நடிகர்களை ஜோக்கர்களாக்கிய நடிகர் சங்கத்தை விட்டு விலகுகின்றேன் : சிம்பு அதிரடி!!

SImbu

நடிகர் சங்கம் பிரச்னை ஆரம்பித்த நாள் முதல் சிம்புவும், அஜித்தும் நட்சத்திர கிரிக்கெட் சார்பாக அமைதி காத்ததும் மேலும் நட்சத்திர கிரிக்கெட்டுக்கு வருகை தராமல் இருந்ததும் என பல செய்திகள் உலாவி வந்தன. இந்நிலையில் சிம்பு சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் சங்கத்தை விட்டு விலகுவதாக பகிரங்கமாக அறிவிப்புக் கொடுத்துள்ளார்.

அவர் கூறியதாவது, ‘நான் நடிகர் சங்கத்தை விட்டு சில காரணங்களுக்காக விலகுகிறேன். ஒரு சங்கமாக நடிகர்களுக்கு சிக்கல்கள், பிரச்னைகள் வரும் வேளையில் உதவ வேண்டும். ஆனால் அவர்கள் அதில் தோல்வியடைந்துவிட்டனர்.

நான் சிக்கல்களை சந்தித்த வேளையில் எந்த ஒரு ஆதரவையும் பெறவில்லை. சமீபத்தில் அவர்கள் நடத்திய நட்சத்திர கிரிக்கெட்டும் என்னை மிகவும் வருத்தத்தில் ஆழ்த்தியது. நம் நடிகர்கள் பலரும் ஜோக்கர்களாகவே தெரிந்தனர்’ என அதிரடியாக அறிவித்துள்ளார்.

நடிகர் சங்கத் தேர்தல் வேளையில் துணைத் தலைவர் பதவியில் சிம்பு நின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகர் சங்கம் நடத்திய நட்சத்திர கிரிக்கெட்டில் அவர் கலந்துகொள்ளவில்லை.

சிம்பு மட்டுமின்றி விஜய், அஜித் இருவரும் கூட நட்சத்திர கிரிக்கெட்டைத் தவிர்த்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் அவர்கள் தரப்பிலிருந்து இன்னும் பதில்கள் வராத நிலையில் சிம்பு எடுத்திருக்கும் முடிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறையில் 2000 தடவை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட திருநங்கை!!

Abuse

அவுஸ்திரேலியாவில் திருநங்கையை ஒருவரை சிறையில் வைத்து 2000 தடவை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

அவுஸ்திரேலியா நாட்டை சேர்ந்த திருநங்கையான மேரி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). 1990 ஆண்டில் கார் திருடிய வழக்கில் கைதாகி அவருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அதையடுத்து அவர் க்வீன்ஸ்லேண்டில் உள்ள போக்கோ ரோடு ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்ட சில மணிநேரங்களில் இருந்து தண்டனைக் காலம் முடியும் வரை அவர் சுமார் 2000 முறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். அவர் சிறை தண்டனை அனுபவித்த காலத்தில் பல சிறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதை பற்றி திருநங்கை மேரி தெரிவிக்கையில்,

நான் சிறையில் இருக்கையில் 2000 முறை பலாத்காரம் செய்யப்பட்டேன். திருநங்கையான என்னை ஆண்கள் சிறையில் அடைத்தனர். என்னை பெண்கள் சிறையில் அடைத்திருக்க வேண்டும். சிறையில் பிற ஆண் கைதிகள் என்னை மிரட்டி மிரட்டியே பலாத்காரம் செய்தனர். என்னால் அவர்களை எதிர்க்க முடியவில்லை.

பலாத்காரம் செய்ததோடு மட்டும் அல்லாமல் என்னை அடித்து துன்புறுத்தினர். நான் சிறையில் நரக வேதனை அனுபவித்தேன். நாங்களும் மனிதர்கள் தானே. எங்களுக்கு பிடித்த வகையில் வாழ்வதை இந்த சமூகம் கிண்டல் செய்கிறது. எங்களுக்கு பிடித்தபடி வாழ எங்களுக்கு துணிச்சல் உள்ளது என்றார்.

இளைஞர் ஒருவரின் வயிற்றில் ஆழமாகப் பாய்ந்த கத்தி!!

 
இளைஞர் ஒருவரின் வயிற்றில் ஆழமாகப் பாய்ந்திருந்த கத்தியொன்றை மருத்துவ நிபுணர்கள் சத்திர சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். அங்கொடை பொலிஸ் பிரதேசத்தில் இன்று காலை இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

குற்றச் செயல் ஒன்று தொடர்பில் குறித்த இளைஞரை கைது செய்வதற்காக பொலிசார் சென்றிருந்த வேளையில் அவர் கத்திக்குத்துக் காயத்துடன் போராடிக் கொண்டிருந்துள்ளார். அதன் பின் உடனடியாக பொலிசாரின் உதவியுடன் குறித்த இளைஞர் முல்லேரியா மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார்.

காயத்துக்குள்ளான இளைஞரின் வயிற்றில் ரம்போ வகைக் கத்தியொன்று ஆழமாக பாய்ந்திருந்த போதும் உள்ளுறுப்புகளுக்கு எதுவித சேதமும் ஏற்பட்டிருக்கவில்லை.

இந்நிலையில் ஒன்றரை மணிநேர சத்திர சிகிச்சையின் பின்னர் இளைஞரின் வயிற்றில் பாய்ந்திருந்த கத்தி பாதுகாப்பாக அகற்றப்பட்டுள்ளது.

பொலிசாரால் கைது செய்யப்படுவதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக குறித்த இளைஞர் தன்னைத்தானே கத்தியால் குத்திக் கொண்டிருக்கலாம் என்று பொலிசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை அங்கொடை பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

1 2

வவுனியாவில் பெற்றதாயை கூட்டில் அடைத்து வைத்த மகன் : பொலிசில் முறைப்பாடு!!

download (1) copy

வவுனியா சாந்தசோலை கிராமத்தில் 95 வயதான பெற்றதாயை கூட்டில் அடைத்து வைத்துள்ளதாக வவுனியா பொலிசாரிடம் முறைப்பாடு செய்யப்படுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..

வவுனியா சாந்தசோலைக் கிராமத்தில் வசித்துவரும் மகன் தனது தாயை 5 வருடங்களாக கூட்டில் அடைத்து வைத்ததாக பொதுமகன் ஒருவரால் வவுனியா பொலிசாரிடம் முறைப்பாடொன்று செய்யப்பட்டது.

இவ்விடயம் தொடர்பாக சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிசார் தாயை மீட்டதுடன் அவரை வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

இச் சம்பவம் தொடர்பாக சம்பவ இடத்துக்கு விரைந்த எமது செய்தியாளர், இச் சம்பவத்துடன் தொடர்புடையவருடன் வினாவிய போது எனது தாயை நான் கொடுமைப்படுத்தவில்லை எனவும் அவரை தான் 5 வருடங்களாக நல்லமுறையில் பராமரித்து வந்ததாகவும் வவுனியா பொலிசாரிடம் தவறான முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மகளை துஷ்பிரயோகம் செய்தவனை 2 வருடங்கள் காத்திருந்து கைகளை வெட்டிய தந்தை!!

Hand

தனது மகளை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் நபரின் கைகளை தந்தையொருவர் வெட்டி வீசிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்தியாவின் பஞ்சாப்பில் , பதிந்தா நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 17 வயது இளைஞன் ஒருவரின் கைகளே இவ்வாறு வெட்டப்பட்டுள்ளன.

கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் , குறித்த இளைஞன் 7 மாத குழந்தையொன்றை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பான வழக்கு பதிந்தாவில் தற்போது நடந்து வரும் நிலையில், பாதிக்கப்பட்ட குழந்தையின் தந்தையும் , குறித்த இளைஞனும் வழக்குக்காக நீதிமன்றம் வந்துள்ளனர்.

இதன்பின்னர், குழந்தையின் தந்தையான பம்மா சிங் என்ற நபர் , குறித்த இளைஞனை பேசி சமாதனப்படுத்தி தன்னுடன் மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் ஒரு இடத்தில் அவரை மோட்டார் சைக்கிளில் இருந்து இறக்கி , மரத்தில் கட்டி வைத்து கூரிய ஆயுதத்தால் தாக்கி கைகளை வெட்டியுள்ளார்.

கைகள் வெட்டப்பட்ட நிலையில் துடித்துக்கொண்டிருந்த நபரை கிராமவாசிகள் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். சந்தேகநபரான பம்மா சிங் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வவுனியா மக்களுக்கு வடமாகாண விவசாய அமைச்சினால் வாழ்வாதார உதவிகள்!!

 
வடமாகாண விவசாய அமைச்சினால் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த 641 பேருக்கு வாழ்வாதார உதவிகள் இன்று(20.04.2016) வவுனியா, பூந்தோட்டம் கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தில் வைத்து வழங்கப்பட்டன.

மாவட்ட ரீதியாக தெரிவு செய்யப்பட்ட 641 பயனாளிகளுக்கு கோழிக்குஞ்சுகள், ஆடுகள், மாடுகள், வேலி அடைக்கும் முற்கம்பிகள் என்பன வழங்கப்பட்டன. இதனை வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சபை உறுப்பினர்களான ம.தியாகராசா, இ.இந்திரராசா, ம.ஜெயதிலக, விவசாய அமைச்சின் செயலாளர் பற்றிக் ரஞ்சன், கால்நடை விவசாயத் திணைக்கள மாவட்ட பணிப்பாளர் மற்றும் திணைக்கள உத்தியோகத்தர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

DSC02680 DSC02683 DSC02684 DSC02685 DSC02690 DSC02693 DSC02694 DSC02695 DSC02699 DSC02715 DSC02719 DSC02725 DSC02726 DSC02727 DSC02728 DSC02730 DSC02734 DSC02736 DSC02739

4 வயது மகளின் சதையை அறுத்து தின்ற கொடூர தாய்!!

1362952_Wallpaper1

மேற்கு வங்கத்தில் பெண்மணி ஒருவர் தனது 4 வயது மகளின் சதையை அறுத்து தின்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோபால்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த பிரமிளா மோண்டல் (42) என்ற பெண்ணுக்கு 4 வயதில் பாரதி என்ற மகள் இருக்கிறாள்.

நேற்று முன்தினம் பாரதியின் அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் வசிக்கும் பிரமிளாவின் மைத்துனர் தப்லு மோண்டல் அங்கு சென்றுள்ளார். அப்போது பிரமிளா தனது மகளின் தலைப் பகுதியில் தோலை அறுத்து சாப்பிட்டுக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து தப்லுவும் அவரது மனைவியும், தலையில் ரத்தம் வழிந்த பாரதியை மீட்டு, மால்டா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அந்த தகவல் அறிந்து அங்கு திரண்ட கிராம மக்கள் பிரமிளாவை கட்டி வைத்து அடித்துள்ளனர். நடந்த சம்பவத்தை ஒப்புக் கொண்ட பிரமிளா அதற்கான காரணத்தை சொல்லவில்லை.

5 குழந்தைகளுக்கு தாயான பிரமிளா போதைப் பொருளுக்கு அடிமையானவர் என்று கிராமவாசிகள் சிலர் குற்றம் சாட்டுகின்றனர். இதனிடையே கிராம மக்களால் கட்டி வைக்கப்பட்ட பிரமிளாவை மீட்ட பொலிசார் கூறுகையில், பிரமிளாவிடம் விசாரித்து வருகிறோம். இதுவரை அவர் மீது வழக்கு பதியவில்லை என தெரிவித்துள்ளனர்.மேலும், பிரமிளாவின் கணவர் ஹபு மோண்டல் கூலிவேலை செய்வதற்காக ஓராண்டுக்கு முன் டெல்லி சென்றதாகவும் அவர் இதுவரை வீடு திரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

உலர விட்ட ஆடைகள் மழையில் நனையும் என்ற கவலையா? இனி அதற்கு இடமே இல்லை!!

clothesline2009

எதிர்காலத்தில் மனிதனுக்கு வேலையே இல்லை என்று சொல்லும் அளவிற்கு தொழில்நுட்பம் அசுர வளர்ச்சியை எட்டியுள்ளது.இதன் காரணமாக எந்தவொரு வேலையையும் இருந்த இடத்திலிருந்தே செய்து முடிக்கும் அளவிற்கு மனித வாழ்க்கை மாற்றம் கண்டுவருகிறது.

இதற்கு மகுடம் வைத்தால் போல் மற்றுமொரு கண்டுபிடிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.அதாவது இன்று வரைக்கும் ஆடைகளை தோய்த்து உலரவிடும்போது திடீரென மழை வந்து மீண்டும் அவற்றினை நனைத்து விடும் என்ற பயம் இறுதி வரைக்கும் இருந்துகொண்டேதான் இருக்கும்.

ஆனால் இப் பிரச்சினைக்கு தீர்வு தரும் முகமாக Omo நிறுவனம் Peggy எனப்படும் இலத்திரனியல் கிளிப்களை வடிவமைத்துள்ளது.இவற்றில் ஒளி உணரி (LightSensor), வெப்பநிலை உணரி (Teperature Sensor) என்பன காணப்படுவதுடன், WiFi தொழில்நுட்பத்தின் ஊடாக ஸ்மார்ட் கைப்பேசிகளுடன் இணைத்து பயன்படுத்தக்கூடியதாகவும் இருக்கின்றது.

இதனால் மழை வரும் நேரங்களில் ஸ்மார்ட் கைப்பேசிக்கு எச்சரிக்கை தகவலை அனுப்புகின்றது.மேலும் இதில் USB ஊடாக மீண்டும் மீண்டும் சார்ஜ் செய்யக்கூடிய மின்கலமும் இணைக்கப்பட்டுள்ளது.தற்போது இக் கிளிப் ஆனது சோதனைக் கட்டத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

இம்சை அரசன் இரண்டாம் பாகத்தில் நடிக்க வடிவேலுவிற்கு இத்தனை கோடி சம்பளமா?

Pulikesi-P-E

வடிவேலு சில பிரச்சனைகளால் சினிமாவில் நடிப்பதையே தவிர்த்து வந்தார். இந்நிலையில் தற்போது நேரம் தனக்கு சாதகமாக இருப்பதை அறிந்துக்கொண்ட இவர், மீண்டும் நடிக்க ரெடியாகி விட்டார்.இதன் முதற் கட்டமாக இம்சை அரசன் இரண்டாம் பாகத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

இப்படத்தின் முதல் பிரதியை ஷங்கர் தயாரிக்கவுள்ளார்.இப்படத்திற்காக வடிவேலு சுமார் ரூ 5 கோடி வரை சம்பளமாக பெற்றுள்ளாராம்.

 

விசித்திர நோயை கட்டுடல் மூலம் விரட்டியடித்த பெண்!!

fitness-gym-wallpapergym-girl-fitness-blog-health-tips-fitness-or-health-guide-3

பிரித்தானியாவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தனக்கு ஏற்பட்டிருந்த போபியாவை உடற்பயிற்சியின் மூலம் விரட்டியடித்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.பிரித்தானியாவின் Cheshire, Northwich பகுதியை சேர்ந்தவர் லாரென் லிவின். சிறுவயது முதலேயே உணவு பதார்த்தங்களை பார்த்தால் பயப்படும் போபியா இவருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இறைச்சி, பழங்கள் காய்கறிகள் ஆகியவற்றை சாப்பிட்டால் ஒவ்வாமை ஏற்பட்டது.

இந்த போபியாவால் நீரை கூட அருந்த முடியாமல் அவர் தவித்து வந்தார். தனது உணவாக பிரட், நொறுக்கு தீனி போன்றவற்றையே லாரென் எடுத்து வந்தார். இந்நிலையில் உடலில் போதிய சத்து இல்லாததால் கல்லூரி காலங்களில் அவருக்கு தீராத தலைவலி ஏற்பட்டது.

மேலும் ஒரு நாளைக்கு 12 மணி நேரங்கள் தூங்கி வழிந்துள்ளார். இந்நிலையில் உடற்பயிற்சி மீது ஏற்பட்ட திடீர் ஆர்வம் அவரது வாழ்க்கையையே திசை மாற்றியது. உடற்பயிற்சியாளரான அவரது ஆண் நண்பர் அலெஸ் மோசஸ் உடற்பயிற்சி மேற்கொள்வதற்கு லாரெனுக்கு உற்சாகம் அளித்து வந்தார்.

தீவிர உடற்பயிற்சி மூலம் உணவு வகைகள் பார்த்து பயப்படும் அவரது போபியா படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது. தற்போது அவர் இறைச்சி, காய்கறிகள், மீன் வகைகள் போன்றவற்றை எளிதாக உட்கொள்கிறார். எனினும் நீரைஅருந்துவதற்கு அவர் தொடர்ந்து கஷ்டப்பட்டு வருவதால் பழச்சாறுகளை மட்டும் அருந்தி வருகிறார்.

 

இரண்டாக பிளந்த நிலப்பரப்பு: ஜுராசிக் கடற்கரையில் திடீர் நிலச்சரிவு!!

8da476f72f06a276b1f930cdb28c21f1_XL

பிரித்தானியாவின் புகழ்பெற்ற ஜுராசிக் கடற்கரையில் திடீரென்று நிலப்பரப்பு இரண்டாக பிளந்து அப்பகுதியில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.புகழ்பெற்ற ஜூராசிக் கடற்கரையில் ஏற்பட்ட இந்த திடீர் நிலச்சரிவால் அப்பகுதியில் சுமார் 900 அடி அளவிற்கு பிளவும் ஏற்பட்டுள்ளது.

இதனால் அப்பகுதியில் உள்ள டன் கணக்கிலான மண் குவியல் சரிந்து விழுந்துள்ளது. இது அப்பகுதியில் விடாமல் பெய்த கன மழையால் ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.இந்த திடீர் விபத்தினை அப்பகுதியில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் படம் பிடித்துள்ளார். அவர் தமது Drone எனப்படும் குட்டிவிமானத்தால் இந்த படங்களை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், அப்பகுதி மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாக உணர்ந்த அந்த நபர் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அதிகப்படியானமழை காரணமாக தண்ணீர் அப்பகுதியில் உள்ள சுண்ணாம்புக் கற்களினூடே கலந்திருக்கலாம் என்றும், இதன் காரணமாக எடை அதிகரித்ததால் அப்பகுதியில்உள்ள மண் மேடு உடைந்து இரண்டாக பிளந்து நிலச்சரிவு ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.இந்த கடற்கரை பகுதியானது ஐக்கியநாடுகள் மன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்ட உலக பாரம்பரிய தளங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

 

புதிய பொலிஸ்மா அதிபராக பூஜித் ஜயசுந்தர நியமனம்!!

poojith-jayasundara-dig

புதிய பொலிஸ்மா அதிபராக பூஜித் ஜயசுந்தர நியமிக்கப்பட்டுள்ளார்.

சற்று முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பூஜித்திற்கு நியமனக் கடிதத்தை வழங்கியுள்ளார்.

ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. ஜயசுந்தரவை பொலிஸ்மா அதிபராக தெரிவு செய்ய அரசியல் அமைப்புச்சபை பரிந்துரை செய்திருந்தது.

ஐஸ் தண்ணீர் குடிப்பதால் உடலில் ஏற்படும் பாதிப்புகள்!!

water1

கோடைக்காலம் ஆரம்பித்து விட்ட நிலையில் பலரும் தாகத்தைத் தணிப்பதற்கு குளிர்ச்சியான நீரைத் தான் பருக விரும்புவோம். அதிலும் வெளியே வெயிலில் சுற்றித் திரிந்து வீட்டிற்கு வந்ததும், குளிர்சாதனப் பெட்டியில் உள்ள நீரை அப்படியே எடுத்து பருகுவோம். இது வெயிலில் இருந்து தற்காலிகமாக நல்ல நிவாரணத்தைத் தரலாம்.

ஆனால் இப்படியே எப்போதும் குளிர்ச்சியான நீரைப் பருகினால், அதனால் உடலினுள் பல பிரச்சனைகள் தான் ஏற்படும். பின் நாள்பட்ட உடல் உபாதைகளால் மிகுந்த அவஸ்தைக்குள்ளாகக்கூடும். இங்கு ஐஸ் தண்ணீரைக் குடிப்பதால் சந்திக்கும் பிரச்சனைகள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

* ஐஸ் தண்ணீரைக் குடிப்பதால், உணவுகள் செரிமானமாவதில் இடையூறு ஏற்படும். எப்படியெனில் குளிர்ச்சியான நீரைப் பருகும் போது இரத்த நாளங்கள் சுருங்கும். இதன் காரணமாக செரிமான செயல்பாடு தாமதமாக்கப்படுவதோடு, உணவுகளும் முறையாக செரிமானமாகாமல் இருக்கும். இதனால் உணவுகளில் உள்ள முழுமையான சத்துக்களைப் பெற முடியாமல் போய்விடும்.

* நம் உடலின் சராசரி வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ். ஆனால் இதற்கு குறைவான வெப்பநிலையில் எதையேனும் பருகினால், அந்த வெப்பநிலைக்கு உடலை சீராக்க ஆற்றல் தேவைப்படும். இப்படி ஆற்றலானது உண்ணும் உணவை செரிக்க பயன்படாமல், உடல் வெப்பநிலையை சீராக்க பயன்படுத்தினால், உணவுகளில் உள்ள சத்துக்கள் உறிஞ்ச முடியாமல், நாளடைவில் இதன் காரணமாகவே ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும்.

* குளிர்ச்சியான நீரைப் பருகும் போது, சுவாசப் பாதையை பாதுகாக்கும் படலமான சீதச்சவ்வு பாதிப்பிற்குள்ளாகும். இப்படி ஐஸ் தண்ணீரை தினமும் அதிகம் குடித்து வந்தால், அந்த சவ்வு மிகுதியாக பாதிக்கப்பட்டு, அதனால் எளிதில் நோய்த்தொற்றுக்கள் ஏற்பட்டு, தொண்டையில் புண் உருவாகும்.

* ஐஸ் தண்ணீரைப் பருகினால், இதயத்துடிப்பு குறைய ஆரம்பிக்கும் ஆய்வுகளிலும், ஐஸ் தண்ணீரைக் குடித்தால், சஞ்சாரி நரம்பு தூண்டப்படும். இந்த நரம்பானது மண்டையோட்டின் 10 ஆவது நரம்பு மற்றும் இது உடலின் தன்னாட்சி நரம்பு மண்டலம். இந்த நரம்பு தான் உடலின் தன்னிச்சையற்ற செயல்களைக் கட்டுப்படுத்துகிறது. குளிர்ச்சியான நீரைப் பருகும் போது இந்த நரம்பு இதயத்துடிப்பை குறையச் செய்யும்.

* குளிர்ச்சியான நீரை அதிகம் பருகினால், உடலினுள் உள்ள திசுக்களும், இரத்த நாளங்களும் அழுத்தத்திற்கு உள்ளாகி, பல பிரச்சனைகளை உண்டாக்கும்.

மார்பகங்களைக் காட்டி செல்பி எடுத்த பெண் பொலிஸ் அதிகாரி கடமையிலிருந்து இடைநிறுத்தம்!!

Nidia-Garcia

வித்தியாசமான முறையில் செல்பி எடுத்து முகப்புத்தகத்தில் தரவேற்றிய பெண் பொலிஸ் அதிகாரியை கடமையிலிருந்து இடை நிறுத்திய சம்பவமொன்று மெக்ஸிக்கோவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பெண் பொலிஸ் அதிகாரி காரொன்றிலிருந்தவாறு மேலாடையில்லாது தனது இரு மார்பகங்களையும் காட்டியவாறு செல்பி எடுத்து தனது முகப்புத்தகத்தில் தரவேற்றியுள்ளார்.

நிதியா கார்சியா என்ற பெண் பொலிஸ் அதிகாரி பொலிஸ் சீருடையுடன் குறித்த செல்பியை முகப்புத்தகத்தில் தரவேற்றியதனாலேயே அவர் கடமையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

இது குறித்து பெண் பொலிஸ் அதிகாரி நிதியா கார்சியா தெரிவிக்கையில்,

பொலிஸ் அதிகாரி சீருடை அணிந்தவாறு நான் புகைப்படம் எடுத்தமை தவறானதாகுமம். கீழ்த்தரமான செயலுக்காக மன்னிப்புக் கேட்கின்றேன். இந்த செயலால் எனது இரு பிள்ளைகள், கணவன், பெற்றோர், சகோதரர்கள் மற்றும் குடும்பத்தினர் என்னில் வெறுப்படைந்துள்ளதை நான் உணர்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.

சமந்தாவின் அம்மா நதியா – திடுக்கிடும் தகவல்கள்!!

0

தென்னக திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நதியா. ஆண்டுகள் பல கடந்துவிட்டாலும் இன்னும் இளமை மாறாமல் அப்படியே இருக்கிறார். அவ்வப்போது படங்களில் முக்கிய வேடங்களில் தலைகாட்டி வருகிறார்.

ஏற்கனவே தமிழில் வந்த ‘எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி’ படத்தில் ஜெயம் ரவியின் அம்மாவாக நடித்த நதியா இப்போது ஒரு தெலுங்கு படத்தில் சமந்தாவின் அம்மாவாக நடிக்கிறார். ‘அ.ஆ.’ என்று சுருக்கமாக அழைக்கப்பபடும் இந்த படத்தின் கதாநாயகியாக சமந்தா நடிக்கிறார்.

சமந்தாவின் அம்மாவாக நதியா, அப்பாவாக நரேஷ் நடித்துள்ளனர். நிதின் கதாநாயகனாக நடித்துள்ளார். விக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்குகிறார்.

 

பெண் பொலிசாருக்கு தொலைபேசியில் தொல்லை கொடுக்கும் பொலிஸ் அதிகாரி!!

1 (68)

பெண் பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்கு தொல்லை கொடுக்கும் கிழக்கின் உயர் பொலிஸ் அதி­காரி ஒரு­வ­ருக்கு எதி­ராக உட­ன­டி­யாக விசா­ரணை நடத்தி இரு­வா­ரங்­க­ளுக்குள் அறிக்கை சமர்­ப்பிக்­கு­மாறு கிழக்கு மாகா­ணத்­துக்கு பொறுப்­பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜய­சிங்க உத்­த­ர­விட்­டுள்ளார்.

அம்­பாறை மாவட்­டத்­துக்கு பொறுப்­பான சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் டீ.ஆர்.எல். ரண­வீ­ர­வுக்கே இது குறித்த விசா­ர­ணை­களை நடத்­து­மாறு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜய­சிங்க உத்­த­ரவு பிறப்­பித்­துள்­ள­தாக பொலிஸ் தலை­மை­யக தக­வல்கள் தெரி­வித்­தன.

பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள் சிலர் பொலிஸ் ஆணைக்குழு­வுக்கு செய்­துள்ள முறைப்­பாட்டின் பிர­தி­யொன்று பிரதிப் பொலிஸ் மா அதிபர் காரி­யா­ல­யத்­துக்கு கிடைத்­ததை அடுத்தே இது குறித்த விசா­ர­ணை­க­ளுக்கு உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது.

இவ்­வாறு ஆரம்­பிக்­கப்படும் விசா­ர­ணை­களில் குற்­ற­வியல் சட்­டத்தின் கீழ் நட­வ­டிக்கை எடுக்கத் தக்க ஏதேனும் குற்றச் சாட்­டுக்கள் வெளிப்­படின் அதன் கீழ் நட­வ­டிக்கை எடுக்­கு­மாறும் அவர் தொடர்ந்தும் குறித்த உயர் பத­வியில் இருப்­பது விசா­ர­ணைக்கு பாதிப்பை ஏற்­ப­டுத்­து­மாயின் அவரை உட­ன­டி­யாக இட­மாற்றம் செய்­யவும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜய­சிங்­க­வினால் விசா­ரணை அதி­கா­ரி­யான சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் ரண­வீ­ர­வுக்கு ஆலோ­சனை வழங்­கப்பட்­டுள்­ள­தா­கவும் அறிய முடி­கி­றது.

இது குறித்து மேலும் அறிய முடி­வ­தா­வது,

குறித்த உயர் பொலிஸ் அதி­காரி கடந்த டிசம்பர் மாதமே கிழக்கு மாகா­ணத்­துக்கு இட­மாற்றம் பெற்று சென்­றுள்ளார். பொலிஸ் விசேட அதி­ர­டிப்­ப­டையில் உள்ள இரு­வ­ருடன் சேர்ந்து அந்த அதி­காரி பெண் பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்கு தொல்லை கொடுப்­ப­தா­கவும் இரவு வேளை­களில் தொலை­பேசி அழைப்­புக்கள் மற்றும் குறுஞ்­செய்­தி­களை அனுப்­பு­வதால் பல பெண் பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள் தங்­க­ளது தொலை­பேசி இலக்­கங்­களை மாற்­றி­யுள்­ள­தா­கவும் பொலிஸ் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்­பட்­டுள்ள முறைப்­பாட்டில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

இத­னி­டையே கடந்த ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி பொலிஸ் நிலையம் ஒன்றில் இடம்­பெற்ற மாதாந்த சோதனை நட­வ­டிக்கை ஒன்றின் போது, இந்த பொலிஸ் அதி­காரி தனது இடுப்புப் பட்­டியை கழற்றி பெண் பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் ஒரு­வ­ரிடம் கொடுத்­துள்­ள­தா­கவும் அதனால் அந்த பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் கடும் மன உளைச்­ச­லுக்கு உள்­ள­ாகி­ய­தா­கவும் முறைப்­பாட்டில் சுட்­டிக்­காட்­டப்பட்­டுள்­ளது.

இதனை விட, குறித்த உயர் அதி­காரி பாட நெறி­யொன்றை முன்னெடுக்கும் நிலையில், அதற்கான ஒப்படைகளை பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை வைத்து செய்வதாகவும் அந்த கான்ஸ்டபிளின் சொந்த செலவில் அதன் பிரதிகள் எடுத்துக்கொள்வதாகவும் அது குறித்தும் விசாரணை செய்யுமாறும் முறைப்பாட்டில் கோரப்பட்டுள்ளது.