மூன்று பாடசாலை மாணவர்களுடன் உறவு கொண்ட இளம் ஆசிரியைக்கு நேர்ந்த விபரீதம்!!

அமெரிக்காவில் பள்ளி மாணவர்களுடன் தவறான உறவு வைத்து கொண்ட ஆசிரியைக்கு 30 வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து, தன் தவறுக்காக அவர் வருந்தியுள்ளார்.

அமெரிக்காவின் Kaysville கவுண்டியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக இருப்பவர் Brianne Altice (37), இவருக்கும் அங்குள்ள வகுப்பில் படிக்கும் மூன்று மாணவர்களுக்கும் தகாத உறவு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அந்த மாணவர்களுடன் இவர் பல முறை உல்லாசம் அனுபவித்துள்ளார். பின்னர் இந்த விடயம் வெளியில் தெரிய வர இவர் மீது சிறுவர்களை தவறான வழிக்கு அழைத்து செல்லுதல் போன்ற சட்டத்தின் அடிப்படையில் பொலிசார் வழக்கு பதிவு செய்தனர்.

நீதிமன்றத்தில் Brianneக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனையளித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

தற்போது சிறையில் இருக்கும் Brianne கூறுகையில், நான் செய்த தவறுக்கு நானே முழு பொறுப்பு. யார் மீதும் பழி போட நான் விரும்பவில்லை என கூறியுள்ளார்.

மேலும் தான் திருந்தி வாழ ஆசைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

2020ஆம் ஆண்டு வரை Brianne நிச்சயம் சிறையில் இருக்க வேண்டும் எனவும் அதுவரை பரோல் கிடைக்காது எனவும் கூறப்பட்டுவந்த நிலையில், பரோல் கமிட்டி அடுத்த மாதம் கூடுவதால் Brianne அதற்கு முன்னரே வெளியில் வருவாரா என அப்போது தெரியவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பெண்ணொருவரின் உயிரை பறித்த அன்னாசி : சிக்கலில் முகாமையாளர்!!

பிலியந்தலை பிரதேசத்தில் அன்னாசி பழத் துண்டொன்றை உட்கொண்ட பாதுகாப்பு அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தப் பகுதியில் அமைந்துள்ள பிரபல சூப்பர் மார்க்கெட்டில் நேற்று முன்தினம் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இதன்போது ஹம்பாந்தோட்டை, மயுரபுரவில் வசிக்கும் எங்கிலிகார கலப்பத்திகே ரேணுகா மல்காந்தி என்ற 54 வயதுடைய பெண் பாதுகாப்பு அதிகாரியே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண் பாதுகாப்பு அதிகாரியின் மரணம் தொடர்பில் பிலியந்தலை மரண விசாரணை அதிகாரி அஜித் விஜேசிங்க நேற்று முன்தினம் தீர்ப்பு ஒன்று வழங்கியுள்ளார்.

இந்த மரண பரிசோதனை நேற்று முன்தினம் களுபோவில வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், உயிரிழந்த பாதுகாப்பு அதிகாரியின் உடலின் ஒரு பகுதி அரச பகுப்பாய்வாளரிடம் அனுப்பி வைக்குமாறும், அந்த அறிக்கை சமர்ப்பிக்குமாறும் நீதிமன்ற வைத்திய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 24ஆம் திகதி குறித்த பாதுகாப்பு அதிகாரி சேவையில் ஈடுப்பட்டுள்ளார். அங்கு அதன் ஊழியர்கள் அன்னாசி மற்றும் பழங்களை வெட்டி ரெஜிபோம் பெட்டியில் போட்டுக் கொண்டிருப்பதனை பார்த்த அதிகாரி அந்த இடத்திற்கு சென்று அன்னாசி துண்டொன்றை சாப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவத்தை கண்ட உதவி முகாமையாளர், அன்னாசி துண்டினை ஏன் இரகசியமாக சாப்பிட்டீர்கள் என கடுமையாக திட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன் போது தான் இரகசியமாக அன்னாசி சாப்பிட்டதனை ஏற்றுக் கொண்டு கடிதம் ஒன்றை எழுதி தருமாறு, முகாமையாளர், குறித்த பெண் பாதுகாப்பு அதிகாரிக்கு குறிப்பிட்டுள்ளார். அந்த சந்தர்ப்பத்தில் அவர் திடீரென மயங்கி விழுந்துள்ள நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ் கொலையை நேரில் கண்ட சிறுவனின் உயிருக்கு அச்சுறுத்தல் : பாதுகாப்பு வழங்க நீதவான் உத்தரவு!!

யாழ். ஊர்காவற்துறை பகுதியில் இடம்பெற்ற கொடூர கொலை சம்பவத்தில் கண்கண்ட சாட்சியாக உள்ள மாற்றுத்திறனாளி சிறுவனின் வீட்டுக்கு பாதுகாப்பு வழங்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை கரம்பன் பகுதியில் இடம்பெற்ற 7 மாத கர்ப்பிணிப் பெண்ணின் கொலை சம்பவத்தில் 12 வயதான மாற்றுத்திறனாளி சிறுவன் கண்கண்ட சாட்சியாக உள்ளார்.

இந்த நிலையில் குறித்த சிறுவனுக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக சிறுவர் நன்னடத்தை பிரிவு அதிகாரிகள், ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவானின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.

குறித்த சிறுவன் வீட்டை விட்டு எங்கும் செல்லமாட்டேன் என அடம்பிடிப்பதாகவும் பொலிஸார் நீதிபதியிடம் முறையிட்டுள்ளனர்.

இதனையடுத்து அடுத்த வழக்கு விசாரணைகள் எதிர்வரும் 8ஆம் திகதி எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

அதுவரை குறித்த சிறுவனை பாதுகாப்பு பாடசாலையில் அனுமதிக்குமாறு ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் இ.சபேசன் இன்று உத்தரவிட்டார்.

கடந்த 24ஆம் திகதி ஊர்காவற்துறை கரம்பன் பகுதியில் 7 மாத கர்ப்பிணிப் பெண்ணான ஞானசேகரம் ஹம்சிகா (வயது 25) என்பவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்தார்.

இதனையடுத்து, மண்டைதீவு பகுதியில் வைத்து முச்சக்கரவண்டியில் சென்ற இருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த கொலை சம்பவத்தில் யாழ். ஐந்து சந்திப்பகுதியைத் தற்காலிக வசிப்பிடமாகவும், புத்தளத்தை பிறப்பிடமாகவும் கொண்ட முஹம்மட் பரீன் (வயது-33) என்பவரை பொலிஸார் தேடிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பேரழிவை ஏற்படுத்துமா பூமியை நோக்கி வரும் விண்கல்? விஞ்ஞானிகள் அச்சம்!!

பூமியின் சுற்றுவட்டத்தினுள் பாரிய விண்கல் ஒன்று நுழைந்திருப்பதாகவும், அடுத்த வாரமளவில் அது பூமியைக் கடந்து செல்லும் என்றும் நாஸா தெரிவித்துள்ளது. எனினும், பூமியில் இருந்து சுமார் 32 மில்லியன் கிலோமீற்றர்கள் தொலைவிலேயே இந்த விண்கல் கடக்கும் என்பதால், பூமிக்கு பாதிப்பு எதுவும் இல்லை என்றும் நாஸா கூறியுள்ளது.

ஆனால், சில விண்வெளிக் கோட்பாட்டாளர்களின் கருத்து பயமுறுத்துவதாக அமைந்துள்ளது.

2016 டபிள்யூ,எஃப்9 (2016 WF9 ) என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த விண்கல் பற்றிய உண்மைகளை நாஸா மறைக்கிறது என்றும், சுமார் இரண்டரை கிலோமீற்றர் பரப்பளவுடைய இந்தப் பாரிய விண்கல் பூமியில் விழுந்து பேரழிவுகளை ஏற்படுத்தப்போகிறது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

வானியல் விற்பன்னர் என்று தன்னைக் கூறிக்கொள்ளும் டொக்டர்.டியோமின் டாமிர் ஸக்காரோவிக் என்பவர், இந்த விண்கல்லின் தாக்கம் பயங்கரமான அணு ஆயுதம் ஏற்படுத்தக்கூடிய அழிவுகளுக்குச் சமமானதாக இருக்கும் என்றும், கடல்கள் கொதிப்பதுடன் பயங்கர சுனாமிகள் ஏற்படலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

“எங்களுக்கு உண்மை தெரியாது என்று நாஸா நினைக்கிறது. ஆனால், வானில் இருந்து கிடைக்கும் தகவல்களை நாமும் ஆராய்ந்து வருகிறோம். அதன் அடிப்படையில் நிச்சயமாக இந்த விண்கல் உலகில் பேரழிவுகளை ஏற்படுத்தும்” என்று அடித்துக் கூறுகிறார் டொக்டர்.டியோமின்.

தென்னாபிரிக்காவுக்கு எதிரான இலங்கைக்குழாம் அறிவிப்பு!!

தென்னாபிரிக்காவுக்கு எதிராக இடம்பெறவுள்ள ஒருநாள் போட்டிகளுக்கான 16 பேர் கொண்ட இலங்கைக்குழாத்தினை இலங்கை கிரிக்கெட் சபை இன்று அறிவித்துள்ளது.

ஏற்கனவே அறிவித்திருந்தது போல் இலங்கை அணியின் தலைவராக உபுல் தரங்க செயற்படவுள்ளார்.

16 பேர் கொண்ட இலங்கை குழாமின் முழு விபரம் இதோ…

1.உபுல் தரங்க (தலைவர்)

2.தினேஸ் சந்திமால்

3.குசால் மெண்டிஸ்

4.தனஞ்சய டி சில்வா

5. நிரோஷன் டிக்வெல்ல

6.சந்துன் வீரகொடி

7.அசேல குணரத்ன

8.சத்துரங்க டி சில்வா

9.சச்சித் பத்திரன

10.ஜெப்ரி வெந்தர்சே

11.லஹிரு மதுசங்க

12.லக்ஷான் சந்தகன்

13.நுவான் குலசேகர

14.லஹிரு குமார

15.சுராங்க லக்மால்

16.விக்கும் சஞ்சய

வகுப்பிலேயே சிரம பரிகாரம் செய்த மாணவி : ஆசிரியைக்கு 13 இலட்சம் டொலர் அபராதம்!!

மாணவியை வகுப்பறையிலேயே வாளி ஒன்றில் சிறுநீர் கழித்து, பின்னர் அதைச் சுத்தம் செய்யப் பணித்த ஆசிரியை மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

தெற்கு கலிஃபோர்னிய பாடசாலை ஒன்றில், வகுப்பு நேரத்தின்போது மாணவ, மாணவியர் எக்காரணம் கொண்டும் வெளியே செல்வதற்கு அனுமதி இல்லை.

இந்த நிலையில், 14 வயது மாணவி ஒருத்தி வகுப்பு நேரத்தின் போது இயற்கை உபாதைக்கு ஆளானார். அவரை வெளியே செல்ல அனுமதிக்காத ஆசிரியை, வகுப்பறையில் உள்ள வாளியொன்றில் சிறுநீர் கழித்துவிட்டு அதை வகுப்பறை வோஷ்பேசினில் ஊற்றிச் சுத்தம் செய்யப் பணித்திருக்கிறார்.

அதிர்ச்சியடைந்த அந்தச் சிறுமி வேறு வழி தெரியாததால் வெட்கமும் அவமானமும் பிடுங்கித் தின்ன, வகுப்பில் மாணவர்கள் இருக்கும்போதே தனது உபாதையைப் போக்கியிருக்கிறார். இந்த அவமானத்தால் மனம் குழம்பிய அந்தச் சிறுமி தற்கொலைக்கும் முயன்றிருக்கிறார்.

2012ம் ஆண்டு இடம்பெற்ற இச்சம்பவம், வாய்வழியே பரவிப் பரவி இறுதியாக ஊடகத்தின் செவிகளுக்கும் கொண்டு செல்லப்பட்டது.

இந்த அடிப்படை மனித உரிமைச் செயலை ஊடகங்கள் கண்டித்ததையடுத்து, குறித்த ஆசிரியை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, பாதிக்கப்பட்ட மாணவிக்கு சுமார் பதின்மூன்று இலட்சம் டொலர்களை அபராதமாகவும், 41 ஆயிரம் டொலர்களை மருத்துவச் செலவுகளுக்காகவும் வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்திருக்கிறது.

ஹட்டனில் கோர விபத்து : பெண் பலி, மேலும் இருவர் காயம்!!

 
ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் ஹட்டன் – குடாஓயா பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் இருவர் காயங்களுடன் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹட்டன் பகுதியிலிருந்து தலவாக்கலை நோக்கி சென்ற லொறி ஒன்றும் கொட்டகலை பகுதியிலிருந்து ஹட்டன் நோக்கி சென்ற முச்சக்கரவண்டி ஒன்றும் ஹட்டன் – குடாஓயா பிரதான வீதியில் நேர்க்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது முச்சக்கரவண்டியில் பயணித்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

லொறி சாரதியின் கவனயீனம் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு காயமடைந்த இருவரும் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

விபத்துக்கு காரணமான லொறியின் சாரதியை ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளதுடன் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் கடும் மழை : மன்னார் வீதியில் போக்குவரத்து பாதிப்பு!!

 
வவுனியாவில் நேற்று (26.01.2017) இரவிலிருந்து பெய்து வரும் அடை மழையினையடுத்து மன்னார் வீதி, வேப்பங்குளம், பட்டானிச்சூர், போன்ற தாழ் நிலப்பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியிளிக்கின்றது.

வேப்பங்குளம் தாழ் நிலப்பகுதியிலுள்ள 6ம் வீதியில் உள்ள 10குடும்பங்களின் வீட்டிற்குள் மழை வெள்ளம் புகுந்துள்ளது. இதனால் அக்குடும்பம் பாதிப்பை எதிர்கொண்டுள்ளது.

தொடர்ந்து பெய்துவரும் மழையினால் திருநாவற்குளம் பகுதியிலும் சில வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்துள்ளது. ‘

மன்னார் வீதியிலிருந்து பூங்கா வீதிக்குச் செல்லும் வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. குருமன்காடு காளி கோவில் வீதியிலுள்ள மரம் ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளது.

சுற்றுவட்ட வீதியிலுள்ள மரம் முறிந்து வீழ்ந்ததில் மின்சாரக்கம்பிகள் அறுந்து விழுந்துள்ளது. எனினும் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. வயல் பகுதிகளில் மழை வெள்ளம் புகுந்துள்ளதால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.

நேற்று இரவு ஆரம்பமான மழை தொடர்ந்து பெய்து வருகின்றது. பாடசாலைகளில் மாணவர்கள் வரவின்றி காணப்படுகின்றது. வவுனியா நகரம் மக்களின்றி வெறிச்சோடிக் காணப்படுகின்றது.

வவுனியாவில் 36 பேருக்கு டெங்கு தொற்று : அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!!

வவுனியாவில் ஜனவரி முதலாம் திகதியிலிருந்து இன்று (27.01.2017) வரையான காலப்பகுதியில் 36 பேர் டெங்கு தொற்றுக்குள்ளாகி கிசிச்சை பெற்று வருகின்றனர். கடந்த மாதம் 19பேர் டெங்கு தொற்றுக்குள்ளாகியிருந்தனர்.

எனினும் இந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் இலங்கையிலே வவுனியாவில் 36 டெங்கு தொற்றுக்குள்ளாயுள்ளதாக வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பொது சுகாதார பரிசோதகர் மேஜெயா தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்..

தேசிய டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் ஒருபுறம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தற்போது கடந்த சில தினங்களாக மழையுடனான காலநிலையினையடுத்து ஜனவரி முதலாம் திகதியிலிருந்து இன்றுவரை 36 பேருக்கு டெங்கு தெற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவருவதாகவும் இதன் தாக்கம் இன்னும் அதிகரிக்க வாய்ப்புக்கள் உள்ளன.

மழை மேலும் நீடித்துச் சென்றால் இன்னும் பலருக்கு டெங்கு தொற்றுக்குள்ளாக நேரிடும், யாழ்ப்பாணம், மன்னார், போன்ற பிரதேசங்களுடன் ஒப்பிடுகையில் வவுனியாவில் இம்மாதம் மட்டும் 36 பேர் டெங்கு தொற்றுக்குள்ளாகியுள்ளது.

அகில இலங்கை ரீதியில் இது இதிகமாகவே காணப்படுகின்றது. நகரை அண்டிய பகுதியிலுள்ளவர்களே பெரிதும் பாதிப்படைந்துள்ளதாகவும் தோற்று ஏற்பட்டுள்ள இடங்களை இனங்கண்டு இருப்பிடங்கள், பொது இடங்கள், பாடசாலைகள், அலுவலகங்கள் என அனைத்து இடங்களையும் சுத்தமாக வைத்திருக்கவும்,

மேலும் சிரமதானப்பணிகளை முன்னெடுத்து டெங்கு நோயினைக்கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளவும், கடந்த காலங்களில் பொதுமக்கள் எமக்கு வழங்கிய ஒத்துழைப்பினை வழங்குமாறும், எமது உத்தியோகத்தர்கள் களப்பணியினை மேற்கொண்டுள்ளனர், அவர்களுக்கு பூரண ஒத்துழைப்பினை வழங்குமாறும் குறிப்பாக நகரை அண்டிய பகுதிகளிலே பெருமளவானோர் டெங்கு தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

எனவே மேற்குறிப்பிட்ட இடங்களில் டெங்கு பெருக்கெடுக்காமல் வைத்திருக்க நடவடிக்கை மேற்கொள்ளாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.

ஆறு நாட்கள் நுரையீரல் இல்லாமல் வாழ்ந்து வந்த அதிசய பெண் : உலக அளவில் மருத்துவர்கள் சாதனை!!

 
கனடாவில் ஆறு நாட்கள் நுரையீரல் இல்லாமல், இறக்கும் தருவாயில் இருந்த பெண்ணை மருத்துவர்கள் காப்பாற்றி மருத்துவ வரலாற்றில் முதன்முறையாக உலக அளவில் சாதனை படைத்துள்ளனர்.

கனடாவைச் சேர்ந்தவர் Melissa Benoit. இவருக்கு சமீபகாலமாக நுரையீரல் சம்பந்தமாக பிரச்சனை இருந்துள்ளது. இதனால் அவர் கனடாவின் Toronto General மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றுள்ளார்.

அங்கு மருத்துவர்கள் Melissa Benoit ஐ சோதனை செய்து பார்த்ததில் நுரையீரலில் சுவாச கோளாறு இருந்துள்ளது. அதுமட்டுமின்றி சளியும் அதிகம் இருந்துள்ளது.

இனியும் அவர் அதற்கான உரிய சிகிச்சை எடுக்கவில்லை என்றால் உயிருக்கு பாதிப்பு ஏற்படும் என்று மருத்துவர்கள் தொடந்து அதற்கான சிகிச்சை அளித்து வந்துள்ளனர். ஆனால் அதற்கு பலன் இல்லை. நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே இவர் உயிர் பிழைக்க முடியும் என்று முடிவு செய்துள்ளனர்.

இதனால் அவர்கள் நுரையீரலுக்காக காத்திருந்தனர். இந்நிலையில் Melissa வின் நுரையீரல் செயல் இழக்கத்தொடங்கியுள்ளது.

இதனால் அவர் உடலில் உள்ள ஒவ்வொரு பாகங்களும் அடுத்தடுத்து செயல் இழந்து வந்துள்ளன. இதனால் மருத்துவர்கள் உடனடியாக நுரையீரலை வெளியில் எடுத்தால் மட்டுமே இவரை காப்பாற்ற முடியும், ஆனால் அதற்கு மாற்று நுரையீரல் வேண்டும் என்று கூறியுள்ளனர்.

நுரையீரல் கிடைக்காததால் மருத்துவர்கள் இவரை காப்பாற்ற வேண்டும் என்றால் நுரையீரல் வெளியில் எடுக்க வேண்டும். அதற்கு பதிலாக செயற்கை நுரையீரல் சுவாச கருவி கொடுத்து காப்பாற்றிவிடலாம் என்று நினைத்துள்ளனர்.

அது சரி என்றாலும் மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு நுரையீரல் கிடைப்பதற்கு நாட்கள் பல ஆகினால் என்ன செய்வது என்று அச்சமடைந்துள்ளனர். அதன் பின்னர் எது நடந்தாலும் சரி என்று நுரையீரலை வெளியில் எடுத்துள்ளனர். அதன் முழுவதும் சளி அடைத்துக் கொண்டு ஒரு கால்பந்து போல் கெட்டியாக இருந்துள்ளது.

அதன் பின்னர் செயற்கை நுரையீரல் சுவாச கருவி மூலம் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்துள்ளனர். ஆறு நாட்களுக்கு பின்னர் அவருக்கு மாற்று நுரையீரல் கிடைத்துள்ளது. அதைத் தொடர்ந்து மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து நுரையீரல் வைத்துள்ளனர்.

தற்போது அவர் மிகுந்த நலத்துடன் இருப்பதாகவும், இது கடந்த ஆண்டு ஜுலை மாதம் நடந்ததாகவும், இதன் முழு வெற்றிக்கு Melissa வின் தன்னம்பிக்கை தான் காரணம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

ஏனினும் சுமார் ஆறு நாட்கள் நுரையீரல் இல்லாமல், வாழ்ந்து வந்த பெண்ணை மருத்துவர்கள் காப்பாற்றி இருப்பது இதுவே உலக அளவில் முதன்முறை என்று கூறப்படுகிறது.

இலங்கையில் நாள் தோறும் நீரில் மூழ்கி மூன்று பேர் பலி!!

ஆண்டு தோறும் இலங்கையில் நீரில் மூழ்குவதன் மூலம் ஏற்படும் மொத்த மரணங்களின் எண்ணிக்கை 1100 விடவும் அதிகம் என இலங்கை உயிர்ப் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் அசங்க நாணயக்கார தெரிவித்துள்ளார்.

சுற்றுலாப் பயணங்களின் போது நீரில் மூழ்கி உயிரிழப்போரை விடவும் அன்றாட நடவடிக்கைகளின் போது நீரில் மூழ்கி உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகம் என குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், இலங்கையில் 99 வீதமான மக்களுக்கு நீச்சல் தெரியாது.

நீச்சல் தெரியாதவர்களுக்கு சிறிய ஓர் நீர் நிலை கூட ஆபத்தாக அமையக் கூடும். நீர் நிறைக்கப்பட்ட பேசன் ஒன்றினால் குழந்தையின் உயிரை பறிபோகக்கூடிய அபாயமுண்டு.

நீச்சல் சாம்பியன்களினால் கூட நீந்த முடியாத ஆபத்தான வலயங்கள் இலங்கையில் காணப்படுகின்றன. நீரில் மூழ்குவோரை காப்பற்ற சென்றே அதிகமானவர்கள் உயிரிழக்கின்றனர். நீரில் மூழ்கி உயிரிழப்போரை பாதுகாக்கும் நுட்பங்கள் பற்றி மக்களுக்கு தெளிவூட்ட வேண்டும்.

நீரினால் ஏற்படக்கூடிய உயிராபத்துக்கள் தொடர்பில் உயிர்ப்பாதுகாப்பு வழிமுறைகள் பாடசாலை பாடவிதானத்தில் உள்ளடக்கப்பட வேண்டுமென அசங்க நாணயக்கார கோரியுள்ளார்.

வளிமண்டலத்தில் ஏற்பட்ட திடீர் குழப்பம் : இலங்கை காலநிலையில் மாற்றம்!!

நாட்டின் பல இடங்களில் மழையுடன் கூடிய காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை நாட்டின் பல இடங்களிலும் மேகமூட்டத்துடன் கூடிய மந்தமான காலநிலை நிலவும்.

வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை காரணமாக வானிலையில் மாற்றம் ஏற்படுவதாக திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய மாவட்டங்களில் காலநிலை தொடர்பான விபரங்கள்.

அம்பாறை – மிதமான காலநிலை

அனுராதபுரம் – மிதமான காலநிலை

பதுளை – மழையுடன் கூடிய காலநிலை

மட்டக்களப்பு – மழையுடன் கூடிய காலநிலை

கொழும்பு – மழையுடன் கூடிய காலநிலை

காலி – மிதமான காலநிலை

கம்பஹா – மிதமான காலநிலை

அம்பாந்தோட்டை – மழையுடன் கூடிய காலநிலை

யாழ்ப்பாணம் – மிதமான காலநிலை

களுத்துறை – மிதமான காலநிலை

கண்டி – மிதமான காலநிலை

கேகாலை – மிதமான காலநிலை

கிளிநொச்சி – மிதமான காலநிலை

குருணாகல் – மிதமான காலநிலை

மன்னார்- மழையுடன் கூடிய காலநிலை

மாத்தளை – மழையுடன் கூடிய காலநிலை

மாத்தறை – மிதமான காலநிலை

மொனராகலை – மழையுடன் கூடிய காலநிலை

முல்லைத்தீவு – மிதமான காலநிலை

நுவரெலியா – மழையுடன் கூடிய காலநிலை

பொலன்னறுவை – மழையுடன் கூடிய காலநிலை

புத்தளம் – மிதமான காலநிலை

இரத்தினபுரி – மேகமூட்டத்துடன் கூடிய மந்தமான காலநிலை

திருகோணமலை – மழையுடன் கூடிய காலநிலை

வவுனியா – தூறல் மழையுடனான காலநிலை

கறுப்புப் புள்ளி விழுந்த வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதா?

நன்றாக பழுத்துகறுப்புப் புள்ளி  விழுந்த வாழைப்பழம் கெட்டு போய்விட்டது என்று நினைத்து நம்மில் பலர் அதை தூக்கி எறிந்து விடுவார்கள். ஆனால்கறுப்புப் புள்ளி  விழுந்த வாழைப்பழத்தில் தான் ஏராளமான மருத்துவ நன்மைகள் உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா?

கறுப்புப் புள்ளி  விழுந்த வாழைப்பழத்தில் உள்ள நன்மைகள்

கறுப்புப் புள்ளி  விழுந்த வாழைப்பழத்தில் டிரிப்டோபென், செரோடோனினாக மாற்றப்பட்டு இருக்கும். எனவே இந்த வாழைப்பழம் நீண்ட நாள்பட்ட மன அழுத்தம் பிரச்சனையை குறைக்கிறது.

வாழைப்பழத்தில் ஃபுருக்டோஸ், குளுக்கோஸ் மற்றும் சுக்ரோஸ் என மூன்றின் கலவையும் அதிகமாக இருக்கிறது. எனவே இது நமது உடலுக்கு தேவையான சக்தியை முழுமையாக அளித்து, உடலில் வளர்சிதை மாற்றத்தை சீராக்குகிறது.

தினமும் கறுப்புப் புள்ளி  விழுந்த வாழைப்பழம் சாப்பிட்டால், அது நமது மூளைக்கு தேவையான அளவு சக்தியை அளித்து, மூளையின் செயல்திறனை சீராக்குகிறது.

நாம் தினமும் காபி குடிக்கும் பழக்கத்தை தவிர்த்து விட்டு, அதற்கு பதிலாக ஒரு கறுப்புப் புள்ளி  விழுந்த வாழைப்பழத்தை சாப்பிட்டால், அது நமது உடல் மற்றும் மூளையை சுறுசுறுப்பாக இயங்க வைக்க உதவுகிறது.

தினமும் இரண்டு கறுப்புப் புள்ளி விழுந்த வாழைப்பழம் சாப்பிடுவதால், குறைந்த ரத்த அழுத்த பிரச்சனையை சீராக்கி, இதய நலனை மேம்படுத்துகிறது.

கறுப்புப் புள்ளி  விழுந்த வாழைப்பழத்தில் கால்சியம் சத்துக்கள் அதிகமாக இருப்பதால், அது நமது உடலின் ஒட்டுமொத்த நலனை ஊக்குவித்து, ரத்த சுழற்சி மற்றும் எலும்புகளின் வலிமையை அதிகப்படுத்துகிறது.

வாழைப்பழத்தில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடென்டுகள் நமது உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, இதய நோய், புற்றுநோய் மற்றும் தசை கோளாறுகள் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.

விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த சங்கக்கார-மஹேல!!

எமது இலங்கை அணி வீரர்களின் திறமை மீது நம்பிக்கை வைத்து அவர்களுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

சுற்றுலா இலங்கை அணி தென் ஆபிரிக்கா அணியுடன் மூன்று டெஸ்ட், மூன்று T20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கின்றது.

தென் ஆபிரிக்கா அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை படுதோல்வியடைந்தது.

இதனையடுத்து இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் இலங்கை வீர்ர்களின் திறமை மற்றும் அணித் தலைமை தொடர்பில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.

மேலும் இலங்கை அணியின் தலைமை பொறுப்பில் இருந்து அஞ்சலோ மத்தியூஸ் விலகுவதற்கு இது சரியான தருணம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தென் ஆபிரிக்காவுக்கு எதிரான முதலாவது T20 போட்டியிலும் இலங்கை தோல்வியை தழுவியதையடுத்து அணியின் மீதான நம்பிக்கை மேலும் குறைவடைந்தது விமர்சனங்கள் வலுப்பெற தொடங்கின.

எனினும் இரண்டாவது டி20 போட்டியில் மத்தியூஸின் அதிரடியுடன் இலங்கை வெற்றி பெற விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க தொடங்கியது. இந்த போட்டியின் பின்னர் மத்தியூஸின் மீதான விமர்சனங்களும் குறைவடைந்தது.

அத்தோடு இந்த வெற்றியை தொடர்ந்து “உங்கள் மீதான விமசர்னங்களுக்கு பதிலடி கொடுப்பதற்கு இதைதவிர சரியான வழி எதுவும் இல்லை” இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தொடரை தீர்மானிக்கும் தீர்க்கமான நேற்று முன்தினம் இடம்பெற்ற போட்டியில் அஞ்சலா மத்தியூஸ் களமிறங்காமல் இருந்தமையால் இலங்கை அணியின் மீதான எதிர்பார்ப்பு சற்று குறைவாகவே காணப்பட்டது.

எனினும் போட்டியின் முடிவில் இலங்கை அணி தனது அபார திறமையை வெளிப்படுத்தி தொடரையும் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் இலங்கை அணியின் வெற்றி குறித்து கருத்து தெரிவித்த மஹே ஜயவர்தன, இலங்கை அணி சிறப்பாக விளையாடி இருந்தது. குறிப்பாக நிரோசன் டிக்வெல மற்றும் சீக்குகே பிரசன்ன சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தனர் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை அணியின் திறமை மீது அனைவரும் நம்பிக்கை வைத்து பொறுமையுடன் ஆதரவு வழங்க வேண்டும் என குமார் சங்கக்கார வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பணம் தந்தால் என்ன வேண்டும் என்றாலும் செய்யலாமா : பிரபல நடிகரை வம்புக்கிழுத்த சீமான்!!

மாணவர்கள் ஜல்லிக்கட்டுக்காக நடத்திய போரட்டத்தை முடித்து வைக்க நடிகர் ராகவா லாரன்ஸ் யார் என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகமெங்கும் போராட்டம் நடைபெற்ற போது சென்னை மெரினாவில் நடைபெற்ற போராட்டத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் கலந்து கொண்டார்.

தனக்கு உடல் நலம் சரியில்லாத நிலையிலும் அவர் ஆர்வமாக தொடர்ந்து போரட்டத்தில் பங்கேற்று மாணவர்கள் மற்றும் இளைஞர்களை உற்சாகப்படுத்தினார்.

மேலும், அவர்களுக்கு 1 கோடி ரூபாய் நன்கொடை வழங்க தான் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார். போராட்டம் முடிவு பெறும் நேரத்தில் மாணவர்களிடன் லாரன்ஸ் போராட்டத்தை கைவிடுமாறு பேச்சு வார்த்தை நடத்தினார்.

இந்த விடயத்துக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், மாணவர்கள் போராட்டத்தை முடித்து வைக்க ராகவா லாரன்ஸ் யார் என வினவியுள்ளார்.

அவருக்கும் போராட்டத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என கூறிய சீமான் லாரன்ஸ் ஒரு கோடி ரூபாய் கொடுத்ததால் போராட்டத்தை முடித்து வைக்க வேண்டும் என்று சொல்கிறாரா என கோபமாக சீமான் பேசியுள்ளார்.

கடலுக்கு அடியில் தடபுடலாக நடந்த திருமணம் : வெளிநாட்டு காதலியை கரம்பிடித்த இந்தியர்!!

 
இந்திய இளைஞர் ஒருவர், வெளிநாட்டு பெண்ணை கடலுக்கு அடியில் கரம்பிடித்துள்ள சம்பவம் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர் நிகில் பவார். இவர் கேரள மாநிலம் கோவளத்தில் ஓட்டுநராக பணிபுரிகிறார். இந்நிலையில் ஸ்லோவோகியா நாட்டைச் சேர்ந்த யுனிகா போக்ரான் என்பவர் கோவளத்திற்கு சுற்றுலா வந்த போது நிகில் பவாருடன் பழக்கம் ஏற்பட்டது.

இருவருக்கும் இடையிலான இந்த நட்பு பின்னர் காதலாக மாறியது. இதனால் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடித்தனர்.

மகாராஷ்டிரா மாநிலம் சென்று பதிவுத் திருமணம் செய்து கொண்ட அவர்கள், திருமணத்தை கொஞ்சம் வித்தியாசமாக செய்ய நினைத்தனர்.

இதன் படி கடலுக்கு அடியில் சென்று திருமணம் செய்யலாம் என முடிவெடுத்து இதற்கான ஏற்பாடுகளையும் செய்தனர். இதைத் தொடர்ந்து அவர்கள் இன்று கடலுக்கு அடியில் சென்று திருமணம் செய்து கொண்டனர்.

கடலில் பயணம் செய்வதற்காக பயன்படுத்தப்படும் ஸ்கூபா உடைகளை திருமண ஆடையாக மணமக்கள் இருவரும் அணிந்திருந்தனர்.

சங்குகளால் செய்யப்பட்ட மாலைகளை மாற்றியும் விரலில் மோதிரம் அணிவித்தும் திருமணம் செய்து கொண்டனர்.

இது இந்தியாவில் கடலுக்கு அடியில் நடந்த முதல் திருமணம் என விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.