கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டபீட மாணவி ஒருவர் டெங்கு நோய் தாக்கி இறந்துபோனதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, டெங்கு பரவுகை காரணமாக ஏற்கனவே கொழும்பு பல்கலைக்கழகத்தின் சில பிரிவுகள் ஒரு வார காலத்துக்கு மூடப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
டெங்கு தொடர்பான துப்பரவு பணிகளுக்காக ஒரு வார காலத்துக்கு பல்கலைக்கழகத்தின் கலை, சட்ட, முகாமைத்துவ வளாகங்கள் வரும் திங்கட்கிழமை வரை மூடப்பட்டுள்ளன.
கொழும்பு மாநகர சபையினால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது டெங்கு நோயைப் பரப்பும் கொசுக்கள் வாழக்கூடிய பல இடங்கள் பல்கலைக்கழகத்தில் காணப்பட்டதை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பல்கலைக்கழக பரீட்சைகள் கூட ரத்துச் செய்யப்பட்டிருப்பதாக பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் தெரிவித்தார்.
கருப்பான சருமம் கொண்ட பெண்கள் கோடை காலத்தில் தைரியமாய் வெளியே சுற்றலாம். ஏனெனில் அவர்களுக்கு வெப்பத்தினால் ஏற்படக்கூடிய கொப்பளங்கள், கோடைகால சரும பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. கருப்பான பெண்கள் களையாக மாற வழிகள்.
முகத்திற்கு பேஷியல் போடும் முன்பு முகத்தில் உள்ள அழுக்குகளை துடைத்து எடுக்கவேண்டும். காய்ச்சாத பாலை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு சிறிதளவு பஞ்சில் நனைத்து முகத்தை துடைக்கவேண்டும்.
சருமத்தில் உள்ள அழுக்குகள் எல்லாம் வெளியேறிவிடும். நன்கு கனிந்த பப்பாளியை மசித்து எடுத்துக் கொள்ளவும். அதை வைத்து முகத்துக்கு மென்மையாக மசாஜ் கொடுக்கவும். மசாஜ் செய்கிறபோது கைகளை ஆரஞ்சு சாற்றில் நனைத்துக் கொள்ளவும்.
கொஞ்சம் பப்பாளிக் கூழ், இரண்டு துளிகள் தேன், கொஞ்சம் பால் எல்லாம் சேர்த்து கடைசியாக முகத்துக்குப் பேக் போடவும். 20 நிமிடம் ஊறவிட்டு குளிர்ந்த நீரில் கழுவ முகம் புத்துணர்ச்சியாகும்.
நன்கு கனிந்த வாழைப் பழத்தை பிசைந்து அத்துடன் தேன், ஆரஞ்சு சாறு, பயத்தம் மாவு கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற விட்டுக் கழுவி வர நிறம் பளிச் என்று மாறும்.
செகோஸ்லோவேக்கியா நாட்டை சேர்ந்த 23 வயது இளம் பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பிறந்துள்ளன.
கடந்த 1949ம் ஆண்டிற்கு பின்னர் அந்நாட்டின் வரலாற்றில் ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பிறந்திருப்பது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
செகோஸ்லோவேக்கியாவை சேர்ந்த அலெக்சாண்டிரா கினோவா என்ற 23 வயதுப் பெண் பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை உள்ளது.
நேற்று அறுவை சிகிச்சை முறையில் நடைபெற்ற பிரசவத்தில் 4 ஆண் குழந்தைகளையும் 1 பெண் குழந்தையையும் இவர் பெற்றெடுத்தார்.
இயற்கையான முறையில் கருத்தரித்த இந்த 5 குழந்தைகளும் 1.05 கிலோவுக்கும் 1.34 கிலோவுக்கும் இடைப்பட்ட எடையில் நல்ல நிலையில் பிறந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர் .
480 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் இதுபோல் ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பிறக்கும் அரிய வாய்ப்புள்ளது என்பதால் பிரசவத்தின்போது சுமார் 40 வைத்தியர்கள் பணியாற்றியதாக மருத்துவமனையின் நிர்வாகம் கூறியுள்ளது.
ரஷ்யாவிலுள்ள சிறை ஒன்றுக்குள் செல்போனை கடத்திச் சென்ற பூனை கைது செய்யப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் கோமி மாகாணத்தில் உள்ள ஸ்கைடிவ்கார் அருகே உள்ள சிறைக்கு பூனை ஒன்று அடிக்கடி சென்று வந்துள்ளது.
சிறை காவலர்கள் அதன் மீது சந்தேகப்பட்டு பிடித்து பார்த்தனர். அப்போது தான் அதன் வயிற்றுப் பகுதியில் செல்போன்கள் மற்றும் சார்ஜர்கள் இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து பொலிசார் அந்த பூனையை கைது செய்தனர். சிறைக்குள் மேலும் என்னென்ன பொருட்கள் கடத்தி வரப்பட்டன என்று பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக கடந்த ஜனவரி மாதம் பிரேசில் நாட்டு சிறை ஒன்றுக்குள் சென்ற பூனையின் உடம்பில் செல்போன், பேட்டரிகள், பிளேடுகள் உள்ளிட்டவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய நபர் ஒருவருக்கு 60 ஆண்டு கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிறுமியை பலவந்தமான முறையில் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக சிறுமியின் தந்தை மீது வழக்குத் தொடரப்பட்டிருந்தது.கேகாலை பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குற்றச் செயலில் ஈடுபட்ட நபருக்கு அறுபது ஆண்டு கால சிறைத் தண்டனையும், 30,000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
அபராதப் பணத்தை செலுத்தத் தவறினால் மேலும் 15 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என கேகாலை உயர்நீதிமன்ற நீதவான் மேனகா விஜேசுந்தர அறிவித்துள்ளார்.
சிரியாவில் போர் நடவடிக்கைகளில் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் ”சரின்” என்னும் இரசாயனம் பயன்படுத்தப்பட்டதற்கான வலுவான ஆதாரம் இருப்பதாக பிரான்ஸும், பிரிட்டனும் கூறியுள்ளன.
ஒரு சம்பவத்தில் கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிராக சிரியாவின் அரசாங்கம் இந்த வகையிலான ”சரின்” வேதிப் பொருள் தாக்குதலை நடத்தியதற்கான உறுதியான ஆதாரம் இருப்பதாக பிரான்ஸ் கூறுகிறது.
தாக்குதலுக்கு உள்ளானவர்களின் இரத்த மாதிரியில் நடத்தப்பட்ட சோதனையில், அவர்களது இரத்தத்தில் அந்த சரின் வேதிப் பொருள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதாக வெளியுறவு அமைச்சர் லோரண்ட் ஃபபியஸ் கூறியுள்ளார்.
இந்த முடிவுகள் தற்போது ஐநாவுக்கு கையளிக்கப்படுகின்றன. சிரியாவில் இந்த வையிலான இரசாயனத் தாக்குதல் நடத்தப்பட்டது என்று அறிவிப்பதற்கு முன்னதாக மேலும் ஆதாரங்கள் தேவை என்று அமெரிக்கா கூறுகிறது.
வடக்கு நகரான அலெப்போவில் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதாக கிளர்ச்சிக்காரர்களும், அரசாங்கமும் மாறி மாறிக் குற்றஞ்சாட்டுகின்றனர்.
ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கித் தருவதாக கூறி 5 கோடி ரூபாய் தரகுப் பணமாக பெற்றுக் கொண்டு டெல்லி தொழில் அதிபரை ஏமாற்றியதாக பவர்ஸ்டார் சீனிவாசனை டெல்லி போலீசார் கைது செய்தனர்.
கோடிக்கணக்கில் கடன் வாங்கித்தருவதாக கூறி லட்சக்கணக்கில் தரகுப் பணமாக பெற்றுக் கொண்டு ஏமாற்றினார் என்பது பவர்ஸ்டார் சீனிவாசன் மீதான குற்றச்சாட்டு. ஆந்திரா தொழிலதிபர் ஒருவருக்கு 20 கோடி ரூபாய் கடன் வாங்கித் தருவதாக கூறி 50 லட்சம் தரகுப் பணமாக பெற்றுக் கொண்டு ஏமாற்றிய குற்றச்சாட்டின் பேரில் ஏப்ரல் 26ம் திகதி பவர்ஸ்டார் சீனிவாசன் கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வரவே சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், சீனிவாசன் மீது 6 வழக்குகள் பதிவு செய்து வேலூர் சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் புளு கோஸ் கட்டமைப்பு நிறுவனம் நடத்தி வந்த திலீப் பத்வானி என்பவர் சீனிவாசனை 1,000 கோடி ரூபாய் கடன் கேட்டுள்ளார். அவரிடம் 5 கோடி ரூபாய் தரகுப் பணமாக வாங்கியுள்ளார் சீனிவாசன்.
ஆனால் வழக்கம் போல திலிப்பையும் பவர்ஸ்டார் ஏமாற்றிவிட்டார். இது தொடர்பாக டெல்லி காவல்துறையில் முறைப்பாடு தெரிவித்தார் திலீப் இதனைத் தொடர்ந்து டெல்லி காவல்துறை சீனிவாசனை அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு நீதிமன்றத்தில் ஒப்படைத்த பின்னர் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.
செயற்கைக் குளிர்பானங்கள் பணத்தை மட்டுமல்ல, உடல் நலத்தையும் கெடுத்துவிடும். இயற்கை தந்த வரமாய் இளநீர் இருக்க, குளிர்பானங்கள் தேவையற்றது. இளநீரின் விலையைப் போலவே, அது தரும் பலன்களும் அதிகம்!
இளநீரில் இருக்கும் இனிப்பான விஷயங்கள் யாதெனில், ”இளநீர், நம் தாகத்தைத் தணித்துப் புத்துணர்ச்சி அளிக்கிறது. விட்டமின்கள், தாது உப்புக்கள், என்சைம்கள், அமினோ அமிலங்கள், சைட்டோகைனின் ஆகியவை அதில் அதிக அளவு இருக்கின்றன.
பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்களான ரிபோஃப்ளேவின், நியாசின், தையமின், பைரிடாக்சைன், ஃபோலேட் போன்ற உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்களும் அதிகம். 100 கிராம் இளநீரில் பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்குத் தேவையான சுண்ணாம்பு சத்து 29 மி.கி உள்ளது. இரத்த விருத்திக்குத் தேவையான இரும்புச் சத்து 0.1 மி.கி. இருக்கிறது. குளோரின் உப்பு 183 மி.கி. உள்ளது.
இளநீரின் மருத்துவப் பலன்கள்:
வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், அதிக அளவு நீர்ச் சத்து உடலில் குறையும். இதனைச் சமாளிக்க, இளநீர் அருந்தலாம். இளநீரில் உள்ள எலெக்ட்ரோலைட் பொட்டாசியம், உடம்பில் வயிற்றுப்போக்கினால் ஏற்படும் எலெக்ட்ரோலைட் குறைபாட்டை நீக்க உதவும்.
இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைக்க இளநீர் உதவுகிறது. சர்க்கரை நோயாளிகள் இளநீர் பருகுவது நல்லது. இளநீரில் வளமான அளவு பொட்டாசியம் இருப்பதால், கூடுதல் ரத்த அழுத்தம் மற்றும் வாதத்திற்கும் இது நல்ல மருந்து.
பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற கனிமங்கள் இளநீரில் அதிகம் இருப்பதால், சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதைத் தடுக்கும். கல்சியம், இரும்பு, மாங்கனீசு, துத்தநாகம் போன்ற தாது உப்புக்களின் கலவை அதிகமாக இருப்பதால், சருமத்துக்கு பொலிவைக் கொடுக்கும்.
முகத்தில் பருக்கள், புள்ளிகள், சுருக்கங்கள் மற்றும் படை ஏற்பட்டால், இளநீரை இரவில் படுக்கும்போது முகத்தில் தடவி, காலையில் கழுவ வேண்டும். இதைத் தொடர்ச்சியாக மூன்று வாரங்கள் செய்தால், தோல் பிரச்னைகள் அனைத்திற்கும் தீர்வு கிடைக்கும்.
இதில் உள்ள செலினியம் போன்ற அன்டிஒக்ஸிடென்ட்கள், புற்றுநோய்த் திசுக்களுக்கு எதிராகவும் செயல்படும். இளநீர் உடலுக்குக் குளிர்ச்சியைத் தருவதோடு இளமையையும் அள்ளித்தரும். இளநீரில் சைட்டோகைனின்கள் இருப்பதால், முதுமைத் தோற்றத்தை தடுக்கும். காலையில் இளநீர் குடிப்பது மிகவும் நல்லது.
இளநீரில் குறைந்த அளவே கொழுப்பு இருப்பதால், உடலில் எடை குறைக்க விரும்புபவர்கள் தினமும் இளநீர் பருகலாம். தினமும் ஓர் இளநீர் குடித்துவந்தால். வாழ்நாள் முழுவதும் திடகாத்திரமாகவும் உற்சாகத்துடனும் வலம் வரலாம்.
ஸ்ரீலங்கன் பிரிமியர் லீக் போட்டித் தொடரில் மாற்றமில்லை என விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் மாதம் 10ம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 7ம் திகதி வரையில் போட்டித் தொடர் நடைபெறும்.
போட்டிகளிலிருந்து தமது அணியை விலக்கிக் கொள்வதாக எந்தவொரு அணி உரிமையாளரும் இதுவரையில் அறிவிக்கவில்லை.
எனவே திட்டமிட்டவாறு போட்டித் தொடர் நடைபெறும் என அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.
கிரிக்கட் ஆட்ட நிர்ண தொடர்பில் இந்தியாவில் ஏற்பட்டுள்ள சர்ச்சைகளைத் தொடர்ந்து இலங்கையில் ஸ்ரீலங்கன் பிரிமியர் லீக் போட்டித் தொடர் நடைபெறுமா என்பதில் சந்தேகம் ஏற்பட்டிருந்தது.
ஐபிஎல் ஆட்ட நிர்ணய சர்ச்சை கிரிக்கெட் உலகை உலுக்கி வரும் நேரத்தில் அதே முறையில் வங்கதேசத்தில் நடந்த பிபிஎல்(BPL) போட்டியில் ஆட்ட நிர்ணயம் செய்து சிக்கிய வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முஹம்மத் அஷ்ரபுல் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இந்திய கிரிக்கெட் உலகை ஆட்ட நிர்ணய விவகாரம் கலக்கி வரும் நிலையில் தற்போது வங்கதேசத்தை சூறாவளியாக சுற்ற ஆரம்பித்துள்ளன. அஷ்ரபுல் நீக்கப்பட்டது குறித்து வங்கதேச கிரிக்கெட்சபைத் தலைவர் நஸ்முல் ஹசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், பிபிஎல் போட்டியில் ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்டதை ஊழல் எதிர்ப்பு மற்று் பாதுகாப்புப் பிரிவிடம் ஒத்துக் கொண்டுள்ளார் அஷ்ரபுல்.
எனவே விசாரணை முடிந்து முழு அறிக்கை வெளியாகும் வரை அனைத்து வகையான போட்டிகளிலும் விளையாடுவதற்கு அவருக்குத் தடை விதிக்கப்படுகிறது. அஷ்ரபுல் தான் செய்த தவறை ஒத்துக் கொண்டார் என்றார். பிபிஎல் தொடரில் பங்கேற்ற டாக்கா கிளாடியேட்டர்ஸ் மற்றும் சிட்டகொங் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது ஆட்ட நிர்ணயம் நடந்தது. இதில் அஷ்ரபுல் தொடர்பு கொண்டிருந்தார் என்பது குற்றச்சாட்டாகும்.
இந்தப் போட்டியில் டாக்கா அணி தோல்வி அடைவதற்காக 12,800 அமெரிக்க டொலர் பணத்தை அஷ்ரபுல் பெற்றார் என்பதும் குற்றச்சாட்டாகும். இதற்காக அவருக்கு காசோலையும் கொடுக்கப்பட்டுள்ளது .ஆனால் என்ன கொடுமை என்றால் அந்த காசோலை வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி வந்துவிட்டது.
மேலும் பரிசல் பர்னர்ஸ் அணியுடனான போட்டியின்போதும் ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்டுள்ளார் அஷ்ரபுல். வங்கதேச அணியில் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த முதல் வீரர் அஷ்ரபுல் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 2007 முதல் 2009 வரை அவர் வங்கதேச அணியின் தலைவராகவும் இருந்துள்ளார். 61 டெஸ்ட் போட்டிகளில் 2737 ஓட்டங்களை அஷ்ரபுல் எடுத்துள்ளார். இதில் ஆறு சதங்கள் அடஙகும். அதேபோல 177 ஒரு நாள் போட்டிகளில் 468 ஓட்டங்களை எடுத்துள்ளார் அஷ்ரபுல். 2012ம் ஆண்டு முதல் வங்கதேசத்தில் பிபிஎல் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
நீண்ட நாள் இளமைக்கும், இதய ஆரோக்கியத்திற்கும் ஒமேகா-3 ஃபேட்டி அமிலம் நிறைந்த ஊட்டச்சத்து உணவுகள் சிறந்தது.
ஒமேகா-3 ஃபேட்டி அமிலம் என்பது ஒரு வகை கொழுப்பு. கொழுப்பு என்றதும் எப்படி இதனை சாப்பிடக்கூடும் என்று கேட்கலாம். பொதுவாக கொழுப்புக்களில் இரண்டு வகைகள் உள்ளன. அவற்றில் கெட்ட கொழுப்பு மற்றும் நல்ல கொழுப்பு.
கெட்ட கொழுப்பானது இதயத் தமனிகளில் தங்கிவிடும். ஆனால் நல்ல கொழுப்பானது இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும். அந்த வகையில் ஒமேகா-3 ஃபேட்டி அமிலம் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் ஒரு கொழுப்பாகும்.
எப்படியெனில் இவை, தமனிகளில் தங்கியிருக்கும் கெட்ட கொழுப்புக்களை கரைத்து, இதயத்திற்கு செல்லும் இரத்த குழாயை மென்மையாக எந்த ஒரு இடையூறு ஏற்படாத வகையில் பாதுகாக்கும்.
எனவே தான், ஆரோக்கியத்தைப் பற்றிய பல செய்திகளில் ஒமேகா-3 ஃபேட்டி அமிலம் அதிகம் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும் என்று கூறுகின்றனர்.
மேலும் இந்த ஒமேகா-3 ஃபேட்டி அமிலம் நிறைந்த உணவுகள் இதயத்திற்கு மட்டுமின்றி, முதுமையைத் தள்ளி போடுதல் மற்றும் மூளையின் ஆரோக்கியத்திற்கும் நல்லது.
பெரும்பாலும், இந்த சத்து மீன்களில் மிகவும் அதிகமாக இருக்கும். இருப்பினும், சைவ உணவாளர்கள் எப்படி இதனை சாப்பிடுவார்கள் என்பதால், சைவம் மற்றும் அசைவ உணவாளர்களுக்கு ஏற்றவாறு இந்த சத்து நிறைந்த சில உணவுகளை பட்டியலிட்டுள்ளோம்.
மீன்
பொதுவாக அனைத்து வகையான மீன்களிலும் ஒமேகா-3 ஃபேட்டி அமிலம் நிறைந்திருக்கும். ஆனால் சால்மன் மற்றும் சூரை மீனில், இந்த சத்து அளவுக்கு அதிகமாக நிறைந்துள்ளது.
ஒலிவ் ஒயில்
ஒலிவ் ஒயிலில் அதிகமான அளவில் நல்ல கொழுப்பு உள்ளது. இருப்பினும் ஒமேகா-3 ஃபேட்டி அமிலம் , விர்ஜின் அல்லது பதப்படுத்தபடாத ஒலிவ் ஒயிலில் தான் நல்ல அளவில் உள்ளது.
வோல்நட்
வோல்நட்டில் இரண்டு வகையான முக்கிய சத்துக்கள் வளமாக உள்ளன. அவை விட்டமின் மற்றும் ஒமேகா-3 ஃபேட்டி அமிலம் . எனவே இதனை சாப்பிட்டால், இதயம் ஆரோக்கியமாக இருப்பதோடு, சருமத்தில் விரைவில் தோன்றும் முதுமைத் தன்மையும் தள்ளிப் போகும்.
முட்டை
முட்டையிலும் ஒமேகா-3 ஃபேட்டி அமிலம் நிறைந்துள்ளது. முட்டையைப் பற்றிய ஒரு கட்டுக்கதையில் முட்டை இதயத்திற்கு ஆரோக்கியமானது அல்ல என்று சொல்லப்படுகிறது. ஆனால், பெரும்பாலான நல்ல கொழுப்பு முட்டையில் உள்ளது. எனவே இது இதயத்திற்கு நல்ல ஒரு உணவே.
ஆட்டு இறைச்சி
புற்களில் ஒமேகா-3 ஃபேட்டி அமிலம் அளவுக்கு அதிகமாக நிறைந்துள்ளது. எனவே புற்களை அதிகம் சாப்பிடும் ஆட்டு இறைச்சியை சாப்பிட்டால், அதன் மூலம் உடலுக்கு வேண்டிய ஃபேட்டி அமிலங்களை பெறலாம்.
கடல் உணவுகள்
கடல் உணவுகளான இறால், நண்டு, கடல் சிப்பி போன்றவற்றிலும் ஒமேகா-3 ஃபேட்டி அமிலம் அதிகமாக நிறைந்துள்ளது. எனவே இதனை வாரத்திற்கு ஒரு முறையாவது உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
பூசணிக்காய் விதைகள்
ஆளி விதைக்கு அடுத்தப்படியாக நல்ல அளவில் ஒமேகா-3 ஃபேட்டி அமிலம் நிறைந்திருப்பது, பூசணிக்காய விதைகளில் தான்.
சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் பயிற்சி போட்டியில் இந்திய அணி 243 ஓட்டங்கள் வித்தியாசத்தில்,மாபெரும் வெற்றி பெற்றது. மிகச் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய தினேஷ் கார்த்திக் சதம் அடித்தார் . அவுஸ்திரேலிய அணி 65 ஓட்டங்களுக்கு பரிதாபமாக அனைத்து விக்கட்டுகளையும் இழந்து படு தோல்வி அடைந்தது.
இன்றைய பயிற்சி ஆட்டத்தில் இந்தியா, அவுஸ்திரேலிய அணிகள் மோதின.நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி தலைவர் டோனி , துடுப்பெடுத்தாட்டத்தை தேர்வு செய்தார். முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 55 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால் தினேஷ் கார்த்திக், டோனி இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவில் இருந்து மீட்டனர் .ஆறாவது விக்கெட்டுக்காக 211 ஓடங்கள் சேர்த்த நிலையில், டோனி 91 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
இந்திய அணி 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 308 ஓட்டங்களை எடுத்தது. தினேஷ் கார்த்திக் 146 ஓட்டங்களுடனும் ஜடேஜா 14 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். அவுஸ்திரேலியா சார்பில் மிட்சல் , மெக்கே இருவரும் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
கடின இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியஅணிக்கு உமேஷ் யாதவ் எமனாக மாறினார். இவரது பந்துவீச்சில் அவுஸ்திரேலிய முன்னணி வீரர்கள் தொடர்ந்து ஆட்டம் இழந்தனர். இறுதியில் அவுஸ்திரேலிய அணி 23.3 ஓவரில் 65 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்து 243 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படு தோல்வி அடைந்தது. இந்தியா சார்பாக உமேஷ் யாதவ் 5 இஷாந்த் சர்மா 3 விக்கெட் கைப்பற்றினர்.
மேற்கிந்தியதீவுகள் இலங்கை அணிகள் விளையாடிய மற்றொரு பயிற்சி போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.50 ஓவர்கள் முடிவில் மேற்கிந்தியதீவுகள் அணி 6 விக்கெட்களை இழந்து 297 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது
சார்லஸ் 58 ஓட்டங்களையும் பிராவோ 71 ஓட்டங்களையும் சர்வான் 55 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர் .இலங்கை அணி சார்பில் திசார பெரேரா, எரங்க தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
கடின இலக்கை துரத்திய இலங்கை அணியில் குசால் பெரேரா 24 , ஓட்டங்களையும் ஜெயவர்தன 29 ஓட்டங்களையும் சங்ககார 56 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். இறுதிவரை போராடிய தில்கார 42 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். குலசேகர இறுதிவரை போராடி ஆட்டமிழக்காமல் 40 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.
இறுதிவரை போராடிய இலங்கை அணி 47 ஓவரில் 280 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. மேற்கிந்தியதீவுகள் அணி சார்பாக பிராவோ 3, ராம்போல், நரைன் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
முகம் முழுவதும் உரோமங்கள் வளர்ந்த மனிதப்பிறவிகள் பற்றி இதற்கு முன்னரும் நாம் இப்பகுதி மூலம் பல தகவல்களை தந்துள்ளோம் அல்லவா?இன்றும் கூட அவ்வாறான ஒரு சிறுமியைபற்றியே இங்கு குறிப்பிடுகிறோம்.
இது ஒரு அரிய மரபணு குறைபாட்டு நோய். இதற்கு முன்னர் இவ்வாறு பல ஆண்கள் பெண்கள் உலகில் வாழ்ந்துள்ளார்கள். இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
சீனாவைச்சேர்ந்த 4 வயதான ஒரு சிறுமியை இந்த நோய் தாக்கியுள்ளது இந்த அரிய நோய். உடல் எங்கும் முகம் எங்கும் உரோமங்கள் காணப்படும் ஜிங்இ ஜிங் எனப்படும் இக்குழந்தைக்கு 2 வயது முதல் உரோமங்கள் வளரத் தொடங்கியுள்ளது.
எனினும் அவ்வேளையில் டாக்டர்களால் சந்திரசிகிச்சை செய்ய முன்வரவில்லை. சிறிய வயது என்பதால் ஆபத்தானது என கருது டாக்டர்கள் சிகிச்சையை தள்ளிப்போட்டதாக தெரிய வருகிறது.
எனினும் தற்போது சிறுமிக்கு 4வயதாகின்றமையால் சந்திர சிகிச்சை செய்து முகத்தில் வளர்ந்துள்ள மேலதிக உரோமங்களை அகற்ற முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சைவ பிரியர்களுக்கு வரப்பிரசாதமாக கோழி முட்டைக்கு பதிலாக தாவர முட்டை தற்போது தயாரிக்கப்பட்டு வருகின்றது.
முட்டை சைவ உணவா? அல்லது அசைவ உணவா? என்ற சர்ச்சை இருந்து வருகிறது. எனவே, கோழி முட்டைக்கு பதிலாக தாவரத்தில் இருந்து சைவ முட்டை தயாரிக்கும் பணி அமெரிக்காவில் நடந்து வருகிறது.
முட்டையில் எண்ணை மற்றும் தண்ணீர் கலந்த பொருட்கள் உள்ளன. அதுபோன்ற பொருட்களை தாவரங்களில் இருந்து கண்டெடுத்து முட்டை தயாரிக்கும் முயற்சி நடைபெறுகிறது.
இப்பணியில் அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள “ஹாம்டன் கிரீக் புட்ஸ்” நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனத்தின் தலைவர் ஜோஷ் டெட்ரிக் கூறுகையில், ”சைவ பிரியர்கள் முட்டை மற்றும் இறைச்சிக்கு மாற்றான பொருட்களை எதிர்பார்க்கின்றனர்.
எனவே, அவர்களின் தேவையை நிறைவேற்ற நாங்கள் முயன்று வருகிறோம். தற்போது தூள் வடிவில் முட்டை தயாரித்துள்ளோம். அவை சில பேக்கரிகளில் முட்டைக்கு பதிலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அதை கோழி முட்டை தரத்தில் அதேபோன்று வழங்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறோம்” என்றார்.