வவுனியாவில் நேற்று(19.12.2016) இரவு ஏ9 வீதியில் வெடிபொருட்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மூன்று முறிப்பு பகுதியிலே இச் சம்பவம்இ டம்பெற்றுள்ளது. இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது..
வன்னி பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பணிப்புரைக்கு அமைவாக வவுனியா போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸார் விசேட சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் போது மதவாச்சியில் இருந்து வவுனியா நோக்கி வந்த முச்சக்கர வண்டியை மறித்து சோதனை செய்த போது குறித்த வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன.
பொலிசாரால் ஜெக்னேற்றர் – 199, ஜெக்னேற்றர் தொப்பி – 200, 10 மீற்றர் நீளமான வயர் றோல் – 5 மற்றும் பயணப்பை – 02 என்பன கைப்பற்றப்பட்டதுடன் முச்சக்கர வண்டியும் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா நீலியாமோட்டை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள காணியில் மாடு அடைக்கச்சென்ற ஒருவர் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று(19.12.2016) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இறந்த நிலையில் குடும்பஸ்தரின் சடலம் காணப்பட்டதை அவதானித்த ஊர் மக்கள், பொலிசாருக்கு தகவல் வழங்கியதையடுத்து பறயனாலங்குளம் பொலிசாரால் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பனங்காமம் பகுதியைச் சேர்ந்த எஸ்.குணசிங்கம் (வயது 60) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பறயனாலங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாடு தழுவிய ரீதியில் 48 மணிநேர பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க ஒன்றியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்தவகையில் நேற்று (19.12.2016) இரவு தொடக்கம் அமுலாகும் வகையில் பணி பகிஷ்கரிப்பு இடம்பெற்று வருகின்றது. வவுனியா மத்திய தபாலகத்திலும் ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதியோர் கொடுப்பனவுகளை பெறுவதற்கு முதியோர்கள் பலர் பல சிரமத்திற்கு மத்தியில் அஞ்சல் அலுவலகத்தினை நாடியபோதும் இப் பணிபுறக்கணிப்பு காரணமாக பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகுவதை அவதானிக்க கூடியதாக உள்ளது.
ஆட்சேர்ப்பு மற்றும் பதவி உயர்வுகளில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் நான்கு கோரிக்கைகளை முன்வைத்தே இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு இடம்பெற்றுவருவதாக ஒன்றியத்தின் இணைப்பாளர் கே. என். சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.
யாழ்.இளவாலை பகுதியில் பற்றை ஒன்றுக்குள் இருந்து அழுகிய நிலையில் சடலம் ஒன்றை இளவாலை பொலிஸார் மீட்டுள்ளனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் கம்பஹா மாவட்டத்தை சேர்ந்த சுதுகல தேவகே குணசேன என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பற்றைக்குள் அழுகிய நிலையில் சடலம் ஒன்று காணப்படுவதை அவதானித்த பொதுமக்கள், இளவாலை பொலிஸாருக்கு தகவல் வழங்கினர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
தொடர்ந்து மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் பதில் நீதிவான் தம்பிமுத்து மரண விராசணைகளை மேற்கொண்ட பின்னர் சடலம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
சடலத்தின் சட்டை பையில் இருந்து தொலைபேசி இலக்கம் ஒன்று மீட்கப்பட்டு, அந்த தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டபோது சடலமாக மீட்கப்பட்ட நபர் கம்பஹா மாவட்டத்தை சேர்ந்த சுதுகல தேவகே குணசேன என அடையாளம் காணப் பட்டுள்ளதுடன் இந்த நபர் ஊர் ஊராக திரிபவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமை சாவகச்சேரி சங்கத்தானை பகுதியில் பாரிய வாகன விபத்து ஒன்று இடம்பெற்ற நிலையில் 11 பேர் உயிரிழந்தனர்.
வேன் ஒன்றும் அரச பேரூந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டமையினால் இந்த விபத்து இடம்பெற்றிருந்தது. இதில் தென் பகுதியில் இருந்து சுற்றுலா வந்த பெருன்பான்மையின மக்கள் 11 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், குறித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி அப்பகுதி மக்களால் இன்று மாலை அஞ்சலி செலுத்தப்பட்டது.
விபத்து இடம்பெற்ற பகுதியில் 11 மெழுகுவர்தி ஏற்றி மலர் தூவி பொது மக்கள் அஞ்சலி செலுத்தியிருந்தனர். மேலும், உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக கண்ணீர் அஞ்சலி துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வழித்தட பயணிகள் சிற்றூர்தி உரிமையாளர்களின், வரையறுக்கப்பட்ட நிறுவன ஊழியர்களினால் இந்த துண்டு பிரசுரங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஜனவரி மாத நடுப்பகுதியில் வெளியிடப்பட உள்ளது.
எதிர்வரும் மாதத்தின் இரண்டாம் வாரமளவில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் டபிள்யு.ஜே.எம். புஸ்பகுமார கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற உயர்தரப் பரீட்சையில் தொழில்நுட்பப் பிரிவில் 30000 மாணவ மாணவியர் தோற்றியிருந்தனர்.
இவர்களின் செய்முறை பரீட்சைக்காக மேலதிக நேரமொன்றை ஒதுக்க நேரிட்டிருந்தது. செய்முறைப் பரீட்சையின் புள்ளிகள் எழுத்துப் பரீட்சையின் புள்ளிகளுடன் சேர்க்கப்பட உள்ளது.
எழுத்துப் பரீட்சைக்கு 75 புள்ளிகளும் செய்முறைப் பரீட்சைக்கு 25 புள்ளிகளும் வழங்கப்பட உள்ளன. இம்முறை உயர்தரப் பரீட்சைக்காக மூன்று லட்சத்திற்கும் அதிகமான பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர் என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
சுவிஸர்லாந்து சூரிச் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சர்வதேச ஊடகங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளன.
மேலும், இந்த துப்பாக்கி பிரயோகத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளதாகவும், அவர்களின் நிலை கவலைக்கிடமான முறையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இஸ்லாமிய பள்ளிவாசல் ஒன்றை இலக்கு வைத்து இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், தற்போது குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் குறிப்பிடுகின்றன.
வவுனியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் மது போதையில் வாகனம் செலுத்திய கைது செய்வதற்கான விசேட சுற்றிவளைப்பு ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இதன் போது 83 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சாவக்கச்சேரி பகுதியில் நேற்று முந்தினம் இடம்பெற்ற வாகன விபத்தையடுத்து பொலிஸார் நேற்று இந்த விசேட சுற்றிவளைப்பை முன்னெடுத்தனர்.
நேற்று முன்தினமிரவு 7 மணிக்கு ஆரம்பமான இந்த சுற்றிவளைப்பு இரவு 10 மணிவரை முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது மதுபேபாதையில் வாகனம் செலுத்தும் சாரதிகள் கண்டறியப்பட்டனர். இதன் போது 83 சாரதிகள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்தோனேஷியாவில் துவிச்சக்கரவண்டியொன்றை திருடியதாக குற்றம் சுமத்தப்பட்ட அவுஸ்திரேலிய ஜோடியொன்று, தமது குற்றத்தை ஒப்புக்கொள்ளும் வாசகம் அடங்கிய பதாகையுடன் வீதியில் வலம்வந்தனர்.
இந்தோனேஷியாவின் பிரபல சுற்றுலாத் தலமான பாலி தீவுக்கு அருகிலுள்ளகிலி ட்ரவான்கான் எனும் தீவில் துவிச்சக்கர வண்டியொ ன்றைத் திருடியதாக அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் குற்றம் சுமத்தப்பட்டனர்.
இவர்கள் சைக்கிளொன்றை திருடுவது கண்காணிப்பு கெமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அதையடுத்து, இவர்கள் மேற்படி பதாகையை கழுத்தில் மாட்டியவாறு வீதிகளில் வலம் வந்தனர்.
“நான் திருடன். நான் செய்ததை நீங்கள் செய்யாதீர்கள்” என அதில் எழுதப்பட்டிருந்தது. ட்ரவான்கான் தீவில் சுழியோடல் நிலையமொன்றை நடத்தும் , ஒருவர் இது தொடர்பாக, குற்றம் புரிந்தோருக்கு உள்ளூர் காவல் துறையினரால் இத்தகைய தண்டனை அளிக்கப்படுவது வழக்கம் எனக் கூறியுள்ளார்.
“இது ஒரு சிறிய தீவு, பொலிஸாரின் பிரசன்னம் குறைவு, உள்ளூர் மக்கள் இணைந்து உள்ளூர் பாதுகாப்புப் படையொன்றை ஸ்தாபித்துள்ளனர். இந்தோனேஷிய பெரு நிலப்பரப்பிரிலுள்ள அரச அதிகாரிகளால் இப்படை நிர்வகிக்கப்படுகிறது” எனவும் அவர் தெரிவத்துள்ளார்.
சுமார் ஒரு வருடமாக அங்கு தங்கியுள்ள மைக் என்பவர் இது தொடர்பாக கூறுகையில், திருட்டுக் குற்றங்களுக்கு இத்தகைய தண்டனை அளிக்கப்படுகிறது. 7, 8 தடவைகள் இது போன்று நடந்ததை நான் கண்டுள்ளேன். உல்லாசப் பயணிகள் மாத்திரமல்லாமல் உள்ளூர்வாசிகளுக்கும் இத் தண்டனை அளிக்கப்படுகிறது” எனவும் தெரிவித்துள்ளார்.
டியூசன் வகுப்பு வைத்து பாடம் நடத்தி வந்த மூன்று இளைஞர்கள் 30 க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி வந்தமை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
தமிழகத்தின் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (25). டிப்ளோமா கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துள்ளார். அதே பகுதியை சேர்ந்தவர்கள் ஈஸ்வரன் (26), மற்றொரு சிவக்குமார் (27).
நண்பர்களான இவர்கள் 3 பேரும் சேர்ந்து பாலக்கோடு மற்றும் தர்மபுரி நெசவாளர் கொலனி பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக டியூசன் நிலையம் நடத்தி வருகின்றனர்.
இங்கு 10 முதல் 12 -ஆம் வகுப்பு வரை படிக்கும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். அங்கு மாணவிகளே அதிகளவில் படித்து வந்தனர்.
இந்தநிலையில் டியூசனுக்கு வரும் மாணவிகள் சிலரை மயக்க மருந்து கொடுத்து சிவக்குமார் உட்பட சிலர் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியானது.
இது குறித்து தகவலறிந்த பாலக்கோடு பொலிஸார் விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் தெரிய வந்ததாவது, டியூசன் நிலையம் நடத்திய சிவக்குமார் மற்றும் அவரது நண்பர்களும் டிப்ளோமா கம்ப்யூட்டர் சயன்ஸ் படித்துள்ளனர்.
சரியான வேலை எதுவும் கிடைக்காததால் 3 பேரும் சேர்ந்து அங்கு டியூசன் சென்டர் நடத்த முடிவு செய்தனர். அதன்படி பாலக்கோடு, தர்மபுரி பகுதியில் டியூசன் சென்டரை கடந்த 4 வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்தனர்.
அந்த டியூசன் சென்டரில் பாலக்கோடு மற்றும் தர்மபுரி பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படிக்க சேர்ந்தனர். குறுகிய நாட்களில் அதிகளவில் மாணவ மாணவிகள் சேர்ந்ததால் 3 பேரும் 2 சென்டர்களிலும் மாறி மாறி பாடம் நடத்தினர்.
டியூசன் நிலையம் தொடங்கிய சில மாதங்களிலேயே சிவக்குமார் தனது பாலியல் சீண்டல்களை ஆரம்பித்துள்ளார். அப்போது அழகாக இருக்கும் மாணவிகளுக்கு தனியாக அதிக நேரம் பாடம் சொல்லிக் கொடுப்பது போல நடித்து அவர்களிடம் சிரித்து சிரித்து பழகியுள்ளார்.
அந்த மாணவிகளை தனியாக டியூசனுக்கு வரவழைத்த சிவக்குமார் அவர்களுடன் நெருங்கிப் பழகியுள்ளார். அப்போது தனது காம இச்சைக்கு பயன்படுத்த முடிவு செய்த அவர் பாசத்தோடு அவர்களுக்கு வழங்குவது போல டீ மற்றும் குளிர்பானங்களை அடிக்கடி வாங்கி கொடுத்துள்ளார்.
இதில் சில மாணவிகளுக்கு குளிர்பானங்களில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார். மாணவிகள் மயங்கி விழுந்ததும் அவர்களிடம் காம இச்சையை தீர்த்துக்கொண்டுள்ளார். அதனை செல்போன்களில் வீடியோவாக சிவக்குமார் எடுத்துள்ளார்.
மாணவிகள் மயக்கம் தெளிந்ததும் அவர்களிடம் நைசாக பேசி வீட்டுக்கு அனுப்பியும் வைத்துள்ளார். பின்னர் சமயம் கிடைக்கும்போது சிவக்குமார் அந்த மாணவிகளை தனியாக அழை த்து தான் சில்மிஷத்தில் ஈடுபட்டமை தொடர்பான வீடியோவை காட்டியுள்ளார்.
அதனை பார்த்து அதிர்ச்சி அடைவதால் மாணவிகள் இந்த ஆபாச வீடியோவை வெளியிடாமல் இருக்க வேண்டுமானால் தன்னுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என மிரட்டியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியில் உறைந்து போகும் மாணவிகளை தன்னுடைய காம இச்சைக்கு சிவக்குமார் அடிக்கடி பயன்படுத்தி உள்ளார். அதனையும் வீடியோவாக படம் பிடித்து தனது நண்பர்களான ஈஸ்வரன் மற்றும் மற்றொரு சிவக்குமாருக்கும் அதனை காட்டியுள்ளார்.
அவர்கள் இருவரும் அந்த ஆபாச வீடியோவை மாணவிகளுடன் காட்டி மிரட்டி மாறி, மாறி உல்லாசமாக இருந்துள்ளனர். இதில் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் வெளியில் சொல்லப் பயந்து அப்படியே அவர்களின் காம இச்சைக்கு இசைந்துள்ளனர்.
இப்படியாக இதுவரை 30-க்கும் மேற்பட்ட மாணவிகளை ஆசிரியர்கள் என்ற போர்வையில் தங்களது காம இச்சை க்கு பயன்படுத்தியுள்ளனர்.
இந்த கொடுர சம்பவம் கடந்த இரு வருடங்களுக்கும் மேல் சத்தம் இல்லாமல் அந்த டியூசன் சென்ட ரில் அரங்கேறியுள்ளது தான் அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
இதனை அங்கு படித்த ஒரு மாணவி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து அவர்கள் பாலக்கோடு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். அதன்பேரில் பொலிஸார் நடத்திய விசாரணையிலே இந்த பரபரப்பு தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
இந்த காம லீலையில் சிவக்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் ஈஸ்வரன் மற்றொரு சிவக்குமாரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த ஆபாச வீடியோக்களையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும் இதில் தொடர்புடைய மற்றொரு நபரையும் தேடிவரும் பொலிஸார் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எதிர்வரும் மார்ச் மாதத்தில் இலங்கைக்கு ஏற்பட கூடும் என எதிர்பார்க்கப்படும் கடும் வறட்சியை எதிர்கொள்வது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று கலந்துரையாடியுள்ளதுடன் விஷேட செயலணி ஒன்றை ஸ்தாபிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி மாத்தில் இருந்து ஏற்பட போகும் வறட்சி குறித்து நாட்டின் அனைத்து பிரதேசங்களுக்குமாக தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் முன்னெடுக்க இதன் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மின் தடை ஏற்படாதிருக்கவும் , குடிநீர் விநியோகிப்பது மற்றும் விவசாயிகளுக்கு ஒத்துழைப்புகளை வழங்குவது உள்ளிட்ட பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதியளவு நிவாரணங்கள் வழங்குவது தொடர்பாகவும் திட்டமிடப்பட்டது.
கடந்த வருடம் பிரம்மாண்டமாக உருவாகி வெளிவந்த பாகுபலி படத்தில் சிவகாமி கதாபாத்திரத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணனை நாம் யாராலும் மறக்க முடியாது.
தமிழ் சினிமாவின் பெருமையை வெளிமாநிலத்திலும் நிலைநாட்டிய பெருமை ரம்யா கிருஷ்ணனையே சாரும். அந்தளவுக்கு பாகுபலி படத்தில் அவருடைய நடிப்பு அனைவரையும் ஈர்த்தது.
இந்நிலையில், தற்போது ரம்யா கிருஷ்ணனின் முகத்தை மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடலோடு பொருத்தி, போஸ்டர் ஒன்றை வெளியிட்டிருந்தது.
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமானால் எப்படியிருக்கும் என்ற யூகத்தோடு அந்த போஸ்டர் வெளிவந்தது. இவரை மட்டுமில்லாது, அஜித், விஜய், சிம்பு, மாதவன் உள்ளிட்டவர்களின் முகத்தையும் பிரபலங்களின் உடலோடு பொருத்தி போஸ்டர்கள் வெளியிட்டுள்ளனர்.
ஆனால் இவற்றில் ரம்யா கிருஷ்ணன் அப்படியே அச்சு அசலாக ஜெயலலிதா கதாபாத்திரத்திற்கு பொருந்தியிருந்தார். எனவே, அவரிடம் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமானால் அதில் நடிப்பீர்களா என்று கேட்டதற்கு அவர் கூறும்போது,
நிறைய பேர் என்னிடம் பலமுறை உங்களுடைய கனவு கதாபாத்திரம் எது என்று கேட்டுள்ளார்கள். அப்போதெல்லாம் நான் எந்த பதிலும் கூறவில்லை.
இப்பொழுது நான் கூறுகிறேன், என்னுடைய வாழ்நாள் கனவு கதாபாத்திரம் ஜெயலலிதா அம்மாதான்.
அவர்களுடைய கதாபாத்திரத்தில் நடிப்பது ரொம்பவும் சிரமமான ஒன்றுதான். நல்ல தயாரிப்பாளர்கள், நல்ல திரைக்கதையோடு இயக்குனர்கள் என்னை அணுகினால், அம்மாவின் கதாபாத்திரத்தில் கண்டிப்பாக நடிப்பேன் என்று கூறியுள்ளார்.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மாவீரா்களையும், மண்ணையும், தமிழ் மக்களையும் மதிப்பவா்களாக இருந்தால் 31 ஆம் திகதி பாராளுமன்ற பதவியை இராஜினாமா செய்யவேண்டும் ஈரோஸ் பகிரங்கமா வேண்டுகோள் விடுக்கிறது.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு விடுதலைப் போராட்டத்தை மதிக்கிற சக்தியாக இருந்தால், தமிழ் மக்களையும் தமிழ் மண்ணையும் மதிக்கிறவா்களாக இருந்தால், இந்த மண்ணுக்காக தங்கள் உயிர்களை விட்ட ஆயிரக்கணக்காக இளைஞா் யுவதிகள் கணம் பண்ணுகின்றவா்களாக இருந்தால், இலட்சக்கணகாக கொல்லப்பட்ட தமிழ் மக்களை நேசிக்கின்றவா்களாக இருந்தால், நேர்மையானவா்களாக இருந்தால் நீங்கள் அனைவரும் இந்த 31 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினா் பதவிகளை இராஜினாம் செய்ய வேண்டும். இதனை செய்வார்களா? என அதன் செயலாளா் நாயகம் இ. பிரபாகரன் கேள்வி எழுப்பி உள்ளார்
இன்று (19) கிளிநொச்சியில் இடமபெற்ற ஊடகவியலாளா் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பி உள்ளார்
பிரமதாச காலத்தில் கூறினோம் போரை நிறுத்துங்கள் தீர்வை முன்வையுங்கள் இல்லையெனில் பாராளுமன்ற உறுப்பினா் பதவியை இராஜனாம் செய்துவிடுவோம் என்று, ஆனால் பிரமதாச அவ்வாறு செய்ய, நாங்கள் ஈரோஸின் 13 பாராளுமன்ற உறுப்பினா்களும் பதவிகளை இராஜினாமம் செய்து பாராளுமன்றத்தை விட்டு வெளியேறினோம். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதனை செய்யுமா? எனக் கேள்வி எழுப்பிய அவா், தமிழ் மக்கள் 2009 இற்கு பின்னா் நல்ல தலைமையின்றி காணப்படுகின்றனா். எனவே அரசியல் ரீதியில் தமிழ் மக்ளுக்கான நல்ல தலைமையை உருவாக்க வடக்கு கிழக்கு மலையக தமிழ் மக்கள் அணிதிரள வேண்டும் என ஈழவா் ஜனநாயக முன்னணி (ஈரோஸ்) அழைப்பு விடுத்துள்ளது.
நாட்டில் உள்ள அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்று சோ்ந்தாலும் தமிழ் மக்களுக்கான தீர்வை பெற்றுகொள்ள முடியாது, காரணம் கடந்த காலங்களில் இந்தக் கட்சிகள் எல்லாம் ஒன்று சோ்ந்தது தங்களின் சுயநலனுக்காக எனவே தான் நாம் கோருகின்றோம் தமிழ் மக்களுக்கு நல்ல தீர்வு கிடைக்க வேண்டும் என்றால் வடக்கு கிழக்கு மலையக தமிழ் மக்கள் அனைவரும் ஓரணியில் நல்ல தலைமைத்துவத்தை ஏற்படுத்த அணிதிரள வேண்டும்.
தற்போது தமிழ் மக்கள் நல்ல தலைமைத்துவம் இன்றி வெற்றிடத்திற்குள் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். ஒரு நல்ல தலைமைத்துவத்தை ஏற்படுத்துவது தான் ஈரோஸின் முதலாவது நோக்கம். எனவே தான் நாங்கள் இச் சந்தா்ப்பத்தில் சீரழிந்து போயுள்ள சமூகத்தை கட்டியெழுப்புவதற்கு பொதுமக்கள், புத்திஜீவிகள் மட்டுமல்ல மாற்று அரசியல் தரப்புக்களையும் அழைக்கின்றோம், ஒன்றிணைந்து செயற்பட வாருங்கள் என்று. நாங்களும் உங்கள் அனைவரிடமும் இணைந்து செயற்பட தயாராக இருக்கின்றோம்.
தமிழ் மக்கள் தற்போதுள்ள தங்களின் பிரதிநிதிகளால் தொடா்ந்தும் ஏமாற்றப்பட்டு வருகின்றார்கள். தமிழ் மக்களின் வாக்குகளை மத்திய அரசிடம் கோடிக்கணக்கான பணத்திற்கு விற்கின்றார்கள். தமிழ் மக்களின் தற்போதைய தலைமை தொடா்பில் குழந்தை பிள்ளைகளுக்கு கூட தெரியும் அவா்களால் எதுவும் செய்ய முடியாது. அவா்களால் தமிழ் மக்களுக்கு நல்ல தீர்வை பெற்றுக்கொடுக்க முடியாது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தோ்தல் காலங்களில் மட்டுமே தீ்ர்வை பெற்றுத் தருவோம் என பேசுவார்கள் பின்னா் அதனை கைவிட்டுவிடுவார்கள். கடந்த வருடமும் சொன்னார்கள், இந்த வருட இறுதிக்குள் தீர்வை பெற்றுதராவிட்டால் நாங்கள் பதவி விலகிவிடுவோம் என்று. ஆனால் அவ்வாறு செய்வார்களா? இல்லை ஆனால் ஈரோஸால் அப்படி சொல்ல முடியும் அதற்கு அந்த தகுதி இருக்கிறது. ஈரோஸ் ஐக்கிய இலங்கைக்குள் சமஸ்டி முறையிலான தீர்வையே வலியுறுத்துகிறது எனவும் அவர் தெரிவித்தார்.
ஜேர்மன் தலைநகர் பெர்லினில் பொது மக்கள் கிறிஸ்துமஸ் அங்காடி ஒன்றில் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்த போது, அங்கு வேகமாக வந்த லொறி ஒன்று மோதியதால் பாரிய விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த பாரிய விபத்தில் 12 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 45 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், குறித்த பகுதியில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், இது தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என அந்நாட்டு பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். அத்துடன், பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
அம்பாறை – கரங்காவ பிரதேசத்தில் திடீரென வீதியை கடந்த காட்டு யானையை பார்த்து பயந்து மோட்டார் சைக்கிள் செலுத்துனர் ஒருவர் கெப் வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.
குறித்த சம்பவம், நேற்று (19) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார். மேலும், விபத்தில் காயமமைந்துள்ளவர் 35 வயதான அதே பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளினை கட்டுப்படுத்த முடியாத நிலையில் முன்னாள் வந்த கெப் வண்டியில் மோதியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, காயமடைந்துள்ளவரின் நிலை கவலைக்கிடமாக இல்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சகலதுறை வீரராக ஜெலித்து வரும் இந்திய வீரர் அஸ்வின் 31 ஆண்டுகளுக்கு பிறகு உலக அளவில் ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
டெஸ்ட் அரங்கில் சுழலில் மட்டும் அசத்தி வந்த அஸ்வின் தற்போது எல்லாம் துடுப்பாட்டத்திலும் பட்டையை கிளப்பி வருகிறார்.
ஒரு டெஸ்ட் தொடரில் 250 ஓட்டங்களும், 25 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்தவர்கள் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 7 பேர் மட்டும் உள்ளனர். தற்போது இந்த பட்டியலில் இந்திய அணியின் சகலதுறை வீரரான அஸ்வினும் இணைந்துள்ளார்.
இந்த சாதனையை தற்போது நடந்து வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரிலே அவர் நிகழ்த்தியுள்ளார்.
முன்னதாக இந்திய அணி சார்பில் கபில் தேவ் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
அவர் 1979-80ம் ஆண்டில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான 6 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 278 ஓட்டங்களும், 32 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தார்.