முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பியசேன கைது!!

Piyasena

தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டகளப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.பியசேன கொள்ளுபிட்டி பொலிஸாரினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சியின் போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.பியசேனவுக்கு, பொருளாதார அமைச்சின் கீழ் வழங்கப்பட்டிருந்த பிராடோ ஜீப் வண்டி, கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் நேற்றைய தினம் கைப்பற்றப்பட்டிருந்தது.

அரசுக்கு சொந்தமான குறித்த வாகனத்தை நாடாளுமன்ற உறுப்பினரிடம் இருந்து மீண்டும் அரசு பெறுவதற்கு கடந்த வருடங்களில் எடுத்த முயற்சிகள் அனைத்தும் பலனளிக்கவில்லை என்று அரசு குறிப்பிட்டிருந்தது.

எனினும் குறித்த வாகனம் சாரதியுடன் கொள்ளுபிட்டி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதோடு இதன் சாரதியும் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை குறித்த சாரதி நேற்று முன் தினமே சாரதியாக இணைந்து கொண்டவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்துக்கு விசாரணைகளுக்கு அழைக்கப்பட்டிருந்த பியசேன, கொள்ளுபிட்டி பொலிஸாரினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

இளம் யுவதி துஷ்பிரயோகம் : குடும்பஸ்தர் கைது!!

Abuse

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கர்பலா மொடர்ன் பாம் வீட்டுத்திட்ட பகுதியில் இளம் யுவதி ஒருவர் பாலியல்துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் குடும்பஸ்தர் ஒருவரை நேற்று கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்படும் யுவதி பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட யுவதியின் தாய் மத்திய கிழக்கு நாடு ஒன்றில் பணிப்பெண்ணாக இருந்து வரும் நிலையில், யுவதி உறவினர் பாதுகாப்பில் இருந்து வந்துள்ளார்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக உறவினர் வீட்டில் இருந்து வந்துள்ள நிலையில் யுவதியின் சித்தப்பாவினால் கடந்த இரு வருடங்களாக துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் மூன்று பிள்ளைகளின் தந்தை என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

கட்டாரில் தமிழர்கள் இருவருக்கு மரண தண்டனை : மேன்முறையீடு செய்துள்ள இந்தியா!!

Quatar

தமிழர்கள் இருவருக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனைக்கு எதிராக அந்நாட்டு உச்ச நீதி மன்றத்தில் இந்திய அரசாங்கம் மேன் முறையீடு செய்துள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சு இதனை உறுதிசெய்துள்ளது. பெண் ஒருவரை கொலை செய்த குற்றத்திற்காக கடந்த 2012ம் ஆண்டு தமிழகத்தை சேர்ந்த மூவரை கட்டார் நாட்டு பொலிஸார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அழகப்பா சுப்பிரமணி, விருதுநகரைச் சேர்ந்த செல்லத்துரை பெருமாள் மற்றும் சேலத்தைச் சேர்ந்த சிவக்குமார் அரசன் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம், குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கும், மரண தண்டனை விதித்து கட்டார் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இதனையடுத்து கட்டார் நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தின் உதவியுடன் மூவரும் மேன் முறையீடு செய்தனர்.

இதில் சிவக்குமார் அரசனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மட்டும் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

மற்றைய இருவருக்கும் மரண தண்டனையை உறுதி செய்து கட்டார் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், இரண்டு தமிழர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக, அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் இந்திய அரசு மேன் முறையீடு செய்துள்ளது.

இதனை இந்திய வெளிவிவகார அமைச்சு உறுதி செய்துள்ளது. அவர்களுக்கு சட்ட ரீதியாக உதவிகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

கடைக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி தீக்கிரை!!

21

கடைக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள லொறி தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. நாவிதன் வெளி 15ம் கொலனியில் தயாபரன் கெமிக்கல் ஸ்ரோர் உரிமையாளரின் லொறி இன்று அதிகாலை 3.30 மணியளவில் எரியூட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெரியவருவதாவது.

வழமைபோன்று தொழிலை முடித்துவிட்டு அவரது கடைக்கு முன்னால் லொறியைநிறுத்திவிட்டு நித்திரைக்கு சென்றதாகவும் பின்னர் 3.30 மணியளவில் லொறி எரிந்து கொண்டிருந்ததாகவும் பின்னர் அயலவர்களின் உதவியுடன் தீயை ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரமுடிந்ததாகவும் வாகனத்தின் முன்பகுதி முற்றுமுழுதாக எரிந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

எரியூட்டப்பட்ட வாகனத்தின் உரிமையாளர் கிழக்கு மாகாணசபை உறுப்பினரின் சகோதரனுடையது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளைசவளக்கடை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

22

கிராம சேவகர் போட்டிப் பரீட்சைக்கு இரண்டு லட்சம் பேர் விண்ணப்பம்!!

Exam

கிராம சேவகர் போட்டிப் பரீட்சைக்காக இம்முறை இரண்டு லட்சம் பேர் தோற்றவுள்ளனதாக அமைச்சர் வஜிர அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்

கிராம சேவகர்களை இணைத்துக் கொள்ளும் நோக்கில் நடைபெறவுள்ள போட்டிப் பரீட்சை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 3ம் திகதி நடைபெறவுள்ளது. இதற்காக பல்வேறு மாவட்டங்களிலிருந்து விண்ணப்பம் செய்துள்ளனர்.

சுமார் இரண்டாயிரம் கிராம உத்தியோகத்தர்களை நியமிப்பதற்காக இந்தப் போட்டி பரீட்சை நடத்தப்படுகின்றது. போட்டிப் பரீட்சையில் அதிகளவு புள்ளிகளைப் பெற்றுக்கொள்ளும் விண்ணப்பதாரிகள் கிராம சேவகர்களாக நியமிக்கப்பட உள்ளனர்.

வடக்கு கிழக்கில் அதிகளவில் கிராம சேவகர்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றது. அந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

கஞ்சா பயன்படுத்திய 3 பாடசாலை மாணவர்கள் கைது!!

Arrested

காலியில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவர்கள் மூவர் கஞ்சா பயன்படுத்திய நிலையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மாணவர்கள் பாடசாலை சீருடையுடன் பாடசாலைக்கு வெளியே கஞ்சா பயன்படுத்திய நிலையில் இருந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் இந்த மாணவர்கள் மூவரும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து இந்த பாடசாலைக்கு வந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மாணவர்களை இன்று காலி நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

முத்தையா முரளிதரன் பிடிவாதக்காரன் : உண்மையை உடைத்த ஜெயவர்த்தன!!

murali-mahela

முத்தையா முரளிதரன் எப்போதும் தற்காப்பு மனநிலையை கொண்டவர் என்று இலங்கை அணியின் முன்னாள் தலைவர் ஜெயவர்த்தன வெளிப்படையாக கூறியுள்ளார்.

இலங்கை அணியின் தலைவராக இருந்த போது முரளிதரன் விடயத்தில் அவரை ஊக்குவிப்பது தனக்கு சவாலாக இருந்ததாக ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார்.

பிரபல இணையத்தளம் ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், நான் இலங்கை அணியின் தலைவராக இருந்த போது முரளிதரனை தற்காப்பு மனநிலையில் இருந்து வெளியே கொண்டு வருவது சவாலாக இருந்தது.

இருப்பினும் அவரது அந்த குணம் அவரை எந்த நிலையிலும் கீழே தள்ளிவிடவில்லை. நான் மாறுபட்ட தலைவராக இருந்தேன்.

அவர் தாக்குதல் பந்துவீச்சாளராக இருப்பதையே நான் விரும்பினேன். அதற்கு அவரை நான் அதிகமாக சமாதானப்படுத்த வேண்டியிருந்தது. ஆனால் அவர் கொஞ்சம் பிடிவாதம் பிடித்தவர்.

அவருக்கான வாய்ப்புகளை உருவாக்கி தருவதில் நான் முனைப்புடனே இருந்தேன். அர்ஜூன ரணதுங்கவும் இதே முறையை தான் முரளிதரனிடம் பின்பற்றி இருப்பார் என்று நினைக்கிறேன்.

ஆனால் சனத் ஜெயசூரியவுக்கு இது கடினமான வேலையாக இருந்தது. ஆனால் நான் முரளிதரனை எப்போதும் ஊக்கமளித்து அவரின் முழுத்திறமையும் வெளிக் கொண்டு வருவதில் கவனம் செலுத்தியதாக தெரிவித்துள்ளார்.

மிக குறைந்த விலையில் விற்கப்படும் இயந்திர துப்பாக்கிகள்!!

11

பாகிஸ்தானில் உள்ள தாரா நகரில் துப்பாக்கிகள் மிக குறைந்த விலைக்கு கிடைக்கின்றன. மலைகளால் சூழப்பட்ட இந்த நகரில் வசிக்கும் தொழிலாளர்கள் துப்பாக்கிகளை மிக அருமையாக தயாரிக்கும் அனுபவம் கொண்டவர்கள்.

பிற நாட்டினர் பயன்படுத்தும் நவீன துப்பாக்கிகளை பார்த்தால் கூட, எவ்வித மாற்றமும் இன்றி அதே போன்று இவர்கள் தயாரித்துவிடுவார்கள்.

இவர்களிடம் இருந்தே பாகிஸ்தான் தீவிரவாதிகள் துப்பாக்கிகளை விலை கொடுத்து வாங்குகின்றனர், மேலும் மலை சூழ்ந்த இடம் என்பதால் தீவிரவாதிகளுக்கும் இது வசதியாக அமைந்துள்ளது.

இந்நிலையில் சமீப காலமாக தீவிரவாதிகளை ஒடுக்கும் பணியில் பாகிஸ்தான் அரசு ஈடுபட்டுவருவதால், தாரா நகரில் வியாபாரம் மந்தமாகியுள்ளது, மேலும் நாட்டிற்குள் வரும் வெளிநாட்டினகளும் சோதனைக்கு உட்படுத்தப்படுவதால், ஏற்றுமதியும் செய்யப்படுவதில்லை.

ஆனால் பாகிஸ்தான் அரசு இந்த தாரா நகரில் இயங்கி வரும் இந்த துப்பாக்கி தொழிற்சாலையை மூடாமல் அப்படியே விட்டுள்ளதால், ரகசிய வியாபாரம் நடந்து வருகிறது.

துருக்கி மற்றும் பல்கேரியாவில் தயாராகும் எம்.பி.5 ரக இயந்திர துப்பாக்கி இங்கு 7 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது.

12 13 14

உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி 4 பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்றிய இந்தோனேசியா!!

1

சர்வதே நாடுகளின் எதிர்ப்பை மீறி போதை பொருள் கடத்திய குற்றத்திற்காக இந்தோனேசியா அரசு 4 கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேசியா நாட்டிற்குள் போதை பொருள் கடத்தியதாக கடந்த 2004ம் ஆண்டு 14 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர், நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் இவர்கள் அனைவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

மரண தண்டனை நிறைவேற்றுவதற்கு 72 மணி நேரம் முன்னதாக கைதிகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் தகவல் அளிக்கப்படும்.

இதனை தொடர்ந்து, நைஜீரியா நாட்டை சேர்ந்த இருவர், செனகல் நாட்டை சேர்ந்த ஒருவர் மற்றும் இந்தோனேசிய நாட்டை சேர்ந்த ஒருவர் என 4 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என தகவல் வெளியானது.

இந்தோனேசியாவின் இந்த முடிவுக்கு சர்வதேச மன்னிப்பு சபை உள்ளிட்ட அமைப்பும் பிற நாடுகளும் மரண தண்டனையை ரத்து செய்யுமாறு வலியுறுத்தின.

ஆனால், உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி இந்தோனேசிய அரசு இன்று அதிகாலை 4 பேருக்கும் மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது.

ஜாவாவில் உள்ள Nusakambangan பகுதிக்கு கொண்டு செல்லப்பட்ட கைதிகள், துணியால் கண்கள் மூடப்பட்ட அவர்களை பொலிசார் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளனர்.

சர்வதேச அளவில் போதை பொருள் கடத்தலுக்கு மரண தண்டனை விதிக்கும் 33 நாடுகளில் இந்தோனேசியாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

2 3

காணாமல் போன 2 கல்லூரி மாணவிகள் எலும்புக் கூடாக மீட்கப்பட்டதால் பரபரப்பு!!

Body

சிவகங்கை மாவட்டத்தில் காணாமல் போன 2 சகோதரிகள் அங்குள்ள கண்மாய்ப் பகுதியில் எலும்புக் கூடுகளாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் வந்தவாசியைச் சேர்ந்தவர் கருப்பையா. விவசாயம் செய்து வரும் அவருக்கு புஷ்பா, அல்லி ராணி என 2 மனைவிகள் உள்ளனர்.

இதில் முதல் மனைவி புஷ்பா இறந்து விட்டார். அவரின் மகள்கள் சசிகலா, சுதா, லதா ஆகியோருக்கு திருமணமாகி விட்டது.

2வது மனைவிக்கு தங்கம் என்ற மகனும் பொன்னி, ஜெயப்பிரியா என்ற மகள்களும் உள்ளனர். பொன்னி மற்றும் அவரது சகோதரி ஜெயப்பிரியா இருவரும் சிவகங்கையில் உள்ள அரசு கல்லூரி ஒன்றில் படித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த மாதம் 18ம் திகதி இவர்கள் சகோதரி சுதாவை போனில் தொடர்பு கொண்டு தங்களுக்கு வாழ பிடிக்கவில்லை என்றும், தாங்கள் பூச்சி மருந்து குடித்து விட்டோம் எனவும் கூறியுள்ளனர்.

இதையடுத்து, அவரது தந்தை கருப்பையா பல இடங்களில் தேடியும் பொன்னி மற்றும் ஜெயப்பிரியாவை காணவில்லை.

இதனையடுத்து அவர் தன் மகள்களை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த பொலிசார் காணாமல் போனவர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில் வந்தவாசி அருகே உள்ள முத்துப்பட்டிணம் கண்மாய் பகுதியில் 2 எலும்புக் கூடுகள் கிடப்பதாக ஆடு மேய்க்கச் சென்றவர்கள் பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். மேலும், பெண்கள் அணியும் காலணிகள், உடைகள் ஆகியவை கிடப்பதாகவும் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

அங்கு கிடந்த உடைகள் மற்றும் காலணிகள் தனது மகளுடையது தான் என தந்தை கருப்பையாவும் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து பொலிசார் எலும்புக் கூடுகளை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நடந்தது என்ன என்பது பற்றி அறிய பொலிசார் இந்த வழக்கில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். அப்பகுதியில் 2 எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மணமுடித்த 14 வயது சிறுமியை 50 ஆயிரத்துக்கு விற்ற கணவர்!!

Girl

உத்தர பிரதேச மாநிலத்தில் சிறுமியை மணமுடித்த கணவரே 50 ஆயிரத்துக்கு விற்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தின் பனாரஸ் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி டெல்லியில் உள்ள அனாதை இல்லத்தில் வசித்து வந்துள்ளார். இந்த சிறுமியை ஆதரவற்றோர் இல்லத்திலிருந்து அழைத்து வந்த உறவினர் ஒருவர் சிறுமிக்கு வேறொரு நபருடன் திருமணம் செய்து வைத்துள்ளார்.

இந்நிலையில் வேலை வாங்கி தருவதாக கூறி சிறுமியை டெல்லியிலிருந்து மும்பைக்கு அழைந்து வந்த கணவர் 50 ஆயிரத்துக்கு வீட்டு வேலை செய்யும் பணியாளராக பெண் ஒருவரிடம் விற்றுவிட்டார்.

இதுதொடர்பாக அந்த சிறுமி மும்பை பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார். தன்னை வாங்கிய பெண் மும்பையில் மாலாட் பகுதியில் வசிப்பதாகவும், அங்கு வசிப்பவர்கள் அறிவுரைப்படி பொலிசில் புகார் அளித்துள்ளதாகவும் சிறுமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிசார் சம்மந்தப்பட்ட குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளனர். திருமணம் செய்த நபரும், விலைக்கு வாங்கிய பெண்ணும் தன்னை கடுமையாக தாக்கியதாக விசாரணையின் போது சிறுமி பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

இதில் அந்த சிறுமியின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது அந்த சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு பொலிசார் அனுப்பி வைத்துள்ளனர்.

உயிருக்கு போராடிய பெண் : அவசரமாக தரையிறங்கிய விமானம்!!

Oman Air

மஸ்கட்டில் இருந்து சென்னை வர வேண்டிய ஓமான் ஏர் விமானம் கோவாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அதில் இருந்த பெண் பயணிக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதையடுத்து விமானம் அவசரமாக கோவாவில் தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஸ்கட்டில் இருந்து ஓமான் ஏர் விமானம் சென்னை வந்து கொண்டிருந்தது. அப்போது விமானத்தில் இருந்த பெண்ணுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து இன்று காலை 7 மணியளவில், அந்த விமானம் கோவாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

அந்த பெண்மணியை மருத்துவமனைக்கு அனுப்பிய பிறகு விமானம் திட்டமிட்டபடி கோவாவில் இருந்து புறப்பட்டு சென்னை வந்து சேர்ந்தது.

இருப்பினும் அப்பெண்மணி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.

அவரது உடல் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. மரணம் அடைந்த பெண்ணின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

பெண்களின் ஆடைக் கலாச்சாரம் பாதுகாப்பானதா? ஆபத்தானதா?

drssing

மென்மையானதும் கவர்ச்சிகரமானதுமான உடலமைப்பு கொண்ட பெண்கள் அணியும் ஆடைகள் பலவிதமான ஜன்னல்களோடும் உடலோடு இறுக்கமாக ஒட்டியவையாகவும் நீளம் குறைந்தவையாகவும் கைகால்கள் இல்லாதவை யாகவும் இருப்பதைக் காண்கிறோம்.

பெண் என்பவள் பலவீனமானவள், அவளது உடலின் கவர்ச்சி கண்டு ஏதாவது அந்நிய ஆண் ஈர்க்கப்பட்டால் அங்கு அவளது கற்பும் தொடர்ந்து உயிரும் பறிபோக வாய்ப்பு உண்டு என்பதை நாம் அனைவரும் அறிந்தே இருக்கிறோம்.

அதனால் இந்த விதமான ஆடைகள் பாதுகாப்பு அற்றவை என்பதை நிரூபிக்க சான்றுகள் தேவையில்லை. அன்றாடம் தொடர்ந்து அதிகரித்துவரும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களே இதை உறுதிப்படுத்துகின்றன.

தேசிய குற்றவியல் பதிவகத்தின் தரும் புள்ளிவிவரப்படி நம் நாட்டில் ஒவ்வொரு நாளும் 65 பெண்கள் பலாத்காரம் செய்யப்படுகின்றார். (அதாவது ஒவ்வொரு 22 நிமிடங்களுக்கும் ஒரு பெண் வீதம் இதற்கு பலியாகிறார்கள்). இந்த குற்றங்களுக்குப் பின்னால் பல காரணங்கள் இருந்தாலும் பெண்களின் ஆடைக்குறைப்பு ஒரு முக்கிய காரணமாக உள்ளது.

நமது மகளோ அல்லது உடன்பிறந்த சகோதரியோ அல்லது பெற்றெடுத்த தாயோ அல்லது கட்டிய மனைவியோ மேற்கூறப்பட்ட பாதிப்புகளுக்கு உள்ளாகக் கூடாது என்பதில் நாம் குறியாக இருக்கிறோம்.

நமது குடும்ப அமைப்பு சீர்குலையக் கூடாது என்பது நம்மில் ஒவ்வொருவரதும் விருப்பம்

பொதுவாகவே நமக்கு சொந்தமான ஒரு விலைமதிப்புள்ள ஒரு பொருளையோ அல்லது பணத்தையோ வெளியே எடுத்துச் செல்லவேண்டி வந்தால் அதை பத்திரமாக பொதுமக்கள் பார்வையில் படாமல் இருக்க மறைத்துதான் எடுத்துச் செல்வோம். காரணம் அதைக் கவர்ந்தெடுக்க கள்வர்கள் வெளியே காத்திருக்கிறார்கள் என்பதை நாம் நன்கு உணர்ந்திருக்கிறோம்.

இங்கு நம் அன்புக்குரியவர்களின் உடலை காட்சிக்கு வைத்து காமுகர்களுக்கு அழைப்பு கொடுப்பதுபோலல்லவா அமைகிறது பெண்களின் ஆடை? இவ்வாறு நம் பணத்தை விட,செல்வத்தை விட விலைமதிக்கமுடியாத நம்மவர்களின் கற்பையும் உயிரையும் துச்சமாகக் கருதச் செய்வது எது?

இவ்வாறு நமக்கும் குடும்பத்துக்கும் சமூகத்துக்கும் பெரும் ஆபத்தானது என்று அறிந்தும் பெண்களின் ஆடைக்குறைப்புக் கலாச்சாரத்தைக் கட்டுப்படுத்த பெண்கள் முன்வர வேண்டும்.

நாகரீகம் என்ற போர்வையில் உடலை காட்டாமல் கௌரவமாக உடை அணிய பெண்கள் முன்வர வேண்டும். அது தான் பெண்களுக்கும், சமுதாயத்திற்கும் பாதுகாப்பானது.

-மித்திரன்-

நல்லூர் முருகனின் ஆலய வரலாறு!!

Nalloor

அழகுத் தெய்வம் முருகனுக்கு கிராமங்கள் தோறும், நகரங்கள் தோறும் எண்ணுக்கணக்கான ஆலயங்கள் உள்ளன.

யாழ்ப்பாணத்திலும் பல பிரசித்தி பெற்ற முருகன் தலங்கள் உள்ளன. அவற்றுள் ஒன்று தான் யாழ்ப்பாணம் நல்லூரில் கோயில் கொண்டுள்ள நல்லைக்குமரன் ஆலயம் ஆகும்.

நல்லூர், இலங்கையின் வடபகுதியில் உள்ள தமிழர்களின் இராசதானியாகவும், 12ம் நூற்றாண்டு தொடக்கம் 17ம் நூற்றாண்டு முற்பகுதிவரை யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகரமாகவும் நல்லூர் விளங்கியது.

யாழ்ப்பாண அரசிற்கு சிறப்புச் சேர்த்துள்ள நல்லூர், யாழ் நகரில் இருந்து சுமார் இரண்டு மைல் தூரத்தில் அமைந்துள்ளது.

இந்த ஆலயம் 13ம் நூற்றாண்டில் யாழ்ப்பாண இராச்சியத்தை ஆட்சிசெய்த ஆரிய சக்கரவர்த்திகள் வம்சத்தின் முதலாவது அரசனான கலிங்கமாகன் அல்லது கூழங்கை சக்கரவர்த்தியால் கட்டுவிக்கப்பட்டதாக யாழ்ப்பாண வைபவமாலையில் கூறப்பட்டுள்ளது.(கை ஊனமான நிலையில் உள்ளதால் இந்த அரசன் கூழங்கைச் சக்கரவர்த்தி என அழைக்கப்பட்டான்)

எனினும் 15ம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தை கைப்பற்றி பதினேழு ஆண்டுகள் ஆட்சி செய்த சிங்கள அரசின் பிரதிநிதியும், பிற்காலத்தில் ஸ்ரீ சங்கபோதி 7ஆம் புவனேகபாகு என்ற பெயர்கொண்டு அழைக்கப்பட்ட கோட்டை அரசனான ஸ்ரீ சண்முகப்பெருமாள் என்பவனால் இக்கோவில் கட்டப்பட்டதாகவும் வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன.

அத்துடன் பாடசாலைகளில் கற்பிக்கப்படும் இலவசபாடநூல்களிலும் இந்த விடயமே கூறப்பட்டுள்ளது.

நல்லூர் கந்தசுவாமி கோவில் முத்திரைச் சந்தியிலுள்ள ‘குருக்கள் வளவு’ என்ற காணியில் கட்டப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் கச்சேரியில் 1882ம் ஆண்டு உருவாக்கபட்ட சைவசமயக் கோவில்கள் தொடர்பான பதிவேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண அரசின் இறுதிக்காலத்தில் நல்லூரில் இருந்த மிகப்பெரிய கோவில் இது என போர்த்துக்கேயர்களுடைய குறிப்புக்களில் இருந்து அறியமுடிகிறது.

அத்துடன், யாழ்ப்பாண மன்னனான ஆரியச்சக்கரவர்த்திகளின் அரண்மனையை அண்டிய பகுதியிலேயே பழைய கோவில் அமைந்திருந்ததாகவும் வரலாறுகள் கூறுகின்றன.

யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த மன்னர்கள் நல்லூரை மையமாக வைத்து கிழக்கில் வெயிலுகந்த பிள்ளையார் கோயிலையும், தெற்கில் கைலாசநாதர் கோயிலையும், மேற்கில் வீரமாகாளி அம்மன் கோயிலையும், வடக்கில் சட்டநாதர் கோயில் என ஆலயத்தின் நான்கு பக்கங்களிலும் அரண்களை அமைத்திருந்தார்கள்.

நல்லூர்க் கந்தசுவாமி கோவிலை இரகுநாத மாப்பாண முதலியார் வம்சத்தினரே பரம்பரையாக நிர்வகித்து வருகின்றனர்.

மாப்பாண முதலியார் பரம்பரையினால் இக்கோவிலில் நித்திய நைமித்தியங்கள் நடைபெறுகின்றன.

ஈழத்திலுள்ள கோவில்களுள் நேரம் தவறாத நித்திய, நைமித்திய பூசைகள் மூலம் நல்லூர் கந்தசுவாமி கோவில் மற்றைய கோவில்களுக்கு முன்னோடியாக விளங்குகின்றது.

வருடாந்த மகோற்சவம்
ஆடி ஆமாவாசையிலிருந்து 6ம் நாள் கொடியேறி 25 நாட்கள் நடைபெறுகின்றது.

இந்தத் திருவிழா யாழ்ப்பாணத்து மக்களுக்கு மட்டுமன்றி வேறு பிரதேச மக்களுக்கும் முக்கியமான திருவிழாவாக கொள்ளப்படுகிறது.

அத்துடன், ஐப்பசி மாதத்தில் கந்தசஷ்டி, சூரன்போர், இயமசங்காரம், கார்த்திகைத் திருவிழா,கற்பூரத்திருவிழா,தைப்புபூசம், சித்திரை வருடப்பிறப்பு என பல விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.

அத்துடன், யாழ்ப்பாணத்தில் ஆறுகாலப்பூசைகள் நடைபெறும் ஒரே ஒரு ஆலயம் நல்லூர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்தின் மாவிட்ட புரத்திலுள்ள மாவிட்டபுரம் கந்தனை அபிடேகக் கந்தன் எனவும், செல்வச்சந்திநி முருகனை அன்னதானக் கந்தன் எனவும், நல்லூர்க்கந்தனை அலங்காரக் கந்தன் எனவும் வரலாறுகள் சிறப்பித்துக் கூறுகின்றன.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சூழ்நிலைகளைக் கருத்திற் கொண்டு கோயிலின் அர்ச்சனைப் பற்றுச்சீட்டுக்கள் பல விலைகளுக்கும் மாற்றப்பட்டுள்ள போதிலும் நல்லூரான் ஆலயத்தின் பற்றுச்சீட்டு இன்றுவரை ஒரு ரூபாவிற்கு மட்டுமே விற்கப்படுகின்றது.

அத்துடன், வருடாவருடம் ஆலயத்தின் பகுதிகள் புனரமைக்கப்பட்டு வருவதுடன், 2011ம்ஆண்டு தெற்கு வாயில் பகுதியில் இராஜகோபுரம் அமைக்கப்பட்டு கும்பாபிடேகம் செய்யப்பட்டதுடன், முருக பக்தரான அருணகிரி நாதருக்கு ஆலயத்தின் தெற்குப் பக்கமாக சிறிய ஆலயம் அமைக்கப்பட்டு பூசை வழிபாடுகள் நடாத்தப்பட்டு வரப்படுகின்றது

ஆண்டுதோறும், கந்தபுராண படன வாசிப்பு நடைபெற்று வருவதுடன், திருவிழாக்காலத்தில் ஒவ்வொரு நாளும் மாலை நிகழ்வுகளாக ஆன்மீகப் பிரசங்கங்கள், சொற்பொழிவுகள், நாட்டி நடனங்கள் மற்றும் இசைக்கச்சேரிகள் என்பன நடைபெற்றுவருவதுடன், பஜனை படிக்கம் வழக்கமும் இந்த ஆலயத்தில் தொன்று தொட்டு நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தனுஷ்,சிம்பு மீண்டும் மோதல்!!

dhanush-simbu

சிம்பு-தனுஷ் சமீப காலமாக தான், தங்களை நண்பர்களாக காட்டி வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் படங்கள் ஒரே நாளில் மோதி பல வருடங்கள் ஆகின்றது.

மாரி, வாலு ஆகிய இரண்டு படங்களும் ஒரே நாளில் மோதுவதாக இருந்து பின் தள்ளி வைக்கப்பட்டது, ஆனால், இந்த முறை இருவரும் கண்டிப்பாக மோதும் வாய்ப்பு அமைந்துள்ளது.

சிம்பு நடித்த அச்சம் என்பது மடமையடா, தனுஷ் நடித்த தொடரி ஆகிய இரண்டு படங்களும் ஒரே நாளில் ஆகஸ்ட் மாதத்தில் வருவதாக கிசுகிசுக்கப்படுகின்றது, இதனால், ஏதாவது ஒரு படத்தின் வசூலுக்கு பாதிப்பு ஏற்படும் என கூறப்படுகின்றது.

கபாலி கிளைமாக்ஸில் மாற்றம் : காட்சிகள் திடீர் நீக்கம்!!

kabali final

ரஜினிகாந்த் நடிப்பில், மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியிடப்பட்ட கபாலி திரைப்படத்தின் மலாய் மொழி பதிப்பில், இறுதிக் காட்சிகள் மாற்றப்பட்டதால் மலேசிய ரசிகர்கள் ஏமாற்றமடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

மலேசிய செய்தித்தாளான தி மலாய் மெயில் பத்திரிக்கையில், மலேசியவில் வெளியான கபாலி மலாய் பாதிப்பு முற்றிலும் மாறுபட்ட முடிவுடன் கூடியதாக இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளதாக, பிபிசி மானிட்டரிங் பிரிவு தகவல் கூறுகிறது.

கபாலி திரைப்படத்தின் மூல பதிப்பான தமிழில், கபாலி என்ற தாதா கதாபாத்திரத்தை ஏற்று நடித்த ரஜினிகாந்த்தை சுட்டுவிடுமாறு ஒரு கதாபாத்திரத்திடம் பொலிஸ்காரர் ஒருவர் தூப்பாக்கியை அளிப்பது போல ஒரு காட்சி அமைந்திருக்கும்.

துப்பாக்கியை எடுத்துக் கொண்டு காஃபி ஷாப்பிற்குள் நுழைந்த அந்த நபர், கபாலியை நோக்கி விரையும் கணத்தில், கூட்டத்தினரின் கூச்சலுடன் சேர்ந்து ஒரு துப்பாக்கி குண்டு வெடிக்கும் சத்தத்துடன், நடந்தது என்ன என்று பார்ப்பவர்களின் யூகத்திற்கு விட்டு விட்டு, திரையில் இருள் சூழ திரைப்படம் முடிந்துவிடும்.

கபாலி இந்திய பதிப்பில் கபாலி உயிரோடு இருக்கிறாரா என்று தெளிவாக தெரியாது.
ஆனால், மலாய் பதிப்பில் வெளியான இத்திரைப்படம் திருப்பத்துடன் முடிகிறது. ‘’இறுதியாக பொலிசாரிடம் கபாலி சரணடைந்தார்’’ என்ற வாசகங்கள் திரையில் பளிச்சிட திரைப்படம் முடிவடைகிறது.

மலேசிய திரைப்பட தணிக்கை வாரியத் தலைவர் அப்துல் ஹலிம் அப்துல் ஹமித் இது குறித்து கூறுகையில், குற்றம் புரிபவர்கள் நிம்மதியாக வாழ முடியாது என்ற நீதி பாடத்தை வலியுறுத்தவே மலாய் பதிப்பில் இவ்வாறு முடிவு அமைந்துள்ளது என்று தெரிவித்தார்.

‘’சட்டத்தை உங்கள் கைகளில் எடுத்துக் கொள்ள முடியாது என்ற செய்தியை எடுத்துச் சொல்ல, இவ்வாறு ஒரு வாசகத்தை சேர்க்க நாங்கள் தயாரிப்பாளரிடம் கேட்டுக் கொண்டோம்’’ என்று ஹமித் தெரிவித்தார்.

மலாய் மொழி பதிப்பில், மலேசிய திரைப்பட தணிக்கை வாரியத்தின் பரிந்துரையின் பேரில், வன்முறை மற்றும் தாதா கலாசாரத்தை ஊக்குவிப்பதாக இருப்பதாக வேறு சில காட்சிகளும் நீக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு நீக்கப்பட்ட காட்சிகளில், மலேசிய பொலிஸார் விமானநிலையத்தில் கபாலியை வரவேற்கும் காட்சியும் ஒன்றாகும்.

ஒரு தாதாவை பொலிஸார் வரவேற்பது போன்ற காட்சி இது என்பதால், இக்காட்சி நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கல்வியில் சிறந்து விளங்கினாலும், மலேசியாவில் இந்திய வம்சாவளியினர் மிக குறைந்த வாய்ப்புகளையே பெறுவதாக கபாலியிடம் ஒரு கதாப்பாத்திரம் பேசும் வசனமும் நீக்கப்பட்டுள்ளது.

மலேசியாவில் அதிகளவில் வாழ்ந்து வரும் மூன்று வம்சாவளியினரான மலாய்,சீனர் மற்றும் இந்தியர்கள் குறித்து இப்படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள சில தரக்குறைவான சொற்கள் மற்றும் அடைமொழிகள் அடங்கிய வசனங்களும் நீக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு பல காட்சிகள் நீக்கப்பட்டதற்கு, மலேசியாவில் உள்ள ரஜினிகாந்த் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்பட்டாலும், இந்த காட்சிகள் நீக்கப்பட்டது மிகவும் தேவையென ஹமித் தெரிவித்துள்ளார்.

மலாய் மொழியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியான முதல் திரைப்படமான கபாலி, மலேசிய திரைப்படத் துறையில் ஒரு முன்னோடியாக விளங்கும் என்று இதன் தயாரிப்பாளர்களில் ஒருவரான அப்துல் மாலில் தஸ்தாகீர் தெரிவித்தார்.

பிரபல மலேசிய திரைப்பட நடிகர்கள் சிலர், இத்திரைப்படத்தில் சில காட்சிகளில் தோன்றுவதால், மலாய் திரைப்பட ரசிகர்களை இப்படம் கவர்ந்துள்ளது.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடந்த போது, அங்கு ரஜினிகாந்த் வந்ததால், அந்நாடே ஸ்தம்பித்தது குறிப்பிடத்தக்கது.

மலேசியாவை தவிர கபாலியின் மலாய் பதிப்பு, ஜூலை 29ம் திகதி யன்று, இந்தோனேசியாவில் 250 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், மலேசியாவில் ரஜினிகாந்த்துக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.