வவுனியா அரச அதிபரின் கோரிக்கையை நிராகரித்த விக்ஸ் காட்டு மக்கள் தொடர்ந்தும் போராட்டத்தில்!!

 
வவுனியா இராசேந்திரகுளம் விக்ஸ்காட்டு பகுதியில் வனத்துறையினரின் காணியில் கடந்த 7 ஆண்டுகளாக குடியிருந்து வந்த மக்கள் தமக்கான காணி அனுமதிப்பத்திரம் மற்றும் வீட்டுத்திட்டம் வழங்க வேண்டும் என்று தெரிவித்து நேற்று (22.02.2017) முதல் தொடர் போராட்டத்தை மேற்கொண்டு வந்தனர்.

இன்று (23.02.2017) காலை வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இராசேந்திரகுளம் விக்ஸ்காட்டிற்கு விஜயம் மேற்கொண்ட அரசாங்க அதிபர், வன இலகா அதிகாரி, வவுனியா பிரதேச செயலாளர், மேலதிக அரசாங்க அதிபர் உட்பட உயர் மட்டக்குழுவினர் அங்கு சென்று நிலைமைகளை ஆராய்ந்ததுடன் அப்பகுதியிலுள்ள ஆடைத் தொழிற்சாலைக்கு அருகிலுள்ள பகுதியில் 47 குடும்பங்களுக்குமான காணியினை தெரிவு செய்துள்ளதுடன் அப்பகுதியில் மக்களை குடியமர்த்தவதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன்,

குறித்த 47 குடும்பங்களைத் தவிர வேறு எவரும் அப்பகுதிக்குள் சென்று காணி பிடித்து குடியமர முடியாது என்று வன இலகா அதிகாரிகள் தெரிவித்துள்ளதுடன் மீறி அப்பகுதியில் குடி அமர்ந்தால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கருத்து தெரிவிக்கையில்..

தற்போது ஆடைத் தொழிற்சாலைக்கு அருகில் எம்மால் இனங்காணப்பட்ட பகுதியில் 47 குடும்பங்களுக்கும் காணி பகிர்ந்தளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மூன்று மாத கால அவகாசத்தின் பின்னர் அக்காணியினை வன இலகா திணைக்களமிடமிருந்து பெற்றுத் தருவதாகவும் அது வரையில் குறித்த ஒதுக்கப்பட்ட பகுதியில் குடியிருக்குமாறும் வன இலகா அதிகாரிகளால் எவ்வித இடையூறும் எற்படாது என்றும் தெரிவித்தார்.

எனினும் போராட்டம் மேற்கொள்பவர்கள் தமது வசிப்பிடக்காணியினைப் பெற்றுத்தருமாறும் வேறு பகுதிகளில் தம்மால் சென்று குடியமர முடியாது என்று தெரிவித்து தொடர்ந்து தமது போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் இடம்பெறும் போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைக்கு எதிராக பொதுமக்கள்!!

வவுனியா பாரதிபுரம் விக்ஸ்காட்டுப் பகுதியில் வசிக்கும் மக்கள் தமது காணிகளில் தாம் வாழ்வதற்கு அனுமதி வழங்கவேண்டும் என கோரி வவுனியா மாவட்ட செயலகத்தின் முன்பாக நேற்று (22.02.2017) காலை தொடக்கம் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

எனினும் இதுவரை எந்தவொரு அரசியல்வாதியும் தங்களின் குறைகளை கேட்டறியவில்லையெனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வாக்குகளுக்காக மட்டுமே மக்களை வந்து சந்திப்பதாகவும் தெரிவித்து இன்று (23.02.2017) அவ்விடத்திலியே இரண்டு நாள் போராட்டம் தொலைந்ததா தமிழ் தேசியம்?, தமிழ் தேசியம் பேசும் அரசியல்வாதி எங்கே?, எங்களுடைய வாக்கு இனிமேலும் உங்களுக்கு தேவைதானா?, தமிழ் அரசியல்வாதிகளே உங்களை நம்பி வாக்களித்த எங்களுக்கு இதுவா தீர்வு என பல்வேறு பதாகைகளை தாங்கிய வண்ணம் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியா தேக்கவத்தையில் வீடு முற்றாக எரிந்து நாசம்!!

 
இன்று(23.02.2017) மதியம் சுமார் 1.45 மணியளவில் தேக்கத்தைப் பகுதியில் வீடு ஒன்று முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

வீட்டில் யாருமற்ற வேளையில் திடீரென சமயலறையில் தீ விபத்தோன்று ஏற்ப்பட்டுள்ளது. இதனை பார்வையுற்ற அயலவர்கள் உடனே தண்ணீருற்றி தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

எனினும் இத் தீ விபத்து காரணமாக குளிர்ச்சாதனப்பெட்டி, அரைக்கும் இயந்திரம் என சமயலறையிலிருந்த அனைத்து பொருட்களுக்கு தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.

எனினும் இத் தீ விபத்து எரிவாயு ஒழுக்கின் காரணமாக இடம்பெற்றதா அல்லது மின்னொழுக்கு காரணமாக இடம்பெற்றதா என வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

வவுனியாவில் இரண்டாவது நாளாகவும் தொடரும் காணி மீட்பு போராட்டம்!!

 
வவுனியா, பாரதிபுரம், விக்ஸ்காட்டுப் பகுதியில் வசிக்கும் மக்கள் தமது காணிகளில் தாம் வாழ்வதற்கு அனுமதி வழங்கவேண்டும் என கோரி வவுனியா மாவட்ட செயலகத்தின் முன்பாக நேற்றையதினம் (22.02.2017) காலை 10 மணிக்கு ஆரம்பித்த போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

வவுனியா, பாரதிபுரம், விக்ஸ்காட்டுப்பகுதியில் கடந்த 6 வருடங்களுக்கு மேலாக வசிக்கும் சுமார் 47 குடும்பங்கள் தாம் தொடர்ந்தும் வனத்துறையினரால் தொந்தரவுக்குள்ளாவதாகவும்
இதேவேளை, தமக்கு காணி உறுதிப் பத்திரமோ, வீட்டுத்திட்டமோ இது வரை வழங்கப்படவில்லை எனவும் சுட்டடிக்காட்டியே இவ் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், சிறுவர்கள், முதியவர்கள் எனப் பலரும் இரவிரவாக போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பெயர்க் குழப்பத்தால் பறிபோன ஐ.பி.எல். வாய்ப்பு!!

பெயரில் ஏற்பட்ட ஒரு சிறு குழப்பத்தால் ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடும் வாய்ப்பைத் தவறவிட்டுள்ளார் மத்திய பிரதேச மானில வீரர் ஹர்ப்ரீத் சிங்.

இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கான ஏலம் கடந்த திங்களன்று நடைபெற்றது. அதற்கு முந்தைய தினம் இரவு, மும்பையின் அந்தேரி ரயில்வே நிலையத்தின் நடைமேடையில் விதிமுறைகளுக்கு எதிராக காரைச் செலுத்திச் சென்ற குற்றத்திற்காக மும்பையைச் சேர்ந்த இடதுகை சுழற்பந்துவீச்சாளரான ஹர்மீத் சிங் கைது செய்யப்பட்டார்.

இச்செய்தியை தனது ட்விட்டர் கணக்கில் வெளியிட்ட ஏ.என்.ஐ. என்ற இந்திய செய்தி ஊடகம் , தவறுதலாக ஹர்ப்ரீத் சிங் கைது செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டிருந்தது.

19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த துடுப்பாட்ட வீரராக அடையாளம் காணப்பட்ட ஹர்ப்ரீத் சிங்குக்கு ஐ.பி.எல். போட்டிகளில் விளையாட வாய்ப்புக் கொடுப்பதற்கு சில அணிகள் தயாராகவே இருந்தன. என்றாலும், அவர் மீது குற்றச்சாட்டு பதிவாகியிருப்பதை அறிந்த ஏல நிர்வாகிகள் அவரது பெயரை பட்டியலில் இருந்து நீக்கிவிட்டனர்.

இரண்டு நாட்களின் பின் நேற்று இந்தத் தவறைக் கண்டுபிடித்த ஏ.என்.ஐ. நிறுவனம், கைது செய்யப்பட்டவர் ஹர்ப்ரீத் சிங் அல்ல, ஹர்மீத் சிங் தான் என்று குறிப்பிட்டு, தவறுக்காக வருத்தம் தெரிவித்தது. எனினும், ஏலம் நிறைவடைந்து விட்டிருந்ததால் ஐ.பி.எல். வாய்ப்பைத் தவறவிட்டார் ஹர்ப்ரீத் சிங்!

ஏலத்துக்கு முந்தைய வாரம் நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி நினைவுக் கிண்ண இருபதுக்கு 20 போட்டித் தொடரில் அதிக ஓட்டங்களைக் குவித்த முன்னணி வீரராக ஹர்ப்ரீத் சிங் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா விபுலாநந்தாக் கல்லூரியில் சாரணியத்தின் தந்தை பேடன் பவல் பிரபுவின் 160 வது பிறந்த தினம்!!

 
வவுனியா விபுலாநந்தாக் கல்லூரியில் சாரணியத்தின் தந்தை ராபர்ட் பேடன் பவல் பிரபுவின் 160 வது பிறந்த தினத்தை முன்னிட்டு நேற்று (22.02.2017) காலை 8 மணிக்கு பாடசாலை அதிபர் அமிர்தலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

இதில் பிரதம விருந்தினர் MP.நடராஜா (கோட்டக்கல்விப் பணிப்பாளர்), சிறப்பு விருந்தினர்களாக வவுனியா மாவட்ட ஆணையாளர் M.S பத்மநாதன், உதவி மாவட்ட ஆணையாளர் G.கமலகுமார், கெளரவ விருந்தினர்களாக சாரண தலைவர் தற்பரன் ஆசிரியர் (விபுலாநந்தாக் கல்லூரி) மற்றும் வ.பிரதீபன்
ஜனாதிபதி சாரணர், உதவி சாரண தலைவர்(விபுலாநந்தாக் கல்லூரி) இவ் நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

தமிழர் திருமணத்தில் தாலி நுழைந்த கதை : ஒவ்வொரு தமிழனும் கண்டிப்பாக அறியவேண்டியவை!!

தாலி கட்டும் வழக்கம் பற்றி சில இணையங்களில் பிழையாக கிடைத்த தகவல்களை பதிவிட்டிருந்தமையை அண்மையில் காணக்கூடியதாய் இருந்தது .

சங்ககாலத்தில் தாலி கட்டும் கிரியை முறை திருமணம் இல்லை. சங்கமருவியகாலத்தில் சங்கக் காதல் சந்தேகக்காதல் ஆனது .

“பொய்யும் வழுவும் முற்றிய பின்னர் அய்யர் வகுத்தது கரணம் என்பர்” சங்கமறுவியகாலத்தில் …. கரணம் என்றால் “கிரியை” -முறையில் திருமணம் .

ஏன் சங்கமருவியகாலத்தில் திருமணம் கிரியை முறையில் மக்கள் மத்தில் சாட்சி வைத்து செய்ய வேண்டி நேர்ந்தது ?

சங்க காலத்தின் இறுதியில் அந்த தூய காதல் அசுத்தப்பட்டமையே காரணம் .

“நானும் அவனும் புணர்ந்த காலை குறுக்கு பார்த்திருந்த தான் பொய்ப்பின் நான் எது செய்வேன் யாருமில்லை தானே கள்வன்” இது ஒரு அபலைப்பெண்ணின் குரல் .

இந்த அடிகள் கர்ப்பமாக்கப்பட பெண்ணை, உறவின் பின்னர் பெண்ணை கைகழுவி விடும் போக்கு அதிகரித்தமையை காட்டுகிறது. ஆகவே கிரியை முறை திருமணம் தேவைப்பட்டது.

தாலி பற்றி..

தாலி என்ற சொல் தாலிகம் என்ற சொல்லின் அடியாக பிறந்தது. தாலிகம் என்றால் பனை மரம் என்று பொருள் படும் .

அதாவது பனை ஓலையில் இன்னாருக்கும் இன்னாருக்கும் இந்த நாளில் அல்லது இன்று அல்லது இந்த காலத்தில் திருமணம் என எழுதி அவர்களின் கழுத்தில் மக்கள் மத்தியில் காட்டுவார்கள். தாலி பொருளாகு பெயராகத்தான் இங்கே பயன்படுத்தப்படுகிறது .

பின்னைய காலங்களில் மனித சிந்தனை நாகரிகம் போன்றன வளர்ச்ச்சி அடைய பனையோலை இன்றைய பவுனாக அதாவது தங்கமாக மாறியுள்ளது.

தமிழனின் பண்பாடு கலாசாரம் போன்றவற்றை விபரிக்கும் ஒவ்வொரு செயலுக்கும் காரணம் கருத்து அதில் ஒரு நெகிழ்ச்சித்தன்மை உண்டு.

ஆக மொத்தத்தில் சங்கமருவிய காலமான கி.பி.3ம் நூற்றாண்டு தொடக்கம் கி.பி.6ம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியிலேயே திருமண கிரியை முறைகள் நடைமுறையில் இருந்தன என அறியக்கிடக்கின்றது.

காலில் ஆணி அடித்தார்கள் : சுமணனை அடித்தே கொன்றார்கள்:  இளஞ்செழியன் முன்னிலையில் சாட்சி!!

முழங்காலிடச் செய்து, கை மற்றும் கால்களை கட்டி உயிரிழக்கும் வரை அடித்தே கொலை செய்தார்கள் என யாழ். மேல் நீதிமன்றில் சாட்சியமளிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அடிப்பதை நிறுத்தவில்லை எனவும் மன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்.சுன்னாகத்தில் கைது செய்யப்பட்டு பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த சிறிஸ்கந்தராசா சுமணன் என்ற இளைஞனை பொலிஸார் சித்திரவதை செய்து கொலை செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் 8 பொலிஸ் அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டு, 7 பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்களில் 5 பேருக்கு எதிராக கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு கிளிநொச்சி நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள ஐந்து பேர் உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக சித்திரவதை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு யாழ். மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த சந்தேகநபர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள சித்திரவதை குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு விசாரணை நேற்று நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன் போது சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கு விசாரணையில் முதல் சாட்சியான ராசதுறை சுரேஷ் என்பவரது சாட்சியம் பதிவு செய்யப்பட்டது.

அதில் தெரிவிக்கப்பட்டதாவது, மாவீரர் தினம் அனுஸ்டித்தமைக்காக எம்மை சுன்னாகம் பொலிஸார் கைது செய்தனர். பின்னர் எம் மீது திருட்டு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

எம்முடன் சேர்த்து படுகொலை செய்யப்பட்ட சுமன்ன என்பவரையும் ஒரே அறையில் அடைத்து வைத்தார்கள். பின்னர் சுமனன் என்பவரின் கை மற்றும் கால்களை கட்டி அடித்தார்கள்.

தன்னை அடிக்க வேண்டாம் என கூறியபோதும் பொலிஸார் அதனை கருத்தில் கொள்ளவில்லை. பொலிஸாரின் தாக்குதல் காரணமாக சுமன்ன உயிரிழந்தார்.

உயிரிழந்த பின்னரும் தனது வெறித்தனம் அடங்காமல் பொலிஸார் அடித்தார்கள். மேலும், தனக்கு காலில் ஆணி அடித்து மின்சார கம்பியால் சூடு வைத்தார்கள்.

மேலும், தனது மர்ம உறுப்பை நசித்தார்கள். பின்னர் உயிரிழந்த சுமனனின் உடலை பொலிஸார் ஜூப் வண்டியில் ஏற்றிசென்றார்கள் என தெரிவித்தார்.

இதன்போது உங்களுக்கும், சுமனன் என்பவருக்கும் சித்திரவதை செய்து அடித்தவர்களை அடையாளம் காட்ட முடியுமா என பிரதி மன்றாதிபதி வினாவினார்.

இதனையடுத்து, எதிரி கூண்டில் இருந்த பொலிஸாரை அடையாளம் காட்டியதுடன், அவர்கள் என்னென்ன செய்தார்கள் எனவும் சாட்சியம் வழங்கியிருந்தவர் தெரிவித்திருந்தார்.

இதன் போது இரண்டாவது சாட்சியமாக துரைராசா லோகேஸ்வரன் என்பவரின் சாட்சியம் பெற்றுக்கொள்ளப்பட்டது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

2011ஆம் ஆண்டு 11ஆம் மாதம், 21ஆம் திகதி இரவு சுன்னாகம் பொலிஸார் எம்மை கைது செய்தனர். பின்னர் 2011ஆம் ஆண்டு 11ஆம் மாதம், 24ஆம் திகதி காலை 9 மணிக்கும் 10 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் சுமனன் என்பவரை பொலிஸார் கைது செய்து அழைத்து வந்தார்கள்.

இதன் போது சுமனது நெற்றியில் இரத்தம் வடிந்துகொண்டிருந்தது. தனிநாடு வேண்டுமா என்று கேட்டு எங்களை அடித்தார்கள். அத்துடன், மின்சார கம்பியால் சூடு வைத்ததாகவும் சாட்சியமளிக்கப்பட்டது.

இந்நிலையில், உங்களையும், சுமனனையும் கைது செய்த பொலிஸாரை அடையாளம் காட்ட முடியுமா என அரச தரப்பு விசாரணையின் போது கேட்கப்பட்டது.

இதன் போது எதிரி கூண்டில் இருந்தாவறு சந்தேகநபர்களை அடையாளம் காட்டியதுடம் அவர்களின் பெயர்களையும் சாட்சியாளர் சரியாக குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை, எதிரிகள் சார்பில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணிகள் குறித்த வழக்கில் பாதிக்கப்பட்ட நபர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பொலிஸ் நிலையத்தில் முறையிடவோ அல்லது அவரால் இந்த வழக்கு தொடரப்படவோ இல்லை என மன்றில் தெரிவித்திருந்தனர்.

அத்துடன், அவர் தற்போது இல்லை எனவும் அவர்கள் மன்றில் குறிப்பிட்டிருந்தனர். பாதிக்கப்பட்டதாக குறிப்பிடப்படுகின்ற சாட்சி இருந்தாலேயே அவரை எதிரி தரப்பு சட்டத்தரணிகள் குறுக்கு விசாரணை செய்யமுடியும்.

அதன் போதே குற்றச் சம்பவத்தின் உண்மை தன்மை மன்றுக்கு தெரியவரும். எனவே இந்த வழக்கில் அவ்வாறானதொரு சந்தர்ப்பம் இல்லையென குறிப்பிட்டிருந்தனர்.

இதனையடுத்து இந்த வழக்கினை நெறிப்படுத்தும் அரச சட்டத்தரணி, சித்திரவதைக்குள்ளாகி உயிரிழந்த நபரது மரண விசாரனையில் நபரது உடலில் 20க்கு மேற்பட்ட காயங்கள் உள்ளதாக தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், அவர் சித்திரவதை செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, அவற்றை அடிப்படையாக கொண்டு இந்த வழக்கை நடத்தமுடியும் என விண்ணப்பமொன்றை மேற்கொண்டிருந்தார்.

இதேவேளை, குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த நீதிபதி மா.இளஞ்செழியன், சித்திரவதை என்பது போர்க்குற்றம் எனவும், அது மனிதவுரிமை மீறல் குற்றமெனவும் குறிப்பிட்டார்.

சித்திரவதை வழக்கினை பாதிக்கப்பட்டவரது உறவினர் பாதுகாவலர் ஆகியோரது முறைப்பாடுகளின் அடிப்படையிலும் நடாத்தமுடியும் என உச்ச நீதிமன்ற தீர்ப்பொன்றை நீதிபதி மேற்கோள்காட்டியிருந்தார்.

சித்திரவதைக்கு உள்ளான நபர் உயிருடன் இல்லாவிட்டால் வழக்கை நடாத்த முடியாதென்றால் சித்திரவதைக்கு உள்ளான நபரை கொலை செய்துவிட்டால் வழக்கே இல்லாமல் தப்பித்துவிடலாம் என்ற நிலை ஏற்பட்டுவிடும் என்ற உயர் நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பையும் சுட்டிக்காட்டியிருந்தார்.

மேலும், இந்த வழக்கை தொடர்ந்து நடாத்துவதற்கும், குறித்த எதிரி தரப்பு சட்டத்தரணிகளது ஆட்சேபனை விண்ணப்பத்தையும் நிராகரித்து நீதிபதி மா.இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வானில் தோன்றிய அரிய தீ வானவில்!!

அரிய தோற்றம் கொண்ட “தீ வானவில்” ஒன்று சிங்கபூர் வான் பரப்பில் தோன்றியுள்ளது. இதனை சிங்கபூர் மக்கள் பலரும் காணக்கூடியதாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது “தீ வானவில்” குறித்து சிங்கப்பூரின் தேசியச் சுற்றுப்புற அமைப்பு தனது முகப்புத்த பதிவில் தகவலை வெளியிட்டுள்ளது.

ஒளி-விலகல் எனப்படும் அரிய விஞ்ஞான நிகழ்வில், சூரியன் அல்லது சந்திரனின் ஒளியைக் கொண்டு, காற்றில் நிறைந்திருக்கும் பனித்துகள்கள் “தீ வானவில்” தோற்றத்தை ஏற்படுத்துகின்றன என அமைப்பு பதிவிட்டுள்ளது.

மேலும், இது குறித்து நாசா கருத்து தெரிவிக்கையில், சூரியன் வானில் 58 டிகிரி கோணத்தில் மேகங்களுடன் ஊடுருவும் போது “தீ வானவில்” உருவாகின்றன என குறிப்பிட்டுள்ளது.

பாரிய தீ விபத்தில் இருந்து தப்பிய இலங்கை நாடாளுமன்றம்!!

நாடாளுமன்றத்தினுள் திடீரென ஏற்பட்ட தீயினால் ஏற்படவிருந்த பாரிய அழிவினை நாடாளுமன்ற ஊழியர்கள் தலையிட்டு தடுத்துள்ளனர்.

நாடாளுமன்றத்தை பார்வையிடுவதற்கு வருகைத்தந்திருந்த பாடசாலை மாணவர் ஒருவரின் கைக்குட்டை நாளுமன்றத்தின் உயரமான இடத்தில் உள்ள அதிக சக்தி வாய்ந்த மின்சார விளக்கின் மீது விழுந்து தீப்பற்ற ஆரம்பித்துள்ளது. இதனால் நாடாளுமன்ற சபை மற்றும் கட்டமைப்புகளுக்கு இடையில் இருந்து புகை எழுந்துள்ளன. இதனை பார்வையிட்ட ஊழியர்கள் இது தொடர்பில் பொலிஸாரிடம் அறிவித்துள்ளனர்.

உடனடியாக செயற்பட்ட பொலிஸார், குறித்த சந்தர்ப்பத்தில் நாடாளுமன்ற கட்டமைப்பில் இருந்த உள்நாட்டு, வெளிநாட்டு பார்வையாளர்கள் அனைவரையும் அவ்விடத்தில் இருந்து வெளியேற்றியுள்ளனர்.

சம்பவத்தை பார்த்த ஊழியர்கள் உடனடியாக அந்த மின்சார விளக்கிற்கு அருகில் சென்று எரிந்துக் கொண்டிருந்த கைக்குட்டையை அங்கிருந்து அகற்றியுள்ளனர்.

ஊழியர்களின் விரைவான செயற்பாடு காரணமாக ஏற்படவிருந்த பாரிய அனர்த்தம் தடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த ஊழியர்கள் உடனடியாக செயற்பட்டிருக்கவில்லை என்றால் தீயினால் ஏற்படவிருந்த பாரிய அழிவு தடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காரில் வந்து பிச்சையெடுக்கும் நபர்கள்!!

 
உணவுக்கும் வழியில்லை எனக் கூறி பிச்சை எடுக்கும் பலர், பெருந்தொகைப் பணத்துக்கு உரிமையாளர்களாக இருப்பது குறித்த செய்திகள் பல நாடுகளிலிருந்தும் அடிக்கடி வெளியாகுகின்றன.

இவ்வகையில், காரில் வந்து இறங்கி, பிச்சையெடுக்கும் நபர்கள் தொடர்பான செய்திகள் பிரித்தானிய ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் நகரில் அண்மையில் ஒரு குழுவினர் காரில் வந்து இறங்கிய பின்னர் பிச்சையெடுக்க ஆரம்பித்த காட்சிகள் படம் பிடிக்கப்பட்டுள்ளன.

மேற்படி குழுவினர் ருமேனியா நாட்டில் பதிவு செய்யப்பட்ட கார் ஒன்றில் கேம்பிரிட்ஜ் நகரில் வந்திறங்கினர்.

பின்னர் அவர்கள் நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் தனித்தனியாகப் பிரிந்து சென்று பிச்சையெடுக்க ஆரம்பித்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை வாகனத்தை தரித்து வைத்திருந்தமைக்கான கட்டணத்தையும் இவர்கள் செலுத்தினர் என நேரில் கண்ட ஒருவர் தெரிவித்ததாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சுப்பர் மார்கெட்டுக்குள் குதிரை சவாரியில் ஈடுபட்ட நபர்!!

சுப்பர் மார்கெட் ஒன்றுக்குள் நபர் ஒருவர் குதிரையில் சவாரி செய்தவாறு பொருட்களை கொள்வனவு செய்ய முயன்ற சம்பவம் தென் ஆபிரிக்காவில் அண்மையில் இடம்பெற்றது.

கிழக்கு கேப் நகரிலுள்ள மேற்படி சுப்பர் மார்கெட்டுக்குள் குதிரை மீது அமர்ந்தவாறு நுழைந்த அந் நபர், அங்குமிங்கும் திரிந்தார். பின்னர் அந் நிறுவனத்தின் முகாமையாளரால் அந் நபர் விரட்டப்பட்டார்.

அந் நபர் சுப்பர் மார்கெட்டுக்குள் குதிரை சவாரியில் ஈடுபடுவதைக் கண்ட ஒருவர் இது தொடர்பாக கூறுகையில், “அக் குதிரையைப் பார்த்தவுடன் விளம்பரத்துக்காக இந் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என எண்ணினேன்.

அந் நபரை முகாமையாளர் துரத்தியதைப் பார்த்தபோதே நிலைமை புரிந்தது. அவ் வேளையில் அங்கிருந்த மக்கள் அதிர்ச்சியில் வாய் திறந்தவாறு இக் காட்சியை பார்த்துக்கொண்டிருந்தனர் எனத் தெரிவித்துள்ளார்.

வெறித்தனமாக மொபைல் கடையை அடித்து நொறுக்கிய பெண்கள் : அதிர்ச்சி வீடியோ!!

டெல்லியில் பெண்மணி ஒருவர் தனது மொபைல் பழுதான காரணத்தால், கடை ஊழியர்களிடம் வெறித்தனமாக சண்டை போட்ட வீடியோ வெளியாகியுள்ளது.

மேற்கு டெல்லியில் உள்ள ரஜோரி கார்டன் பகுதியில் உள்ள மொபைல் கடையில் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு ஒரு பெண் சாம்சங் மொபைல் வாங்கியுள்ளார்.

அந்த மொபைல் சரியாக இயங்கவில்லை என்று கடந்த 20-ம் திகதி கடை ஊழியர்களிடம் தெரிவித்து, அதற்கு பதிலாக புதிய மொபைல் தருமாறு கேட்டுள்ளார்.

ஆனால், இதற்கு கடை ஊழியர்கள் மறுத்ததால், அம்மாவை அழைத்து வந்த அந்தப் பெண், கடையில் உள்ளவர்களைத் தாக்கியுள்ளார்.

இவர்களுக்கு ஆதரவாக இன்னொரு பெண்ணும் இணைந்து கடையில் உள்ள பொருட்களை அடித்து நொறுக்கியுள்ளார். இந்தக் காட்சி கடையில் இருந்த சிசிடிவியில் பதிவாகி உள்ளது. அங்கிருந்த ஒருவரும் தனது மொபைலில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

தற்போது அந்த மூன்று பெண்கள் மீதும் டெல்லி பொலிஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.

பெண் சிங்கமாக உருவெடுக்கும் ஜோதிகா!!

தனது கணவர் சிங்கமாக சீறியதை தொடர்ந்து தற்போது ஜோதிகாவும் பெண் சிங்கமாக உருவெடுக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த ஜோதிகா, தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியிருக்கிறார்.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஜோதிகா நடிப்பில் தற்போது ‘மகளிர் மட்டும்’ படம் உருவாகி வருகிறது.

இந்நிலையில், அடுத்ததாக பாலா இயக்கத்திலும் ஜோதிகா நடிக்கப்போவதாக சமீபத்தில் அறிவிப்பு ஒன்று வெளியானது.

பாலா அடித்தட்டு மக்களின் வாழ்வியலை தனது படங்களின் மூலம் பிரதிபலித்து வருபவர் அந்த வரிசையில், இந்த படத்தில் ஜோதிகாவின் கதாப்பாத்திரம் என்னவாக இருக்கும் என்பது பலருக்கும் பெரிய கேள்வியாக எழுந்து வந்தது.

இந்நிலையில், இப்படத்தில் ஜோதிகா எந்தமாதிரியான கதாப்பாத்திரத்தில் நடிக்கப்போகிறார் என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

இதில், ஜோதிகா பொலிஸ் அதிகாரியாக நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இதைப்பற்றி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஜோதிகாவின் கணவரான சூர்யா, சிங்கம் 1, 2, 3 என மூன்று பாகங்களிலும் பொலிஸ் அதிகாரியாக நடித்து வரவேற்பை பெற்றுள்ளார். அந்த வரிசையில் இந்த படம் மூலம் ஜோதிகாவும் பெண் சிங்கமாக உருவெடுக்கப் போவது அனைவருக்கும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனமும், பாலாவின் பி ஸ்டுடியோ நிறுவனமும் இணைந்து தயாரிக்கவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது

வயதெல்லை அதிகம் கொண்ட பெண்கள் வாழும் நாடு!!

உலகில் மிகக் கூடிய சராசரி வயதை உடைய பெண்கள் தென்கொரியப் பெண்களே என்று ஆய்வு ஒன்றில் இருந்து தெரியவந்துள்ளது. ‘த லேன்சே’ என்ற அமைப்பு நடத்திய ஆய்வொன்றில் இருந்தே இது தெரியவந்துள்ளது.

அபிவிருத்தியடைந்த நாடுகளில் வாழும் மனிதர்களின் சராசரி வயதெல்லை அதிகமே. என்றபோதும், அமெரிக்காவில் வாழும் பெண்களின் ஆயுட்காலம் 83 வயதுகளே என்றும் தெரியவந்துள்ளது. அதுமட்டுமன்றி, உலகில் ஆயுட்காலம் அதிமாக உள்ள நாடாக மொனாக்கோ விளங்குவதகவும்

மேற்படி ஆய்வின்படி, 2030ஆம் ஆண்டளவில் தென்கொரியப் பெண்களின் சராசரி ஆயுட்காலம் 91 ஆகவும் ஆண்களின் ஆயுட்காலம் 90 ஆகவும் இருக்கும் எனத் தெரியவந்துள்ளது.

பெரும் செல்வந்த நாடுகளிலும் பெண்களின் வயதெல்லை 90ஐ நெருங்கிவந்தாலும், அந்த வயதை அடைபவர்கள் ஒரு சிலரே என்றும் ஏனையவர்கள் 80 வயதுகளிலேயே மரணித்துவிடுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையைப் பொறுத்தவரையில் ஆண்களுடைய சராசரி வயதெல்லை 71 ஆகவும், பெண்களுடைய வயதெல்லை 78 ஆகவும் இருக்கின்றன. உலக நாடுகளின் அதிகூடிய வயதெல்லை உடையவர்களில் இலங்கை 67வது இடத்தில் இருக்கிறது.

கள்ளக் காதல்-சக ஊழியரால் 16 துண்டாக வெட்டப்பட்ட விமானப்படை அதிகாரி!!

கள்ளக் காதல் விவகாரத்தில் விமானப் படை அதிகாரி ஒருவரை சக ஊழியர் குடும்பத்துடன் சேர்ந்து வெட்டி கூறு போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் கள்ளக் காதல் விவகாரத்தில் விமானப்படை அதிகாரியை சக ஊழியர் ஒருவர் குடும்பத்துடன் சேர்ந்து வெட்டி கொலை செய்து உடலை 16 கூறுகளாக துண்டாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் விமான படை தளத்தில் விமானப்படை கார்போரேல் அதிகாரியாக விபன் சுக்லா(27) பணிபுரிந்து வந்தார். 2014ம் ஆண்டு பஞ்சாப் பதிண்டா விமானப் படை தளத்தில் விபன் சுக்லா பணியில் சேர்ந்துள்ளார்.

அவர் தன் மனைவி இல்லாமல் தனியாக வசித்து வந்துள்ளார்.
பணியில் சேர்ந்த சில மாதங்களிலேயே சார்ஜெண்ட் அதிகாரியான சுலேஷ் குமாரின் மனைவி அனுராதாவுக்கும் விபன் சுக்லாவுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இதில் அனுராதா கர்ப்பமானார். இதனால் கணவர் சுலேஷ் குமாரை டைவர்ஸ் செய்துவிட்டு விபன் சுக்லாவை திருமணம் செய்யவும் திட்டமிட்டார் அனுராதா. ஆனால் விபன் சுக்லா கருவை கலைக்குமாறு கூறி அனுராதாவை கைவிட்டுவிட்டார்.

இந்த விவகாரத்தால் சுலேஷ் குமார் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டது. சுலேஷ் குமார், அனுராதா மற்றும் அனுராதாவின் சகோதரர் பூஷன் மூவரும் விபன் சுக்லாவை கொல்வதற்கு சதித் திட்டம் தீட்டினர்.

இந்த திட்டத்தின்படி கடந்த 8 ஆம் திகதி இரவு 10.30 மணிக்கு சுக்லாவை உதவி செய்யுமாறு தமது வீட்டுக்கு அனுராதா அழைத்திருக்கிறார்.

அங்கு பதுங்கியிருந்த சுலேஷ் குமார், அனுராதாவின் சகோதர் பூஷன் ஆகியோர் விபன் சுக்லாவை கோடாரியால் வெட்டி கொலை செய்துள்ளனர்.

சுக்லாவின் உடலை ஒரு பெட்டியில் வைத்து பூட்டியது சுலேஷ்குமார் குடும்பம். பின்னர் கடந்த பிப்ரவரி 19-ந் திகதியன்று சுக்லாவின் உடலை 16 கூறுகளாக வெட்டி 6 பாலித்தீன் பைகளில் போட்டு அடைத்துவிட்டு புதிய வீட்டுக்கு போய்விட்டனர்

இதனிடையே கணவரை காணவில்லை என்று கடந்த 9ம் திகதி விபன் சுக்லாவின் மனைவி கும்கும் பலுவானா காவல் நிலையத்தில முறைப்பாடு அளித்துள்ளார்.

இதன்படி நடத்தப்பட்ட விசாரணையில் மோப்ப நாய் உதவியுடன் சுலேஷ் குமார் வசித்த வீட்டின் அலமாரி மற்றும் குளிர்சாதன பெட்டியில் இருந்து 16 பிளாஸ்டிக் பைகளில் இருந்து சுக்லாவின் உடல் மீட்கப்பட்டது.

இதையடுத்து சுலேஷ் குமார், அவரது மனைவி அனுராதா மற்றும் சகோதரர் பூஷன் ஆகியோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கள்ளக் காதல் விவகாரத்தில் விமானப் படை அதிகாரியை சக ஊழியரே வெட்டி கூறாக்கிய இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.