சிறுவனின் உடலை துண்டு துண்டாக வெட்டி சாப்பிட்ட நபர் : பதற வைக்கும் சம்பவம்!!

 
இந்தியாவில் 6 வயது சிறுவனை கொலை செய்து அவன் உடல் பாகங்களை வெட்டி சாப்பிட்ட நபரின் செயல் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் வசித்து வருபவர் Mohammad Naeem, இவருக்கு Monis (6) என்னும் மகன் உள்ளான்.

சம்பவத்தன்று Monis தன் வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருந்தான். வெளியில் போய் விட்டு Mohammad வீடு திரும்பிய போது அவர் மகன் Monis காணாமல் போயுள்ளான்.

அவர் மகனை எங்கு தேடியும் அவன் கிடைக்கவில்லை. இதனிடையில், Mohammad வீட்டருகே ஒரு வயதான பெண்ணுக்கு Nazim Mian என்னும் வாலிப வயதில் ஒரு மகன் உள்ளார்.

அவர் வீட்டில் Nazim தட்டில் எதையோ வைத்து சாப்பிட்டு கொண்டிருந்தார். அருகில் போய் அவர் தாய் அதை பார்த்த போது அதிர்ச்சியடைந்தார்.

காரணம், தட்டில் காணாமல் போன சிறுவன் Monisன் உடல் பகுதிகளான கை, கால், கழுத்து போன்றவைகள் துண்டாக இருந்துள்ளது.

இது குறித்து பின்னர் பொலிசுக்கு தெரிவிக்கப்பட பொலிசார் Nazimமை கைது செய்ததோடு அவன் சிறுவனை கொலை செய்ய பயன்படுத்திய கத்தியையும் கைப்பற்றினார்கள். Nazimவிடம் தற்போது தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

மது போதையில் இருந்த பெண்ணை ஒரே குடும்ப அகதிகள் கூட்டாக பலாத்காரம் செய்த கொடூரம்!!

 
ஒஸ்திரியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 அகதிகள் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ள வழக்கில் அவர்கள் குற்றவாளி என நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

ஒஸ்திரியா நாட்டில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் 28 வயதுடைய இளம்பெண் தன் தோழியுடன் மது அருந்த பாருக்கு சென்றுள்ளார். அங்கு ஈராக் நாட்டிலிருந்து ஒஸ்திரியாவில் தங்கியிருக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 அகதிகள் வந்துள்ளனர்.

அந்த பெண்ணுடன் அகதிகளில் 4 பேர் பேச்சு கொடுத்து நட்பாகியுள்ளனர். போதையில் இருந்த பெண்ணுக்கு திடீர் உடல் நல குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து அவர் தன் வீட்டுக்கு கிளம்பியுள்ளார்.

இந்த அகதிகளும் அவர் பின்னால் அவர் வீட்டுக்கு சென்றுள்ளனர். பின்னர் நிர்வாணமாக இருந்த அந்த பெண்ணை ஒருவர் பின் ஒருவராக அவர்கள் பலாத்காரம் செய்துள்ளனர்.

இதுகுறித்து பொலிசுக்கு புகார் அளிக்கப்பட்டதன் மூலம் இரு வருடங்களாக இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது.

தற்போது DNA சோதனை மூலம் 9 பேரில் 5 பேர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது, அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், மீதி 4 பேர் நிலுவையில் உள்ளனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தற்போது மனநோய் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தாயின் தலையை துண்டாக வெட்டி மாந்திரீக பூஜை செய்த மகன்: எதற்காக தெரியுமா?

கர்நாடகாவில் தாயின் தலையை பெற்ற மகனே துண்டாக வெட்டி மாந்திரீக பூஜை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் சித்திரதுர்கா பகுதியைச் சேர்ந்தவர் சவித்ராம்மா. இவருக்கு திம்மப்பா என்ற மகன் உள்ளார்.

இவருக்கு திருமணம் முடிந்துவிட்டதாகவும், ஆனால் பத்து ஆண்டுகளுக்கு முன்னரே இவரது மனைவி இவரை விவகாரத்து செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில் திம்மப்பாவுக்கும் அவரது தாய்க்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு உணவு உண்ணும் போது,திம்மப்பாவுக்கும் சவித்ராம்மாவுக்கு எப்போதும் போல வாக்குவாதம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

ஆனால் இந்த வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த அவர்,தனது தாயின் தலையை துண்டாக வெட்டியெடுத்து கொலை செய்துள்ளார்.

அதன் பிறகு தனது தாயின் தலையுடன், வீட்டை சுற்றி வந்து பூஜைகள் செய்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அருகில் இருந்த மக்கள் உடனடியாக பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் திம்மப்பாவை சரணடைந்துவிடுமாறு கூறியுள்ளனர்.

ஆனால் அவர் நேற்றிரவு தனது கனவில் வந்த கடவுள், தாயை பலி கொடுக்க சொன்னதாகவும், தற்போது கடவுளின் கட்டளையை நிறைவேற்றிவிட்டதாகவும் பொலிசில் கூறியுள்ளார்.

அதன் பின்னர் மறுநாள் காலை வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு அதிரடியாக உள்ளே சென்ற காவல்துறையினர், திம்மப்பாவை கைது செய்துள்ளனர்.

வெள்ளவத்தை ஊடாக யாழ்ப்பாணம் வரை பயணிப்போரின் கவனத்திற்கு!!

கொழும்பு கோட்டையில் இருந்து வெள்ளவத்தை வரையிலான ரயில் சேவைகள் நேற்று முதல் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.

தெஹிவளைக்கும் வெள்ளவத்தைக்கும் இடையிலான ரயில் பாதை இன்று தொடக்கம் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 4.00 மணி வரை மூடப்பட்டிருக்கும்.

இதன் காரணமாக இன்று தொடக்கம் ஞாயிறு வரை கொழும்பு கோட்டையில் இருந்து வெள்ளவத்தை வரையிலான சகல ரயில் சேவைகளும் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

இன்று தொடக்கம் ஞாயிறு வரை கல்கிசை, மாத்தறை ரயில் நிலையங்களில் இருந்து பயணத்தைத் தொடங்கி யாழ்ப்பாணம், காங்கேசன்துறை வரை பயணிக்கும் ரயில் வண்டியும், மாத்தறையிலிருந்து வவுனியா, கண்டி ஆகிய நகரங்கள் நோக்கி பயணிக்கும் ரயில் வண்டிகளும், கொழும்பு கோட்டையிலிருந்து பயணத்தைத் தொடங்க உள்ளன. இந்நகரங்களில் இருந்து திரும்பி வரும் ரயில் வண்டிகள் கோட்டையில் பயணத்தை பூர்த்தி செய்யும்.

தெற்கு கரையோர ரயில் பாதையில் தெஹிவளை, வெள்ளவத்தை ரயில் நிலையங்களுக்கு இடையில் அமைந்துள்ள பழைய பாலத்திற்குப் பதிலாக புதிய பாலத்தைப் பொருத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

வீட்டை திருமணம் செய்துகொண்ட பெண்!!

 
பிரிட்­டனைச் சேர்ந்த பெண்­ணொ­ருவர் தனது வீட்டை திரு­மணம் செய்­து­கொண்­டுள்­ள­தாகக் கூறு­கிறார். 43 வய­தான டெபோரா ஹொட்ஜ் எனும் இப் பெண், மேற்­படி வீட்­டி­லி­ருந்து வெளி­யேற்­றப்­ப­டு­வதை தவிர்ப்­ப­தற்­காக இத்­தீர்­மா­னத்தை மேற்­கொண்­டாராம்.

பேக்ஸ்­லேஹீத் நகரில் டெபோரா வசிக்கும் வீடு விற்­பனை செய்­யப்­ப­ட­வுள்­ளதால் அவ்­ வீட்­டி­லி­ருந்து வெளி­யேற்­றப்­படும் அபா­யத்தை அவர் எதிர்­நோக்­கு­கிறார். இதனால், இவ்­வீட்டை சொந்­த­மாக்­கு­வ­தற்­காக பொது­மக்­க­ளிடம் 400,000 ஸ்ரேலிங் பவுண்ட்ஸ் நிதி திரட்டும் நட­வ­டிக்­கைய ஆரம்­பித்தார்.

இதில் அவ­ருக்கு அதிக ஆத­ரவு கிடைக்­க­வில்லை. இவ்­ வி­ட­யத்தில் கவ­னத்தை ஈர்ப்­ப­தற்­காக தனது வீட்டை திரு­மணம் செய்­து­கொண்­டுள்­ளாராம் டெபோரா ஹொட்ஜ்.

இதற்­காக, தன்னை மண­ம­க­ளாக அலங்­க­ரித்­துக்­கொண்டு திரு­மண வைப­வ­மொன்­றையும் டெபோரா நடத்­தி­னாராம். “மற்றவர்கள் என்னைப் பற்றி என்ன கூறுகிறார்கள் என நான் கவலையடையவில்லை என்கிறார் டெபோரா.

மகன் விட்டுச் சென்ற குப்பைகளை பொதி செய்து விடுதிக்கு அனுப்பி வைத்த தாய்!!

 
அமெ­ரிக்­காவைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது மகனின் அறையில் கிடந்த குப்­பை­களை பொதி செய்து, தபால் மூலம் அம்­மா­ண­வனின் விடு­திக்கு அனுப்பி வைத்­துள்ளார்.

18 வய­தான கொனோர் கொக்ஸ் எனும் இந்த இளைஞர் பென்­சில்­வே­னியா மாநி­லத்தின் நியூ வில்­மிங்டன் நக­ரி­லுள்ள வெஸ்ட்­மின்ஸ்டர் கல்­லூ­ரியின் முதல்­வ­ருட மாணவர் ஆவார்.

அவர் தங்­கி­யுள்ள விடு­தியின் முக­வ­ரிக்கு அண்­மையில் ஒரு பொதி அனுப்­பப்­பட்­டி­ருந்­தது. தனது தாயாரின் கைப்பட முக­வரி எழு­தப்­பட்ட பொதியைக் கண்­ட­வுடன், தனக்கு உண­வுப்­பொ­ருட்­களை தாயார் அனுப்­பி­யுள்ளார் என அவர் எண்­ணினார்.

ஆனால், அந்த கார்ட்போட் பெட்­டியை திறந்­த­வுடன் கொனோர் கொக்­ஸுக்கு அதிர்ச்சி காத்­தி­ருந்­தது. வெறும் குப்­பை­களே அவற்றில் கிடந்­தன. இது தொடர்­பாக கொனோர் கொக்ஸ் கூறு­கையில், “இந்த குப்­பையைக் கண்­ட­வுடன் நான் எனது தாயாரை தொலை­பே­சியில் அழைத்து, தவ­று­த­லாக வேறு பொதியை அனுப்பி விட்­டீர்­களா எனக் கேட்டேன்.

அவர், “இல்லை. அது உனது அறையில் நீ விட்டுச் சென்ற குப்­பைகள்” என பதி­ல­ளித்தார்” எனத் தெரி­வித்­துள்ளார். தனது தாயார் நகைச்­சுவை உணர்வு நிறைந்­தவர் எனக்­கூறும் கொனோர் கொக்ஸ், தனக்கு அனுப்­பப்­பட்ட பொதியை படம்­பி­டித்து சமூக வலைத்­த­ளத்தில் வெளி­யிட்­டுள்ளார்.

வவுனியாவில் உயிருக்காகப் போராடும் 20 வயது இளைஞன் : மக்களின் உதவியை நாடி நிற்கும் தாய்!!

கிளிநொச்சி உதயநகர் மேற்கில் வசித்துவரும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தயாவதி கருணாமூர்த்தியின் மகனான கருணாமூர்த்தி தாருஷன் (வயது20) என்பவர், தனது இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டுச் செயலிழந்த நிலையில் வவுனியா வைத்தியசாலயைில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டுச் செயலிழந்துள்ளமையினால் இளைஞனின் உயிரைக் காப்பாற்ற அவசரமாக ஒரு சிறுநீரகத்தையாவது மாற்றீடு செய்ய வேண்டும் எனவும், அதற்காக 30 இலட்சம் ரூபா பணம் தேவைப்படும் என வதை்தியர்களால் கூறப்பட்டுள்ளது.

குறித்த இளைஞனின் குடும்பம் மிகவும் ஏழ்மையான நிலையில் வாழ்ந்து வருவதாகவும், இவரது குடும்பத்தில் இவரது தந்தை வன்னி யுத்தத்தில் அகப்பட்டு தனது வலது கையில் காயப்பட்டதுடன் வலது கை செயற்படாத நிலையில் கஷ்டங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டு ஏழ்மையான நிலையில் வாழ்ந்து வரும் இக்குடும்பத்தில் தனது இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு உயிருக்காகப் போராடி வரும் தாருஷனை உங்களது குடும்பத்தின் ஒரு உறவாகக் கருதி இவரது உயிரைக் காப்பாற்ற விரைந்து உதவுமாறு அவரது தாயார் கேட்டு கொண்டுள்ளார்.

மேலும், மனித உள்ளவர்களிடமிருந்து உதவியை எதிர்பார்த்துப் பணிவாக வேண்டி நிற்கின்றார்.

தங்களது உதவிகளை வழங்குவதற்கான தொலைபேசி இலக்கம் க.தயாவதி +94775785173 மற்றும் வங்கிக் கணக்கு இல 8155007744 (கொமர்ஷல் வங்கி) ஆகிய வழிகளில் மூலம் உதவிகளை வழங்க முடியும் என கூறப்படுகின்றது.

மேலதிக, பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனது தொலைபேசி இல. +94776913244 உடன் தொடர்புகொண்டு அறிந்துகொள்ள முடியும் என்பதுடன், இளைஞனின் வைத்தியசாலை சான்றிதழ், கிராம சேவையாளர், பிரதேச செயலகம் என்பவற்றால் உறுதிப்படுத்தப்பட்ட சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளது.

கரை ஒதுங்கியது 125 வயது ஆமை : மன்னார் வளைகுடாவுக்கு எச்சரிக்கை!!

கடல்சூழல் தூய்மை காவலர்களாக திகழ்பவை கடல் ஆமைகள். கடற்கரை ஓரங்களில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகள், காலநிலை மாறுபாடு,

கடலில் கலக்கும் கழிவுகளால் ஏற்படும் சூழல் கேடு, முறையற்ற வகையிலான மீன்பிடிப்பு போன்றவற்றால் சமீப காலமாக இந்த ஆமைகள் இனம் அழிவுக்கு உள்ளாகி வருகின்றன.

சித்தாமை, அலுங்காமை, பெருந்தலை ஆமை, தோணி ஆமை மற்றும் பச்சை ஆமை என 5 வகை கடல் ஆமைகள் இந்திய கடல் பகுதியில் காணப்படுகின்றன.

இனத்தை சேர்ந்த இந்த ஆமைகளில் கருவுற்ற பெண் ஆமைகள் முட்டையிடுவதற்கு தாங்கள் பிறந்த மணற்பாங்கான கடற்கரை பகுதிகளையே நாடி செல்கின்றன.

இவ்வாறு கரைக்கு வரும் ஒரு ஆமை சிறு குழியினை தோண்டி அதில் 100 முதல் 150 முட்டைகளை இட்டு அந்த குழியினை மூடிவிட்டு செல்கின்றன.

ஏழு முதல் 10 வாரங்களுக்குள்ளாக இந்த முட்டையில் இருந்து குஞ்சுகள் வெளிவரும். பெரும்பாலும் இரவு நேரங்களிலேயே ஆமை முட்டைகள் பொரிந்து குஞ்சுகளாக வெளியேறுவதால் இவை மற்ற விலங்குகளிடம் இருந்து தப்பித்து கொள்ளும்.

குஞ்சு பொரித்த சில நாட்களில் கடலுக்கு செல்லும் இவை அலையின் திசையினை நோக்கி நீந்த தொடங்குகின்றன.

கடல் ஆமைகள் மாமிச உணவிற்காகவும், அதன் தோலுக்காகவும் வேட்டையாடப்பட்டாலும் முறையற்ற மீன்பிடி முறைகளும் கடற்கரையோர பகுதிகளில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகளினாலும் இந்திய கடலோர பகுதிகளுக்கு இனப்பெருக்கம் செய்ய வரும் ஆமைக்கள் அரிதாகி விட்டன.

இந்த நிலையில் கடல் ஆமைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் மன்னார் வளைகுடா கடற்கரை ஓர பகுதிகளில் வன உயிரின பாதுகாப்பு அலுவலர்கள் ஆமை முட்டைகளை சேகரித்து, அவை குஞ்சு பொரிக்கும் வரை பாதுகாப்பதற்கென ஆங்காங்கே பாதுகாப்பு மையங்கள் அமைத்துள்ளனர்.

கடற்கரை ஓரங்களில் ஆமைகளால் இட்டு வைக்கப்படும் முட்டைகளை சேகரித்து இந்த மையங்களில் வைத்து குஞ்சு பொரித்த பின்னர் அவற்றை கடலில் விடும் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த 3 மாதங்களில் முகுந்தராயர் சத்திரம் முதல் தனுஷ்கோடி அரிச்சல் முனை வரையிலான கடற்கரை பகுதிகளில் இருந்து சுமார் 5500 முட்டைகள் சேகரிக்கப்பட்டு அவற்றில் இருந்து இதுவரை 240 குஞ்சுகள் பொரிக்கப்பட்டு கடலில் விடப்பட்டுள்ளன.

இந்த சூழலில் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் உள்ள அரிய வகை ஆமை ஒன்று நேற்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது.

ராமநாதபுரம் மாவட்டம், தாமரைகுளம் அருகே உள்ள வலங்காபுரி தெற்கு கடற்கரை பகுதியில் இறந்த நிலையில் ஒதுங்கிய இந்த பெண் ஆமையின் வயது 125 இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

250 கிலோ எடை கொண்ட இந்த ஆமை பாறையில் மோதி அடிபட்டு இறந்து கரை ஒதுங்கி இருக்க கூடும் என சொல்லப்படுகிறது.

இது குறித்து தகவல் அறிந்த வன உயிரின பாதுகாப்பு வனச்சரகர் சதீஷ், வனச்சரக அலுவலர்கள் ராதா, காளிதாஸ், முனியசாமி, கருப்பன் உள்ளிட்டோர் வலங்காபுரி கடற்கரை பகுதிக்கு சென்று இறந்த ஆமையின் உடலை கைப்பற்றினர்.

கால்நடை மருத்துவர் சரண்யா ஆமையின் உடலை கூராய்வு செய்த பின்னர் ஆமையின் உடல் அங்கேயே புதைக்கப்பட்டது.

இது போன்று ஆமையின் உயிரிழப்புகள் சமீப காலமாக அதிகரித்து வருவது குறித்து நம்மிடம் பேசிய வன உயிரின பாதுகாவலர்கள் ‘‘கடலில் வாழும் சிறு மீன்களை உணவாக கொள்ளும் சொறி மீன் எனப்படும் ஜெல்லி மீன்களை கடல் ஆமைகள் உட்கொள்கிறது.

இதனால் மீனவர்களுக்கு நல்ல விலையினை ஈட்டி தரும் பல மீன் இனங்களின் வளர்ச்சியை பாதுக்காப்பதுடன், கடலின் தூய்மையையும் பாதுகாக்க கடல் ஆமைகள் பெரிதும் உதவுகிறது.

மன்னார் வளைகுடா கடல் பகுதியான தனுஷ்கோடி பகுதி ஆமைகள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்க உகந்த பகுதியாக இருந்து வந்தது. இதனால் ஏராளமான ஆமைகள் இப்பகுதியில் காணப்பட்டு வந்தன. சமீப காலமாக இதற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

தனுஷ்கோடிக்கு அமைக்கப்பட்ட புதிய சாலைக்கும் கடலின் கரைக்கும் இடையே 30 முதல் 40 அடி அகலம் வரையிலான மணல் பகுதி இருந்து வந்தது.

புதிய சாலையினை பாதுகாப்பதற்காக இந்த மணல் பகுதியில் பெரும் பாறை கற்களை குவித்து தடுப்புகள் ஏற்படுத்தி வருகின்றனர். இதனால் கருத்தரித்த ஆமைகள் கரைக்கு வந்து முட்டையிட முடியாத சூழல் எழுந்துள்ளது.

கடற்கரை ஓரங்களில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகளால் அங்கு வாழும் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்த கூடாது. கழிவுகளை கடலில் கலக்க கூடாது.

இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை விளக்குகள் போட கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் இந்த உத்தரவை மதிக்காத தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் லாரி லாரியாக பாறாங் கற்களை கடற்கரை ஓரங்களில் குவித்து வருகின்றனர்.

இது பற்றி அவர்களிடம் பல முறை எடுத்து சொல்லியும் எதையும் காதில் வாங்கவில்லை. ஒருபுறம் தடை செய்யப்பட்ட வலைகளால் மீன்பிடிப்பதும், மறுபுறம் வளர்ச்சி என்ற பெயரில் கடல் வாழ் உயிரினங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலை தொடர்ந்தால் உலக உயிரின காப்பகமாக அங்கீகரிக்கப்பட்ட முதல் இந்திய கடல் பகுதியான மன்னார் வளைகுடா, வரும் காலத்தில் ஆமைகள் இல்லா வளைகுடா பகுதியாக மாறிவிடும்’’ என்றனர்.

ஒருபக்கம் மலைகளை ஆக்கிரமிப்பதால் வன உயிரினங்கள் ஊருக்குள் புகுகின்றன. மறுபக்கம் கடற்கரை ஓரங்களை அபகரிப்பதால் கடல்வாழ் உயிரிங்கள் கரைக்கு வர மறுக்கின்றன. என்ன செய்ய போகிறது அரசு?

தேள்கள், சிலந்­திகள், வண்­டு­களை சமைத்து உட்­கொண்ட ஹொலிவூட் நடிகை ஏஞ்­ச­லினா ஜோலி!!

 
ஹொலிவூட் நடிகை ஏஞ்­ச­லினா ஜோலி, தேள்கள், சிலந்­திகள் மற்றும் வண்­டு­களை சமைத்து உட்­கொண்­டுள்ளார். 41 வய­தான ஏஞ்­ச­லினா ஜோலி, ஹொலி­வூட்டின் முன்­னிலை நடி­கை­களில் ஒரு­வ­ராக விளங்­கு­கிறார்.

ஏஞ்­ச­லினா ஜோலி இயக்­கிய, First They Killed My Father (முதலில் அவர்கள் எனது தந்­தையைக் கொன்­றார்கள்) எனும் திரைப்­ப­டத்தின் வெளி­யீட்டு விழா கடந்த சனிக்­கி­ழமை கம்­போ­டி­யாவில் நடை­பெற்­றது. இதற்­காக தனது பிள்­ளை­க­ளுடன் கம்­போ­டி­யா­வுக்குச் சென்ற ஏஞ்­ச­லினா ஜோலி, படக்­கு­ழு­வி­ன­ருக்கு தானே உணவு சமைத்துப் பரி­மா­று­வ­தற்குத் தீர்­மா­னித்தார்.

இதன்­போது, சிலந்­திகள், தேள்கள் மற்றும் வண்­டு­களை ஏஞ்­ச­லினா ஜோலி பொரித்து உட்­கொண்­ட­துடன் அவற்றை தனது பிள்­ளை­க­ளுக்கும் பரி­மா­றினார். பி­சி­யிடம் இது தொடர்­பாக கருத்துத் தெரி­வித்த ஏஞ்­ச­லினா ஜோலி, “இவை இங்கு (கம்­போ­டி­யாவில்) எப்­போதும் உணவின் ஒரு பகு­தி­யாக உள்­ளன என எண்­ணு­கிறேன்.

அதே­வேளை, யுத்த காலத்தில் தப்பிப் பிழைப்­ப­தற்­கான ஒரு வழி­யா­கவும் இது உள்­ளது. மக்கள் பட்­டி­னியால் வாடும் நிலையில், இத்­த­கைய உண­வுகள் மூலம் அவர்கள் உயிர் பிழைக்­கலாம் எனக் கரு­து­கிறேன்’ எனத் தெரி­வித்தார்.

நடிகர் பிரட் பிட்டை திரு­மணம் செய்த ஏஞ்­சலி ஜோலி 3 பிள்­ளைளைப் பெற்றார். இவர்கள் தவிர மேலும் 3 பிள்­ளை­களைத் தத்­தெ­டுத்தார். அண்­மையில் பிரட் பிட்டும் ஏஞ்­ச­லி­னாவும் பிரிந்­தனர். பிள்­ளை­களை வளர்க்கும் உரி­மையை ஏஞ்­ச­லினா தக்க வைத்­துக்­கொண்டார்.

கம்­போ­டி­யாவில் பிறந்த அமெ­ரிக்க மனித உரிமை செயற்­பாட்­டா­ள­ரான லோங் உங் எனும் பெண் எழு­திய நாவ­லையே ஏஞ்­ச­லினா ஜோலி திரைப்படமாக இயக்கியுள்ளார். இத் திரைப்பட வெளியீட்டு விழாவில் கம்போடிய மன்னர் நோரோடொம் சிஹாமொனியும் கலந்துகொண்டார்.

சம்சுங் கலக்ஸி S8, கலக்ஸி S8 ப்ளஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகவுள்ளன!!

சம்சுங் நிறுவனம் அதன் புதிய கலக்ஸி S8, கலக்ஸி S8 ப்ளஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தவுள்ளது. இவற்றின் விலை மற்றும் நிற வகைகளை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த இரண்டு வகை ஸ்மார்ட்போன்களும் கறுப்பு, ஓர்க்கிட் சாம்பல் மற்றும் பொன்னிறத்தில் கிடைக்கவுள்ளன.

சம்சுங் கலக்ஸி S8 ஸ்மார்ட்போன் $950 விலையிலும் கலக்ஸி S8 ப்ளஸ் ஸ்மார்ட்போன் $1050 விலையிலும் கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒற்றை சிம் கொண்ட சம்சுங் கேலக்ஸி S8 ஸ்மார்ட்போன் அண்ட்ரோய்ட் 7.0 நெளகாட் மூலம் இயங்கும் எனவும் இதில் 2160×3840 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5.50 அங்குல முழு HD ட்ரிலுமினோஸ் டிஸ்ப்ளே உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் உடன் இணைந்து குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 ப்ரொஸசர் மூலம் இயக்கப்படுகிறது.

இதில் மைக்ரோ SD அட்டை வழியாக 128 ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு உடன் வருகிறது. LDE ஃபிளாஷ் கொண்ட 16 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் (குறிப்பிடப்படாத) மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமராவைக் கொண்டுள்ளது.

இந்த செல்பேசி 3000mAh பட்டரி திறன் மூலம் இயங்கும் எனவும் ஸ்மார்ட்போனின் இணைப்பு விருப்பங்களாக, Wi-Fi, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், ப்ளூடூத், ஜிஎஸ்எம், 3ஜி, 4ஜி எல்டிஇ மற்றும் மைக்ரோ-யூஎஸ்பி ஆகியவை உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒற்றை சிம் ஆதரவு கொண்ட சம்சுங் கலக்ஸி S8 பிளஸ் ஸ்மார்ட்போன் அண்ட்ரோய்ட் 7.0 நெளகாட் மூலம் இயங்கும் எனவும் இதில் 2160×3840 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 6.20 அங்குல முழு HD ட்ரிலுமினோஸ் டிஸ்ப்ளே இடம்பெறும் எனவும் இந்த ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் உடன் இணைந்து குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 ப்ரொஸசர் மூலம் இயக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது மைக்ரோ SD அட்டை வழியாக 128 ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு உடன் வருகிறது. சம்சுங் கலக்ஸி S8 ப்ளஸ் ஸ்மார்ட்போன், LDE ஃபிளாஷ் கொண்ட 16 மெகாபிக்சல் பின்புற கமரா மற்றும் (குறிப்பிடப்படாத) மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமராவைக் கொண்டிருக்கும்.

இது 3000mAh பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுகிறது. ஸ்மார்ட்போனின் இணைப்பு விருப்பங்களாக, Wi-Fi, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், ப்ளூடூத், ஜிஎஸ்எம், 3ஜி, 4ஜி எல்டிஇ மற்றும் மைக்ரோ-யூஎஸ்பி ஆகியவை உள்ளடக்கப்படவுள்ளன.

ஆபிரிக்காவில் பட்டினிச்சாவை எதிர்நோக்கும் 1.4 மில்லியன் சிறார்கள்!!

 

பட்டினிச்சாவை எதிர்நோக்கியுள்ள ஆபிரிக்க நாடுகளுக்கு உதவிகளை வழங்க உலக நாடுகள் சில முன்வந்துள்ளன. தென்சூடானில் பஞ்சத்தினால் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக UNICEF நிறுவனம் நேற்று முன்தினம் அறிவித்தது.

நைஜீரியா, சோமாலியா, தென் சூடான் நாடுகளில் 1.4 மில்லியன் சிறார்கள் பட்டினியால் உயிரிழக்கக்கூடிய அபாயமுள்ளதாக UNICEF எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதனையடுத்து, அவசர உதவி தேவைப்படும் தென்சூடானுக்கு 170 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ட் வழங்குவதற்கு பிரித்தானிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அத்துடன், நைஜீரியாவில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக ஜேர்மன் மற்றும் நோர்வே ஆகிய நாடுகள் உதவ முன்வந்துள்ளன.

நைஜீரியா, சோமாலியா, தென் சூடான் மற்றும் யேமன் உள்ளிட்ட ஆபிரிக்க நாடுகளில் சுமார் 20 மில்லியன் மக்கள் பட்டினிச்சாவு ஆபத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

இவர்களுக்கு உகவுவதற்கு எதிர்வரும் மார்ச் மாத இறுதிக்குள் 4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டேரஸ் தெரிவித்துள்ளார்.

ஐ.நா சபையில் நேற்று (22) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

யேமனில் இடம்பெற்றுவரும் இரண்டு வருட தொடர்ச்சியான உள்நாட்டுப் போரினால் சுமார் 10,000 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக குறிப்பிட்ட குட்டேரஸ், போரின் விளைவாக மக்கள் கடும் உணவுத் தட்டுப்பாட்டுக்கு முகம்கொடுத்துள்ளதாகவும் தெரவித்துள்ளார்.

மதிப்பீட்டின் அடிப்படையில் யேமனிலுள்ள 7.3 மில்லியன் மக்களுக்கு அவசர உதவி தேவைப்படுவதாக ஐ.நா செயலாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒன்பது மணிநேரம் தூங்குபவர்களா நீங்கள் : ஆய்வாளர்களின் அதிர்ச்சித் தகவல்!!

வழமையாக அதிகநேர தூக்கம் தேவைப்படாமல் இரவு நேரங்களில் ஒன்பது மணித்தியாலயத்திற்கு அதிகமாக தூங்குபவர்கள் டிமென்டியா எனும் மனநோயால் பாதிக்கப்படும் அபாயத்தை பெறுவதோடு, அல்சைமர்ஸ் எனப்படும் நினைவாற்றல் பாதிப்புறும் நோயின் தாக்கத்தின் ஆரம்ப அறிகுறிகளை வெளிப்படுத்தலாம் என புதிய ஆராய்ச்சிகள் வெளிப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நோய் ஆய்வானது சராசரியாக அறுபது வயதுடைய சுமார் 2500 பேரிடம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒன்பது மணித்தியாலயத்திற்கு அதிகமாக, தொடர்ச்சியாக தூங்கியவர்களுக்கு அல்சைமர்ஸ் நோயால் பாதிக்கப்படும் வாய்ப்புகள் இருமடங்கு இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமுள்ளதாக அமெரிக்காவின் போஸ்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.

மேலும் தொடர்ச்சியாக எத்தனை மணித்தியாலங்கள் தூங்குகிறார்கள்? என்ற கேள்வியானது டிமென்டியா எனப்படும் மனநோய் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளவர்களை இனங்காணுவதற்கு ஏற்புடையதாக இருக்குமென, அமெரிக்காவில் உள்ள போஸ்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐ.எஸ்.ஸிடமிருந்து விடுதலை பெற்ற பெண்கள் வித்தியாசமான முறையில் வெளிப்படுத்திய மகிழ்ச்சி!!

ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்திடம் இருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட கிராமப் பெண்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் காணொளியொன்று வெளியாகியுள்ளது.

இந்தக் காணொளி எந்தப் பகுதியில் பதிவுசெய்யப்பட்டது என்பது குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை அறியத்தரப்படவில்லை.

இந்தக் காணொளியில் முஸ்லிம் பெண்ணொருவர் தனது பெருமகிழ்ச்சியை வெளிப்படுத்தும் முகமாக, தனது முகத்திரையைக் கழற்றி நிலத்தில் எறிந்து காலால் மிதிப்பதையும், மற்றொரு பெண் அதற்குத் தீவைப்பதும் பதிவாகியுள்ளது. மற்றொரு பெண் சந்தோஷ மிகுதியில் சிகரெட்டும் புகைக்கிறார்.

குர்திஷ் கூட்டுப்படைகள் அந்தக் கிராமத்தில் உள்ள சிறுவர்கள் சிலருக்கு பழம் முதலிய பரிசுப் பொருட்களைப் பகிர்ந்தளிக்கும் காட்சியும், ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் ஆரவாரித்து நடனமாடும் காட்சியும் பதிவாகியுள்ளன.

வவுனியாவில் வெட்டப்பட்ட 40 மாடுகளின் கடத்தல் முறியடிப்பு!!

 
வவுனியாவில் வெட்டப்பட்ட 40மாடுகள் கொழும்பிற்கு கொண்டு செல்லப்பட்டபோது வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக துரத்திச் சென்று கைப்பற்றியுள்ளதாக வவுனியா வைத்திய சுகாதார அதிகாரி எஸ்.லவன் தெரிவித்துள்ளார்.

வவுனியா சோயா வீதியிலுள்ள மாடுகள் வெட்டும் தொடுவத்தில் நேற்று (23.02.2017) பிற்பகல் 2.30 மணியளவில் சட்டவிரோதமான மாடுகள் வெட்டப்படுவதை அறிந்து கொண்ட வைத்திய அதிகாரி சம்பவ இடத்திற்குச் சென்றுதுடன் வவுனியா மாவட்ட கால்நடை வைத்திய அதிகாரியின் உதவியும் பெறப்பட்டு வெட்டப்பட்ட மாடுகளை பரிசோதித்தபோது ஆவணங்கள், போக்குவரத்து ஆவணங்கள், மாடுகள் பெறப்பட்ட உரிமையாளர்களின் ஆவணங்கள், ஏதும் இன்றி சட்டவிரோதமான முறையில் கொழும்பிற்கு வெட்டப்பட்ட மாடுகள் கொண்டு செல்வதை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

குறித்த மாடுகள்  மாடு வெட்டும் தொடுவத்திலிருந்து கொழும்பு கொண்டு செல்லப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதில் சில உத்தியோகத்தர்கள் இலஞ்சம் பெற்று உதவி செய்துள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது.

கைப்பற்றிய வெட்டப்பட்ட மாடுகள் மற்றும் வாகனச்சாரதி ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறித்த மாடுகள் அனைத்தும் வயதில் குறைந்தது பசுமாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் போராட்டத்தில் ஈடுபடும் மக்களை சந்தித்த சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம்!!

 
வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக தொடர்ந்து இரண்டாம் நாளாக தமது நிலத்தை பெற்றுத்தருமாறு கோரி வவுனியா இராசேந்திரகுள மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப் போராட்ட தளத்திற்கு வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் இன்று இரவு விஜயம் செய்து போராட்டத்தில் ஈடுபடுபவர்களுடன் கலந்துரையாடி அவர்கள் கோரிக்கைகளை கேட்டறிந்ததுடன் தம்மால் முடிந்தளவில் உயர்மட்ட குழுக்களுடன் கலந்துரையாடி தீர்வை பெற்றுத்தர முயற்சிப்பதாக தெரிவித்திருந்ததுடன் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்கட்கு இரவுநேர உணவையும் வழங்கியிருந்தார்.

வவுனியாவில் கோவில்குளம் சிவன் ஆலயத்தில் இடம்பெறும் தேசிய மகா சிவராத்திரி பெருவிழா-2017

இலங்கை திருநாட்டின் இருதயமாய் விளங்கும் வன்னிபிரதேசத்தில் கோவில் கொண்டு  ஈழத்தின் ஆறாவது ஈஸ்வரமாக  போற்றப்படும் அகிலாண்டேஸ்வரம்  என்கிற கோவில் குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருகோவிலில் இம்முறையும் தேசிய மகா சிவராத்திரி விரதம் அனுஸ்டிக்க படவுள்ளது .

24.03.2017  வெள்ளிகிழமை  காலை 6.00 மணிமுதல் ஆரம்பமாகும் பூசை அபிசேகங்கள்  மறுநாள் காலை வரை  நான்கு கால  பூசைகளும்  அதிகாலை 5.30 மணிக்கு  வசந்த மண்டப பூசையும் தீர்த்தோற்சவமும்  இடம்பெறும் .

மேற்படி சிவராத்திரி  நிகழ்வின் ஆலயத்தில் கலைநிகழ்வுகள் இடம்பெற இம்முறையும் ஒழுங்கு சசெய்யப்படுள்ளது. சிவராத்திரி விரதமிருக்கும் அடியார்கள்  பாற்குடம்  எடுக்கும் அடியார்கள்  நேர காலத்துடன் அலுவலகத்தில் உங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம் .

சிவராத்திரி தினத்தன்று காலை ஒன்பது மணிமுதல் சமய தீட்சை வழங்கும் நிகழ்வும் இடம்பெறும் .

அடியார்களின் வசதி கருதி ஆலயத்தினால்  இரவு 6.00 மணிமுதல் அடுத்த நாள் காலை  6.00 மணி முதல் விசேட போக்குவரத்து  வசதிகளும் ஒழுங்கு செய்யபட்டுள்ளது .