பனிக்கன்குளம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்தில் காயமடைந்த சாரதி மற்றும் நடத்துனர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இராணுவத்தினருக்கான உணவுப்பொருட்களை ஏற்றி சென்ற பாரவூர்தி வேகக்கட்டுப்பட்டை இழந்து வீதியோரம் நின்ற மரத்துடன் மோதி விபத்துக்குள்ளகியுள்ளது.
இதனால் பாரவூர்தி சேதமடைந்துள்ளதோடு கொண்டு செல்லப்பட்ட பொருட்களும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி வாகனம் உயர் வேகத்தில் வந்ததாகவும், வீதிபாதுகாப்பு பொலிசார் அதிக வேகம் காரணமாக வாகனத்தை நிறுத்த முயற்சித்த போது, அவர்களுக்கு இருநூறு மீற்றர் தூரத்திற்கு முன்னமே வாகனம் விபத்துக்குள்ளாகி விட்டதாகவும் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கவலை மற்றும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புற்றுநோயால் மரணம் ஏற்படும் ஆபத்து அதிகம் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதற்கான ஆதாரங்களையும் விஞ்ஞானிகள் சமர்ப்பித்துள்ளனர்.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் புற்றுநோயால் பாதிக்கப்படாத 1,60,000 பேரைக்கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில் குறைந்தளவு மன உளைச்சல் அடைந்தவர்களை விட, மன உளைச்சலால் அதிகப் பாதிப்படைந்தவர்களுக்கு பல வகையான புற்று நோய்கள் ஏற்படும் உயிராபத்து மூன்று பங்கு அதிகமுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
குடல், விந்துப்பை, கணையம் மற்றும் உணவுக்குழாய் ஆகியவற்றில் உண்டாகும் புற்றுநோய் ஆபத்து இவர்களுக்கு அதிகமுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இது குறித்த ஒரு திட்டவட்டமான காரண இணைப்பை உருவாக்க மேலும் அதிக ஆய்வுப்பணி தேவைப்படுவதாக பி.எம்.ஜே. என்றழைக்கப்படும் பிரிட்டிஷ் மருத்துவ இதழில் ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
யாழ் ஊர்காவற்துறையில் கொலையுண்ட கர்ப்பிணிப் பெண்ணின் இறுதிக்கிரியைகள் இடம்பெற்றன!!
யாழ். ஊர்காவற்துறையில் கொலை செய்யப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணின் இறுதிக்கிரியைகள் நேற்று மாலை இடம்பெற்றன.
25 வயதான கர்ப்பிணிப் பெண்ணொருவர் கடந்த 24 ஆம் திகதி கொலை செய்யப்பட்டார். இந்த கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் நேற்று முன்தினம் மாலை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது, சந்தேகநபர்களை அடுத்த மாதம் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணின் சடலம் மீதான பிரேதப் பரிசோதனை நேற்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன் மூலம், அப்பெண்ணின் தலையின் பின்புறம் பலத்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் உயிரிழந்திருப்பதாகத் தெரியவந்தது.
கொலையுண்ட பெண்ணின் கணவர் யாழ். ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் பணியாற்றுபவர் எனவும், அவர் பணிக்கு சென்றிருந்த சந்தர்ப்பத்தில் இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.
சுருவில் பகுதியில் வசித்து வந்த ந.கம்சிகா என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார். இவர் 4 வயது பெண் பிள்ளைக்கு தாய் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த கொலை தொடர்பில் இதுவரை 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மிஸ் யூனிவர்ஸ் (பிரபஞ்ச) 2016 அழகுராணிப் போட்டி பிலிப்பைன்ஸில் தற்போது நடைபெறுகிறது. நாடுகளின் அழகுராணிகள் இப் போட்டிகளில் பங்கு பற்று கின்றனர்.
இலங்கையின் சார்பில் ரெவ்லோன் மிஸ் யூனிவர்ஸ் ஸ்ரீலங்கா 2016 அழகுராணி ஜயதி டி சில்வா பங்குபற்றுகிறார். இப் போட்டியில் ரசிகர்களின் அபிமான அழகு ராணியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு தற்போது நடைபெறுகிறது.
ரசிகர்களின் வாக்கெடுப்பில் முதலிடம் பெறும் அழகுராணி மிஸ் யூனிவர்ஸ் 2016 அழகுராணி போட்டியின் 12 பேர் கொண்ட இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்காக, missuniverse.com இணையத்தளத்தின் மூலம் நேரடியாக வாக்களிக் கலாம். அல்லது டுவிட்டர் தளத்தில், #MissUniverse மற்றும் அபிமான போட்டி யாளரின் ஹேஸ்டெக்குகளை பயன்படுத்தி வாக்களிக்கலாம்.
அல்லது மிஸ் யூனிவர்ஸின் MISS U App மற்றும் Vodi app, மூலமும் எதிர்வரும் சனிக்கிழமை வரை வாக்களிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவிலுள்ள கடையொன்றில் அரிசி திருடியதாக கூறப்படும் எலியொன்றுக்குத் தண்டனையாக, லொறியொன்றின் பின்னால் அதை கட்டித் தொங்கவிட்டதுடன், இனிமேல் இப்படி செய்யமாட்டேன் என்ற அர்த்தம் தொனிக்கும் பதாகையொன்றையும் எலி மீது சிலர் மாட்டியுள்ளனர்.
சீனாவின் தென் பிராந்திய நகரான ஹேயுவான் நகரில் அண்மையில் இச்சம்பவம் இடம்பெற்றது. மேற்படி எலி, கடையில் அரசி திருடுவதை சிலர் கண்டுபிடித்தவுடன், அதற்கு இவ்வாறு தண்டனை அளிப்பதற்கு தீர்மானித்தனராம்.
தவறை ஒப்புக்கொள்ளும் விதமான வாசகங்கள் மஞ்சள் நிற அட்டையொன்றில், எழுதப்பட்டு, எலியின் மீது தொங்கவிடப்பட்டது. “உங்களின் அரிசியை திருடமாட்டேன்”. இனிமேல் இப்படி செய்யமாட்டேன் என சத்தியம் செய்கிறேன்” எனவும் அதில் எழுதப்பட்டிருந்தது.
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன் மனைவியின் கள்ளக்காதலனால் கொலை செய்யப்பட்ட சம்பவமொன்று தமிழகத்தில் இடம்பெற்றுள்ளது.
தமிழகத்தின் செங்கல்பட்டைச் சேந்தவர் முரளி (36). பெரும்புதூரிலுள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். மேலும் அவர், சிறிய பொக்லைன் இயந்திரங்களை தனியார் நிறுவனங்களுக்கு வாடகைக்கு விட்டுவந்தார். இந்நிலையில், கடந்த 19ஆம் திகதி இரவு முரளி விபத்தில் இறந்துவிட்டதாக மனைவி வனஜாவுக்கு தகவல் கிடைத்தது.
இதுகுறித்து பாலூர் பொலிஸார் முரளி இறந்ததை விபத்து வழக்காக பதிவு செய்து அவரது உடலை அடக்கம் செய்தனர். இந்நிலையில், வனஜாவின் வீட்டுக்கு கடந்த திங்கட் கிழமை சென்ற இளைஞர், மாலை வரை வெளியே வரவில்லை.
இதனால், சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், அந்த வீட்டை பூட்டி பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அங்கு விரைந்து சென்ற பொலிஸார் வனஜா மற்றும் அவருடன் இருந்த இளைஞரை மீட்டு பொலிஸார் விசாரணை நடத்தினர். இதன்போது அப்பகுதி மக்கள், வனஜாவின் கணவர் முரளியின் சாவில் மர்மம் இருப்பதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
இதனால், அதிர்ச்சியடைந்த பொலிஸார் வனஜா, முரளியிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதன்போது வனஜாவின் கணவனை தானே நண்பர்களுடன் இணைந்து கொலை செய்ததாக தெரிவித்தார்.
முரளி கம்பெனிக்குள் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு உதிரிப் பாகங்களை தூக்கி செல்லும் 10 சிறிய பொக்லைன் வைத்திருந்தார். அப்போது பெரும்புதூர் மேட்டு பாளையத்தை சேர்ந்த ரமேஷ் (28) என்பவருக்கு, பொக்லைன் இயந்திரத்தை வாடகைக்கு கொடுத்தார்.
இதனால் முரளியும், ரமேஷும் நண்பர்களானார்கள். அப்போது முரளி வீட்டில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் ரமேஷ் கலந்து கொண்டார். இந்நிலையில்முரளி சொந்தமாக வீடு கட்டி சில மாதங்களுக்கு முன் கிரகப் பிரவேசம் செய்தார். அப்போது, வனஜாவுடன் ரமேஷுக்கு பழக்கம் ஏற்பட்டது.
இந்நிலையில் ரமேஷின் பேச்சால் கவரப்பட்ட வனஜா, முரளியின் செல்போனிலிருந்து செல்போன் எண்ணை இரகசியமாக எடுத்துள்ளார். பின்னர், செல்போன் மூலம் வனஜா, ரமேஷுக்கு காதல் வலைவீசினார்.
இதில் சிக்கிய ரமேஷ், தன் நண்பன் முரளி இல்லாத நேரத்தில் வீட்டுக்குச் சென்று வனஜாவுடன் நெருக்கமாக இருந்துள்ளார். இதனிடையே ஒரு நாள் ரமேஷ் வாங்கிக் கொடுத்த செல்போனை முரளி கண்டுள்ளார்.
அப்போது, ‘இந்த செல்போன் யாருடையது, எப்போது வாங்கினாய்?’ என்று கேட்டார். ஆனால், வனஜா எந்தப் பதிலும் கூறவில்லை. அந்த செல்போனை ஆராய்ந்த போது அதில் ரமேஷின் செல் போன் எண் மட்டுமே இருந்தது.
அதில் வீடியோ, வாட்ஸ் அப் மெசேஜ், போட் டோ இருந்தது. இதனால் முரளி, மனைவி வன ஜாவை கண்டித்தார்.
இதனையடுத்து ரமேஷிடம் செல்போனில் பேசி வனஜா அழுதுள்ளார். அதற்கு ரமேஷ், முரளியை கொலை செய்ய முடிவு செய்தார். இந்நிலையில், முரளியை கொல்லும் நோக்கில், ரமேஷ் தனது நண்பர்களுடன் கடந்த 19ஆம் திகதி ஒரகடம் பகுதிக்கு சென்றார்.
அங்கு வேலையில் இருந்து பைக்கில் வந்த, முரளியை வழிமறித்து, அருகில் உள்ள காட்டு பகுதிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
உடனே ரமேஷ் மற்றும் அவரது நண்பர்கள் மறைத்து வைத்திருந்த கட்டைகளால் ரமேஷை அடித்து கொலை செய்து விட்டு, அங்கிருந்து சடலத்தை வீசிவிட்டு, அவர் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிளையும் , விபத்தில் ஏற்பட்டதை போல் உடைத்து போட்டுவிட்டு சென்றனர்.
இதனையடுத்து வனஜாவுக்கு தகவல் கொடுத்துள்ளார். ஆனால் வனஜா, தனக்கு எதுவும் தெரியாதது போல கதறி அழுது அனைவரையும் நம்ப வைத்தார். முரளி வாகன விபத்தில் இறந்தார் எனவும் முறைப்பாடு செய்துள்ளார்.
ஆனால், அவரது வீட்டில் ஓர் இளைஞர் முழுநாள் தங்கிச் சென்றதால், பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டு, இருவரையும் பிடித்துக் கொடுத்தனர். இதனையடுத்து ரமேஷையும் வனஜாவையும் கைது செய்த பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்களைத் தேடி வருகின்றனர்.
விவசாயிகளுக்காக புதிதாக தொண்டு நிறுவனம் ஒன்றைத் தொடங்கி, அதில் முதலாவதாக தன்னுடைய அடுத்த படத்தின் முழுச்சம்பளத்தையும் அளிக்கவுள்ளார்.
இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ்.ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் நடத்திய போராட்டத்துக்கு சுற்றுப்பயணம் செய்து தன்னுடைய முழு ஆதரவையும் அளித்தவர் ஜி.வி.பிரகாஷ்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கொம்பு வச்ச சிங்கம்டா என்ற பாடலை அருண்ராஜா காமராஜுடன் இணைந்து உருவாக்கினார். அப்பாடலின் மூலம் வரும் வருமானம் அனைத்தையும் நலிவடைந்த விவசாயிகளுக்கு வழங்கவுள்ளதாக ஜி.வி.பிரகாஷ் அறிவித்திருந்தார்.
தற்போது ஜல்லிக்கட்டு போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து தனது கவனத்தையும் விவசாயிகளின் பிரச்சினைக்கு திருப்பியுள்ளார். நலிவடைந்த விவசாயிகள் பலர் தற்கொலை செய்து கொள்ளும் சூழல் தமிழகத்தில் அரங்கேறி வருகிறது.
அவர்களைக் காப்பாற்றும் எண்ணத்தில் புதிதாக தொண்டு நிறுவனம் ஒன்றைத் தொடங்க ஜி.வி.பிரகாஷ். திட்டமிட்டுள்ளார்.
தொண்டு நிறுவனத்தின் முதல் முதலீடாக தான் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் முழுச்சம்பளத்தையும் அளிக்கவுள்ளார். இதற்கான பணிகளில் தற்போது ஜி.வி.பிரகாஷ் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளார்.
தொண்டு நிறுவனம் தொடங்க பல்வேறு அரசாங்க வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதால் அனைத்து பணிகளும் முடிந்தவுடன் முறையாக அறிவிக்கவுள்ளார் ஜி.வி.பிரகாஷ்.
கான்பூரில் இன்று இரவு நடைபெற்ற முதல் இருபது20 கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வீழ்த்தியது.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபது20 கிரிக்கெட் தொடர் இன்று கான்பூரில் ஆரம்பமானது.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணித் தலைவர் மோர்கன் முதலில் களத்தடுப்பை மேற்கொள்ள முடிவு செய்தார்.
இந்திய அணியில் ரெய்னா, புதுமுக வீரராக பர்வேஸ் ரசூல் ஆகியோர் இடம்பிடித்தனர்.
முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 147 ஓட்டங்களை பெற்றது. இந்திய அணியில் டோனி 36 ரெய்னா 34 மற்றும் கோலி 29 ஓட்டங்களை பெற்றனர்.
பின்னர் 148 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணியின் ரோய், பில்லிங்ஸ் ஆகியோர் ஆரம்ப வீரர்களாக களம் இறங்கினார்கள்.
இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 3.2 ஓவரில் 42 ஓட்டங்களை குவித்தது. 2ஆவது ஓவரை பும்ப்ரா வீசினார். இந்த ஓவரில் ஒரு சிக்ஸ், மூன்று பவுண்டரிகளுடன் 20 ஓட்டங்களை; விளாசினார் பில்லிங்ஸ்.
4ஆவது ஓவரில் சாஹல் இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினார். 3ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஜோ ரூட், மோர்கன் நெருக்கடி இல்லாமல் எளிதாக விளையாடினார்கள்.
இந்த ஜோடி 3ஆவது விக்கெட்டுக்காக 83 ஓட்டங்களை பெற்ற போது மோர்கன் 38 பந்தில் 51 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.
4ஆவது விக்கெட்டுக்கு ஜோ ரூட் உடன் பென் ஸ்டோக்ஸ் ஜோடி சேர்ந்தார். 18.1 ஓவரில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 148 ஓட்டங்களை பெற்று 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஜோ ரூட் 46 ஓட்டங்களுடனும், பென் ஸ்டோக்ஸ் 2 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட இருபது20 கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து 1-0 என முன்னிலைப் பெற்றுள்ளது. 2ஆவது இருபது20 கிரிக்கெட் போட்டி 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாக்பூரில் நடைபெறவுள்ளது.
அரச சேவையாளர்களின் சம்பளத்தை மீண்டும் அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஊழியர்களின் தொழில் தரத்தை மையமாக கொண்டு அவர்களுக்கான சம்பள அதிகரிப்பு வழங்கப்படவுள்ளது.
இரண்டாயிரம் ரூபா தொடக்கம் 16 ஆயிரம் ரூபா வரையிலான சம்பள அதிகரிப்பை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தேசிய தொழிற்சங்க முன்னணியின் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்தார்.
மேலதிக நேர வேலை சம்பளம் மற்றும் கடன் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டு இந்தாண்டு அரச சேவையாளர்களுக்கு சம்பள அதிகரிப்பு மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் அமைந்துள்ள அரச மருந்தாளர் சங்கத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடகவியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
லெபனான் நாட்டுக்கு தொழில் புரிய சென்ற நிலையில் காணாமல் போன எம். பஞ்சவர்ணம் என்ற பெண் தொடர்பாக தகவல்களை தேடி அறிவது அவசியம் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்தெரிவித்துள்ளது.
லெபனான் தூதரகத்திற்கு அந்த பெண் சம்பந்தமான தகவல்கள் அவசியம் என பணியகம்விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இந்த பெண் பற்றிய தகவல்களை அறிந்தவர்கள் இருந்தால் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் வெளிநாட்டு தொடர்புகள் பிரிவின் 011 4379328 என்றதொலைபேசி இலக்கத்துடன் தொடர்புக்கொண்டுஅறிவிக்குமாறு பணியகம் கேட்டுக்கொண்டுள்ளது.
எம்.பஞ்சவர்ணம் என்ற இந்த பெண் 2002ம் ஆண்டு லெபனான் சென்றுள்ளார்.2006ம் ஆண்டுக்கு பின்னர் அவர் பற்றி எந்த தகவலும் உறவினர்களுக்குகிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக தெரணியகலை, சமன்புரகம பிரதேசத்தை சேர்ந்த அண்ணாமலை பழனியாண்டிஎன்பவர், வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
வவுனியாவில் இடம்பெற்ற உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் நோக்கில் இன்று (26.01.2017) மாலை வவுனியா சிந்தாமணி ஆலயத்திற்கு முன்பாக ஒன்று திரண்ட இளைஞர்கள் பேரணியாக வீதி கண்டி வழியாக உணவு தவிர்ப்பு இடம்பெற்ற இடத்திற்கு ஊர்வலமாக வந்து தமது ஆதரவினை தெரிவித்தனர். இப் பேரணியில் பெருமளவாக இளைஞர்கள கலந்து கொண்டனர்.
எனினும் இன்றைய தினம் வவுனியாவிற்கு நேரில் வியஜம் செய்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் உணவு தவிர்ப்பு போரட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையில் இந்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
வவுனியாவில் சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன சற்றுமுன் நேரில் சென்று பார்வையிட்டார்.
காணாமல் போன உறவுகளுக்கு ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் எனக் கோரி தொடர்ந்து நான்கு நாட்களாக காணாமல் போனோரின் உறவினர்கள் சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்கள்.
இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன நேரில் சென்று பார்வையிட்டதுடன் அவர்களுடன் கலந்துரையாடல் ஒன்றையும் முன்னெடுத்துள்ளார்.
உண்ணாவிரதம் தற்காலிகமாக கைவிடப்பட்டது
வவுனியாவில் காணாமல்போனோரின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்ட காலவரையறையற்ற போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இன்றைய தினம் வவுனியாவிற்கு நேரில் வியஜம் செய்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் உணவு தவிர்ப்பு போரட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையில் இந்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக எமது செய்திளார் தெரிவித்துள்ளார்.
இந்த உறுதி மொழியின் பிரகாரம் எதிர்வரும் 9 ஆம் திகதி அலரி மாளிகையில் பிரதமர், இராஜாங்க அமைச்சர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோருடன் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 10 பேர் கொண்ட குழுவினர் நேிரில் கலந்துரையாடவுள்ளனர்.
தனது நாட்டு சக வீரரான நெஸ்ட்டா கார்ட்டர் தடை செய்யப்பட்ட ஒரு பொருளை பயன்படுத்தியுள்ளதாக பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளதால், தனது 9 ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களில் ஒன்றை ஜமைக்காவின் தடகள வீரர் உசைன் போல்ட் திருப்பியளிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
கடந்த 2008ம் ஆண்டில் பெய்ஜிங்கில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற ஜமைக்காவின் ஆண்கள் 4*100 மீட்டர் ரிலே ஓட்டப்பந்தய அணியில் கார்ட்டர் இடம்பெற்றார்.
கடந்த ஆண்டு, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐஓசி) மறுபடியும் சோதனை செய்த 454 ஊக்க மருந்து மாதிரி சோதனைகளில் கார்ட்டரின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரியும் சோதனை செய்யப்பட்டது.
இந்த சோதனையில் தடை செய்யப்பட்ட பொருளான மெத்தில் ஹெக்ஸா நெமினேன் என்ற வேதி பொருளை அவர் பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது.
கடந்த 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெற்ற அணியிலும் 31 வயதான கார்ட்டர் இடம்பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
திரிஷா-வருண் மணியன் காதலித்து நிச்சயதார்த்தம் வரை சென்று பின்னர் திருமணம் தீடீரென நின்றது அனைவருக்கும் தெரியும். திருமணத்திற்கு பின் தான் நடிக்கக்கூடாது என கண்டிஷன் போட்டதால் தான் திருமணத்தை நிறுத்தியதாக த்ரிஷா பின்னர் தெரிவித்தார்.
இதெல்லாம் நடந்து ஒரு வருடம் ஆகபோகிறது. தற்போது வருண் மணியன் மற்றொரு முன்னணி நடிகையுடன் காதலில் விழுந்துள்ளதாக செய்திவந்துள்ளது.
கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா போன்ற படங்களில் நடித்த பிந்து மாதவியை தான் வருண் மணியன் காதலிக்கிறாராம். இருவரும் ஒன்றாக பல்வேறு இடங்களில் சுற்றி வருகின்றனர். அந்த படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது.
வவுனியாவில் உணணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை பாதுகாக்குமாறு, வடக்கு முதல்வர் சீ.வீ.விக்னேஸ்வரன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் மற்றும் அரசியல் கைதிகள் தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும் எனக் கோரியே இந்த போரட்டம் நடத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், குடிநீரையேனும் எடுத்துக் கொள்ளாமல் சாகும் வரையில் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுவரும் இவர்கள் மிகவும் பலவீனமாக உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள முதல்வர், இது தொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுக்காவிடில் விலைமதிப்பற்ற சில உயிர்களை இழக்க நேரிடும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் சிரேஷ்ட அமைச்சர் ஒருவரை சம்பவ இடத்திற்கு அனுப்பி, போராட்டத்தை மேற்கொண்டு வருபவர்களுக்கு உறுதிமொழிகளை வழங்குமாறும் தனது கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒரு பெண் தனது கைகளில் ஜனாதிபதிக்கு அருகில் தனது மகள் இருப்பது போன்ற புகைப்படத்தை வைத்திருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள விக்னேஸ்வரன், குறைந்தபட்சம் குறித்த சிறுமி பற்றியேனும் ஆராய்ந்து அவரை அவரது தாயுடன் இணைக்குமாறும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பயங்கரவாதத் தடைச் சட்டம் உடனடியாக மீளப் பெறப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் வடக்கு முதல்வர் கோரியுள்ளார்.