பன்னீர் செல்வம் ஒரு பயந்தாங்கொள்ளி, ஆளுநர் ஒரு முட்டாள் : சுப்பிரமணிய சுவாமி அதிரடி பேச்சு!!

நிர்ப்பந்தத்துக்கு பயந்து தனது முதல்வர் பதவியை பன்னீர் செல்வம் ராஜினாமா செய்திருந்தால் அவர் ஒரு பயந்தாங்கொள்ளி என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது, ‘அ.தி.மு.க. பொதுச்செயலாளர் வி.கே.சசிகலாவை தமிழக ஆளுநர் சட்டப்படி முதல்வராக்க வேண்டும்

எல்லாம் சட்டப்படி தான் நடக்க வேண்டும். சசிகலாவைப்பற்றி எனக்கு நல்ல அபிப்ராயம் இல்லை. ஆனால் அவரது உரிமையை சட்டத்தை மீறி பறிக்க வழியில்லை.

வி.கே.சசிகலாவை ஆளுநர் சட்டப்படி முதல்வராக்க வேண்டும். தமிழகத்தில் நடக்கும் அரசியல் பிரச்சனைகளை கருத்தில் கொண்டு அவர் சென்னையில் இருந்திருக்க வேண்டும்.

ஆனால், அவர் தவறு செய்திருக்கிறார். நிர்ப்பந்தத்துக்குப் பயந்து ராஜினாமா செய்திருந்தால், ஓ.பன்னீர்செல்வம் ஒரு பயந்தாங்கொள்ளி. முதலமைச்சர் ஆவதற்கு அவருக்குத் திறமை கிடையாது. அவருக்கு அந்த அந்தஸ்து கிடையாது.

ஓ.பன்னீர்செல்வம் அளித்த ராஜினாமா கடிதத்தைத் திரும்பப்பெற்றால் ஆளுநர் ஒரு முட்டாள் எனத் தெரிவித்துள்ளார்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் லண்டன் பயணித்த தீவிரவாதி : பாதுகாப்புப் படையினரால் கைது!!

லண்டன் – ஸ்டேன்டட் விமான நிலைத்தில் வைத்து கைதுசெய்யப்பட்ட நபர் தீவிரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த செவ்வாய்கிழமை ஸ்ரீலங்கன் விமான சேவைக்கான 330ஏ எயார் பஸ் விமானம் லாகூரில் இருந்து பிரித்தானியாவின் ஹீத்ரோ விமான நிலையம் நோக்கி பயணித்தது.

எனினும், இந்த விமானம் பிரித்தானியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என தகவல் கிடைத்ததையடுத்து, குறித்து விமானம் பிரித்தானிய விமான படையின் பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டது.

இதனையடுத்து, குறித்த விமானத்தை சோதனையிட்ட போது, விமானத்தில் இருந்து கலீட் பாக் (Khalid Baqa) என்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார். இவர் பல்வேறு தீவிரவாத சம்பவங்களுடன் தொடர்புடையவர் என தெரியவந்துள்ளது.

52 வயதான, குறித்த நபர் கடந்த 2012ஆம் ஆண்டு தீவிரவாத குற்றச்சாட்டில் தனது நண்பர்களுடன் கைதுசெய்யப்பட்ட ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன், குறித்த நபரிடம் தீவிரவாத விடயங்கள் அடங்கிய 300க்கும் மேற்பட்ட இறுவெட்டுக்கள் அவரது உடமைகளுடன் இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டு, 2013ம் ஆண்டு பிரித்தானிய நீதிமன்றம் இவருக்கு இரண்டு வருடங்கள் சிறைத்தண்டனையும் விதித்தது.

இதேவேளை, பிரித்தானிய விமான படையின் பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்ட குறித்த விமானம், பாகிஸ்தான் விமான சேவைக்கு வழங்கப்பட்ட ஸ்ரீலங்கன் விமானம் ஒன்றாகும்.

மேலும், குறித்த விமானம் ஹீத்ரோ விமான நிலையம் நோக்கி பயணித்த போது ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்காக ஊழியர்களுடன் 150 பயணிகள் விமானத்தில் பயணித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

ஆயிரக்கணக்கான விமான சேவைகள் ரத்து : பனிப்புயலால் ஸ்தம்பித்த ரொறொன்ரோ!!

தவிர்க்க முடியாத பனிப்புயல் காரணமாக கனடா மற்றும் வட அமெரிக்க பயணிகள் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகும் நிலைக்கு ஆளாகியுள்ளனர்.

வியாழக்கிழமை ரொறொன்ரோ மற்றும் அமெரிக்காவில் 2,800 -கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்படுகின்றது.

புதன்கிழமை இரவு 9 மணியளவில் கனடிய விமான நிலையங்களிற்கு ஊடாக பயணிக்கும் 2,840 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரொறொன்ரோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் -46.
மொன்றியல்-Pierre Elliott Trudeau விமான நிலையத்தில் -23.
ஹலிவக்ஸ் ஸ்ரான்வீல்ட் சர்வதேச விமான நிலையத்தில் -18.
பிலி பிசப் ரொறொன்ரோ நகர் விமான நிலையத்தில் -10.
கல்கரி சர்வதேச விமான நிலையத்தில்-7.
வன்கூவர் சர்வதே விமான நிலையத்தில் -7.
ஒட்டாவா மக்டொனால்ட்-கார்டியர் சர்வதேச விமான நிலையத்தில் -6.
கியுபெக் சிட்டி ஜின் லெசேக் சர்வதேச விமான நிலையத்தில் -4.
நியு யோர்க் நியுவாக் லிபர்ட் விமான நிலையம் 330 விமான சேவைகளை ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

ஜோன் எவ் கென்னடி விமான நிலையம் 261 விமான சேவைகளை ரத்து செய்துள்ளது.
இதே சமயம் Boston’s Logan விமான நிலையம் 325 விமான சேவைகளை ரத்து செய்துள்ளது என தெரிய வந்துள்ளது.

அதிமுகவில் பிரச்சனை நீடித்தால் அதிரடி முடிவை எடுப்பேன் : பிரபல நடிகை!!

அதிமுகவில் தொடர்ந்து பிரச்சனைகள் நிலவி வந்தால் அதிரடி முடிவு எடுக்க வேண்டி வரும் என அதிமுகவின் மூத்த உறுப்பினரும், பிரச்சாரளருமான நடிகை லதா கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது, ஜெயலலிதா மறைவிற்குப்பிறகு கட்சியின் கழக பொதுச்செயலாளர் யார் என்ற குழப்பம் நீடித்தாலும், ஆட்சிமுறை என்று வந்தபோது ஜெயலலிதா வழிகாட்டுதலின்படி ஓ.பன்னீர்செல்வம் திறம்பட செயல்பட்டு வந்தார்.

திறம்பட ஆட்சி நடத்திக்கொண்டிருக்கும் ஒருவரை ராஜினாமா செய்ய வைத்து, தற்போதைய கழக பொதுச்செயலாளர் முதல்வராக அவசரப்படுவதற்கு என்ன காரணம்?

அதற்கான அவசியம் என்ன?, அந்த அவசரத்தின் விளைவு தான் இன்று ஆட்சியில் இருக்கும் நம் கட்சி உடையக்கூடிய சூழ்நிலை உருவாகி இருக்கிறது.

மக்களின் பேராதரவுடன் இரண்டாம் முறையும் ஆட்சியில் அமர்ந்த நம் கட்சியினை ஆச்சரியத்துடன் பார்த்த அனைவரும், இன்று கட்சியின் நிலையையும், ஒற்றுமையின்மையும் அதிர்ச்சியில் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

தமிழகம், இந்தியாவைத் தாண்டி உலகமே நம் கட்சியினை கேலிக்கூத்தாக பார்க்கும் நிலையை உருவாக்கிவிட்டார்களோ என எண்ணத் தோன்றுகிறது.

எம்.ஜி.ஆர். உருவாக்கிய கட்சிக்கு வந்த இந்த நிலையை என்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை.

மூத்த நிர்வாகிகள், முக்கியப் பொறுப்பாளர்களிடம் இருந்த நம்பிக்கையில் தான் அறிக்கையின் வாயிலாக வேண்டுகோள் மட்டும் வெளியிட்டு வந்தேன்.

இந்த கட்சியைக் காப்பாற்றும் கடமை எனக்கும் இருக்கிறது. இதே நிலை நீடித்தால் கட்சிக்கு என் கடமையை செய்யும் பொருட்டு, அதிரடி முடிவினை எடுக்கவும் தயங்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.

7 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை : குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை?

காஞ்சிபுரத்தில் 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்து எரித்து கொலை செய்த நபருக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து பெண்கள் உட்பட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காட்டில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஹாசினி என்ற சிறுமி 2 ஆம் வகுப்பு பயின்று வருகிறார்.
அதே பகுதியை சேர்ந்த தஷ்வந்த்(23) என்ற மென்பொறியாளர், ஹாசினியை தனது வீட்டுக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்ய முயன்றதும், அச்சிறுமி சத்தம்போட்டு கத்தியதால் போர்வையால் அந்த சிறுமியை சுற்றியுள்ளார். இதில் அச்சிறுமி மூச்சடைத்து இறந்துவிட்டதால், அவரது உடலை பற்றைக்குள் வீசி தீவைத்து எரித்துள்ளார்.

இதையடுத்து தஷ்வந்தை பொலிசார் கைது செய்தனர். அவர் மீது கொலை, பலாத்காரம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை புழல் சிறையில் அடைத்தனர்.

இந்தநிலையில் சிறுமியை கொலை செய்த தஷ்வந்துக்கு பிணை வழங்கக்கூடாது. அவருக்கு ஆதரவாக வக்கீல்கள் யாரும் கோர்ட்டில் ஆஜராகக்கூடாது.

அதிகபட்ச தண்டனையாக அவருக்கு தூக்குத்தண்டனை வழங்கக்கோரி மதனந்தபுரம் மாதா நகரில் நேற்று 200–க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட பொதுமக்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், சாலை மறியலில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார்.

மேலும் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமரசம் செய்து வைத்தார். அதன் பின்னர் சாலை மறியலை கைவிட்டு பெண்கள் உள்பட அனைவரும் கலைந்து சென்றனர்.

இதற்கிடையில் பிரேத பரிசோதனை முடிந்து சிறுமி ஹாசினியின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

பொதுமக்கள் மற்றும் பள்ளி ஆசிரியைகள், மாணவர்கள் என அனைவரும் சிறுமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

குளிருடன் கூடிய வறட்சியான காலநிலை தொடரும்!!

நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் காலை மற்றும் மாலை வேளைகளில் மிகவும் குளிரான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை வறட்சியான காலநிலையுடன் வானில் மேகமூட்டம் குறைவாக காணப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஏனைய மாவட்டங்களில் காலநிலை தொடர்பான விபரங்கள்.

அம்பாறை – மிதமான காலநிலை

அனுராதபுரம் – மிதமான காலநிலை

பதுளை – மிதமான காலநிலை

மட்டக்களப்பு – மிதமான காலநிலை

கொழும்பு – மிதமான காலநிலை

காலி – மிதமான காலநிலை

கம்பஹா – மிதமான காலநிலை

அம்பாந்தோட்டை – மிதமான காலநிலை

யாழ்ப்பாணம் – மிதமான காலநிலை

களுத்துறை – மிதமான காலநிலை

கண்டி – மிதமான காலநிலை

கேகாலை – மிதமான காலநிலை

கிளிநொச்சி – மிதமான காலநிலை

குருணாகல் – மிதமான காலநிலை

மன்னார்- மிதமான காலநிலை

மாத்தளை – மிதமான காலநிலை

மாத்தறை – மிதமான காலநிலை

மொனராகலை – மிதமான காலநிலை

முல்லைத்தீவு – மிதமான காலநிலை

நுவரெலியா – மிதமான காலநிலை

பொலன்னறுவை – மிதமான காலநிலை

புத்தளம் – மிதமான காலநிலை

இரத்தினபுரி – பனியுடன் கூடிய மந்தமான காலநிலை

திருகோணமலை – மிதமான காலநிலை

வவுனியா – மிதமான காலநிலை

23 ஆண்டுகள் கழித்து பழைய விந்தணுக்கள் மூலம் கருத்தரித்த பெண்!!

தற்போதைய காலத்தில் மருத்துவதுறையில் உயர்ந்து வருகின்ற தொழில்நுட்ப வளர்ச்சிகள் அனைத்துமே நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.

அந்த வகையில் கடந்த 23 ஆண்டுகளுக்கு முன் சேமித்து வைத்த பழைய விந்தணுக்களைப் பயன்படுத்தி, ஒரு பெண்ணை கருத்தரிக்க வைத்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளார்கள்.

அலெக்ஸ் போவெல் என்ற ஆண்ணுக்கு 15 வயது இருக்கும் போது ஹாட்ஜ்கின்ஸ் லிம்போமா (Hodgkin’s Lymphoma) நோய்க்கான சிகிச்சை செய்ததால், கீமோதெரபி எடுத்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதனால் அலெக்ஸின் 15 வயதில் அவருடைய விந்தணுக்களை சேமிப்பு வங்கியில் கொடுத்து வைக்கப்பட்டு இருந்தது.

பின் 23 ஆண்டுகள் கழித்து, அலெக்ஸின் திருமணத்திற்கு பின் அவருடைய மனைவிக்கு அந்த பழைய விந்தணுக்களை IVF முறைப்படி பயன்படுத்தி கருத்தரிக்க செய்து மருத்துவர்கள் சாதனை செய்துள்ளார்கள்

சீகிரியாவை பார்வையிட இணையத்தளம் ஊடாக அனுமதி!!

இலங்கையின் பிரசித்தி பெற்ற சுற்றுலா தளமான சீகிரியாவை பார்வையிடுவதற்கான அனுமதியை, இணையத்தளம் ஊடாக வழங்குவதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

சீகிரியாவை பார்வையிடுவதற்கு வருகை தருகின்ற சுற்றுலா பயணிகளுக்கு ஏற்படுகின்ற சிரமம் மற்றும் நெரிசலை தடுக்கும் நோக்கில் இணையத்தளத்தில் அனுமதி பத்திரங்களை பெற்றுக்கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தப்படவுள்ளது.

சீகிரியாவிலுள்ள சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி பத்திரம் வழங்கும் மத்திய நிலையத்தில் இந்த வசதி எதிர்வரும் 11ஆம் திகதி கல்வி அமைச்சர் அகில விராஜ் காசியவசம் தலைமையில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இணையத்தளம் ஊடாக விண்ணப்பிக்கப்படும் அனுமதி பத்திரம் 3 மாதங்களுக்கு செல்லுப்படியாகும்.

இதேவேளை, 2700 ஆண்டுகளாக பாதுகாக்கப்படுகின்ற இப்பன்கட்டுவ மெகாலித்திக் கல்லறையில் பூமியில் இந்த நிலையம் திறக்கப்படவுள்ளது.

தீர்வின்றி தொடரும் கேப்பாப்புலவு மக்களின் போராட்டம்!!

 
முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்களின் போராட்டம் பதினொராவது நாளாக இன்றும் தீர்வின்றி தொடர்கின்றது.

கேப்பாப்புலவுக்குடியிருப்பு பகுதியில் 84 குடும்பங்களிற்கு சொந்தமான 20 க்கும் மேற்பட்ட காணிகளை விடுவிக்க கோரி மக்கள் போராட்டத்தில் குத்தித்துள்ளனர்.

கடந்த 31 ஆம் திகதி மக்கள் தொடர்போராட்டத்தை ஆரம்பித்து விமானப்படை முகாமிற்கு முன்பாக கூடாரம் அமைத்து இரவு பகலாக போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இந்த போரட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையிலும் கூட இதுவரை எந்தவொரு தீர்வும் முன்வைக்கப்படவில்லை.

இந்த நிலையில் தான் மக்கள் தமது போராட்டத்தை இன்றும் அமைத்தியான முறையில் முன்னெடுத்து வருகின்றனர்.

மறைந்து போன இலங்கையின் அதிசயம் : மீண்டும் துளிர் விட ஆரம்பம்!!

இலங்கையில் அமைக்கப்படவுள்ள World Capital Center செயற்றிட்டம் உலகளாவிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்தாக அமையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த வேலைத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த நான்காம் திகதி உத்தியோகபூர்வமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்ட போதும், அது நடைபெறவில்லை.

இந்நிலையில் குறித்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்படுமா என கொழும்பு ஊடகங்கள் சந்தேகம் வெளியிட்டிருந்தன. எனினும் அவ்வாறான நிகழ்வு ஏற்படாமைக்கான காரணம் தற்போது வெளியாகி உள்ளது.

இலங்கையில் மிகவும் உயர்ந்த கட்டடத்திற்காக முதலீடு செய்த உலகின் மிகசிறந்த 4 நட்சத்திர பிரபலங்கள் நாட்டுக்கு வருவதாக இருந்தது.

இருந்த போதிலும் அவர்களின் நாட்களை ஒதுக்கிக் கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளமையினாலே அன்றைய தினத்தில் அடிக்கல் நாட்டப்படவில்லை என தெரியவந்துள்ளது.

எனினும் தற்போதுவரையில் இலங்கையில் உள்ள மிகப்பெரிய காணி ஒன்று கொள்வனவு செய்யப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் வாரங்களில் இது தொடர்பிலான தகவல் பகிரங்கப்படுத்தப்படும் என குறிப்பிடப்படுகின்றது.

அதற்கமைய உலகின் ஒன்பதாவது மிகப்பெரிய கட்டடத்திற்கு அடிக்கல் வைக்கும் நிகழ்வு மிகப் பிரம்மாண்டமாக எதிர்வரும் வாரங்களில் மேற்கொள்ளப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதன்மூலம் உலகின் மிகவும் உயர்ந்த கட்டடம் என்ற தரப்படுத்தலில் இலங்கையும் இணைந்து கொள்ளவுள்மை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் மக்களின் நிலங்களிலிருந்து இராணுவத்தை வெளியேறக் கோரி ஆர்ப்பாட்டம்!!

 
முல்லைத்தீவு கோப்பாப்பிலவு, பிலக்குடியிருப்பு மக்கள் தங்களுடைய வாழ்வதாராத்துக்கான காணிகளை விடுவிக்கக்கோரி கோப்பாப்பிலவு விமானப்படைத் தளத்திற்கு முன்பாக தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று (10.02.2017) காலை 9.30 மணியளவில் வவுனியா நகர பஸ் நிலையத்திற்கு முன்பாக சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பினர் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.

இக் கவனயீர்ப்பு போராட்டத்தில் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் உறுப்பினர்கள், காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க உறுப்பினர்கள், வடமாகாணசபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன், பொதுமக்கள், வர்த்தர்கள் என நூற்றுக்கு மேற்ப்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.

வேண்டும் வேண்டும் காணிநிலம் வேண்டும், மக்களின் நிலங்களிலிருந்து இரானுவமே வெளியேறு , கோப்பாபிலவு மக்கள் இலங்கையர் இல்லையா? என பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏன் இப்படி வெறித்துப் பார்க்கிறாய் என்று கேட்டதால் கழுத்தை இறுக்கி கொன்றேன் : கொலையாளி வாக்குமூலம்!!

ஏன் இப்படி வெறித்து பார்க்கிறாய் என்று கேட்டதால் கழுத்தை இறுக்கி கொன்றேன் என பெண் பொறியலாளர் கொலை வழக்கில் கைதான கொலையாளி வாக்குமூலம் அளித்துள்ளதாக இந்தியாவின் புனே பகுதி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கொலை சம்­பவம் தொடர்­பாக கேரள பொலிஸ் தரப்பில் தெரி­வித்­துள்­ள­தா­வ­து,

இந்­தி­யாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் ரசிலா ராஜூ (வய­து 25) வயதான இவர் புனே பகுதியிலுள்ள இன்போஸிஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த வாரம் விடுமுறை நாளான ஞாயிறன்று தனது பணியை செய்வதற்காக ரசிலா அலுவலகம் சென்­றுள்ளார்.

சம்­ப­வத்­தன்று பகல் 2 மணியளவில் அலுவலகத்துக்கு ­சென்ற ரசிலாவை அவரது மேலாளர் பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார்.

பதில் இல்லாததால், பாதுகாவலரை பார்த்து வரும் படி கூறியுள்­ளார். பாதுகாவலர் சென்று பார்த்தபோது ரசிலா வேலை செய்யும் 9ஆவது மாடியில் வையரால் கழுத்து நெரிக்க பட்ட நிலையில் மயக்கமாக கிடந்துள்­ளா­ர்.

இதுகுறித்து பொலி­ஸா­ருக்­கு தகவல் அளிக்கப்பட்தையடுத்து, சம்பவ இடத்திற்கு ­வி­ரைந்த பொலிஸார் உடனடியாக ரசிலாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்­ள­னர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ரசிலா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்­துள்­ள­னர்.

இந்த கொலை குறித்து பொலி­ஸார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலை­யில், குறித்த நிறு­வ­னத்­தின் பாதுகாப்புக் காவலர் பாபின் என்ற இளைஞர் (வயது 25) அந்தப் பெண்ணை கொலை செய்துள்ளமை தெரிய வந்துள்­ளது.

இந்தநிலையில் கொலையாளியை மும்பையிலுள்ள ரயில் நிலையத்தில் பொலிஸார் கைது செய்துள்ளனர். கொலை குறித்து பாபினிடம் விசாரித்ததில், “ஏன் வெறித்து பார்க்கிறாய் என்று கேட்டதாகவும் இது குறித்து நிறுவன மேலாளரிடம் புகார் தெரிவித்தார். இதில் ஆத்திரமடைந்து கழுத்தை வயரால் இறுக்கி கொன்றேன்” என வாக்குமூலம் அளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித் துள்ளனர்.

சசிலாவின் சடலம் பிரேத பரிசோதனை செய்யப் பட்டதையடுத்து ரசிலாவின் உறவினரான அஞ்சலி நந்தகுமார் பொலிஸில் கூறியதாவது, “சம்பவத்தன்று ரசிலா என்னிடம் ‘நான் இன்று சமர்ப்பிக்கும் வேலையைப் பொறுத்துதான், நான் பெங்களூருக்கு பணியிடமாற்றம் பெறுவதற்கான சாத்தியங்கள் நிறுவனத்திடமிருந்து பெப்ரவரி முதல் வாரத்தில் கிடைக்குமா என்பது தெரியும்”, என கூறிய சில நிமிடங்களிலே, “என் அறைக்குள் யாரோ நுழைவதுபோல் தெரிகிறது.

நான் சற்று நேரத்திற்குப்பின் அழைக்கிறேன்”, என்று அவசர அவசரமாக அலைபேசியைத் துண்டித்திருக்கிறார். இவைதான் அவர் பேசிய கடைசி வார்த்தைகள்!

அதன்பின், இரவு 8:30 மணியளவில், கழுத்தை நெரித்து கொல்லப்பட்டு இருந்த அவரின் உயிரற்ற உடல் மட்டுமே அவரது பணியறையில் காணப்பட்டது. மேலும், ரசிலாவுக்கு ஞாயிறுக்கிழமை அன்று அலுவலகத்தில் தனியாக வேலை செய்வதில் உடன்பாடில்லை.

அவரது மேலதிகாரிக்கு, அவர் மீது இருக்கும் காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவே, தன்னை அதிக நேரம் வேலை வாங்குவதாக தனது குடும்பத்தாரிடம் அவ்வப்போது புலம்பி இருக்கிறார். கொலையான ரசிலாவின் கடைசி நிமிடங்கள் போராட்டமாக கழிந்தது என்பதை பிரேத பரிசோதனைநிருபித்துள்ளது. ‘கொலையாளி அவரை ஏதோ ஒரு பொருளை வைத்து தாக்கியிருக்கிறார்.

அவரது இடது தோள்பட்டையில் பல் கடித்த காயங்கள் இருக்கின்றன. முகத்திலும் மார்பிலும் இருக்கும் காயங்களை பரிசோதித்ததில், அவர் கொலையாளியுடன் மிகவும் போராடி இருக்கிறார். அப்போது அவர் கழுத்தை நெரிக்கப்பட்டு, வாய் மற்றும் மூக்கு வழியாக இரத்தம் சிதறியிருக்கிறது” என்றிருக்கிறார்கள்.

ரசிலாவுக்கும் அவரது மேலதிகாரிக்கும், பணியிட மாற்றம் குறித்து வாக்குவாதம் நடந்ததாக ரசிலா கூறினார். இதன்போது ‘உனக்கு வெகுவிரைவில் பாடம் கற்பிக்கிறேன்’ என்று கூறியதாகவும் தெரிவித்தார்.

ரசிலாவின் மரணத்தை குறித்த நிறுவனமே பெறுப்பேற்க வேண்டும். இந்த மரணத்தில் மேலதிகாரிக்கும் சம்பந்தமுள்ளது என்றும் பொலிஸார் இதுகுறித்து விசாரித்து விரைவில் நட வடிக்கை எடுக்குமாறும் கோரி­யுள்ளார்.

தலைமைப் பொறுப்பு வழங்கப்பட்டால் சந்தர்ப்பத்தை சரியான முறையில் பயன்படுத்துவேன் : லசித் மலிங்க!!

இலங்கை கிரிக்கெட் அணியின் இருபதுக்கு இருபது போட்டிகளுக்கான தலைமைப் பொறுப்பு வழங்கப்படுமிடத்து, அந்த சந்தர்ப்பத்தினை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள தயாராக இருப்பதாக வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க தெரிவித்தார்.

அவுஸ்திரேலியாவிற்கு எதிராக இலங்கை அணி விளையாடவுள்ள 03 போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது தொடருக்கான இலங்கை குழாம் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

15 பேர் கொண்ட இலங்கை அணி குழாத்துக்கு உபுல் தரங்க அணித்தலைவராகப் பெயரிடப்பட்டுள்ளார்.

படிக்கும் வயதில் பாடம் எடுக்கும் 18 வயதான பேராசிரியர்!!

18 வயதான நபர் ஒருவர் துணை பேராசியராக தெரிவாகியுள்ள சம்பவம், அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றுள்ளது.

ஹொங்கொங்கை பூர்விகமாகவுடைய, மார்ச் டியான் என்ற 18 வயதான இளைஞர், லொஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் துணை பேராசியராக பதவியேற்றுள்ளார்.

மார்ச் டியான் சிறு வயது முதலே சிறப்பாக கற்று, கடந்த 2007ம் ஆண்டு அவரின் 9 வயதிலேயே, கணிதத்தில் முதல் தர நிலை மற்றும், புள்ளிவிபரவியலில் இரண்டாம் தர நிலைகளைக் கற்று, கல்வியியலுக்கான பொதுக் கற்கையை இங்கிலாந்தில் முடித்துள்ளார். ஆனால் பொதுவாக மாணவர்கள் 17 வயதில்தான் இதற்கான நுழைவுப் பரீட்சைகளை எழுதுவார்கள்.

இந்நிலையில், அவர் அதே ஆண்டில் ஹொங்கொங் பல்கலைக்கழகத்தில் இணைந்து, 4 ஆண்டுகள் கற்கையை மேற்கொண்டு, அவரது முதுகலை பட்டத்தை நிறைவு செய்துள்ளார்.

அதனை தொடர்ந்து அமெரிக்க கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். அத்தோடு தற்போது உலகின் முதல் 10 முதன்மை பல்கலைக்கழகங்களில் ஒன்றான கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் துணை பேராசிரியராக கடமையாற்றுகிறார்.

அத்தோடு தான் ஒரு மேதை என அழைக்கப்படுவதை விரும்பவில்லை என்றும், தான் இயல்பான கற்றல் நடவடிக்கைகளின் ஊடாகவே அனைத்து பரிட்சைகளையும் வெற்றி கொண்டதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஊழல்களின் மொத்த வடிவம் சசிகலா : நடிகர் கமல்ஹாசன்!!

முதலமைச்சர் ஆசனத்தில் அமர்வதற்கு, ஜெயலலிதாவுடனான நட்பு மட்டுமே போதுமான தகுதி அல்ல என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினைகள் குறித்து வெளிப்படையாகக் கருத்துத் தெரிவிக்கும் வழக்கமுடைய நடிகர் கமல்ஹாசன், தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஆங்கிலத் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தமிழகத்தின் தற்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இதுவரை முதல்வர் என்ற பதவிக்குக் களங்கம் விளைவிக்கவோ அல்லது அந்தப் பதவிக்குத் தகுதியின்மையையோ இதுவரை வெளிப்படுத்தவில்லை என்றும், இதனால் அவரே தொடர்ந்து முதல்வர் பதவியில் இருக்கலாம் என்றும், ஜனநாயகத்தை நிரூபிக்கும் ஒரு கருவியாகவே அவரைத் தான் கருதுவதாகவும் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.

ஒருவருடன் நீண்ட காலம் பழகினார் என்பதற்காக அவருடைய தொழிலை இன்னொருவர் திடீரெனச் செய்துவிட முடியாது. எனது தந்தை ஒரு சட்டத்தரணி. அவருடனேயே பல வருடங்கள் வாழ்ந்திருக்கிறேன் என்பதற்காக நீதிமன்றில் போய் நான் வாதிட முடியாது. நான் ஒரு நடிகன். நடிப்பதற்குப் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறேன்.

பன்னீர்செல்வம் எனக்கு நண்பரும் கிடையாது, எதிரியும் கிடையாது. எனினும், ஜனநாயகத்தை மலரச் செய்வதற்கான கருவியாக அவரைப் பார்க்கிறேன். மேலும், மக்கள் தம்மை ஆள்பவரைக் கட்டுப்படுத்தக்கூடியவர்களாக இருக்கவேண்டும் என்றும் விரும்புகிறேன்.

சசிகலாவின் தகுதியையோ, தமிழ்நாட்டு மக்களின் தகுதியையோ நான் அறியேன். எனினும் ஊழலின் மொத்த வடிவாக விளங்கும் சசிகலா, மக்களின் விருப்புக்கு மதிப்புக் கொடுக்கத் தெரிந்திருக்க வேண்டும் என்று அந்தப் பேட்டியில் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார்.

மேலும் தமிழகத்தின் தற்போதைய நிலை குறித்துக் குரல் கொடுக்கும்படி நடிகர் மாதவனுக்கும் கமல்ஹாசன் ட்விட்டர் மூலம் அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

102 பாடசாலைகளில் டெங்கு பரவும் அபாயம் : சுகாதார அமைச்சு எச்சரிக்கை!!

கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது டெங்கு தொற்று பரவக்கூடிய 102 பாடசாலைகள் இணங்காணப்பட்டுள்ளன. இதன்போது குறித்த பாடசாலைகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வருடத்தில் சுமார் 9 ஆயிரத்து 886 டெங்கு நோயாளர்கள் இணங்காணப்பட்டுள்ளதுடன், அதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, யாழ்ப்பாணம், அம்பாறை, காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களிலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் இணங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.