புனித குர்ஆன் மீது சிறுநீர் கழித்து தீக்­கி­ரை­யாக்­கிய யுவதி 6 வருட சிறைத் தண்­ட­னையை எதிர்­நோக்­கு­கிறார்!!

புனித குர்ஆன் பிர­தி­யொன்றின் மீது சிறுநீர் கழித்­த­துடன், அதனை தீக்­கி­ரை­யாக்­கி­யவர் எனக் கூறப்­படும் யுவதி ஒருவர் 6 வருட சிறைத்­தண்­ட­னையை எதிர்­நோக்­கு­கிறார்.

ஸ்லோவாக்­கியா நாட்டின் ருஸோம்­பெரோக் எனும் நகரைச் சேர்ந்த ஷீலா ஸ்மேரே­கோவா எனும் 24 வய­தான யுவ­தியே இவ்வாறு நடந்து கொண்டாரென குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது.

இவர் புனித குர் ஆன் மீது சிறுநீர் கழித்து, பின்னர் அதை தீக்­கி­ரை­யாக்கும் காட்­சிகள் அடங்­கிய வீடி­யோ­வொன்றை இணை­யத்தில் வெளி­யிட்­டி­ருந்தார்.

இவ்­ வீ­டியோ பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­திய நிலையில், ஸ்லோவாக்­கிய பொலி­ஸாரால் ஷீலா ஸ்மேரே­கோவா அண்­மையில் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

இந்த யுவதி குர்ஆன் என எழு­தப்­பட்ட நூலொன்றை மேற்­படி வீடி­யோவில் காண்­பித்­த­தா­கவும் அது ஒரு குர்ஆன் என பல தடவைகள் கூறி­ய­தா­கவும் பொலிஸ் பேச்­சாளர் ஒருவர் தெரி­வித்­துள்ளார்.

வழக்கு விசா­ர­ணைகள் ஆரம்­ப­மாகும் வரை இந்த யுவதி விளக்­க­ம­றியலில் தடுத்து வைக்கப்பட வேண்டும் என பன்ஸ்கா பைஸ்ட்ரிக்கா நகரிலுள்ள விசேட நீதிமன்றமொன்று உத்தரவிட்டது.

தேசத்துக்கும் இனத்துக்கும் அவதூறை ஏற்படுத்தயமை, தேசிய, இன ரீதியான வெறுப்புணர்வைத் தூண்டியமை உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் ஷீலா ஸ்மேரேகோவா மீது சுமத்தப்பட்டுள்ளன. இவருக்கு 6 வருட சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

பூமி அளவில் ஏழு புதிய கோள்கள் கண்டுபிடிப்பு!!

வரலாற்றில் முதன் முறையாக பூமி அளவில் இருக்கும் ஏழு கோள்களை விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

பூமியிலிருந்து 39 ஒளியாண்டு தொலைவில் இருக்கும் இந்த கோள்களில் மனிதர்கள் வாழ சாத்தியம் உள்ளதாக தற்போது வரை கிடைத்திருக்கும் தகவல்களில் தெரியவந்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

குறித்த கோள்களில் நீர் மற்றும் வாழக்கூடிய தன்மைகள் இருக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது என விண்வெளிஆராய்ச்சியாளர் மைக்கேல் கில்லான் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே வானியல் ஆரய்ச்சியாளர்கள் ஏழு கோள்களை கண்டுபிடித்துள்ளனர். எனினும் அவை அனைத்தும் பூமி அளவில் இருக்கவில்லை இதனால் பூமி அளவு கொண்ட ஏழு கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து கோள்களும் ஒரே சுற்றுப் பாதையில் பயணிக்கிறது என்பதால் இவற்றின் ஒரு பகுதியில் நீர் இருப்பதற்கான சாத்தியம் அதிகம் என கூறப்படுகிறது. புதிய கோள்கள் குறித்து ஓரளவு தகவல்கள் மட்டுமே கிடைத்துள்ள நிலையில் இந்த கோள்களில் வாழக் கூடிய தன்மைகள் இருப்பது மேலும் ஆய்வுகள் நடத்தி பின்பு தான் உறுதியாக தெரிவிக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் இருளிலும் தொடரும் மக்களின் போராட்டம்!!

 
வவுனியா பாரதிபுரம் விக்ஸ் காட்டுப்பகுதியில் வசிக்கும் மக்கள் தமது காணிகளில் தாம் வாழ்வதற்கு அனுமதி வழங்கவேண்டும் எனக்கோரி வவுனியா மாவட்ட செயலகத்தின் முன்பாக இன்று(22.02.2017) காலை 10.30 மணிக்கு ஆரம்பமாக இப் போராட்டமானது தற்போதும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

வவுனியா பாரதிபுரம் விக்ஸ் காட்டுப்பகுதியில் கடந்த 5 தொடக்கம் 6 வருடங்களாக வசிக்கும் சுமார் 40 குடும்பங்கள் தாம் தொடர்ந்தும் வனத்துறையினரால் தொந்தரவுக்குள்ளாவதாகவும் தாம் வாழும் காணியை தமக்கு வழங்குவதற்கான வாக்குறுதி வழங்கியபோதிலும் இதுவரை எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனவும் தெரிவித்தே இம் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து தமது நிரந்தர காணிக்கு போராடும் 30பொதுமக்களுக்கு தமிழ் விருட்சம் அமைப்பினரால் இரவு உணவு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா வளாகத்தை வன்னிப் பல்கலைக்கழகமாக மாற்றுமாறு கோரிக்கை!!

 
வவுனியா வளாகத்தை வன்னிப் பல்கலைக்கழகமாக மாற்றக் கோரி துண்டுப்பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. வவுனியா பல்கலைக்கழக மாணவர்களே குறித்த துண்டுப்பிரசுரங்களை விநியோகம் செய்து வருகின்றனர்.

எமது கோரிக்கைகளை ஏற்று வவுனியா வளாகத்தை வன்னிப் பல்கலைக்கழகமாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வன்னி பல்கலைக்கழகமே எமக்கு அவசியம் என்பதை வலியுறுத்தி எதிர்வரும் 28ஆம் திகதி மாபெரும் ஊர்வலம் ஒன்றினை நடத்தவுள்ளதாகவும் அனைவரும் அணி திரண்டு வர வேண்டும் எனவும் குறித்த துண்டு பிரசுரத்தினூடாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வவுனியா வளாக ஆசிரியர்கள், மாணவர்கள், ஊழியர்கள்,பொது அமைப்புகள், பொது மக்கள் ஆகியோர் ஒன்றிணைந்து குறித்த போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூன்றாவது T20 போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி : தொடரை 2-1 எனக் கைப்பற்றிய இலங்கை அணி!!

இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான T20 போட்டியில் அவுஸ்திரேலியா அணி 41 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

அவுஸ்திரேலிய மண்ணில் T20 போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்த முதல் சந்தர்ப்பம் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.

அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்றது. எனினும், இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடுவதற்கு தீர்மானித்தது.

இதன் பிரகாரம், முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்து 187 ஓட்டங்களைப் பெற்றது. அணி சார்பில் மைக்கல் கிளிங்கர் 62 ஓட்டங்களைக் குவித்தார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 18 ஒவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 146 ஓட்டங்களைப் பெற்றது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரரான டில்ஷான் முனவீர அணி சார்பில் 37 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றுக்கொண்டார்.

எவ்வாறாயினும், மூன்று போட்டிகளைக் கொண்ட இந்த தொடரை 2-1 என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் லட்சக்கணக்கான வெளிநாட்டினர் வெளியேறும் அபாயம்!!

டோனால்ட் டிரம்பின் புதிய விசா தடைச் சட்டத்தால் அமெரிக்காவில் இருந்து லட்சக்கணக்கான வெளிநாட்டவர்கள் வெளியேறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவுக்குள் நுழைய ஈரான், ஈராக், சிரியா உள்ளிட்ட 7 முஸ்லிம் நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்க ஜனாதிபதி டிரம்ப் உத்தரவு பிறப்பித்தார். அதற்கு அமெரிக்காவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அமெரிக்காவில் உள்ள நீதிமன்றங்களும் தடை விதித்ததன.

இந்தநிலையில் நேற்று திருத்தம் செய்யப்பட்ட புதிய விசா தடை உத்தரவை டிரம்ப் பிறப்பித்துள்ளார்.

அதில் ஏற்கனவே, அமெரிக்காவில் குடியிருக்கும் வெளிநாட்டினர் ஏதாவது சிறிய குற்ற செயல்களில் ஈடுபட்டாலோ, எல்லை தாண்டி வந்தாலோ கைது செய்யப்பட்டு வெளியேற்றப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் லட்சக்கணக்கான வெளிநாட்டினர் வெளியேற்றப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இது அமெரிக்காவில் தங்கியிருக்கும் வெளிநாட்டினர் மீது நடத்தப்படவுள்ள மறைமுக தாக்குதலாக கருதப்படுகிறது.

உயிரைப் பறித்த கார்ட்டூன் படம் : பதறவைக்கும் சம்பவம்!!

சிறுவன் ஒருவன் தனது சகோதரனுடன் கார்ட்டூன் படத்தில் வரும் காட்சி போன்று, துப்பட்டாவை எடுத்து சுழற்றி விளையாடிக் கொண்டிருந்த போது தவறுதலாக கழுத்து இறுதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த பரிதாப சம்பவம் சாய்ந்தமருதில் இடம்பெற்றுள்ளது.

எட்டு வயதுடைய ஹ_ஸைப் ரஷா என்ற சிறுவனே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது..

பெற்றோர் தொழிலுக்கு சென்றிருந்த நிலையில் பாட்டியின் பராமரிப்பில் இருந்த தனது இளைய சகோதரனுடன் வீட்டின் மேல் மாடியில் ஷோல் எனும் துப்பட்டையை கார்ட்டூன் படத்தில் செய்வது போன்று சுழற்றி விளையாடிக் கொண்டிருந்தபோது, கழுத்து இறுகி, பரிதாபகரமாக இச்சிறுவன் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

வவுனியா நகரசபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வீதி விளக்குகள் பொருத்தப்பட்டது!!

 
வவுனியா நகரசபையினரால் நகரசபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வீதி விளக்குகள் பொருத்தப்பட்டு வருகின்றது.

வவுனியா நகர்புறங்களில் ஏற்கனவே வீதி விளக்குகள் பொருத்தப்பட்ட நிலையில் இன்று புறநகர்ப்பகுதிகளாகிய தாண்டிக்குளம், கோவில்குளம், பூந்தோட்டம் மற்றும் ஓயார் சின்னக்குளம் போன்ற பகுதிகளில் வீதி விளக்குகள் பொருத்தும் நடவடிக்கையில் நகரசபை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இச்செயற்பாடு குறித்து கருத்து தெரிவித்த நகரசபை செயலாளர் த.தயாபரன்,

பொது மக்களின் வேண்டுகோளுக்கிணங்க பல சிரமத்திற்கு மத்தியில் நகரசபை வீதி விளக்குகளை பொருத்தும் நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றது.

மின்சாரத்தை மிச்சப்படுத்தும் நோக்கில் பொதுமக்கள் தங்கள் ஒத்துழைப்பை வழங்கவேண்டும். தங்கள் வீடுகளுக்கு முன் மின் கம்பத்தில் பொருத்தப்பட்டுள்ள தெரு விளக்குகளை வீணாக எரிய விடாது காலக்கிரமத்தில் அணைக்க வேண்டும் இதன் காரணமாக மின்சாரத்தையும் கட்டணத்தையும் சேமிக்க முடியும் என்பதோடு நகர அபிவிருத்தியில் பொது மக்களின் ஒத்துழைப்பு அவசியம் எனக் குறிப்பிட்டார்.

லஞ்சம் கேட்டு மிரட்டிய காவலர்களை லாவகமாக மாட்டிவிட்ட காதலர்கள்!!

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் பூங்காவில் அமர்ந்திருந்த காதல் ஜோடியை சீண்டிய காட்சியை பாதிக்கப்பட்ட இளைஞர் ஃபேஸ்புக் லைவ்ஸ்ட்ரீமிங்கில் ஓடவிட்ட வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

கடந்த செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் விஷ்ணு விச்சு மற்றும் ஆர்த்தி ஆகியோர் திருவனந்தபுரத்தில் உள்ள பூங்கா ஒன்றில் அமர்ந்து பேசி கொண்டு இருந்திருக்கிறார்கள்.

அப்போது அங்கே வந்த 2 மகளிர் காவல் அதிகாரிகள், இருவரையும் காவல் நிலையம் வருமாறு மிரட்டியுள்ளனர். எதற்காக வரவேண்டும் என்று விஷ்ணு கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு பொது இடத்தில் ஆபாசமாக நடந்துக் கொண்டதால் இருவரும் வரவேண்டும் என மிரட்டியதுடன் மற்ற இரண்டு ஆண் காவலர்களின் உதவியுடன் இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

காவல்நிலையத்தில் வைத்து காதலர்களை மிரட்டியிருக்கிறார்கள். பின்னர் இருவரும் 200 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் துன்புறுத்தியுள்ளனர்.

காவல்யிதுறையினரின் அத்துமீறலை சகிக்க முடியாத விஷ்ணு தனது செல்போனில் இருந்து இந்த காட்சிகளை ஃபேஸ்புக்கில் லைவ் செய்து, காவலர்களின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ பகிரப்பட்டதையடுத்து பல்வேறு குழுவினரும் காவல்துறையின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.

இருவரும் விரைவில் திருமணம் செய்துக்கொள்ளவிருக்கிறோம். ஆகையால் இந்தச் சம்பவம் எங்களுக்கு ஒருபொருட்டல்ல என அப்பெண் கூறியுள்ளார்.

இது குறித்து மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், உரிய புகார் பெறப்பட்ட பின்னர் தான் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இது மிகவும் கலாச்சாரம் சார்ந்த பிரச்சனை என்பதால் காவலர்கள் வேண்டுமென்றே இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுப்பட்டிருக்க மாட்டார்கள் என்று கூறியுள்ளார்.

வவுனியாவில் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் 180 பேர் காணி விபரங்களைக் கோரி விண்ணப்பம்!!

 
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் தாம் குடியிருக்கும் காணிகளின் விபரங்களை கோரி 180 குடும்பங்கள் வவுனியா பிரதேச செயலகத்தில் விண்ணப்பித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது..

இம் மாதம் 3 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்த தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கடந்த 15-27 வருடங்களாக தாம் நிரந்தரமாக குடியிருக்கும் காணி உரிமையாளர்களின் விபரங்களைக் மக்கள் கோரியுள்ளனர்.

நீண்டகாலமாக இக் காணிகளில் மக்கள் குடியிருக்கின்ற போதும் அவர்களது காணிகளுக்கான அனுமதிப் பத்திரங்கள் இதுவரை வழங்கப்படவில்லை. இதனால் அப்பகுதி காணிகள் யாருடைய பெயரில் உள்ளன..?, நீண்டகாலமாக அதில் வசிக்கும் தமக்கு அக்காணிகள் வழங்கப்படாமைக்கான காரணம் என்ன..? என தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பங்களைப் பெற்று 180 குடும்பங்கள் வவுனியா பிரதேச செயலகத்தில் விபரங்களைக் கோரியுள்ளனர்.

அன்புக்கும் நட்புக்குமான வலையமைப்பின் ஏற்பாட்டில் வவுனியாவின் நெளுக்குளம், ஊர்மிளாக்கோட்டம், காத்தான்கோட்டம், ஈசன்கோட்டம், அம்பிகைபாலன் கோட்டம், தாஸ்கோட்டம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்களே இவ்வாறு விண்ணப்பங்களைக் கையளித்துள்ளனர்.

அதனைப் பெற்றுக் கொண்ட வவுனியா பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் அ.ஜெயரட்ணம் 14 நாட்களுக்குள் இது தொடர்பில் அறியத்தருவதாக கூறி, அவர்களது விண்ணப்பங்களைப் பெற்றுக் கொண்டமைக்கான பதில் கடிதத்தை வழங்கியுள்ளார்.

வவுனியாவில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் நான்கு பேர் சமூகத்துடன் இணைப்பு!!

 
வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெற்று வந்த முன்னாள் விடுதலைப் புலிகள் நான்கு பேர் இன்று (22.02.2017) காலை சமூகத்துடன் இணைத்து வைக்கப்பட்டனர்.

வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையப்பணியகத்தில் பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையப் பணிப்பாளர் கேணல் ஹமில்டோன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், புனர்வாழ்வு நிலைய பயிற்சிப் பொறுப்பாளர் கேணல் சித்திரகுணதூங்க, பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையப் பொறுப்பதிகாரி பிரியந்த குணசேகர, புனர்வாழ்வு நிலைய பின்னாய்வு அதிகாரி ஏகன் பெர்ணான்டோ, பூந்தோட்டம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, சமயத் தலைவர்கள், முன்னாள் போராளிகளின் குடும்ப உறுப்பினர்கள், படையினர், பொலிசார், விமானப்படையினர் என பலரும் கலந்து கொண்டனர்.

விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்ற உத்தரவுக்கமைய ஒருவருட புனர்வாழ்வைப் பூர்த்தி செய்த தேவராஜா ஜெகதீபன் (மட்டக்களப்பு), ரங்கசாமி நந்தகுமார் (மட்டக்களப்பு), யோசப் டின்டாஸ் விவிலியன் (மட்டக்களப்பு), கணேசன் துசாந்தன் (மட்டக்களப்பு) ஆகிய நான்கு பேர் தமது குடும்பத்துடன் இணைத்து வைக்கப்பட்டனர்.

வவுனியா ​தட்சணாங்குளம் மயானத்தை தோண்டும் பணி நிறுத்தம் : நடந்தது என்ன?

 
வவுனியா பண்டாரிகுளம், தட்சணாங்குளம் இந்து மயானத்தில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் புதைக்கப்பட்டுள்ளது என்ற சந்தேகத்தின் பேரில் வவுனியா நீதிமன்ற அனுமதியுடன் குறித்த பகுதி இன்று தோண்டப்பட்ட போதும் பொருட்கள் எவையும் மீட்கப்படவில்லை. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது..

கடந்த சில தினங்களுக்கு முன்னர் வவுனியா, பண்டாரிகுளம் தட்சனாங்குளம் இந்து மயானத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் சிலர் நடமாடியிருந்ததுடன், அங்கு மூன்று இடங்களில் குழிகள் வெட்டப்பட்டும் இருந்தன. அக் குழி ஒன்றின் அருகில் இராணுவத் தேவைக்கு பயன்படுத்தப்படும் உரைப்பை ஒன்றும் சிதைவடைந்த நிலையில் காணப்பட்டது.

இதனையடுத்து குறித்த மயானத்தில் விடுதலைப்புலிகளால் புதைத்து வைக்கப்பட்ட ஆயுதங்கள் அல்லது நகைகள் இருக்கலாம் எனக் கருதி பொலிசார் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். செவ்வாய்கிழமை காலையிலிருந்து மயானத்தைச் சுற்றி பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

இதனையடுத்து வவுனியா நீதிமன்றின் அனுமதி பெற்று நீதிமன்ற உத்தியோகத்தர் என்.முருகதாஸ் முன்னிலையில் வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா, அப்பகுதி கிராம அலுவலர் உமாபதி, வவுனியா பொலிஸ் நிலை பதில் பொறுப்பதிகாரி, வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார், விசேட அதிரடிப்படையினர், தொல்பொருள் ஆராச்சியாளர்கள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் குறித்த பகுதி கனகரக வாகனத்தின் உதவியுடன் தோண்டப்பட்டது. நீண்ட நேரமாக தோண்டப்பட்ட போதும் அப்பகுதியில் இருந்து எவையும் மீட்கப்படவில்லை. அதன் பின்னர் அக்குழிகள் மீண்டும் மூடப்பட்டன.

இதேவேளை, குறித்த சில தினங்களுக்கு முன்னர் அப்பகுதி தோண்டப்பட்டு அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த பொருட்கள் காணாமற்போயிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.

வவுனியாவில் பன்றிக் காய்ச்சல் காரணமாக இருவர் வைத்தியசாலையில் அனுமதி : அவதானம்!!

வவுனியாவில் கடந்த இரு தினங்களில் இருவர் பன்றிக் காய்ச்சல் காரணமாக அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக வவுனியா பொது வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் கு.அகிலேந்திரன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

அண்மையில் கிளிநொச்சிப் பகுதியில் இனங்காணப்பட்ட பன்றிக் காச்சல் தொற்று இன்று வவுனியாவில் 25 வயதுடைய குழந்தை பிரசவித்த பெண் ஒருவரும், பூவரசன்குளத்தைச் சேர்ந்த 37வயதுடைய பெண் ஒருவரும் இனங்காணப்பட்டுள்ளதாகவும் இன் நோய்த் தொற்று சிறுவர்களுக்கே அதிகம் ஏற்படுவதற்கு வாய்ப்புக்கள் உள்ளதால் சிறுவர்களை தேவையின்றி அழைத்துக் கொண்டு வைத்தியசாலைக்கு வருவதைக் தவிர்த்துக் கொள்ளுமாறும் காய்ச்சல், தடிமன், உடல் சோர்வு ஏற்பட்டால் உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெறுமாறும் வைத்தியசாலைப்பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் திருட்டுச்சம்பவம்!!(CCTV காணொளி)

 
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் நேற்று (21.02.2017) இரவு 10 மணியளவில் இடம்பெற்ற திருட்டுச்சம்பவமொன்று அங்கிருக்கும் சி.சி.ரி.வி கமராவில் பதிவாகியுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்தியர்களின் வாகனத்தரிப்பிடத்தில் நேற்று (21.02.2017) இரவு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வைத்தியசாலையின் பணிபுரியும் உத்தியோகத்தரின் முச்சக்கரவண்டியினுள் பொருத்தப்பட்டிருக்கும் பொட்டகத்தில் (safty box) இருந்த பெறுமதி வாய்ந்த பொருட்களை களவாடிச் சென்றுள்ளனர்.

இச் சம்பவம் வைத்தியசாலையில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.ரி.வி கமராவில் பதிவாகியுள்ளது.

வவுனியா பாரதிபுரம் விக்ஸ் காட்டுப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம்!!

 
வவுனியா பாரதிபுரம் விக்ஸ் காட்டுப்பகுதியில் வசிக்கும் மக்கள் தமது காணிகளில் தாம் வாழ்வதற்கு ஆனுமதி வழங்கவேண்டும் எனக்கோரி வவுனியா மாவட்ட செயலகத்தின் முகாபாக இன்று(22.02.2.17) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியா பாரதிபுரம் விக்ஸ் காட்டுப்பகுதியில் கடந்த 5 தொடக்கம் 6 வருடங்களாக வசிக்கும் சுமார் 40 குடும்பங்கள் தாம் தொடர்ந்தும் வனத்துறையினரால் தொந்தரவுக்குள்ளாவதாகவும் தாம் வாழும் காணியை தமக்கு வழங்குவதற்கான வாக்குறுதி வழங்கியபோதிலும் இதுவரை எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனவும் தெரிவித்தே இம் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந் நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தாம் மின்சார வசதியோ, வீதி வசதியோ, வீட்டுவசதியோ இன்றி வாழ்வதனால் தமது பிள்ளைகளின் எதிர்கலமும் கேள்விக்குள்ளாகி வருவதாக தெரிவத்திருந்தனர்.

இந் நிலையில் தாம் வாழும் காணிளை தமக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இல்லையேல் தொடர்ந்து போராட்டம் நடத்தவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் வட மாகாணசபை உறுப்பினர் செ.மயூரன் கலந்துரையாடியிருந்தனர்.

போக்குவரத்து குற்ற தண்டப்பணத்தை 30 ஆயிரம் ரூபாவாக உயர்த்த பரிந்துரை!!

போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு விதிக்கப்படும் தண்டப்பணம் தொடர்பாகஆராய்வதற்காக ஜனாதிபதியினால் அமைக்கப்பட்ட குழு தமது அறிக்கையில் தண்டப்பணம் 30 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் என்று கூறியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சம்மேளன தலைவர் சரத் விஜிதகுமார இந்த தகவலைகொழும்பில் செய்தியாளர்களிடம் வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே 25ஆயிரம் ரூபா தண்டப்பணத்தை ஆட்சேபித்தமை காரணமாகவே ஜனாதிபதியினால்அதனை ஆராய குழு ஒன்று அமைக்கப்பட்டது.

எனினும் அந்தக்குழு குறித்த தண்டப்பணம் 30 ஆயிரம் ரூபாவாக அமையவேண்டும் என்றும்150ஆயிரம் ரூபா வரை சிறைத்தண்டனையும் அதிகரிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைசெய்துள்ளது.

இது அரசாங்கம் பொதுமக்களின் நிலைமையை கவனிக்காது வருமானம் ஈட்டும் நடவடிக்கையில்மாத்திரமே கவனம் செலுத்துவதை காட்டுகிறது என்று சரத் விஜிதகுமார குற்றம்சுமத்தியுள்ளார்