சனி பகவான் திருக்கணித பஞ்சாங்கப்படி நேற்றுமுன்தினம் (26.01.2017) வியாழக்கிழமை இரவு 07.31 மணிக்கு விருச்சிக இராசியில் இருந்து தனுசு இராசிக்கு பெயர்ச்சியாகிறார்.
நவகிரகங்களும் அவ்வப்போது ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்கின்றன. இதில் சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி முக்கியமானதாக கவனிக்கப்படுகிறது. இந்த கிரகங்களின் பெயர்ச்சியினால் ஒருவரின் ஜாதகத்தில் சாதக பாதகங்கள் ஏற்படுகின்றன.
நவ கிரகங்களில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவராகவும் ஈஸ்வரன் பட்டம் பெட்டவராகவும் உலக மக்கள் அனைவரும் பயந்து பணிந்து பக்தியுடன் வணங்கப் பெறுபவராகவும் திகழ்பவர் சனீஸ்வர பகவான் ஆவார். இவரது பார்வைக்காகவே பலரும் அஞ்சுகின்றனர்.
ஒவ்வொரு இராசி அன்பர்களுக்கும் சனி பெயர்ச்சி எப்படி இருக்கும்? சாதகமா-பாதகமா? என்பதையும், அத்துடன் பன்னிரெண்டு இராசி அன்பர்களுக்கும் எந்த வகையில் சனிபெயர்ச்சிக்கு பரிகாரம் செய்ய வேண்டும் என்பதையும் விரிவாக பார்க்கலாம்.
மேஷம் – நன்மை
மேஷம் இராசி அன்பர்களே, 26.01.2017 அன்று சனிபெயர்ச்சி. இனி உங்களுக்கு யோகம்தான் அஷ்டம சனியிலிருந்து விடுதலையாகி விட்டீர்கள். இப்பொழுது சனி பகவான் உங்கள் இராசிக்கு 9ம் இடத்தில் அமர்ந்து பிரமாதமாக அதிர்ஷ்டத்தை வாரி வழங்க போகிறார். இதுநாள் வரை பட்ட கஷ்டங்கள் பறந்து ஓடி விடும். உங்கள் ராசி/லக்கினத்திற்கு 10,11-க்குரிய சனி பகவான், 9ல் இருப்பதால் உத்தியோகம், தொழில் சிறப்பாக அமையும். பொருளாதாரம் வளர்ச்சி பெறும். பெற்றோர் மற்றும் கற்றோர் உதவி கிடைக்கும். உத்தியோகம் செய்பவர்களுக்கு மேலதிகாரியின் பாராட்டும், உதவியும் கிடைக்கும். வழக்கில் வெற்றி தரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும்.
இத்தனை நாள் இருந்த மன உளைச்சல், அலைச்சல் தீரும். இனி வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் வரும் என்ற நம்பிக்கை மேலோங்கி நிற்கும். 09ல் சஞ்சரிக்கும் சனி பகவான்11-ம் இடத்தை பார்வை செய்வதால், வெளி நாட்டு தொழில் தொடர்புகள் சிறப்படையும், வெளிநாட்டில் வேலை வாய்ப்பு கிடைக்கும். ஏற்றுமதி தொழில் அமோகமாக இருக்கும். 6-ம் இடத்தை பார்வை செய்வதால், முன்னேற்றம் நன்றாக தரும். ஓரளவு கடன் தொல்லை அகலும். அதேநேரம் புதிய கடன் வாங்கச் செய்யும். ஆகவே கடன் விஷயத்தில் கவனம் தேவை. வாகனம் ஓட்டுவதிலும் கவனம் தேவை. பொதுவாக பாக்கிய சனி பதவி, அந்தஸ்து வாரி வழங்கும்.
பரிகாரம்:
உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள். சனிக்கிழமையில் ஸ்ரீஆஞ்சநேயருக்கு செந்தூரம் சாற்றி வணங்குங்கள். செந்தூரத்தை தினமும் நெற்றியில் இட்டு வாருங்கள். சனிபகவானையும் சனிக்கிழமையில் வணங்குங்கள். ஸ்ரீ சனிஸ்வர பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும்! ரிஷபம் – அஷ்டம சனி
ரிஷபம் இராசி அன்பர்களே, 26.01.2017 அன்று சனிபெயர்ச்சி. உங்களுக்கு இது அஷ்டம சனி. ஐயோ சனி 8ஆம் இடத்திற்கு வந்து விட்டதே? என்று பயப்பட வேண்டாம். ரிஷபம் இராசிக்கு சனி யோககாரகர். அஷ்டம சனியாக வந்தாலும் கெடுக்க மாட்டார் என நம்பலாம். ரிஷபம் இராசிக்கு சனி தர்ம-கர்மாதிபதி. அவர் 2ஆம் இடத்தை பார்வை செய்வதால் குடும்பத்தில் இருந்த பிரச்னைகள், குழப்பங்கள் தீரும். திருமணம் தடைபட்டு இருந்தால் திருமணம் நடக்கும்.
திருமணம் ஆனவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டு. மேலும் யோக காரகர் சனி பூர்வ புண்ணிய ஸ்தானத்தை பார்ப்பதால், தெய்வ தரிசனம் அதிகரிக்கும். புண்ணிய ஸ்தலங்களுக்கு செல்லும் பாக்கியம் அமையும். இழுத்துக்கொண்டு இருந்த வழக்கு உங்களுக்கு வெற்றியை கொடுக்கும். சொத்து-சுகங்கள் தேடி வரும். பல நாட்களாக வாட்டி வந்த நோய், நொடிகள் நீங்கி நலம் பெறுவீர்கள். புதிய திட்டங்கள் வெற்றி தரும். தொழில் ஸ்தானத்திற்கு 8ஆம் இடத்தை சனி நோக்குவதால், புதிய தொழில் துவங்குவீர்கள். தொழிலில் நண்பர்களையும் சேர்த்துக் கொள்வதாக இருந்தால் உஷாராக இருங்கள். காரணம், 7ஆம் இடத்திற்கு இரண்டாம் வீட்டில் சனி பகவான் உள்ளார். ஆனாலும் பொதுவாக இந்த சனி பெயர்ச்சி நீங்கள் மண்ணை தொட்டாலும் பொன்னாக்கும்.
பரிகாரம்
சனிக்கிழமையில் சனிபகவான் சந்நிதியில் எள் தீபம் ஏற்றுங்கள். சனிக்கிழமையில் நீல நிறமோ, அல்லது கருப்பு நிறத்திலோ ஆடை அணியுங்கள். காக்கைக்கு எள் கலந்த சாதத்தை சனி ஓரையில் வையுங்கள். சனிபகவானையும் சனிக்கிழமையில் வணங்கி வாருங்கள். சனிஸ்வர பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும்.
மிதுனம் – சப்தம சனி
மிதுனம் இராசி அன்பர்களே, 26.01.2017 அன்று சனிபெயர்ச்சி. இதுநாள்வரையில் 6ம் இடத்தில் இருந்த சனி பகவான், இப்போது உங்கள் ராசி/லக்கினத்திற்கு 7ம் இடத்திற்கு வந்திருக்கிறார். உங்கள் இராசிக்கு 8,9-க்குரிய சனி, 7ல் வந்திருப்பது நன்மையே தரும். பொதுவாக பாக்கியாதிபதி, சப்தமஸ்தானத்திற்கு வந்தால் எப்பேர்பட்ட பிரச்னையாக இருந்தாலும் தீர்ந்து விடும். உங்கள் திட்டங்கள் நிறைவேறும். கல்வியால் நல்ல யோகம் உண்டு. உயர்கல்வி அமையும். அடமானத்தில் இருந்த பொருட்கள் கடன் தீர்ந்து கைக்கு வந்து விடும்.
புதிய வாகனம் வாங்கக்கூடிய சாதகமான நேரம் இது. ஆனாலும், ஜென்ம இராசியை சனி நோக்குவதால் அலைச்சல் அதிகரிக்கும். காரணம், தொழில், வேலை என்று புதிதாக அமைத்து தந்துவிடுவார் சனிபகவான். அதனால் அப்படிதான் இருக்கும். அதோடு சற்று டென்ஷனும் அதிகரிக்கும். ஜாமீன் கையெழுத்து மட்டும் போட வேண்டாம். பழைய வீட்டை இடித்து புது வீடு கட்டும் திட்டம் நிறைவேறும். நீண்ட நாட்களாக குடும்பத்தினர் கேட்டு வந்ததை வாங்கி தரும் யோகம் வந்து விட்டதால் அதை பூர்த்தி செய்வீர்கள். திருமணம் ஆனவர்கள் மனைவியால் நன்மை அடைவார்கள். பொதுவாக, சப்தம சனி சாதகம் செய்யும். சாகசமும் செய்ய வைக்கும். சோதனைகள் நீங்கி சாதனை படைப்பீர்கள்.
பரிகாரம்:
சோமவாரத்தில் (திங்கள்கிழமை) சோமேஷ்வரருக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்யுங்கள். ஏழை முதியவர்களுக்கு அன்னதானம் செய்யுங்கள். சனிபகவானையும் சனிக்கிழமையில் வணங்கி வாருங்கள். சனிஸ்வர பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும்! கடகம் – இராஜயோகம்
கடகம் இராசி அன்பர்களே, 26.01.2017 அன்று சனிபெயர்ச்சி. உங்கள் இராசி/லக்கினத்திற்கு 6ஆம் இடத்திற்கு சனி பகவான் வந்துவிட்டார். நினைத்ததை நடத்தி வைப்பார் சனி பகவான். நீங்கள் போடும் திட்டங்கள் அத்தனையும் வெற்றிதான். 6ஆம் இடத்தில் அமர்ந்த சனி 8ஆம் இடத்தையும், 12ஆம் இடத்தையும் பார்வை செய்வதால் விரோதிகள், விரோதங்கள் பஞ்சு போல் பறந்து விடும்.
இதுநாள்வரை இருந்த வீண் விரயங்கள் இனி இருக்காது. பணவரவு தாராளமாக இருக்கும். 3-ம் இடத்தை பார்வை செய்வதால் தைரியலஷ்மியே உங்கள் வசம்தான். புதிய தொழில் பெரிய அளவில் அமையும். வெளிநாட்டு பயணமும், வெளிநாட்டவர்களால் லாபமும் உண்டு. தூங்கி கொண்டு இருந்தவர்களை இனி 6-ம் இடத்து சனி பகவான் தட்டி எழுப்புவார். புதிய நண்பர்களால் மிகுந்த ஆதாயம் உண்டு. வீட்டில் சுபநிகழ்ச்சிகள், திருமணங்கள் நடைபெறும். சுபநிகழ்ச்சிக்காக கடன் வாங்க வைக்கும். ஆகவே திட்டமிட்டு செலவு செய்யுங்கள். வேலைக்கு அலைந்துக்கொண்டு இருந்தவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு அமையும். பொதுவாக, 7,8-க்குரிய சனி 6-ம் இடத்தில் அமர்ந்ததால், கெட்டவன் கெட்டில் கிட்டிடும் இராஜயோகம்என்பதற்கேற்ப இனி உங்களுக்கு இராஜயோக வாழ்க்கைதான்.
பரிகாரம்
ஸ்ரீரங்கநாதரை வணங்குங்கள். ஸ்ரீஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அணிவித்து வணங்குங்கள். சனிக்கிழமையில் புளியோதரை சாதத்தை 8 பேருக்கு தானம் செய்யுங்கள். சனிபகவானை சனிக்கிழமையில் வணங்கி வாருங்கள். சனிஸ்வர பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும்.
சிம்மம் – பிரச்சினைகள் தீரும்
26.01.2017 அன்று சனிபெயர்ச்சி. அர்தாஷ்டம சனி விலகி விட்டது. அப்பாடா விட்டது தொல்லை என்று நிமிர்ந்து உட்காருங்கள். இப்பொழுது உங்கள் ராசி/லக்கினத்திற்கு பஞ்சம பஞ்சம திரிகோண ஸ்தானமான 5ஆம் இடத்திற்கு சனி பகவான் வந்து விட்டார். கேந்திராதிபதி திரிகோணத்தில் அமர்ந்து விட்டார். வாட்டி வதைத்த பிரச்னைகள் தீர்ந்து விடும். வதங்கிய பயிறும் வளர ஆரம்பிக்கும். இனி எப்படி போவது? எல்லாம் முட்டு சந்தாக இருக்கிறதே? என்ற கவலை இல்லை. சிக்கலான பாதை சீராகி விட்டது. உங்களுக்கு உதவி செய்ய நல்ல மனம் படைத்தவர்கள் அவர்களாக முன்வந்து உதவி செய்வார்கள்.
உங்கள் திட்டம் எல்லாமே கச்சிதமாக முடியும். குடும்பத்தில் சச்சரவுகள், குழப்பம் இருந்தாலும் தீர்ந்து விடும். கையில் பஞ்சை எடுத்தாலே அது நூலாக மாறி விடும். போன சனிப்பெயர்ச்சியில் பட்ட கஷ்டங்கள் கொஞ்சமா நஞ்சமா? இனி அதுபோல் கஷ்டங்கள் இந்த சனி பெயர்ச்சியில் வராது. என்னென்ன செய்ய வேண்டும் என்று கனவு கண்டு நிறைவேற்ற நினைத்தீர்களோ அத்தனையும் அருமையாக செய்து முடிப்பீர்கள். பஞ்சம திரிகோண ஸ்தான சனி, வேலை, தொழில், திருமணம், புத்திர பாக்கியம் போன்ற எல்லாவிதமான சுப மங்கல விஷேசங்கள் அத்தனையும் தரும். வாழ்க்கையே பாதகம் என்று வெறுத்து இருந்த உங்களுக்கு இனி வாழ்க்கையே சாதகம்தான்.
பரிகாரம்
சனிக்கிழமையில் நீல நிற வஸ்திரத்தை தானம் செய்யுங்கள். வியாழக்கிழமையில் விநாயகருக்கு அருகம்புல் வைத்து வணங்குங்கள். உங்கள் ஜென்ம நட்சத்திரம் வரும் நாட்களில் தயிர் சாதத்தை 9 பேருக்கு தானம் செய்யுங்கள். சனி பகவானையும் சனிக்கிழமையில் வணங்கி வாருங்கள். சனிஸ்வர பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும்!
கன்னி – அர்த்தாஷ்டம சனி
கன்னி இராசி அன்பர்களே, 26.01.2017 அன்று சனிபெயர்ச்சி. உங்களுக்கு சனி பகவான் உங்கள் இராசி/லக்கினத்திற்க்கு 4ம் இடத்தில் அமர்ந்து, அர்த்தாஷ்டம சனியாகிவிட்டார் என்று சிலர் பயமுறுத்துவார்கள் ஆனாலும் நீங்கள் அதற்காக பயப்பட வேண்டாம்.
உங்கள் ராசி/லக்கினத்திற்கு பஞ்சமாதிபதி திரிகோணாதிபதி கேந்திரமான 4ஆம் இடத்தில் அமர்ந்துவிட்டதால் கெடுதல் செய்ய மாட்டார். உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தையும், 10ஆம் இடத்தையும், உங்கள் ஜென்ம ராசியையும் சனி பகவான் பார்வை செய்வதால், ரோகம், நோய்நொடிகள் கடன் பிரச்சினை அத்தனையும் நிவர்த்தி ஆகும். இதுவரை பணம் கடன் வாங்கி வட்டி கட்டிக்கொண்டே இருந்த நீங்கள், இனி அசலையும் கொடுத்து கடனை அடைத்து விடுவீர்கள். பலநாட்களாக வேலைக்கு அலைந்தவர்கள் புதிய வேலையில் அமர்ந்து விடுவீர்கள்.
நலிவடைந்த தொழிலை புதுப்பிப்பீர்கள். தொழில்துறையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உட்கார நேரம் இல்லை என்று சொல்லும் அளவுக்கு வேலைகள் வந்த வண்ணம் இருக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் அத்தனையும் வாங்கி கொடுத்து அவர்களை திருப்திப்படுத்துவீர்கள். வழக்கில் இருந்த சொத்து கைக்கு வந்துவிடும். கண்ணில் காசையே பார்க்க முடியவில்லை என்று ஏங்கியவர்கள், கை நிறைய காசு என்று சந்தோஷப்படுவீர்கள். இதை சனி பகவான் செய்து காட்டபோகிறார்.
உங்கள் இராசிக்கு சனிப்பெயர்ச்சி பரிகாரம்
சனிக்கிழமையில் எள் சாதத்தை காக்கைக்கு வைத்து வாருங்கள். சனிக்கிழமையில் நீல நிறத்திலோ அல்லது கருப்பு நீலத்திலோ ஆடை அணியுங்கள். பெருமாளுக்கு நெய் தீபம் ஏற்றுங்கள். சனிபகவானையும் சனிக்கிழமையில் வணங்கி வாருங்கள். சனிஸ்வர பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும்.
துலாம் – யோகம்
துலாம் இராசி அன்பர்களே, 26.01.2017 அன்று சனிபெயர்ச்சி. இத்தனை நாள் பாத சனியில் இருந்து படாதபாடுபட்ட நீங்கள் இனி நிம்மதியாக இருக்கலாம். சனிபகவான் உங்கள் ராசி/லக்கினத்திற்கு 3ம் இடத்திற்கு வந்துவிட்டார். பஞ்சமஸ்தானம், பாக்கியஸ்தானம், விரயஸ்தானத்தை பார்வை செய்வதால், எதிர்பார்த்த காரியங்கள் சிறிது செலவுக்குப் பின் கைக்கூடும். வாடகை வீட்டில் வசதியில்லாமல் இருந்த நீங்கள், இனி சொந்த வீடுகட்டி புது வீட்டில் குடிபோக போகிறீர்கள். சிலருக்கு பதவி உயர்வு வர வாய்ப்புள்ளது. குழந்தை பேறு உண்டாக, சனிபகவான் அருள் செய்வார்.
தாய்மாமன் வழியில் உதவிகள் கிடைக்கும். வங்கியில் கடன் உதவிகளும் தாராளமாக கிடைக்கும். நிதானமான பேச்சே எல்லாவற்றிலும் வெற்றி தரும். உங்கள் பெற்றோருக்கு இருந்த மனக்குறை நீங்கும். கணவன் – மனைவிக்குள் ஒற்றுமை நிலவும் அன்னியோன்னியம் அதிகரிக்கும். 12-ம் இடத்தை சனி பார்வை செய்வதால், தேவை இல்லாமல் செலவுகள் வரத்தான் செய்யும் செலவுகளில் கவனம் தேவை. வெளிநாட்டில் வேலை செய்பவர்களுக்கு சற்று சிரமமாக இருக்கும். சிரமம் இல்லாமல் சிகரம் ஏற முடியுமா? பஞ்சமஸ்தானத்தை அதாவது சனி, தன் சொந்த வீட்டை பார்வை செய்வதால், திக்கு தெரியாத காட்டில் இருந்து ஊருக்குள் வந்துவிட்டீர்கள். இனி யோக வாழ்க்கைதான்.
பரிகாரம்
ஆனைமுகனை வணங்கி, உங்கள் ஜென்ம நட்சத்திரத்தில் சூரத்தேங்காயை உடையுங்கள். விநாயகப்பெருமானுக்கு வஸ்திரம் அணிவித்து வணங்குங்கள். சனிபகவானையும் சனிக்கிழமையில் வணங்கி வாருங்கள். சனிஸ்வர பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும்! விருச்சிகம் – பணவரவு
விருச்சிகம் இராசி அன்பர்களே, 26.01.2017 அன்று சனிபெயர்ச்சி. இதுநாள்வரை உங்கள் ஜென்ம ராசி/லக்கினத்தில் இருந்த சனி பகவான் உங்களை விட்டு விலகி விட்டார். அதாவது, தலையில் சுமந்து வந்த பாரத்தை இறக்கி வைத்து விட்டீர்கள். சனி 2ஆம் இடத்திற்கு வந்திருப்பதால் கைக்கு பணம் கிடைத்து பையை நிரம்பும். சுகஸ்தானத்தை சனிபகவான் பார்வை செய்வதால், தீராத வியாதியும் தீர்ந்து விடும். இனி டாக்டர் வீட்டுக்கு அலையவேண்டியதில்லை. தடைபட்ட கல்வி தொடர வாய்ப்பு வரும். பழைய வீட்டை புதுப்பிக்கும் நேரம் வந்து விட்டது. புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. சிலருக்கு இடப்பெயர்ச்சி ஏற்படும்.
உத்தியோகத்தில் மேலதிகாரியிடம் கவனமாக இருக்க வேண்டும். புனித புண்ணிய ஸ்தலங்களுக்கு போகும் பாக்கியம் கிடைக்கும். 9ஆம் இடத்திற்கு 12ஆம் இடமான 8ம் இடத்திற்கு சனி பார்வைபடுவதால், பெற்றோர் உடல்நலனில் சிறு, சிறு உபாதைகள் உண்டாகும். பிரமோஷன் வரவில்லை என்று ஏங்கியவர்களுக்கு பதவி உயர்வு நிச்சயம் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த மனக்கசப்பு நீங்கி, மகிழ்ச்சி அதிகரிக்கும். பாத சனி கெடுதல் செய்யும் என்பார்கள் சனி பகவான், சுக்கிரன் சாரத்தில் சஞ்சரிக்கும் நிலை வருவதால் கெடுக்காது – நல்லவற்றை வாரி கொடுக்கும்.
பரிகாரம்
சனிக்கிழமையில் காக்கைக்கு எள் கலந்த சாதத்தை வையுங்கள். சனிக்கிழமையில் வரும் பிரதோஷத்தில் சிவாலயத்திற்கு சென்று இறைவனை வணங்குங்கள். சனிபகவானுக்கு உகந்த காயத்திரி மந்திரத்தை 8 முறை உச்சரித்து வாருங்கள். சனிபகவானை சனிக்கிழமையில் வணங்கியும் வாருங்கள். சனிஸ்வர பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும்.
தனுசு – ஜென்ம சனி
தனுசு இராசி அன்பர்களே, 26.01.2017 அன்று சனிபெயர்ச்சி. சனிபகவான் உங்கள் ஜென்மத்தில் வந்தமர்ந்து விட்டார். ஏற்கனவே ஏழரை சனி, தீராத குறைக்கு ஜென்ம சனியுமா? என்று பயப்பட வேண்டாம். சுக்கிரன் சாரத்தில் வரவிருப்பதால், கெடுதல் செய்ய மாட்டார் என நம்பலாம். கீர்த்திஸ்தானம், சப்தமஸ்தானம், ஜீவனஸ்தானத்தை சனிபார்வை செய்வதால், சகோதர-சகோதரிகளுக்கு யோக காலம்தான். திருமணம் தடைப்பட்டு இருந்திருந்தால் இனி கவலையில்லை. திருமணம் பிரமாதமாக நடந்து விடும். போட்டி-பந்தயங்களில் வெற்றி கொடுக்கும்.
ஷேர் மார்கெட்டில் சிறிய லாபம் கிடைக்கும். திட்டங்கள் வெற்றியை கொடுக்கும். தொழில் ஸ்தானத்திற்கு 6-ம் இடத்தை பார்வை செய்வதால் பெரிய முதலீடு செய்யும்போது கவனமாக இருங்கள். அவசரம் பரபரப்பு வேண்டாம். பலநாட்களாக வாகனத்தை மாற்ற வேண்டும் புது வாகனம் வாங்க வேண்டும் என்கிற விருப்பம் நிறைவேறும். பழைய கடன் வசூலாகும். திருமணம் ஆனவர்கள் மனைவியின் உடல்நலனில் சற்று கவனம் தேவை. வாழ்க்கைத் துணைவருக்கு உடல் ஆரோக்கிய ரீதியாக சிறுசிறு பிரச்னைகள் வரலாம். அரசாங்க ஆதரவு கிடைக்கும். கூட்டு தொழில் நன்றாக அமையும். பொதுவாக ஜென்ம சனியாக இருந்தாலும் அதிர்ஷ்ட காற்று பலமாக வீசும்.
பரிகாரம்
அஞ்சனை மைந்தனை வணங்குங்கள். சனிக்கிழமையில் ஸ்ரீஅனுமனுக்கு வெண்ணை படைத்து வணங்குங்கள். உங்கள் ஜென்ம நட்சத்திரம் வரும் நாட்களில் விநாயகப் பெருமானுக்கு பால் அபிஷேகம் செய்யுங்கள். சனிஸ்வர பகவானுக்கு எள் தீபம் ஏற்றி, சனிபகவானையும் சனிக்கிழமையில் வணங்கி வாருங்கள்.
சனிஸ்வர பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும்! மகரம் – ஏழரை சனி
மகர இராசி அன்பர்களே, 26.01.2017 அன்று சனிபெயர்ச்சி. வந்துவிட்டது ஏழரை சனி என்று பயந்துவிடாதீர்கள். பயமுறுத்த பலர் இருப்பார்கள். உங்களுக்கு வந்தது ஏழரைதான் ஆனால் சுக்கிரன் சாரத்தில் வரவிருப்பதால் நன்மைகளை அள்ளி கொடுக்காவிட்டாலும் கிள்ளியாவது சனிபகவான் கொடுப்பான். ஆனால் கெடுக்க மாட்டார்.
ருண-ரோகஸ்தானம், தனஸ்தானம், பாக்கியஸ்தானத்தை சனி பார்வை செய்வதால் கடன் சுமை நீங்கும். இதுநாள்வரை ஜவ்வு போல் இழுத்துக் கொண்டு இருந்த வழக்கு ஒரு முடிவுக்கு வரும் வழக்கில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். கடன் வாங்கியாவது சொந்த வீடு வாங்கி விடுவீர்கள். உங்கள் வாக்கு மேன்மை பெறும்.
உடல்நலனில் மட்டும் கண்டிப்பாக கவனம் தேவை. தலை சம்மந்தப்பட்ட, வயிற்று சம்மந்தப்பட்ட பிரச்னைகள், வாயு தொந்தரவுகள் சில நேரங்களில் ஏற்படலாம். கவனமாக இருக்கவும். பயணங்கள் அதிகரிக்கும். கல்வியில் நல்ல முன்னேற்றம் தரும். மனைவியால் லாபம் உண்டு. மனைவியின் ஆலோசனை சரியாக இருக்கும். வாகனம் ஓட்டுவதில் கவனமும் பொறுமையும் தேவை. 12ம் இடத்திற்கு சனிபகவான் வந்திருந்தாலும் கவலையில்லை. இந்த ஏழரை உங்களுக்கு வளமையும், பெருமையும் தரும்.
பரிகாரம்
சனிக்கிழமையில் ஸ்ரீபார்த்தசாரதி பெருமாளை வணங்குங்கள். வீட்டில் ஸ்ரீபார்த்தசாரதி படம் வைத்து அந்த படத்தின் முன் நெய் தீபம் ஏற்றி கல்கண்டு வைத்து வணங்குங்கள். சாதத்தில் எள் கலந்து காக்கைக்கு வையுங்கள். சனிபகவானையும் சனிக்கிழமையில் வணங்கி வாருங்கள். சனிஸ்வர பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும்.
கும்பம் – லாப சனி
கும்பம் இராசி அன்பர்களே, 26.01.2017 அன்று சனிபெயர்ச்சி. இந்த சனி பெயர்ச்சி உங்களுக்கு லாப சனியாக வந்துவிட்டது. அதாவது, சனிபகவான் உங்கள் இராசி/லக்கினத்திற்க்கு 11ம் இடத்திற்கு வந்துவிட்டார். இனியெல்லாம் யோகமே. தொட்டது துலங்கும். ஜென்ம இராசியையும், பஞ்சமதிரிகோணத்தையும், அஷ்டமஸ்தானத்தையும் பார்வை செய்வதால், ஆண்டி போல் அலைந்தவர்கள் அரசனை போல் வாழப்போகிறீர்கள்.
உங்கள் ராசி/லக்கினத்திற்கு ஜென்மாதிபதி ஜென்மத்தை பார்வை செய்வதால் கஷ்டங்கள், நஷ்டங்கள் அத்தனையும் வர்தா புயல் போல் கடந்து விடும். பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைக்கூடும். உத்தியோகத்தில் சிரமம், பளு குறையும் எல்லா தொழில்களிலும் வெற்றி கிடைக்கும். சிலருக்கு தொழில் துவங்கவும் வசதி ஏற்படும்.
கடன் பிரச்னை தீரும். பொதுவாக, மனக்குழப்பங்கள் அத்தனையும் தீர்ந்து விடும். தூரத்து உறவினரின் உதவி கிடைக்கும். தெய்வ பணிகள் அதிகரிக்கும். பேச்சில் மட்டும் நிதானம், பொறுமை தேவை. அவசரப்பட்டு யாரிடமும் வார்த்தையை விட வேண்டாம். சகோதர உறவில் மகிழ்ச்சி ஏற்படும். வில்லங்கமான சொத்துக்கள் விஷயத்தில் சுமுகமாக பேசி முடிக்கும் சூழ்நிலை உருவாகும். கணக்கு-வழக்கில் கவனம் தேவை. லாப சனி யோக சனிதான்.
பரிகாரம்
சர்வலோக நாயகனை வணங்குங்கள். சோமவாரத்தில் (திங்கள்கிழமை) வில்வ இலை சமர்ப்பியுங்கள். உங்களால் முடிந்த ஏழை பிள்ளைகளுக்கு வஸ்திர தானம் செய்யுங்கள். சனிபகவானை சனிக்கிழமையில் வணங்கி வாருங்கள். சனிஸ்வர பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும்.
மீனம் – பிரமாதம்
மீனம் இராசி அன்பர்களே, 26.01.2017 அன்று சனிபெயர்ச்சி. சனி பகவான் உங்கள் இராசி/லக்கினத்திற்க்கு 10ஆம் இடத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். உங்களுக்கு சனி லாபாதிபதி மற்றும் விரயாதிபதி. லாபாதிபதி 10ல் இருப்பது வெகு விஷேசம். விரயஸ்தானத்தையும், சுகஸ்தானத்தையும், சப்தமஸ்தானத்தையும் பார்வை செய்வதால், இதுநாள்வரை பீடித்த நோய் உங்களை விட்டு விலகி விடும். மனகுழப்பம் நீங்கி மகிழ்ச்சி பெருகும். வாகனம், வீடு அமையும். எப்பொழுது சொந்த வீடு அமையும்?என்று ஏங்கியவர்களுக்கு சொந்த வீடு வாங்கி கிரகபிரவேசம் செய்யும் யோகம் வந்துவிட்டது.
குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் பிரமாதமாக நடக்கும். திருமணமான உங்கள் பிள்ளைகளுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். போகாத கோயில் இல்லை கும்பிடாத தெய்வம் இல்லை என்று திருமண வரனுக்காக சுற்றி வந்தவர்களுக்கு குடும்ப வாழ்க்கை அமையும். பொன், பொருள் சேரும். ஆனால், சனி பகவான் விரயஸ்தானத்தை பார்ப்பதால் வீண் விவகாரம் செய்ய வேண்டாம். மனதில்பட்டதை பேசுவதை தவிர்க்கவும். 10ம் இட சனி பிரமாதமான வாழ்க்கை கொடுக்க போகிறான். கையில் இருக்கும் வைரத்தை வைத்துக் கொண்டு கண்ணாடி கல்லை தேட வேண்டாம். அதாவது, தேவையற்ற சிந்தனைகளால் மனதை சிதறடிக்க வேண்டாம். சுக்கிரன் சாரத்தில் வரவிருக்கும் சனிபகவான், உங்களை பாக்கியசாலி, யோகசாலியாக்கும்.
பரிகாரம்
சனிக்கிழமையில் ஸ்ரீஅனுமனை வணங்குங்கள். ஸ்ரீஆஞ்சநேயர் பாடல்களை பாடுங்கள். ஸ்ரீஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அணிவித்து வணங்குங்கள். சனிக்கிழமையில் எள் சாதத்தை காக்கைக்கு வையுங்கள். விநாயகப்பெருமானுக்கு தீபம் ஏற்றி வாருங்கள். சனிபகவானையும் சனிக்கிழமையில் வணங்கி வாருங்கள். சனிஸ்வர பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும்.
காதலர்கள் என்றாலே அவர்களுக்குள் இருக்கும் செல்ல சண்டைகள் போல, செல்ல கடிகளும் இருக்கத்தான் செய்கின்றன. இருவருக்குள்ளும் சண்டை ஏற்பட்டு விட்டால் கோபத்தில் செல்லமாக கடித்துக்கொள்வார்கள். இதற்கு “காதல் கடி” என்று பெயர்.
ஆனால், இந்த காதல் கடியால் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். இது நம்பமுடியாத விடயம் தான் என்றாலும், இதுபோன்ற சம்பவங்கள் நடக்கத்தான் செய்கின்றன.
நியூசிலாந்தில் காதலன் ஒருவன், தனது காதலியுடன் சந்தோஷமாக விளையாடிக்கொண்டிருந்துள்ளார். அப்போது ஆசையாக தனது காதலியின் கழுத்தில் செல்லமாக கடித்துள்ளார்.
இதில், காதலியின் கழுத்தில் இரத்தம் உறைந்தததால் இரத்தம் ஓட்டம் பாதிக்கப்பட்டு தமனியானது சேதமடைந்துள்ளது. இதன் காரணத்தால் அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
உங்கள் தோலினை அதிகமாக அழுத்தினால் இரத்தம் உறைய வாய்ப்பிருக்கிறது. எனவே தான் இப்பெண்மணி உயிரிழந்துள்ளார்.
மனிதனையும், பன்றியையும் இணைத்து புதுமையான உயிரினம் ஒன்றை விஞ்ஞானிகள் வெற்றிகரமாக உருவாக்கியுள்ளனர்.
மனிதனின் அணுக்களை பன்றியின் கருமுட்டைக்குள் செலுத்திய விஞ்ஞானிகள், மீண்டும் கருமுட்டையை பன்றியின் உடலுக்குள் செலுத்தினர்.
இந்த உயிரினத்துக்கு Chimera என்று பெயரிட்டுள்ள விஞ்ஞானிகள், எதிர்காலத்தில் மனிதனுக்கு தேவையான உடல் உறுப்புகளை பிற உயிரினங்களிடம் இருந்து வளர்க்க முடியும் என்பதை கண்டறியவே குறித்த சோதனையை மேற்கொண்டுள்ளனர்.
இந்த முயற்சி மட்டும் வெற்றி பெற்றால், எதிர்கால தொழில்நுட்பத்தில் மாபெரும் புரட்சி ஏற்படும். எனவே இந்த ஆய்வு வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அவுஸ்திரேலியாவில் உள்ள கிரிக்கெட் கிளப் அணியின் பந்து வீச்சாளர் ஆலெட் கேரி ஒரே ஓவரில் வரிசையாக 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்தியுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் கிளப் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் கோல்டன் பொயிண்ட் கிரிக்கெட் கிளப்- ஈஸ்ட் பலாரட் அணிகள் மோதின.
இதில் ஈஸ்ட் பலாரட் அணி துடுப்பெடுத்து ஆடிக் கொண்டிருந்தது. அப்போது கோல்டன் பொயிண்ட் கிரிக்கெட் கிளப் அணியின் 29 வயதான ஆலெட் கோரி 9வது ஓவரை வீசினார்.
இந்த ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் எதிரணி வீரர்கள் முதல் ஸ்லிப்பில் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்த வீரர் எல்.பி.டபிள்யூ. மூலம் வெளியேறினார்.
அடுத்த மூன்று பேரையும் க்ளீன் போல்ட் மூலம் வீழ்த்தினார். இதனால் ஈஸ்ட் பலாரட் அணி 40 ஓட்டங்களில் சுருண்டது. ஆலெட் கேரி ஒரே ஓவரில் வரிசையாக 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தி கிரிக்கெட் வரலாற்றில் சாதனைப் படைத்துள்ளார்.
வங்கதேசத்தில் 28 பெண்களை திருமணம் செய்த கல்யான மன்னனை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
வங்கதேசத்தின் பர்குணா பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 2011ம் ஆண்டு ஒரு நபரை திருமணம் செய்துள்ளார். அதைத் தொடர்ந்து இவர்களுக்கு குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அக்குழந்தையை நன்றாக வளர்த்து வந்துள்ளனர்.
இந்நிலையில் அப்பெண்ணுக்கு தன் கணவர் பல பெண்களை திருமணம் செய்துள்ளார் என்ற விடயம் தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெண், தன் கணவர் திருமணம் செய்த பெண்களை தேடி கண்பிடிக்க ஆரம்பித்தார்.
இதன் பயனாக 17 பேரின் முகவரிகள் மட்டும் கிடைத்துள்ளன. அதை வைத்துக் கொண்டு அவர்களை தேடியுள்ளார். அப்போது தனது கணவரின் 2 வது மனைவிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர் என்றும், 3 வது மனைவிக்கு ஒரு மகன் உள்ளான் என்றும், 7 வது மனைவிக்கு ஒரு மகனும், 24 வது மனைவிக்கு ஒரு மகள் உள்ளனர் என்பதை அறிந்துள்ளார்.
இவர்களின் தான் 25 வது பெண் என்பதை அறிந்து கொண்ட அவர், இதனால் ஆத்திரமடைந்த அவர் அருகில் இருந்த காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால் அதற்கு உறுதியான ஆதாரம் இல்லாமல் தவித்துள்ளனர்.
இதனால் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 29 ஆம் திகதி குல்னா தலைமை ஜூடிசியல் மாஸ்திரேட்டிடம் புகார் அளித்தார்.
அதைத் தொடர்ந்து பொலிசார் நடத்திய தீவிர தேடுதலின் போது, அவர் 27 வது மனைவியின் வீட்டில் இருந்து வந்துள்ளார். அதன் பின்னர் பொலிசார அவரை கைது செய்து நீதிமன்றத்தின் முன் நிறுத்தியுள்ளனர். நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும் பொலிசாரின் முதற்கட்ட விசாரணையில் தான் இரண்டு திருமணங்கள் மட்டுமே செய்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
மூதாட்டியின் உடலை தகனம் செய்ய இடம் கிடைக்காமலும் எவரும் உதவி செய்யாத காரணத்தினாலும் உடலை தள்ளுவண்டியில் வைத்து கொண்டு இரவு முழுவதும் பேரன் அலைந்த சம்பவம் திருச்சி மாவட்டத்தில் நடந்துள்ளது.
திருச்சி, லால்குடியை அடுத்த நெருஞ்சக்குடிக்கு அருகில் உள்ள பள்ளிவயல் சுடுகாட்டு பகுதியில் ஒருவர், கரும்பு சருகளை போட்டு தீ மூட்டிக்கொண்டிருந்தார்.
அருகில் தள்ளுவண்டியும் இருந்துள்ளது. இதனால், சந்தேகம் கொண்ட அப்பகுதி மக்கள் அருகில் சென்று பார்த்த போது உடலை சருகளை கொண்டு தீயிட்டு கொளுத்திக்கொண்டிருந்தார்.
அதிர்ச்சியடைந்த மக்கள் சம்பவம் பற்றி போலிசாருக்கு அறிவித்தனர். அங்கு சென்ற பொலிசார் நபரை போலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அந்த நபர் நாகை மாவட்டம் வேனாங்கண்ணியை சேர்ந்த மாரியப்பன் என்பவர் என தெரியவந்துள்ளது.
தனது பாட்டி திடீரென இறந்து விட்டதாகவும் உடலை அடக்கம் செய்ய இடம் கொடுக்காததாலும் எவரும் உதவாத காரணத்தினாலும் கரும்பு சருகளை போட்டு எரித்ததாக நபர் கூறியுள்ளார்.
சுனாமியில் பெற்றோரை இழந்த இந்த வாலிபர், ஊர் ஊராக சென்று பழைய பத்திரிகைகள், பாட்டில்களை சேகரித்து விற்கும் தொழில் செய்து வருகிறார்.
பெற்றோர் இறந்த பின்னர், தாய் வழி பாட்டியான மேரியம்மாளுடன் வசித்து வரும் இந்த வாலிபர் அண்மை காலமாக லால்குடி அருகில் உள்ள நெடுஞ்சலக்குடி ஊராட்சி பகுதியில் வசித்து வந்துள்ளார்.
தனது பாட்டி நேற்று இறந்து விட்டதாகவும் அவரை அடக்கம் செய்ய கிருஸ்தவ தேவாலயமும் அக்கம் இருந்தவர்களும் உதவ மறுத்து விட்டால், தானே இரவு முழுவதும் இடம் தேடி அலைந்து, ஓரிடத்தில் பாட்டியின் உடலை கரும்பு சருகள், பனை மட்டைகளை கொண்டும் எரித்ததாக மாரியப்பன் கூறியுள்ளார்.
இதனையடுத்து பாதி எரிந்த நிலையில் காணப்பட்ட உடலை பொலிசார் முழுமையாக எரித்துள்ளனர்.
பாட்டியின் உடலை அடக்கம் செய்யவும், தகனம் செய்யவும் இடம் கிடைக்காமல் தள்ளுவண்டியில் உடலை வைத்துக்கொண்டு பேரன் அலைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலத்தில் மனைவியின் உடலை எடுத்துச் செல்ல மருத்துவ ஊர்தி வழங்கப்படாத காரணத்தினால், உடலை 12 கிலோ மீற்றர் தூரம் சுமந்து சென்ற துயரம் மறையாத நிலையில், தமிழகத்தில் நடந்த இந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற முடியாது என விலங்குகள் நல வாரிய வழக்கறிஞர் அஞ்சலி சர்மா தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது . பின் இந்த அவசர சட்டத்தை நிரந்தர சட்டமாக சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து விலங்குகள் நல வாரியத்தின் வழக்கறிஞரான அஞ்சலி சர்மா உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில் தமிழக அரசு நிறைவேற்றிய சட்டம், மத்திய அரசின் மிருகவதை தடுப்பு சட்டத்துக்கு எதிரானது அதனால் அதை ரத்து செய்ய வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளார்,
அஞ்சலி தாக்கல் செய்த மனு அனுமதி பெறாமல் தாக்கல் செய்தது என தெரியவந்துள்ளது. இதனையடுத்து குறித்த மனுவை உடனடியாக வாபஸ் பெறக்கோரி விலங்குகள் நல வாரிய செயலாளர் ரவிக்குமார் அஞ்சலிக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அஞ்சலி சர்மா, தமிழக அரசின் அவசரச்சட்டத்தை எதிர்த்து நான் மனு தாக்கல் செய்யவில்லை, 2016ல் தாக்கல் செய்த மனு மீதான இடைக்கால மனுதான் அது.
இதை வாரியத்தின் அனுமதியில்லாமல் தாக்கல் செய்யவில்லை, வாரிய செயலாளர் கடிதம் சட்டப்பூர்வமாக என்னை தடுக்காது. இருப்பினும் அந்த மனுவை வாபஸ் பெற முடியாது என அஞ்சலி சர்மா, தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த ராணுவ வீரர்களில் இருவர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குரேஸ் பகுதியில் ராணுவத்தினர் பாதுகாப்பு முகாம் ஒன்றில் தங்கியுள்ளனர். அப்போது அதிகாலை நேரத்தில் பனிச்சரிவு ஏற்பட்டதில் முகாமில் தங்கியிருந்த அனைவரும் புதையுண்டனர்.
விபத்தில் 14 ராணுவவீரர்கள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், தேடுதல் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
உயிரிழந்த 14 பேரில் தமிழகத்தின் தஞ்சையை சேர்ந்த இளவரசனும் ஒருவர் என்பது தெரியவந்துள்ளது. இதனால் இளவரசனின் உறவினர்கள் மற்றும் கண்ணந்தங்குடி கிராமத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
கடந்த 6 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி வந்த இளவரசனுக்கு திருமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தினர் பெண்பார்த்து வந்த நிலையில், அவரின் உயிரிழப்பு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மற்றொருவர் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது. அவர் பெயர் சுந்தரபாண்டியன் (வயது 27). திருமங்கலம் அருகே உள்ள பள்ளக்காப்பட்டியை சேர்ந்த சின்னசாமியின் மகன். இவருக்கு சுகப்பிரியா என்ற மனைவி உள்ளார். தற்போது அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார்.
இன்னும், 4 தினங்களில் ஊருக்கு வந்துவிடுவதாக மனைவியிடம் சுந்தரபாண்டியன் தொலைபேசியில் கூறியுள்ளார். இந்நிலையில் தான் அவர் பனிச்சரிவில் சிக்கி இறந்துள்ளார். சுந்தரபாண்டியன் இறந்த செய்தியை கேட்ட அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
திருநங்கை ஒருவரை ஆண் ஒருவர் முறைப்படி திருமணம் செய்துகொண்ட சம்பவம் இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
ஒடிசா தலைநகர் புவனேஷ்வரை சேர்ந்த பாசுதேவ் நாயக் என்ற இந்து மணமகன், திருநங்கையான மேனகா கன்னர் என்பவரை முறைப்படி தாலிகட்டி தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கியுள்ளார்.
மனித பிறப்பில் மூன்றாம் பாலினத்தவராக அடையாளம் காணப்படும் திருநங்கைகள் தான் பிறந்த குடும்பத்தாலேயே விளக்கி வைக்கப்படும் துயரத்தை எதிர்கொள்ளும் சமூகமாக உள்ளனர்.
மேலும் தம்மை ஒத்த திருநங்கைகள் உடனேயே இவர்களின் உறவுகள் இருந்து வரும் நிலையில் குறித்த திருமணம் இடம்பெற்றுள்ளது.
மணமகன் ஒருவருக்கும் திருநங்கைக்கும் இடையே திருமணம் நடந்துள்ளமை, அனைவரினதும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த வித்தியாசமான திருமணத்தில் ஏராளமான திருநங்கைகள் கலந்துகொண்டு ஆடிப்பாடி மகிழ்ந்துள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது.
பைரவா 80 கோடிகளுக்கு மேல் வியாபாரம் ஆகிய படம். இப்படத்தின் மீது ரசிகர்கள் பெரிய எதிர்ப்பார்ப்பை வைத்திருந்தனர்.
படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும், பி.சி செண்டரில் படம் ஹவுஸ்புல் காட்சிகளாக தான் முதல் 4 நாட்கள் ஓடியது.
அதை தொடர்ந்தும் படத்தில் நல்ல வரவேற்பு இருக்க, ஓரளவிற்கு நல்ல லாபம் எடுத்துவிடலாம் என விநியோகஸ்தர்கள் நினைத்து வந்தனர்.
ஆனால், இந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தால் பைரவா படத்தின் கூட்டம் பல மடங்கு குறைந்துள்ளது, இதனால் வசூலும் பெரிதாக அடிவாங்கியுள்ளது.
வெளிநாடுகளிலும் படம் எதிர்ப்பார்த்த அளவிற்கு வசூல் செய்யவில்லை என பொக்ஸ் ஒபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள மிருகக்காட்சி சாலையொன்றில், புலி ஒன்றுக்குப் போக்குக் காட்டிய வாத்தின் காணொளி இணையதளத்தில் பரபரப்பாகப் பரவி வருகிறது.
வாத்தைப் பிடிப்பதற்காக குளத்தினுள் இறங்கிய புலிக்கு பாச்சா காட்டிய வாத்து, தண்ணீருக்கு வெளியேயும் உள்ளேயுமாக மாறி மாறி நீந்தி புலியைக் களைக்கவே வைத்துவிட்டது.
ஒரு கட்டத்தில், தன்னைத் தின்னும் வெறியுடன் அலையும் அந்தப் புலிக்குப் பின்னால் கூட வாத்து நீந்தியபடி வந்தது. புலி தன்னைக் கவனிக்கவில்லை என்றதும் ‘வா வா’ என்பது போலத் தனது இறகுகளைப் படபடவென அடித்தது.
சுமார் பத்து நிமிட முயற்சி வெற்றியளிக்காத நிலையில் குளத்தில் இருந்து வெளியேறியது புலி.
இந்தியாவில் தன்னுடைய 2 வயது குழந்தையை கோபத்தில் மாடி படியிலிருந்து தூக்கி வீசிய தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் டெல்லி மாநிலத்தில் வசித்து வருபவர் Nitin Gupta, இவர் மனைவியின் பெயர் Sonu Gupta (26) இவர்களுக்கு Anshu (2) என்ற ஆண் குழந்தை உள்ளது. சம்பவத்தன்று Sonuவுக்கும் அவர் மாமியாருக்கும் குடும்ப சொத்து விடயமாக தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த Sonu மெத்தையில் தூக்கி கொண்டிருந்த தன் குழந்தை Anshuவை வேகமாக தூக்கினார். பின்னர் வீட்டு கதவின் அருகில் உள்ள மாடிப்படிக்கு வந்து இரக்கமில்லாமல் குழந்தையை தூக்கி கீழே போட்டுள்ளார்.
இந்த காட்சிகள் அனைத்தும் அவர்கள் வீட்டிலிருந்த CCTV கமெராவில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவத்தில் குழந்தை Anshuவின் தலை மற்றும் உடல் பகுதிகளில் பலத்த காயம் ஏற்ப்பட்டுள்ளது.
உடனே குழந்தையின் தந்தை Nitin Gupta அருகில் இருந்த மருத்துவமனையில் குழந்தையை சிகிச்சைக்காக சேர்த்தார். மேலும், தன் மனைவி மீது பொலிசாரிடம் அவர் புகார் கூற Sonu மீது அவர்கள் வழக்கு பதிவு செய்துள்ளார்கள்.
இந்தியாவில் 48 வயது நபர் ஒருவரின் சிறுகுடலில் இருந்த 6 அடி நீளம் கொண்ட நாடப்புழுவை மருத்துவர்கள் வெற்றிகரமாக நீக்கியுள்ளனர்.
48 வயதான தீபன் என்ற நபர் கடந்த 2 மாதங்களாக வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதன்பின்னர் மருத்துவரிடம் சென்று சோதனை செய்ததில், சிறுகுடலில் 6 அடி நீளம் கொண்ட புழு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தியாவில் உள்ள PVS Memorial மருத்துவமனையில் இவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஒரு மணி நேரத்திற்கு மேலாக மேற்கொள்ளப்பட்ட இந்த அறுவைசிகிச்சையில், இவரது வாயின் வழியாக இந்த நாடாப்புழு வெளியேற்றப்பட்டது. மேலும், அவருக்கு ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்தும் கொடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மருத்துவர் Cyriac Phillips கூறியதாவது, சமைக்கப்படாத பன்றி இறைச்சியை சாப்பிடும்போது, அதனுள் இருக்கும் ஒட்டுண்ணிகள் வயிற்றுக்குள் சென்று, தங்களை வளர்த்துக்கொள்கின்றனர்.
பன்றி இறைச்சி மட்டுமல்லாமல் ஆடு போன்ற இறைச்சிகளை சாப்பிடும்போதும் கவனம் செலுத்த வேண்டும். ஆனால் இதுபோன்று அறுவை சிகிச்சைகளை செய்திருக்கிறோம்.
ஆனால், 6 அடி என்பது அதிகம் என்றும் முதல் முறையாக இந்த அளவு கொண்ட நாடாப்புளுவை பார்த்துள்ளோம் என ஆச்சரியத்தோடு கூறியுள்ளார்.
கல்விப்பொது தராதர சாதாரண தர பரீட்சை எழுதிவிட்டு பெறுபேறுகளுக்காக காத்திருந்த சிறுமி ஒருவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
குறித்த சம்பவம் பதுளை மாவட்டத்திலுள்ள எல்ல பிரதேசத்தில் நடந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
சுமார் 15 வயது நிரம்பிய சிறுமியே ஆண் குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளார் என எல்ல பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் சந்தேகத்தின்பேரில் பஸ் நடத்துனர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும், வயது குறைந்த இந்த சிறுமி கர்ப்பம்தரித்து குழந்தை பிரசவிக்கும் வரை மேலதிகாரிகளுக்கு தெரியப்படுத்தாத காரணத்தினால் அந்தப்பகுதியிலுள்ள அதிகாரிகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எல்ல பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.