இப்படியும் ஓவியம் வரையலாமா?

ஒரு பந்தினைக் கொண்டு ஓவியம் வரைய முடியுமா? கீழுள்ள கானொளியைப் பார்த்துவிட்டு சொல்லுங்கள்.

 

சீனத் தொழிற்சாலையில் தீ; குறைந்தது 119 பேர் பலி..!

தீப்பிடித்த தொழிற்சாலையில் இருந்து வெளியில் வர வழியில்லாமல் போனதே இவர்கள் உயிரிழக்கக் காரணம் என்று தெரிகிறது.

மிஷாஸி என்ற தொழிற்சாலை நகரத்தில் உள்ள இத்தொழிற்சாலையில் தீ ஏற்படுவதற்கு அம்மோனியா வாயுக் கசிவு காரணமா அல்லது மின் கசிவு காரணமா என்பது இன்னும் தெளிவாகவில்லை.

சிக்குண்டவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்துவருகிறது.

சம்பவ இடத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் சுற்றுவட்டாரத்தில் வாழும் மக்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

சீனாவில் பணியிடத்தில் தொழிலாளர் பாதுகாப்பு அம்சங்கள் பல சந்தர்ப்பங்களில் மிகவும் மோசமாக இருப்பதுண்டு.

அங்கே பெரிய தொழிற்சாலைகளிலும், சுரங்கங்களிலும் தொழிலாளர்கள் உயிரிழக்கும் விபத்துகள் நடப்பது வழமை.


சென்னையில் கடத்தப்பட்ட இலங்கை தம்பதியினர்..

பணம் கேட்டு சென்னை விமான நிலையத்தில் இருந்து சினிமா பாணியில் கடத்திச் செல்லப்பட்ட இலங்கை தம்பதியினரை போலீசார் மீட்டுள்ளனர். இக்கடத்தல் தொடர்பாக பெண் தாதாவாக செயல்பட்ட தலைமை ஆசிரியை உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை தமிழரான 59 வயதான கணபதிப்பிள்ளை தவராஜா இங்கிலாந்தில் குடிஉரிமை பெற்றவர் வசித்து வரும் இவர்களுக்கு அங்கு பெட்ரோல் நிரப்பு நிலையங்கள், பல்பொருள் அங்காடிகள் உள்ளன.இவருக்கு தர்ஷினி என்ற மகள் உள்ளார்.

கடந்த மாதம் 25-ந் தேதி லண்டனில் இருந்து தவராஜா இலங்கைக்கு சென்றார். பின்னர் தமிழகத்தை சுற்றிப் பார்க்க 29-ந் தேதி மனைவியுடன் கணபதி பிள்ளை தவராஜா சென்னை வந்தார். ஆனால் அவர்கள் திட்டமிட்டிருந்தபடி தியாகராயர் நகர் ஹோட்டலுக்கு அவர்கள் செல்லவில்லை. இதனால் அவர்கள் எங்கே போனார்கள் என்ற மர்மம் நீடித்து வந்தது. இந்நிலையில் லண்டனில் உள்ள கணபதி பிள்ளையின் மகள் தர்ஷினிக்கு தொலைபேசி அழைப்பு சென்றுள்ளது. அதில் அவரது பெற்றோரை கடத்தி வைத்திருப்பதாகவும் நாங்கள் சொல்லும் இங்கிலாந்து நபரிடம் 3 லட்சம் பவுண்ட்ஸ் அதாவது இலங்கை மதிப்பில் 5.75 கோடி கொடுத்தால் அவர்களை விடுவிப்போம் என்றும் ஒரு பெண் ரௌடி போல மிரட்டியுள்ளார்.

இதைத் தொடர்ந்து லண்டன் காவல் துறையில் தர்ஷினி முறைப்பாடு செய்தார். லண்டன் போலீசார் சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் நடந்த சம்பவத்தை தெரிவித்தனர். திருச்சியில் சிக்கியது கடத்தல் கும்பல் இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் கணபதிபிள்ளையின் லண்டன் பல்பொருள் அங்காடியில் பணிபுரியும் ஈழத் தமிழரான அஜந்தன் என்பவர்தான் இந்த கடத்தலுக்கு திட்டம் போட்டு தமது திருச்சி நண்பர் ரமேஷ் மூலம் அரங்கேற்றியிருப்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து ரமேசின் நண்பர் கண்ணன், பெண் தாதா போல் மிரட்டிய ஆசிரியை இந்திரா மேரி, மதியழகன், பிரபு, சரவணன், சதீஷ்குமார், வசந்த், இளங்கோ ஆகிய 8 பேரை கைது செய்தனர்.

அவர்கள் தவராஜாவை ஒரு வீட்டில் அடைத்து வைத்து துன்புறுத்தியுள்ளனர். அங்கிருந்தபடியே தொலைபேசியில் தர்ஷினியிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். தொலைபேசி அழைப்புகளை வைத்து தவராஜாவும், அவர் மனைவியும் இருக்கும் இடத்தை கண்டுபிடித்த காவல்துறை அவர்களை ஒரு வீட்டில் இருந்து மீட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய சத்யா என்பவர் தலைமறைவாகி விட்டார்.லண்டனில் உள்ள அஜந்தனும், ரமேசும் கைது செய்யப்பட்டனர்.

லண்டனில் இருந்தபடி அஜந்தன் மின்னஞ்சல் மூலம் தவராஜா, மற்றும் அவர் மனைவி புகைப்படத்தை கண்ணனுக்கு அனுப்பினார். தவராஜா சென்னை வரும் நேரம் உள்ளிட்ட தகவல்களையும் தெரிவித்திருந்தார் . இதை வைத்தே கடத்தல் கும்பல் சினிமா பாணியில் இருவரையும் கடத்தியிருக்கிறது.தாங்கள் கடத்தப்பட்டது குறித்து அவர்கள் கூறுகையில், கடந்த புதன்கிழமை சென்னை விமான நிலையத்தில் வந்து நாங்கள் இறங்கினோம். தி.நகரில் நாங்கள் தங்க ஹோட்டல் அறை பதிவு செய்யப்பட்டிருந்தது. அந்த ஹோட்டல் பெயர் பலகையுடன் ஒருவர் நின்று கொண்டிருந்தார். எங்கள் பெயரும் அதில் இருந்தது.

எனவே அவர் ஹோட்டல் ஊழியர்தான் என்று நினைத்து அவருடன் சென்று காரில் ஏறினோம். சிறிது தூரம் சென்றதும் மேலும் 3 பேர் வந்து நாங்கள் சென்ற காரில் ஏறினார்கள். அதே நேரத்தில் கார் தி.நகருக்கு செல்லாமல் வேறு எங்கோ சென்றது. இதனால் சந்தேகம் அடைந்த நாங்கள் கார் ஓட்டுனரிடம் கேட்டோம். அதற்கு அவர் தி.நகரில் வீதி பணிகள் நடப்பதால் வேறு வழியாக அழைத்து செல்கிறோம் என்றார். சிறிது நேரத்தில் கார் புறநகருக்கு சென்று விட்டது. இதனால் எங்களுக்கு சந்தேகம் அதிகரித்தது. உதவிக்கு யாரையாவது அழைக்கலாம் என்று நினைத்தபோது எங்களை அடித்து உதைத்தனர்.

எங்களிடம் இருந்த தொலைபேசியும் பறித்துக் கொண்டனர். ஒருநாள் முழுவதும் காரில் வைத்தே எங்களை எங்கெங்கோ அழைத்து சென்றனர். மறுநாள் எங்களை ஒரு வீட்டில் அடைத்து வைத்தனர். அப்போது கத்திமுனையில் நான் அணிந்திருந்த தாலி உள்ளிட்ட நகைகளை பறித்து கொண்டனர். இதையெல்லாம் பார்த்தபோது நாங்கள் உயிருடன் திரும்புவோமா என்ற சந்தேகம் ஏற்பட்டது. நல்ல வேளையாக சென்னை காவல் துறையினர் சிறப்பாக செயற்பட்டு எங்களை மீட்டு விட்டனர். காவல் துறையினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர் அவர்கள்.

நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் குளிரூட்டப்பட்ட கடுகதி ரயில் சேவை!

கண்டி – கொழும்பு குளிரூட்டப்பட்ட கடுகதி ரயில் சேவைக்கு பயணிகளிடையே பலத்த வரவேற்பு காணப்படுவதனால் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் குளிரூட்டப்பட்ட கடுகதி சொகுசு ரயில் சேவைகளை ஆரம்பிக்க உள்ளதாக போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம தெரிவித்தார்.

முதலாவது குளிரூட்டப்பட்ட கடுகதி ரயில் சேவை நேற்று கண்டிக்கும் கொழும்புக்குமிடையில் ஆரம்பிக்கப்பட்டது. இது தொடர்பான நிகழ்வில் கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

நேற்று அதிகாலை 5.50 மணிக்கு கண்டியில் இருந்து ஆரம்பமான குளிரூட்டப்பட்ட சொகுசு கடுகதி ரயில் காலை 8.30 மணிக்கு கொழும்பை வந்தடைந்தது. கண்டியில் இருந்து புதிய சொகுசு ரயில் சேவையை ஆரம்பித்து வைத்த அமைச்சர் அதே ரயில் பயணிகளுடன் பயணம் செய்தார்.

மேற்படி ரயில் சேவை திங்கள்- வெள்ளி- சனி மற்றும் ஞாயிறு தினங்களில் மாத்திரம் இடம்பெற திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அமைச்சரது வேண்டுகோளுக்கமைய எதிர்வரும் திங்கட்கிழமை (10) முதல் தினமும் இந்த கடுகதி சொகுசு ரயில் சேவையை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த சொகுசு ரயில் பிற்பகல் 5.20 மணிக்கு கொழும்பில் இருந்து கண்டிக்கு பயணமாகும். டிக்கட் கட்டணமாக 500 ரூபா அறவிடப்படுகிறது.

 

1864 இல் ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டது முதல் முழுமையாக குளிரூட்டப்பட்ட ரயில் சேவை ஈடுபடுத்தப்படுவது இதுவே முதற்தடவையாகும்.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை பிரதானமாக இலக்கு வைத்தே குளிரூட்டப்பட்ட ரயில் சேவை ஆரம்பிக்கப்படுவதாகவும் ரயில்வே திணைக்களம் கூறியது.

அமைச்சர் மேலும் கூறியதாவது- வீதிகளில் காணப்படும் அதிக வாகன நெரிசல் காரணமாக மக்கள் ரயிலில் பயணிக்க அதிகம் விருப்பம் காட்டி வருகின்றனர். அவர்களுக்கு சிறந்த சேவை வழங்குவதை இலக்காக வைத்தே குளிரூட்டப்பட்ட சொகுசு ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றன என்றார்.

மக்களின் வசதிக்காக நாடுபுராவும் குளிரூட்டப்பட்ட ரயில்களை சேவையில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளோம். ரயில் சேவையில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டு வருவதோடு பயணிகளின் தொகையும் கூடியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

எரிபொருள் விலை உயர்விற்கமைய ரயில் மற்றும் இ.போ.ச. கட்டணங்களை அதிகரிக்க வேண்டிய எதுவித தேவையும் கிடையாது என்று கூறிய அவர்- மக்களுக்கு வசதியான போக்குவரத்து சேவை வழங்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாகக் கூறினார்.

h

அம்மாவாக வந்து கலக்க போகும் ஷோபனா..!

ரஜினி நடித்த தளபதி, பாக்யராஜ் நடித்த இது நம்ம ஆளு உள்பட ஏராளமான படங்களில நடித்தவர் ஷோபனா.
இரண்டு முறை தேசிய விருது பெற்ற ஷோபனா, தமிழ் மட்டுமின்றி மலையாளத்திலும் நிறைய படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் தனக்கான தனக்கான சினிமா வாய்ப்பு குறைந்ததும், அமெரிக்கா சென்று பரத நாட்டிய பள்ளி நடத்தி வந்தார்.

பின்னர் அதேபோன்ற நாட்டிய பள்ளியை சென்னையில் தொடங்கி நடத்தி வருகிறார்.

மேலும் திருமணமே செய்து கொள்ளாத ஷோபனா, அனந்த நாராயணி என்றொரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

இந்நிலையில், சிம்பு நடித்த போடா போடி படத்தில் அப்பட நாயகியான வரலட்சுமிக்கு அம்மாவாக சினிமாவில் மீண்டும் பிரவேசித்த ஷோபனா, இப்போது ரஜினியின் கோச்சடையான் படத்தில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடித்துள்ளார்.

இப்படம் தனக்கு சினிமாவில் பெரிய என்ட்ரியை கொடுக்கும் என்று சொல்லும் அவர், தெலுங்கில் மகேஷ்பாபுவுக்கு அம்மாவாக ஒரு வேடத்தில் நடித்து வருகிறார்.

இதையடுத்து பரவலாக நடிக்க ஆசைப்படும் ஷோபனா, வெயிட்டான வேடங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்கப்போகிறாராம்.

குறிப்பாக, அம்மா வேடமாக இருந்தாலும் கவலையில்லையாம். கதாநாயகியாக சினிமாவில் பெரிய ரவுண்டு வந்ததுபோல் அம்மாவாகவும் ஒரு ரவுண்டு வருவேன் என்கிறாராம் ஷோபனா.

47 பல்கலைக்கழக மாணவர்கள் இடைநிறுத்தம்!

பல்கலைக்கழக ஒழுங்கு விதிமுறைகளை மீறிச் செயற்பட்டார்களென இனங்காணப்பட்டுள்ள 47 மாணவர்கள் சப்ரகமுவ சப்ரகமுவ பல்கலைக்கழகத்திலிருந்து நேற்று முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

இம் மாணவர்கள் தொடர்பில் ஒழுக்காற்று விசாரணை மேற்கொண்டு இறுதி முடிவு எடுக்கும்வரை இவர்கள் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளிலிருந்து இடைநிறுத்துவதற்கு நிர்வாகச் சபை தீர்மானித்துள்ளது.

இவர்கள் இடைநிறுத்தப்பட்டுள்ள காலப் பகுதிக்குள் பரீட்சைக்கு தோற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படின் விசேட நிபந்தனைகளின் அடிப்படையில் பரீட்சைக்கு தோற்ற முடியுமென பல்கலைக்கழக நிர்வாக சபை தீர்மானித்துள்ளது.

இதற்கமைய- பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் பொறுப்பில் இவர்கள் பரீட்சை எழுத அனுமதிக்கப் படுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளது.

கல்வி நடவடிக்கைகளிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ள மாணவர்கள் தாங்கள் நிரபராதியென நிரூபிப்பதற்கு அவர்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கலகச் செயற்பாடுகளில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக பல்கலைக்கழக உபவேந்தர் மஹிந்த ரூபசிங்ஹ தலைமையில் கூடிய நிர்வாகச் சபையிலேயே இத்தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

 

சர்ச்சையில் டோணி!!

ஐபிஎல் கிரிக்கெட் ஆட்டநிர்ணய விவகார சூறாவளி சுழன்று அடித்துக் கொண்டிருக்கையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் டோணியும் ஒரு விவகாரத்தில் சிக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“Rhiti Sports Management” என்ற மும்பை நிறுவனம் அருண் பாண்டே என்பவருக்கு சொந்தமானது. இந்த நிறுவனம்தான் சுரேஷ் ரெய்னா, ரவீந்தர ஜடேஜா, ஓஜா மற்றும் ஆர்.பி.சிங் ஆகிய வீரர்களை நிர்வகிக்க ஒப்பந்தம் செய்துள்ளது. சரி இந்த ரிதி நிறுவனத்துக்கும் டோணிக்கும் என்ன சம்பந்தம்? என்ற கேள்வி எழுகிறது அல்லவா? ரிதி நிறுவனத்தின் உரிமையாளர் அருண் பாண்டே டோணியின் மிகவும் நெருங்கிய நண்பர்.

அதுமட்டுமின்றி இந்த நிறுவனத்தில் 15% பங்குகளை டோணி தம் வசம் வைத்தும் இருக்கிறார்.. இதுதான் இப்போது சர்ச்சை… அதாவது இந்திய அணிக்கான வீரர்களைத் தேர்வு செய்யும் போது தாம் 15% பங்குகளை வைத்திருக்கும் நிறுவனம் நிர்வகித்து வரும் வீரர்களுக்கு ஆதரவாகத்தானே டோணி முடிவு எடுப்பார்.. என்று கை நீட்டி குற்றம்சாட்டப்படுகிறது.

இந்த விவகாரத்தை கிளப்பிவிட்டவர் முன்னாள் இந்திய அணியின் வீரர் கீர்த்தி ஆசாத்தான். அவர்தான் ஊடகங்களிடம் இந்த விவகாரத்தை எடுத்துவிட்டவர். அத்துடன் இன்னொரு விடயத்தையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் டோணி இருந்து வருகிறார். என்கிறார் கீர்த்தி ஆசாத். இதற்கு டோணி என்ன பதில் சொல்வாரோ? ஆனால் இதைவிட பெரிய பெரிய வணிக விவகாரங்கள் கிரிக்கெட்டில் கொடி கட்டிப் பறக்கின்றன அவை அனைத்தும் மறைமுகமாக நடந்தேறுகின்றன என்று கூறுவோரும் இருக்கின்றனர்.

6 மாவட்டங்களுக்கு இயற்கை அனர்த்த எச்சரிக்கை!

தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக ஆறு மாவட்டங்களுக்கு இயற்கை அனர்த்த முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிணங்க மாத்தறை மாவட்டத்தில் கொட்டபொல, பஸ்கொட, பிடபெத்தர பிரதேச செயலகப் பிரிவுகள், காலி மாவட்டத்தில் நெலுவ மற்றும் தவளம பிரதேச செயலகப்பிரிவுகள், களுத்துறை மாவட்டத்தின் அகலவத்தை, வலல்லாவிட, புளத்சிங்கள, பதுரலிய பிரதேச செயலகப் பிரிவுகள்,

நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ கோறளே பிரதேச செயலகப்பிரிவு பதுளை மாவட்டத்தில் ஹல்துமுல்ல பிரதேச செயலகப்பிரிவு இரத்தினபுரி மாவட்டத்தின் குருவிட்ட, இரத்தினபுரி, எஹெலியகொட, பலாங்கொட பிரதேச செயலகப் பிரிவுகள் ஆகியவற்றை உள்ளடக்கியே மேற்படி இயற்கை அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேற்படி ஆறு மாவட்டங்களிலும் அடையாளம் காணப்பட்ட பிரதேசங்களில் மண்சரிவு, பாறைகள் புரள்தல், குன்றுகள் சரிதல் போன்ற அனர்த்தங்கள் ஏற்படலாம் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

 

யாழில் நோயின் கொடுமை தாங்க முடியாத இளம் பெண் தீ மூட்டி கிணற்றில் பாய்ந்து தற்கொலை..

நோயின் கொடுமை தாங்க முடியாத இளம் பெண் ஒருவர் தனக்கு தானே தீவைத்து கிணற்றுக்குள் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

யாழ்ப்பாணம் கே.கே.எஸ் வீதி சுன்னாகத்தைச் சேந்த சர்வேஸ்வரன் பிரிந்தா (வயது 26) என்ற இளம் பெண்ணே நோயின் கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. இவரது சடலம் மருத்துவப் பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இவரது சடலத்தை யாழ்.போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி ஆர். தனுசன் பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

பறந்து கொண்டிருந்த விமானத்தில் பெண் பயணி திடீர் தற்கொலை முயற்சி..

அமெரிக்காவில் இருந்து சீனா சென்ற விமானத்தில் பெண் பயணி ஒருவர் தற்கொலைக்கு முயன்றார். இதனால் விமானம் அவரசரமாக தரையிறக்கப்பட்டது.
அமெரிக்காவின் சிகாகோ விமான நிலையத்தில் இருந்து சீனாவின் தலைநகர் பீஜிங்குக்கு நேற்று முன்தினம் US 851 என்ற விமானம் புறப்பட்டது. நடுவானில் பறந்து கொண்டிருந்த போது கழிவறைக்கு சென்ற 40 வயது மதிக்கத்தக்க பெண் பயணி ஒருவர், நீண்ட நேரமாக வெளியில் வரவில்லை. கழிவறையில் அந்த பெண் தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் விமான பணிப்பெண்களிடம் தெரிவித்தனர்.

இதுகுறித்து விமானிக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். இந்நிலையில் விமானம் அவசரமாக அலாஸ்காவில் தரையிறக்கப்பட்டது. அங்கு தயாராக இருந்த போலீசார் மற்றும் விமான நிலைய ஊழியர்கள் கழிவறையில் இருந்து பெண்ணை மீட்டு அருகில் உள்ள வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விமானத்தில் வந்த மற்ற பயணிகள் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டு வேறு விமானத்தில் நேற்று அனுப்பி வைக்கப்பட்டனர். தற்கொலைக்கு முயன்ற பெண் பயணியின் பெயர், அதற்கான காரணத்தை விமான நிறுவனம் தெரிவிக்கவில்லை.

பெண் பயணி விமானத்தில் எதற்காக தற்கொலைக்கு முயன்றார் என்று அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். விமானத்தில் பயணம் செய்த பயணிகள் சிலர் சமூக இணையதளத்தில், தங்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியான அனுபவத்தை விரிவாக எழுதி உள்ளனர்.

எல்இடி விளக்குகளால் மனிதர்களின் கண் பார்வைக்கு பாதிப்பு??

விலை குறைவான மின் விளக்குகளை மக்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தனர். ஆனால், இவை வெப்பத்தை அதிகளவில் உமிழ்வதாகவும், மின்சாரத்தை அதிகளவில் உறிஞ்சுவதாகவும் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு மாற்றாக எல்இடி எனப்படும், விளக்குகள் அறிமுகம் ஆனது. இவை குண்டு விளக்குகள் பயன்படுத்தும் மின்சாரத்தில் 5ல் ஒரு பகுதியை மட்டுமே பயன்படுத்துவதாகவும், சுற்றுச்சூழலுக்கு மிக சிறப்பானது என்றும் கூறப்பட்டது. இதனால், ஐரோப்பிய யூனியனில் பல ஆண்டுகளுக்கு முன்பே தடை விதிக்கப்பட்டுவிட்டது.

இந்நிலையில், கைத்தொலைபேசிகள், தொலைக்காட்சிப்பெட்டிகள் என்று பல்வேறு மின்னணு சாதனங்களில் எல்இடி பயன்பாடு அதிகரித்துவிட்டது. தற்போது மக்களிடம் எல்இடி விளக்குகளை பற்றி, மின்சாதன நிறுவனங்கள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றன. எல்இடி விளக்குகளால் மனிதர்களின் கண் பார்வைக்கு பாதிப்பு ஏற்படும் என்று ஸ்பெயின் நாட்டு ஆராய்ச்சியாளர் தற்போது தகவல் வெளியிட்டுள்ளார். மேட்ரிட்டில் உள்ள கம்ப்லூடென்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் செலியா சான்செஜ் ரமோஸ் என்பவர் தலைமையில் ஒரு குழு, எல்இடி விளக்குகள் குறித்து ஆராய்ச்சி நடத்தி முடிவை வெளியிட்டுள்ளனர்.

இதுகுறித்து, ரமோஸ் கூறியிருப்பதாவது எல்இடி விளக்குகளை சுற்றுச்சூழலுக்கு சிறப்பானது என்றாலும், அதில் இருந்து நீல மற்றும் செங்கரு நீல கதிர்கள் வெளியாகின்றன. இவை சிறிய அலைவீச்சை கொண்ட சக்திவாய்ந்த கதிர்கள். இவை அதிக சக்திவாய்ந்தவை என்றாலும், குளுமையாக இருப்பதால் சாதாரணமாக அதை பார்த்து கொண்டிருக்க முடியும். இதுபோன்று எல்இடி விளக்குகளின் வெளிச்சத்தை பார்க்கும்போது, அது கண்ணின் விழித்திரையை பாதிக்கும். கண்கள், வெளிச்சத்தின் துணையுடன் பார்க்கக்கூடிய தன்மை கொண்டது. மாறாக வெளிச்சத்தை மட்டும் பார்க்கக்கூடியது அல்ல. எல்இடி விளக்குகள் உமிழும் வெளிச்சம் குளுமையாக இருப்பது போல் தோன்றினாலும், அதனால் கண் பார்வைக்கு ஆபத்து அதிகம். இவ்வாறு கூறியுள்ளார்.

தினம் ஒரு உயிருள்ள தேள்.. அலற வைக்கும் ஈராக் விவசாயி

கடந்த 15 வருடங்களாக தினம் ஒரு தேளை உயிரோடு கபளீகரம் செய்து வருகிறாராம் ஈராக் விவசாயி ஒருவர். கடந்த 15 வருடங்களாக வழக்கமாக சாப்பிட்டு வரும் இவரால் ஒருநாள் கூட தேள் சாப்பிடாமல் இருக்கமுடியாதாம். ஈராக்கை சேர்ந்த விவசாயி இஸ்மாயில் ஜசிம் முகமது (34). விவசாயம் செய்யும் சமயங்களில் பல பூச்சிகள் மற்றும் தேள்கள் இவரை கடித்ததுண்டாம்.

அவற்றை பழிவாங்கும் விதமாக அவற்றை பிடித்து இவரும் முதலில் கடிக்கத் துவங்கியுள்ளார். பின்னாளில் அதுவே வாடிக்கையாகி விட, இப்பழக்கத்திற்கு இஸ்மாயில் அடிமை ஆகி விட்டாராம். ஏறக்குறைய 15 வருடங்களாக தேள் சாப்பிட்டு வரும் இவரால், ஒரு நாள் கூட ‘தேள்’ இல்லாமல் இருக்க முடியாதாம். தேள் கடியும் இவரை ஒன்றும் செய்தது இல்லையாம். இவர் தேளைக் கடித்தால், தேள் மட்டும் சும்மா விடுமா… அதுவும் பதிலுக்கு பலமுறை இவரது வாயை பதம் பார்த்துள்ளதாம். ஆனால், ‘எனக்கு வலிக்கலியே’ என வடிவேல் பாணியில் பதிலளிக்கிறார் இஸ்மாயில்.

சச்சினின் முதல் தர சத சாதனையை சமன் செய்தார் ரிக்கி பொன்டிங்..

முதல் தர கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் நிகழ்த்தி வைத்துள்ள சாதனையை ஆஸ்திரேலிய கிரிக்கெட்வீரர் ரிக்கி பொன்டிங் சமன் செய்துள்ளார். இங்கிலாந்தின் சுர்ரே அணியில் சேர்ந்து விளையாடிய போது இந்த சாதனையை நிகழ்த்தினார் ரிக்கி. இங்கிலாந்தின் கவுன்டி சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன.

இதில் முதல்முறையாக சுர்ரே அணியில் இடம் பெற்றுள்ளார் ரிக்கி பொன்டிங். டெர்பிஷயருக்கு எதிரான போட்டியின்போது ரிக்கி பொன்டிங் அபாரமான சதத்தைப் போட்டார். இது அவரது 81வது முதல் தர கிரிக்கெட் சதமாகும். ஏற்கனவே சச்சினும் 81 சதங்களை எடுத்து சாதனையுடன் இருந்து வந்தார். தற்போது அவருடன் ரிக்கியும் இணைந்துள்ளார்.

சச்சின் தனது சாதனையை 486 இன்னிங்ஸ்களில் நிகழ்த்தியிருந்தார். ஆனால் ரிக்கிக்கு 489 இன்னிங்ஸ்கள் தேவைப்பட்டுள்ளன. இந்தியாவின் சுனில் கவாஸ்கரும் கூட 81 முதல் தர சதங்களைப் போட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் சர் ஜேக் ஹாப்ஸ் என்ற வீரர்தான். இவர் 199 முதல் தர சதங்களைக் குவித்து வைத்துள்ளார்.

சர்வேதச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று விட்ட ரிக்கி பொன்டிங் தற்போது சுர்ரே அணிக்காக விளையாட ஆரம்பித்துள்ளார். ஓய்வு பெற்ற போதிலும் கூட ரிக்கியின் ஆட்டம் சிறப்பானதாக இருந்ததைப் பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 182 பந்துகளைச் சந்தித்த ரிக்கி ரிக்கி பொன்டிங் 120 ரன்களைக் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

புகலிடக் கோரிக்கையாளர்கள் பலவந்தமாக நாடுத்தப் படுகின்றார்களா?

பிரித்தானியாவிலிருந்து, இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளாகள் நாடு கடத்தப்படுவது குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பு கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

புகலிடக் கோரிக்கை மறுக்கப்பட்ட இலங்கையர்களை நாடு கடத்தும் பிரித்தானிய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பின் சித்திரவதைகளுக்கு எதிரான குழு கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.

இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் பலவந்தமான முறையில் நாடுத்தப்படுகின்றார்களா? அவ்வாறு நாடு கடத்தப்படுவதன் மூலம் உள்நாட்டில் அவர்கள் நெருக்கடிகளை எதிர்நோக்கினார்களா என்பது குறித்து பிரித்தானிய விளக்கமளிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக 12 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்த வேண்டாம் என ஐக்கிய நாடுகள் அமைப்பு, பிரித்தானிய அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்துள்ளது.

இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்துவதன் மூலம் பிரித்தானியா ஐக்கிய நாடுகள் பிரடகனத்தை மீறிச் செயற்பட்டுள்ளதாக தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.

 

பார்த்து சிரிக்க…!

இந்த வீடியோவைப் பார்த்து வயிறு குலுங்கச் சிரியுங்கள்

 

இந்திய கிரிக்கட் வாரியத் தலைவர் ஸ்ரீனிவாசன் பதவி விலக முடிவு..!

இந்திய கிரிக்கெட்வாரியத்தின் அவசர செயற்குழுக் கூட்டத்தில் தலைவர் சீனிவாசன் தற்காலிகமாக பதவி விலக முடிவானது. குருநாத் மெய்யப்பன் விவகாரம் தொடர்பான விசாரணை முடியும் வரை இடைக்காலத் தலைவராக முன்னாள் தலைவர் ஜக்மோகன் டால்மியா பதவி வகிப்பது என முடிவாகியுள்ளதாக தெரிகிறது.

ஐபிஎல் ஸ்பாட் பிக்ஸிங் விவகாரத்தில் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு நெருக்கடி அதிகரித்தது. ஐபிஎல் தலைவர் பதவியிலிருந்து ராஜீவ் சுக்லா பதவி விலகி விட்டார். பிசிசிஐ செயலாளர் பதவியிலிருந்து ஜெகதாலே விலகினார்.தொடர்ந்து பலர் பதவி விலகி விட்டனர். இதனால் சீனிவாசனுக்கு நெருக்கடி அதிகரித்தது.

இந்த நிலையில் இன்று பிற்பகல் கிரிக்கெட்வாரியத்தின் அவசர செயற்குழுக் கூட்டம் கூட்டப்பட்டது. பிற்பகலில் தொடங்கிய கூட்டம் சீனிவாசன் தலைமையில் நடந்தது.

இதில் முக்கிய உறுப்பினர்களான ராஜீவ் சுக்லா, ஜேட்லி ஆகியோர் பங்கேற்கவில்லை.மாறாக வீடியோ கான்பரன்சிங் மூலமாக அவர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், குருநாத் மெய்யப்பன் விவகாரம், ஸ்பாட் பிக்ஸிங் உள்ளிட்டவை குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது. மேலும் சீனிவாசன் விலகல் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

அப்போது ஒருதிட்டத்தை சீனிவாசன் முன்வைத்தார். அதாவது விசாரணை முடிவடையும் வரை தான் தலைவர் பொறுப்பிலிருந்து விலகியிருப்பது, இடைக்காலத் தலைவரை நியமித்து வாரியத்தை நடத்துவது, விசாரணை முடிவில் தானும், தனது மருமகனும் குற்றமற்றவர்கள் என்பது நிரூபிக்கப்பட்டால் மீண்டும் தலைவர் பொறுப்பை தான் ஏற்பது என்பதே சீனிவாசனின் திட்டம்.

ஆனால் இதற்கு சுக்லா, ஜேட்லி போன்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. சிலர் ஆதரித்ததாக தெரிகிறது. இதனால் குழப்பம் ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது சீனிவாசனின் கடும் பிடிவாதம் காரணமாக அவரது திட்டமே வென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது விசாரணை முடியும் வரை சீனிவாசன் ஒதுங்கியிருப்பது எனவும், அதுவரை நிர்வாகத்தை ஜக்மோகன் டால்மியா நடத்துவது எனவும் தீர்மானமாகியுள்ளதாம். விரைவில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்று தெரிகிறது.