வவுனியா – கோவில்குளத்திலிருந்து வவுனியா வைத்தியசாலைக்கு பயணித்துக் கொண்டிருந்த நோயாளர் காவுவண்டி (அம்பியூலன்ஸ்) திடீரென விபத்துக்குள்ளாகி உள்ளது. இவ் விபத்து பற்றி மேலும் தெரியவருவதாவது..
வவுனியா வைத்தியசாலைக்கு பயணித்துக் கொண்டிருந்த நோயாளர் காவுவண்டி சிவன்கோயிலடியில் பயணித்துக்கொண்டிருந்த வேளை வண்டியின் சாரதிக்கு திடீரென உடல்நிலை பாதிப்படைந்துள்ளது.
இதன் காரணமாக வீதியை விட்டு விலகி குறித்த பகுதியிலுள்ள ஒரு வீட்டினுடைய சுவரில் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் காவு வண்டியில் நோயாளர் யாரும் இல்லை என்பதும், இவ்விபத்தில் எதுவித உயிர் சேதமும் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
லண்டன் நகரில் கடுமையான காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தலைநகரத்தின் தெற்கே உள்ள நகரங்களுக்கு கடுமையான வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டு வானிலை ஆராய்ச்சி நிலைய நிபுணர்கள் இதனை தெரிவித்துள்ளதாக குறிப்பட்டு சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி, தென் கிழக்கு பகுதிகளில் 70mph வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும், கடலோர பகுதிகளில் 80mph வேகத்தை விடவும் அதிக வேகத்தில் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், எதிர்வரும் வெள்ளிக்கிழமை லண்டன் நகரில் அமைதியற்ற காலநிலை தாக்கும் எனவும், வேல்ஸ் மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் செயற்படும் வகையில் மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த காலநிலை மாற்றத்தினால் லண்டன் நகரில் எவ்வாறான பாதிப்புகளை ஏற்படுத்தும் என நிச்சயமற்ற தன்மை காணப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
எனினும், லண்டன் நகரில் நிச்சயமாக சில பாதிப்புடனான தெளிவற்ற காலநிலையை எதிர்பார்க்க முடியும் என வானிலை ஆராய்ச்சி நிலைய வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மேற்கு இங்கிலாந்தில் மின்சார தடை மற்றும் பயண தாமதங்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பலத்த காற்று, வெள்ளம், மரம் முறிதல் மற்றும் கட்டிட சேதங்களை ஏற்படுத்தும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, புயலுடனான காலநிலை, இங்கிலாந்து முழுவதும் உறைபனி வெப்பநிலை ஏற்படுத்தும் எனவும், கடும் மூடுபனி காரணமாக லண்டன் விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் பயணிப்பதிலும் சிரமம் ஏற்படும் என குறிப்பிடப்படுகின்றது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அரசாங்கம் H1B விசா மீதான மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்கில் அந்நாட்டு பாராளுமன்றில் மசோதா ஒன்றை சமர்பித்துள்ளது.
ட்ரம்பின் இந்த நடவடிக்கையால் இந்தியாவில் முன்னிலை வகிக்கும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 120,000 (இலங்கை ரூபா) கோடி வரையில் இழப்பை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டி.சி.எஸ், இன்போசிஸ், விப்ரோ மற்றும் எச்.சி.எல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சுமார் 120,000 கோடி வரையில் இவ்வாறு வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
H1B விசாவில் திருத்தம் செய்யப்பட்ட மனு அமெரிக்க பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு மணி நேரத்தில் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க அரசாங்கத்தின் புதிய விசா கொள்கையின் படி H1B விசாவில் வேலைக்கு வருபவர்களின் குறைந்த பட்ச ஊதியம் 130,000 டொலராக அதிகரிக்கப்பட்டுள்ளது.
60,000 டொலராக காணப்பட்ட இந்த தொகை, தற்போது இரு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளமையினால், இந்த ஊதிய உயர்வை வழங்குவதில் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளது.
இந்நிலையில், H1B விசாவில் அமெரிக்காவில் பணி புரியும் ஊழியர்களுக்கு அதிக ஊதியம் வழங்க வேண்டும் என்பதால் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது ஊழியர்களைத் மீள அழைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, டொனால்ட் ட்ரம்பின் இந்த நடவடிக்கையின் காரணமாக ஆசியாவின் ஏனைய வளர்ந்துவரும் இலங்கை போன்ற நாடுகளுக்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என பொருளாதார நிபுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டில் மூன்று தசாப்த காலம் நிலவி வந்த பயங்கரவாத சூழல் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு இற்றைக்கு 07 வருடங்கள் கடந்து விட்டன.
அதன் பயனாக பயங்கரவாத நிலைமை நிலவிய போது, காணப்பட்ட அச்சம், பீதி 2009ம் ஆண்டு மே மாதத்தின் பிற்பகுதி முதல் நாட்டில் எங்குமே இல்லை.
இன்று சுதந்திரமும் ஜனநாயகமும் நாட்டில் தழைத்தோங்கியுள்ளன.யாழ்ப்பாணம் உட்பட முழு நாட்டிலும் சட்டம் ஒழுங்கு இன்று முழுமையாக அமுல்படுத்தப்பட்டுள்ளது. அந்தப் பணியில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிலும் மூன்று தசாப்த காலம் பயங்கரவாத சூழல் நிலவிய யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் ஏனைய பிரதேசங்களை விடவும் மிகுந்த விழிப்புடனும், முன்னவதானத்துடனும்தான் பொலிஸாரும், பாதுகாப்புப் படையினரும் கடமைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அவ்வாறிருந்தும் கூட கடந்த திங்களன்று இரவு சுமார் ஏழரை மணியளவில் யாழ்ப்பாணம் அரசடிச் சந்தியில் இடம்பெற்ற சம்பவம் யாழ்ப்பாணம் உள்ளிட்ட வட பகுதி மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில் சுமார் 07, 08 இளைஞர்கள் தம் முகங்களை துண்டுகளால் மறைத்து கட்டிய நிலையில் வாள்களுடன் மோட்டார் பைசிக்கிளில் வந்து வன்முறையில் ஈடுபட்டனர்.
குறிப்பாக அங்கு மோட்டார் பைசிக்கிளில் அமர்ந்தபடி நின்று கொண்டிருந்த ஒருவரை எதுவித கேள்வி
அத்தோடு அவ்விடத்தில் காணப்பட்டவர்களையும், அவ்வீதி வழியாக அச்சமயம் அங்குமிங்கும் பயணித்தவர்களையும் கூட வாள்களுடன் துரத்தினர்.
அங்கிருந்த பல சரக்குக் கடை மீது இக்கும்பல் பெற்றோல் குண்டு வீசித் தாக்குதல்நடாத்தியது. இவ்வாறு வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்ட இக்கும்பல் வந்த மோட்டார் பைசிக்கிள்களிலேயே அவ்விடத்தை விட்டு தப்பிச் சென்றது.
இந்த வன்முறைச் சம்பவம் காரணமாக இருவர் வாள் வெட்டுக் காயங்களுடன் யாழ் போதனா வைத்தியசாலையில் கிசிச்சை பெற்று வருகின்றனர்.
பல சரக்கு கடையும் எரிந்து சேதமடைந்துள்ளது.முற்றிலும் தென்னிந்தியச் சினிமாப் பாணியில் அரங்கேற்றப்பட்ட இந்த வன்முறைச் சம்பவத்தை தேசியத் தொலைக்காட்சிகள் நேற்று முன்தினம் மாலையில் ஒளிபரப்பியுள்ளன.
இச்சம்பவம் யாழ்ப்ப்பாணத்தில் மாத்திரமல்லாமல் வட பகுதியிலும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள இதேநேரம், மீண்டும் வடக்கில் யுத்தமும் வன்முறையும் தோற்றம் பெறுவதற்கான முன் சமிக்ஞையா என்ற கேள்வியைத் தென்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே ஆவா குழு என்ற பெயரில் வன்முறைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. அவற்றில் ஈடுபட்டு வந்தவர்களைச் சட்டத்தின் பிடியின் கீழ் கொண்டு வந்து அவர்களது செயற்பாடுகளும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இருந்தும் ஆவா குழுவின் செயற்பாடுகள் கட்டுப்படுத்தப்பட்ட ஒரு சில மாதங்களுக்குள் அதே பாணியிலான வன்முறை மீண்டும் இப்போது இடம்பெற்றிருக்கின்றது.
இந்த சம்பவம் பல கோணங்களிலும் கேள்விகளைத் தோற்றுவித்துள்ளது.
குறிப்பாக சட்டம் ஒழுங்கு முழுமையாக அமுல்படுத்தப்பட்டிருக்கும் ஒரு பிரதேசத்தில் முகங்களைத் துண்டுகளால் மறைத்துக் கட்டியபடி வாள்களுடன் மோட்டார் பைசிக்கிளில் எவ்வாறு- வீதி வழியாக வந்தனர்?
இவர்களது பின்னணி என்ன? என்பன குறித்து சிந்திக்க வேண்டிய தருணம் இது.
அதேநேரம் இக்கும்பல் முன்பு அனுபவம் பெற்றவர்கள் போன்று அங்கு காணப்பட்டவர்களை சர்வ சாதாரணமாகத் துரத்தி துரத்தி வாள்களால் வெட்டியது. இது ஒரு பயங்கரக் கோரக் காட்சியாகும்.
அதனால் அவர்களது மனநிலை தொடர்பில் கவனம் செலுத்த வேணடிய தேவையும் ஏற்பட்டிருக்கின்றது.இவை இவ்வாறிருக்க, இவ்வாறான குரூர வன்முறை என்ன நோக்கத்திற்காக அரங்ககேற்றப்பட்டது.
இதன் பின்புலம் என்ன? வடக்கில் மீண்டும் யுத்தமும் வன்முறையும் ஏற்பட்டு விட்டது என்று குற்றம் சாட்டவென திட்டமிட்ட அடிப்படையில் முன்னெடுக்கப்படும் சூழ்ச்சிகரச் செயலா இது?
இல்லா விட்டால் நாட்டில் யுத்தம் முடிந்து விட்டாலும் வடக்கில் அச்சமும் பீதியும் இன்னும் நிலவவே செய்கின்றன. குரூர வன்முறைகள் தலைவிரித்தாடுகின்றன என்று வெளிநாடுகளுக்கு காண்பிப்பதற்காக இவ்வாறான செயல்கள் அரங்கேற்றப்படுகின்றதா:?
இவை தொடர்பில் பொலிஸாரும், புலனாய்வுத் துறையினரும் விஷேட கவனம் செலுத்த வேண்டும்.நாட்டுக்கும் நல்லாட்சி அரசாங்கத்திற்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்படும் இவ்வாறான சூழ்ச்சிகர செயற்பாடுகளுக்கு ஆரம்பத்திலேயே முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்பது தான் அமைதி சமாதானத்தை விரும்பும் அனைத்து தரப்பினரதும் எதிர்பார்ப்பாக உள்ளது.
சட்டம் ஒழுங்கை எவரும் கையில் எடுப்பதற்கு இடமளிக்கக் கூடாது. சட்டத்தைக் கையில் எடுக்க முனைபவர்களைச் சட்டத்தின் முன் ஆஜர்படுத்தி அவர்களுக்கு தண்டனை அளிப்பதோடு அவர்களுக்கு புனர்வாழ்வும் அளிக்கவும் நடவடிக்கை எடுப்பது அவசியம்.
இவ்வாறான ஏற்பாடுகளின் ஊடாகவே அச்சம் பீதியற்ற நிலைமை நாட்டில் நீடித்து நிலைக்க வழிவகுக்கும்.
கேரள மாநிலத்தில் பாடசாலை மாணவிகள் மூவரின் தற்கொலை குறித்து விசாரித்தபோது, “மொபைல் போனில் ஒளிந்திருக்கும் ஆபத்துகளும் வக்கிரங்களும் அதிகம்” என இந்தியாவின் முதல் பெண் சைபர் கிரைம் கணினி குற்றவியல் நிபுணர் தன்யா மேனன் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த இந்தியாவின் முதல் பெண் சைபர் க்ரைம் துப்பறியும் நிபுணர் என்ற பெருமைக்குரியவர் தன்யா மேனன். 39 வயதாகும் இவர் முதுகலைப் பட்டம் பெற்றவர்.
தற்போது இந்திய பொலிஸார், மத்திய, மாநில அரசுப் பணியாளர்களுக்கு பயிற்சி வகுப்புகளை நடத்துபவர். பல வழக்குகளை விசாரித்து பிரச்சினைகள் தீர்வதற்கு உதவுவதாக செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
அண்மையில் கேரளாவில் மூன்று பாடசாலை மாணவிகள் வகுப்பறையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக தன்யா மேனன் தெரிவித்துள்ளதாவது, கேரளாவில் மூன்று பாடசாலை மாணவிகள் வகுப்பறையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுவே நான் விசாரித்த முதல் வழக்கு. மற்றொரு பாடசாலையில் படிக்கும் மாணவர்கள், அந்த மூன்று மாணவிகள் தங்களுடன் உல்லாசமாக இருந்த புகைப்படங்கள் மொபைல் போனில் இருப்பதைக் காட்டி, தொடர்ந்து ஆசைக்கு இணங்க வற்புறுத்தி, ஒத்துழைக்காவிட்டால் அவற்றை வெளியிடுவோம் என மிரட்டியதால், பயந்துபோன மாணவிகள் குடும்ப கௌரவத்தை காப்பதற்காக தற்கொலை செய்துகொண்டது விசாரணையில் தெரியவந்தது.
மொபைல் போனை தவறாகப் பயன்படுத்தி மூன்று உயிர்கள் பலியானது மிகுந்த வேதனை அளித்தது. இணையதளம், சமூக வலைதளங்கள் மற்றும் மொபைல் போனில் ஒளிந்திருக்கும் ஆபத்துகளும் வக்கிரங்களும் அதிகம். ஆனால் அவற்றைப் பற்றி அறியாமல் இளம் பருவத்தினர் இன்னல்களுக்கு ஆளாவதைத் தடுக்க பாடசாலை, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு முகாம்களை நடத்துகிறேன்.
இந்த நிகழ்ச்சியில் சமூக வலைதளம், வட்ஸ்அப் போன்ற செயலிகளை பயன்படுத்தும்போது பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விளக்குகிறேன். அதோடு அந்தரங்கமான தகவல்களை பகிர்ந்து கொண்டு பிரச்சினைகள் வருவதற்கு நாமே காரண மாகக் கூடாது என்பதையும் புரிய வைக்கிறேன். இதுவரை 400க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளேன்.
இந்தியாவில் சைபர் குற்றங்களை எங்கு புகார் செய்ய வேண்டும், நீதிமன்றத்தில் எத்தகைய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் போன்ற அடிப்படை தகவல்கள், படித்தவர்களுக்குக் கூடத் தெரிவதில்லை. அப்படியானவர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கென ஒரு அமைப்பை நடத்தி வருகிறேன்.
மோசமான பின்விளைவுகளால் நிஜ வாழ்க்கையில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உரிய நியாயம் கிடைக்க உதவுகிறேன்.
மத்திய, மாநில அரசுகள் சம்பந்தமான தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளையும் கையாண்டிருக்கிறேன். இப்போது ஒவ்வொரு நாளும் ஏறக்குறைய 200க்கும் மேற்பட்ட புகார்கள் வருகின்றன.
ஏன், எதற்கு, எப்படி ஒரு குற்றம் நிகழ்ந்தது என விசாரித்து, குற்றவாளியை சட்டத்தின் முன் நிறுத்துவது என் கடமை. நவீன தொழிற்நுட்பத்திலும் இணையதளத்திலும் ஒளிந்திருக்கும் அபாயத்தை பொதுமக்களுக்கு விளக்குவதும் என் பணி. சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி குற்றவாளிகள் தப்பிவிடாமல் இருக்க காலத்தின் தேவைக்கேற்ப அவ்வப்போது சட்டத் திருத்தங்களை செய்ய வேண்டியதும் அவசியம் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், சைபர் உலகம் என்பது வாழ்க்கையை எளிமையாக்கவல்லதுடன், கண்ணுக்குத் தெரியாத, கண் நழுவவிடும் ஆபத்துகளும் நிறைந்தது!” என எச்சரிக்கிறார் தன்யா மேனன்.
கடந்த ஜனவரி 30 ஆம் திகதி பெண்கள் மற்றும் சிறுமிகள் எதிர்கொள்ளும் பாலியல் கொடுமைகளுக்கு எதிராக டெல்லியில் உலக மாநாடு ஒன்று நடைபெற்றது.
இந்த மாநாட்டில் உலக நாடுகளில் இருந்து பல்வேறு பிரபலங்கள் கலந்துகொண்டனர். அதில் ஒருவரான அமெரிக்காவை சேர்ந்த பிரபல நடிகையான ஆஷ்லே தனது வாழ்வில் தான் எதிர்கொண்ட பிரச்சனைகளை விவரித்துள்ளார்.
ஏழு வயதில் பாலியல் துன்புறுத்தலுக்கும், 14 வயதில் வன்புணர்வுக்கும் ஆளான தான் மீண்டும் 30 வயதில் அந்தக் கொடுமைக்கு ஆளானதாகக் குறிப்பிட்டார்.
மேலும் பாலியல் பாகுபாடு பற்றி தொடர்ந்து பேசிய ஆஷ்லே, தான் பெண் என்ற காரணத்தினாலேயே, சக ஆண் நடிகர்களைவிட தன்னுடைய சம்பளம் 40% குறைவாக நிர்ணயிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
தன் தாய்நாடான அமெரிக்கா, பாலின சமத்துவத்தில் மிகவும் பின் தங்கியிருக்கிறது என்று தெரிவித்த அவர், ‘கிஸ் த கேர்ள்ஸ்’ என்ற திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது, ஹாலிவுட்டின் சூப்பர் பாஸ் ஒருவர், தன்னை தன் ஓட்டல் அறைக்கு வரச் செய்து தான் குளிப்பதை பார்க்கச் செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
நான் ஹாலிவுட்டின் அதிகாரமிக்க பாஸ் ஒருவரால் பாலியல் தொல்லைக்கு உள்ளானேன். ஓட்டலுக்கு வா, சேர்ந்து சாப்பிடலாம் என்ற வார்த்தைகளில் என்னை அழைத்தார் என்று குறிப்பிட்ட ஆஷ்லே, தன் சக நடிகைகளுக்கும் இது நேர்ந்ததை என்பதையும் குறிப்பிட்டார்.
உலகெங்கும் நடக்கும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கக் கூடிய சட்டங்கள் மிகவும் பலவீனமாக இருக்கிறது. பாலியல் கொடுமைக்கு உள்ளான பெண்களான நாம் ஒன்றாகக் கரங்கள் கோக்கும்போது, நம்மால் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
குற்றத்துக்கான தண்டனை குற்றவாளிக்கு மட்டுமே கிடைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு விளைவுகள் ஏற்படுவதை நாம் தடுக்க வேண்டும் என மாநாட்டில் கூறியுள்ளார்.
மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சவுக்கடிக் காட்டுப் பகுதியில் துப்பாக்கி ஒன்றை மீட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். நேற்று முன்தினம் கிடைத்த தகவல் ஒன்றையடுத்து ஏறாவூர் பொலிஸார் சவுக்கடிக் கிராமத்துக்குச் சென்று காட்டுப் பகுதியில் தேடுதலில் ஈடுபட்டனர்.
அதன் போது, பயன்படுத்தத் தக்க வகையில் காணப்பட்ட ரீ–56 ரக துப்பாக்கியை பொலிஸார் மீட்டுள்ளனர். பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது ஏறாவூர் நகர பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன், 119 க்குத் தகவல் தெரிவித்த மற்றொரு நபர் தேடப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தேடப்படும் நபர் தமது வீட்டில் வைத்திருந்த இந்தத் துப்பாக்கியை சவுக்கடிக் காட்டில் வீசி விட்டு 119க்குத் தகவல் வழங்கியதாகவும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்க அணி 121 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 06 விக்கட்டுக்களை இழந்து 307 ஓட்டங்களைப் பெற்றது. டேவிட் மில்லர் ஆட்டமிழக்காமல் 117 ஓட்டங்களையும் டு பிளவ்சிஸ் 105 ஓட்டங்களையும் பெற்றனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 186 ஓட்டங்களையே பெற்றுக் கொண்டது.
அதன்படி இந்த தொடரில் தென்னாபிரிக்க அணி 2-0 என்ற அடிப்படையில் முன்னிலை வகிக்கின்றது.
யாழ்.கஸ்தூரியார் வீதியில் வீடொன்றின் முன் நின்றிருந்த இளைஞர்கள் மீது, 2 மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட வாள்வெட்டு குழு ஒன்று வாள்வெட்டு நடத்த முயன்ற நிலையில் குறித்த இளைஞர்கள் அப்பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்து தப்பியுள்ளனர்.
நேற்று மாலை 6.40 மணியளவில் கஸ்தூரியார் வீதியில் உள்ள வீடொன்றுக்கு முன் 4 இளைஞர்கள் நின்றுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியால் 2 மோட்டார் சைக்கிளில்களில் வாள்களுடன் வந்த குழுவினர், குறித்த இளைஞர்கள் மீது வாள் வெட்டு தாக்குதல் நடத்த முயன்றுள்ளனர். இதனையடுத்து குறித்த இளைஞர்கள் அருகில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்து தப்பியுள்ளனர்.
எனினும் வீதியில் நின்றிருந்த மேற்படி இளைஞர்களின் மோட்டார் சைக்கிள் மீது கோடாரியால் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனையடுத்து அங்கு மக்கள் கூடியதுடன், பொலிஸாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து வாள்வெட்டு குழு தப்பி சென்றுள்ளது. பின்னர் சம்பவ இடத்திற்கு யாழ்.பொலிஸ் நிலைய பொலிஸார் வந்து இளைஞர்களைப் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
இதேவேளை யாழ். நகருக்குள் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
30 வயதுக்குள் சினிமா உலகை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த இயக்குனர்கள் பட்டியலை பிரபல நாளிதழ் ஒன்று தயாரித்து வெளியிட்டது. அதில், இயக்குனர்கள் பாக்யராஜ், வசந்த், கெளதம் மேனன், பாலாஜி மோகன், கார்த்திக் சுப்புராஜ், நலன் குமாரசாமி, துருவங்கள் பதினாறு இயக்குனர் கார்த்திக் நரேன் உள்ளிட்ட இயக்குனர்களை பட்டியலிட்டது.
இந்த பட்டியலை படித்து பார்த்த நடிகர் தனுஷ், அதில் தனது அண்ணனும், இயக்குனருமான செல்வராகவன் பெயர் இடம்பெறாதது குறித்து மிகவும் வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் கூறும்போது,
அந்த நாளிதழில் வந்த பட்டியலில் செல்வராகவன் பெயர் இடம்பெறாதது வருத்தத்தையும், வலியையும் கொடுக்கிறது. இந்த பட்டியலை தயாரித்தவர்கள் சரியாக ஆராயாமல் செய்ததுபோலவே தெரிகிறது என்று தெரிவித்துள்ளார்.
செல்வராகவன் தனது 28வது வயதிலேயே காதல் கொண்டேன் என்ற படத்தை இயக்கி, தமிழ் சினிமாவில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியவர். அதற்கு முன்னதாக இவர் வசனம் எழுதிய துள்ளுவதோ இளமை படத்தில்தான் தனுஷ் கதாநாயகனாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ், தெலுங்குத் திரையுலகில் முன்னணி நாயகியாக இருக்கும் சமந்தாவுக்கும், தெலுங்குத் திரையுலகின் இளம் நாயகனான நாகசைதன்யாவுக்கும் நேற்று முன்தினம் ஹைதராபாத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் மட்டும் கலந்து கொண்ட இந்த விழாவில் காதல் ஜோடிகளின் பொருத்தம் பற்றி பலரும் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்கள்.
விழாவின் ஹைலைட்டாக சமந்தாவின் நிச்சயதார்த்தப் புடவை அமைந்துள்ளது. அந்தப் புடவையில் சமந்தா – நாகசைதன்யா இருவரது காதல் ஆரம்பமான ‘ஏ மாச சேசவே’ படத்திலிருந்து அவர்கள் இருவரும் நாகசைதன்யாவின் தம்பி அகில் நிச்சயதார்த்தத்தில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட குடும்பப் புகைப்படம் வரையிலான முக்கிய தருணங்கள் புடவையில் வடிவமைக்கப்பட்டிருந்தது அனைவரையும் கவர்ந்துள்ளது.
இந்தப் புடவையை மும்பையின் புகழ் பெற்ற டிசைனரான கேஷா பஜாஜ் வடிவமைத்துக் கொடுத்துள்ளாராம். வெள்ளை மற்றும் தங்க நிறத்திலான அந்தப் புடவைதான் தற்போது புடவைப் பிரியர்களின் பரபரப்புப் பேச்சாக உள்ளது.
வவுனியாவிலுள்ள விற்பனை நிலையங்களில் அத்தியாவசியப் பொருட்களான மைசூர் பருப்பு ஒரு கிலோ 159ரூபா, இறக்குமதி செய்யப்பட்ட நெத்தலிக்கருவாடு தாய்லாந்து ஒரு கிலோ 490ரூபா, இறக்குமதி செய்யப்பட்ட நெத்தலிக்கருவாடு துபாய் 405ரூபா, பாசிப்பயறு ஒரு கிலோ 205ரூபா,
வெள்ளைச் சீனி 93ரூபா, உருளைக்கிழங்கு இறக்குமதி செய்யப்பட்டது 115ரூபா போன்ற பொருட்கள் பாவனையாளர் அலுவலக அதிகார சபையினால் வெளியிடப்பட்ட விலைகளுக்கு அமைவான விலையில் விற்பனை செய்யவேண்டும்.
அதைவிட அதிக விலையில் இப்பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர் நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக வவுனியா வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.
வவுனியா பூந்தோட்டம் சனசமூக நிலையம் இன்று (01.02.2017) காலை 10.30 மணிக்கு வடமாகாண சுகாதார அமைச்சர் மருத்துவர் ப. சத்தியலிங்கத்தினால் உத்தியோகபூர்வமாகத்திறந்து வைக்கப்பட்டது.
வவுனியா நகரசபையின் வருடாந்த நிதி பாதீட்டு திட்டத்தின் கீழ் ரூபா 4 மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட பூந்தோட்டம் சனசமூக நிலையக்கட்டடம் உத்தியோக பூர்வமாக திறந்து மக்கள் பாவணைக்காக கையளிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் வவுனியா நகரசபைச் செயலாளர் ஆர்.தயாபரன், வடமாகாணசபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன், பூந்தோட்டம் சனசமூக நிலையத்தலைவர் திரு.வேலாயும், பூந்தோட்டம் கிராமசேவையாளர், பூந்தோட்டம மகாவித்தியாலய அதிபர், நகரசபை உத்தியோகத்தர்கள், தொழிநுட்பவியலாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
அமெரிக்காவில் பாம்புடன் விளையாடிக்கொண்டிருந்த பெண் ஒருவரின் காது துவாரத்திற்குள் நுழைந்த பாம்பு வெளியில் வரமுடியாமல் திணறியுள்ளது.
Oregon மாகாணத்தை சேர்ந்த Ashley Glawe என்பவர், Ball python என்ற பாம்பினை செல்லப்பிராணியாக வளர்த்து வந்துள்ளார். அதனுடன் நாள்தோறும் விளையாடுவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார்.
இந்நிலையில், இந்த பாம்பு இவரின் தலையில் ஏறி விளையாடிக்கொண்டிருந்தது. அப்போது தலையின் பக்கவாட்டு பகுதியாக கீழிறங்கி, காதில் காதணி அணியும் துவாரப்பகுதிக்குள் நுழைந்துவிட்டது.
பாதி உடம்பு உள்ளே சென்ற நிலையில், அந்த பாம்பு இடையில் மாட்டிக்கொண்டது. இதனை அறிந்த அப்பெண், அதனை மீட்பதற்காக மருத்துவமனை சென்றுள்ளார்.
அங்கு, இவரது காதில் இருந்த பாம்பினை பார்த்த மருத்துவர்கள் அச்சத்தில் உறைந்துள்ளன. இப்படி ஒரு சிகிச்சையை நாங்கள் இதுவரை மேற்கொண்டதில்லை என கூறிய மருத்துவர், அவரை தனியாக ஒரு அறையில் அமர வைத்துள்ளார்.
அதன்பின்னர், String வைத்து அந்த பாம்பானது வெளியில் இழுத்து எடுக்கப்பட்டது. தனது காதில் பாம்பு மாட்டிக்கொண்ட புகைப்படத்தினை இப்பெண் பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்துள்ளார்.
கேகாலை – பிங்தெனிய பகுதியில் தனது தாயை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த மகன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வெலிகபொல – விகிரவிட்ட பகுதியில் வைத்து குறித்த சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் 86 வயதான தாயே உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தாய்க்கும் மகனுக்கும் இடையில் ஏற்பட்ட நிலத்தகராறு காரணமாகவே குறித்த மகன் தனது தாயை கொலை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
மேலும் குறித்த சம்பவத்தில் உயிரிழந்த தாயின் 54 வயதான மகனே கைது செய்யப்பட்டுள்ளார் என கேகாலை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
உலகில் முதல் முறையாக ட்ரகன் ருட் பழத்தை பயன்படுத்தி புற்றுநோய் செல்களை அழிக்கும் மருந்தொன்றை மாணவி ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.
கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரியில் 11 தரத்தில் பயிலும் சமாஷி முனவீர என்ற மாணவியை இந்த மருந்தை கண்டுபிடித்துள்ளார்.
புதிய கண்டுபிடிப்பை உறுதிப்படுத்த தினமும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் இறுதி பரிசோதனை எதிர்வரும் 9 ஆம் திகதி நடத்தப்பட உள்ளது.
மாணவியின் பரிசோதனைகள், கொழும்பு பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிர்வேதியல் மற்றும் உயிரியல் பரிசோதனை தொழிற்நுட்ப நிறுவனத்தின் கலாநிதி சமீர சமரகோன் முழுமையான வழிக்காட்டலின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
நெஞ்சில் ஏற்படும் வலி, உயர் இரத்த அழுத்தம் ஆகியவற்றுக்கு அமெரிக்காவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மருந்தை ட்ரகன் ருட் பழத்தின் தோலுடன் சிறிதளவு கலந்து புற்றுநோய் செல்லுடன் கலந்து இந்த மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மார்பாக புற்றுநோய்க்கு இந்த மருந்தை பயன்படுத்த முடியும் என்பது சிறப்பம்சமாகும்.