80 பருந்துகளுடன் விமானத்தில் சென்ற சவுதி இளவரசர்!!

சவுதி அரேபிய இளவரசரின் 80 பருந்துகள் பயணிகள் விமானத்தில் பயணம் செய்தன. பருந்துகள் விமானத்தில் பயணம் செய்யும் வீடியோ இணையத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

சவுதி அரேபிய இளவரசரின் 80 பருந்துகள் பயணிகள் விமானத்தில் பயணம் செய்தன. பருந்துகள் விமானத்தில் பயணம் செய்யும் வீடியோ ‘ரெட்டிட்’ இணைய தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

பயணிகள் விமானத்தில் ஆட்கள் மட்டுமே பயணம் செய்ய முடியும். பறவைகள், விலங்குகள் பயணம் செய்ய அனுமதி இல்லை. ஆனால் சவுதி அரேபியா இளவரசர் ஒருவரின் 80 பருந்துகள் விமானத்தில் ஆட்களுடன் பயணம் செய்தன.

பருந்து ஐக்கிய அரபு நாடுகளின் தேசிய பறவையாக உள்ளது. எனவே அது அங்கு போற்றி பாதுகாக்கப்படுகிறது. சவுதி அரேபியா இளவரசரின் 80 பருந்துகள் விமான பயணிகளுடன் அமர்ந்து இருந்தன. அவற்றின் கண்கள் கட்டப்பட்டிருந்தன. பாதுகாப்பு கருதி அவை இருக்கைகளின் கீழ் பகுதியில் கட்டப்பட்டிருந்தன.

பருந்துகள் விமானத்தில் பயணம் செய்யும் வீடியோ ‘ரெட்டிட்’ இணையத்தளத்தில் பிரசுரமாகி வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வீடியோவை தனது விமானி நண்பர் வழங்கியதாக அதை வெளியிட்டவர் தெரிவித்துள்ளார்.

விபத்தில் இரு இளைஞர்கள் பலி!!

பசறை – கனவருல்ல பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று பஸ் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு இளைஞர்கள் பலியாகியுள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் 3 பேர் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அதில் ஒருவரின் வயது 22 எனவும் மற்றைய இளைஞருக்கு 21 வயது எனவும் தெரியவந்துள்ளது.

இதேவேளை, உயிரிழந்துள்ள ஒருவர் இராணுவத்தில் பணிபுரிந்து வந்தவர் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலும், விபத்து சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நல்லூரில் அட்டகாசம் செய்த மோட்டார் சைக்கிள் கும்பல் கைது : ஆயுதங்கள் மீட்பு!!

 
யாழ்ப்பாணம் நல்லூர் அரசடி வீதி சந்தியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவருக்கு காயம் ஏற்படுத்தி, வர்த்தக நிலையம் ஒன்றுக்கு தீயிட்டு சேதத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் மோட்டார் சைக்கிள் குழுவின் சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கோப்பாய் தவசகுளம் பகுதியில் குறித்த நபர்களை கைது செய்துடன், மூன்று நாட்கள் தொடர்ச்சியான தேடுதல்களின் பின்னர் ஐந்து சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடம் இருந்த 6 வாள்கள், ஒரு கை கோடரி, ஒரு மோட்டார் சைக்கிள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று யாழ், நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர்.

மோட்டார் சைக்கிள் குழுவை சேர்ந்த மேலும் சிலரை கைது செய்ய யாழ். பொலிஸார் விரிவான விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றன.

வவுனியா இ.போ.ச பேரூந்துகள் காலவரையற்ற பணிப்புறக்கணிப்பில்!!

 
வவுனியா இலங்கைப் போக்குவரத்து சபையின் சாலை ஊழியர்கள் தங்களுக்கு வவுனியா பழைய பேருந்து தரிப்பிடத்தை வழங்குமாறும் மற்றும் வவுனியா சாலை முகாமையாளரை மாற்றுமாறும் கோரிக்கைகளை முன்வைத்து இன்று (01.02.2017) முதல் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபடப்போவதாக தெரிவித்துள்ளனர்.

வவுனியா கண்டிவீதியில் அமைந்துள்ள இலங்கைப் போக்குவரத்து சபையின் அலுவலகத்தின் வாயிலை மூடி அலுவலக வளாகத்தில் நிலத்தில் அமர்ந்து பணிப்பகிஸ்கரிப்பை முன்னெடுத்தனர்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த வவுனியா இலங்கைப் போக்குவரத்து சபையின் ஊழியர்கள்..

A9 வீதியில் அமைந்துள்ள புதிய பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து ஊழியர்கள் தங்கள் மீது தாக்குதல் நடத்துவதாகவும், அத்துடன் இ.போ.ச பேருந்து தரிப்பதற்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் தனியார் பேருந்துகள் தரித்து நிற்பதாகவும் குற்றஞ்சாட்டினர்.

மேலும் வவுனியா இலங்கைப் போக்குவரத்து சபையின் சாலை முகாமையாளர் மற்றும் பொலிசார் இ.போ.ச ஊழியர்களுக்கு எதிராக செயல்ப்படுவதகாவும் அதன் காரணமாக வவுனியா இலங்கைப் போக்குவரத்து சபையின் சாலை முகாமையாளரை மாற்றஞ்செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

ஊழியர்களின் குற்றச்சாட்டு தொடர்பாக கருத்து தெரிவித்த இலங்கைப் போக்குவரத்து சபையின் சாலை முகாமையாளர் எச்.எம்.டி.ஜே.சொய்சா..

தன் மீதான குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாகவும் தான் யாருக்கும் எதிராக செயல்படவில்லை என தெரிவித்ததுடன் அரச போக்குவரத்து விதிமுறைகளுக்கு அமைவாகவும் தனது மேலதிகாரிகளின் கட்டளைக்கு இணங்கவும் பணியாற்றிவருவதாகவும் ஊழியர்கள் பணிப் பகிஸ்கரிப்பை கைவிட்டு வேலைக்கு திரும்பவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.

வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் அரச – தனியார் பேரூந்து சாரதிகளிடையே மோதல் : இருவர் கைது!!

 
வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் இன்று (01.02.2017) காலை 10 மணியளவில் இ.போ. ச மற்றும் தனியார் பேரூந்து சாரதிகளிடையே மோதல் எற்பட்டுள்ளது.

இதில் முல்லைத்தீவிலிருந்து வவுனியாவிற்கு வந்த இ.போ.ச சாலை சாரதி மற்றும் முல்லைத்தீவிலிருந்து வந்த தனியார் பேரூந்து சாரதியிடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியதில் இருவருக்கும் இடையே பலத்த சண்டை ஏற்பட்டதில் இ.போ.ச சாரதி படுகாயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

கைகலப்பினையடுத்து இ.போ.ச சாரதிகள் தமது தூரசேவை பேரூந்துகளை மத்திய பேரூந்து தரிப்பிடத்திற்கு எடுத்து வந்து சேவையினை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையடுத்து மத்திய பேரூந்து தரிப்பிடத்திற்குச் சென்ற வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சோமரத்தின விஜயமுனி புதிய பேரூந்து தரிப்பிடத்திலிருந்து மத்திய பேரூந்து தரிப்பிடத்திற்கு எடுத்துவந்த தூர சேவை பேரூந்துகள் அனைத்தையும் புதிய பேரூந்து நிலையத்திற்கு எடுத்துச் சென்று மக்களின் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தாமல் சேவைகளை மேற்கொள்ளுமாறும், சேவை மேற்கொள்ளாத பேரூந்து சாரதிகளுக்கு எதிராக கடந்த மாதம் அரச அதிபர், வடமாகாண போக்குவரத்து அமைச்சர் ஆகியோருடன் இடம்பெற்ற கலந்துரையாடல்களுக்கு அமைவாக சேவைகளை மேற்கொள்ளாத பட்சத்தில் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மத்திய பேரூந்து நிலையத்திற்குச் சென்ற வடமாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன், வடமாகாண போக்குவரத்து அதிகாரசபை பணிப்பாளர், தனியார் பேரூந்து, அரச பேரூந்து சாரதிகள் ஆகியோர் இடையே கலந்துரையாடல் இடம்பெற்று தற்போது சுமுகமான போக்குவரத்து மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

வவுனியா நெடுங்கேணி சேனைப்புலவு உமையாள் வித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுநர் போட்டி!!

 
வவுனியா நெடுங்கேணி சேனைப்புலவு உமையாள் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி அதிபர் திரு.லோ.விமல்ராஜ் தலைமையில் நேற்று (31.01.2017) நடைபெற்றது.

இதன்போது வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் 2016ம் ஆண்டு பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து மாணவர்களின் குடிநீர் வசதிக்காக ஒரு இலட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டது.

இப் பாடசாலையில் 2016ம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் 5 மாணவர்கள் சித்தியெய்துள்ளனர். இவர்களில் மாணவன் ஒருவர் 180 புள்ளிகளைப்பெற்று மாவட்ட மட்டத்தில் 13வது இடத்தையும், வவுனியா வடக்கு வலயத்தில் 1ம் இடத்தையும் பெற்றுள்ளமை பாராட்டுக்குரியது.

குறித்த பாடசாலைக்கு குடிநீர் சுத்திகரிக்கும் இயந்திரமும், விளையாட்டு மைதானத்திற்கு அருகில் உள்ள ஒரு ஏக்கர் காணியை ஒதுக்கிக்கொடுப்பதும், கணினித்தொகுதி ஒன்றும் தேவையாகவுள்ளதாக அதிபர் தெரிவிக்கின்றார்.

மீண்டும் வறட்சியான காலநிலை ஆரம்பம்!!

நாட்டில் நிலவி வந்த மழையுடனான காலநிலை மாறி வறட்சியான காலநிலை நிலவும் வாய்ப்புகள் அதிகம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இருப்பினும் ஒரு சில இடங்களில் மழைவீழ்ச்சியை எதிர்ப்பார்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய மாவட்டங்களில் காலநிலை தொடர்பான விபரங்கள்.

அம்பாறை – மிதமான காலநிலை

அனுராதபுரம் – மிதமான காலநிலை

பதுளை – மிதமான காலநிலை

மட்டக்களப்பு – மிதமான காலநிலை

கொழும்பு – மிதமான காலநிலை

காலி – மிதமான காலநிலை

கம்பஹா – மிதமான காலநிலை

அம்பாந்தோட்டை – மிதமான காலநிலை

யாழ்ப்பாணம் – மிதமான காலநிலை

களுத்துறை – மிதமான காலநிலை

கண்டி – மிதமான காலநிலை

கேகாலை – மிதமான காலநிலை

கிளிநொச்சி – மிதமான காலநிலை

குருணாகல் – மிதமான காலநிலை

மன்னார்- மிதமான காலநிலை

மாத்தளை – மிதமான காலநிலை

மாத்தறை – மிதமான காலநிலை

மொனராகலை – மிதமான காலநிலை

முல்லைத்தீவு – மிதமான காலநிலை

நுவரெலியா – மிதமான காலநிலை

பொலன்னறுவை – மிதமான காலநிலை

புத்தளம் – மிதமான காலநிலை

இரத்தினபுரி – மேகமூட்டத்துடன் கூடிய மந்தமான காலநிலை

திருகோணமலை – மிதமான காலநிலை

வவுனியா – மிதமான காலநிலை

சிவப்பு நிறத்தில் இருக்கும் கொய்யாப் பழத்தில் இவ்வளவு நன்மைகளா?

கொய்யா பழத்தில் இரண்டு வகைகள் உள்ளது. அவை தான் சிவப்பு மற்றும் வெள்ளை நிறமுள்ள கொய்யா பழங்கள்.

இந்த இரண்டு வகை நிறமுள்ள கொய்யா பழமானது, நிறத்தில் மட்டுமல்ல, அதனுடைய மருத்துவ நன்மைகளிலும் பல வேறுபாடுகளைக் கொண்டுள்ளது.

சிவப்பு நிறத்தில் இருக்கும் கொய்யா பழத்தில், கேரட் மற்றும் தக்காளி பழத்தில் இருக்கும் கரோட்டீனாய்டு என்னும் நிறமி அதிகம் உள்ளது. மேலும் இதில் நீர்ச்சத்து, விட்டமின் C போன்ற சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது.

சிவப்பு கொய்யா பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

சிவப்பு கொய்யா பழமானது, நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற அற்புதமான ஓரு பழமாகும். எனவே அவர்கள் இந்த கொய்யாவை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், டைப்-2 நீரிழிவு நோய் ஏற்படும் வாய்ப்பும் குறைகிறது.

சிவப்பு நிறமுள்ள கொய்யா பழத்தில் விட்டமின் C அதிகமாக உள்ளதால், இது நமது உடம்பில் இருக்கும் பல்வேறு வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடி, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையுடன் பாதுகாக்கிறது.

நமது கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் விட்டமின் A சத்துக்கள் சிவப்பு கொய்யா பழத்தில் அதிகமாக உள்ளது. எனவே இந்தப் பழத்தை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால், கண்பார்வை பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்கிறது.

சிவப்பு கொய்யாவில் உள்ள ஆன்டி-மைக்ரோபியல் தன்மை, நமது வயிற்றில் ஏற்படும் பிரச்சனைகளை தடுத்து, வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலியைக் குறைத்து, நமது உடலில் நீர்ச்சத்தை தக்க வைக்கிறது.

ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இந்த சிவப்பு நிறமுள்ள கொய்யா பழத்தில் அதிகமாக உள்ளது. எனவே அந்த பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால், நமது உடம்பில் புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடி, புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கிறது.

பூமிக்கு காத்திருக்கும் பாரிய ஆபத்து? அதிர்ச்சிப் படத்தை வெளியிட்ட விஞ்ஞானிகள்!!(காணொளி)

சமீப காலமாக பூமிக்கு பாரிய ஆபத்துக்கள் காத்திருப்பதாகவும், இதனால் அழிவை எதிர்நோக்க வேண்டிய சூழல் ஏற்படும் எனவும் பல தகவல்கள் உலாவருகின்றன. எனினும் இதனை நிரூபிக்கும் விதமாக பல்வேறு அனர்த்தங்கள் பூமியில் ஏற்பட்டுக்கொண்டே இருக்கின்றது.

தற்போது அரிஷோனா பாலைவனப் பகுதியில் ஏற்பட்டுள்ள சம்பவமும் இந்த அச்சத்தை அதிகரித்துள்ளது. அதாவது சுமார் 3.2 கிலோ மீற்றர்கள் தூரத்திற்கு நிலத்தில் பாரிய பிளவு ஏற்பட்டுள்ளது.

இப் பிளவு தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை முதன் முறையாக விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.

இதன் அகலம் 3 மீற்றர்கள் வரை இருப்பதுடன், இந்த அளவுகள் எதிர்காலத்தில் மேலும் பல மடங்கு அதிகரிக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

இப் பிளவானது 2014ம் ஆண்டு எடுக்கப்பட்ட கூகுள் ஏர்த் புகைப்படம் மூலம் முதன் முதலாக இனங்காணப்பட்ட நிலையில் தற்போது ட்ரோன் தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி நேரடியாக வீடியோ பதிவு மற்றும் புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

பெண்ணாக பிறந்து 12 வயதில் ஆணாக மாறும் சிறுமிகள் : ஓர் அதிசய கிராமம்!!

டொமினிகன் குடியரசு நாட்டில் பிறக்கும் 50 பெண் குழந்தைகளில் ஒருவர் 12 வயதில் ஆணாக மாறும் வினோதம் நிகழ்கிறது.

ஆபி ரிக்கா கண்டத்தில் உள்ள டொமினிகன் குடியரசு நாட்டில் மிகவும் உள்ளடங்கிய ஒரு கிராமத்தில் தான் இந்த நிகழ்வு நடக்கிறது. அங்கு பிறக்கும் 50 பெண் குழந்தைகளில் ஒருவர் 12 வயதில் ஆணாக மாறுகின்றனர்.

பெண் குழந்தையாக பிறந்து சிறுமி ஆக வளரும் பெண் 12 வயதில் பருவம் அடையும் போது சிறுவனாகிறான்.

அதாவது 12 வயது தொடங்கும் போது சிறுமியாக இருக்கும் பெண்ணுக்கு பெண்ணுறுப்பு மறைந்து ஆணுறுப்பு உள்ளிட்டவை தோன்றுகிறது. தற்போது இது குறித்து உயிரியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த வளர்ச்சி 5 வயதில் ஏற்பட தொடங்குகின்றன. உடலில் உள்ள ஹார்மோஙளில் குறிப்பிட்ட ஒன்றின் குறைபாடுகளால் தான் இவ்வாறு நடப்பதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

மேலும், 12 வயதுக்கு முன் வரை சிறுமிகளாக வாழும் இவர்கள் பின்னர் ஆண்களாக மாறியவுடன் திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.

மனநிலை பாதிக்கப்பட்டவர் என கிண்டல் : பத்மஸ்ரீ விருதை வென்று பதிலடி தந்த முதியவர்!!

மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று மக்களால் கிண்டல் செய்யப்பட்டவர் ‘பத்மஸ்ரீ’ விருதை வென்று அசத்த, இப்போது அவரைக் கிண்டலடித்தவர்கள் மரியாதை நிறைந்த கண்களுடன் உற்று நோக்குகின்றனர்.

தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரெட்டிப்பள்ளி என்ற கிராமத்தில் வசிப்பவர் தாரிப்பள்ளி ராமையா (வயது 70).

காலையில் எழுந்ததும் சைக்கிளை எடுத்துக் கொள்வார் ராமையா. சைக்கிள் முழுவதும் விதைகளும், மரக்கன்றுகளும் நிறைந்து காணப்படும்.

சைக்கிள் போய்கொண்டே இருக்கும். மரங்கள் இல்லாத தரிசு நிலத்தைக் கண்டால் மட்டுமே சைக்கிள் நின்று விடும்.

பின்னர் ராமையா அங்கே சில நாட்கள் முகாமிடுவார். கிராமத்தை, தனது மனைவியைக் கூட மறந்து விடுவார். கையோடு கொண்டு வந்த, மரக்கன்றுகளை குழி தோண்டி நடுவார்.

பல கிலோ மீட்டர் தொலைவு சைக்கிளிலேயே சென்று அந்த மரக்கன்றுகளுக்காக தண்ணீர் கொண்டு வருவார். அந்த மரக்கன்றுகள் தானாக வளரத் தொடங்கிய பின்னரே அந்த இடத்தை விட்டு ராமையா நகர்வார்.

இப்படி தெலுங்கானா மாநிலம் முழுவதும் சுமார் ஒரு கோடி மரங்களை நட்டு சாதனை படைத்துள்ளார் ராமையா. அதாவது தெலுங்கானாவில் மூன்றில் ஒருவருக்காக ராமையா மரக்கன்றுகளை நட்டுள்ளார்.

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பல நாட்கள் தனது வீட்டுக்கும் கிராமத்துக்கும் போகாமல் மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் ராமையாவுக்கு, அந்த கிராம மக்கள் வைத்த பெயர் என்ன தெரியுமா…’ மனநிலை பாதிக்கப்பட்டவர்’.

சதா… மரமும் மரக்கன்றுகளுடனும் திரிந்ததால், கிராம மக்கள் ராமையாவை இப்படித்தான் கருதினர். எப்போதாவது விருதுகள் அதற்கு தகுதியானவர்களைத் தேடி வரும்.

இந்த ஆண்டு பத்ம விருதுகளுக்குரியவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்ட போது, அதில் தாரிப்பள்ளி ராமையாவின் பெயரும் இடம் பெற்றிருந்தது.

இப்போது கிராம மக்கள் ராமையாவை மரியாதை நிறைந்த கண்களுடன் உற்று நோக்குகின்றனர். தன்னலம் கருதாமல் மரக்கன்றுகள் நட்டதற்காக இப்போது ராமையாவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.

ரெட்டிப்பள்ளியில் ஒரு சிறிய வீட்டில்தான் ராமையா வசிக்கின்றார். வீடு முழுவதும் மரக்கன்றுகள் ஆங்காங்கே இறைந்து கிடக்கின்றன. சுற்றுச்சூழலை காக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் பேனர்கள் சுற்றி காணப்படுகிறது.

அவரது சைக்கிளும் கூட மரங்கள் நடுவதன் அவசியத்தை வலியுறுத்தும் பதாகைகளைத் தாங்கிக் கொண்டுதான் அவருடன் பயணிக்கிறது.

ராமையா, சைக்கிளில் பயணிக்கும் போது, இவரது கழுத்தைச் சுற்றி, ஸ்கார்ப் போல பேனர் சுற்றப்பட்டிருக்கும். அதில், ‘மரக்கன்றுகளை காப்பாற்றுங்கள்.. உங்களை அது காப்பாற்றும்’ என்றும் எழுதப்பட்டிருக்கும்.

திருமண வீடு, புதுமனை புது விழா என எந்த விழா நடந்தாலும் ராமையா சார்பில் சம்பந்தப்பட்டவர்களுக்கு மரக்கன்றுகள் பரிசாக வழங்கப்படுவதும் வழக்கமாக இருக்கும்.

தெலுங்கானா மாநிலத்தையே பசுமையாக மாற்றிக் கொண்டிருக்கும் ராமையா படித்ததோ 10ம் வகுப்பு வரைதான். ஆனாலும் சுற்றுச்சூழல் குறித்து பத்திரிகைகளில் எந்த கட்டுரை வந்தாலும் அதனை சேகரிப்பதும் ராமையாவின் வழக்கம். விருது வென்றது குறித்து ராமையா இவ்வாறு கூறுகிறார்,” பத்மஸ்ரீ விருது வென்றிருப்பது எனது பொறுப்பை இன்னும் அதிகரித்திருக்கிறது.

இவருக்கு விருதா…? என்று இப்போது பலரும் புருவத்தை உயர்த்துகின்றனர். அப்படியாவது மரக்கன்றுகள் நடுவதன் அவசியத்தை மக்கள் உணர்ந்து கொண்டால் நல்லதுதான். என்னைப் பார்த்தாவது மரக்கன்றுகளை நடத் தொடங்குவார்கள்.

என்னைப் பொறுத்த வரை பூமியில் மரங்கள் இல்லாத பகுதியே இருக்கக் கூடாது. ஒவ்வொரு மரமும் பூமியை காப்பாற்றுவதற்கான அச்சாரம்.. நான் வைத்த, எந்த மரக்கன்றுகளும் வளராமல் போனதில்லை. அப்படி மரக்கன்றுகள் வளராமல் போனால், நான் எனது வாழ்க்கையை இழந்ததற்கு சமம்” என்கிறார்.

அரசியலில் குதிக்கும் நடிகர் ராகவா லோரன்ஸ்?

பிரபல திரைப்பட நடிகரான ராகவா லாரன்ஸ் தேவைப்பட்டால் அரசியலில் வரவும் தயார் என கூறியுள்ளார்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று இளைஞர்கள் உட்பட முக்கிய பிரபலங்கள் பலரும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். அதில் திரைப்பிலங்கள் பலரும் இருந்தனர்.

திரைப்பிரபலங்கள் பலர் கலந்திருந்தும், பெரிதும் பேசப்பட்ட நடிகர் என்றால் அவர் தான் ராகவா லாரான்ஸ்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு உதவும் விதமாக ஒரு கோடி ரூபாய் தருவதாக கூறினார். அப்போது மக்கள் மனதில் ஒரு பெருமதிப்பு பெற்றார்.

இந்நிலையில் தேவைப்பட்டால் அரசியலுக்கு வரவும் தயாராக உள்ளேன். என்னுடன் இருக்கும் மாணவர்கள் இதுவரை எந்த கட்சியையும் சாராமல் இருக்க வேண்டும் என்பதுதான் என் வேண்டுகோள்.

மெரினா போராட்டத்தின் போது என் மனைவியின் நகையை அடகுவைத்து போராட்டத்தில் பங்குபெற்றவர்களுக்கு சாப்பாடு வாங்கி கொடுத்தேன். என்று லாரன்ஸ் கூறியுள்ளார்.

காப்பாற்றுமாறு கதறிய பள்ளி மாணவன் : துடிதுடிக்க எரித்த விடுதி காப்பாளர் : அதிர்ச்சி தரும் காரணம்!!

ஆந்திராவில் 14 வயது பள்ளி மாணவன் ஒருவன் கழிவறை சுத்தம் செய்ய மறுத்ததால் விடுதி காப்பாளர் ஒருவர் தீவைத்து எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா மாநிலத்தின் விஜயவாட பகுதியில் ஆதரவற்ற சிறார்களுக்கான விடுதி ஒன்று உள்ளது. இங்குள்ள கழிப்பறையை அங்குள்ள மாணவர்கள் தான் சுத்தப்படுத்துவார்கள் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் பிரவீன்(14) என்ற மாணவனை விடுதிகாப்பாளரான வெங்கடேஸ்வரன் கழிப்பறையை சுத்தம் செய்யும் படி கூறியுள்ளார். இதற்கு பிரவின் மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேஸ்வரன் விடுதியில் வைத்திருந்த பெட்ரோலை அச்சிறுவன் மீது ஊற்றி தீ வைத்துள்ளார்.

வலி தாங்கமுடியாமல் துடி துடித்த சிறுவன் தன்னை காப்பாற்றுமாறு கதறியுள்ளான். ஆனால் வெங்கடேசனோ தான் சொல்வதை செய்தால் தான் காப்பாற்றுவேன் என்று மிரட்டியுள்ளார்.

அதன் பின்னர் சிறுவன் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். இதில் சிறுவனுக்கு 70 சதவீத காயங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து பிரவினின் சகோதரர் கூறுகையில், இந்த சம்பவம் குடியரசு தினத்தன்று மாலை 4 மணியளவில் நடந்ததாகவும், இந்த உண்மையைச வெளியில் சொல்லக் கூடாது என்று காப்பாளர் மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளான்.

பலரின் உயிரை பலியெடுத்த ட்ரம்பின் முதலாவது உத்தரவு : வெற்றிக்களிப்பில் டொனால்ட் ட்ரம்ப்!!

அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ள முதலாவது இராணுவ நடவடிக்கையில் பலர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச ஊடகங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தெற்கு யேமனில் அமெரிக்க இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கையில் 16 பொது மக்கள் உள்ளிட்ட 57 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், இந்த தாக்குதல் நடவடிக்கையின் போது அமெரிக்க இராணுவ கொமான்டோ ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

எவ்வாறாயினும், இந்த தாக்குதல் நடவடிக்கையின் போது 14 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க இராணுவத்தினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

மேலும், அல் கொய்தா தீவிரவாதிகளின் பலம்கொண்ட அல் பைதா மாகாணத்தில் இடம்பெற்ற இந்த இராணுவ நடவடிக்கையில் இராணுவ ஹெலிகொப்டர்கள் பல ஈடுபடுத்தப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில், யக்லா மாவட்டத்தில் தரைவழியாக மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையின் போது மூன்று அல் கொய்தா தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக அமெரிக்கா கூறியுள்ளது.

இந்த அதிரடி இராணுவ நடவடிக்கை வெற்றியளித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், இந்த தாக்குதலில் ஆறு வீடுகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும், இடிபாட்டுக்குள் பலரும் சிக்கியிருக்கலாம் எனவும், யேமன் ஊடகங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஸ்மார்ட்போனின் உதவியுடன் தோல் புற்றுநோயை கண்டறியும் புதிய தொழில்நுட்பம் உருவாக்கம்!!

தோல் புற்று நோயை மருத்துவர்கள் உதவி இன்றி நாமே சோதனை செய்து கண்டு பிடிக்கும் புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஸ்டன்போர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், ஆரம்ப நிலையிலே துல்லியமான முறையில் தோல் புற்றுநோயைக் கண்டறியும் செயற்கை நுண்ணறிவு முறையை உருவாக்கியுள்ளனர்.

மருத்துவர்கள் உறுதி செய்வதை விட துல்லியமாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது நோயை கண்டறிந்து உறுதிசெய்கிறது. இதனை ஸ்மார்ட்போன்களிலே பொருத்தி அவரவர் தானாகவே பரிசோதிக்கலாம்.

இன்று மனிதர்களை மிகவும் அச்சுறுத்தும் நோய்களுள் ஒன்று புற்றுநோய். தோல்ப்புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், மூளைப்புற்றுநோய் என இதன் பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது.

புற்றுநோயை ஆரம்ப நிலையிலே கண்டறிந்தால் நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்த முடியும் என்பது மருத்துவர்களின் கருத்தாகவுள்ளது.

புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிப்பதற்கான ஆய்வை விட அதனை கண்டறிவதற்கான பரிசோதனை ஆய்வு தொடர்ந்து நடைபெற்று கொண்டே வருகிறது.

இந்நிலையில், புற்றுநோயை கண்டுபிடிப்பதற்கு புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது.

தனது மூளையில் கட்டி இருப்பதாக பொய் கூறி திருமணத்தை நிறுத்திய மணமகன் உட்பட 5 பேர் கைது!!

தனது மூளையில் கட்டி இருப்­ப­தாக நாடகம் ஆடி திரு­ம­ணத்தை நிறுத்­திய மண­மகன் உட்­பட 5 பேரை பெங்­க­ளூர் பொலிஸார் கைது செய்த சம்­பவம் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யது. பெங்­க­ளூரு மாநகர், கவுடன பாளையா பகு­தியை சேர்ந்த வர­த­ராஜன் என்­ப­வ­ரது மகன் ரங்­கநாத். இவர் தனியார் கம்­பனியில் வேலை பார்த்து வரு­கிறார்.

ரங்­க­நாத்­துக்கும், சிக்­கல சந்­திரா பகு­தியை சேர்ந்த ஒரு இளம்­பெண்­ணுக்கும் இரு­வ­ரது குடும்­பத்தை சேர்ந்த பெரி­ய­வர்கள் கூடி திரு­மணம் நிச்­ச­யித்­தனர்.

இந்த இளம்­பெண்ணும், ஒரு தனியார் நிறு­வ­னத்தில் பணி புரிந்து வரு­கிறார்.இவர்­களின் திரு­மண விழாவை எதிர்­வரும் 3ஆம் திகதி நடத்த முடிவு செய்­யப்­பட்டு, பெண் வீட்டார் தரப்பில் அனைத்து ஏற்பா­டு­களும் தட­பு­ட­லாக நடை­பெற்று வந்­தன.

திரு­ம­ணத்­திற்கு 5 நாட்­களே உள்ள நிலையில் திடீ­ரென்று மண­மகன் ரங்­கநாத், கடந்த 24 ஆம் திகதி தனக்கு நிச்­ச­யிக்­கப்­பட்ட பெண்ணை தொலை­பே­சியில் அழைத்து தனக்கு மூளையில் கட்டி இருப்­ப­தா­கவும் (பிரெயின் ட்யூமர்) ஆகையால் இந்த திரு­மணம் வேண்டாம், ஏற்­பா­டு­களை நிறுத்திவிடுமாறும்­ கூ­றி­னாராம்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண், கண்­ணீரும், கம்­ப­லை­யு­மாக நீங்கள் தற்­போது எங்கிருந்து பேசு­கி­றீர்கள், நானே நேரில் வரு­கிறேன். விரி­வாக பேசலாம் என்று ரங்­க­நாத்­திடம் கேட்டுள்ளார்.

அதற்கு ரங்­கநாத் மறுப்பு தெரி­வித்து, ”எனது டாக்டர் நண்பர் ஒரு­வரே, என்னை பரி­சோ­தித்து மூளையில் கட்டி இருப்­பதை உறுதி செய்துள்ளார். ஆதலால் நமக்கு இந்த திரு­மணம் சாத்­தி­ய­மில்லை. என்னை மறந்து விடு” என்று டயலாக் பேசி, ரங்­கநாத் போனை துண்­டித்து விட்­டாராம்.

ஆனால் ரங்­கநாத் எதையோ மறைக்­கிறார், நாட­க­மா­டு­கிறார் என்று சந்­தேகம் கொண்ட அந்த மணப்பெண் இது குறித்து தனது குடும்­பத்­தி­ன­ரிடம் கூறியுள்­ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த பெண்ணின் குடும்­பத்­தி­னர், உட­ன­டி­யாக ரங்­கநாத் வீட்­டுக்கு சென்­றனர்.
அங்கு அவ­ரது பெற்­றோ­ரிடம் பேசி­ய­போது, எங்கள் மக­னுக்கு விருப்பம் இல்­லாத இந்த திரு­ம­ணத்தில் எங்­க­ளுக்கும் விருப்பம் இல்லை என்று மறுத்து விட்­ட­னராம்.

இதை­ய­டுத்து மணப்­பெண்னின் குடும்­பத்­தினர், மணப்­பெண்ணை அழைத்து சென்று சுப்பிரமணியபுரா காவல் நிலை­யத்தில் புகார் செய்­தனர். இதன் பேரில் பொலி­ஸார் வழக்குப் பதிவு செய்து, ரங்­கநாத் மற்றும் அவ­ரது தந்தை வர­த­ராஜன், தாய் ஜெயம்மா, உற­வினர் ரவி மற்றும் அவ­ரது மனைவி சியா­மளா ஆகிய 5 பேரையும் கைது செய்­தனர்.

பொலி­ஸாரின் விசா­ர­ணையில் ”மணப்­பெண்­ணிடம் தனக்கு மூளையில் கட்டி இருப்­ப­தாக பொய் சொன்ன ரங்­கநாத், பொலி­ஸா­ரிடம் வேறு மாதி­ரி­யான கார­ணங்­களை சொல்லியுள்ளார்.

அதா­வது, திரு­ம­ணத்­துக்கு பிறகு வேறு வீடு பார்த்து, நாம் தனிக்­கு­டித்­தனம் போகலாம் என்று மணப்பெண், ரங்­க­நாத்தை வற்­பு­றுத்­தி­னாராம்.

‘திரு­ம­ணத்­திற்கு முன்பே, குடும்­பத்தில் இருந்து தன்னை பிரிக்க நினைக்கும் அந்த பெண்ணை திரு­மணம் முடித்தால், இனி வரும் நாட்­களில் எப்­ப­டி­யெல்லாம் தொல்லை கொடுப்­பாரோ? என்ற கார­ணத்­தினால் தான் இந்த திருமணத்தை நிராகரித்தேன்.

என்னை சிறையில் அடைத்தாலும் சரி, ஆனால் இந்த திருமணத்திற்கு மட்டும் சம்மதிக்கவே மாட்டேன்’ என்று ரங்கநாத் உறுதியாக பொலி­ஸா­ரிடம் கூறிவிட்டதாக, பொலிஸ் தரப்பில் கூறப்படுகிறது.