தளமானது புகைப்படங்கள் மற்றும் சிறிய அளவிலான வீடியோ கோப்புக்களை பகிர்ந்து மகிழும் சேவையை தருகின்றது.

இந்நிலையில் தற்போது சுமார் 700 மில்லியன் பயனர்களை தன்னகத்தே கொண்டு புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளது.

இதன் காரணமாக பில்லியன் வரையான பயனர்களை தன்னகத்தே கொண்ட இரண்டாவது சமூகவலைத்தளம் என்ற பெயரை விரைவில் எட்டவுள்ளது.

முதலாவது இடத்தில் பேஸ்புக் காணப்படுவதுடன், ஒரு பில்லியனையும் தாண்டி இரண்டு பில்லியன் பயனர்களை நெருங்கிச் செல்கின்றது.

வவுனியா செட்டிகுளம் ம.வி மாணவர்களை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுத்த பெற்றோர் கண்டனம்!!

வவுனியா செட்டிக்குளம் மகா வித்தியாலயம் தற்போது எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பாக பெற்றோர்கள், பழைய மாணவர்கள் , நலன் விரும்பிகள் ஒன்றினைந்து கடந்த 28.04.2017 அன்று காலை 10 மணியளவில் ஒன்றுகூடல் ஒன்று இடம்பெற்றது.

இவ் போது கூட்டத்தின் போது பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டதுடன் பாடசாலை மாணவர்களை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுத்த பெற்றோர் தமது கண்டனத்தை தெரிவித்தனர்.

இதில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு..

உங்கள் வாழ்க்கையை அழகாக மாற்றும் 10 விடயங்கள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்!!

அன்றாட வாழ்க்கையில் பல பிரச்சனைகள் இருந்தாலும் உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமானதாக இருக்கிறது.அதிலும் உடல் அழகை மேம்படுத்த பலரும் பல வழிகளில் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர்.

வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை ஏற்படுத்தும் போது இந்த அழகான விடயம் நம்மிடம் எளிதில் வந்துவிடுகிறது. கடைபிடிக்க வேண்டிய 10 வழிமுறைகள்:-

1. நீங்கள் மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டு பார்க்காதீர்கள். ஒவ்வொருவரும் தனித்தன்மை வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள். இவற்றை மாற்றிக் கொள்ளுங்கள். இவை உங்களை அழகாக காட்டும்.

2. பழக்கவழக்கங்களை மாற்றிக் கொள்ளுங்கள். மற்றவர்களுடன் அன்பாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள். இந்த அன்பான பழக்கவழக்கம் உங்கள் முகத்தை அழகாக காட்டும்.

3. வாய்விட்டு சிரியுங்கள். இதன் மூலம் உங்களை சுற்றி வசீகர அலை பரவும். உங்களின் சிரித்த முகம் பலரையும் சுண்டி இழுக்கும். இதனால் நீங்கள் மற்றவர்களுக்கு அழகாக தெரிவீர்கள்.

4. உடலில் கவனத்தை செலுத்துங்கள். உடலை கட்டுக்கோப்பாக ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள். இதனால் உற்சாகமாக இருக்கமுடியும். சோர்வில்லாமல் உற்சாகமாக இருக்கும் உங்களை பலருக்கும் பிடிக்கும்.

5. திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்களது திறமை உங்களை தனித்து காட்டும். முகம் அழகானவர்களை விட திறமையால் அழகாக தெரியும் பலரையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

6. பிறரை குறை கூறும் பழக்கத்தை விட்டு விடுங்கள். சிறிய விடயங்களையும் பாராட்ட கற்றுக் கொள்ளுங்கள். பாராட்டி பேசும் உள்ளத்தை பலருக்கும் பிடிக்கும்.

7. உன்னால் முடியும் என்று நம்பிக்கை ஊட்டும் சொற்களை மற்றவர்களுக்கு கூறுங்கள். அதே சமயம் உன்னால் முடியாது என்று கூறுபவர்களை கண்டு கொள்ளாதீர்கள். நம்பிக்கை எண்ணமே உங்களை தனித்தன்மையுடன் காட்டும்.

8. உங்களுக்கு உங்களையே பிடிக்காமல் இருக்கலாம். முதலில் அதை விட்டுவிடுங்கள். நிறம், உயரம் ஆகியவற்றை பற்றி கவலைப்படுவதை விட்டு விட்டு உங்களை நீங்களே நேசியுங்கள். இது உங்களை அழகாக காட்டும்.

9. உங்களுக்குள்ளே ஒரு குரல் இது முடியாது என்று அவநம்பிக்கையை ஏற்படுத்தும். உங்களை முடங்கிப் போகச் செய்யும். அதனால் நம்பிக்கையுடன் செயல்படுங்கள்.

10. உங்களை அழகுப்படுத்திக் கொள்ளுங்கள். நடை, உடை போன்றவற்றில் கவனமாக இருத்தல், பாதங்களை சீராக வைத்துக் கொள்ளுதல், நறுமணம் வீசும் பொருட்களை பயன்படுத்துதல் போன்றவற்றில் முன்னேற்றத்தை ஏற்படுத்துக் கொள்ளுங்கள்.

பேய் பிடித்துள்ளது என மகனை 30 வருடங்களாக இருட்டு சிறையில் அடைத்து வைத்த பெற்றோர்!!

சீனாவில் தங்கள் மகன் உடலில் பேய் பிடித்திருப்பதாக கூறி 30 வருடங்கள் அவரை சிறையில் அடைத்து வைத்திருந்த பெற்றோரின் செயல் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

சீனாவில் வசித்து வருபவர் Li Lianying. இவரின் மகனுக்கு தற்போது 39 வயதாகிறது. கடந்த முப்பது வருடங்களாக தன் மகனை Lianying தன் கணவருடன் சேர்த்து வீட்டின் இருட்டு சிறையில் அடைத்து வைத்துள்ளனர்.

அவர் உடலில் பேய் புகுந்துள்ளதால் இப்படி செய்தவாக அவர் பெற்றோர் கூறியுள்ளனர்.

இது குறித்து Lianying கூறுகையில், என் மகனுக்கு ஆறு வயதாக இருக்கும் போது ஒரு நாள் அவன் காணாமல் போய் விட்டான்.பின்னர் கிராம மக்கள் அவனை தேடி கண்டுபிடித்து அவன் உடலில் பேய் புகுந்துள்ளதாக கூறி பேய் ஓட்டினார்கள்.

அதன் பின்னர் அவன் எங்களிடம் வித்தியாசமாகவும், மூர்கதனமாகவும் நடந்து கொண்டான். இதையடுத்து அவன் உடலில் பேய் இருப்பதை உறுதி செய்த நாங்கள் அவனை கடந்த 30 வருடங்களாக சிறையில் அடைத்துள்ளோம் என கூறியுள்ளார்.

இதனிடையில், சிறையில் உள்ள நபரை வீடியோ எடுத்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து மருத்துவமனைக்கு தகவல் கொடுத்துள்ளார்.இதனால் தற்போது சிறையிலிருந்து மீட்கபட்டுள்ள அந்த நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவருக்கு ஊட்டசத்து குறைபாடு அதிகம் இருப்பதாகவும், அவரால் பேச முடியவில்லை எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். இந்த செயலில் ஈடுபட்ட Lianyingம் அவர் கணவரும் கைது செய்யபடுவார்களா என்ற விவரம் தெரியவில்லை.

பிரியாணியில் இருந்து அதிக வாசனை வருகிறது என அபராதம் விதித்த லண்டன் நீதிமன்றம்!!

லண்டனில் உள்ள உணவகம் ஒன்றில் இருந்து வெளிவந்த பிரியாணி வாசனையால் உணவக உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியர்களான சபானா முகமது குஷி தம்பதியினர் லண்டனில் உள்ள Linthorpe என்ற கிராமத்தில் உணவகம் ஒன்றை நடத்தி வந்துள்ளனர்.

அந்த உணவகத்தில், இந்திய உணவுகளான பிரியாணி, பஞ்சி, பஞ்சாபி உணவுகள் ஆகியவற்றை விற்பனை செய்துள்ளனர். இதில் பிரியாணியின் வாசனை மிகவும் அதிகமாக இருந்துள்ளது.

பிரியாணியின் வாசனை துணிகளின் மீது படுவதால், அந்த துணிகளை துவைத்தால் மட்டுமே அந்த வாசனை துணிகளில் இருந்து செல்கிறது என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியதோடு மட்டுமல்லாமல் முகமது மீது வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கினை விசாரித்த மாவட்ட நீதிபதி கிரிஸ்டினா ஹாரிசன், உணவக உரிமையாளருக்கு 258 பவுண்ட்ஸ் அபராதமும், வழக்கு செலவாக 500 பவுண்ட்ஸ் மற்றும் பாதிப்பட்டோருக்கு 30 பவுண்ட்ஸ் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து உணவக உரிமையாளர் முகமது கூறியதாவது, எங்கள் தொழிலை மிகவும் வெற்றிகரமாக நடத்தி வந்தோம். இந்த தீர்ப்பு எங்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது என கூறியுள்ளார்.

படுக்கை அறைக்குள் புகுந்த டிரக் : நூலிழையில் உயிர் தப்பிய நபர்!!

கனடாவின் எட்மண்டன் பகுதியில் தூக்கத்தில் இருந்த நபர் ஒருவரின் படுக்கை அறைக்குள் டிரக் ஒன்று புகுந்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எட்மண்டன் பகுதியைச் சேர்ந்த அந்த நபர் உலோகம் நொறுங்கிய சத்தத்தில் அலறிக்கொண்டு எழுந்ததாக தெரிவித்துள்ளார். கூரையிலிருந்து இடிபாடுகளும் தூசியும் தனக்கு மேல் விழுந்துள்ளது எனவும் அந்த நபர் தெரிவித்துள்ளார்.

இடிபாடுகளிற்கிடையில் அகப்பட்டு கொண்ட நிலையில் அருகாமையில் இருந்த தொலைபேசி மூலம் அவசர மருத்துவ சேவையினருடன் தொடர்பு கொண்டுள்ளார்.

டிரக்கின் இயந்திரம் கசியத்தொடங்கியதால் புகை மூட்டம் அறையை சூழ்ந்துள்ளது. வாகன சாரதி இரத்தம் கசிந்த நிலையில் பார்க்க பயந்த நிலையில் காணப்பட்டார்.

இச்சம்பவம் போதையில் ஏற்பட்டதாக தெரியவில்லை என தெரிவித்த பொலிசார் மருத்துவம் சம்பந்தமாக இருக்கலாம் என கருதுகின்றனர்.

படுக்கை டிரக்கிற்கு நெருக்கமாக இருந்திருந்தால் டிரக் அதன் மேல் ஏறியிருக்கும். அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்ததாக பாதிக்கப்பட்ட அந்த நபர் தெரிவித்துள்ளார்.

ஆனால் பயங்கரமான இந்த அனுபவத்தின் பின்னர் சாரதிமீது குற்றம் சுமத்தவில்லை எனவும் அவர் தெரிவித்தார். எட்மன்டன மேற்கில் இச்சம்பவம் நடந்துள்ளது.

3 கால்களுடன் பிறந்த சிறுமி : வெற்றிகரமாக நடந்த அறுவை சிகிச்சை!!

 
வங்கதேசத்தில் 3 கால்களுடன் பிறந்த சிறுமிக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

வங்கதேசத்தை சேர்ந்த சோய்டி கதூன் என்ற இடுப்புடன் இணைந்த மூன்றாவது காலுடன் பிறந்துள்ளார். தற்போது 3 வயதை எட்டியுள்ள இச்சிறுமிக்கு அவுஸ்திரேலியாவின் மோனாஷ் சிறுவர்கள் மருத்துவமனையில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து அறுவை சிகிச்சை நிபுணர் கிரிம்ஸ் கிம்பெர் கூறியதாவது, சோய்டியின் மூன்றாவது காலின் ஒரு பகுதியை வங்கதேச மருத்துவர்கள் அகற்றினாலும், இரண்டு சாதாரண கால்களுக்கு இடையில் அவரது இடுப்புப்பகுதியில் ஒரு பெரிய பகுதி இருந்தது.

ஏனெனில் அங்கு இரட்டைப் பகுதி உள்ளது, சோய்டிக்கு இரண்டு மலக்குடல், இரண்டு பெண் குறிகள் இருந்ததுடன், இரண்டு மலவாய்களுக்கான சாத்தியங்களும் இருந்தன. இந்த இரட்டைப் பகுதிகள், வழக்கத்திற்கு மாறான இடத்தில் வளர்ந்து கொண்டிருந்தன.

சிறுமியின் உடலில் இருந்த மூன்றாம் காலின் எஞ்சிய பகுதியை அகற்றிய மருத்துவக் குழுவினர், சோய்டி வீட்டிற்கு திரும்பியதும், இயல்பாக இயங்குவதை உறுதி செய்யும் வகையில் மறுகட்டமைப்பு சிகிச்சைகளையும் மேற்கொண்டார்கள்.
பகுதியளவு பார்வை குறைபாடுள்ள சோய்டி கதூனால், தற்போது நடக்கவும், ஓடவும் முடிகிறது என்று சொல்லும் மருத்துவர் கிம்பெர், அவரின் எடையும் கூடியிருப்பதாக தெரிவித்துள்ளார்.

வீடியோவால் எனது வாழ்க்கையே அழிந்துவிட்டது : புலம்பும் நடிகை!!

நடுத்தெருவில் வைத்து ராடன் நிறுவன மேலாளருடன் சண்டையிட்ட விவகாரம் குறித்து நடிகை சபீனா ராய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த விவகாரம் பற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்..

எனது பெயர் சபிதா ராய். எனது அம்மா பெயர் பொள்ளாச்சி பிரேமா. ஏ.வி.எம் நிறுவனம், எஸ்.பி.முத்துராமன் சாரின் பல படங்களில் ரஜினி – கமல் சாரோடு நடித்துள்ளார். நானும் குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்துள்ளேன்.

தற்போது ‘க க க போ’ படத்தில் நடித்துள்ளேன். படங்கள் தவிர்த்து விகடன் நிறுவனம் மற்றும் ராடன் நிறுவனம் தயாரித்த 18 நாடகங்களுக்கு மேலாகவும் நடித்துள்ளேன்.

தாமரை, இளவரசி மற்றும் தற்போது வாணி ராணி நாடகத்தில் நடித்து வருகிறேன். வாணி ராணி நாடகத்தில் எனது அப்பா ஸ்தானத்தில் நிர்வாக தயாரிப்பாளர் சுகுமார் என்பவர் இருந்தார். அவருக்கு விபத்தில் காலில் அடிப்பட்டிருந்தது. அப்போது 20 ஆயிரம் ரூபாய் கொடுத்து உதவினேன். மனிதாபமான அடிப்படையில் அவரும் எனக்கு உதவியுள்ளார். ஆகையால் நானும் அவருக்கு உதவினேன்.

2 மாதங்களாக சுகுமார் சாரும் எனக்கு பணம் தரவில்லை. சம்பவத்தன்று என்ன நடந்தது என்றால், காலையிலிருந்து இப்போது வந்து தருகிறேன் என்று சொல்லிக் கொண்டே இருந்தார்.

மாலையில் தொலைபேசியில், மனைவி ஊரிலில்லை. ஆகையால் மகன்கள் மட்டும் தான் வீட்டில் உள்ளார்கள். நாங்களும் இரவு ஊருக்குச் செல்கிறேன். ஆகையால் என்னால் வந்து தர இயலாது. நீங்கள் வந்து வீட்டுக்கு வந்து வாங்கிக் கொள்ளுங்கள் என்றார்.

எனக்கு சுகுமாருடைய வீடு அவ்வளவாக தெரியாது. அதனால் நண்பர்களுடன் சென்று, வீட்டிற்கு கீழேயே உட்கார்ந்துவிட்டேன். மேலே கூட நான் செல்லவில்லை. அப்போது சுகுமாரும், அவருடைய நண்பரும் வண்டியில் வந்து இறங்கினார்கள். ஏன் இங்கு வந்தாய் என்று கோபத்துடன் கேட்க, நானும் “நீங்களே தானே வரச் சொன்னீர்கள்” என்று கோபத்துடன் பதிலளித்தேன். வீட்டில் மனைவி இல்லை என்பதால் வீட்டுக்கு வந்து வாங்கி செல்லும்படி நீங்கள் தானே சொன்னீர்கள் என்று நான் பேச, எங்களுக்குள் வாக்குவாதம் முற்றியது.

நான் அப்படிச் சொல்லவே இல்லை என்ற போது, அவருடன் வந்தவருந்தவரிடம் எனது தொலைபேசியைக் காட்டி அவர் தான் வரச் சொன்னார் என்று கூறி ஆதாரத்தைக் காட்டினேன். எனது கோபம் தாக்க முடியாமல், சத்தமாக பேசிய உடனே சுகுமார் என்னை அடித்து போனை புடிங்கினார். நானும் அவரை அடித்துவிட்டேன்.

இதற்கிடையே எங்களுக்கு இடையே நடந்த சண்டையை, சுகுமார் வீட்டுக்கு கீழே உள்ளவர் (பாலிமர் தொலைகாட்சியில் பணிபுரிபவர்) அவர் எங்களுடைய வாக்குவாதம் மற்றும் சண்டையை, எங்களுக்கு தெரியாமல் தொலைபேசியில் காட்சிப்படுத்தியுள்ளார். அவருக்கும் சுகுமாருக்கு ஏற்கனவே பகை இருந்துள்ளது.

அவர் தான் காவல்துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளார். காவல்துறை வந்து எங்கள் இருவருக்கும் சமரசம் செய்து வைத்தார்கள்.

நான் வீட்டுக்கு வந்து இறங்குகிறேன். அதற்குள் எங்கள் இருவரையும் தவறாக சித்தரித்து பாலிமர் தொலைகாட்சியில் செய்தியை வெளியிட்டுவிட்டார்கள். எனக்கு பேரதிர்ச்சியாகி விட்டது. காவல்துறையில் எந்தவொரு புகாருமே பதிவாகவில்லை. டி.ஆர்.பிக்காக் அப்படியொரு செய்தியை பாலிமர் தொலைகாட்சி வெளியிட்டு எனது திரையுலக வாழ்வையே சிதைத்துவிட்டார்கள்.

பாலிமர் தொலைக்காட்சிக்கு தொலைபேசியில் “நான் தற்கொலை செய்து கொள்வேன்” என்று பேசியதற்கு “இனிமேல் போடவில்லை. நீங்கள் ஒரு பேட்டி கொடுங்கள் வெளியிடுகிறோம்” என்று சொல்கிறார்கள். அந்த வீடியோ பதிவில், முன்னால் – பின்னால் பேசியது எதையுமே வெளியிடாமல் “மனைவி இல்லை. வீட்டுக்கு வரச்சொல்லி காசு வாங்கிச் செல்ல சொன்னீர்களே” என்று பேசியதை மட்டும் வெளியிட்டுள்ளார்கள்.

யாரோ ஒருவர் செய்தியை எடுத்து கொடுத்ததிற்கு என்னுடைய வாழ்க்கையை வீணாக்கிவிட்டார்கள். எனது அப்பா வயது இருப்பவரோடு, கள்ளக்காதல் என செய்தி வெளியிட்டுவிட்டு இப்படி சொல்வதற்கு எப்படி தான் மனது வருகிறது என தெரியவில்லை. மேலும், தொலைக்காட்சியில் நிறுத்துகிறோம் என்று சொல்லிவிட்டு சமூகவலைத்தளத்தில் பரப்பிவிட்டார்கள். இதனால் நான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளேன். இதே மாதிரி வேறு எந்தவொரு பெண்ணுக்கும் நடைபெறக்கூடாது. இந்த செய்தியின் மூலமாக 2 குடும்பத்தின் வாழ்க்கையை சிதறடித்துவிட்டார்கள். 2 குடும்பத்தை சிதைத்து அப்படி என்ன டி.ஆர்.பி போட்டி என தெரியவில்லை. இப்பிரச்சினையால் பெண் நிறுவனரான ராதிகா சரத்குமார் என்னிடம் என்ன பிரச்சினை என்று கூடக் கேட்காமல் வேலையை விட்டு தூக்கிவிட்டார்கள்.

”இதனை நான் நடிகர் சங்கத்தில் முறையிட்டேன். தற்போது அவர்கள் தான் எனக்கு துணை நிற்கிறார்கள். ஒரு நாள் டி.ஆர்.பிக்காக எனது மொத்த வாழ்க்கையின் மீது கருப்பு புள்ளி வைத்துவிட்டார்கள். ஆனால், இதனை தைரியமாக எதிர்கொள்வேன்” என கூறியுள்ளார்.

மேதினக் கூட்டத்தில் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்திய ஐக்கிய தேசியக் கட்சி!!

 
ஐக்கிய தேசிய கட்சியின் மேதின பொதுக்கூட்டத்தின் போது பெருமளவான ஆதரவாளர்கள் ஒன்றுதிரண்டு குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

இந்த செயலானது ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட வரலாற்று மாற்றமாக கருதப்படுகின்றது.
அது மட்டும் இன்றி பார்வையாளர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இதேவேளை, மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவாளர்கள் கடந்த சில ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்ட மேதின பேரணிகளில் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குழந்தைகளை இலகுவாக தூங்க வைக்க பல வியத்தகு தொழில்நுட்பங்களுடன் கூடிய நவீன தொட்டில்!!

பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்ட் மோட்டார், குழந்தையை தாலாட்டி தூங்கவைக்க நவீன படுக்கை ஒன்றை உருவாக்கியுள்ளது.

‌ஐரோப்பிய நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த நவீன படுக்கை விரைவில் உலக அளவில் சந்தைக்கு வருகிறது.

குழந்தைகள் வீட்டில் தூங்குவதை விட, கார் பயணங்களில் இயல்பாகவே உறங்கிவிடும், இந்தப் பழக்கம் பெரும்பாலான குழந்தைகளிடம் உண்டு, இந்தப் வழக்கத்தை வைத்து குழந்தைகளுக்கென நவீன படுக்கை ஒன்றை பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்ட் உருவாக்கியுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் கைக்குழந்தை வைத்திருக்கும் பெற்றோர் பலரிடம் ஃபோர்ட் நிறுவனம் சமீபத்தில் கருத்துக்கணிப்பு ஒன்றை மேற்கொண்டது.

இந்த ஆய்வை வைத்து, வீட்டில் எந்தவித தொந்தரவுமின்றி குழந்தைகள் உறங்க, புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய படுக்கை அமைப்பை ஃபோர்ட் தயாரித்துள்ளது.

மேக்ஸ் மோட்டார் ட்ரீம்ஸ் க்ரிப் என்ற பெயரில் அந்நிறுவனம் தயாரித்துள்ள குழந்தைகளுக்கான இந்தத் தொட்டிலில் பல வியத்தகு தொழில்நுட்பங்களும் இடம்பெற்றுள்ளன.

தெருவிளக்குகள் போன்ற உணர்வை ஏற்படுத்தும் எல்.இ.டி விளக்குகள், காரின் ஒலியை மிமிக் செய்யக்கூடிய அமைப்புகள் இந்த நவீனத் தொட்டிலில் உள்ளன.

குழந்தைகளுக்கான படுக்கையாக மட்டுமில்லாமல், இதன்மூலம் குழந்தை எதுபோன்ற பயணத்தில் உறக்கத்தை எட்டும் என்பதை பெற்றோர்கள் அறிந்துகொள்ளும் வகையில் செயலி ஒன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கவனிக்கத்தக்க பல சிறப்புகளைப் பெற்றுள்ள மேக்ஸ் மோட்டார் ட்ரீம்ஸ் கிரிப்பை தற்போது சோதனைக்குட்படுத்தப்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் இந்த நவீனத் தொட்டிலுக்கு பெரியளவிலான வரவேற்பு கிடைக்கும் என்பது ஃபோர்டு நிறுவனத்தின் நம்பிக்கை.

கடும் வறட்சியின் காரணமாக நாட்டின் நாளாந்த மின்சார தேவை 10 வீதத்தால் அதிகரிப்பு!!

வறட்சியான காலநிலையால் மின் விநியோகத்திற்கு தடை ஏற்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்கத சக்திவள அமைச்சு தெரிவித்துள்ளது

நிலைமைக்கேற்ப அதியுயர் அழுத்தமுடைய மின்பிறப்பாக்கிகளை பயன்படுத்துவதற்காக பதிவு செய்துள்ள தொழிற்சாலைகளுக்கு இன்றுமுதல் அந்த இயந்திரங்களைப் பயன்படுத்தி மின் உற்பத்தியை மேற்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஸன ஜயவர்தன குறிப்பிட்டார்.

நாட்டின் நாளாந்த மின்சார தேவை பத்து வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்திவள அமைச்சின் உடகப் பேச்சாளர் கூறினார்.

இதுவரை 250 இற்கும் மேற்பட்ட பாவனையாளர்கள் தன்னியக்க மின் பிறப்பாக்க இயந்திரங்களைப் பயன்படுத்துவதற்காக தங்களை பதிவுசெய்துள்ளனர்.

அதனடிப்படையில் 500 இற்கு மெகாவோட்டுக்கும் அதிகமான மின்சார அலகுகளை பிறப்பாக்கம் செய்வதற்கு இயலுமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இந்திய எல்லைக்குள் ஊடுருவி ராணுவ வீரர்கள் தலையை துண்டித்த பாகிஸ்தான்!!

இந்திய எல்லையில் ஊடுருவிய பாகிஸ்தான் ராணுவ சிறப்பு படையினர், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவ வீரர்கள் 2 பேரின் தலையை துண்டித்த கொடூர சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த பயங்கரத்தை அரங்கேற்ற ஏதுவாக, பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் அமைந்துள்ள 2 ராணுவ முகாம்கள் மீது ராக்கெட் வீசி கடும் தாக்குதலையும் நடத்தி உள்ளது.

பாகிஸ்தானின் திட்டமிட்ட இந்த சதிக்கு இந்தியா தகுந்த பதிலடி தர எல்லையில் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. இதனால், எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் கிருஷ்ணகாட்டி எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் உள்ள துணை ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் படைகள் திடீர் தாக்குதல் நடத்தியது.

இந்திய எல்லைகளை குறிவைத்து ராக்கெட் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும் இயந்திரத் துப்பாக்கிகள் மூலமும் தாக்குதல் நடத்தப்பட்டது.

அதே நேரத்தில், பாகிஸ்தான் ராணுவத்தின் சிறப்பு படையினர், இந்திய எல்லையில் சுமார் 250 மீற்றர் தூரத்திற்கு உள்ளே புகுந்தனர். அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ கூட்டு நடவடிக்கை அதிகாரி பரம்ஜித்சிங் மற்றும் எல்லை பாதுகாப்பு படை தலைமை ஏட்டு பிரேம் சாகர் இருவரின் தலையை துண்டித்து படுகொலை செய்துள்ளனர்.

மேலும் இருவரது உடலையும் சிதைத்துள்ளனர். இந்த தாக்குதலில், மற்றொரு பிஎஸ்எப் வீரர் ராஜேந்திரசிங் படுகாயம் அடைந்துள்ளார். பாகிஸ்தான் நடத்திய திடீர் தாக்குதலுக்கு இந்தியா உடனடியாக பதிலடி கொடுத்துள்ளது.

இதற்கு முன்பும் பாக் ராணுவத்தினரால் இந்திய வீரர்கள் தலை துண்டிக்கப்பட்டு, உடலை சிதைத்து கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர். 2013, ஜனவரி மாதம் இந்திய வீரர் லாஞ்ச் நாயக் ஹேம்ராஜ், பாகிஸ்தானின் எல்லை அதிரடி சிறப்பு படையினரால் தலை துண்டித்து, உடல் சிதைத்து படுகொலை செய்யப்பட்டார்.

2008, ஜூன் மாதம் கேல் செக்டார் பகுதியில் இந்திய வீரர் ஒருவரை கடத்திச் சென்றனர். சில நாட்களுக்கு பின் அவரது உடல் தலை துண்டிக்கப்பட்ட நிலையல் மீட்கப்பட்டது. 1999 ஆம் ஆண்டு கார்கில் போர் சமயத்தில் கேப்டன் சவுரவ் கலியா, பாகிஸ்தான் ராணுவத்தால் பிடித்து செல்லப்பட்டு பல்வேறு சித்ரவதைகளுக்கு ஆளானார்.

அவரது உடல் சிதைக்கப்பட்ட நிலையில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. 2016, அக்டோபர் 28 மசில் செக்டார் பகுதியில், தீவிரவாதிகள் ராணுவ முகாமை தாக்கி இந்திய வீரர் ஒருவரை கொன்று உடலை சிதைத்தனர்.

அச்சுறுத்தல்கள் ஊடாக ஒரு மயிரையேனும் பிடுங்க முடியாது : அரசாங்கத்துக்கு மஹிந்த சவால்!!

 

முடியுமானால் காலி முகத்திடலை மக்களை கொண்டு நிரப்பி மே தின கூட்டத்தை நடத்துமாறு இந்த அரசாங்கம் எனக்கு சவால் விடுத்தது. நான் அந்த சவாலை ஏற்றுக்கொண்டேன். இன்று அந்த சவாலை வெற்றிகொண்டு காண்பித்துள்ளேன். இப்போது நான் இந்த அரசாங்கத்துக்கு ஒரு சவாலை விடுக்கின்றேன். முடியுமானால் மாகாண சபை தேர்தலை நடத்துங்கள். அதனைவிடுத்து எந்தவொரு அச்சுறுத்தலாலும் ஒரு மயிரையேனும் பிடுங்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று அரசாங்கத்துக்கு சவால் விடுத்தார்.

காலி முகத்திடலில் இன்று நடைபெற்ற ஒன்றிணைந்த எதிரணியினரின் மே தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த சவாலை விடுத்தார். இதன் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்ததாவது,

இந்த அரசாங்கமானது நாட்டின் வளங்களை விர்பனை செய்கின்றது. தெற்கில் மட்டுமல்ல. வடக்கு கிழக்கில் உள்ள வளங்களையும் இந்த அரசு விற்பனை செய்கிறது. ஹம்பாந்தோட்டை துறைமுகத்துடன் சேர்த்து 15000 ஏக்கர் நிலத்தை சீனாவுக்கு வழங்கவும், மாதுரு ஓயா பகுதியில் இடம் வழங்கவும் அனைத்து ஏற்பாடுகளையும் இந்த அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

நாட்டு மக்கள் ஒரு முறை ஏமாந்து விட்டனர். மீள ஏமாறமாட்டார்கள். நாட்டின் வளங்களை பாதுகாக்க ஒன்றிணைந்து தேசிய கொள்கை அடிப்படையில் செயற்படுவர்.

இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் நடவடிக்கையை நாம் இந்த காலி முகத்திடலில் இருந்து ஆரம்பிக்கின்றோம்.

எமது பயணத்துக்கு அச்சுறுத்தல்கள் பல ஏற்படுத்தப்பட்டன. எம்மை சிறையடைத்தார்கள். விமல் வீரவன்ச, ஜோன்ஸ்டன், கம்பன்பில, மஹிந்தானந்த, நாமல், எனது சகோதரர்கள், அரச அதிகாரிகள் என பலர் இவ்வாறு அச்சுறுத்தப்பட்டனர்.
அத்தனை அச்சுறுத்தல்களையும் தாண்டி இங்கு ஒன்று சேர்ந்துள்ளோம்.

இந்த அரசாங்கம் முடியுமானால் காலி முகத்திடலை மக்களை கொன்டு நிரப்பி மே தின கூட்டத்தை நடத்துமாறு எனக்கு சவால் விட்டது. நான் அந்த சவாலை ஏற்றுக்கொண்டேன். இன்று அந்த சவாலை வெற்றிகொண்டு காண்பித்துள்ளேன். இப்போது நான் இந்த அரசாங்கத்துக்கு ஒரு சவாலை விடுக்கின்றேன்.

எனது ஆட்சியை கைப்பற்ற இந்த அரசாங்கம் பல மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவு செய்துள்ளது. இது தொடர்பில் சிலர் மலசல கூடங்களுக்குள் வைத்தே பணத்தை வழங்கியுள்ளனர்.

எனது காலத்தில் இராணுவம் பயங்கரவாதத்தை இல்லாது செய்து சமாதானத்தை ஏற்படுத்தினர். எனினும் இன்று இராணுவத்தினரை மக்களின் நியாயமான கோரிக்கைகளை முடக்க பயன்படுத்தப் பார்க்கின்றனர்.

எமது இராணுவத்தினரை சர்வதேச யுத்த குற்ற நீதிமன்றில் நிறுத்தும் விதமாகவே இந்த அரசாங்கம் செயற்படுகிறது. அதற்கு இடமளிக்க முடியாது. இந் நாட்டை பாதுகாத்த இராணுவத்தினரை சர்வதேச யுத்த குற்ற நீதிமன்றில் நிறுத்த ஒரு போதும் அனுமதிக்கமாட்டேன்.

குப்பை சரிந்து பொது மக்கள் உயிரிழந்த சம்பவங்கள் உலகில் எந்த நாட்டிலும் இடம்பெற்றதில்லை. எனினும் எமது நாட்டில் கவலைக்குரிய விடயமாக இது இடம்பெற்றுவிட்டது. ஒரு குப்பையைக் கூட அகற்றிக்கொள்ள முடியாத இந்த அரசாங்கம் எனக்கு சவால் விடுப்பது கேளிக்கைக்குரியது.

-வீரகேசரி-

தலைவா நீ வாழ்த்தியது கடவுளே வாழ்த்தியது போல உள்ளது : ராஜமௌலி!!

ரஜினி தனக்கு வாழ்த்து தெரிவித்தது கடவுளே வாழ்த்தியது போல் இருப்பதாக ராஜமௌலி பெருமிதமாக தெரிவித்துள்ளார்.

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த பாகுபலி-2 படம் 3 நாட்களை கடந்தும் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்தப் படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு படக்குழுவினரை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பாகுபலி-2 படத்தை பார்த்த பல்வேறு பிரபலங்களும் படக்குழுவினருக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வரிசையில் ரஜினியும் இந்த படத்தை பார்த்துவிட்டு, படக் குழுவினரையும் இயக்குனர் ராஜமௌலியையும் பாராட்டியிருந்தார்.

பாகுபலி-2 படம் இந்தியாவின் பெருமை. கடவுளின் குழந்தையான ராஜமௌலிவுக்கும் அவரது குழுவினருக்கும் எனது வாழ்த்துக்கள்’ என்று தெரிவித்திருந்தார்.

ரஜினியின் பாராட்டு ராஜமௌலிக்கும், படக் குழுவினருக்கும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. ரஜினி பாராட்டியது கடவுளே பாராட்டியது போல் இருப்பதாக ராஜமௌலி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதுபற்று அவர் கூறும்போது, ‘தலைவா, கடவுளே என்னையும் என் குழுவையும் வாழ்த்தியது போல் இருக்கிறது.
உங்கள் வாழ்த்துக்கள் முன்னாள் எதுவும் பெரிதாக இருக்க முடியாது’ என்று புகழ்ந்துள்ளார்.

தரமுடியாதென்பவர்களை தட்டிக் கேட்டால்த்தான் பெற முடியும்!!

தட்டிக் கேட்கும் போது தடியெடுத்தால் நாங்கள் தனிமைப்படுத்தப்பட்டு விடுவோம் என்று வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் நேற்று முல்லைத்தீவு கூட்டுறவு கலாசார மண்டபத்தில் நடைபெற்ற மேதினக் கூட்டத்தின் போது தெரிவித்தார்.

அல்லல்களையும் அவலங்களையும் அடிதடியையும் ஏற்று எமது போராட்டங்களை அமைதியாக நடத்திச் சென்றால்த்தான் தர முடியாது என்றவர்களின் மனதிலும் தரமான மாற்றங்களை ஏற்படுத்த முடியும்.

அத்துடன் தனித்துப் போராடாது ஒற்றுமையுடன் சேர்ந்து தொடர்ந்து போராடினால் வெற்றி நிச்சயம் என்பனவே அந்தப் பாடங்கள்.

காந்திஜி தனது அஹிம்சைப் போராட்டத்தை நடத்த இவ்வாறான போராட்டங்கள் ஊக்குவிப்பாக அமைந்தன.

இதே போன்று 1893 இல் முதலாவது தொழிலாளர் வேலை நிறுத்தம் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டது.

இந்த போராட்டத்தில் இலங்கையின் அச்சுப் பதிப்போர் தொழிலாளர் சங்கம், மாட்டு வண்டிச் சங்கம், டிராம் பஸ் வண்டித் தொழிலாளர் சங்கம் ஆகிய மூன்று சங்கங்களும் இணைந்து கொண்டே ஈடுபட்டன.

அக் காலத்தில் கொழும்புத் துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்ட உணவுப் பொருட்கள், குடிவகை, பழங்கள் மற்றும் இன்னோரன்ன பொருட்கள் 1815 அளவில் அமைத்திருந்த கண்டி இராச்சியத்தில், ஐரோப்பியர்களின் இடங்களுக்கு எடுத்துச் செல்வதற்கு மாட்டு வண்டிகளே பயன்படுத்தப்பட்டன.

இவ்வாறு வண்டிகளைச் செலுத்திச் சென்றவர்கள் அந்த வண்டில்களின் ஆசனத்தில் ஏறி அமர்ந்திருந்து வண்டிகளைச் செலுத்த முடியாது என்ற ஆணையை எதிர்த்தே மாட்டுவண்டில் உரிமையாளர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

அக் காலத்தில் தொழிலாளர்கள் தொழிற்சங்கங்கள் என்பன பொதுவாக இடதுசாரி அமைப்புக்களாகவே காணப்பட்டன என்று அவர் குறிப்பிட்டார்.

படம்பிடித்த யுவதி அலையில் அடித்துச் செல்லப்பட்டார்!!

சிலாபம் கடற்பிரதேசத்தில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த யுவதியொருவர் கடல் அலையால் தாக்கப்பட்டு கடலில் வீழ்ந்து காணாமல் போயுள்ளார். நேற்று (01) மாலை 5.10 அளவில் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.

சிலாபம் இலிப்பதெணிய- கிழக்கு முங்கத்தலுவ பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதான டில்கி ஷிகாரா பிஸ்மத் என்ற யுவதியே காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போன யுவதி தனது குடும்பத்தினருடன் சிலாபம் கடற்பகுதிக்கு சுற்றுலா சென்றிருந்தவர் என தெரியவந்துள்ளது.

சிலாபம் பொலிஸ் நிலையத்திற்கு அண்மையில் உள்ள கடற்பகுதியில் அவர்கள் புகைப்படம் எடுத்து நின்ற போது திடீரென ஏற்பட்ட பாரிய கடல் அலையால் குறித்த பெண் இழுத்துச் செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.