வவுனியாவில் இரு வர்த்தக நிலையங்களில் திருட்டு!!

 
வவுனியா ஹொறவப்பொத்தானை வீதியிலுள்ள இரு வியாபார நிலையங்கள் உடைத்து பணம் கொள்ளையிடப்பட்டுள்ள சம்பவம் இன்று (31.01.2017) அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா ஹொறவப்பொத்தான வீதியிலுள்ள சலூன், புடவைக் கடை என்பனவற்றில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் பணம் திருடப்பட்டுள்ளது.

தமது வழமையான செயற்பாடுகளை முடித்தக்கொண்டு நேற்று (30.01.207) இரவு 8 மணியளவில் தமது வியாபார நிலையங்களை மூடிவிட்டுச் சென்றுள்ளனர். எனினும் இன்று (31.01.2017) காலை தமது வியாபார நிலையங்களை திறப்பதற்குச் சென்றபோது வியாபார நிலையங்கள் உடைக்கப்பட்டுள்ளது தெரியவந்தள்ளது.

இதையடுத்து பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டடு சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டபோது சலூனிலிருந்து 10 ஆயிரம் ரூபாவும் புடவைக்கடையிலிருந்து இரண்டு இலட்சம் ரூபா வரையில் திருடப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

புடவைக்கடையிலிருந்த சி. சி. ரி கமராவினை உரிமையாளர் நிறுத்திவிட்டுச் சென்றுள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.

மேலதிக விசாரணைகளை வவுனியா குற்றத்தடுப்பு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையின் பல பகுதிகளில் வறட்சி : சில இடங்களில் மழை!!

நாட்டின் பல பாகங்களிலும் இடி மின்னல் தாக்கம் அதிகளவில் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஒரு சில மாவட்டங்களில் நண்பகல் 2 மணி தொடக்கம் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறு காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய மாவட்டங்களில் காலநிலை தொடர்பான விபரங்கள்.

அம்பாறை – மிதமான காலநிலை

அனுராதபுரம் – மிதமான காலநிலை

பதுளை – மிதமான காலநிலை

மட்டக்களப்பு – மிதமான காலநிலை

கொழும்பு – மிதமான காலநிலை

காலி – மிதமான காலநிலை

கம்பஹா – இடி மின்னலுடன் கூடிய காலநிலை

அம்பாந்தோட்டை – இடி மின்னலுடன் கூடிய காலநிலை

யாழ்ப்பாணம் – மிதமான காலநிலை

களுத்துறை – மிதமான காலநிலை

கண்டி – மிதமான காலநிலை

கேகாலை – மிதமான காலநிலை

கிளிநொச்சி – மிதமான காலநிலை

குருணாகல் – மிதமான காலநிலை

மன்னார்- மிதமான காலநிலை

மாத்தளை – மிதமான காலநிலை

மாத்தறை – மிதமான காலநிலை

மொனராகலை – மிதமான காலநிலை

முல்லைத்தீவு – மிதமான காலநிலை

நுவரெலியா – மிதமான காலநிலை

பொலன்னறுவை – மிதமான காலநிலை

புத்தளம் – மிதமான காலநிலை

இரத்தினபுரி – இடி மின்னலுடன் கூடிய காலநிலை

திருகோணமலை – மிதமான காலநிலை

வவுனியா – மிதமான காலநிலை

புத்தரை அவமானப்படுத்திய வெளிநாட்டு பெண்ணுக்கு நேர்ந்த கதி!!

பௌத்த மதத்தை அவமரியாதை செய்யும் வகையில் ஆடை அணிந்து சென்ற லெபனான் நாட்டுப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

பௌத்த மதத்தை அவதூறு செய்யும் வகையில், புத்த பிரானின் உருவம் பொறிக்கப்பட்ட கவுன் (சட்டை) ஒன்றை குறித்த பெண் அணிந்திருந்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

30 நாள் சுற்றுலா வீசாவில் கடந்த 23ம் திகதி இந்தப் பெண் இலங்கை வந்தடைந்துள்ளார்.

21 வயதான குறித்த லெபனான் நாட்டுப் பெண் உனவட்டுன பிரதேசத்தில் தங்கியிருந்தார் எனவும், பௌத்த மதத்தை இழிவுபடுத்தும் வகையில் ஆடை அணிந்து காலி நகரில் சென்ற போது பொலிஸார் குறித்த பெண்ணை கைது செய்துள்ளனர்.

இந்த பெண் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாகவும், காலி பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

திருகோணமலையில் பாரிய தீ விபத்து : பல மணி நேரம் கடும் போராட்டம்!!

 
பாரிய தீ விபத்தொன்று திருகோணமலை கண்டி வீதியில் அபயபுர பகுதியில் அமைந்துள்ள மரக்கடை ஒன்றில் ஏற்பட்டுள்ளது. இந்த அனர்த்தம் இன்று அதிகாலை நான்கு மணியளவில் ஏற்பட்டு, ஏழு மணிவரையிலும் நீடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்த திருகோணமலை நகரசபை தீயணைப்பு வீரர்களும், கடற்படை தீயணைப்பு வீரர்களும் ஒன்றிணைந்து தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீப்பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர ஏழு நீர்க்கொள்கலன்கள் அளவு நீர் பயன்படுத்தப்பட்டதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.

கடையினுள் இருந்த பரவலான மரக்குற்றிகள் தீயினால் கருகியுள்ளதுடன் தீக்கான காரணம் இன்னும் அறியப்படாத நிலையில் உப்புவெளி பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியாவில் பணித்தடையை நீக்ககோரி சுவரொட்டிகள்!!

 
வவுனியாவில் நேற்று (30.01.2017) இரவு ஆசிரியருக்குரிய பணித்தடையை நீக்கக்கோரி துண்டுப்பிரசுரங்கள் அங்காங்கு ஒட்டப்பட்டுள்ளன. இத் துண்டுப் பிரசுரத்திற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் உரிமை கோரியுள்ளது.

கடந்த 10.01.2017 அன்று வடமாகாண கல்வித்திணைக்களத்திற்கு முன்னால் இடமாற்றம் கோரி வெளிமாவட்ட ஆசிரியர்களினால் மேற்கொள்ளப்பட்ட கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து மூன்று ஆசிரியர்களுக்கு பணித்தடை உத்தரவை வடமாகாண கல்வித்திணைக்களம் வழங்கியிருந்த நிலையில், தற்போது வடமாகாண கல்விச் செயலாளரின் வீட்டின் முன்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன.

இத் துண்டுப்பிரசுரங்களை வவுனியா நகரின் பல இடங்களிலும் காணக்கூடியதாக உள்ளது. குறிப்பாக வவுனியா கல்வித்திணைக்களம், வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம், சைவப்பிரகாச மகளீர் கல்லூரி, இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிகளுக்கு அண்மையிலும் காணப்படுகின்றது.

ஜனநாயக விரோத பணிதடை உத்தரவை நீக்காதுவிடின் பாரிய தொழிற்சங்க போராட்டத்தை நடத்தப்போவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரித்துள்ளது.

80 வருடங்களின் பின்னர் சாதனை : ஹைட்ரஜன் உலோகத்தை கண்டுபிடித்த குழுவில் இலங்கையர்!!

ஆவர்த்தன அட்டவணையின் முதல் வாயுவாக ஹைட்ரஜன், பலரினால் அடையாளப்படுத்தப்படுகிறது. எப்படியிருப்பினும் தற்போது முழு பிரபஞ்சத்திலும் உள்ள பொதுவான கனிமான ஹைட்ரஜனை, வரலாற்றில் முதல் முறையாக உலோகமாக மாற்றுவதற்கு விஞ்ஞானிகள் சிலர் செயற்பட்டுள்ளனர்.

இந்த புதிய கண்டுபிடிப்பை மேற்கொண்ட அமெரிக்காவின் ஹாவர்ட் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் குழுவில் இலங்கையர் ஒருவரும் உள்ளடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இயற்கை அறிவியல் பேராசிரியர் – தோமஸ்டீ.கெபட், பேராசிரியர் அய்செக் சில்வேரா மற்றும் பேராசிரியர் ரங்க டயஸினால் இந்த கண்டுபிடிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த கண்டுபிடிப்பு தொடர்பில் 80 வருடங்களுக்கு முன்னர் முதல் கோட்பாடு முன்வைக்கப்பட்ட நிலையில், இதற்காக நோபல் பரிசும் கிடைத்துள்ளது.

சில அணுக்களில், மூலக்கூறுகளின் இயக்கம் வேகத்தை குறைத்தல் மற்றும் கூட்டுவதன் ஊடாக பொருளின் இயற்றையான நிலையை மாற்ற முடியும். மேலும் வெப்பநிலை குறைவடையும் அளவிற்கு அதன் அணுக்கள் மற்றும் மூலக்கூறுகள் நகரும் வேகம் குறைவாக இருக்கும்.

அதற்கமைய, ஹைட்ரஜன் அணுக்களின் இயக்கத்தை குறைப்பதற்கு அதன் வெப்ப நிலையை 5.5 கெல்வின் வரை குறைப்பதற்கு விஞ்ஞானிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இந்த வெப்பத்தின் போது அதன் அளவு அணிக்கோவை அமைப்பு கொண்டுள்ள நிலையில், அதன் பின்னர் 495 ஜிபி பாஸ்கல் (கடல் மட்டத்தில் உணரும் அழுத்தம் போன்று 5 மடங்கு) அளவு அழுதத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த சந்தர்ப்பத்தில் அதன் அளவு உலோக அணுக்கள் அளவிற்கு ஒன்றோடு ஒன்று நெருக்கமாக மாறிவிடும்.

‘Atomic Metallic Hydrogen’ என பெயரிடப்பட்டுள்ள இந்த உலோகத்தை தயாரிப்பதற்கு இந்த ‘diamond anvil cell’ என்ற உபகரணம் ஒன்றை பயன்படுத்தியுள்ளனர். இந்த இயந்திரத்தினுள் வைத்தே மாதிரியை அழுத்தத்திற்கு உட்படுத்தியுள்ளனர்.

செயற்கை வைரத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த உபகரணத்தின் மீது அலுமினிய ஒக்சைட் படலம் ஒன்று பதிக்கப்பட்டுள்ளது. வைரத்திற்குள் ஹைட்ரஜன் அணுக்கள் நுழைவதனை தடுப்பதற்காகவே அவ்வாறு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இங்கு வைரம் பயன்படுத்துவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளது. ஒன்று அது உலகின் வலுவான பொருளாகும், மேலும் வைரத்தின் ஊடாக வெளிச்சத்திற்கு பயணிக்க முடியும் என்பது காரணமாகும்.

இவர்களின் இந்த ஆய்வு தொடர்பில் விஞ்ஞானிகளின் கடிதம் “Science” எனப்படும் ஒரு அறிவியல் இதழில் உட்பட பதிவிடப்பட்டுள்ளது.

எப்படியிருப்பினும் அரை வெப்பநிலையில் கடத்தி ஒன்றை கண்டுபிடித்தால் அதன் ஊடாக போக்குவரத்து வேலை, மின்சார கார் மற்றும் ரொக்கெட் தயாரிப்பு மாற்றங்களை மேற்கொள்ள கூடும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் கடலில் உருவாகும் பிரம்மாண்டமான நகரை பார்க்க வேண்டுமா : அரிய புகைப்படங்கள்!!

 
கொழும்பு காலிமுகத்திடலில் உருவாகி வரும் போர்ட் சிட்டி (துறைமுக நகரத்திட்டம்) அமைப்பதற்காக கடலுக்குள் மணல் நிரப்பும் பணிகள் பூர்த்தியடையும் தருவாயில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடலுக்குள் நிலப்பரப்பை உருவாக்கும் செயற்பாடுகளுக்காக மணல் அகழும் கப்பல்கள் பயன்படுத்தப்பட்டு பெரும் பகுதிகள் தற்போது நிரப்பப்பட்டுள்ளன.

இதற்காக கடலில் இருந்து 28 வீத நிலப்பரப்பு உருவாக்கப்பட்டு விட்டதாகவும், எஞ்சிய நிலப்பரப்பு இந்த ஆண்டு இறுதிக்குள் உள்வாங்கப்பட்டு விடும் என்றும் அண்மையில் சீன துறைமுக பொறியியல் நிறுவன அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இவ்வாறு கடலை மணல் கொண்டு நிரப்பி அமைக்கப்படும் போர்ட் சிட்டி தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவிவருகின்றன.

மேலும் நிரப்பப்பட்ட பகுதிகளில் பல கனரக வாகனங்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதுடன், கட்டுமானப்பணிகளுக்கான பொருட்களும் வைக்கப்பட்டுள்ளன.

பல எதிர்ப்புகள் பல சர்ச்சைகளுக்கு மத்தியில் போர்ட் சிட்டியின் நிர்மாணப்பணிகள் வெற்றிகரமான முறையிலும், மிக பிரம்மாண்டமாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வவுனியா மக்களை அச்சுறுத்தும் காட்டு யானைகள்!!

 
வவுனியா – நெடுங்கேணி சிவாநகர், குறிசுட்டகுளம் போன்ற பகுதிகளில் காட்டு யானைகள் மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்குச் சென்று அப்பகுதி மக்களை அச்சுறுத்தி வருவதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த காட்டு யானைகள் நேற்று (30.01.2017) மாலை அந்த பகுதிக்கு சென்று அங்கு வசித்துவரும் பொதுமக்களை அச்சுறுத்தியுள்ளதுடன் தமது ஜீவனோபாயமான பப்பாசி, வாழை, தென்னை போன்ற பயன்தரும் மரங்களை சேதப்படுத்தியதாகவும் அதனால் தமது வாழ்வாதாரம் பெரிதும் பாதிப்படைந்துள்ளதாகவும் அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.

கடந்த பல மாதங்களாக காட்டு யானைகள் தமது பகுதிகளுக்குச் சென்று வருவதாகவும், வீதியில் கடந்து செல்வது தொடர்பாக அரச அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகளின் கவனத்திற்கு கொண்டு வந்தபோதிலும் இன்று வரையில் தமது பகுதிக்கு வரும் காட்டு யானைகளைக் கட்டுப்படுத்த மின்சார வேலி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், அச்சத்தின் மத்தியில் தாங்கள் வாழ்ந்து வருவதாகவும் இதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அப்பகுதி மக்கள் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

லண்டனை தாக்க போகும் பனிப்புயல் : உயிரிழப்பு வீதம் அதிகரிக்கலாம் என அச்சம்!!

பிரித்தானியாவில் எதிர்வரும் பெப்ரவரி மாதத்தின் மத்தியில் பனிப்புயல் தாக்கும் பேராபத்து எழுந்துள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பிரித்தானியாவில் காலநிலை தொடர்ந்து அபாய நிலையில் நீடிப்பதால் எதிர்வரும் 2 வாரங்களில் இது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் வானிலை ஆய்வாளர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

இந்த காலகட்டங்களில் 70mph அளவுக்கு காற்று வீச்க்கூடும் எனவும், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்புக்குள்ளாக வாய்ப்பு உள்ளதாக எச்சரித்துள்ளனர்.

அத்துடன், உயிரிழப்பு விகிதமும் இந்த முறை அதிகரிக்க கூடும் எனவும் அச்சம் தெரிவித்துள்ளனர். காற்றின் திசை வடக்கு அல்லது கிழக்கு பகுதியை நோக்கி இருப்பதால், அதனால் மிக கடுமையான குளிரான காலநிலை நிலவக்ககூடிய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து பெப்ரவரி மாதங்களில் வானிலை -8C ல் இருந்து -18C வரை குறைந்து வருவதை சுட்டிக்காட்டியுள்ள ஆய்வாளர்கள், இந்த காலகட்டங்களில் முதியவர்கள் அதிகளவில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த காலகட்டத்தில் இருதயம் தொடர்பான நோய்கள், மார்பு தொடர்பான நோய்கள், உள்ளிட்டவை முதியவர்களை அதிகமாக பாதிப்புக்கு உள்ளாக்குவதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை, கடந்த ஜனவரி மாதத்தில் கடும் குளிர் காரணமாக ஐரோப்பாவில் சுமார் 1023 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ள நிலையில், மீண்டும் கடும் குளிர் பிரித்தானியாவையும், தலை நகர் லண்டனையும் தாக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மழைவெள்ளத்தால் ஆறுலட்சம் பேர் பாதிப்பு : நான்கு பேர் மரணம்!!

கடந்த சில நாட்களாக இலங்கையின் பல்வேறு பிரதேசங்களிலும் பாதிப்பை ஏற்படுத்திய மழை, வெள்ளம் காரணமாக ஆறுலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி நான்கு பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இரத்தினபுரி, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு பிரதேசங்களில் இந்த மரணங்கள் சம்பவித்துள்ளன.

தற்போதைய நிலையில் இலங்கையின் ஒன்பது மாகாணங்களும் மழை காரணமாக பாதிப்புக்குள்ளாகியிருக்கும் நிலையில், ஒரு லட்சத்து எழுபதினாயிரத்து 522 குடும்பங்களைச் சேர்ந்த ஆறு லட்சம் பொதுமக்கள் பல்வேறு பாதிப்புகளை எதிர் கொண்டுள்ளனர்.

இன்று நாட்டின் சில் பகுதிகளில் மட்டும் மழை பெய்யக் கூடிய காலநிலை அவதானிக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய பிரதேசங்களில் படிப்படியாக மழைவீழ்ச்சி குறையும் நிலை ஏற்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இதற்கிடையே மன்னார் தொடக்கம் புத்தளம் வரையான கடற்பிரதேசத்தில் காற்றின் வேகம் அதிகரித்துக் காணப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சோதனைகளை சாதனை படிக்கட்டாக்கி சரித்திரம் படைத்த கல்லூரி மாணவி!!

பெங்களூர் பல்கலைகழகத்தில் படித்து வருபவர் சவுஜனா. இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முதலிடம் பிடித்து அனைவரையும் வியக்க வைத்தார்.

ஆனால் இந்த முறை முதுகலை படிப்பில் புதிய சாதனை படைத்துள்ளார். முதுகலை படிப்பில் 8 தங்கப் பதக்கமும், பணப்பரிசையும் வென்றுள்ளார்.

52வது பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இந்த பரிசு அவருக்கு வழங்கவிருக்கிறது. இந்த சாதனைகளுக்கு பின்னால் அவருக்கு மிகப்பெரிய சோதனைகளும் நடந்துள்ளன.

7 வருங்களுக்கு முன்பு சவுஜனா பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதவிருந்த சமயத்தில் அவரது கனவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பெரிய அடி ஒன்று விழுந்தது.

அவரது தந்தை திடீரென இறந்துவிட்டார். அவரை நம்பி மட்டுமே இருந்த குடும்பம் ஆதரவற்று தவித்தது. சவுஜனா கனவும் சுக்கு நூறாக நொறுங்கியது.

இந்நிலையில் சவுஜனாவின் படிப்பு எந்தவிதத்திலும் பாதிக்கப்படக் கூடாது என்று நினைத்த அவரது தாய் வேலைக்கு போக முடிவு செய்தார்.

இதன் படி அவர் வேலைக்கு போய் சவுஜனாவை படிக்க வைத்தார். தனது தாயின் கஷ்டத்தை உணர்ந்த சவுஜனாவும் படிப்பில் முழுகவனம் செலுத்த ஆரம்பித்தார். இதன் பலனாக தற்போது சாதித்துள்ளார்.

PhD மற்றும் IAS ஆக வேண்டும் என்பதே தனது அடுத்த குறிக்கோள் என்று கூறிய சவுஜனா, அதற்காக கடினமாக உழைக்க தயாராகிவிட்டதாக நம்பிக்கையோடு தெரிவித்துள்ளார்.

தாமரை இலையில் நீர் ஒட்டாது : ஏன் என்று தெரியுமா?

தாமரை இலையில் நீர் ஒட்டுவதில்லை என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயமாகும். ஆனால் எதனால் தாமரை இலையில் மட்டும் நீர் ஒட்டுவதில்லை என்று நீங்கள் யோசித்தது உண்டா?

தாமரை இலையில் நீர் ஒட்டாமல் இருப்பதற்கு என்ன காரணம்?
நாம் தாமரை இலையின் மீது தண்ணீர் ஊற்றும் போது, அது அந்த நீர்த்துளிகள் இலையின் மீது ஒட்டுவதில்லை.

ஏனெனில் தாமரை இலை மீது, மிக நுண்ணிய அளவில், கூர்மையான ஊசி போன்ற அமைப்புகள் உள்ளன. எனவே நீர்த்துளி, தாமரை இலையின் மீது வந்து விழும் போது, அந்தத் துளி, மூன்று நான்கு நுனிகளின் முகட்டில் படிகிறது.

தாமரை இலையில் இருக்கும் ஊசி போன்ற அமைப்புகள், மெழுகு போன்ற ஒரு பொருளினால் ஆனது.

மேலும் தாமரை இலையில் இருக்கும் அந்த ஊசி அமைப்புகள் நீரை விலக்கும் தன்மையை பெற்றுள்ளதால் தான் தாமரை இலையில் தண்ணீர் ஒட்டாமல் முத்து போன்று தரையின் மீது விழுகின்றது.

அலுவலகத்தில் பெண் ஊழியருக்கு நேர்ந்த விபரீதம்!!

புனே மாவட்டத்தில் மென்பொறியாளர் ஊழியர் ஒருவரை பாதுகாவலர் கொலை செய்துள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

புனே ஹின்ஜிவாடியில் உள்ள இன்போசிஸ் நிறுவனத்தில் கேரளாவை சேர்ந்த ராசிலா ராஜூ பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் ராசிலா ராஜூவிடமிருந்து ஒன்லைனில் தனது தலைமை நிறுவன ஊழியரிருடன் தொடர்பில் இருந்துள்ளார்.

திடீரென இந்த தொடர்பு துண்டிக்கப்பட்டதால், தலைமை நிறுவன ஊழியர் பாதுகாவலரை தொடர்பு கொண்டுள்ளார்.இதனையடுத்து, ராசிலாவின் அறையில் சென்று பார்த்தபோது அவர் இறந்த நிலையில் கிடந்துள்ளார்.

இதில், இன்போசிஸ் நிறுவனத்தின் பாதுகாவலர் பாபேன் சாய்ல்சியா, கணினியின் ஓயரால் ராசிலாவின் கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து பாதுகாவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பரம்பரையாக தொடரும் மரபணு பிரச்சினைகள் : 9 பேரை கேலிக்கை செய்யும் சமூகம்!!

 
பரம்பரையாக தொடரும் மரபணு பிரச்சினைகள் காரணமாக 11 பேரை கொண்ட குடும்பத்தில் 9 பேர் குள்ளமாக பிறந்துள்ளார்கள். இதனால் அவர்களை சமூகத்தவர் கேலி செய்யும் சம்பவம் இந்தியாவில் பதிவாகியுள்ளது.

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்திலுள்ள ஹைதரபாத் நகரில் வசிக்கும், ஜவான் குடும்பத்தை சேர்ந்த ராம்ராஜ் என்பவரின் குடும்பத்திலுள்ள 11 பேரில் 9 பேர் குள்ளமாக பிறந்துள்ளார்.

குறித்த ஜவான் பரம்பரையை சேர்ந்த அநேகமானோர் எகொன்றோபிளசியா (Achondroplasia) எனும் நோய் தாக்கத்திற்குட்பட்டுள்ளனர். குறித்த நோயிற்குட்பட்டவர்கள் சாதாரண உடல் பரிமாணத்தை கொண்டிருந்தாலும், கை மற்றும் கால் என்பன குள்ளமானதாக இருக்கும்.

இந்நிலையில் வெளியில் வரும் ராம்ராஜ் குடுபத்தவர்களை, சமூகத்தவர் விசித்திரமாக பார்ப்பதோடு, கேலிக்கைக்குட்படுத்துவதாக தெரிவித்துள்ளனர், மேலும் குள்ளமாக பிறந்ததன் காரணமாக சமூகத்தில் தமக்கான அந்தஸ்தோ, தொழிலோ எதுவும் கிடைக்காதநிலையில் மிகவும் கஷ்டத்தை எதிர் நோக்குவதாகவும் ராம்ராஜ் தெரிவித்துள்ளார்.

மேலும் ராம்ராஜின் குடும்பத்தில் மொத்தம் 21 பேரில் 18 பேர் குள்ளமாக பிறந்துள்ளார்கள். அத்தோடு இவர்களின் குடும்ப வாழ்க்கையை தொடர்வதற்கு வாழ்கை துணையோ, தங்களது தேவையை பூர்த்தி செய்து கொள்வதற்கு தொழிலோ இல்லாத நிலையில் வாழுகின்றனர்.

இருப்பினும் ராம்ராஜின் போராட்ட குணத்தினால் சுயமாக வியாபாரம் ஒன்றை தொடங்கியுள்ளதோடு, சமூக கேளிக்கைகளை தாண்டிய ஒரு வாழ்கை போராட்டத்தை தனது சந்ததிக்கும் போதித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முச்சக்கரவண்டிக்கு தீவைத்த பொலிஸ் சிக்கினார்!!

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ஆட்டோவுக்கு தீ வைத்த பெண் பொலிஸ் வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் சிக்கியுள்ளார்.

சென்னை, தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கடந்த 17ம் திகதி முதல் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து தமிழக அரசு ஜல்லிக்கட்டு போட்டிக்கான தடையை நீக்கும் வகையில் அவசர சட்டத்தை கடந்த 21ம் திகதி கொண்டு வந்தது.

அதன்பின்னரும் மாணவர்கள் போராட்டத்தை கைவிடாத காரணத்தால், திருவல்லிக்கேணி, அரும்பாக்கம், கோயம்பேடு, வியாசர்பாடி உள்ளிட்ட இடங்களில் கலவரம் வெடித்தது.

இந்த போராட்டத்தின் உச்சக்கட்டமாக ஐஸ்அவுஸ் பொலிஸ் நிலையம் தீ வைத்து கொளுத்தப்பட்டது.

இதற்கிடையே கலவரத்தை பயன்படுத்தி பொலிசாரே பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாகவும், வாகனங்களுக்கு தீ வைத்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் பெண் பொலிஸ் ஒருவர் ஆட்டோவுக்கு தீ வைக்கும் காட்சியும், பொலிஸ்காரர் ஒருவர் வாகனங்களை லத்தியால் அடித்து நொறுக்கும் காட்சிகளும் வீடியோ பதிவுகளாக பரவின.

இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவிய வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில், அவர்கள் இருவரும் யார் என்பதை உயர் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இவர்கள் 2 பேர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என உயரதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாயுடன் பாலியல் உறவில் ஈடுபட்ட பெண்ணை அமெரிக்கப் பொலிஸார் தேடி வருகின்றனர்!!

நாயுடன் பாலியல் உறவில் ஈடு­பட்­ட­தாகக் கூறப்­படும் பெண்ணொரு­வரை அமெ­ரிக்கப் பொலிஸார் தேடி வரு­கின்­றனர். ஒஹையோ மாநி­லத்தின் வரென் நகரைச் சேர்ந்த 33 வய­தான அம்பர் ஃபினே எனும் பெண்ணே இவ்­வாறு தேடப்­ப­டு­கிறார்.

இவர் நாயுடன் பாலியல் உறவு கொள்ளும் காட்சி அடங்­கிய வீடியோ­வொன்று வெளி­யாகி இணை­யத்தில் பர­வி­யது. இதையடுத்து அம்பர் ஃபினேவை பொலிஸார் தேடி வரு­கின்­றனர்.

நாயுடன் தான் பாலியல் உறவில் ஈடு­ப­டு­வதை இப்­ பெண்ணே வீடி­யோவில் பதி­வு­செய்தார் என பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர். அந்த வீடியோ உண்­மை­யா­ன­தல்ல என அம்பர் ஃபினே கூறு­கிறார். எனினும், அது போலி­யா­ன­தல்ல என பொலிஸார் கூறு­கின்­றனர்.

புல­னாய்வு அதி­கா­ரி­யான நிக் கார்னி இது தொடர்­பாக கூறு­கையில், “இந்த வீடியோ போலி­யா­னது என இப்பெண் கூறு­கிறார். ஆனால், அதை பார்த்த அனை­வரும் அது போலி­யா­னதல்ல எனத் தெளி­வா­கி­யுள்­ளது” என்­கிறார்.

அதே­வேளை, தன்­னுடன் தொடர்­பு­கொண்ட அம்பர் ஃபினே, தான் வெளி யூருக்குச் சென்­றி­ருப்­ப­தா­கவும் அடுத்த வாரம் ஊருக்குத் திரும்­பி­ய­வுடன் பொலி­ஸா­ரிடம் ஆஜ­ரா­க­வுள்­ள­தா­கவும் தொலை­பேசி மூலம் கூறினார் எனவும் பொலிஸ் அதி­காரி நிக் கார்னி தெரி­வித்­துள்ளார்.

மிரு­கங்­க­ளுடன் மனி­தர்கள் பாலியல் நட­வ­டிக்­கையில் ஈடு­ப­டு­வதை தடுக்கும் சட்டம் வரென் நகரில் கடந்த வருடம் அமு­லுக்கு வந்­தது. அமெ­ரிக்­காவின் ஒஹையோ மாநி­லத்தில் இச்­ சட்டம் அமுல்­ப­டுத்­த­ப்பட்ட முதல் நகரம் வரென் ஆகும். இச்சட்டத்தின் கீழ் முதலாவதாக அம்பர் பினே வுக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவுசெய்யப் பட்டுள்ளது.

இவர் ஏற்கெனவே மிருகத்தை துன்புறுத்தியமை தொடர்பான 30 நாட்கள் சிறையில் இருந்ததுடன், 5 வருடகால நன்னடத்தை கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.