கிளிநொச்சி பரந்தன் கோரக்கன்கட்டுப் பகுதியில் 4 பிள்ளைகளின் தாயாரான குடும்பப் பெண் ஒருவர் கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
54 வயதான பாலகிருஸ்ணன் கமலாதேவி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இன்று இரவு 12.00 மணியளவில் வீட்டுக் கிணற்றில் வீழ்ந்து இவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பெண், மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில், சிகிச்சை பெற்று இன்று மதியம் வீடு திரும்பியுள்ளார். எனினும், இன்று இரவு குறித்த பெண் வீட்டில் காணாத நிலையில், உறவினர்கள் அவரை தேடிப்பார்த்துள்ளனர்.
இதன்போது குறித்த பெண், உயிரிழந்த நிலையில், கிணற்றில் சடலமாக கிடந்துள்ளார். இந்நிலையில், நீர் எடுக்கும் வாளியும் கிணற்றில் வீழ்ந்து காணப்படுகின்றமையினால், இரவு நீர் எடுக்கச் சென்ற நிலையில் குறித்த பெண் தவறி வீழ்ந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
இதேவேளை, குறித்த விடயம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
பல மில்லியன் கணக்கான பயனர்களால் பயன்படுத்தப்பட்டுவரும் பேஸ்புக் வலைத்தளமானது விரைவில் 2 பில்லியன் பயனர்களை எட்டவுள்ளது.
இவ் வலைத்தளத்தினை அதிகளவானவர்கள் தமது மொபைல் சாதனங்களிலேயே பயன்படுத்தி வருகின்றனர். இதற்காக விசேட அப்பிளிக்கேஷன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
எனினும் குறைந்தளவு டேட்டா பாவனை மற்றும் விரைவாக செயற்படக்கூடியது என்பவற்றின் அடிப்படையில் பேஸ்புக் லைட் (Facebook Lite) அப்பிளிக்கேஷனே அதிக பயன்பாட்டில் காணப்படுகின்றது.
தற்போது இந்த அப்பிளிக்கேஷனை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 200 மில்லியனை எட்டியுள்ளதாக பேஸ்புக்கின் தலைமை இயக்குனரான Sheryl Sandberg தெரிவித்துள்ளார்.
கடந்த 2016ம் ஆண்டு மார்ச் மாத அறிக்கைகளின்படி இந்த எண்ணிக்கை 100 மில்லியனாக காணப்பட்டதாகவும், அதன் பின்னரான இந்த ஒரு வருட காலத்தில் மேலும் 100 மில்லியனால் அதிகரித்து 200 மில்லியனை எட்டியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நைஜீரியா நாட்டை சேர்ந்த பெண்ணுக்கு பிரசவத்தில் ஆட்டு குட்டி பிறந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
நைஜீரியாவின் அபியா மாநிலத்தில் இளம்பெண் ஒருவர் தனது கணவருடன் வசித்து வந்தார். இவர் கடந்த 3 ஆண்டுகளாகவே கர்ப்பமாக இருந்துள்ளார்.
10 மாதத்தில் ஆகும் பிரசவம் இவருக்கு மட்டும் ஆகாமல் 3 ஆண்டுகள் வரை நீடித்துள்ளது. பின்னர் ஒரு வழியாக அவருக்கு பிரசவம் ஆக, அது அதிர்ச்சியில் போய் முடிந்தது.
காரணம், அந்த பெண்ணுக்கு பிரசவத்தில் குழந்தைக்கு பதில் ஆட்டுகுட்டி பிறந்துள்ளது.
இதையறிந்த அந்த பெண்ணின் ஊர்மக்களும், அக்கம்பக்கத்தினரும் அந்த பெண்ணையும், ஆட்டுகுட்டியையும் வந்து அதிசயமாக பார்த்து சென்றனர்.
மருத்துவர்கள் இதற்கான காரணத்தை இன்னும் கூறவில்லை. இதனிடையில், அந்த பெண் வீட்டின் அருகில் வசிக்கும் ஒருவர் கூறுகையில், அந்த பெண்ணின் விரோதிகள் யாரோ சூனியம் வைத்து அவர் கருவில் ஆட்டு குட்டியை உருவாக்கியிருக்க வேண்டும் என கூறியுள்ளார்.
அங்கோலாவில் உள்ளூர் கால் பந்தாட்ட போட்டியை காண முண்டியடித்த ரசிகர்கள் 17 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அங்கோலாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள கால் பந்தாட்ட மைதானத்தில் முதல் நிலை கால் பந்தாட்ட போட்டி ஒன்று ஏற்பாட்டு செய்யப்பட்டிருந்தது.
குறித்த போட்டியை காண ரசிகர்கள் திரளானோர் முண்டியடித்ததாக கூறப்படுகிறது. 8000 பேர் மட்டுமே அமர்ந்து போட்டிகளை கண்டுகளிக்க கூடிய அந்த அரங்கில் திரளானோர் முண்டியடித்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் 17 பேர் சம்பவயிடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர். 60 க்கும் மேற்பட்டவர்கள் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். இதில் 5 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதால் இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்து குறித்து இதுவரை காவல்துறை மற்றும் கால்பந்தாட்ட அதிகாரிகளிடம் இருந்து அறிக்கை எதுவும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஜமைக்காவின் உசைன் போல்ட்டின் அணி, Nitro மெய்வல்லுனர் போட்டிகளின் 400X100 மீற்றர் குறுந்தூர ஓட்டப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. Nitro மெய்வல்லுனர் போட்டிகள் அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் நடைபெற்று வருகின்றன.
இந்தப் போட்டிகள் இரண்டு கட்டங்களைக் கொண்டது என்பதுடன், இரண்டு கட்டங்களின் முடிவில் கூடுதல் புள்ளிகளைப் பெற்ற அணி வெற்றிக்கு பாத்திரமான அணியாக அறிவிக்கப்படும்.
லேக் சைட் உள்ளக அரங்கில் (Lakeside Stadium ) நீட்ரோ மெய்வல்லுனர் போட்டிகளின் 400 மீற்றர் குறுந்தூர ஓட்டப் போட்டிகள் நடைபெற்றன.
6 ஆயிரத்திற்கும் அதிகமான ரசிகர்களுக்கு மத்தியில் நடைபெற்ற இந்தப் போட்டியில், தானே உலகின் அதிவேக மனிதன் என்பதனை உசைன் போல்ட் மீண்டுமொருமுறை நிரூபித்தார்.
இந்த அஞ்சலோட்டப் போட்டியில் 930 புள்ளிகளை சுவீகரித்து உசைன் போல்ட்டின் All-Stars அணி முதலிடத்தைக் கைப்பற்றியது.
இந்தப் போட்டியின் போது, அஞ்சல் கோலை மாற்றுகின்ற சந்தர்ப்பத்தில் போட்டியின் விதிமுறைகளை மீறி செயற்பட்டமைக்காக அவுஸ்திரேலிய அணிக்கு 10 புள்ளிகள் குறைக்கப்பட்டது.
எவ்வாறாயினும், அவுஸ்திரேலிய அணி இந்தப் போட்டியில் இரண்டாமிடத்தினையும் சீன அணி மூன்றாமிடத்தினையும் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.
ஒரே வைத்தியசாலையில் 34 வருடங்களுக்கு முன் பிறந்த மகளும், 56 வருடங்களுக்கு முன் பிறந்த தாயும் மாற்று பெற்றோருக்கு கொடுக்கப்பட்ட சம்பவம் ரஷியாவில் இடம்பெற்றுள்ளது.
ரஷ்யாவின் புரியாடியா பிராந்தியத்தை சேர்ந்த அலிசா டிசிரேசெனோவாவின் 34 வருடங்களுக்கு முன் பிறந்த அவரது மகள், வேறு தாயிடம் கொடுக்கப்பட்டுள்ளதையும், அதே வைத்தியசாலையில் 56 வருடங்களுக்கு முதல், அவர் தவறுதலான பெற்றோருக்கு கொடுக்கப்பட்டதையும் கண்டுபிடித்துள்ளார்கள்.
மேலும் சம்பவம் தொடர்பாக தெரியவந்ததாவது,
அலிசா டிசிரேசெனோவா தான் வளர்த்து வந்த மகளுடன் வைத்தியசாலையில் மேற்கொண்ட மரபணு பரிசோதனையின் போது இருவருடைய மரபணுக்களும் வெவ்வேறாக இருந்துள்ளது.
குறித்த நிகழ்வை தெரிந்து கொண்ட குறித்த பிராந்தியத்திலுள்ள ஊடகமொன்று, மேற்கொண்ட புலனாய்வு நடவடிக்கையின் போது அலிசா டிசிரேசெனோவாவும் 56 வருடங்களுக்கு முன்பு மாறி கொடுக்கப்பட்ட குழந்தை என்பதை கண்டு பிடித்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த பிராந்தியத்தில் புகழ் பெற்றுள்ள கலைஞர் துர்கர்மா என்பவர் அலிசாவின் மகள் என்றும், டாடினா ஜிஹாஜிடோவா என்பவர் அவரது உடன் பிறந்த சகோதரி என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் அலிசாவின் சகோதரியாக இருந்துவந்த புதூஷிக்கினா, உண்மையை அறிந்தநிலையில் அலிசா குடும்பத்தை சேர்ந்த அனைவரும் கூட்டான குடும்பமாக இணைந்து வாழ்வதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
ஒருமணி நேரமாக புதருக்குள் புதையுண்டிருந்த விவசாயி ஒருவர்,தான் பயின்ற யோகா பயிற்சியின் மூலம் உயிர்தப்பிய சம்பவம் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றுள்ளது.
அவுஸ்திரேலியாவில் சிட்னியை சேர்ந்த டேனியல் மில்லர் என்ற விவசாயி, 3 டன் நிறையுடைய இயந்திரத்தை செலுத்திச் சென்றபோது ஒருபுதர் நிறைந்த பகுதியில் விழுந்துள்ளார்.
இந்நிலையில் புதரில் சிக்குண்டுள்ள மில்லர் தன பயின்ற யோகா பயிற்சியின் மூலம், மூச்சை அடக்கி கையை மேல் நோக்கி தள்ளிய நிலையில், தன்னை காப்பாற்றும்படி சத்தமிட்டுள்ளார்.
அவரின் சத்தம் கேட்டு வந்த மீட்பு குழுவினர், புதரில் மூழ்கிக்கிடந்த மில்லரை காப்பாற்றியுள்ளனர். குறித்த சம்பவம் பற்றி தெரிவித்துள்ள அவர் தான் பயின்ற யோகாதான், தன் உயிரை காப்பாற்றியதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நியூசிலாந்தின் தெற்குத்தீவின் பெரும் கடற்கரையான பேர்வெல் ஸ்பிட்டில், பைலட் வகை திமிங்கலங்கள் 416, கரை ஒதுங்கி உயிருக்கு போராடுவது கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில் கரை ஒதுங்கிய திமிங்கிலங்களில் 300 வரை இறந்துள்ளதாகவும், எஞ்சிய நூற்றுக்கும் மேற்பட்ட திமிங்கலங்களை காப்பாற்றுவதற்கு, விலங்குகள் நல பாதுகாப்புத்துறை பணியாளர்கள் மற்றும் தன்னார்வ தொண்டர்களும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.
இருப்பினும் எஞ்சியுள்ள திமிங்கிலங்களும், உயிர் ஆபத்தை எதிர்கொண்டுள்ள கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பேர்வெல் ஸ்பிலிட் கடற்கரையில் திமிங்கலங்கள் கரை ஒதுங்குவது வழமையாக இடம்பெறும் நிகழ்வாகும். இருப்பினும் தற்போது நிகழ்ந்துள்ள உயிரிழப்பு சம்பவமே மிகவும் மோசமான நிகழ்வாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வன்னியில் பன்றிக்காச்சல் நோய் தொற்றுக்கு உள்ளாகியுள்ள மூன்று பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கிளிநொச்சி சுகாதார பிரிவினா் தெரிவித்துள்ளனா்.
குறித்த தொற்றானது மூன்று சிறுவர்களுக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தின் வட்டகச்சி சம்புக்குளம், முல்லைத்தீவு மாவட்டத்தில் விசுவமடு றெட்பானா மற்றும் மாங்குளம் பிரதேசத்தில் பெரியகுளம் ஆகிய பிரதேசங்களில் மூன்று சிறுவா்களுக்கு பன்றிக் காச்சல் நோய் அடையாளம் காணப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது பன்றிக் காய்ச்சல் பரவி வருவதனால் மக்கள் அவதானமாக இருக்கும்படி சுகாதாரப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தின் முதலமைச்சராக வருவதற்கு ஓ.பன்னீர் செல்வத்தை ஆதரித்து நடிகர், நடிகைகள் கருத்து தெரிவித்துள்ளனர். அவர்கள் யார் யார் என்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
தமிழ்நாட்டுக்கு ஓ.பன்னீர்செல்வம் முதல்-அமைச்சராக இருக்க வேண்டுமா? சசிகலா முதல்வராக பதவி ஏற்க வேண்டுமா என்ற கேள்விகள் மாநிலம் முழுவதும் எதிரொலிக்கின்றன.
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க் கள், எம்.பி.க்கள், கட்சி நிர்வாகிகளில் பெரும்பாலானோர் சசிகலாவுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்க்கிறார்கள். கட்சியின் ஒரு சில எம்.எல்.ஏ.க்கள், மதுசூதனன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள், பெரும்பாலான தொண்டர்கள் பன்னீர் செல்வத்தை ஆதரிப்பதாக அந்த தரப்பினர் கூறுகிறார்கள்.
கலை உலகில் பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக பெரும்பாலான நடிகர்- நடிகைகள் கருத்து தெரிவித்துள்ளனர். ஏற்கனவே பன்னீர்செல்வத்தை ஆதரித்து நடிகர் கமல்ஹாசன், பாக்யராஜ், எஸ்.வி.சேகர், மன்சூர்அலிகான், ஆர்யா, சித்தார்த், அருள்நிதி, குஷ்பு, சமுத்திரக்கனி, இசை அமைப்பாளர்கள் கங்கை அமரன், இமான் உள்பட பலர் ஆதரவு தெரிவித்து இருந்தனர்.
இப்போது நடிகர், இயக்குனர் விசு தனது ஆதரவை ஓ.பன்னீர்செல்வத்துக்கு தெரிவித்துள்ளார். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அவரை ஆதரிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வாட்ஸ்- அப் வீடியோவில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாடு அரசியல் சூழ்நிலை என்ன என்று உங்களுக்கு தெரியும். பன்னீர்செல்வம் கவர்னரை சந்திக்க 5 மணிக்கு அப்பாயின்ட்மென்ட் ஐந்து என்பதை எதுக்கு சொல்வோம். பஞ்ச பூதங்களுக்கு சொல்வோம். அல்லது பஞ்ச பாண்டவர்களை சொல்வோம். இவை பாசிட்டிவ் ஆனவை.
சசிகலாவுக்கு ஏழரை மணிக்கு கவர்னரை பார்க்க நேரம் ஒதுக்கி இருக்கிறார்கள். ஏழரை என்பதை எதற்கு சொல்வோம் என்பது உங்களுக்கு நல்லா தெரியும். என்னடா இப்படி சொல்லு கிறேன் என்று நினைக்கா தீர்கள்.
நான் 6 வருடங்கள் ஜெயா டி.வி.க்காக மக்கள் அரங்கம் நிகழ்ச்சி நடத்தினேன். முதலில் ஒருநாள் மேடம் புரட்சி தலைவியை பார்த்ததோடு சரி. அதற்கு அப்புறம் என்னை ஒரு தடவை கூட பார்க்கவிடவில்லை. அதை என்னால் வெளியே சொல்லவும் முடியவில்லை. அப்போ பன்னீர்செல்வம் என்ன கஷ்டப்பட்டாரோ அதே கஷ்டம்தான் எனக்கு. பார்க்கவே முடியவில்லை.
இத்தனைக்கும் பொது மக்களை வைத்து நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருந்தேன். அப்போ என்ன நடக்குது ஏது நடக்குது என்று சொல்ல வேண்டும். அல்லவா? என்னால் சொல்லவே முடியவில்லை. யார் யாரோ வந்தாங்க. என்னென்னமோ உத்தரவு போட்டாங்க. ஒரு நாள் சொல்வதை மறுநாள் மாற்றி சொல்வான். இப்படித் தான் யாரோ ஒரு குடும்பம் என்னை கட்டுப்படுத்தியது. எனக்கு ஒண்ணுமே புரியல. இப்படி கூட நடக்குமா என்று நீங்க யோசிப்பீங்க.
யோசனை பண்ணி பாருங்க. மேடம் இறந்த போது அந்த பக்கத்தில் யார் நின்னாங்க? யார் யாரோ நின்னாங்க. இதே தான் அங்கேயும் நடந்தது. ஒருவேளை அரசாங்கத்தை அவர்களிடம் ஒப்படைத்தால் அங்கும் யார் யாரோ வருவார்கள் என்ன என்ன வெல்லாமோ செய்வாங்க.
இதை மக்களிடம் ஒன்றும் கேட்க முடியாது. மக்கள் தலையெழுத்து 135 பேரிடம் இருக்கிறது. அவர்களை கையெடுத்து கும்பிட்டு கேட்டுக் கொள்கிறேன். எங்கள் வாழ்க்கை உங்களிடம் இருக்கிறது. பிளீஸ்… பிளீஸ் கண்டிப்பாக ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரியுங்கள். சசிகலாவை அல்ல என்று விசு கூறியுள்ளார்.
நடிகர், இயக்குனர் பார்த்திபனும், ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து இருக்கிறார். சசிகலா முதல்- அமைச்சராக விரும்புவது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், ‘இது ஒரு அரங்கேற்றப்பட்ட நாடகம். இதுபோன்ற அரசியல் விளையாட்டுகளால் தமிழ்நாட்டின் மரியாதை குறைந்து விட்டது என்று கூறி இருக்கிறார்.
நடிகை ஸ்ரேயா, ‘சரியான நேரத்தில் பன்னீர்செல்வம் ஹீரோவாக செயல்பட்டிருக்கிறார்’ என்று கூறியுள்ளார். இயக்குனர் கவுதம் மேனன், ‘நமது மொழியையும், பண்பாட்டையும் காக்கும் தன்மான தலைவர் வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். இதுபோல் ஏராளமானோர் ஓ.பன்னீர்செல்வத்தை நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரித்து வருகிறார்கள்.
மஸ்கெலியா அட்டன் பிரதான வீதியில் மஸ்கெலியா கிளன்டில் பகுதியில் கார் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானதுடன் மூவர் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
கண்டி குண்டசாலை பிரதேத்தை சேர்ந்த 34 வயதுடைய சமிந்த சந்திரசேன என்ற கார் சாரதியே இவ்வாறு மரணமானார்.
சிவனொளிபாத மலைக்கு சென்று மீண்டும் அம்பாறை நோக்கிச்சென்றுக்கொண்டிருந்த யாத்திரிகள் பயணித்த காரே 10.02.2017 இரவு 9.30 மணியளவில் பாதையை விட்டு விலகி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
முழுநிலாக் கலை விழாவும் சாதனையாளர்களை கெளரவிக்கும் நிகழ்வும் வவுனியா தெற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் முத்து இராதாகிருஸ்ணன் தலைமையில் வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் இன்று (10.02.2017) காலை 9.00 மணி தொடக்கம் மாலை 5.30 மணிவரை இடம்பெற்றது.
வவுனியா தெற்கு கல்வி வலயத்தில் ஏற்ப்பாட்டில் இடம்பெற்ற இந் நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், வடமாகாணசபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் மற்றும் வவுனியா தெற்கு வலயக்கல்வி ஆசிரியர்கள், அதிபர்கள் , பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
பாண்ட் வாத்திய வரவேற்புடன் ஆரம்பமான இந் நிகழ்வில் ஆசிரியர்களின் வரவேற்பு நடனம் , சிறந்த சாதனையாளர்கள் கௌரவிப்பு , தேசிய மட்டத்தில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசளிப்பு, சிறுவர் நாடகம் இசைச்சங்கமம் என பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.
வவுனியாவில் (02.02.2017) அன்று இரண்டாம் குறுக்குத் தெருவில் வவுனியா சுகாதார அலுவலக பொது சுகாதாரப்பணியாளர்கள், சிரேஷ்ட சுகாதார பணியாளர்கள் இணைந்து வியாபார நிலையங்கள், திணைக்களங்கள், வீடுகள் ஆகியவற்றில் டெங்கு பெருக்கெடுக்கும் இடங்களை இனங்கண்டு அதன் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதன்போது 11பேருக்கு எதிராக வழங்குத் தாக்கல் செய்யப்பட்டு நேற்று முன்தினம் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது நீதிமன்றினால் ஆறு பேருக்கு தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளதுடன் ஐந்து பேருக்கு மன்றினால் மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், மன்றினால் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளதாகவும் தமது நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை இனங்கண்டு அதன் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் பொது சுகாதார பரிசேதகர் மேஜெயா தெரிவித்தார்.
வவுனியா ஓமந்தை பன்றிக்கெய்தகுளம், புதிய வேலர் சின்னக்குளம் பகுதியில் வயல் ஒன்றிலிருந்து வெடிக்காத நிலையிலிருந்த குண்டு ஒன்றினை நேற்று முன்தினம் கண்ட காணி உரிமையாளர் ஓமந்தை பொலிசாரின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளார்.
இதையடுத்து நேற்று (09.02) சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் நீதிமன்ற அனுமதியுடன் குறித்த குண்டு மீட்கப்பட்டு செயலிழக்கச் செய்துள்ளதாக தெரிவித்தனர்.
சில வருடங்களுக்கு முன்னர் கைப்பேசிகளில் அதிகளவில் பயன்படுத்தப்பட்ட இணைய உலாவியாக ஒபேரா விளங்கியது.
இவ் உலாவி டெக்ஸ்டாப், லேப்டொப் கணினிகளிலும் பயன்படுத்தப்பட்டு வந்தது. பின்னர் ஏனைய உலாவிகளில் தரப்பட்டுள்ள சிறப்பம்சங்கள் மற்றும் வேகம் காரணமாக இவ் உலாவியின் பயன்பாடு குறைவடையத்தொடங்கியது.
எனினும் விட்ட இடத்தை மீண்டும் பிடிப்பதற்கான முயற்சியில் ஒபேரா நிறுவனம் இறங்கியுள்ளது. இதற்காக அதிவேகமான இணைய உலாவலைத் தரக்கூடிய புதிய பதிப்பு ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.
டெக்ஸ்டாப் கணினிகளுக்காக 43வது பதிப்பாக வெளியாகியுள்ள இப் புதிய உலாவி குறைந்தளவு மின் பாவனை மற்றும் குறைந்தளவு முறைவழியாக்கியின் செயற்பாடு என்பவற்றில் இயங்கக்கூடியது.
த நியூயோர்க் டைம்ஸ் இணையத்தளத்தினை பழைய ஒபேரா உலாவியில் திறந்தபோது முழுமையாக திறப்பதற்கு 4.19 செக்கன்கள் எடுத்துள்ளன. ஆனால் புதிய பதிப்பினூடு 0.01 செக்கன்களில் திறக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இப்புதிய உலாவியினை ஆரம்பிக்கும் வேகமும் 13 சதவீதத்தினால் அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது.