எலிசபெத் மகாராணிக்கு இரத்தினக்கல்லை அன்பளிப்பு செய்த வர்த்தகர் களுபோவில வைத்தியசாலையில் மாயம்!!

எலி­சபெத் மகா­ரா­ணிக்கு இரத்­தி­னக்­கல்லை அன்­ப­ளிப்பு செய்த, இரத்­தி­ன­பு­ரியை சேர்ந்த பிர­பல இரத்­தி­னக்கல் வர்த்­த­க­ரான நிமல் பதி­ரண களு­போவில் வைத்­தி­ய­சா­லையில் தங்­கி­யி­ருந்து சிகிச்சை பெற்­று­வந்­தி­ருந்த நிலையில் காணாமல் போயுள்­ளமை தொடர்பில் தற்­போ­து­வரை 10 பேரிடம் வாக்­கு­மூலம் பெற்­றுள்­ள­தாக கொஹு­வல பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.

காணாமல் போயுள்ள நிமல் பதி­ர­ணவின் குடும்­பத்­தினர், களு­போ­வில வைத்­தி­ய­சாலை ஊழி­யர்கள் மற்றும் அவர் தங்­கி­யி­ருந்து சிகிச்சை பெற்று வந்த அறை­யி­லுள்ள சக நோயா­ளிகள் ஆகி­யோ­ரி­டமே இவ்­வாறு வாக்­கு­ மூ­லங்கள் பெறப்­பட்­டுள்­ளன.

திடீர் சுக­யீனம் கார­ண­மாக பொல்­ஹேன்­கொ­டவிலுள்ள, தனது இரண்­டா­வது மனை­வியின் மகளின் கண­வ­ரினால், நிமல் பதி­ரண களு­போ­வில போதனா வைத்­தி­ய­சா­லையில் கடந்த 20 ஆம் திகதி அனு­ம­திக்­கப்­பட்டார்.

இவ்­வாறு அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்த அவர், கடந்த 23 ஆம் திகதி மர்­ம­மான முறையில் வைத்­தி­ய­சா­லை­யி­லி­ருந்து காணாமல் போயுள்ளார்.

எனினும் அவர் ­கா­ணாமல் சென்று சுமார் ஒரு­வா­ர­மா­கி­யுள்ள நிலையில் கொஹு­வல பொலிஸார் தொடர்ந்து விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ளனர்.

இதே­வேளை, பிரித்­தா­னிய இள­வ­ரசி டயானா – சாள்ஸ் திரு­ம­ணத்­துக்கும் அதன்­பின்னர் இள­வ­ரசர் வில்­லியம்ஸ் – கேட் தம்­ப­தி­யி­னரின் திரு­ம­ணத்­துக்கு பயன்­ப­டுத்­தப்­பட்ட மோதி­ரத்தில் பதிக்­கப்­பட்­டுள்ள இரத்­தி­னக்­கல்லின் முதல் உரி­மை­யாளர் இவ­ராவார்.

காணா­மல்­போ­யுள்ள நிமல் பதி­ர­ண­வினால் கொள்­வ­னவு செய்­யப்­பட்ட இந்த இரத்­தி­னக்கல், எலி­சபெத் மகா­ராணி இலங்­கைக்கு வந்­தி­ருந்­த­வே­ளையில் அவ­ருக்கு அன்­ப­ளிப்­பாக வழங்­கப்­பட்­டி­ருந்த நிலையில் தற்போது அந்த இரத்தினக்கல் பதிக்கப்பட்ட மோதிரம் அவர்களது பரம்பரை மோதிரமாக கருத்தப்படுகின்றது.

தற்போது அம்மோதிரத்தை இளவரசி கேட் வில்லியம்ஸ் அணிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

33 ஸ்டுடியோக்களில் உருவாகும் பாகுபலி-2!!

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் கடந்த 2015ம் ஆண்டு வெளிவந்த பிரம்மாண்ட படம் பாகுபலி. இரண்டு பாகமாக எடுக்கப்பட்ட இப்படத்தின் முதல் பாகம் மிகவும் பிரம்மாண்டமாகவும், அதே நேரத்தில் வசூலிலும் மிகப்பெரிய சாதனையை படைத்தது.

இதனால், இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இரண்டாம் பாகத்தில் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், அதன்ஊடே இப்படத்திற்கான கிராபிக்ஸ் பணிகளும் நடைபெற்றுக் கொண்டே வருகின்றது. முதல் பாகத்திற்கு கிராபிக்ஸ் பணிகளை அமைத்த ஆர்.சி.கமலக்கண்ணனே இந்த பாகத்திலும் பொறுப்பேற்றிருக்கிறார்.

அவருடைய தலைமையில் 33 ஸ்டுடியோக்களில் இரண்டாம் பாகத்தின் கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வருவதாக அவரே தெரிவித்துள்ளார். மேலும், 15 மாதத்திற்கு முன்பே இப்படத்தின் கிராபிக்ஸ் பணிகளை தொடங்கிவிட்டதாகவும் அவரே தெரிவித்துள்ளார்.

இந்த வருடம் ஏப்ரல் 28ம் திகதி இப்படம் வெளிவரவிருக்கிறது. அதற்கு முன்னதாக, பிப்ரவரி மாதத்தில் இப்படத்தின் டீசரை வெளியிடவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

வவுனியா கந்தசுவாமி கோவில் கும்பாபிஷேக தின நிகழ்வுகள்!(படங்கள்)

வவுனியா கந்தசுவாமி கோவில் கும்பாபிஷேகதின நிகழ்வுகள். 30-01-2017 திங்கட்கிழமை இடம்பெற்றது. காலையில்  1008 சங்காபிசேகம்   இடம்பெற்று  மாலையில்   வசந்த மண்டப பூஜையின் பின் முருகபெருமான்  வீதியுலா வந்த நிகழ்வும் இடம்பெற்றது .

 

சமந்தா – நாக சைதன்யா திருமண நிச்சயதார்த்தம்!!

பாணா காத்தாடி திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக உயர்ந்தவர் சமந்தா. நான் ஈ, நீதானே என் பொன்வசந்தம், அஞ்சான், கத்தி, 10 எண்றதுக்குள்ள, தங்க மகன், தெறி, 24 ஆகியவை சமந்தா நடித்த முக்கிய படங்கள்.

தெலுங்கில் நாகார்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவுடன், சமந்தா ஜோடியாக நடித்தார். அப்போது இருவருக்கும் நட்பு ஏற்பட்டு காதலாக மலர்ந்தது. இந்தநிலையில் 2 மாதங்களுக்கு முன்பு இந்த காதலை சமந்தா உறுதிபடுத்தினார்.

நாக சைதன்யாவும், நானும் காதலிப்பது உண்மை தான். எங்கள் காதலை இருவீட்டு பெற்றோரும் ஏற்றுக்கொண்டுவிட்டனர். விரைவில் நாங்கள் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு உள்ளோம். திருமணத்துக்குப் பின்னரும் தொடர்ந்து நடிப்பேன். கணவர் குடும்பத்தினருக்கு அவமதிப்பு ஏற்படாத வகையில் நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பேன், என்று சமந்தா தெரிவித்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து சமந்தா-நாக சைதன்யா திருமண ஏற்பாடுகளில் இரு வீட்டாரும் தீவிரமாக ஈடுபட்டனர். நாக சைதன்யாவின் தம்பியும், தெலுங்கு நடிகருமான அகிலுக்கும், ஐதராபாத்தை சேர்ந்த ஷ்ரேயா பூபாலுக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. எனவே அடுத்து சமந்தா-நாக சைதன்யா நிச்சயதார்த்தம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்தநிலையில் நேற்று சமந்தா-நாக சைதன்யா திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. நாக சைதன்யாவுக்கு நெருக்கமான நண்பர் ஒருவர் இதனை தெரிவித்துள்ளார். ஐதராபாத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் ரகசியமாக இந்த திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக கூறப்படுகிறது.

இதில் நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் மட்டுமே கலந்துகொண்டனர். திருமண திகதியை ஓரிரு நாட்களில் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வவுனியா செட்டிக்குளம் வைத்தியசாலையில் உத்தியோகத்தர்களுக்கான விடுதி திறந்துவைப்பு!!

 
வவுனியா செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நிறைவுகாண் மருத்துவசேவை உத்தியோகத்தர்களுக்கான விடுதியினை வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் இன்று( 30.01.2017) காலை 10.30 மணியளவில் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.

சுகாதார சேவையினை வலுப்படுத்தும் நோக்கத்தினை அடிப்படையாக கொண்டு அமைச்சரின் மாகாண குறித்தொகுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியின் கீழ் 9 மில்லியன் ரூபாய் செலவில் விடுதி அமைக்கபட்டுள்ளது.

அத்துடன் தின்மக்கழிவுகளை சேகரிக்கும் கழிவுத் கட்டிடத்தொகுதியொன்றும் 1.2 மில்லியன் செலவில் அமைக்கபட்டு இதன் போது திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் சுகாதார அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் ப.சத்தியசீலன், மாவட்ட சுகாதார பணிப்பாளர் பசுபதிப்பிள்ளை பவானி, வைத்தியர் மகேந்திரன், செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி , செட்டிக்குளம் கோட்ட கல்விப் பணிப்பாளர் யேசுதாஸன், செட்டிக்குளம் பிரதேச சபை முன்னாள் தவிசாளர் கபிரியல் அந்தோனி , செட்டிக்குளம் பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளர் சந்திரமோகன், செட்டிக்குளம் மகாவித்தியாலய அதிபர் தர்மரட்னம் , கிராம அலுவலர், வைத்தியர்கள், நலம்விரும்பிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

64 வருடங்களுக்குப் பின்னர் பிரான்ஸிலிருந்து பிரபஞ்ச அழகி!!

பிலிப்பைன்சின் மணிலா நகரில் நடந்த பிரபஞ்ச அழகி போட்டியில், பிரான்ஸ் அழகி ஒருவர் 64 வருடங்களுக்கு பிறகு பிரபஞ்ச அழகியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்த வருடத்திற்கான பிரபஞ்ச அழகிப் போட்டி பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடந்தது. இப்போட்டியில் 85 நாடுகளை சேர்ந்த அழகிகள் கலந்து கொண்டனர். கடந்த சில நாட்களாக பல சுற்றுகளாக போட்டி நடைபெற்று வந்தன.

இந்நிலையில் இறுதி போட்டியில் பிரான்ஸ் நாட்டிலிருந்து 64 வருடங்களுக்கு பிறகு 24 வயதான ஐரிஷ் மிட்டனெரே, பிரபஞ்ச அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் இரண்டாம் இடத்தை ஹெய்டி அழகி ராகுயில் பெல்லிஸிரும், மூன்றாம் இடத்தை கொலம்பிய அழகி அண்ட்ரியா டோவரும் பெற்றுள்ளனர்.

பிரபஞ்ச அழகிய தெரிவானவர் பிரான்ஸ் பல்மருத்துவ கல்லூரியில் இறுதி ஆண்டில் படிப்பவராவார். மேலும் இரண்டாம் இடத்தை பெற்ற ஹெய்டி அழகி ராகுயில் பெல்லிஸி 2010 ஆம் ஆண்டு அந்நாட்டில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்திலிருந்து உயிர் தப்பியுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

130 மனைவிகள், 203 குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த மதபோதகர் காலமானார்!!

நைஜீரியாவில் 130 மனைவிகள், 203 குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த முன்னாள் முஸ்லீம் போதகர் பாபா மசபா 93 வயதில் காலமானார்.

நோயால் அவதிப்பட்டு வந்த பாபா மசபா என்றழைக்கப்படும் முகமது பெல்லோ அபூபக்கரின் உயிர் மத்திய நைஜர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் பிரிந்துள்ளது.

அவரது இறுதிசடங்கில் மாபெரும் கூட்டம் கலந்து கொண்டது. அவர் 130 மனைவிகளும், 203 குழந்தைகளையும் கைவிட்டு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதும், அவரது மனைவிகளில் சிலர் கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது.

மத போதகராக திகழந்து வந்த பாபா மசபா தன்னிடம் உதவி கேட்டு வந்த பெண்களிடம் தன்னுடைய விருப்பத்தை தெரிவித்து, பின்னர், அவர்கள் விருப்பத்துடன் திருமணம் செய்துக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் 3 சிறுவர்கள் உயிரிழப்பு, 57 பேர் காயம்!!

நேற்றிரவு முதல் இன்று அதிகாலை வரை நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் மூன்று சிறார்கள் உயிரிழந்துள்ளதுடன், வெளிநாட்டு பிரஜைகள் ஆறு பேர் உள்ளிட்ட 57 பேர் காயமடைந்துள்ளனர்.

கல்முனை சாய்ந்தமருது பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று சிறுவர்கள் உயிரிழந்துள்ளதுடன் 19 பேர் காயமடைந்துள்ளனர்வி பத்தில் காயமடைந்தவர்கள் கல்முனை அஷ்ரப் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றும் வேன் ஒன்றும் மோதி இன்று அதிகாலை ஐந்து முப்பது அளவில் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

விபத்தின் போது காயமடைந்த 22 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அவர்களில் மூன்று சிறார்கள் உயிரிழந்துள்ளனர்.

விபத்துடன் தொடர்புடைய இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். கல்முனை பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கண்டி நோக்கி பயணித்த பஸ்ஸொன்று குடைசாய்ந்துள்ளதில் 15 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் ஹபரண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தம்புளை – ஹபரண பிரதான வீதியில் இன்று அதிகாலை குறித்த பஸ் விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த பகுதியில் நிலவும் மழையுடனான வானிலையை அடுத்து பஸ் வீதியைவிட்டுவிலகி விபத்துக்குள்ளாகியிருக்கும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

விபத்துக்குள்ளானவர்களை மீட்கும் பணிகளில் சீகிரிய பொலிஸார் மற்றும் பொதுமக்களும் இணைந்து செயற்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து மொறட்டுவைப் பல்கலைகழகத்திற்கு மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று மாங்குளம் பகுதியில் விபத்துக்குள்ளானதில் ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர்.

வீதியில் நின்றுக் கொண்டிருந்த எருமை மாடுகளுடன் மோதி நேற்றிரவு ஒன்பது முப்பது அளவில் குறித்த பஸ் விபத்துக்குள்ளாகியுள்ளது.

சுமார் 50 மாணவர்கள் பஸ்சில் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காயமடடைந்த மாணவர்கள் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தின் போது எருமை மாடுகளும் உயிரிழந்துள்ளன. விபத்து ஏற்பட்ட போது ஏ – 09 வீதியில் மாங்குளம் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்தும் தடைப்பட்டிருந்தது.

இதேவேளை நீர்கொழும்பு கற்பிட்டி பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் நியூஸிலாந்து பிரஜைகள் ஆறு பேர் உள்ளிட்ட 8 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். வேன் ஒன்றுடன் காரொன்று மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

திருகோணமலை கடலில் மாயமான இளைஞர்களின் சடலங்கள் மீட்பு!!

திருகோணமலை – அலஸ்தோட்டம், சோலையடிக் கடலில் நேற்றைய தினம் மாலை நீராடிய இளைஞர் குழுவில் காணாமல் போயிருந்த இருவரது சடலங்களும் கரை ஒதுங்கியுள்ளன.

ஒருவரின் சடலம் ஜமாலியா கடற்கரையில் இன்று காலை கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை மற்றைய நபரின் சடலம் பள்ளத்தோட்டம் கடற்பகுதியில் கரை ஒதுங்கியுள்ளது.

நண்பர்கள் 6 பேர் சேர்ந்து கடலில் நீராடுவதற்காக சென்றிருந்த நிலையில் அவர்களில் 3 பேர் கடலில் நீராடிக் கொண்டிருந்தபோது, திடீரென்று நீரில் மூழ்கியுள்ளனர்.

அதிரடி மாற்றம் செய்யும் பேஸ்புக்!!

இணைய உலகில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்திருக்கும் பேஸ்புக் நிறுவனம் இன்று ஏறத்தாழ 1.7 பில்லியன் பயனர்களை தன்னகத்தே கொண்டுள்ளது.

இந் நிறுவனம் தனது இடத்தை தொடர்ந்தும் தக்க வைப்பதற்காக பல்வேறு வசதிகளை பயனர்களுக்கு அறிமுகம் செய்து கவர்ந்து வருகின்றது.

இதன் அடிப்படையில் தற்போது ஏற்கணவே வழங்கப்பட்டிருந்த வசதியில் ஓர் அதிரடி மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதாவது News Feed எனப்படும் முறையின் ஊடாக ஹோம் பேஜ்ஜில் தொடர்ச்சியாக பல்வேறு தகவல்களை அப்டேட் செய்துகொண்டிருக்கும்.

இந்த தகவல்கள் குறித்த ஒரு பயனரின் நண்பர்கள் தொடர்பானதாகவோ அல்லது லைக் பேஜ் தொடர்பானதாகவோ இருக்கும்.

இந்த News Feed இனூடாக இதுவரையில் சிறிய அளவு நேரம் ஓடக்கூடிய வீடியோக்களையே காட்சிப்படுத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

ஆனால் இனிவரும் காலங்களில் இவ்வாறு காட்சிப்படுத்தப்படும் வீடியோக்களின் நீளம் அதிகமானதாகவும் இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாற்றமானது பயனர்களின் வரவேற்பைப் பெறுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

250 வழக்குகளில் தேடப்படும் இந்த அழகிய பெண் யார்?

டெல்லி, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, சட்டீஸ்கர், தெலுங்கானா, ஆந்திரபிரதேசம், கர்நாடகா ஆகிய மாநில பொலிசார் 250 வழக்குகளில் ஒரு பெண்ணை தேடி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இப்பெண்ணின் பெயர் குஷ்பு ஷர்மா(28). தந்தையின் அரவணைப்பில் வளர்ந்த இவர் விபத்து ஒன்றில் தனது வலது கையை இழந்தவர்.

பார்ப்பதற்கு அழகாக இருக்கும் இவர் ஐ.ஏ.எஸ் படித்தவர் என்றும், உச்சநீதிமன்ற வழக்கறிஞர் என்றும் பல வேடங்களில் வலம் வருபவர்.

தனது அழகால் பல்வேறு ஆண்களை தனது வலையில் வீழ்த்திய இவர், அவர்களிடம் இருந்து பல்வேறு பொருட்கள் மற்றும் பணத்தினையும் கொள்ளையடித்துள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டு டெல்லியில் காரில் வரும் ஒருவரிடம் லிப்ட் கேட்டுள்ளார். காரில் செல்லும்போதே அவரிடம் பேச்சு கொடுத்து தன்பக்கம் ஈர்த்தவர், அவருடன் இன்பமாக இருக்க தயார் என்றும் தனக்கு ஒரு கருத்தடை மாத்திரை வாங்கித்தரும்படியும் கேட்டுள்ளார்.

உடனே காரில் சென்றவர் மெடிக்கல் ஷாப் அருகே காரை நிறுத்தி கருத்தடை மாத்திரை வாங்க சென்றவுடன் அந்த காரை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

இதேபோல் பல மோசடி புகார்கள் இவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், டெல்லி பொலிசாரால் கைது செய்யப்பட்ட இவர், அங்கிருந்து தப்பியுள்ளார்.

ஆனால், எப்படி தப்பித்தார் என்பது மர்மமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. டெல்லியில் மட்டுமே இவர் மீது 35 வழக்குகள் உள்ளது.

ஆங்கிலம், இந்தி ஆகிய இருமொழிகளை சரளமாக பேசும் திறமை படைத்தவர்கள் என்பதால் ஆண்களை வீழ்த்துவற்கு நல்ல வசதியாக இருந்துள்ளது.

மீண்டும் விஜய்யுடன் இணையும் அமலாபால்?

காதல் திருமணம் செய்து கொண்ட இயக்குநர் விஜய்யும், நடிகை அமலாபாலும் ஒருவரையொருவர் பிரிந்து வாழ்கின்றனர்.

சிறு வயதில் நான் செய்த தவறுதான் திருமணம், காதல் திருமணம் செய்துகொண்ட எங்களது திருமண வாழ்க்கை மனம் ஒத்துப்போகவில்லை, இதனால் நாங்கள் இருவரும் வெவ்வேறு பாதைகளில் பயணிக்க ஆரம்பித்துவிட்டாம் என அமலா பால் விளக்கம் அளித்தார்.

மேலும், இவர்கள் இருவரும் சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில் நடிகை அமலா பாலிடம் நீங்கள் மீண்டும் இயக்குநர் விஜய்யுடன் ஒன்று சேர்வீர்களா? என பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதற்கு பதிலளித்த அவர், நாங்கள் மீண்டும் இணைவது பற்றி எனக்கு தெரியாது. வாழ்வில் நடப்பவற்றை எல்லாம் முன்கூட்டியே தீர்மானிக்க இயலாது. மேலும் வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமில்லை.

வாழ்க்கையில் நடக்கும் சில தருணங்கள் நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். ஒரு வேளை நானும், விஜய்யும் ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் சந்தித்துக்கொண்டால் எங்கள் இருவருக்கும் சந்தோஷமான தருணமாகத்தான் இருக்கும்.

ஆனால், தற்போது நாங்கள் இருவரும் வெவ்வேறு பாதையில் உள்ளோம் என்று கூறியுள்ளார்.

பீட்சாவை திருமணம் செய்துகொண்ட இளம் பெண்!!

அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் பீட்சா உணவு அதிகம் பிடிக்கும் என்பதால் அதனை திருமணம் செய்துள்ளது விநோதத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் மேரிலேண்ட் மாநிலத்தில் உள்ள பால்டிமோர் நகரை சேர்ந்தவர் கிறிஸ்டின் வாக்னர்(18).

பீட்சாவை அதிகம் விரும்பி சாப்பிடும் இவர், அதனை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். அதன்படி தனது பாட்டியின் திருமண ஆடையை எடுத்து உடுத்திக்கொண்டு, பீட்சாவுக்கும் டை கட்டி மாப்பிள்ளை போன்று அலங்கரித்துள்ளார்.

இதன் பின்னர் பீட்சாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவேற்றி, எனக்கு திருமணம் நடந்துவிட்டது, ஆண்களே என்னை மன்னித்துவிடுங்கள் என கூறியுள்ளார்.

இதனைப்பார்த்த புகைப்படக் கலைஞர் மார்சி ஹாரிஸ், கிறிஸ்டினாவின் பண்ணை வீட்டில் வைத்து போட்டோஷீட் ஒன்றினையும் நடத்தியுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சாய்ந்தமருதில் கோர விபத்து : மூன்று குழந்தைகள் பலி, 15 பேர் காயம்!!

அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியில் சாய்ந்தமருதில் இடம்பெற்ற வாகன விபத்தில வானில் வந்த 3 சிறுவர்கள் அதே இடத்தில் உயிரிழந்ததுடன் ஏனையோர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று அதிகாலை 5.15 மணிக்கு இந்த விபத்து நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து மதக்கடமைக்கு சென்றுவிட்டு தங்களது ஊரான பாலமுனை நோக்கி சென்று கொண்டிருந்த வானும், அம்பாறையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வந்துகொண்டிருந்த இலங்கை போக்குவரத்திற்கு சொந்தமான பேருந்தும் மோதியதில் வானில் இருந்த 3 சிறுவர்கள் உயிரிழந்துள்ளார்கள்.

ஏனையவர்கள் தற்போது கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றார்கள். இதில் இரண்டரை வயது, 4 வயது, 8 வயது மதிக்கத்தக்க குழந்தைகளே பலியாகி உள்ளனர்.

ஏனையவர்களில் ஒரு சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டுவருகின்றார்கள்.

களநடுவரே இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம் : இங்கிலாந்து அணித்தலைவர் அதிரடி!!

களநடுவரின் தவறான முடிவால் இந்திய அணி இரண்டாவது T20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் வெற்றிப்பெற்றதாக இங்கிலாந்து அணித்தலைவர் இயன் மோர்கன் தெரிவித்துள்ளார்.

நாக்பூரில் நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது T20 போட்டியில் இந்திய அணி 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.

கடைசி ஓவரில் சிறப்பாக பந்து வீசி இந்தியாவின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பும்ரா ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

இந்நிலையில் போட்டிக்கு பின்னர் பேசிய இங்கிலாந்து அணித்தலைவர் இயன் மோர்கன் கூறியதாவது, பும்ரா வீசிய கடைசி ஓவரில், பந்து ஜோ ரூட்டின் பேட்டில் பட்டதை கவனிக்காமல், நடுவர் சாம்ஷுதின் அவுட் கொடுத்தது ஆட்டத்தின் முடிவை மாற்றிவிட்டது.

களநடுவரின் இந்த செயல்பாடு குறித்து, போட்டி நடுவரிடம் முறையிட உள்ளதாக கூறிய மோர்கன், கிட்டத்தட்ட 40 பந்துகளை சந்திருந்திருந்த ரூட் களத்தில் இருந்திருந்தால் முடிவு வேறுமாதிரியாக மாறியிருக்கக்கூடும் எனவும் தெரிவித்தார்.

வாள்வெட்டுடன் தொடர்புடைய ஐவர் வாள் மற்றும் ஆயுதங்களுடன் கைது!!

வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய 5 பேர், 6 வாள்கள் மற்றும் பல்வேறு ஆயுதங்களுடனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் நேற்று யாழ்ப்பாண பொலிஸாரால், யாழ்ப்பாண நகர்ப்பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம், அரியாலை, கல்வியங்காடு போன்ற பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் 5 பேரும் அண்மையில் யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விசாரணைகளின் பின்னர் குறித்த 5 சந்தேகநபர்களையும் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.