கடந்த ஜனவரி மாதம் இலங்கைக்கு வருகைத்தந்துள்ள சுற்றுலா பயணிகளின் வருகை 12.9 வீதத்தில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கமைய 2016ஆம் ஆண்டு இலங்கைக்கு 194280 சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். 2017ஆம் ஆண்டு ஜனவரி 219360 சுற்றுலா பயணிகள் வருகை தந்துளள்தாகவும் குறிப்பிடப்படுகின்றது.
அத்துடன் கடந்த வருட ஜனவரி மாதம் சுற்றுலா பயணிகள் மூலம் கிடைத்த வருமானம் 322 மில்லியன் அமெரிக்க டொலராகும், இம்முறை அந்த வருமானம் 363.6 மில்லியன் அமெரிக்க டொலர் வரை அதிகரித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள புதிய பொருளாதார அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் உலக ஒழுங்கில் இன்று அரசியல் முக்கியத்துவம் மிக்க இரண்டு வெவ்வேறு சிந்தனைப் போக்கு கொண்ட நாடுகளைக் காணலாம். அதில் சீனா மற்றும் ரஷ்யாவின் அதிகரிக்கும் ஈடுபாடும், செயற்பாட்டுவாதமும் ஒருவகை.
1945ம் ஆண்டு முதல் சர்வதேசப் பரப்பில் தன்னாதிக்கம் செலுத்தி இப்போது தனது ஜனநாயக நாடுகளின் நம்பிக்கை, தகுதி, விருப்பம் என்பனவற்றில் வீழ்ச்சி கண்டு வரும் அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் இரண்டாவது வகை.
சீனாவும், ரஷ்யாவும் ஒன்றை ஒன்று நெருங்கி வர, இப்போது உள்ள உலக ஒழுங்கை மாற்றுவதில் அந்நாடுகளின் விருப்பமும், தகுதியும் அமெரிக்காவினதும் அதன் நேச நாடுகளினதும் விருப்பத்தையும், தகுதியையும் சந்திக்க, அமெரிக்காவின் உலக ஒழுங்கு சீர்குலைந்து மூன்றாவது உலக யுத்தத்துக்குள் நாம் வீழ்ந்துவிடும் நேரம் வரும்.
உயிர்கள், சொத்துக்கள், சுதந்திரம், நம்பிக்கை என்பவற்றிலான அந்த அழிவின் விலையைக் கணக்கிட முடியாது.
தனது சர்வதேச ஒழுங்கில் அடிப்படை ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதில் அமெரிக்கா கொண்டுள்ள பொறுப்பு குறித்து ஆதங்கம் வெளிப்படுத்தப்படும் நேரத்திலும் அமெரிக்கா அதையிட்டு அலட்டிக்கொள்ளாமல் இருப்பது போலவே தெரிகிறது.
உலக ஒழுங்குகள் என்றோ ஒருநாள் சீர்குலையும் என்றுதான் சரித்திரம் கூறுகிறது. இருப்பினும், அந்த சீர்குலைவு எதிர்பாராத, வேகமான, அராஜக நிகழ்வுகளாகவே இருக்கும்.
20 ஆம் நூற்றாண்டின் முதல் பத்து வருடங்களில் தொடர்புத்துறை மற்றும் போக்குவரத்து வசதிகளில் ஏற்பட்ட புரட்சி மக்களையும், பொருளாதாரத்தையும் ஒன்றிணைத்ததால் அதிகாரப் போட்டிக்கு முற்றுப்புள்ளி இடப்படும் என்றே அறிஞர்கள் எதிர்வு கூறினர்.
அடுத்த நான்கு வருடங்களில் உலகின் சரித்திரத்திலேயே பெரும் நாசம் விளைவித்த யுத்தம் மூண்டது.
1920 களுக்குப் பின்னிருந்த அமைதி 1930 களில் நெருக்கடியாக மாறி மற்றுமோர் உலக யுத்தம் ஏற்பட்டது.
நீண்ட சரித்திரம் கொண்ட இந்த சூழ்நிலையில் இன்று நாம் எங்கே இருக்கிறோம் என்பதை எப்போதும் போலவே, இப்போதும் அறிந்து கொள்வது அசாத்தியமாகவே உள்ளது.
இருப்பினும், அந்த வழித்தடத்தில் நாம் எங்கேயோ ஒரு இடத்தில் இருக்கிறோம் என்றால் அது தவறானதாக இருக்காது.
இந்த சூழ்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பதவிக் காலம் எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என இப்போது கூற முடியாவிட்டாலும் அவருடைய நிர்வாகம் மற்றுமொரு யுத்தத்தை நோக்கியதான நகர்வுகளைக் குறைப்பதையோ, பின் தள்ளுவதையோ விட அந்த ஆபத்துக்குள் உலகை வேகமாகக் கொண்டு சென்றுவிடும் என்பதைத்தான் நடக்கும் சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன.
ரஷ்யாவுடனான அமெரிக்காவின் விட்டுக் கொடுப்பு விளாடிமிர் புட்டினுக்கு உற்சாகம் தரும்.
அத்துடன், சீனாவுடன் கடுந் தொனியிலான பேச்சு ட்ரம்ப் நிர்வாகத்தின் மன உறுதியை பெய்ஜிங் இராணுவ வழியில் பரீட்சித்து பார்க்கவே இட்டுச் செல்லும்.
ஜனாதிபதி ட்ரம்ப் அப்படிப்பட்ட மோதலுக்கு தயாராக இருக்கிறாரா என்பது தெளிவில்லை.
இப்போதைக்கு தனது கடும் வார்த்தைப் பிரயோகம், செயல்களின் விளைவுகள் பற்றி அவர் சிந்திப்பதாகவும் தெரியவில்லை.
சீனாவும் ரஷ்யாவும் நீண்ட காலமாகவே அரசியல் மாற்று சக்திகளாக இருக்கின்றன.
ரஷ்யா தனது பாரம்பரிய மேற்கு நாட்டு எதிரிகளிடமிருந்தும், சீனா கீழைத்தேச எதிரியிடமிருந்தும் இன்று பாதுகாப்பாக இருப்பதுபோல முன்னெப்போதும் அப்படி உணர்ந்ததில்லை என்றாலும் இப்போதைய உலக அதிகார கட்டமைப்பில் அவை அதிருப்தி கொண்டிருக்கின்றன.
முன்புபோல தத்தமது பிராந்தியங்களில் அவை இப்போது ஆதிக்கம் செலுத்த விரும்புகின்றன.
சீனாவின் விடயத்தில் அது கிழக்கு ஆசியாவிலுள்ள நாடுகள் மீது ஆதிக்கம் செலுத்துவதாகும்.
ஜப்பான், தென் கொரியா அடங்கலான அந்த நாடுகள் பெய்ஜிங்கின் தந்திரோபாய, பொருளாதார, அரசியல் முன்னுரிமை விடயங்களில் எதிர்ப்பின்றி இணங்குகின்றன.
இதனால் அமெரிக்காவின் செல்வாக்கு ஹவாய் தீவுகளுக்குப் பின்னாலுள்ள கிழக்கு பசுபிக்கை நோக்கி பின்தள்ளப்படுவதையும் அது காட்டுகிறது.
ரஷ்யாவைப் பொறுத்தவரை, அது ஒரு காலத்தில் தனது சாம்ராஜ்யத்தின் பகுதியாகவோ, செல்வாக்குப் பரப்பின் பகுதியாகவோ கருதிய மத்திய கிழக்கு, ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவில் தன்னாதிக்கம் செலுத்துவதாகும்.
அமெரிக்கா தலைமையிலான உலக ஒழுங்கில் நியாயமற்ற அதிகாரம், செல்வாக்கு, கௌரவம் என்பன பகிர்ந்தளிக்கப்படுவதில் உள்ள தமது குறைகளை நிவர்த்தி செய்ய பெய்ஜிங்கும், மொஸ்கோவும் இப்போது முயல்கின்றன.
ஏகாதிபத்திய நாடுகள் என்ற வகையிலான இந்த நாடுகள் சர்வதேச அமைப்பிலுள்ள ஜனநாயக நாடுகளாலும், எல்லைகளிலுள்ள ஜனநாயக நாடுகளாலும் ஆட்கொள்ளப்படும் ஆபத்தில் இருப்பதாக உணர்கின்றன.
இவை அமெரிக்கா தமது அபிலாஷைகளுக்குப் பெரும் தடையாக இருப்பதாகக் கருதுவதால் தமது உரிமையுள்ள இலக்குகளை அடைவதில் தடையாக உள்ள அமெரிக்காவின் சர்வதேச பாதுகாப்பு ஒழுங்கை பலவீனமடையச் செய்ய வேண்டுமென நினைக்கின்றன.
அண்மைக் காலம்வரை ரஷ்யாவும், சீனாவும் தமது இலக்குகளை அடைவதில் பெரும் தடைகளைச் சந்தித்திருக்கின்றன.
பிரதான தடையாக இருப்பது சர்வதேச ஒழுங்கும் அதை ஆதரித்து காப்பாற்றும் பாதுகாவலனுமே.
மேலும், சோவியத்தின் பொதுவுடைமை சித்தாந்தம் வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து வந்த இரு தசாப்தங்களில் ஜனநாயக அரசாங்கங்களின் வளர்ச்சியும், செழுமையும் பெய்ஜிங் மற்றும் மொஸ்கோவின் அதிகார ஆட்டத்துக்கு தொடர்ச்சியான அச்சுறுத்தலாக விளங்கி வருகின்றன.
அத்துடன் தண்போர் முடிவுக்கு வந்தது முதல் தமது எல்லைகளுக்கு அருகிலுள்ள தாராளமய ஜனநாயக நாடுகளின் ஒவ்வொரு முன்நகர்வையும் ஒரு அச்சுறுத்தலாகவே அவை கருதுகின்றன.
எனவே, அமெரிக்க ஆதரவிலான ஜனநாயக நாடுகளின் இந்த தொடர்ச்சியான அச்சுறுத்தல் சீனாவையும், ரஷ்யாவையும் இயற்கையாக அந்த ஒழுங்குக்கும், அமெரிக்காவுக்கும் எதிராக திருப்பி விட்டுள்ளது.
ஆனால், அண்மைக் காலம் வரை உள்நாட்டு, சர்வதேச சக்திகளின் செல்வாக்கும் அந்த ஒழுங்கை நேரடியாக எதிர்கொள்ள முடியாதபடி சீனாவையும், ரஷ்யாவையும் தடுத்திருக்கிறது.
அமெரிக்காவுடனான நேரடி மோதல் தோல்வியடைந்தால் உள்நாட்டில் தமது ஆட்சி உரிமைக்கு என்ன நடக்கும் என சீனத் தலைவர்கள் கவலைப்படுகின்றனர்.
புட்டினும் அமெரிக்காவினதும், ஐரோப்பிய நாடுகளினதும் சிறிதளவான எதிர்ப்பைக் கூட எதிர்கொள்வதில் அதிக எச்சரிக்கையுடனேயே இருந்து வருகிறார்.
வட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட்டுள்ள புதிய ஸ்டேட்டஸ் அப்டேட் மூலம் வாடிக்கையாளர்கள் புகைப்படம், வீடியோ மற்றும் எமோஜி உள்ளிட்டவற்றை செட் செய்து கொள்ள முடியும்.
வட்ஸ்அப் உலகின் பிரபலமான மெசேஜிங் அப் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அதில் வழங்கப்பட்டுள்ள புதிய அப்டேட் பற்றி உங்களுக்கு தெரியுமா?
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பரிசோதனை செய்யப்பட்டு, சில தினங்களுக்கு முன் வட்ஸ்அப் பீட்டா பதிப்புகளுக்கு மட்டும் வழங்கப்பட்ட புதிய ஸ்டேட்டஸ் அப்டேட் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
புதிய அப்டேட் வட்ஸ்அப் ஸ்டேட்டஸ்-இல் புதிய வசதிகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. அதன்படி வட்ஸ்அப் ஸ்டேட்டஸ்-இல் வாடிக்கையாளர்கள் இனி புகைப்படம், வீடியோ அல்லது எமோஜி உள்ளிட்டவற்றை செட் செய்து கொள்ள முடியும்.
இதே போன்ற வசதி ஏற்கனவே இன்ஸ்டகிராம் செயலியிலும் வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. வட்ஸ்அப்பில் இந்த வசதியை பெற வாடிக்கையாளர்கள் தங்களின் செயலியை அப்டேட் செய்ய வேண்டும்.
பெப்ரவரி 24 ஆம் திகதி வட்ஸ்அப் செயலியின் 8 ஆவது பிறந்த தினம் என்பதால் புதிய ஸ்டேட்டஸ் அப்டேட் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
புதிய வட்ஸ்அப் ஸ்டேட்டஸ் அப்டேட் மூலம் ஸ்டேட்ஸ் பகுதியில் புகைப்படம், வீடியோ அல்லது எமோஜிக்களை வைத்து கொள்ள முடியும். வட்ஸ்அப் குறுந்தகவல்களை போன்றே ஸ்டேட்ஸ் அப்டேட்களும் முழுமையான என்க்ரிப்ஷன் வசதி பெற்றுள்ளது.
இதே போன்ற வசதி ஸ்நாப்சாட் மற்றும் இன்ஸ்டகிராம் செயலியிலும் வழங்கப்பட்டு வருகிறது. வட்ஸ்அப் ஸ்டேட்டஸ் 24 மணி நேரம் கழித்து தானாக மறைந்து விடும்.
இதுவரை வட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பகுதியில் எழுத்துக்களை மட்டுமே பதிவு செய்ய முடியும் என்ற ரீதியில் புதிய அப்டேட் மிகப்பெரிய வசதியாகவே பார்க்கப்படுகிறது.
அன்ரொய்ட் மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் வழங்கப்பட்டு வரும் புதிய அப்டேட் முதற்கட்டமாக சில நாடுகளை தொடர்ந்து சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளுக்கும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கோவில் திருவிழாவின் போது 60 அடி தேர் கவிழ்ந்து பக்தர்கள் மீது விழுந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் பெல்லாரியில் உள்ள கொட்டுரேஸ்வர கோவில் திருவிழாவிலே இந்த பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த தேர் திருவிழாவில் கலந்துக்கொண்ட ஆயிரக்கணக்கானோர் பக்தியுடன் தேரை இழுத்துக்கொண்டிருந்த போது திடீரென தேர் கவிழ்ந்து பக்தர்கள் மீது விழுந்துள்ளது. இதில் தேரின் சக்கரத்தில் சிக்கி பலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த விபத்தில் 6 பேர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. எனினும், விபத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை.
தேர் கவிழும் நிகழ்வை சம்பவயிடத்திலிருந்த நபர் ஒருவர் தனது போனில் பதிவு செய்துள்ளார். தற்போது, குறித்த அதிர்ச்சி காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.
இறந்துவிட்டதாக கருதப்பட்ட இளைஞன் ஒருவர், மயானத்துக்கு கொண்டு செல்லப்படும் வழியில் விழித்தெழுந்த சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது.
கர்நாடக மாநிலத்தின் மனாகுந்தியைச் சேர்ந்த குமார் மேர்வாட் எனும் இந்த இளைஞருக்கு ஒரு மாதத்துக்கு முன்னர் கட்டாக் காலி நாய் ஒன்று கடித்தது.
கடந்த வாரம் இந்த இளைஞனுக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டதால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். சுவாசக்கருவிகள் பொருத்தப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர், அந்த இளைஞரின் உடலில் தொற்றுக்கள் அதிகமாக பரவியுள்ளதாகவும் சுவாசக்கருவிகள் இல்லாமல் அவரால் உயிர்வாழ முடியாது எனவும் மருத்துவர்கள் கூறினர்.
அதையடுத்து குமார் மேர்வாட வீட்டுக்கு அழைத்துச் செல்ல குடும்பத்தினர் தீர்மானித்ததாக அவரின் மைத்துனரான சர்னப்பா நாயக்கர் தெரிவித்துள்ளார். அண்மையில், குமார் சுவாசிக்காமல் இருப்பதை அவதானித்த குடும்பத்தினர், அவர் இறந்துவிட்டதாகக் கருதினர்.
இறுதிக்கிரியைகளுக்கான ஏற்பாடு செய்யப்பட்டது. வீட்டிலிருந்து சுமார் 2 கிலோமீற்றர் தொலைவிலுள்ள மயானத்துக்கு குமாரின் உடலை சுமந்து சென்றபோது, அவர் விழித்தெழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அதன்பின் தனியார் வைத்தியசாலையொன்றில் குமார் மேர்வாட் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாய்க்கடியினால் குமார் மேர்வாட்டுக்கு ஏற்பட்ட தொற்றுகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக டாக்டர் என். மகேஷ் தெரிவித்துள்ளார்.
மலேஷியாவில் இலங்கையர் ஒருவரைக் கொலை செய்ததாக, இந்திய ஊழியர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த 9ம் திகதி காலை சுமார் 09.00 மணியளவில் இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக குற்றச்சாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை சம்பவத்தில் சந்தேகநபருடன் பணி புரிந்த 50 வயதான, சுமித் நிஷாந்த சில்வா என்ற இலங்கையரே மரணித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.
மேலும் இது தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் 30 வயதான துர்க ரோ கெட்டலி எனும் இந்தியப் பிரஜையாகும்.
ஊழியர்கள் தங்கும் விடுதியில் வைத்து, நடைபெற்ற வாக்கு வாதம் வலுவடைந்ததை அடுத்து, துர்க ரோ கொங்கிரீட் துண்டு ஒன்றினால் சுமித்தைத் தாக்கியுள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திலேயே சுமித் நிஷாந்த பலியாகியுள்ளதாக கூறப்படுகின்றது.
உள்நாட்டு அரசியல் மற்றும் தீவிரவாத செயற்பாடுகளின் ஒவ்வாத நிலையால், ஐரோப்பிய நாடுகளுக்கு படகில் தப்பிச் செல்ல முயன்ற 74 அகதிகள் லிபியா அருகேவுள்ள கடலில் மூழ்கி இறந்துள்ளனர்.
லிபியாவில் நிலவும் அரசியல் முறுகல் நிலை மற்றும் தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக, அந்நாட்டை விட்டு மக்கள் வெளியேறி வருவதுடன், அதில் பெரும்பான்மையான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு, படகுகள் மூலம் தப்பி சென்று சட்டவிரோதமாக குடியேறி வருகின்றனர்.
இந்நிலையில் லிபியாவின் மேற்கு பகுதியை சேர்ந்த மக்கள், சிறிய படகொன்றின் மூலம் மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பாவுக்கு தப்ப முயன்றுள்ளநிலையில், ஏற்பட்ட மோசமான காலநிலை காரணமாக குறித்தப் படகு உடைந்து, கடலில் கவிழ்ந்துள்ளதாகவும் அதில் பயணித்த 74 பேரின் உடல்கள் கரை ஒதுங்கியுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.
மேலும்கடல் வழியாக சட்டவிரோத குடியேற்றங்களை மேற்கொள்ளும் மக்கள், கடலில் மூழ்கி பலியாகும் சம்பவங்கள் அடிக்கடி இடம் பெறுவதாகவும், மேலும் இவ்வாறான அனர்த்த சுழலில் பலர் உயிருடன் மீட்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லிபிய மக்கள் அகதிகளாக செல்வதை தடுக்க அந்த நாட்டு கடலோர காவல் படை, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும், தொடர்ச்சியான கண்காணிப்புகள் மூலம் கடல் விபத்துகளை தவிர்க்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தனது மரண சடங்கின் போது உயிர் பிழைத்த 17 வயது இளைஞனின் உயிரிற்கு 48 மணிநேரம் கெடு விதித்துள்ள சம்பவம் இந்தியாவில் பதிவாகியுள்ளது.
இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள தார்வார் பகுதியின் மணகுந்தி எனும் கிராமத்தை சேர்ந்த சுத்திராயா என்ற 17 வயது இளைஞன், தெரு நாய் கடிக்குள்ளாகிய நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் அதிக நோய்வாய்ப்பட்டவராக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சுத்திராயாவின் உடல்நிலை மிகவும் மோசமடையவே, வைத்தியர்கள் இளைஞனின் உயிரை காப்பாற்ற முடியாது எனக் கூறி, அவரது வீட்டிற்கு அனுப்பியுள்ளனர். இந்நிலையில் இரண்டு நாட்களாக உடல் அசைவேதும் இல்லாமல் இருந்ததால் சுத்திராயா இறந்துவிட்டதாக கருதி அவரது குடும்பத்தினர் மரண சடங்குகளை செய்துள்ளனர்.
இந்நிலையில் மரணச்சடங்கில், உறவினர் ஒருவர் மாலை அணிய முற்பட்ட போது, சுத்திராயா திடீரென எழும்பி அதிர்ச்சி அளித்துள்ளார். அத்தோடு எழுந்த சில நிமிடங்களிலே மயங்கிவிழுந்த அவரை, வைத்தியர்கள் பரிசோதித்த நிலையில் இன்னும் 48 மணி நேரத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என கெடு விதித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் கடந்த இரண்டு மாதங்களுக்குள் 96 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா மேற்பார்வை சுகாதாரப் பொதுப்பரிசோதகர் கணபதிப்பிள்ளை மேஜெயா தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
2017 ஆம் ஆண்டு தைமாதம் முதல் மாசி மாதம் 21ஆம் திகதி வரை 96 பேர் டெங்குநோயால் பாதிக்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இந்த விடயத்தில் அக்கறை கொண்ட வவுனியா சுகாதார வைத்திய அபிவிருத்தி உத்தியோகத்தர் பகுதியைச் சேர்ந்த பொதுச்சுகாதாரப் பரிசோதகர், மலேரியா தடை இயக்கம், பூச்சி ஆய்வாரள்கள் மேற்கொண்ட விசேட நடவடிக்கை காரணமாக டெங்கு பரவக் கூடிய இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அது தொடர்பில் கவனம் செலுத்தாதவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த இரு வாரங்களில் 35 பேருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு நீதிமன்றத்தின் ஊடாக தண்டம் அறிவிடப்பட்டுள்ளதாகவும் வைத்திய பரிசோதகர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை அரச திணைக்களங்கள், விடுதிகள், தனியார் விடுதிகள், பொதுமக்கள் வீடுகள் என்பவற்றையும், உங்களுடைய சுற்றுப்புற சூழலை சுத்தமாக வைத்திருக்குமாறு வேண்டப்படுகின்றீர்கள். மாறாக நுளம்பு பெருகும் இடங்கள் இனங்காணப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
பிரிட்டனைச் சேர்ந்த யுவதி ஒருவர், தான் அதிக அழகாக இருப்பதால் வேலையிலிருந்து நீக்கப்பட்டதாக கூறுகிறார்.
24 வயதான எம்மா ஹல்ஸ் எனும் இந்த யுவதி லண்டனிலுள்ள தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பு நிறுவனமொன்றில் சுயாதீன ஊழியராக பணியாற்றியவர்.
அண்மையில் தனது முகாமையாளர் தன்னை அழைத்து, “நீங்கள் பெஷன் ஷோவில் இருக்க வேண்டும்” எனக் கூறி தன்னை பணியிலிருந்து நீக்கியதாக எம்மா தெரிவித்துள்ளார்.
“வேலையிலிருந்து நீக்கப்பட்டதால் நான் ஏமாற்றமடைந்துள்ளேன். இந்த நிறுவனம் சாதாரண தோற்றம் கொண்டவர்களையே ஊழியர்களாக இணைத்துக்கொள்கிறது போலும். நான் நீளக் காற்சட்டையும் ஷேர்ட்டும் தான் அணிந்திருந்தேன். பொருத்தமற்ற வகையில் ஆடை அணிந்திருக்கவில்லை” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐந்தாவது தமிழ்நாடு மாநில பளு தூக்கும் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்றதன் மூலம் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க நடிகை ரம்யா தகுதி பெற்றுள்ளார். தொகுப்பாளினி, நடிகை என்ற அடையாளங்கள் ரம்யாவிற்கு ஒருபுறம் இருக்க, தற்போது பளு தூக்கும் போட்டியிலும் தனக்கென ஒரு அடையாளத்தை பதித்து இருக்கிறார். இதுகுறித்து ரம்யா தெரிவித்தபோது,
பல முன்னணி வீர்கள் பங்கேற்ற இந்த பளு தூக்கும் போட்டியில் கலந்து கொள்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. அத்தகைய வீரர்களோடு போட்டியில் கலந்து கொள்வதன் மூலம், நம்முடைய தன்னம்பிக்கை அதிகரிக்கும். 27.5 கிலோ பளு தூக்கும் பிரிவில் ஆரம்பித்து, 32.5 கிலோ பிரிவிற்கு முன்னேறி, தற்போது 35 கிலோ பிரிவில் பங்கேற்றுள்ளேன்.
போட்டி சற்று கடினமாக இருந்தாலும், என்னுடைய விடா முயற்சியால் தற்போது மாநில அளவிலான பளு தூக்கும் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றதன் மூலம் தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்ள தேர்ச்சி பெற்றுள்ளதாக கூறினார். தன்னுடைய நாட்டிற்காக விளையாடுவதற்காக, தான் கடினமான பயிற்சியில் ஈடுபட இருப்பதாகவும் ரம்யா தெரிவித்தார்.
பாகிஸ்தானைச் சேர்ந்த சாகசக் கலைஞர் ஒருவர் தனது கண் இமைகளால் 4 கிலோகிராம் எடையுள்ள செங்கற்களைத் தூக்குவது, பற்களினால் இரும்புக் கம்பியை வளைப்பது போன்ற சாகசங்களால் வியக்க வைக்கிறார்.
32 வயதான குலாம் பாருக் எனும் இவர், 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான சாகசங்களைச் செய்து பெரும் எண்ணிக்கையானோரை கவர்ந்துள்ளார். தனது தாடையினால் பஸ்ஸை கட்டி இழுப்பதும் இவற்றில் ஒன்றாகும்.
தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றை பார்த்த பின்னர் இத்தகைய சாகசங்களைத் தான் கற்றுக்கொள்ள ஆரம்பித்ததாக குலாம் பாருக் தெரிவித்துள்ளார்.
இரு விமானங்களை தனது தாடையினால் கட்டி இழுக்க வேண்டும் என்பது தனது இலட்சியம் என்கிறார் குலாம் பாருக்.
பிரிட்டனில் மிக இளம் வயதில் லொத்தர் சீட்டிழுப்பு ஒன்றில் 18.8 கோடி ரூபா பரிசை வென்ற யுவதி ஒருவர், இந்த லொத்தர் வெற்றியினால் தனது வாழ்க்கை நாசமாகியுள்ளதாகக் கூறி மேற்படி லொத்தர் நிறுவனத்துக்கு எதிராக வழக்குத் தொடுக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.
ஜேன் பார்க்ஸ் எனும் இந்த யுவதி, 2013 ஆம் ஆண்டு யூரோமில்லியன் எனும் லொட்டோ சீட்டிழுப்பில் 10 இலட்சம் ஸ்ரேலிங் பவுண்ட்ஸ் (சுமார் 18.8 கோடி ரூபா) பரிசை வென்றார்.
அப்போது அவர் 17 வயதானவராக இருந்தார். இதன் மூலம் மிக இளம் வயதில் யூரோமில்லியன் சீட்டிழுப்பில் முதல் பரிசை வென்ற பெருமைக்குரியவரானார் ஜேன் பார்க்ஸ்.
லொத்தர் சீட்டிழுப்பில் எவருக்கும் இவ்வளவு பெருந்தொகை பரிசு கிடைத்தால் அதை தமது பேரதிர்ஷ்டமாகவே அவர்கள் கருதுவர்.
ஆனால், தற்போது 21 வயதான ஜேன் பார்க்ஸ் இதில் திருப்தியடையவில்லை. இந்த லொத்தர் பரிசு காரணமாக தனது வாழ்க்கை நாசமாகி விட்டது என்கிறார்.
இவர் மேற்படி லொத்தர் பணத்தில் இரு வீடுகளை வாங்கியதுடன் தனது மார்பகங்களைப் பெரிதாக்குவதற்கான சத்திர சிகிச்சையையும் செய்துகொண்டார்.
தனது காதலனுக்கும் அவர் பெருமளவு அன்பளிப்புகளை வழங்கியிருந்தார். ஆனால், பின்னர் அக்காதலனிடமிருந்து அவர் பிரிந்தார்.
இந்நிலையில் அண்மையில் அளித்த செவ்வியொன்றில் ஜேன் பார்க்ஸ், இது தொடர்பாக கூறுகையில், மிக இளம் வயதிலேயே மில்லியனரானதால் தான் பெரும் மன அழுத்ததத்துக்கு உள்ளானதாகத் தெரிவித்துள்ளார்.
‘அப்பரிசு எனக்கு கிடைத்திருக்கவே கூடாது என எண்ணுகிறேன். 18 வயதுக்கு குறைந்தவர்கள் இந்த லொத்தர் சீட்டை வாங்குவதற்கு தடை விதிக்க வேண்டும்’ எனக் கருதுகிறேன் எனவும் அவர் கூறியுள்ளார்.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு-20 போட்டியின் போது இலங்கை அணியின் அசேல குணவர்தன துடுப்பெடுத்தாடிய விதம் தொடர்பில் பலரும் தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் அசேல தொடர்பில் அவரின் தாய், தந்தை உருக்கமான கருத்துக்களை பகிர்ந்துள்ளனர். அதுமாத்திரமின்றி இறுதி தருணத்தில் மலிங்க தனக்கு எவ்வாறான ஆலோசனைகளையும், உற்சாகத்தையும் வழங்கினார் என அசேலவும் மனந்திறந்துள்ளார்.
அசேல குணவர்தன தொடர்பில் அவரது தாய், தந்தை தெரிவிக்கையில்,
தாய்,
“இப் போட்டியில் வெற்றிபெற்றமையானது சொல்ல முடியாதளவு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனது மகனை நினைத்து நான் மிகவும் சந்தோஷப்படுகின்றேன். யுத்தக்காலத்தில் நாம் போகவேண்டாம் என்று கூறியும் அவர் யுத்தத்துக்கு சென்றார். இன்று போட்டியை வெற்றிக்கொண்டு நாட்டுக்கு ராஜாவை போல் ஆகியுள்ளார்.”
தந்தை,
எனது மகன் இவ்வளவு பெரிய திறமைக்கொண்டவர் என நான் நினைக்கவில்லை.. சந்தோஷத்தை எப்படி விவரிப்பது என எனக்கு தெரியவில்லை… வீதிக்கு செல்லும் போது மக்கள் “ நாட்டுக்கு ஒரு பிள்ளையை பெற்றுள்ளீர்கள், நேற்று துடுப்பெடுத்தாய விதத்தை பாருங்கள்” என்று கூறும்போது எனது மகிழ்ச்சிக்கே அளவில்லை என்றார்.
அசேல குணவர்தன கருத்து தெரிவிக்கையில்,
போட்டியின் போது எமது அணி விக்கட்டுகளை அடுத்தடுத்து இழந்துக்கொண்டிருந்தது. இதன்போது நானும் சாமர கபுகெதரவும் களத்தில் நின்றோம். நாம் இன்னும் 10 ஓவர்களுக்கு ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாட வேண்டும் என்று திட்டமிட்டோம். எனினும் சாமர துரதிஷ்டவசமாக ஆட்டமிழந்தார்.
இந்நிலையில் 5 பந்துகளுக்கு 14 ஓட்டங்களை பெறவேண்டிய நிலை ஏற்பட்டது. இதன்போது களத்துக்கு வந்த மலிங்க என்னை உற்சாகப்படுத்தினார். எனக்கு முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தினார். ஓட்டங்களை ஓடி பெற வேண்டாம் என்றும் தனியாளாக உன்னால் ஓட்டங்களை பெறமுடியும் என்றார்.
அதுமாத்திரமின்றி ஒவ்வொரு பந்தின்போதும் என்னை உற்சாகப்படுத்தினார். இறுதியில் 3 ஓட்டங்களை பெறவேண்டிய நிலையில், உன்னால் அடிக்க முடியும், ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாட வேண்டும், நீ ஆட்டமிழந்தால் உன்னால் முடியாது என்று ரசிகர்கள் நினைப்பார்கள் என உற்சாகப்படுத்தியதாக” அசேல தெரிவித்தார்.
50 வயதான நபர் ஒருவர் செலுத்திச் சென்ற வாகனமும் அவரின் மகன் செலுத்திய மற்றொரு வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதால் இருவரும் உயிரிழந்த சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.
அலபாமா மாநிலத்தின் பெயேட் கவுன்ரியில் கடந்த சனிக்கிழமை அதிகாலை 04.10 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றதாக உள்ளூர் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
50 வயதான ஜெப்ரி மொரிஸ் என்பவர் செலுத்திச் சென்ற பிக் அப் ரக வாகனமும், அவரின் மகனான அஸ்டின் பிளெய்ன் பிறேஷர் (22) செலுத்திச் சென்ற மற்றொரு பிக் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இவர்களில் எவரும் ஆசனப்பட்டி அணிந்திருக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜெப்ரி பிறேஷர் ஸ்தலத்திலேயே இறந்தார். அவரின் தந்தை வைத்தியசாலையில் காலை 9.18 மணயளவில் இறந்தார்.
இவ் விபத்துக் கான காரணத்தை அறிவதற்கு விசாரணை நடைபெறுகிறது.
மாலை 6 மணி தொடக்கம் இரவு 10 மணி வரை சிக்கனமாக மின்சாரத்தைப் பயன்படுத்துமாறு மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.
தற்போது நிலவும் வறட்சியான வானிலையால் நீர்மின் உற்பத்தி 8 வீதத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நீர்மின் உற்பத்தி இடம்பெறும் பிரதான நீர்நிலைகளில் தற்போது 32.2 வீத நீர்மட்டமே காணப்படுகின்றது.
அதனால் மின் தேவையின் 92 வீதத்தை அனல் மின் நிலையங்களின் ஊடாகவே உற்பத்தி செய்ய வேண்டியுள்ளது.
இந்த நிலையின் கீழ் ஒன்றரை மாதங்களுக்கே நீர் மின் உற்பத்தியை மேற்கொள்ள முடியும் என மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
முழு நாடும் நீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ள நிலையில், பல மணித்தியாலங்கள் நீர் வீண் விரயமான சம்பவமொன்று மாவனெல்ல வெலிகல்ல பகுதியில் பதிவானது.
மாவனெல்ல வெலிகல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 50 குடும்பங்களுக்கு நீரை வழங்கும் குழாய் நேற்றிரவு 7 மணியளவில் சேதமடைந்துள்ளது. இதன் காரணமாக நீர் தொடர்ந்து வெளியேறி வந்துள்ளது.