மரத்திலிருந்து கீழே வீழ்ந்து சிறுவன் உயிரிழப்பு!!

அக்­க­ரைப்­பற்று பள்­ளிக்­கு­டி­யி­ருப்பு பிர­தே­சத்தில் மாம­ரத்தில் ஏறி மாங்காய் பறிக்­க­முற்­பட்ட போது தவறிக் கீழே வீழ்ந்த 10 வயதுச் சிறுவன் ஒருவன் உயி­ரி­ழந்­துள்­ள­தாக அக்­க­ரைப்­பற்று பொலிஸார் தெரி­வித்­தனர்.

அக்­க­ரைப்­பற்று பள்ளிக் குடி­யி­ருப்பு பிர­தே­சத்தை சேர்ந்த இந்தச் சிறுவன், வீட்­டுக்கு அண்­மையில் உள்ள தனியார் காணிக்குள் உள்ள மாம­ரத்தில் மாங்காய் பறிப்­ப­தற்­காக ஏறிய போது கீழே தவறி வீழ்ந்து பலத்த காய­ம­டைந்­துள்ளார்.

மனிதனின் ஆதி மூதாதையர் படிமம் சீனாவில் கண்டுபிடிப்பு!!

மேலே நீங்கள் காண்பது நமது மூதாதையரின் ஆதி வடிவம்தான். கூர்ப்பு விதியின்படியே இன்றைய மனிதன் உருவெடுத்தான் என்பது மனிதத் தோற்றுவாய் குறித்த விஞ்ஞானிகளின் விளக்கம். அதாவது, புல்லாகி, பூடாகி, புழுவாகி, மரமாகி… கடைசியாய் மனிதன் தற்போதைய தோற்றத்தைப் பெற்றிருக்கிறான்.

இதை உறுதிப்படுத்தும் வகையில், சீனாவின் கடற்படுகையின் அடியில் சேற்றில் புதைந்திருந்த இந்த உயிரினத்தின் படிமம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதன் வயது சுமார் 540 மில்லியன் ஆண்டுகள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதுவரையில் உலகில் கண்டெடுக்கப்பட்ட உயிரினப் படிமங்களுள் மிக மிகப் பழைமையானது இது!

இந்தப் படிமத்தை ‘சக்கரைட்டஸ்’ – அதாவது ‘சுருங்கிய சாக்கு’ என்ற பெயரில் விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.

நமது மூதாதையர்களாக நாம் கருதும் குரங்குகள் கூட சுமார் 2 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தான் உருவாகியிருக்கின்றன. எனவே, அதற்கும் முந்தைய நமது மூதாதையர்களாக இந்த உயிரினத்தைச் சொல்ல முடியும். இதன் அடிப்படையில், மனிதன் தோன்றுவதற்கு அடிப்படையாக விளங்கிய உயிரினம் இதுவாகக்கூட இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கைப்பையைப் போன்ற தோற்றம் கொண்ட இந்த உயிரினம் முத்துக்கள் போன்ற அமைப்பினால் ஆன பென்னாம்பெரிய வாயைக் கொண்டிருக்கிறது. மேலும், மேற்புறத்தில் நான்கு சிறு குடைகள் போன்ற அமைப்பும் காணப்படுகின்றன. இவை அதன் கண்களாக இருந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

இதைப்போன்ற சுமார் நாற்பது படிமங்கள் மத்திய சீனாவின் ஷாங்ஸி மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் சுமார் பதினைந்து படிமங்கள் கடலுக்கடியில் உள்ள செறிவான உப்பால் அழியாமல் இருப்பதாகவும் தெரிவித்திருக்கும் விஞ்ஞானிகள், இவற்றை ஆராய்ந்தால் மனித உருவாக்கத்தின் மிக முக்கியமான பல காரணிகள் வெளித்தெரியவரும் என்று நம்புகிறார்கள்.

மூன்று வயது குழந்தையை காப்பாற்ற எட்டி உதைத்த தாய்!!(காணொளி)

மின்தூக்கி கதவில் சிக்குவதற்கு சென்ற தம் குழந்தையை காப்பாற்ற முயன்ற தாய், தனது குழந்தையினை காலால் எட்டி உதைத்த சம்பவம் மலேசியாவில் பதிவாகியுள்ளது.

குறித்த சம்பவத்தின் சிசிடிவி காணொளி தற்போது இணையத்தளத்தில் மிகவேகமாக பகிரப்பட்டு வருகின்றது.

ட்ரம்ப்பின் முடிவால் கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஏற்பட்ட சோகம்!!

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் உத்தரவின்பேரில் ஈராக், சிரியா, ஏமன், சூடான், லிபியா, சோமாலியா உள்ளிட்ட 7 நாடுகளின் அகதிகள் அமெரிக்காவுக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ரேச்சல் அட்ரியான் என்னும் தாதி , 2013ஆம் ஆண்டு பணிநிமித்தம் காரணமாக ஈராக் சென்றுள்ளார். அப்போது ஈராக் சன்னி முஸ்லிமான ஹோகர் அமீனை ரேச்சல் சந்திக்க, இருவருக்குள்ளும் காதல் மலர்ந்துள்ளது.

இருவரும் திருமணம் முடித்துள்ளனர். அமெரிக்காவின் மிசவுரி மாகாணத்தில் குடியேற இவர்கள் விரும்பினர்.

தற்போது ரேச்சல் நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். அவருக்கு பெப்ரவரி 2ஆம் திகதி குழந்தை பிறக்க இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அமீன் கடந்த 2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க தூதரகத்தில் அமெரிக்காவில் குடியேற விசாவுக்கு விண்ணப்பித்துள்ளார்.

இஸ்லாமியர் என்பதால் இவருக்கு நேர்முகத் தேர்வு, உடல் பரிசோதனை என மற்ற மதத்தினர்களைக் காட்டிலும் கெடுபிடிகள் கூடுதலாகவே இருந்தன.

எல்லா கட்டத்தையும் வெற்றிகரமாகத் தாண்டிய அமீன், மனைவியின் பிரசவகாலத்தில் அமெரிக்கா செல்லத் திட்டமிட்டிருந்த வேளையில், ட்ரம்ப் 7 இஸ்லாமிய நாட்டு மக்கள் அமெரிக்க வர தடை விதித்துள்ளார்.

இந்த தடை உத்தரவால் அமீனால் பிரசவத்தின் போது மனைவியின் அருகில் இருக்க முடியாமல் போய்விட்டது. ஏற்கனவே ட்ரம்ப்பின் இந்த தீர்மானத்துக்கு பல தரப்பினர் பலத்த எதிர்ப்பை காட்டிவரும் நிலையில், ரேச்சல் – அமீனின் கதை சமூக வளைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

டொனால்ட் ட்ரம்ப்பினால் அடிவாங்கிய முதல் ஆசிய நாடு : ஆட்டம் காணும் சர்வதேச பொருளாதாரம்!!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எடுத்துவரும் முடிவுகளால் இந்தியாவில் உள்ள தொழில் நுட்பக்கம்பனிகளின் பங்கு கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. இது குறித்து தெரியவருவதாவது,

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கொண்டுவந்துள்ள விசா கொள்கைகளின்படி, H1B விசாவில் வேலைக்கு வருபவர்களின் குறைந்தபட்ச சம்பளம் 1,30,000 டொலராக உயர்த்தப்பட்டுள்ளது.

இது, முன் இருந்ததை விட 2 மடங்கு அதிகம். இன்று, அமெரிக்க நாடாளுமன்றத்தில் H1B விசாவில் திருத்தம் செய்யப்பட்ட மனுத் தாக்கல் செய்யப்பட்ட ஒரு மணி நேரத்தில் இந்தியாவின் முன்னணி தொழில் நுட்ப நிறுவனங்களான டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ மற்றும் எச்சிஎல் நிறுவனங்களின் பங்குகள் சுமார் ரூ.48,000 கோடி வீழ்ச்சியடைந்துள்ளன.

இது முன்னர் எப்பொழுதும் இருந்ததை விட அதிகம் என தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்க ஜனாதிபதியாக கடந்த 20ம் திகதி பொறுப்பேற்றுக் கொண்ட டொனால்ட் ட்ரம்ப் லிபியா, துருக்கி உட்பட்ட ஏழு நாட்டவர்களுக்கான விசா வழங்கப்படமாட்டாது என்றும். இது அமெரிக்காவின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், அமெரிக்காவில் குடியேறியிருப்பவர்கள் குறித்தும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டடிருந்தார்.

எனினும், உடனடியாக கூகுள் நிறுவனத்தின் தலைமை அதிகாரி சுந்தர்ப்பிச்சை கடும் எதிர்ப்பை வெளியிட்டதுடன், பொருளாதாரத்தில் இது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அதேபோன்று ஏனைய நாடுகளும் ட்ரம்பின் இந்த முடிவிற்கு கடும் எதிர்ப்புக் தெரிவித்திருந்தார்கள். இந்நிலையில் தான் இந்தியாவில் உள்ள தொழில் நுட்பக்கம்பனிகளின் பங்குகளில் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது.

டொனால்ட் ட்ரம்பின் இந்த முடிவுகளானது, ஆசியாவின் ஏனைய வளர்ந்துவரும் இலங்கை போன்ற நாடுகளுக்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.

இது இவ்வாறு இருக்க, அமெரிக்காவில் ஏற்படும் மாற்றத்தினால் சர்வதேச பொருளாதாரத்தில் பெரும் சிக்கலைச் சந்திக்கும் என்கிறார்கள் அவதானிகள்.

இந்நிலையில், இது குறித்து அமெரிக்காவின் முக்கிய ஆய்வாளர்கள் ஆலோசனை நடத்திவருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தந்தையின் உயிரை பறித்த பாலம் : மூன்று பெண் பிள்ளைகளின் வியக்க வைக்கும் காரியம்!!

பெண்களினால் முடியாத வேலை என கூறிய விடயத்தை மூன்று இளம் பெண்கள் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர்.

காலி, நெழும் பிரதேசத்தில் வாழும் தில்கி, சந்துனி மற்றும் நிழுக்ஷி என்ற மூவரும் தந்தையின் பாதுகாப்பில் வாழ்ந்த மகள்களாகும். இந்த மூன்று பிள்ளைகளுக்கும் யாரும் எதிர்பார்க்காத சந்தர்ப்பத்தில் தந்தையின் அன்பு இழக்கப்பட்டது.

ஆயிரம் கணக்கிலான மக்கள் பயணித்த பாலம் குறித்த மூன்று மகள்களின் தந்தையின் உயிரை பறித்துக் கொண்டுள்ளது. அதன் பின்னர் இந்த பிள்ளைகள் ஒரு விடயத்தை மிகவும் தீவிரமாக மனத்திற்குள் எடுத்துக் கொண்டனர்.

பாலம் உயிரைப் பறித்தது. இடிந்து விழுந்ததனால் தந்தையின் உயிர் பறிபோனது. எனினும் தாங்கள் தந்தையின் பாசத்தை இழந்து வாடுவதைப் போல வேறு யாரும் இழக்கக்கூடாது. அதற்காக குறித்த பாலத்தை அமைக்க வேண்டும் என குறித்த மூவரும் திட்டமிட்டுள்ளனர்.

பெண் பிள்ளைகள் என்ற போதிலும் மனதில் வலுவுடன் மேலும் சில இளைஞர்களுடன் இந்த வேலையில் இவர்கள் இறங்கியுள்ளனர்.

முயற்சியை கைவிடாமல் இந்த மூவரும் அண்மையில் குறித்த பாலத்தை வெற்றிகரமாக அமைக்கும் பணிகளை நிறைவு செய்துள்ளனர்.

மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களுக்கு முக்கிய அறிவித்தல் : அமுலுக்கு வரும் புதிய சட்டம்!!

மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களுக்கான பாதுகாப்பு தலைக்கவசம் அணியும் சட்டம் ஏப்ரல் 01ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரவுள்ளது.

தற்போதைய நிலையில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்கள் தரமற்ற, பாதுகாப்பில்லாத விலைகுறைந்த தலைக்கவசங்களை அணிந்து பயணிக்கும் போது விபத்துக்குள்ளாகும் நிலையில் படுகாயம் அல்லது மரணம் சம்பவிக்கும் நிகழ்வுகள் அதிகரித்துள்ளன.

இதனை கருத்திற் கொண்டு மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்கள் பாதுகாப்பானதும், தரக்கட்டுப்பாட்டைக் கொண்டதுமான தலைக்கவசங்கள் அணிவதை கட்டாயமாக்கும் சட்டமூலம் ஒன்று அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இச்சட்டமூலத்தை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 01ஆம் திகதி தொடக்கம் நடைமுறைப்படுத்தவுள்ளதாக பொதுப் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அறிவித்துள்ளார்.

நுகர்வோர் விவகார அதிகார சபை மற்றும் இலங்கை தரக்கட்டுப்பாட்டுச் சபை என்பனவும் இந்த விடயத்தில் போக்குவரத்து அமைச்சுடன் இணைந்து செயற்பட சம்மதம் தெரிவித்துள்ளன.

ஜேர்மன் விமான நிலையத்தில் தமிழ் பெண்ணுக்கு நேர்ந்த அவலம்!!

ஜேர்மன் விமான நிலையம் ஊடாக பரிஸ் நகருக்கு சென்ற பெண்ணொருவருக்கு நேர்ந்த அநீதி தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

சிங்கப்பூரை சேர்ந்த 33 வயதான காயத்ரி போஸ், பிராங்க்போட் விமான நிலையத்தில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

காயந்திரி ஜேர்மனியின் பிராங்க்போட் நகரிலிருந்து பாரிஸ் நகர் செல்வதற்காக விமான நிலையம் சென்றுள்ளார். அங்கு இவரை சோதனை செய்து பார்த்த போது, உள்ளே கருவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த கருவியை எடுத்து பார்த்த போது, குழந்தைகளுக்கு பாலுட்டும் Breast Pump என்பது தெரியவந்தது.

இதை எதற்காக வைத்துள்ளீர்கள்? உங்களுடைய குழந்தை எங்கே? சிங்கப்பூரிலா இருக்கிறார்கள்? என பல கேள்விகளை கேட்டுள்ளனர்.

3 வயது மற்றும் ஏழு மாத குழந்தைக்கு தாயான காயத்ரி போஸின் விளக்கங்களை அதிகாரிகள் காதுகொடுத்து கேட்கவில்லை.

உடனடியாக பெண் அதிகாரிகளால் தனி அறைக்கு அழைத்து செல்லப்பட்ட காயத்ரி போஸிடம், குறித்த கருவியை பயன்படுத்தி குழந்தைக்கு எப்படி பாலூட்டுவது என்பதை நடித்துக் காட்ட கூறியுள்ளனர்.

அனைவரின் முன்னிலையில் சங்கடப்பட்ட காயத்ரி போஸ் வேறு வழியில்லாமல் செய்து காட்டியுள்ளார்.

சுமார் 45 நிமிடங்கள் சோதனைக்கு பிறகே காயத்ரி போசுக்கு அனுமதி வழங்கியுள்ளனர்.

இந்த சம்பவத்தால் மிகுந்த மன வேதனை ஏற்பட்டுள்ளதாகவும், குறித்த அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்ய காயத்ரி போஸ் முடிவு செய்துள்ளார்.

யாழில் வாள்வெட்டுடன் தொடர்புடைய எண்மருக்கு கடும் எச்சரிக்கையுடனான பிணை!!

யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புபட்டதாக கூறி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 8 இளைஞர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு கடும் எச்சரிக்கையின் பின்னர் பிணை வழங்கி யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் இன்று உத்தரவிட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

யாழில் இடம்பெற்ற பல்வேறு வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய “றோக் ரீம்” என்ற குழுவை யாழ் பொலிஸார் தீவிர தேடுதலில் பின் கைது செய்தனர்.

இந்தக் குழுவின் தலைவராக பிரபல பாடசாலை ஒன்றின் மாணவத்தலைவனும், அவுஸ்திரேலிய மினி ஒலிம்பிக் தடகள போட்டியில் சம்பியன் பட்டம் வென்ற செந்தூரன் என்பவர் இனம் காணப்பட்டார்.

குறித்த நபர்களிடம் இருந்து வாள்கள், கைக்கோடரிகள், மற்றம் கைக்குண்டுகள் போன்றன மீட்கப்பட்டதாக யாழ் பொலிஸார் வழக்கு தாக்கல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் யாழ் நீதவான் நீதிமன்றால் கடந்த 7 மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் குறித்த 8 சந்தேகநபர்களின் பிணை மனு யாழ்.மேல் நீதிமன்றத்தில் இன்று நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி குறித்த நபர்களை கடுமையாக எச்சரித்ததுடன் ஒவ்வொருவருக்கும் தலா 50 ஆயிரம் ருபாய் தண்டம் விதித்ததுடன், 2 இலட்சம் பெறுமதியான சரீர பிணையில் செல்ல அனுமதித்துள்ளார்.

மேலும். எதிர்வரும் நான்கு மாதங்களுக்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் யாழ் பொலிஸ் நிலையத்தில் கையொப்பமிடவும் உத்தரவிட்டுள்ளார்.

எனினும் பிணை வழங்கப்படும் காலப்பகுதிகளில் வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டால் பிணை நிராகரிக்கப்படும் எனவும் நீதிபதி எச்சரித்தார்.

உன்னை பார்க்கவே பிடிக்கவில்லை : கொன்றது ஏன்? கொலையாளியின் திடுக்கிடும் வாக்குமூலம்!!

இந்தியாவின் புனே மாநிலத்தில் உள்ள இன்போஸில் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்பவர் ரசிலா ராஜீ (25) கேரள மாநிலத்தை சேர்ந்தவரான இவர் பணிக்காக புனேவில் தங்கியுள்ளார்.

ரசிலா வேலை செய்யும் நிறுவனத்துக்கு ஞாயிறு விடுமுறை தினமாகும். ஆனால் அவருக்கு அன்று முக்கிய பணி இருந்ததால் அவர் மட்டும் வேலைக்கு வந்தார்.

அவர் வேலையில் இருந்த போது மேலாளர் தொலைபேசியில் கோல் செய்துள்ளார், ஆனால் ரசிலா போனை எடுக்கவில்லை, இதையடுத்து காவல் பணியில் அப்போதிருந்த காவலாளி அங்கு சென்று பார்த்துள்ளார்.

அப்போது ரசிலா வயரால் கழுத்து அறுப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார்..பின்னர் பொலிசாருக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட சம்பவ இடத்துக்கு வந்த அவர்கள் இது குறித்து விசாரித்தார்கள்.

விசாரணையில், முதல் ஷிப்டில் பாதுகாப்பு பணியில் இருந்த பாதுகாவலர் தான் ரசிலாவை கொலை செய்து விட்டு தப்பியோடியது தெரியவந்தது.

பபென் செயில்சியா என்ற அந்த பாதுகாவலரின் செல்போன் சிக்னலை வைத்து அவர் மும்பை இரயில் நிலையத்தில் இருக்கிறார் என பொலிசார் கண்டறிந்தனர்.

பின்னர் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில், சம்பவம் நடைபெற்ற போது ரசிலா அறைக்கு சென்றுள்ள பபென் அவரிடம் தகராறு செய்துள்ளான்.

ரசிலா உன் முகத்தை பார்க்கவே பிடிக்கவில்லை,வெளியில் போ என கூற கோபமான அவன் கேபிள் வயரை வைத்து அவர் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளான் என தெரியவந்துள்ளது.

இது குறித்து பபெனிடம் பொலிசார் இன்னும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயிரிழப்பார் என கருத்து வெளியிட்ட ஜோதிடர் கைது!!

ஜனாதிபதியை அவமதிக்கும் வகையில் ஜோதிட கணிப்புக்களை வெளியிட்ட பிரபல ஜோதிடரான விஜித் ரோஹன விஜயமுனி குற்றபுலனாய்வு திணைக்களத்தால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனவரி 26 இல் மரணிப்பார், மஹிந்த ராஜபக்ஷ பிரதமராவார் மற்றும் கோதாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாவார் என்று ஆருடம் கூறிய காணொளி ஒன்றை சமூகவலைத்தளத்தில் பதிவேற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு!!

வவுனியா நாகர்இலுப்பைக்குளம் பகுதியில் காட்டில் வைக்கப்பட்ட மின்சாரத்தில் சிக்கி குடும்பஸ்தர் உயிரிழந்த சம்பவம் ஒன்று நேற்று இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..

வவுனியா நாகர் இலுப்பைக்குளம் பகுதியிலுள்ள காட்டுப்பகுதியில் வைக்கப்பட்ட மின்சாரத்தில் சிக்கி தவசிகுளம் பகுதியைச் சேர்ந்த விக்கினேஸ்வரன் கிரிதாஸ் என்ற 30வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார். நேற்று இரவு 9 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் உடனடியாக பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் இரவு 11 மணியளவில் சடலத்தினை வவுனியா பொது வைத்தியசாலையில் கையளித்ததுடன் மரண விசாரணைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவம் -2017 கொடியேற்றதுடன் ஆரம்பம்!(படங்கள்)

வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி கோவிலின் துர்முகி  வருடத்துக்கான  மகோற்சவம்  இன்று(31.01.2017) கொடிஏற்றதுடன்ஆரம்பமானது. காலை முதல்    மகோற்சவ கிரியைகள் இடம்பெற்று   காலை பதினொரு மணியளவில்  கொடியேற்றம் இடம்பெற்றது .

வவுனியாவில் வயல்வெளியிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு!!

 
வவுனியா கனகராயன்குளம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சின்ன அடம்பன் கிராமத்தில் வயல்வெளியிலிருந்து சடலம் ஒன்று இன்று காலை (31.01.2017) மீட்க்கப்பட்டுள்ளது.

சின்ன அடம்பன் கிராமத்தில் வசித்துவந்த எஸ்.விநாயமூர்த்தி வயது 54 என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த ஊர் மக்கள்
நேற்று (30.01) மாலை 5 மணிக்கு தனது வயல் நிலத்தை பார்வையிடச் சென்றவர் வீடு திரும்பவில்லை.

அவரது கைத்தொலைபேசிக்கு அழைப்புக்கள் ஏற்படுத்தியிருந்தபோதும் அழைப்புக்களுக்கு பதில் வராத காரணத்தினால் இரவு 1.30 மணியளவில் 119 பொலிஸ் பிரிவுக்கு விநாயகமூர்த்தியை காணவில்லை என்று முறைப்பாடு செய்யப்பட்டதுடன் இன்று காலையில் உறவினர்கள் அவரை தேடியபோது அவர் சடலமாக தனது வயல்வெளியில் காணப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து கனகராயன்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

வவுனியா வர்த்தக நிலையத்தில் கொள்ளை : துப்பாக்கியுடன் ஒருவர் கைது!!

வவுனியா ஹொறவப்பொத்தானை வீதியிலுள்ள இரு வியாபார நிலையங்கள் உடைத்து பணம் கொள்ளையிடப்பட்டுள்ள சம்பவம் இன்று (31.01.2017) அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் சந்தேக நபர் ஒருவரை கைது செய்ததுடன் அவரது வீட்டில் சோதனைகளை மேற்கொண்டபோது கட்டுத்துவக்கு ஒன்றையும் கைப்பற்றியுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியாவில் சம்பளத்தை கேட்ட பெண் ஊழியர் மீது முகாமையாளர் தாக்குதல்!!

வவுனியாவில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த பெண் ஒருவரின் சம்பளப் பணத்தினை அந் நிறுவனத்தின் முகாமையாளர் நிறுத்தி வைத்துள்ளார்.

இதையடுத்து நேற்று (30.01.2017) குறித்த பெண்ணின் கணவர் சென்று தனது மனைவியின் சம்பளப் பணத்தினை பெற்றுத்தருமாறு கோரியபோது இருவருக்கிடையே ஏற்பட்ட கருத்து முரண்பாடு மோதலாக மாறியதில் மோதலை தடுக்கச் சென்றபோது மனைவி மீது தாக்குதல் நடத்தியதில் அவர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியாவில் இயங்கிவரும் தனியார் காப்புறுதி நிறுவனம் ஒன்றில் கடந்த பல வருடங்களாக பணியாற்றி வரும் குறித்த பெண்ணின் சம்பளப்பணத்தினை கடந்த மாதத்திலிருந்து முகாமையாளர் நிறுத்திவைத்துள்ளார்.

அதையடுத்து நேற்று (30.01.2017) அதே நிறுவனத்தில் வேறு பிரிவில் பணியாற்றி வரும் கணவன் முகாமையாளரிடம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் மனைவியின் சம்பளப்பணத்தினை பெற்றுத்தருமாறு கோரியபோது இருவருக்கும் இடையே நிறுவனத்திற்குள் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

இருவருக்கும் இடையே ஏற்பட்ட சண்டையினை தடுப்பதற்குச் சென்ற குறித்த பெண்மீது தலைக்கவசத்தினால் தாக்கியதில் தலையில் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் தாக்குதல் நடத்திய முகாமையாளரை பொலிசார் இன்று வரையில் கைது செய்யவில்லை.