4 கோடிக்கு விலை பேசப்பட்ட எருமை : விற்பனை செய்ய உரிமையாளர் மறுப்பு!!

Madhya-Pradesh-buffalo-commands-Rs-4-crore

மத்திய பிரதேசத்தில் ரூ.4 கோடிக்கு விலை பேசப்பட்ட எருமை மாட்டை விற்க அதன் உரிமையாளர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் உள்ள அக்மியா கிராமத்தை சேர்ந்தவர் முன்னாசிங். விவசாயான இவர் 100 மாடுகளுடன் பண்ணை ஒன்று நடத்தி வருகிறார். இந்த பண்ணையில் ஹீரா என்ற பெயர் சூட்டப்பட்ட எருமை மாட்டை வளர்த்து வருகிறார்.

இந்த மாட்டுக்கு 5 வயது ஆகிறது. 4 ஆண்டுகளுக்கு இதை அரியானா மாநிலத்தில் இருந்து வாங்கி வந்தார். இதுவரை 2 குட்டிகளை ஈன்றுள்ளது. தினம் 15 லீட்டரில் இருந்து 31 லீட்டர் வரை பால் கறக்கிறது. 1000 கிலோ எடை, 9.5 அடி நீளம், 5.5 அடி உயரம் உள்ளது.

முன்னாசிங் இந்த மாட்டை வாங்கி வந்ததற்கு பிறகு அவருக்கு அதிர்ஷ்டம் ஏற்பட்டு அவருடைய மாட்டு பண்ணை அசுர வளர்ச்சி அடைந்தது.

இதனால் ஹீரா எருமை மாட்டை அதிர்ஷ்டகர மாடாக கருதுகின்றனர். எனவே பலரும் இதை வாங்குவதற்கு முயற்சித்தனர். ஆனால் முன்னாசிங் இதுவரை விற்க முன்வரவில்லை.

இந்த நிலையில் சித்தி மாவட்டத்தை சேர்ந்த ஹர்சவர்த்தன் சிங் என்ற வியாபாரி அவரிடம் சென்று மாட்டை விலைக்கு கேட்டார். 4 கோடி வரை அவர் விலை பேசினார். ஆனால் முன்னாசிங் மாட்டை கொடுக்க மறுத்து விட்டார்.

இந்த மாட்டால் தான் எனக்கு அதிர்ஷ்டம் ஏற்பட்டது. எனவே அதை விற்க மனம் இல்லை என்று அவர் கூறினார்.

உலக அழகனாக இந்தியர் தெரிவு!!(படங்கள்)

 
இங்கிலாந்தின் சவுத்ஃபோர்ட் பகுதியில் நேற்று உலக அழகன் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதன் முறையாக இந்தியர் ஒருவர் பட்டம் வென்றுள்ளார்.

இதில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 47 பேர் பங்கேற்றனர். இவர்களிலிருந்து இந்தியரான ரோஹித் என்பவர் உலக அழகனாகத் தெரிவானார்.

பட்டம் வெல்லும் முதல் இந்தியரான ரோஹித்திற்கு 50,000 அமெரிக்க டொலர்கள் பரிசாக வழங்கப்பட்டன.

2 ஆவது இடத்தை அமெரிக்காவின் பியர்டோ ரிகோ தீவைச் சேர்ந்தவரும், 3 ஆவது இடத்தை மெக்சிகோவைச் சேர்ந்தவரும் பிடித்துள்ளனர்.

1 2 3 4

சரவணன் மீனாட்சி பகுதி 3 : அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

Saravanan_meenatchi

விஜய் டிவியில் பிரபலமான தொடர்களில் ஒன்று சரவணன் மீனாட்சி. இந்த தொடரின்முதல் பாகம் முடிந்ததை தொடர்ந்து 2வது பாகம் தொடரப்பட்டது. இதில் மீனாட்சியின் காதலனாக இதுவரை 4 பேரை காண்பித்துவிட்டனர்.

அண்மையில் இந்த தொடரின் மூன்றாம் பாகம் தொடங்கப்பட்டது. சீரியல் முடிவுக்கு வந்தது என்று சந்தோஷத்தில் இருந்த ரசிகர்கள் இதற்கு ஒரு முடிவே இல்லையா என மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர்.

உளவு பார்த்ததாக கூறி 11 வயது சிறுவனின் தலையை வெட்டிக் கொலை செய்த தீவிரவாதிகள்!!

Boy

சிரியாவில் உளவு பார்த்ததாக 11 வயது சிறுவனை ஐஎஸ் அமைப்பினர் தலைதுண்டித்து படுகொலை செய்வது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது.

ஈராக் மற்றும் சிரியாவின் பகுதிகளை கைப்பற்றிய இஸ்லாமிய நாடாக உருவாக்கியுள்ள ஐஎஸ் அமைப்பினர் நாளுக்கு நாள் தலை துண்டிப்பு, கற்பழிப்பு போன்ற மிக கொடூரமான குற்றங்களை செய்து வருகின்றனர்.

இதுதொடர்பான வீடியோக்களை வெளியிட்டும் பரபரப்பை அதிகப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் சிரியாவின் அலெப்போவில் 11 வயது சிறுவனின் தலையை துண்டித்து படுகொலை செய்வது போன்ற வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

சிரியாவின் அரச படைகளுக்கு ஆதரவாக உளவு பார்த்தான் என்ற குற்றத்திற்காக இந்த தண்டனையை நிறைவேற்றியுள்ளனர்.

முதலில் அந்த சிறுவனை பிடித்து கன்னத்தில் சரமாரியாக அறைந்துள்ளனர், பின்னர் அவனது கைகளை கட்டி டிரக்கின் பின்புறத்தில் படுக்க வைத்து அவனது கழுத்தை அறுப்பது போன்று வீடியோ முடிவடைகிறது.

76 வயது மனைவி அடித்துக் கொன்ற 82 வயது கணவன்!!

hitting

மராட்டிய மாநிலம், நாசிக் மாவட்டத்தில் உள்ள தலேகான் கிராமத்தை சேர்ந்தவர் தாதிராம் அர்ஜுன் உகாலே (82). இவரது மனைவி கீதாபாய் உகாலே (76).

நேற்று இந்த தம்பதியருக்கு இடையே ஏற்பட்ட வாய்தகராறால் ஆத்திரம் அடைந்த தாதிராம், நேற்றிரவு கீதாபாய் நன்றாக தூங்கி கொண்டிருந்தபோது தடிக்கம்பால் அவரை அடித்துக் கொன்றார்.

பின்னர், மனமுடைந்த நிலையில் தனது பண்ணை வீட்டுக்கு சென்ற அவர், அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இரு சடலங்களையும் கைப்பற்றியுள்ள பொலிசார், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பல இன்னல்களுக்கும் முகம்கொடுத்த 15 பணிப் பெண்கள் நாடு திரும்பினர்!!

Lady

வேலை வாய்ப்புக்காக குவைத் நாட்டுக்குச் சென்று பல்வேறு சிரமங்களுக்கும் முகம்கொடுத்த 15 பெண்கள் மீண்டும் இலங்கைக்கு திரும்பியுள்ளனர்.

தாம் பணிபுரிந்த இடங்களில் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு இலக்கான இவர்கள், அந்த நாட்டிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் தஞ்சமடைந்த நிலையில், வௌிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் தலையீட்டில் அவர்கள் மீளவும் தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இவ்வாறு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த 15 பெண்களும், தமது வீடுகளுக்கு செல்ல தேவையான வசதிகளை வௌிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் வழங்கியுள்ளது.

உயர்தர மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகளுக்கு அடுத்த வாரம் முதல் தடை!!

AL

இம்முறை கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான மேலதிக வகுப்புக்கள் மற்றும் கல்விக் கருத்தரங்குகளுக்கு ஜூலை 27ம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஆகஸ்ட் 27ம் திகதி வரை இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ள கூடாது என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த உத்தரவை மீறி வகுப்புகளை நடத்துபவர்கள் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்தின் 1911 என்ற இலக்கத்துக்கோ அல்லது பொலிஸ் அவசர அழைப்பு இலக்கமான 119க்கோ தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு அவர் கூறியுள்ளார்

இம்முறை கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகள் ஆகஸ்ட் 2ம் திகதி ஆரம்பமாகி 27ம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா வைரவர்புளியங்குளம் – பண்டாரிகுளம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் தீர்த்தோற்சவம் !!(படங்கள்)

வவுனியா வைரவர்புளியங்குளம் – பண்டாரிகுளம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின்  வருடாந்த மகோற்சவ பெரும் விழாவில் நேற்று 19.07.2016 செவ்வாய்கிழமை    தீர்தோற்சவம் இடம்பெற்றது .

வசந்தமண்டப  பூஜையின் பின்  காலை பத்து மணியளவில்   கமலத்தில்  எழுந்தருளிய  ஸ்ரீ முத்துமாரி  அம்பாளுக்கு தீர்தோற்சவம் இடம்பெற்றது. தொடர்ந்து  யாகம் கலைக்கபட்டது. பின்னர் மாலையில்  கொடியிறக்க உற்சவம் இடம்பெற்றது.

13707574_1846932838861024_1726317619370737816_n 13707794_1846932785527696_5757036747812254064_n 13707809_1846933018861006_6485444874837411585_n 13709789_1846932932194348_3818954779009896828_n 13709796_1846932828861025_5686288584572239454_n 13710030_1846932898861018_6336904500258319503_n 13726734_1846933042194337_1644651844936066067_n 13754520_1846932982194343_2459926016898325517_n 13782080_1846932792194362_2506684891682518709_n

 

வவுனியா நகரசபை ஊழியர்கள் வேலை நிறுத்தம்!!

 
வவுனியா நகரசபை ஊழியர்கள் இன்று (20.07.2016) காலை கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

சம்பள முரண்பாடு, இரு ஊழியர்கள் பணி நிறுத்தம், தனியார்துறையினரின் பிரவேசம் போன்ற கோரிக்கையினை முன்வைத்தே ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இன்றைய நகரசபை ஊழியர்கள் வேலை நிறுத்தம் தொடர்பாக நகரசபை செயலாளரிடம் கேட்டபோது..

சம்பள முரண்பாடு தொடர்பாக உரியவர்கள் அறிக்கைமூலம் எனக்குத் தெரியப்படுத்தவில்லை. தெரியப்படுத்தினால் அது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும், பணியாளர்களின் பணிநிறுத்தம் தொடர்பாக தெரிவிக்கையில், குறித்த தொழிலாளி 24 மணிநேரத்திற்குள் விடுமுறை தொடர்பாக அறிவிக்கப்படாவிட்டால் சுற்றறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.

தனியார்துறை பிரவேசம் தொடர்பாக தெரிவிக்கையில், தொழிலாளர்கள் விடுமுறையில் சென்றால் அவ்விடத்தை தனியார்தறை ஊழியர் மூலம் நிரப்ப மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டதாகவும் அதன் அடிப்படையில் விடுமுறையில் சென்றவரின் இடத்தை நிரப்பவே தனியார் துறையினரை பணிக்கு அமர்த்த உள்ளதாகவும் சிலரின் தேவயைற்ற தலையீடுகளால் பிரச்சனைகளை பெரிதாக்கிச் செல்வதாகவும் மேலும் தெரிவித்தார்.

இன்றைய வேலை நிறுத்தம் தொடர்பாக தமது கோரிக்கை மனுவினை நகரசபை செயலாளரிடம் கையளித்த ஊழியர்கள் வேலை நிறுத்த்தினை கைவிட்டு பணிக்குச் சென்றுள்ளனர்.

1 DSC_0035 DSC_0036 DSC_0037 DSC_0051 DSC_0054 DSC_0055 DSC_0056 DSC_0057 DSC_0060 DSC_0064 DSC_0065 DSC_0066 DSC_0067 DSC_0068

BCS International School

BCS frontBCS backA B C D

வவுனியாவில் வயோதிபர் சடலமாக மீட்பு!!(2ம் இணைப்பு)

 
வவுனியா பூந்தோட்டம் ஸ்ரீநகரை அண்டிய பகுதியிலுள்ள குளத்திலிருந்து வயோதிபர் ஒருவர் சடலமாக இன்று(20.07.2016) காலை மீட்க்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்..

வவுனியா ஸ்ரீநகர் பகுதியில் வசித்து வந்த அந்தோனி மயில்வாகனம் என்ற 66 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையான இவரை கடந்த மூன்று தினங்களாக காணமற்போயுள்ளதாக நேற்றைய தினம் வவுனியா பொலிஸ் நிலையில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்ட நிலையில் இன்று காலை குறித்த வயோதிபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த சில வருடங்களாக இவர் மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாக இவரது மகள் தெரிவித்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

1 DSC_0001 DSC_0002 DSC_0004 DSC_0005 DSC_0006 DSC_0007 DSC_0009 DSC_0010 DSC_0011 DSC_0012 DSC_0013 DSC_0014 DSC_0015 DSC_0016 DSC_0017 DSC_0018 DSC_0024 DSC_0025 DSC_0026 DSC_0027 DSC_0028 DSC_0030 DSC_0031 DSC_0034

வவுனியா குளத்தை அண்மித்த பகுதியிலிருந்து சடலம் மீட்பு!!

 
வவுனியா குளக்கரையில் பூந்தோட்டம் ஸ்ரீநகரை அண்டிய பகுதியிலிருந்து இன்று (20.07.2016) காலை ஆண் ஒருவரின் சடலம் ஒன்று மீட்க்கப்பட்டுள்ளது.

வவுனியா ஸ்ரீநகரைச் சேர்ந்த மயில்வாகனம் என்ற 66 வயது நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மூன்று நாட்களாக இவரைக் காணவில்லை என்று போலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் செய்யப்பட்டுள்ள நிலையில் இவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

13699338_270330380007123_1224042484_o 13711557_270330370007124_956057385_o 13730732_270330390007122_1527859547_o

புதிதாக 104 கிரகங்கள் கண்டுபிடிப்பு!!

Planets

நமது சூரிய மண்டலத்திற்கு வெளியே புதிதாக 104 கிரகங்களைத் தாங்கள் கண்டறிந்திருப்பதாக சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று கூறுகிறது.

இதில் 4 கிரகங்கள் பூமியைப் போலவே பாறைகள் மிகுந்த மேற்பரப்பைக் கொண்டிருக்கின்றன. இந்த 4 கிரகங்களும் ஒரே நட்சத்திரத்தைச் சுற்றி வருகின்றன; அவை சுமார் 400 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கின்றன.

கெப்லர் விண்நோக்கி மூலமும், பூமியிலிருந்து செய்யப்பட்ட கண்காணிப்புகள் மூலமும் கண்டுபிடிக்கப்பட்ட இந்தக் கிரகக்கூட்டங்களில் 21 கிரகங்கள், அவைகளின் சூரியனிலிருந்து வசிக்கக்கூடிய தொலைவில் உள்ள பகுதியில் இருக்கின்றன. இந்தத் தொலைவில் இருந்தால்தான் கிரகங்களில் உயிர் வாழ அனுமதிக்கக்கூடிய அளவு திரவ நிலையில் தண்ணீர் இருக்கும்.

இந்த கெப்லர் விண்நோக்கி செயலிழந்துவிட்டதாக மூன்றாண்டுகளுக்கு முன்னர் கருதப்பட்டது ஆனால் அதன் நான்கு சக்கரங்களில் இரண்டு இழக்கப்பட்ட நிலையிலும் , நாசா விஞ்ஞானிகள் அந்த விண்கலனை இயங்கும் நிலையில் வைத்திருக்கிறார்கள்.

ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்பட மாட்டாது!!

Rain

ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்பட மாட்டாது என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

மக்களின் நலன்கருதி, தொடர்ந்தும் குறைவான கட்டணத்தை அறவிடுவதற்கு அரசு தீர்மானித்துள்ளதாக அமைச்சின் செயலாளர் நிஹால் சோமவீர தெரிவித்துள்ளார்.

இறுதியாக 2008 ஆம் ஆண்டிலேயே ரயில் கட்டண திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பொருட்களை ஏற்றிச் செல்லும் சேவைகள் மற்றும் ரயில்வே திணைக்களத்திற்கு சொந்தமான இடங்களை குத்தகைக்கு விடுவதன் மூலம் இலாபமீட்டுவதற்கு திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பஸ் கட்டணங்கள் எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து நூற்றுக்கு 6 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழ். பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் இன்று மீள ஆரம்பம்!!

jaffna Uni

யாழ். பல்கலைக்கழகத்தில் அண்மையில் இடம்பெற்ற மோதல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கல்வி நடவடிக்கைகள் இன்று மீண்டும் ஆரம்பமாகவுள்ளன.

மருத்துவ பீடம், சித்த மருத்துவ அலகு, வவுனியா வளாகம், விவசாய பீடம் ஆகிவற்றின் கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகவுள்ளன.

கலைப்பீடம், சித்திரமும் வடிவமைப்பும், நடனம், இசைத்துறைகளின் பரீட்சைகள் திட்டமிடப்பட்டவாறு எதிர்வரும் 25 ஆம் திகதி நடைபெறும் என பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் குறிப்பிட்டார்.

இதனையடுத்து பல்கலைக்கழக்தின் கல்வி நடவடிக்கைகள் முழு அளவில் செயற்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதேவேளை அண்மையில் ஏற்பட்ட மோதலுக்கு காரணமானவர்களை கண்டறிந்து அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்காக விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புகைத்தலில் ஈடுபடும் பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!!

Smoking

புகைத்தலில் ஈடுபடும் பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

புகைத்தல் மற்றும் மது தொடர்பிலான தேசிய அதிகார சபையின் ஆய்வின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

2011 ஆம் ஆண்டு நூற்றுக்கு 8 வீதமாக காணப்பட்ட போதைபொருள் பாவனை கடந்த வருடம் நூற்றுக்கு 3 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக புகைத்தல் மற்றும் மது தொடர்பிலான தேசிய அதிகார சபையின் பணிப்பாளர் வைத்தியர் பாலித்த அபேகோன் தெரிவித்தார்.

பல்வேறு காரணிகள் இதற்கு ஏதுவாக அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

13 வயது தொடக்கம் 16 வயதுக்குட்பட்ட 40,000 பாடசாலை மாணவர்கள் புகைத்தலில் ஈடுபட்டு வருவதாக புகைத்தல் மற்றும் மது தொடர்பிலான தேசிய அதிகார சபையின் பணிப்பாளர் வைத்தியர் பாலித்த அபேகோன் மேலும் தெரிவித்தார்.