மணிரத்னம் படத்திலிருந்து விலகியது ஏன் : சாய் பல்லவி விளக்கம்!!

Saai Pallavi

மணி ரத்னம் படத்திலிருந்து விலகியமைக்கான காரணம் தொடர்பில் ட்விட்டரில் சாய் பல்லவி விளக்கம் அளித்துள்ளார்.

ஓ காதல் கண்மணிக்குப் பிறகு மணி ரத்னம் இயக்கும் அடுத்த படத்தில் கார்த்தி, துல்கர், கீர்த்தி சுரேஷ், நித்யா மேனன் போன்றோர் நடிப்பதாக முதலில் கூறப்பட்டது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ரவி வர்மனின் ஔிப்பதிவில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் டிசம்பர் முதல் ஆரம்பமாகும் எனவும் தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து, நடிகர்களில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டன.

துல்கர் ஒப்பந்தமான இரண்டு மலையாளப் படங்களின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய வாய்ப்பில்லை என்பதால் அவருக்குப் பதிலாக தெலுங்கு நடிகர் நானியைத் தேர்வு செய்தார் மணி ரத்னம்.

அதேபோல, திகதி பிரச்சினைகளால் இந்தப் படத்திலிருந்து நடிகை கீர்த்தி சுரேஷும் விலகினார். கீர்த்தி சுரேஷுக்குப் பதிலாக வேறொரு கதாநாயகியைத் தேடும் பணி நடைபெற்று வந்த நிலையில், மணி ரத்னம் படத்தைக் கைவிட முடிவு செய்ததாக சில மாதங்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகின.

பிறகு, படத்தின் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டன. பிரமேம் படத்தில் மலர் டீச்சராக நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடம்பிடித்த சாய் பல்லவி, கார்த்தியின் ஜோடியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

தமிழ்ப் பெண்ணாக இருந்தாலும் தமிழில் ஒரு நல்ல படத்தில் அறிமுகமாகவேண்டும் என்று இருந்த சாய் பல்லவியும் மணி ரத்னம் படம் என்பதால் உடனே ஒப்புக்கொண்டார்.

ஆனால், அதன் பிறகு கதையில் சில மாற்றங்கள் ஏற்பட்டதால் தற்போது அந்தப் படத்திலிருந்து சாய் பல்லவி விலகியுள்ளார்.

இதுகுறித்து அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்ததாவது:

நிறைய வதந்திகள் உலவி வருகின்றன. எனவே, நான் தனிப்பட்ட முறையில் அதைத் தெளிவுபடுத்தலாம் என உள்ளேன். யாருக்கும் மணி ரத்னம் படத்திலிருந்து வெளியே வர மனசு இருக்காது. எனக்கும் அப்படித்தான். புகழ்பெற்ற இயக்குநரான அவருக்கு ஒரு கதாப்பாத்திரத்திற்கு யார் பொருத்தமாக இருப்பார் என்று நன்றாகவே தெரியும். அதேபோல, என் மீது அக்கறை உள்ளவராக எனக்கும் எது சரியாக இருக்கும் என்பதும் அவர் நன்றாக அறிவார். கதையில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து அவர் நல்ல மனதுடன் எனக்குத் தெரிவித்தார். அவருடைய உயரத்துக்கு இதைச் செய்யவேண்டியதில்லைதான். அவருடைய ரசிகராக எல்லோரையும் போல நானும் இந்தப் படத்தில் மிக ஆர்வமாக உள்ளேன் என்று கூறியுள்ளார்.

கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவு வெப்பநிலை உயர்வு!!

Temp

பூமியின் சராசரி வெப்பநிலை கடந்த மார்ச் மாதத்தில் 1.07 டிகிரி செல்சியஸ் அதிகரித்து, கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இது மிகவும் அதிர்ச்சியளிப்பதுடன் ஒரு வகையான பருவ நெருக்கடி நிலை உருவாகியிருப்பதாகவும் ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

20 ஆம் நூற்றாண்டு சராசரியுடன் ஒப்புநோக்குகையில், உலகம் முழுதும் மார்ச் மாதம் 1.07 டிகிரி செல்சியஸ் சராசரி வெப்பநிலை அதிகரித்துள்ளது. பெப்ரவரி மாதத்தின் சராசரி வெப்பநிலை அதிகரிப்பு 1.04 டிகிரி செல்சியஸ்.

ஜப்பான் வானிலை ஆய்வு மையத்தின் அளவுகள் 1891 ஆம் ஆண்டு முதல் ஆராயப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆனால், கடந்த வெள்ளிக்கிழமையன்று நாசா வெளியிட்டுள்ள தரவுகளின் படி, கடந்த 1951-1980 ஆம் ஆண்டுகளின் சராசரி வெப்பநிலையை ஒப்பிடும்போது கடந்த மார்ச் மாதத்தில் 1.28 டிகிரி செல்சியஸ் அதிக வெப்ப நிலை தாக்கியுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

நாசா தரவுகளின் படி பெப்ரவரி மாதம் 1.34 டிகிரி செல்சியஸ் சராசரி வெப்ப நிலை அதிகரித்துள்ளது.

ஐ.நா. வானிலை மற்றும் தட்பவெப்ப நிலை அமைப்பான உலக வானிலை அமைப்பு கடந்த மார்ச் மாத வெப்பநிலை அதிகரிப்பானது கடந்த 100 ஆண்டுகால அதிகரிப்பை விஞ்சியுள்ளது என குறிப்பிட்டுள்ளது.

ஏற்கனவே 2014 ஆம் ஆண்டு முதல் பூமியின் வெப்ப நிலை அதிகரித்து வருகிறது.

எவ்வாறாயினும், 1998 ஆம் ஆண்டுக்குப் பிறகு பெரிய அளவில் எல் நினோ விளைவு தாக்கம் செலுத்தியதில் இந்த வெப்பநிலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனாலும் எல் நினோ விளைவு ஒரு சிறிய தாக்கமே என்றும் பல நாடுகளின் தொழிற்துறை உற்பத்தி நடவடிக்கைகளினால் வெளியேறும் கரியமில வாயுவின் அதிகரிப்பினால் தான் வெப்ப நிலை பெரும்பாலும் உயர்கிறது என்றும் விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்

உங்கள் துணையுடன் வேறு ஒருவர் கள்ளத் தொடர்பா : கண்டுபிடிக்க புதிய மெத்தை கண்டுபிடிப்பு!!

1

தாம் வீட்டில் இல்லாத போது தமது கணவரோ அன்றி மனைவியோ முறையற்ற காதல் தொடர்பைப் பேணி தமக்கு துரோகம் செய்கிறார்களா என்பதை கண்டறிய அவர்களது வாழ்க்கைத் துணைகளுக்கு உதவும் உயர் தொழில்நுட்ப கட்டில் மெத்தையொன்றை ஸ்பெயினைச் சேர்ந்த படுக்கை தயாரிப்பு நிறுவனமொன்று வடிவமைத்துள்ளது.

டர்மெட் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ‘ஸ்மார்ட்’ மெத்தையில் கணவன் அல்லது மனைவி துரோக செயற்பாடுகளில் ஈடுபடும் போது, அந்த மெத்தை தொலைபேசி மென்பொருளை பயன்படுத்தி வாழ்க்கைத் துணைகளுக்கு எச்சரிக்கை செய்கிறது.

மேற்படி மெத்தையின் மீது இடம்பெறும் சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகளை இனங்கண்டறியும் வகையில் அதில் 14 அல்ட்ராசோனிக் உணர்கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

அந்த உணர்கருவிகள் மெத்தை மேல் இடம்பெறும் செயற்பாடுகளை முப்பரிமாணக் காட்சியாக வாழ்க்கைத் துணையின் கையடக்கத்தொலைபேசியில் காட்சிப்படுத்தி அவரை எச்சரிக்கை செய்கிறது.

வழமையான கட்டில் மெத்தை போன்று காணப்படும் இந்த மெத்தையின் விலை 1,200 ஸ்ரேலிங் பவுணாகும்.

ஐரோப்பாவிலேயே தமது வாழ்க்கைத் துணைகளுக்கு துரோகம் செய்பவர்களை அதிகளவில் கொண்ட நாடாக ஸ்பெயின் உள்ளதாக தரவுகள் கூறுகின்றன.

வர்ணனையாளராகின்றார் மஹேல ஜெயவர்த்தன!!

Mahela

இலங்கை அணியின் முன்னாள் நட்­சத்­திர துடுப்­பாட்ட வீர­ரான மஹேல ஜய­வர்­தன, வர்­ண­னை­யா­ள­ராக செயற்­ப­ட­வுள்ளார். இலங்கை அணி அடுத்த மாதம் இங்­கி­லாந்­திற்கு சுற்­றுப்­ப­யணம் மேற்­கொண்டு விளையா­ட­வுள்­ளது.

இந்தத் தொடரில் ஸ்கை ஸ்போர்ட்ஸின் வர்­ண­னை­யா­ள­ராக மஹேல ஜய­வர்­தன செயற்­ப­ட­வுள்ளார் என்று தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

ஏற்­க­னவே வர்­ண­னை­யா­ளர்கள் குழுவில் பணி­யாற்றும் இங்­கி­லாந்து அணியின் முன்னாள் தலை­வர்கள் மற்றும் புகழ்­பெற்ற கிரிக்கெட் வர்­ண­னை­யா­ளர்­க­ளோடு மஹே­லவும் இணை­ய­வுள்ளார்.

தற்­போது ஸ்கை ஸ்போர்ட்ஸ் வர்­ண­னை­யா­ளர்கள் குழுவில் முன்னாள் இங்­கி­லாந்து அணித் தலை­வர்­க­ளான இயன் பொத்தம், டேவிட் கொவர், நாஸர் ஹுசைன், அர்­தர்டன் மற்றும் பொப் வில்லிஸ் ஆகியோர் வர்­ண­னை­யா­ளர்­களாக உள்­ளனர்.

இந்­நி­லையில் மஹேல வர்ணனை யாளராக இணை யும் முதல் சந்தர்ப்பம் இதுவென்பது குறிப் பிடத்தக்கது.

வவுனியா நகரசபை பெரியார்களின் சிலைகளை பராமரித்து நினைவு தினங்களையும் நினைவுகூர வேண்டும் : முன்னாள் உப நகரபிதா வேண்டுகோள்!!

Chandrakulasingam

தமிழையும் சைவத்தையும் வளர்த்த பெரியார்களின் 10 சிலைகளையும் ஒரே நாளில் நிறுவும் போது ஏற்பட்ட பெருமையும் கௌரவமும் இன்று கேள்விக்குறியாகிற நிலைமையினை நகரசபை செய்யக்கூடாது என இன்று நடைபெற்ற இளங்கோ அடிகளாரின் நினைவுதினத்தில் உரையாற்றிய புளொட் அமைப்பின் வவுனியா மாவட்ட இணைப்பாளரும், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதாவுமாகிய திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்கள் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பெரியார்களின் சிலைகளை நாம் அந்த பகுதிகளின் கிராம அபிவிருத்திச் சங்கங்கள், பாடசாலைகள் மற்றும் கோவில் நிர்வாகங்களின் பராமரிப்பில் கையளித்தோம் ஆனால் இன்று நகரசபை அவர்களிடமும் வழங்கவில்லை தாங்களும் பாராமுகமாக செயற்படுகின்றமை கவலையளிக்கின்றது.

வருமானம் வருகின்ற நிலையங்களை தங்களின் நிர்வாகத்தின் கீழ் நடைமுறைப்படுத்தும் நகரசபை எமது கலாச்சாரத்தின் சின்னங்களாக நகரமெங்கும் மிளிர்ந்து காணப்படும் பெரியார்களின் சிலைகளை அவர்களின் நினைவு தினத்திலாவது தூய்மைப்படுத்தி மக்களின், மாணவர்களின் பங்களிப்போடு கௌரவப்படுத்த வேண்டியது நகரசபையின் கடமை.

நகரசபைக்கு உட்பட்ட மயானங்கள், தாய்சேய் பராமரிப்பு நிலையங்கள் , பொது நூல் நிலையம், பொதுப் பூங்கா மற்றும் நகரசபைக்கு கையளிக்கப்பட்ட கட்டிடங்கள் என்பவற்றின் பெறுமதியும் பயனும் கருதி அவற்றினை உரிய வகையில் பாதுகாக்க வேண்டியதுடன், மக்களின் பணத்தில் இயங்கும் நகரசபை மக்களுக்கு சிறப்பாக சேவையாற்ற கூடிய சூழ்நிலையை முன்னெடுக்க வேண்டும் எனவும், மக்கள் சேவையில் மகிழ்ச்சி காணுவோம் என மகுடத்தை உருவாக்கிய நாங்களும் எமது அமைப்பும் என்றும் நகரசபையை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல முயற்சிப்போம் எனவும் கூறினார்.

தாதிக்கு மர்ம உறுப்பை காட்டியவர் கைது!!

Arrest1

தாதியொருவருக்கு தனது மர்ம உறுப்பை காட்டிய நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த நபர் சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஒருவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பண்டாரகம ரைகம பிரதேசத்தைச் சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதியே, தனது வீட்டுக்கு அருகில் வசிக்கும் தாதிக்கு, இவ்வாறு மர்மஉறுப்பை காண்பித்துள்ளார்.

குறித்த சாரதி, தனது வீட்டுக்கு முன்பாக முச்சக்கரவண்டியை நிறுத்திவைத்துவிட்டு, அதிகமான சத்தத்துடன் தினமும் பாடலை ஒலிபரப்பி வந்துள்ளார்.

இதனடிப்படையில், அந்த தாதி பொலிஸில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த முறைப்பாட்டில் சாரதி, இவ்வாறான தேவையில்லாத செயற்பாட்டில் ஈடுபட்டதாகவும் அவர் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

இலங்கை மீன் ஏற்றுமதிக்கான தடை நீக்கம்!!

fish

இலங்கை மீன் வகைகளை ஏற்றுமதி செய்வதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தினால் விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தினால் நியமிக்கப்பட்டுள்ள குழுவினரால் இது தொடர்பில் இறுதித் தீர்மானம் இன்று எடுக்கப்படும் என முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் மஹிந்த அமரவீர குறித்த தடை நீக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

வவுனியாவில் இளங்கோ அடிகளின் சிரார்த்த தின நிகழ்வுகள்!!

 
வவுனியாவில் இளங்கோ அடிகளின் சிரார்த்த தின நிகழ்வுகள்!!வவுனியா சின்னப்பதுக்குளம், சிவன் கோவிலுக்கு அருகிலுள்ள இளங்கோ அடிகளின் சிரார்த்த தினமான சித்திராப் பெணர்னமி தினத்தன்று அன்னாரின் சிரார்த்த தினமாக அனுஷ்டிக்கப்பட்டு வருவதை முன்னிட்டு அன்னாரின் அதிருவுருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தியதுடன் மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.எஸ்.சீனிவாசன் அவர்களினால் அன்னாரின் நினைவுப் பேருரை நிகழ்த்தப்பட்டது.

இந்நிகழ்வில் முன்னாள் உப நகர பிதாவும், இளங்கோ அடிகளின் திருவுருவச் சிலையினை நிறுவியவருமான க.சந்திரகுலசிங்கம், மாவட்ட கிராம நிர்வாக உத்தியோகத்தர் எம்.விஜயரட்ணம், மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தன், நகர வரியிறுப்பாளர் சங்கம், தமிழ் விருட்சம் அமைப்பித் தலைவருமான எஸ்.சந்திரகுமார் செயலாளர் மாணிக்கம் ஜெகன், தமிழ்த் தேசிய இளைஞர் கழகத் தலைவர் சு.காண்டீபன், செயலாளர் கேசவன், பொருளாலர் நிகேதன், அமைப்பாளர் பிரதீபன், கலைமகள் நற்பணிமன்றத் தலைவர் பா.சிந்துஜன், சிவன் கோவில் நிர்வாகத்தினர், சிவன் சிறுவர் இல்ல சிறுவர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்த கொண்டனர்.

DSC03160 DSC03179 DSC03181 DSC03187

ஈழப் பெண்ணாக தேசிய அணியில் விளையாடுகின்றேன் : உறங்குவதற்குகூட வீடு இல்லை : கண்ணீர்மல்கும் கஜேந்தினி!!

Tamilwin

தமிழீழப் பெண்ணாக தேசிய கபடி அணியில் இலங்கைக்காக தேசிய மட்டத்தில் விளையாடுகின்றேன், ஆனால் நான் எனது குடும்பம் சேர்ந்து உறங்குவதற்குக்கூட இன்று சாதாரண அப்படிடை வசதிகளுடன் கொண்ட ஒரு வீடு இல்லாத சொல்லொண்ணா நிலையில் வாழ்ந்து வருகின்றேன் என ராசா கஜேந்தினி தெரிவித்தார்.

கடந்த வாரங்களில் இளையோர் கொண்ட கபடி அணிக்கு தேசிய ரீதியில் தமிழர் சார்பாக தமிழ் பேசும் பெண்ணாக தெரிவு செய்யப்பட்ட ஒரேயொரு வீராங்கனை தான் மட்டக்களப்பு கிரான் கிழக்கு விஸ்ணு ஆலய வீதியிலுள்ள கஜேந்தினி.

தேசிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட பெரும்பான்னை இன வீரர்களில் ஒருவளாக தனது தைரியத்தினாலும், முயற்சியினாலும் இன்று ஈராக் நாட்டில் விளையாடி தாயக தேசத்திற்கு வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுக்கொடுத்துள்ளார்கள்.

ஓலைக் குடிசையில் அதுவும் பூரணப் படுத்தப்படாத குடிசையில் இருந்து கொண்டு தேசிய அணியில் விளையாடும் கஜேந்தினியின் வாழ்கையிலும் நாட்டில் நடந்த யுத்த கனங்கள் விட்டுவைக்கவில்லை.

தனது பாசத்துக்குரிய அண்ணா விடுதலைப் போராட்டத்தின்போது இறுதி யுத்தத்தில் பறிகொடுத்துள்ள சம்பவத்தை கண்ணீர் மல்க தெரிவித்தார்.

என்னுடைய அண்ணா இருந்திருந்தால் எங்கள் குடும்பத்தை இந்த நிலைக்கு வைத்திருக்க மாட்டார். ஏனையவர்களைப் போல் நாங்களும் ஓரளவு சந்தோசமாக இருந்திருப்போன் என தெரிவித்தாள்.

சிறு வயதிலே தனது தந்தை நோயினால் அவதியுற்று இறந்து விட்டார், இந்த குடிசையில் நான் உட்பட பதினொராம் தரம் படிக்கும் தம்பி, ஒன்பதாம் தரம் படிக்கும் தம்பி வயது போன எனது அம்மா, எனது அம்மம்மான அனைவரும் வாழ்ந்து வருகின்றோம்.

படிப்பதும் இதில் தான் படுத்துறங்குவதும் இங்குதான், எனது உடை கூட மாற்ற முடியாத ஒரே ஒரு அறை கொண்ட சிறிய குடிசை. என்ன செய்வது எனது அன்பு அப்பா, அண்ணா இப்போது இருந்து இருந்தால் எப்படி இருக்காது என தெரிவித்தார்.

எனது முதலாவது விமானப் பயணம், நினைத்துக் கூடப் பார்க்கவில்லை, என்னுடன் பல தமிழ் பேசும் வீரர்கள் தெரிவுக்காக வந்தார்கள். அதில் நான் தெரிவு செய்யப்பட்டமை ஒவ்வொரு தமிழருக்கும் கிடைத்த எதிர்கால வெற்றியென நினைக்கின்றேன். மொழியாற்றல் இல்லை, சக வீரர்களுடன் நன்றாக விளையாட மட்டும் கிடைத்தது.

எனக்கும் ஆசைதான் என்னுடன் தேசிய அணிக்காக விளையாடும் சக சிங்கள வீரர்களைப் போல் ஒரு சில வசதிகளை பெற்றுக்கொள்ள, என்ன செய்வது, போடுவதற்கு ஒழுங்கான உடை மாற்றிப்போட சப்பாத்து போன்ற பல்வேறு குறைபாடுகளுடன் இருக்கின்றேன், பெருமூச்சு விட்டு இருப்பதைக் கொண்டு விளையாட வேண்டிய வறுமை நிலையில் தற்பொழுதுள்ளேன்.

நான் முழுக்க முழுக்க கிரான் ஐக்கிய விளையாட்டு கழத்திற்கு விளையாடி வருகின்றேன்.

பெரும்பான்மை இன வீரர்களின் கடும் சவாலுக்கு மத்தியில் நான் தேசிய அணிக்கு தெரிவு செய்யப்பட்டதும் எனது விளையாட்டு கழகம் மற்றும் ஊர் நலன் விரும்பிகள் சேர்ந்து எனக்கு போக்குவரத்து பணம் போன்றவற்றை சேர்த்து ஈரக்கில் நடைபெற்ற போட்டிக்கு வழியனுப்பி வைத்தார்கள் அவர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவிக்கின்றேன்.

புல் தரையிலும் மண் தரையிலும் கிராமத்தில் கபடி விளையாடி நான் இன்று தேசிய ரீதியில் காப்பட்டில் விளையாடுகின்றேன்.

எனது குடும்ப நிலை தொடர்பாக உங்களைப் போல நல்ல உள்ளம் கொண்ட அனைவருக்கும் தெரியப்படுத்தியிருக்கின்றேன்.

எனவே எமது தமிழ் தேசத்து உறவுகள் எனது குடும்ப நிலையினை அறிந்து எனக்கு உதவி செய்யுங்கள், நான் அதனை வரவேற்கின்றேன்.

என்றும் உங்களை மறக்கமாட்டடேன், எனது ஆசை என்னைப் போன்ற பல தமிழ் வீரர்களை எமது தமிழ் தேசத்தில் இருந்து தேசிய ரீதியாக கொண்டு செல்வது அதனை நான் என்னால் இயன்றவரை திறன்பட நிறைவேற்றுவேன் என தெரிவித்தார்.

ஈராக்கில் நடைபெற்ற இளையோர் கபடி போட்டிக்கு இலங்கைக்கான இளையோர் கபடி அணி கடந்த 10ம் திகதி நாட்டில் இருந்து புறப்பட்டு ஈரானில் 13,14,15 திகதிகளில் இந்தியா, ஈரான், ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற பல நாடுகளுடன் விளையாடி இறுதிச் சுற்றுக்குச் சென்று, மூன்றாவது இடத்தைப் பெற்று வெண்கலப் பதகக்கதைப் பெற்று நாடு திரும்பியதுடன்,

தேசிய ரீதியில் விளையாடி வெண்கலப் பதக்கத்தை பெற்று கிரான் பிரதேசத்திற்கு வருகை தந்த கஜேந்தினிக்கு விளையாட்டுக் கழகங்கள் மற்றும் ஊர் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வாகனப் பேரணியில் ஊர்வலமாக அழைத்துச் சென்று வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்த நிகழ்வொன்று நேற்று இரவு கிரானில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புகளுக்கு

பெயர் : ராசா கஜேந்தினி:- 0094756039044

வங்கி : மக்கள் வங்கி, கிளை கிரான்

கணக்கு இலக்கம் : 102-2-001-2-0020654

-தமிழ்வின்-

சடலத்துக்கு உரிமை கோரிய மனைவிமார்!!

Sadalam

கடந்த சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்த நபருடைய சடலத்துக்கு இரண்டு மனைவிகள் உரிமை கோரிய சம்பவமொன்று பயாகல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் தனது 71ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.

இவருக்கு திருமணமாகாத 3 பிள்ளைகள் இருக்கின்ற நிலையில், குறித்த மூவருக்கும் திருணம் செய்துக்கொணடுத்து விட்டு தானும் இரண்டாவது திருமணம் செய்துக்கொண்டுள்ளார்.

எனினும் தன்னுடைய கணவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, குறித்த நபருடைய முதலாவது மனைவி நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக வழங்கு தாக்கல் செய்துள்ளார்.

வழங்கு விசாரணைகளின் போது, தன்னுடைய முதல் மனைவிக்கு, மாதம் 5,000 ரூபாயை வழங்குவதற்கு குறித்த நபர் ஏற்றுக்கொண்டிருந்தார்.

இந்த நிலையிலேயே சில நாட்களுக்கு முன்னர் சுகயீனம் காரணமாக நாகொட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் திடீரென்று உயிரிழந்துள்ளார்.

எனினும் உயிரிழந்த நபரின் சடலத்துக்கு உரிமை கோரி இரண்டு மனைவிமாருக்கிடையிலும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தன்னுடைய கணவருடைய சடலத்தை பொறுப்பேற்றுக்கொள்ளுமாறு முதலாவது மனைவி, இரண்டாவது மனைவிக்கு கூறியுள்ளதாகவும் தன் கணவருடைய இறுதிக் கிரியைகளின் போது, தான் அதில் பங்கேற்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் முதலாவது மனைவி வேண்டுகோள் விடுத்துள்ளார் என்றும் தெரியவருகின்றது.

பலரை வெட்டிச் சாய்க்க முற்பட்ட 9 மாணவர்கள் யாழில் கைது!

Vaal

யாழ். இணுவிலில் கோயில் வீதியில் வைத்துப் பலரை வெட்டிச் சாய்க்க முற்பட்டனர் என்ற குற்றச்சாட்டில் பாடசாலை மாணவர்கள் 9 பேரைப் பொலிஸ் விசேட அணி அதிரடியாகத் துரத்தித் துரத்திக் கைது செய்துள்ளது.

அத்துடன், நுணுக்கமாக மறைத்து வைத்திருந்த வாள்கள், கைக்கோடரி, இரும்புக் கம்பிகள், செயின் என்பவையும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுக் குழுக்களின் அடாவடி தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், விசேட பொலிஸ் அணியினர் அதிரடியாகக் களத்தில் இறங்கி இவர்களைத் துரத்தித் துரத்திக் கைது செய்துள்ளனர்.

இதனால் கோயிலில் இடம்பெறவிருந்த பெரிய உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த அதிரடி நடவடிக்கை தொடர்பில் மேலும் தெரியவருவதாவது..

நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை இணுவிலில் ஓட்டோ ஒன்று அடித்து நொருக்கப்பட்டுள்ளது. அந்த ஓட்டோ பிறிதொரு வாள்வெட்டுக் கும்பலினுடையது என்று சந்தேகிக்கப்படுகின்றது. எனினும், மேலதிக விசாரணை மேற்கொள்ளப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்தநிலையில், இணுவில் முதலி கோயிலின் முன்பக்க வீதியில் பாடசாலை மாணவர்கள் 9 பேர் அடங்கிய வாள்வெட்டுக் கும்பல் நின்றுள்ளது. அங்கு வைத்தே பிறிதொரு சாரார் மீது வாள்வெட்டு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

அந்தநேரம் விசேட பொலிஸ் குழு அவதானிப்புக்காக அந்த இடத்துக்குச் சென்றிருந்தது. அந்தக்குழு பொலிஸ் நிலையம் ஒன்றைச் சேர்ந்த குழு அல்ல. பல பொலிஸ் நிலையங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்டு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரால் நியமிக்கப்பட்ட விசேட பொலிஸ் அணி.

இந்த விசேட பொலிஸ் அணி குறித்த வாள் வெட்டுக் கும்பலை கைது செய்ய முற்பட்டுள்ளது. அவர்கள் செல்வதனைக் கண்ட வாள்வெட்டுக் குழுவினர், அந்த இடத்திலிருந்து தப்பியோடியுள்ளனர். ஆனால், பொலிஸ் விசேட குழுவினரும் விடவில்லை. நீண்ட தூரத்துக்குத் துரத்திச் சென்று முதலில் 6 பேரைக் கைது செய்தனர். அவர்கள் முதலி கோயில் முன்பாகவுள்ள பெரியதொரு மரத்தின் கீழும், அதற்கு அருகேயுள்ள காணியிலும், அவர்கள் தங்கியிருந்து தமது திட்டங்களைப் போட்டு செயற்படுத்தி வந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு விசாரணை மற்றும் அவதானிப்பின் போது, அவர்கள் தலைக்கவசங்களை அருகருகே வைத்து நுணுக்கமாக வாள், இரும்புக் கம்பிகள், கைக்கோடரி என்பனவற்றை மறைத்து வைத்திருந்தமை கண்டறியப்பட்டது. அத்துடன், மோட்டார் சைக்கிளிலும் நுணுக்கமாக வைக்கப்பட்டிருந்த இரும்புக்கம்பிகளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த கும்பலில் மேலும் 3 பேர் வேகமாக ஓடி ஓரிடத்தில் மறைந்திருந்துள்ளனர். அவர்கள் வெளியே வரும் வரைக்கும் பொலிஸ் விசேட குழு மணித்தியாலக் கணக்கில் அப் பகுதியில் மறைந்திருந்துள்ளது. பின்னர் அந்த 3 பேரும் மோட்டார் சைக்கிள் ஒன்றில் தப்பியோடியபோது, அவர்களைப் பாய்ந்து பிடித்துள்ளனர் விசேட பொலிஸ் குழுவினர்.

இந்த அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டது விசேட பொலிஸ் குழு என்பதனால், அவர்கள் தமக்கு வசதியான பொலிஸ் நிலையத்தில் கைதுசெய்யப்பட்டவர்களை ஒப்படைத்து காலவரையின்றித் தடுத்து வைத்துச் சட்ட நடவடிக்கை எடுக்குமளவுக்கு விசேட அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி அவர்கள் சுன்னாகம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு வைத்து கடும் விசாணைக்கு உள்ளாக்கப்பட்டனர்.

இதன்போதே அவர்கள் வாள்வெட்டுக்களில் ஈடுபடும் பெரிய குழுக்களுடன் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டகள் இணுவில் முதலி கோயிலடி, அதற்கு முன்பாகவுள்ள சேர்ச் லேன், மானிப்பாய், ஆனைக்கோட்டை, சுதுமலை மற்றும் மன்னாரைச் சேர்ந்த ஒருவருமே கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் யாழ்ப்பாணம், மானிப்பாய் ஆகிய இடங்களிலுள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டமையை இணுவிலிலுள்ள பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.

அத்துடன், கைதுசெய்யப்பட்ட மாணவர்கள் 9 பேரிடமும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் அவர்களை மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் இன்று பொலிஸார் ஆஜர்படுத்தினர். இதன்போது அவர்களை மே 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

எதிர்வரும் 2 ஆம் திகதி முதல் உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு!!

food-shop

எதிர்வரும் 2ஆம் திகதி தொடக்கம் உணவுப் பொருட்களின் விலையை அதிகரிப்பதற்கு அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

வட் வரி அதிகரிப்பின் காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அகில உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய ஏற்பாட்டாளார் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

சிற்றுண்டிகளின் வட் வரி அதிகரிப்பு தொடர்பில் தங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் மொத்த மற்றும் சில்லறை பொருட்களுக்கான வட் வரி அதிகரிப்பிற்கு அமைய சிற்றுண்டிகளின் விலைகளும் அதிகரிக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக 5, 10 மற்றும் 15 ரூபாவால் சிற்றுண்டிகளின் விலை அதிகரிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய எதிர்வரும் 2ஆம் திகதி முதல் இந்த விலை அதிகரிப்பு அமுல்படுத்தப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிசாலைகள் உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய ஏற்பாட்டாளார் அசேல சம்பத் சுட்டிக்காட்டியுள்ளார்.

2018இல் மின்தட்டுப்பாடு ஏற்படலாம்!!

Electricity

2018ம் ஆண்டில் மின்சாரத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக, மின் சக்தி பிரதி அமைச்சர் அஜித் பீ பெரேரா தெரிவித்துள்ளார்.

இதன்படி, 500 மெகாவோட் மின்சாரத்துக்கு இவ்வாறு பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதுஎவ்வாறு இருப்பினும் அதற்கு முகம் கொடுப்பது தொடர்பில் தற்போது அவதானம் செலுத்தியுள்ளதாகவும், சூரிய சக்தியில் இயங்கக் கூடிய மின் உற்பத்தி நிலையங்கள் மூன்றை கிழக்கு மாகாணத்தில் நிறுவ எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

முல்லைத்தீவில் நடந்த சோகம் : பறவைக் காவடியுடன் உழவு இயந்திரம் கவிழ்ந்து இளைஞன் பலி!!

 
ஒட்டிசுட்டான் தான்தோண்றீஸ்வரர் ஆலயத்தில் இன்று (21.05.2016) சற்று முன் தூக்குகாவடி ஏற்றிச்சென்ற ரக்டர் தடம் புரண்டதில் ஒருவர் சம்பவ இடத்திலே பரிதாபமாக பலியாகியுள்ளார். இச் சம்வம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.

தமிழரின் பாரம்பரியங்களில் ஒன்றாக காணப்படும் தூக்குக்காவடி நேத்திக்கடனை நிறைவேற்ற ஒட்டிசுட்டான் தான்தோண்றீஸ்வரர் ஆலயத்திலிருந்து முல்லைத்தீவு மம்மில் பிள்ளையார் ஆலயத்திற்கு தூக்குக்காவடி ஏற்றிச்சென்ற டக்டர் இன்று காலை தடம் புரண்டதில் தூக்குக்காவடி எடுத்த வசந்தகுமார் பிரதீபன் என்ற 26 வயது இளைஞன் சம்பவ இடத்திலிலேயே பலியான சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவத்தில் உயிரிழந்த இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்குகாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

news (1) news (2) news (3) news (4) news (5) news (6) news (7) news (8) news (9) news (10)

இரவு நேரப் பணியில் ஈடுபடும் ஆண்களை விட பெண்களுக்கு மூளைப் பாதிப்பு அதிகம்!!

Lady

இரவு நேரப் பணியில் ஈடுபடும் ஆண்களை விட பெண்களுக்கு மூளை பாதிப்பு அதிகம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பெண்களின் மூளை செயற்திறன் ஆண்களைக் காட்டிலும் அதிகமாக உள்ளது. ஆனால், இரவுப் பணியில் ஈடுபடுவதால் நுண்ணறிவார்ந்த செயற்திறன் பலவீனமடையும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

வேலை நேரத்தில் ஏற்படும் மாற்றம் ஆண்கள் மற்றும் பெண்களின் செயற்திறனை வெவ்வேறு விதமாகப் பாதிக்கின்றது.

இது அறிவாற்றல் பற்றாக்குறை மற்றும் மன நிலையில் மாற்றம் ஆகியவற்றை ஏற்படுத்துகின்றது என்று சர்ரே பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் நயன்தாரா சாந்தி கூறியுள்ளார்.

ஆராய்சியாளர்கள் 18 பெண்கள் மற்றும் 16 ஆண்களை 28 மணித்தியாலம் சூரிய ஒளி இல்லாமல் அறையில் வைத்து ஆய்வில் ஈடுபடுத்தினர்.

அவர்களின் மூளை செயற்பாடுகள் சாதாரண பணி சூழலில் இருப்பவர்களை விட குறைவாக இருப்பதாகக் கூறினர்.
தேசிய அறிவியல் அகாடமி பத்திரிக்கை வெளியிட்ட ஆய்வு அறிக்கையில் இரவுப் பணியில் ஈடுபடும் பெண் செவிலியர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள், தொழிலாளர்களுக்கு மூளை செயற்திறனில் குறிப்பிடத்தக்க தாக்கங்கள் ஏற்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.

வவுனியா வெளிவட்ட வீதி ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த தேர்த் திருவிழா(படங்கள் காணொளி)

வவுனியா வெளிவட்ட வீதி ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த தேர்த் திருவிழா நேற்று  (20.04.2016 புதன்கிழமை)காலை வெகு சிறப்பாக நடைபெற்றது.காலை ஐந்து மணிக்கு கிரியைகள் ஆரம்பமாகி ஆறுமணியளவில் கொடிதம்ப பூசை இடம்பெற்று காலை ஏழுமணிளவில்   வசந்தமண்டப பூஜையும்  தொடர்ந்து  எட்டுமணியளவில் எம்பெருமான்  விநாயகப் பெருமானும் சண்டேஸ்வரரும்  திருத்தேரில் ஆரோகணித்தனர்.

தொடர்ந்து எட்டரை மணியளவில் ரதோற்சவம் இடம்பெற்று காலை ஒன்பதரை மணியளவில் ரதம் இருப்பிடத்தை வந்தடைய  அர்ச்சனைகள் இடம்பெற்றன. .இன்றைய தேர்த்திருவிழாவின் போது அடியார்கள் அங்கபிரதட்சணம் அடியடித்தால் மற்றும் கற்பூர சட்டி ஏந்தி தமது நேர்த்திகடன்களை நிறைவு செய்தனர்.

இத் தேர்த் திருவிழாவில் நூற்றுகணக்கான  பக்தர்கள் கலந்து கொண்டனர் .பின்னர் காலை பதினொன்றரை மணியளவில் பச்சை சாத்தும் உற்சவம் இடம்பெற்றது .

படங்கள் வீடியோ: கஜன்

DSC03644 DSC03670 DSC03678 DSC03679 DSC03686 DSC03689 DSC03698 DSC03702 DSC03707 DSC03717 DSC03728 DSC03735 DSC03737 DSC03744 DSC03750 DSC03769 DSC03774 DSC03781 DSC03785 DSC03793 DSC03796 DSC03797 DSC03802 DSC03809 DSC03811 DSC03822 DSC03825 DSC03831 DSC03847 DSC03849 DSC03850 DSC03860 DSC03861 DSC03862 DSC03865 DSC03868 DSC03872