T20 போட்டியில் 277 ஓட்டங்கள் : இலங்கை வீரரின் சாதனையை சமன் செய்த பாகிஸ்தான் வீரர்!!

pak

பாகிஸ்தான் வீரர் ஒருவர் T20 போட்டியில் 277 ஓட்டங்கள் குவித்து அனைவரையும் வியக்க வைத்துள்ளார்.

பாகிஸ்தானில் நடந்த கழகமட்டப் போட்டி ஒன்றில் அகமது மீர் என்ற வீரர் 76 பந்தில் 277 ஓட்டங்கள் விளாசியுள்ளார். இதில் 26 ஆறு ஓட்டங்களும், 24 நான்கு ஓட்டங்களும் அடங்கும்.

ஆனால் இவருக்கு முன்னரே கடந்த 2007ம் ஆண்டு இலங்கை வீரர் தனுக பத்திரண முதல் தர T20 போட்டியில் 72 பந்துகளில் 277 ஓட்டங்கள் குவித்திருந்தார். தற்போது இவரது சாதனையை அகமது மீர் சமன் செய்துள்ளார்.

முதல் தரப் போட்டிகளில் எளிதாக இமாலய ஓட்டங்களை வீரர்கள் எளிதில் எடுப்பது அதிகரித்து வருகிறது.

சமீபத்தில் பிரானாவ் தனவாடே பள்ளிகளுக்கு இடையேயான போட்டியில் 1009 ஓட்டங்களை குவித்து உலகசாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

வவுனியா புளியங்குளத்தில் புலம்பெயர்வாழ் உறவினால் மனைவியின் ஞாபகார்த்தமாக உதவிகள்!!

வவுனியா புளியங்குளம்  ஸ்ரீ கந்தசுவாமி கோவிலில் வைத்து பாடசாலை 07.03.2016 ஞாயிற்றுக்கிழமைசிறாருக்கான காலணிகள்  மற்றும் குத்துவிளக்குகள்  என்பன  வவுனியா புளியங்குளத்தை சேர்ந்த  லண்டன்வாழ் புலம்பெயர் உறவு  திரு. கணேசநாதன்  அவர்களால்  தனது மனைவி ஆனந்த நாயகியின் பத்தாம் ஆண்டு நினைவுதினத்தை  முன்னிட்டு வழங்கி வைக்கபட்டது .

மேற்படிநிகழ்வில்  முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் வினோ மாகாண சபை உறுப்பினர் செ.மயூரன்  ஆகியோரும்  ஊரார்  மற்றும் பாடசாலை மாணவர்கள்  புளியங்குளம் கிராமமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

12801527_973147762774404_1820923865902339639_n

12495239_973147976107716_1294670523376607887_n 12790929_973148776107636_13640778585562982_n 12798968_973149056107608_4327979474448701049_n 12804638_973149296107584_3354847031876298025_n 12805835_973148182774362_4382145684914425527_n 12806260_973149249440922_1152279445762161246_n 12809624_973147662774414_8612782562078139728_n 12821469_973147712774409_6511895088613625600_n (1) 12821469_973147712774409_6511895088613625600_n 12821575_973148999440947_1139516498383985134_n

வவுனியா கலைமகள் விளையாட்டுக்கழகம் நடாத்தும் சித்திரை விளையாட்டுப் போட்டிக்கான விண்ணப்பங்கள் கோரல்!!

SP

வவுனியா கலைமகள் விளையாட்டுக்கழகமும் சனசமூக நிலையமும் இணைந்து நடாத்தும் சித்திரை வருடப்பிறப்பு விளையாட்டுப் போட்டிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

32 வருடமாக இவ்வருடமும் நடாத்தப்படவுள்ள விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான 60 மைல் சைக்கிள் ஓட்டம், கழகங்களுக்கிடையிலான கயிறு இழுத்தல், சிறுவர் சிறுமியர்கள் இளைஞர்கள், பெண்கள், முதியவர்களுக்கான பலதரப்பட்ட போட்டிகளும் அணிக்கு நான்குபேர் கொண்ட வரையறுக்குட்பட்ட கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டிகளும் இடம்பெறவுள்ளது.

எனவே போட்டியில் பங்குபற்ற விரும்பும் வட மாகாணத்திற்குட்பட்ட விளையாட்டுக்கழகங்கள் வவுனியா மன்னார் வீதியில் உள்ள கலைமகள் விளையாட்டுக்கழகத்தின் நிர்வாகிகளுடனோ அல்லது 0776453739, 0776031512, 0776313658, 0777363175 என்ற தொலைபேசி இலக்கங்களுடனும் தொடர்புகொண்டு பதிவுகளை மேற்கொள்வதுடன் மேலதிக தகவல்களையும் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா வடக்கில் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சித்திட்டம் அறிமுகம்!!

 
வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகதிகளில் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொள்வது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் இன்று (10.03.2016) வவுனியா கனகராயன்குளம் புதுக்குளத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

வவுனியா வடக்கு பிரதேச செயலகத்துடன் சமூகமட்ட அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந் நிகழ்வில் மகளிர்களுக்கான ஆற்றல் மேம்பாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தது.

இதன்போது தொழில் வாய்ப்புகளை தேடும் இளைஞர் யுவதிகளுக்கு விளையாட்டு நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் அதனூடாக தொழிலின் முக்கியத்துவம் தொடர்பான விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டிருந்ததுடன் திருமண பதிவுகளும் இடம்பெற்றிருந்தது.

இதேவேளை பிரதேச மகளிர் தினமும் அனுஸ்டிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க. பரந்தாமன், பிரதேச சயெலக ஊழியர்கள், அரசசார்பற்ற நிறுவனத்தின் ஊழியர்கள், மகளிர் அமைப்புகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

DSC07824 DSC07825 DSC07826 DSC07827 DSC07828 DSC07829 DSC07830 DSC07831 DSC07832 DSC07833 DSC07835 DSC07836 DSC07837 DSC07838 DSC07839 DSC07844 DSC07845 DSC07846

சூடுபிடிக்கும் தமிழ்நாடு தேர்தல் களம்: களமிறங்கும் நடிகர், நடிகைகள் யார்?

ELE

தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் நடிகர், நடிகைகளை களமிறக்குவது குறித்து அரசியல் கட்சிகள் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றன.

தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கூட்டணி முடிவானதும் தொகுதி பங்கீடு, பிரசாரம் என தேர்தல் களமே படுபயங்கரமாக சூடுபிடிக்கும்.

இந்நிலையில் நடிகர், நடிகைகளும் பிரசாரத்திற்கு தயாராகும்படி அரசியல் கட்சிகள் கேட்டுக் கொண்டுள்ளன.

அதிமுக-வை பொறுத்த வரையில் நடிகர்கள் ராமராஜன், ராதாரவி, ஆனந்தராஜ், சிங்கமுத்து, டைரக்டர் ஆர்.வி.உதயகுமார், தியாகு, குண்டு கல்யாணம், நடிகைகள் சி.ஆர்.சரஸ்வதி, விந்தியா, குயிலி, பாத்திமா பாபு உள்பட பலர் தேர்தல் பிரசாரத்துக்கு தயாராக இருக்கிறார்கள்.

திமுக-வில் வாகை சந்திரசேகர், வாசு விக்ரம், இமான் அண்ணாச்சி ஆகியோரும், காங்கிரஸ் கட்சியில் நக்மா, குஷ்பு ஆகியோர் பிரசாரம் செய்ய இருக்கிறார்கள்.

இதுதவிர சின்னத்திரை நடிகர், நடிகைகளையும் பிரசாரம் செய்ய களத்தில் இறக்க முயற்சிகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

விலங்குகளின் தீவனங்களை, புற்களை சாப்பிடும் குழந்தைகள் : நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்!!

syria_child_002

உயிர் வாழ வேண்டும் என்பதற்காகவும், கடும் பசியின் காரணமாகவும் சிரியா குழந்தைகள் விலங்குகளின் தீவனங்களை உண்டு வாழும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

சிரியாவில் கடந்த 2011ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் உள்நாட்டு போரால் மில்லியன்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பெண்கள், குழந்தைகள் உட்பட லட்சக்கணக்கான பேரும் அகதிகளாக மற்ற நாடுகளில் தஞ்சமடைந்தும் உள்ளனர்.

இந்நிலையில் சிரியாவில் நிலவிவரும் கடுமையான உணவு பஞ்சம் காரணமாக குழந்தைகள் ஆடு, மாடுகளின் கால்நடை தீவனத்தை உண்டு உயிர்வாழும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

சிரியாவில் கடந்த மாதம் முதல் போர்நிறுத்தம் அமுலுக்கு வந்தாலும், வெகு தொலைவில் வாழும் மக்களுக்கு உணவுகள் கிடைப்பதில்லை.
போதிய மருத்துவ உதவிகள், சுத்தமான குடிநீர், ஆரோக்கியமான உணவு இல்லாமல் சுமார் 250,000 குழந்தைகள் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

சரியான உணவு சாப்பிடாததால் கைக்குழந்தைகளுக்கு பாலூட்டும் சக்திகூட இல்லாமல் தாய்மார்கள் வேதனையில் துடிதுடித்துப் போகின்றனர்.

இந்நிலையில் பட்டினியால் குழந்தைகள் மடிவதை தடுப்பதற்காக பெரும்பாலானவர்கள் ஆடு, மாடுகளுக்கு வழங்கும் தீவனங்களை உண்டு வாழ்கின்றனர்.

இதுகுறித்து தந்தை ஒருவர் கூறுகையில், தினமும் தங்கள் குழந்தையின் எடை குறைந்து கொண்டே போவதாகவும், ஏமாற்றி குழந்தைகள் புற்களை உண்ண சொல்வதாகவும் மிகவும் மனவேதனையுடன் தெரிவித்துள்ளார்.

மேலும் போதிய மருத்துவ உதவிகள் இல்லாமல் பச்சிளம் குழந்தைகள் மடிந்து கொண்டிருப்பது கல்மனதையும் கரைய வைத்துவிடும்.

ஆடைகளைக் களைந்து வீதியில் பெண்கள் ஆர்ப்பாட்டம் : காரணம் என்ன?

114பெண்கள் உரிமைகள்,வீடு வன்முறை,கருக்கலைப்பு சட்டத்திற்கு எதிராகவும்,பாலின சமத்துவம் மற்றும் மனித உரிமை பிரச்சினைகள் பல முன்னிலைப்படுத்தி கடந்த செவ்வாய்க்கிழமை சர்வதேச மகளிர் தினம் அன்று ஆயிரக்கணக்கான பெண்கள் தென் அமெரிக்கா முழுவதும் வீதிகளில் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர்.

சர்வதேச மகளிர் தினம் உலகளாவில் கொண்டாடப்படும் தினம் என்பதால் பிரேசில், சிலி, அர்ஜென்டீனா, கோஸ்டா ரிகா, வெனிசுலா பிரதேசங்களில் தமது உரிமைகளைகோரி இவ்வார்ப்பாட்டம் நடத்தப்பட்டன.

இவ் ஆர்ப்பாட்டத்தில் பல பெண்கள் தங்கள் மார்பு மற்றும் வயிற்று பகுதியில் எழுதப்பட்ட சுலோகங்கள் பயன்படுத்தி கலந்துக்கொண்டனர்.

12 13 14

ஸீகா வைரஸிற்கான தடுப்பு மருந்து மிகவும் தாமதமாகும்!!

Zika virus

லத்தீன் அமெரிக்காவில் தற்போது பரவிவருகின்ற ஸீக்கா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு உதவ முடியாத அளவுக்கு அதற்கான தடுப்பு மருந்துகள் மிகவும் தாமதாகவே உருவாக்கப்படக்கூடும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

மிகவும் முன்னேற்றம் கண்டுள்ள பரீட்சார்த்த தடுப்புமருந்துகள் கூட, மனிதர்களிடத்தில் சோதனையிடப்படுவதற்கு இன்னும் பல மாதங்கள் தேவைப்படலாம் என்று உலக சுகாதார நிறுவனத்தின் துணை தலைமைச் செயலர் டாக்டர் மேரி போல் கேனி கூறினார்.

ஆனால், கர்ப்பிணி தாய்மார் மற்றும் குழந்தை பெற்றுக்கொள்ளும் வயதில் உள்ள பெண்களுக்கு பொருத்தமான தடுப்புமருந்துகளை கண்டுபிடிக்க வேண்டியது மிகவும் அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.

குழந்தைகளின் மூளையில் மிகவும் அரிதான மூளை பாதிப்பை இந்த இந்த ஸீகா வைரஸ் தான் ஏற்படுத்துவதாக மிகவும் உறுதியாக சந்தேகிக்கப்படுகின்றது.

கழுகை உயிருடன் சித்திரவதைசெய்து தோலுரித்துக் கொன்ற இருவர் கைது!!

1

கழுகொன்றைப் பிடித்து உயிருடன் சித்திரவதைசெய்து கொலைசெய்த குற்றச்சாட்டின் பேரில் இரு சந்தேக நபர்களை ஹபராதுவ பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கழுகொன்றை உயிருடன் பிடித்து சித்திரவதை செய்வது அதனை தோலுரித்தது மட்டுமன்றி கால்கள் துண்டாக்கப்பட்டு கழுத்தில் கத்தியை வைத்த நிலையில் சமூகவலைத் தளங்களில் கடந்த சில தினங்களாக புகைப்படங்கள் பரவிவந்தன.

இதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இருவர் ஹபராதுவ பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இருவரும் 42 மற்றும் 46 வயது மதிக்கத்தக்க அக்குரஸ்ஸ பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர்கள் அதனை உணவுக்காக பயன்படுத்தவே இவ்வாறு செய்துள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சந்தேகத்தினடிப்படையில் கைதுசெய்யப்பட்டவர்களுக்கு எதிராக வன ஜீவராசிகள் மற்றும் இயற்கை பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2 3

3 வார குழந்தையின் வயிற்றுக்குள் இரட்டைக் கருக்கள்: திகைப்பில் மருத்துவர்கள்!!

foetus-main-new

பீஜிங் நாட்டில் 3 வார குழந்தையின் வயிற்றுக்குள் இரட்டை கருக்குள் இருந்ததால் மருத்துவர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். பீஜிங் நாட்டின், ஹாங் காங் நகரிலுள்ள பிரபல ராணி எலிசபெத் மருத்துவமனையில் ஒரு சீனத் தம்பதியருக்கு பிறந்த பெண் குழந்தையின் வயிற்றுக்குள் இரட்டைக் கருக்கள் இருந்தது.

அந்த கருக்கள் 8 முதல் 10 வாரங்களாக சூல் கொண்டிருந்ததை அறிந்த மருத்துவர்கள்,அந்த கருக்களை நெருக்கமாக ஆய்வு செய்தபோது அவற்றுக்கு கால்கள், கைகள், ஒரு முதுகு, விலா மற்றும் குடல், தொப்புள் கொடி போன்ற முக்கிய உறுப்புகள் உருவாகி இருந்ததும், தோலால் மூடப்பட்ட அந்த இரண்டு கருக்கள் 14.2 மற்றும் 9.3 கிராம் எடை கொண்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

ஹொங்கொங் நகரில் உள்ள சீனப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியரும், அந்நாட்டின் மகப்பேறியல் துறையியலின் பிரபல மருத்துவருமான டாக்டர் யு கேய்-மேன் இந்த அதிசயம் தொடர்பாக கூறுகையில், அந்தக் குழந்தையின் வயிற்றுக்குள் இருந்த கரு மிகவும் சிறியதாக இருந்ததால் அந்த தாய்க்கு செய்யப்பட்ட மருத்துவ பரிசோதனைகளின் போது அந்த குழந்தையின் வயிற்றுக்குள் கருப்பை இருந்ததையும், அவற்றுக்குள் இரு கருக்கள் வளர்ந்திருந்ததையும் கண்டறிய இயலாமல் போனது.

கருவுக்குள் வளரும் குழந்தைக்கு தானாக கர்ப்பம் தரிப்பது என்பது நடக்க இயலாத காரியம். எனினும், இந்த குழந்தையின் வயிற்றுக்குள் இருந்த கரு உருவாக காரணமாக ஒன்றை கருத முடிகின்றது.அந்த குழந்தை தனது தாயின் வயிற்றில் தரித்த பின்னர், அந்த குழந்தையின் பெற்றோர், தாம்பத்திய உறவில் ஈடுபட்ட வேளையில் தந்தையின் விந்தணுக்களானது, தாயின் வயிற்றில் ஓரளவுக்கு வளர்ச்சி பெற்றிருந்த அந்த பெண் குழந்தையின் கருவறைக்குள் நீந்தி சென்றதால் இந்த விளைவு ஏற்பட்டிருக்கக் கூடும் என்று தெரிவித்துள்ளார்.இதற்கு முன்னதாக குழந்தையின் தாய் பலமுறை கருக்கலைப்பு செய்ததும் இதற்கான மற்றொரு காரணமாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

 

மனித முகத்தோடு ஓர் அதிசய மீன் அகப்பட்டது!!

fish-like-man-face

கேரளாவில் மீனவர் ஒருவரின் வலையில் சிக்கி இருக்கும் அதிசய மீன் ஒன்று மனித முகத்தோடு காணப்படுகிறது. ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபட்ட கன்னியாகுமரியைச் சேர்ந்த அருள்ராஜ் என்பவரின் வலையில் இம் மீன் அகப்பட்டிருக்கிறது.

மனிதர் உண்ணாத இம் மீனானது பேத்தை வகையைச் சேர்ந்தது என்று சொல்லப்படுகிறது. இதன் முகம் மனித வடிவில் இருப்பது பலத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அப்பிரதேசத்தின் மக்கள் ஆவலோடு இம்மீனை பார்க்க கூடி இருப்பதாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

 

மது அருந்திய ஒரு மணி நேரத்தில் காத்திருக்கும் ஆபத்துக்களை அறிவீர்களா?

alcohol

மரு அருந்துதல் உடலுக்கு கேடு விளைவிக்கும் என்பது சாதாரணமாக அனைவருக்கும் தெரிந்த விடயமே.எனினும் அதனைக் கருத்தில் கொள்ளாதவர்கள் பலர் இருக்கவே செய்கின்றார்கள்.இதற்கு காரணம் நீண்ட காலத்தின் பின்னரே அதன் பக்க விளைவுகள் தோன்றுதலும் ஆகும்.

ஆனால் மது அருந்திய ஒரு மணி நேரத்தில் மூளை கட்டிபடுதல் மற்றும் மாரடைப்பு நோய் என்பன ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் இரு மடங்காக இருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்தாக 30,000 பேர் பங்கு பற்றிய 23 வெவ்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் அமெரிக்காவின் Harvard TH Chan School Of Public Health இல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மதுவினை உள்ளெடுத்த பின்னர் இதயத் துடிப்பு வீதம் மற்றும் இரத்த அழுத்தம் என்பன அதிகரிப்பதுடன், குருதிச் சிறுதட்டுக்கள் ஸ்டிக்கர் போன்று மாறுவதாலும் இவ்வாறான ஆபத்துக்கள் தோன்றுவதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

பேஸ்புக் எட்டிய புதிய மைல்கல்!!

facebook_mobile_001

இணைய ஜாம்பவான்களுள் ஒன்றாக திகழும் பேஸ்புக் ஆனது ஆரம்பிக்கப்பட்ட சில வருடங்களில் பல சாதனைகளை தனதாக்கியுள்ளது.இதன் வரிசையில் தற்போது இந்தியாவில் மட்டும் 142 மில்லியன் பயனர்களை எட்டி மற்றுமொரு சாதனையை எட்டியுள்ளது.

இதில் நாள்தோறும் 69 மில்லியன் இந்தியர்கள் பேஸ்புக்கினை பயன்படுத்துவதாகவும், அவர்களில் 64 மில்லியன் வரையானவர்கள் தமது மொபைல் சாதனங்களின் ஊடாக பேஸ்புக் தளத்திற்கு விஜயம் செய்வதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.கடந்த வருட இறுதியில் 1.59 பில்லியன் பயனர்களை உலகெங்கிலும் கொண்டிருந்த பேஸ்புக்கின் மிகப்பெரிய சந்தையாக இந்தியா காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

இயக்குனர், நடிகர் சேரனுக்கு பிடிவாரண்ட்!!

M_Id_412530_Cheran

தமிழ் சினிமாவில் பல தரமான படங்களை கொடுத்தவர் இயக்குனர் சேரன். அதோடு இவர் நடித்த படங்கள் சிலவற்றையும் யாராலும் முடியாது. இந்நிலையில், சேரனின் சி2எச் நிறுவனத்தின் மீது இராமநாதபுரம் மாவட்ட வினியோகஸ்தர் பழனியப்பன் செக் மோசடி வழக்கு ஒன்று தொடர்ந்திருந்தார்.

செக் மோசடி வழக்கில் சேரனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து இராமநாதபுரம் நீதிமன்ற நீதிபதி வேலுச்சாமி தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

முத்தக் காட்சிக்கு நான் தயார் : பாரதா நாயுடு!!

Actress-Bharatha-Naidu-Interview-Stills-007

நடிகர் இயக்குனர் ராகவா லாரன்ஸ் இடம் உதவியாளராக இருந்தவர், முத்துப்பாண்டியன். இவர் இயக்கும் புதிய படம் நிரஞ்சனா. நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பவர், பாரதா நாயுடு.ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இவர் தமிழ் படங்களில் நடிப்பத்தில் அதிக ஆர்வமாக இருக்கிறார். இது பற்றி கூறிய பாரதா நாயுடு,நான் தெலுங்கில் ‘கேப்பி மேரீட் லைப்’ ‘ரிலேஷன்ஷிப்’ படங்களில் நடிக்கிறேன். தமிழில் ‘தேன் மிட்டாய்’ படத்தில் அறிமுகமானேன் ‘அட்ரா மச்சான் விசிலு’ படத்திலும் நடிக்க இருக்கிறேன்.

எனக்கு தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகள் தெரியும். என்றாலும், தமிழ் படங்களில் நடிக்க அதிக ஆர்வமாக இருக்கிறேன். குடும்ப பாங்கான வேடங்களில் நடிக்க விரும்புகிறேன். ஆனால் கதைக்கு தேவை என்றால் கவர்ச்சியாக நடிப்பேன். காட்சிக்கு முக்கியம் என்றால் முத்தக்காட்சியில் நடிப்பதற்கும் எனக்கு தயக்கம் இல்லை. அனைத்து நடனங்களும் பயன்றிருக்கிறேன்.

இயக்குனர்கள் பாலா, மிஷ்கின் இயக்கத்தில் நடிக்க வேண்டும், தீபிகா படுகோனே, வித்யாபாலன் போன்று அழுத்தமான வேடங்களில் நடிக்க வேண்டும் என்பது எனது ஆசை.
அடுத்து தமிழில் ‘மஞ்சள்அறு’, ‘ரெண்டுகேடி’, ‘முணுகோடி’ ஆகிய படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறேன். தமிழ் படங்களில் அதிகமாக நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்க வேண்டும். என்பது லட்சியம் அதற்கு ரசிகர்கள் ஆதரவு வேண்டும்’ என்றார்.

 

மார்ச் 13ம் திகதி தேசிய துக்க தினம்!!

1943760925Untitled-1

அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர் வணக்கத்துக்குரிய கலகம ஶ்ரீ அத்ததஸ்ஸி தேரரின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 13ம் திகதி இடம்பெறவுள்ளன. இதனையடுத்து அன்றைய தினத்தை உள்விவகார அமைச்சு தேசிய துக்க தினமாக அறிவித்துள்ளது.

கீழே விழுந்த நிலையில் சுயநினைவை இழந்த கலகம ஶ்ரீ அத்ததஸ்ஸி தேரர், நேற்று கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், நேற்று மாலை அவர் இறைபாதம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்னாரது இறுதிக் கிரியைகளை எதிர்வரும் 13ம் திகதி பிற்பகல் 02.30க்கு கண்டியிலுள்ள பொலிஸ் விளையாட்டரங்களில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.