தீவிரவாதிகளை குறிவைத்து மாலியில் பிரான்ஸ் படையினர் மேற்கொண்ட தாக்குதலில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
மாலியில் உள்நாட்டு போர் காரணமாக தீவிரவாத அமைப்புகளின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளநிலையில், சுமார் 4 ஆயிரம் பிரான்ஸ் இராணுவத்தினர் அந்நாட்டின் பாதுகாப்பு பணிகளுக்காக அனுப்பப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.
மாலியின் தென்மேற்கு கயோ மகாணத்திலுள்ள போல்சரே வனப்பகுதியில் பதுங்கியுள்ள தீவிரவாதிகள் பொதுமக்கள் மற்றும் இராணுவத்தினரை தாக்கி தமது அரச எதிர்ப்பை வெளிப்படுத்திவருகின்றனர்.
இந்நிலையில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் புர்கினோபாசோ எல்லையில் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 12 அரசசார்பு படையினர் கொல்லப்பட்டனர். குறித்த தாக்குதலுக்கு பதிலடியாக பிரான்ஸ் இராணுவப்படையினர் மேற்கொண்ட தாக்குதலில் சிக்கி 20 தீவிரவாதிகள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வடமாகாணசபையின் அதிகார மையத்தை மாங்குளத்தில் நிறுவு என்ற கோசத்துடன் சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் நா.தேவகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்றது.
மாங்குளம் வடமாகாணத்தின் மத்திய பகுதியில் அமைந்துள்ளமையினாலும் ஏனைய மாவட்டங்களில் இருந்து இலகுவாக வந்து செல்லக்கூடிய பகுதியாக காணப்படுவதாலும் வடமாகாணத்தின் வளங்கள் எல்லாப் பிரதேசங்களுக்கும் சமமாக வழங்கப்பட வேண்டும் என்ற அடிப்படையிலும் மாங்குளத்தை பிரதான நகராமாக அபிவிருத்தி செய்தல் வேண்டும்.
இனப் பிரச்சனைக்கு அடிப்படை காரணங்களாக அமைந்துள்ள அரசியல் தீர்வு, அதிகாரப் பகிர்வு போன்ற விடயங்களுக்கு தீர்வை காணாது காலம் தாழ்த்துவது தொடர்பாக எமது எதிர்ப்பைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
யுத்தத்தில் பாதிக்கப்பட்ட பெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கும் அங்கவீனமானவர்களின் குடும்பங்களுக்கும் வாழ்க்கையை முன்னேற்ற தேவையான திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும், யுத்த காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி உடன் வழங்கப்பட வேண்டும். யுத்தத்திற்கு முன்பும் பின்பும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மக்களின் காணிகளை உடனடியாக அந்த மக்களிடம் கையளிப்பதோடு வாழ்வாதார உதவிகள் செய்துக் கொடுக்கப்பட வேண்டும்
என்ற பிரதான மே தின பிரகடனத்துடன் வவுனியா மன்னார் முல்லைத்தீவு மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் தொழிலாளர்கள் மற்றும் மீனவர்களின் பரட்சிகர மேதினமானது மங்குளத்தின் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்திற்கு முன்பாக 2.30 மணிக்கு பேரணி தொடங்கப்பட்டு மாங்குளம் மகாவித்தியாலயத்தின் மைதானத்தில் மாலை 3.00 மணிக்கு பொதுக் கூட்டம் ஆரம்பமாகி நடைபெற்றது.
பேரணியில் சென்றவர்கள் ஆளும் தேசிய கூட்டரசே பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு பதில் கூறு!
அரசியல் கைதிகளை விடுதலை செய்!
வட மாகாணத்தின் தலைநகரமான மாங்குளத்தில் மாகாணசபையின் அதிகார மையத்தை நிறுவு!
பெண்களின் வாழ்க்கையை சிதைக்கும் நுண்கடன் கம்பனிகளை உடனே இழுத்து மூடு!
மலையக மக்களுக்கான காணி உரிமையை வழங்கு!
போன்ற கோசங்களை எழுப்பியவாறு சென்றனர்
தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் கொட்டும் மழையிலும் இணைநது இவ் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.
நிகழ்வில் சமூக விழப்புணர்வுக்கான மக்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் நா.தேவகிருஸ்ணன், செயலாளர் ரி.தேவசாந்தன், வவுனியா மாவட்ட அமைப்பாளர்; அயூப்கான், வவுனியா மாவட்ட ஊடக பேச்சாளர் எஸ்.சதீஸ்குமார் பொது அமைப்புக்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் 67வது நாளாகவும் இன்று (01.05.2017) தொடர்கிறது.
குறித்த போராட்டம் படையினரிடம் கையளிக்கப்பட்ட தமது உறவினர்கள் தொடர்பில் பதிலளிக்க கோரியும், அரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரியும் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குமாறு கோரியும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மேலும் சாதகமான பதில் கிடைக்கும் வரையில் தங்களது போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சென்னை பாரிமுனை பகுதியில் ஏற்பட்ட பாரிய வாகன விபத்தில் இலங்கை பெண் ஒருவர் பலியாகியுள்ளார்.
குறித்த பெண் பயணித்த கெப் ரக வாகம் ஒன்று 20 அடி பள்ளத்தில் வீழ்ந்து இந்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
குடும்பத்தினருடன் சுற்றுலா பயணம் மேற்கொண்ட இலங்கை பெண் ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளார்.
விபத்தில் கார் சாரதி உள்ளிட்ட 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த நால்வரும் ராஜிவ் காந்தி மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தி-நகருக்கு சொப்பிங் சென்று திரும்பி வந்த நிலையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
குறித்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக வந்துள்ளதுடன் தடுப்பு சுவர்களை உடைத்துக்கொண்டு குறித்த கார் 20 அடி பள்ளத்தில் விழுந்துள்ளது என பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்த விபத்தில் 54 வயதான சித்தி ரித்வியா என்பவரே உயிரிழந்துள்ளார். அத்துடன், 34 வயதான மொஹமட் ஆசாத் ரபாட், மொஹமட் அஜ்மல் மற்றும் ஜிமா நஸாட் அம்ஜல் ஆகியோர் காயமடைந்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். மேலும், இவர்கள் மே 3 ஆம் திகதி இலங்கைக்கு திரும்பிசெல்லவிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பு – காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் மஹிந்த ஆதரவாளர்களின் மேதினக்கூட்டத்திற்கு அதிகளவிலான மக்கள் படையெடுத்துள்ளனர்.
மே 1ஆம் திகதி உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பல பாகங்களிலும் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.
அந்த வகையில் கூட்டு எதிர்க்கட்சியான மஹிந்தவின் ஆதரவாளர்களால் காலி முகத்திடலிலும், ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியால் கண்டியிலும் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.
இதில் காலி முகத்திடலில் திரண்டுள்ள பெருமளவிலான மக்கள் கோசங்களை எழுப்பிக்கொண்டு தமது ஆதரவினை வெளிப்படுத்தியுள்ளனர்.
காலி முகத்திடலில், மணல் தெரியாதவாறும், கடல் தெரியாதவாறும் மக்கள் கூட்டம் எவ்வாறு திரளப் போகிறது என்பதை பார்த்துக்கொள்ளுமாறு ரோஹித அபேகுணவர்தன அண்மையில் சவால் விட்டிருந்தார்.
எனினும் அவர் குறிப்பிட்டதைப்போன்று அலைகடலென மக்கள் திரண்டதை காணக்கூடியதாக உள்ளது.
புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியின் புரட்சிகர மேதின ஊர்வலம் இன்று(01.05.2017) காலை வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலத்தில் ஆரம்பமாகி வவுனியா நகரசபை மண்டபத்தை சென்றடைந்தது.
இவ் ஊர்வலத்தின் போது அரசே அனைத்து அரசியல் கைதிகளையும் உடன் விடுதலை செய், அரசே அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலைகளைக் குறை, அரசே மக்களின் நிலங்களை மக்களிடம் கொடு, அமெரிக்காவே உலகில் போர்களை மூட்டாதே, நீ தான் உலகின் முதல் எதிரி, இந்திய மேலாதிக்கம் நாட்டிற்கு கேடு, இலங்கை உனது மாநிலம் இல்லை போன்ற பதாதைகளை ஏந்தியிருந்தனர்.
அத்துடன் உழைக்கும் தொழிலாளரே ஒன்று சேர்வீர், மைத்திரி ரணில் அரசே மக்களுக்கு பதில் கூறு, வரியும் கடனும் மக்களின் தலையில், தொழிலாளர்களுக்கு உரிமை மறுப்பு, புகையிரத காப்பாளருக்கு நிரந்தர நியமனம் கொடு, காணாமல்போனோருக்கு பதில் இல்லை போன்ற சுலோகங்களை கூறியவாறு ஊர்வலமாக சென்றனர்.
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் ஆரம்பமான இவ் ஊர்வலமானது பஜார் வீதியூடாக சென்று வவுனியா நகர சபையினை வந்தடைந்தது. அரசியல் கைதிகள் சிறையில் இருப்பது போன்ற ஊர்த்தியும் பேரணியில் சென்றது.
வவுனியா ஓமந்தையில் சிறுவன் ஒருவன் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் ஒன்று இன்று (01.05.2017) காலை 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது,
ஒமந்தை மாணிக்கவளவு , இலுப்பைக்குளம் கிராமத்தில் வசித்து வரும் ரூபன் கஜேந்திரன் (வயது 12) என்ற சிறுவன் இன்று காலை 8.30 மணியளவில் வீட்டில் அத்தை திட்டியதால் மனமுடைந்து புல்லுக்கு அடிக்கும் கிருமி நாசினி மருந்தைக் குடித்து மயக்கமுற்ற நிலையில் வீட்டில் கிடந்ததை அவதானித்த உறவினர்கள் உடனடியாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
தற்போது சிறுவன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
சிறுவனின் தாயார் இவர்களை பிரிந்து சென்று 5 வருடங்கள் ஆகிய நிலையிலும் தந்தையாருடனும் அப்பம்மாவுடனும் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனயின் (EPRLF) மே தினம் வவுனியா வீரபுரம் பகுதியில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
செட்டிகுளம், வீரபுரம் பிள்ளையார் ஆலய முன்றலில் ஆரம்பமாகிய பேரணி ஊர்வலம் வீரபுரம் பொது விளையாட்டு மைதானத்தை அடைந்து அங்கு மாபெரும் பொதுக் கூட்டம் நடைபெற்று வருகின்றது.
பேரணியில் ஈடுபட்டவர்கள் அரசியல் கைதிகளை விடுதலை செய், காணாமல் போனவர்களுக்கு பதில் கூறு, வீட்டுத் திட்டத்தை வழங்கு, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்தியிருந்தனர்.
கட்சியின் மத்திய குழு உறுப்பினர் க.அருந்தவராசா தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் அக் கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிறேமச்சந்திரன், அக் கட்சியின் செயலாளரும் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சபை உறுப்பினர்களான ம.தியாகராசா, இ.இந்திரராஜா, க.சர்வேஸ்வரன், மற்றும் கட்சியின் உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் இதில் கலந்து கொண்டனர்.
ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ உணவுப் பழக்கவழக்கங்கள் இன்றியமையாவை. நாம் சாப்பிட்டபின் சில பழக்க வழக்கங்களை தெரிந்தோ தெரியாமலோ பின்பற்றி வருகின்றோம். சாப்பிட்ட பின்னர் எவற்றை செய்யக்கூடாது என்று பார்ப்போம்..
1.சாப்பிட்ட பின்பு ஒருவர் சிகரெட் பிடித்தால், அது சாதாரண நேரங்களில் சிகரெட் பிடிப்பதைவிட மிகப்பெரிய கெடுதலை விளைவிக்கும்.
2.சிகரெட்டுகளை ஒரே நேரத்தில் பிடித்தால் எவ்வளவு பெரிய புற்றுநோய் அபாயம் உண்டோ அவ்வளவு பெரிய தீமையாகும்.
3.அதேபால் சாப்பிட்டவுடனேயே பழங்களைச் சாப்பிடும் பழக்கம் நம்மில்
பலருக்கு உள்ளது, அது கெடுதியானது. காரணம் உடனே அது காற்றினை வயிற்றுக்குள் அனுப்பி வயிறு உப்புசத்திற்கு ஆளாக்கும் நிலையை (Bloated with air) உருவாக்குகிறது. எனவே சாப்பிடுவதற்கு ஒரு மணிநேரம் முன்பு பழம் சாப்பிடுங்கள் அல்லது சாப்பிட்டு ஒரு மணி அல்லது 2 மணி நேரத்திற்குப் பின்பு பழங்களைச் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
4.சாப்பிட்டவுடன் தேநீர் அருந்தாதீர். ஏனெனில் தேநீர் இழையில் அசிட் உள்ளது. இது உணவில் உள்ள புரதச்சத்தினை கடினமாக்கி (Hardening) செரிமானத்தைக் கஷ்டமாக்கும் வாய்ப்பு ஏராளம் உண்டு.
5.சாப்பிட்ட பின்னர் உங்களது பெல்ட்டுகளை தளர்த்திவிடாதீர்கள்(Don’t Loosen Your Belt).
வவுனியா கோவில்புதுக்குளம் றொக்கற் விளையாட்டுக் கழகத்தின் 41 வது ஆண்டு நிறைவை முன்னிட்டும் தமிழ் சிங்கள புத்தாண்டையிட்டும் நடத்தப்படும் மாபெரும் விளையாட்டு விழாவின் ஆரம்ப நிகழ்வு நேற்று (30.04) காலை 8.00 மணிக்கு வி.ஜோஎல் நிரோசன் தலைமையில் நடைபெற்றது.
ஆரம்ப நிகழ்வாக ஆண் பெண்களுக்கான மரதன் ஓட்டப்போட்டிகள் மற்றும் சைக்கிள் ஓட்டப்போட்டிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அத்தோடு இன்று மேதினத்தன்று (01.05) வவுனியா இந்துக்கல்லூரி மைதானத்தில் மாலை 2 மணிதொடக்கம் ஏனைய விளையாட்டு நிகழ்வுகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா நகருக்குள் நடத்தப்பட்டு வந்த மேதினக் கூட்டம் இம்முறை இன்று (01.05.2017) தொழிலாளர்கள், விவசாயிகளை இணைத்து வவுனியா செட்டிகுளப் பிரதேசத்திலுள்ள வீரபுரம் விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.
வீரபுரம் பிள்ளையார் ஆலயத்திலிருந்து எதிர்வரும் முதலாம் திகதி காலை 9 மணிக்கு மேதினப்பேரணி ஆரம்பமாகி வீரபுரம் விளையாட்டு மைதானத்தை அடையும். தொடர்ந்து பொதுக்கூட்டம் நடைபெறும் என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் மேதினம் குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் , செயலாளர் சிவசக்தி ஆனந்தன், மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள், செட்டிக்குள பிரதேச கட்சியின் ஆதரவாளர்கள் பொதுக்கூட்டத்தில் உரையாற்றவுள்ளனர்.
மே தினம் என்பது இன்று முதலாளிகளால் கொண்டாடப்படும் கேளிக்கை விழாவாக மாறியுள்ளது. கிராமங்களில் உள்ள விவசாயிகள், தொழிலாளர்கள், சிற்றூழியர்கள், மாணவர்கள், உத்தியோகத்தர்கள் ஒன்றிணைந்து உண்மையான மேதினமாக செட்டிகுளம் வீரபுரத்தில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி நினைவுகூர உள்ளது.
கிராமங்களில் உள்ள விவசாய, தொழிலாளர்களுக்கு அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் தினமாகவும், செட்டிகுளம் பிரதேசத்தில் உள்ள பொதுவான பிரச்சினைகளை அரசுக்கும், அதிகாரிகளுக்கும், உலகுக்கும் அறைகூவல் விடுக்கும் தினமாகவும் இம்மேதினம் நடைபெறவுள்ளது.
இன்று உலகை தனது சுரண்டலுக்குள் அகப்படுத்திவரும் உலகமயமாக்கல் என்னும் நவீன முதலாளித்துவத்தின் செல்லப்பிள்ளை, செட்டிகுளம் பிரதேசத்திலுள்ள இராசேந்திரம்குளம் கிராமத்தில் அமைந்துள்ள தையல் தொழிற்சாலையில் எவ்வாறு நுழைந்து தனது சுரண்டலை, ஒடுக்கு முறையை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது என்பதனை உலகுக்கு வெளிக்கொண்டுவரும் மேதினமாக இம்மேதினம் திகழ்கிறது.
போர்ச்சூழலை உலகமே எதிர்நோக்கியுள்ள இவ்வேளையில் தமிழ்த்தேசிய இனத்தின் உரிமைகளை வழங்குவதைத் தவிர்ப்பதற்கு உலகின் ஒட்டுமொத்த ஆளும்வர்க்கத்துடன் கைகோர்த்து நிற்கும் சிறிலங்கா அரசுக்கு எதிராக உழைக்கும் மக்கள் அனைவரும் இம்மேதினத்தில் அணிதிரண்டு எமது அறைகூவலை உலகுக்கு உரத்துச் சொல்வோம் வாரீர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர்கள் மூலம் ஒருமைப்பாட்டுடனான இலங்கையை கட்டியெழுப்புவோம் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கே.காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.
தொழிலாளர் தினம் தொடர்பாக ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச்செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த செய்தியில் மஸ்தான் எம்.பியினால் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நட்டின் முன்னேற்றத்திற்கு தங்காளால் ஆன அனைத்து ஒத்துழைப்புக்களையும் வழங்கும் தொழிலாளர் வர்க்கத்திற்கே உரித்தான இந்த நாளில் அனைத்து தொழிலார்களும் ஊருமைப்பாட்டுடன் செயற்பட வேண்டும்.
இன்றும் வட கிழக்கில் பட்டதாரிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை மிகவும் கவலையளிக்கின்றது. நாடு ஒரு பக்கத்தில் வளர்ச்சிப்பாதையில் பயணித்தாலும் இவ்வாறு பட்டதாரிகள் வீதியில் தொழிலொன்றை பெற்றுத்தருமாறு கோரி நிற்பது நல்லாட்சிக்கு ஏதுவானதல்ல.
மேலும் அரசியலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஊடக கொண்டாடும் எனது இரண்டாவது தொழிலாளர் தினமாகும் இந்த காலப்பகுதியில் என்னிடம் பணிபுரிகின்ற தொழிலார்களை நான் கௌரவப்படுத்தியுள்ளேன் அதுபோல ஏனைய தலைவர்களும் தங்களிடம் பனி புரியும் தொழிலார்களை கௌரவப்படுத்த வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பாகும்.
கடுமையாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வன்னி மாவட்டத்திலுள்ள பட்டதாரிகளுக்கு விரைவாக தொழில்களை பெற்றுக்கொடுக்குமாறு எமது கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களிடம் கோரியுள்ளேன் அதற்கு ஜனாதிபதியும் விரைவாக தீர்வொன்றை பெற்றுத்தருவதாக கூறினார்.
இன்று கண்டியில் இடம்பெறும் தொழிலாளர் தினத்திற்கு வன்னி மாவட்டத்திலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஆதரவாளர்களை 21 பேரூந்துகள் மூலம் அழைத்து செல்கின்றேன் இவ்வாறு நான் கூட்டிச்செல்வது எனது பலத்தை காட்டவல்ல மாறாக இந்த ஆதரவாளர்களை பார்த்தாவது ஜனாதிபதி எமது வன்னி மாவட்டத்துக்கான தொழில், அபிவிருத்திப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும்.
நேர்மையான தொழிலாளர்களால் உருவாக்கப்பட்ட நல்லாட்சியில் அனைத்து தொழிலாளர்களுக்கும் தொழிலாளர் தின வாழ்த்துக்கள். என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
100 பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொண்ட மொடல் அழகி அறுவையின் சிகிச்சையின் போது மாரடைப்பில் உயிரிழந்தார்.
கனடாவை சேர்ந்த பிரபல மொடல் அழகி கிறிஸ்டினா மார்ட்டெல்லி பிளாஸ்டிக் சர்ஜரியினை செய்து கொள்வதில் அதிக ஈடுபாடு கொண்டவர்.
தனது 17 வயதில் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் உடலின் ஒவ்வொரு பாகத்தினையும் மாற்ற ஆரம்பித்த இவர் தற்போது 100 அறுவை சிகிச்சையினை செய்துள்ளார்.
இதனால் இவருக்கு அதிகளவில் வாய்ப்புகள் குவிந்து வருமானம் பெருகியது. சமீபத்தில் மற்றொரு அறுவை சிகிச்சையினை செய்து கொள்ளும்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
பிரபல நிறுவனமான கூகுள் தனது பல்வேறு தயாரிப்புகளில் புதிய புதிய மாற்றங்களை ஏற்படுத்தி அதனை சந்தையில் அறிமுகப்படுத்தி வருகிறது.
சமீபத்தில் குறைந்த இணைய வேகத்தில் வீடியோக்கள் பார்க்கும் வண்ணம் தனது யூடியூப் பயன்பாட்டில் சில மாற்றங்களை செய்து ’யூடியூப்-கோ’ என்னும் புதிய தொழில்நுட்பத்தை சந்தையில் அறிமுகப்படுத்தியது.
இது மட்டுமல்லாது குறைவான இணைய வேகத்தில் இயங்கும் வண்ணம் கூகுள் மேப்-ல் சில மாற்றங்களை செய்துள்ளது.
பயனாளர் தனது விருப்பத்திற்கு ஏற்ப திரையின் கீழ் உள்ள டூல் பாரில் ஆப்ஷன்களை சேர்த்து கொள்ள முடியும்.
மேலும், ஒவ்வொரு திரையினையும் மொபைலில் சேமித்து வைத்து கொள்ளும் வசதியும் தரப்பட்டுள்ளதால் இணைய வசதி இல்லாத போதும் சேமித்து வைக்கப்பட்டுள்ள மேப்பினை பயனாளர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.
இலங்கை கிரிக்கெட் வீரர் மலிங்கா போலவே இருக்கும் ஒரு நபரின் புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவேற்றி ஜெயவர்தனே கலகலப்பூட்டியுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், குஜராத் அணியும் மோதின.
இந்த போட்டி குஜராத்தின் ராஜ்கோட் நகரில் நடைபெற்றது.
போட்டி முடிந்த பின்னர் மும்பை வீரர் லசித் மலிங்கா போன்று அச்சு அசல் உருவம் கொண்ட ஒரு நபர் மலிங்காவை சந்தித்து செல்பி புகைப்படம் எடுத்து கொண்டார்.
இந்த போட்டோவை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ள மும்பை அணியின் பயிற்சியாளர் மஹேல ஜெயவர்த்தனே, வெகு நாட்களுக்கு முன்னர் தொலைந்து போன தனது சகோதரரை மலிங்கா கண்டுபிடித்து விட்டார் என கிண்டலாக கூறியுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது.
இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் 11 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேசியாவின் ஜகார்தாவில் இருந்து தெற்கே 90 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ளது சியான்ஜூர் மாவட்டம். இப்பகுதியில் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த நான்கு கார்கள் மீது வரிசையாக பயங்கரமாக மோதியது.
அத்துடன் சாலையில் சென்ற மோட்டார் சைக்கிள்கள் மீதும் மோதியது. கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை இடித்துத் தள்ளிய பேருந்து, இறுதியில் ஒரு பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்தது. இதில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சுமார் 50 பேர் காயம் அடைந்துள்ளனர்.
பேருந்து கட்டுப்பாட்டை இழப்பதற்கு பிரேக் பிடிக்காதது காரணமாக இருக்கலாம் என பொலிசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் முதற்கட்ட விசாரணையின் முடிவில் மட்டுமே விபத்திற்கான காரணம் தெரிய வரும் என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தோனேசியாவில் பராமரிப்பு சரியில்லாத காரணத்தில் அடிக்கடி பேருந்து விபத்து நிகழ்ந்து வருவது வேதனைக்குரிய விடயமாக உள்ளது.