தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜீத். இவர் தற்போது விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் ஆரம்பம், சிவா இயக்கத்தில் வீரம் ஆகிய படத்தில் நடித்து வருகிறார்.
இவர் நடிப்பில் மட்டுமல்லாமல் பைக் ரேசிலும் பிரியமுடையவர். இதனால் அவர் படத்தில் பைக் ஒட்டும் காட்சிகளில் டூப் இல்லாமல் நடிப்பார்.
இந்த நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் ”நான் இனிமேல் நடிக்கும் படத்தில் பைக் காட்சிகள் வரும்பொழுது ஹெல்மேட் போடாமல் நடிக்க மாட்டேன். அப்படி நடித்தால் எனது ரசிகர்களும் அதே பின்பற்றுவார்கள் என்ற அச்சத்தில் இந்த முடிவை எடுத்துள்ளேன்” என்றார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவந்த துப்பாக்கி படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் இக்கூட்டணி ஒரு புதிய படத்தில் இணையவிருக்கிறது. இது ஏற்கெனவே உறுதி செய்யப்பட்டு விட்டது.
இந்நிலையில் விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் இணையவிருக்கும் புதிய படத்திற்கு அதிரடி என பெயரிட்டு இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இன்னும் இது உறுதி செய்யப்படவில்லை.
விஜய் நடித்த தலைவா படம் பல்வேறு தடைகளை தாண்டி தற்போது தமிழகத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. விஜய் தற்போது அறிமுக இயக்குனர் நேசன் இயக்கும் ஜில்லா என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸுடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை சிறையில் வாடும் 106 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.
ராஜ்யசபாவில் இன்று திமுக, அதிமுகவைச் சேர்ந்த எம்.பி.க்கள் தமிழக மீனவர்கள் விடுதலை தொடர்பாக கேள்வி எழுப்பினர். திமுக சார்பில் வசந்தி ஸ்டான்லியும் அதிமுக சார்பில் மைத்ரேயனும் கருத்துகளைத் தெரிவித்தனர்.
இந்தக் கருத்துகளுக்குப் பதிலளித்த வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் இலங்கை சிறையில் தற்போது 106 தமிழக மீனவர்கள் உள்ளனர். அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, தமிழக மீனவர்களை மீட்க பலமுறை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்போதும், இந்தியா வந்த இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சரிடம் மீனவர்களை விடுதலை செய்யும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
பிடியெடுப்பு என தெரிந்தும் வேண்டுமென்றே களத்தை விட்டு வெளியேற மறுத்த இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட்டை அடுத்த ஆஷஸ் தொடரின் போது அழ வைக்க வேண்டும் என்று அவுஸ்திரேலிய ரசிகர்களை பயிற்சியாளர் டேரன் லீமன் கேட்டுக் கொண்டுள்ளார்.
நாட்டிங்காமில் கடந்த மாதம் நடந்த அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் கிரிக்கெட் தொடரின் முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து விரர் ஸ்டூவர்ட் பிராட் ஆட்டமிழந்தும் நடுவர் விரலை உயர்த்தாததால் வெளியேற மறுத்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
அவர் 37 ஓட்டங்களில் இருந்த போது சுழற்பந்து வீச்சாளர் ஆஷ்டன் அகரின் ஓவரில் பந்து அவரது துடுப்பில் உரசியபடி விக்கெட் காப்பாளர் பிராட் ஹேடினிடம் சென்றது. அதை அவர் பிடியெடுக்கதவறினாலும், பந்து விக்கெட் காப்பாளரின் கையுறையை உரசிக் கொண்டு, முதலாவது ஸ்லிப்பில் நின்ற அவுஸ்திரேலிய அணித்தலைவர் மைக்கேல் கிளார்க்கிடம் புகுந்தது. ஆனால் நடுவர் ஆட்டமிழப்பை வழங்க மறுத்தார்.
ஸ்டூவர்ட் பிராட்டும் அந்த இடத்தை விட்டு நகரவில்லை. நடுவரின் மோசமான தீர்ப்பையும் ஸ்டூவர்ட் பிராட் நடந்து கொண்ட விதத்தையும் அவுஸ்திரேலிய வீரர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. என்றாலும் வேறு வழியின்றி தொடர்ந்து விளையாடினர். அதன் பிறகு பிராட் 65 ஓட்டங்களில் தான் ஆட்டம் இழந்தார்.
இந்த டெஸ்டில் அவுஸ்திரேலியா 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ஒரு வேளை ஸ்டூவர்ட் பிராட் தொடக்கத்திலேயே நடையை கட்டியிருந்தால் அவுஸ்திரேலியா வெற்றி கூட பெற்றிருக்க முடியும். இந்த நிலையில் ஸ்டூவர்ட் பிராட் மீது அவுஸ்திரேலிய பயிற்சியாளர் டேரன் லீமன் திடீரென சூடான தாக்குதலை தொடுத்திருக்கிறார். அவுஸ்திரேலிய வானொலிக்கு லீமன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது..
காலம் கடந்தாலும் கூட ஸ்டூவர்ட் பிராட்டின் பிடியை அவுஸ்திரேலிய வீரர்கள் ஒரு போதும் மறக்க மாட்டார்கள். இது ஒரு அப்பட்டமான மோசடி. அவுஸ்திரேலிய மக்களும் இதை மறக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன். எல்லா பிடியெடுப்புக்களுக்கும் உடனே பெவிலியன் திரும்ப வேண்டும் என்று சொல்லவில்லை.
சிலவற்றில் சந்தேகம் இருக்கும். ஆனால் துடுப்பில் உரசியபடி முதலாவது ஸ்லிப்பில் கேட்ச் ஆகும் போது வெளியேற மறுப்பதை ஜீரணிக்க முடியாது. அடுத்த ஆஷஸ் தொடர் எங்கள் நாட்டில் கோடை காலத்தில் நடைபெற உள்ளது. அப்போது எங்களது ரசிகர்கள் அவருக்கு சரியான பதிலடி கொடுப்பார்கள் (கிண்டல், கேலி உள்ளிட்டவை மூலம் வெறுப்படைய செய்து) என்று நம்புகிறேன்.
அந்த தொடரின் போது ஸ்டூவர்ட் பிராட் கண்ணீர் வடித்தபடி தான் நாட்டிற்கு திரும்புவார் என்று நம்புகிறேன். பந்து துடுப்பில் உரசி கொண்டு தான் சென்றது என்பது பிராட்டுக்கு நன்கு தெரியும். நடுவர்களின் மோசமான தீர்ப்பு தான், அவரை முட்டாள் போன்று ஆக்கி விட்டது. ஆனால் இப்போது அவர் வெளிப்படையாக கூறி வரும் கருத்துகள் அபத்தமானது. அதனால் தான் அவர் மீது எங்கள் நாட்டு மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது. என்று லீமன் கூறினார்.
மனிதனின் உடல் எடை பூமியின் அனைத்து பகுதிகளிலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தாழ்வான பகுதியில் இருக்கும் நபர் உயரமான இடத்திற்கு செல்லும் போது அவரது உடல் எடை குறைவதாக புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனிதனின் உடல் எடைக்கும் புவி ஈர்ப்பு விசைக்கும் உண்டான தொடர்பு குறித்து அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
பூமியின் வெவ்வேறு இடங்களில் புவி ஈர்ப்பு விசை மாறுபடுவதால் மனித உடல் எடையும் புவி ஈர்ப்பு விசைக்கு ஏற்ப மாறுபடுவதாக, அவுஸ்திரேலியாவின் கர்டின் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் புதிய தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
இது குறித்து, ஆய்வாளர் கிறிஸ்டியன் ஹர்ட் கூறியதாவது…
பூமி சீரான கோள வடிவில் இல்லை. இதில் பல்வேறு உயர்ந்த குன்றுகளும் பள்ளத்தாக்குகளும் ஆழமான கடல்களும் உள்ளன. இந்த அனைத்து பகுதிகளிலும் புவி ஈர்ப்பு விசை, ஒரே சீரானதாக அமைவதில்லை.
பூமியின் மைய நோக்கு விசையின் காரணமாகவே இங்குள்ள பொருட்கள் அனைத்தும் சுற்றும் பூமியிலும் நிலையாக நிலைத்து நிற்கின்றன. எனினும் இந்த மைய நோக்கு விசை, பூமியின் மையப் பகுதியில் இருந்து செயல்படுவதால் உயரமான மலைக்குன்றுகளில் நிலவும் விசையிலும் ஆழமான பகுதிகளில் நிலவும் விசையிலும் மாறுபாடுகள் உள்ளன.
அவ்வகையில் பூமியின் ஒரு பகுதியிலிருந்து உயரமான மலைப் பகுதிக்கு செல்லும் ஒருவருக்கு உடல் எடை கணிசமான அளவு குறைகிறது. பூமியின், புவி ஈர்ப்பு விசை பற்றி துல்லியமாக கணிக்கும் சூப்பர் கம்ப்யூட்டர்களின் மூலம் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில், ஒவ்வொரு 250 மீட்டர் இடைவெளியிலும் ஒவ்வொரு 5 வினாடிகளில் புவி ஈர்ப்பு விசையில் மாறுபாட்டை உணர முடிந்தது.
அவ்வகையில் பூமியின் உயரமான பகுதிகளில் ஈர்ப்பு விசை குறைவாகவும் தாழ்வான பகுதிகளில் அதிகமாகவும் பதிவானது. தென் அமெரிக்காவின் பெரு நாட்டில் உள்ள நிவேடோ ஹுயாஸ்கரன் மலைப்பகுதியில் மிகக் குறைந்த புவி ஈர்ப்பு விசையும் ஆர்க்டிக் கடல் பகுதியில் அதிக அளவிலான புவி ஈர்ப்பு விசையும் பதிவாகின.
ஆர்க்டிக் கடல் பகுதியில் இருக்கும் நபரின் உடல் எடை நிவேடோ மலைப்பகுதிக்கு செல்லும் போது ஒரு சதவீதம் குறைகிறது. ஆர்க்டிக் கடல் பகுதியில் 100 மீட்டர் உயரத்திலிருந்து குதிக்கும் நபர் நிவேடோ மலைப்பகுதியில் 100 மீட்டர் உயரத்திலிருந்து குதிக்கும் போது, நிலப்பகுதியை அடைய 16 மில்லி நொடிகள் தாமதமாகிறது.
குதிக்கும் நபர் ஒரு சதவீத உடல் எடையை இழப்பதே இதற்கு காரணம். பூமியின் வெவ்வேறு இடங்களில் இவ்வகை எடை மாறுபாடு ஏற்படினும், மனிதனின், நிறையில் எவ்வித மாற்றமும் ஏற்படுவதில்லை. இவ்வாறு, கிறிஸ்டியன் ஹர்ட் கூறினார்.
சூர்யாவை இயக்கும் இயக்குநர் அடுத்த படத்தை கார்த்தியை வைத்து இயக்குவார். அதேபோல, கார்த்தியை இயக்கும் இயக்குநர், அடுத்த படத்தில் சூர்யாவை இயக்குவார். இந்த கொடுக்கல் வாங்கல் பல காலமாக நடந்து வருகிறது. இதை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் கண்ணும் கருத்துமாகச் செய்து வருகிறது.
அப்படித்தான் சிங்கம்-2 படத்தை இயக்கிக் கொண்டிருக்கும்போதே அடுத்து கார்த்திக் படத்தை இயக்குவதாக ஒப்புக் கொண்டார். ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பதாக இருந்தது.
சிங்கம்-2 வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தைப் பார்த்த ஜூனியர் என்.டி.ஆர் தன்னை வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என ஹரியிடம் கேட்க அவரும் ஓ.கே. சொல்லிவிட்டார்.
சம்பளம் 5 கோடி என்றதும் கார்த்தியின் படத்தை டிராப் செய்துவிட்டு ஜூனியர் என்.டி.ஆரை வைத்து தெலுங்கில் ஆக்ஷன் கதயொன்றை இயக்கப் போகிறார் ஹரி.
மிருகம், உயிர், சிந்து சமவெளி போன்ற படங்களை இயக்கி பரபரப்பை ஏற்படுத்தியவர் இயக்குநர் சாமி. தற்போது எந்தவித சர்ச்சையும் இல்லாமல் கங்காரு படத்தை இயக்கி வருகிறார்.
80 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. முழுக்க முழுக்க கொடைக்கானல் மலையில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது. அமைதிப்படை இரண்டாம் பாகத்தைத் தயாரித்த வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்.
நாயகனாக புதுமுகம் அர்ஜுனா, நாயகியா வர்ஷா அஸ்வதி நடித்து வருகின்றனர். இவர்களுடன் பிரியங்கா, தம்பி ராமையா, கலாபவன் மணி, ஆர்.சுந்தரராஜன் உட்பட பலர் நடிக்கின்றனர்.
பின்னணிப் பாடகர் ஸ்ரீநிவாஸ் முதல் முறையாக இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். அனைத்துப் பாடல்களையும் கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ளார்.
இந்தப் படத்துக்காக கொடைக்கானல் மலை உச்சியில் ஒரு கிராமத்தையே செட் போட்டு அசத்தியுள்ளனர். சாய்குமார் கதை எழுத, திரைக்கதை அமைத்து, வசனம் எழுதி, இயக்குகிறார் சாமி. ராஜரத்தினம் ஒளிப்பதிவு செய்கிறார்
தங்கையை அண்ணனும், அண்ணனை தங்கையும் கங்காரு போல் கண்ணும் கருத்துமாக காப்பற்றுவது தான் படத்தின் கதை. போதாக்குறைக்கு காதலியும் காதலனை கங்காரு போல காப்பாற்றுகிறாராம்.
அன்பை மையமாக வைத்து பின்னப்பட்ட கதை இது. எந்தவித செக்ஸ் சம்பந்தப்பட்ட காட்சிகளும் இல்லாமல் குடும்பத்தோடு உட்கார்ந்து ரசிக்கும் படமாக இருக்கும் என்கிறார் தயாரிப்பாளர்.
படத்தின் இசை வெளியீட்டு விழாவை வைரமுத்துவுக்கான பாராட்டு விழாவாக நடத்தப் போகிறார்களாம். அக்டோபர் 14ம் திகதி சென்னை டிரேட் சென்டரில் விழா நடைபெற உள்ளது.
இனிமேல் சார்ஜ் தீர்ந்துவிட்டால் மின்சாரத்தை தேடி ஓட வேண்டியதில்லை, இருந்த இடத்திலிருந்து கைபேசிகளுக்கு சார்ஜ் செய்து கொள்ளலாம். நம்மை சுற்றி எந்நேரமும் அலைவரிசைகள் இருக்கிறது என்பதை நாம் அறிவோம்.
எங்கோ ஒலிபரப்பாகும் ரேடியோவை கேட்க முடிகிறது, அதேபோல எங்கோ ஒளிபரப்பாகும் TV ஐயும் எம்மால் பார்க்க முடிகிறது.
அதுமட்டுமா Wifi-யின் மூலம் மடிக்கணனியில் இணையத்தை பயன்படுத்தலாம்.
இவ்வாறு பல அலைவரிசைகள் எம்மைச் சுற்றி எப்பவுமே காணப்படுகிறது காரணம் இதில் எலக்ட்ரான்கள் உள்ளது. இதனைப் பாவித்து பற்றரிகளை சார்ஜ் செய்யும் சிப் ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள்.
இதனை கைபேசியில் புகுத்தினால் நாம் அவசரத்துக்கு சார்ஜ் செய்ய அலையவேண்டியது இல்லை. பற்றரி வீக் ஆனால் ஒரு பட்டனை அழுத்தினால் போதும். சார்ஜருடன் இணைத்தது போல அது சார்ஜ் செய்ய ஆரம்பித்துவிடும்.
அதிக மின்சாரத்தை அது உற்பத்திசெய்யாவிட்டாலும் பரவாயில்லை. அவசரத்துக்கு உதவும் வகையில் அது மின்சாரத்தை தயாரித்து பற்றரியை சார்ஜ் செய்யும் திறன் கொண்டது.
அதிலும் நாம் நல்ல சிக்கனல் கிடைக்கும் இடங்களில் இருந்தால், அங்குள்ள Routers, TV சிக்னல்கள் மற்றும் ரேடியோ சிக்னல்களின் கதிர்களை அது பாவித்து மின்சாரத்தை உற்பத்திசெய்துவிடும்.
இதுபோன்ற சாதனங்கள் விரைவில் சந்தையில் வர உள்ளது, இது மிகவும் அதிசயமான கண்டுபிடிப்பு தான் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
23 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் சாதனை படைத்திருக்கிறது.
சிங்கப்பூரில் 23 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், ஆப்கானிஸ்தான், இலங்கை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
இந்த போட்டியில் இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதின. முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 184 ரன்களை எடுத்தது.
பின்னர் ஆடிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 156 ரன்களையே எடுக்க முடிந்தது. இதனால் இந்திய அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சரித்திரம் படைத்தது ஆப்கானிஸ்தான்.
இப்போட்டி தொடரில் இந்தியாவுக்கு இது முதல் தோல்வி. இருப்பினும் புள்ளிகள் அடிப்படையில் இந்தியா முன்னணி பெற்றிருக்கிறது. ஏற்கெனவே பாகிஸ்தான், நேபாளம் அணிகளை இந்தியா வெற்றிபெற்றுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை நாளை இந்தியா அரை இறுதியில் எதிர்கொள்கிறது. இதேபோல் பாகிஸ்தானும் இலங்கையும் பலப்பரீட்சை நடத்துகின்றன. வரும் 25ம் திகதியன்று இறுதிப் போட்டி நடைபெறுகிறது.
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொரி ஒன்றின் பின்பகுதியில் மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று இடம்பெற்ற இந்த சம்பவத்தில் மோட்டர் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதே உயிரிழந்துள்ளார்.
புளியங்குளத்தைச் சேர்ந்த 23 வயதான இளைஞரே இதன்போது பலியானதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய லொரி சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, இன்றைய தினம் அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வீரப்பன் மனைவி கதாபாத்திரத்தில் நான் நடிக்கப் போகிறேனா என்று குலுங்கி சிரிக்கின்றார் நடிகை ப்ரியாமணி. கப்டன் பிரபாகரனில் தொடங்கி சந்தன கடத்தல் வீரப்பனின் கதையை பத்து, பதினைந்து ஆண்டுகளாக துருவி துளாவி நார் நாராக கிழித்து எறிந்து கொண்டிருக்கிறார்கள் சினிமாக்காரர்கள்.
சமீபத்தில்கூட, வனயுத்தம் என்றொரு படம் வெளியானது அர்ஜூன், விஜயலட்சுமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். தமிழ், கன்னடம் என இரண்டு மொழிகளில் வெளியான அப்படம் வெற்றிபெறவில்லை.
இருப்பினும் அந்த கதையில் இன்னும் சொல்லப்படாத பக்கங்கள் நிறைய உள்ளன என்று இப்போது ஒரு கன்னட இயக்குனரும் மீண்டும் வீரப்பன் கதையை படமாக்கப்போவதாக களத்தில் இறங்கியிருக்கிறாராம்.
இதற்காக வீரப்பன் பதுங்கியிருந்த காட்டுப்பகுதிகளுக்கு வந்து லொகேசன்களை பார்த்து விட்டு சென்ற அந்த இயக்குனர் வீரப்பன் மனைவி முத்துலட்சுமியின் வேடத்தில் நடிக்க பருத்தி வீரன் ப்ரியாமணியை கேட்டாராம்.
அதைக்கேட்டு விழுந்து விழுந்து சிரித்த ப்ரியாமணி, வீரப்பன் கதையை திரும்பத்திரும்ப பார்த்து வெறுப்பில் இருக்கிறார்கள் ரசிகர்கள். அதனால் மீண்டும் அதே கதையில் நடித்து அவர்களின் வெறுப்புக்கு ஆளாக நான் தயாராகயில்லை என்று நழுவிக் கொண்டாராம்.
தமிழ்நாட்டின் தலைநகரமான சிங்கார சென்னை இன்று தனது 375வது பிறந்த நாளை கொண்டாடுகிறது. இதையொட்டி, ஒரு வாரத்துக்கு நகரில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன.
தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை 1639ம் ஆண்டு ஒகஸ்ட் 22ம் திகதி உருவானது. அன்றைய தினம் கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த பிரான் கிஸ்டே அன்ட்ரூ கோகன் ஆகியோர் தங்களின் உதவியாளர் பெரிதிம்மப்பா என்பவர் உதவியுடன் சென்ட் ஜோர்ஜ் கோட்டை உள்ள இடத்தை வாங்கியுள்ளார்.
அந்த இடத்தை விற்ற அய்யப்பன், வேங்கடப்பன் ஆகியோரின் தந்தை சென்னப்ப நாயக்கன் என்பவரின் நினைவாக கோட்டைக்கு வடக்கே உள்ள ஊர் சென்னப் பட்டினம் என்று அழைக்கப்பட்டது.
ஆங்கிலேயர்கள் 1639ம் ஆண்டில் சென்ட் ஜோர்ஜ் கோட்டையை கட்டியதைத் தொடர்ந்து சென்னை நகரம் உருவானது. 1646ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி சென்னையின் மக்கள் தொகை 19 ஆயிரம்.
2011ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி சென்னையின் மக்கள் தொகை சுமார் 50 லட்சம் ஆகும். 1947ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்ற பின்பு மதராஸ் மாகாணத்தின் தலைநகரானது.
சென்னை மாகாணம் 1969ம் ஆண்டு தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. நகரின் பெயரான மதராஸ் 1996ம் ஆண்டு சென்னை என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. சென்னை தோற்றுவிக்கப்பட்டதாக கருதப்படும் 1639 ஒகஸ்ட் 22ம் திகதியை நினைவூட்டும் வகையில் கொண்டாடப்படும் தினமே சென்னை தினம்.
இந்த தினம் கடந்த 2004ம் ஆண்டில் இருந்து கொண்டாடப்பட்டு வருகிறது. முதன் முதலில் ஒரு சில கருப்பு வெள்ளை படங்களுடன் 2004ம் ஆண்டு தொடங்கிய இந்த கொண்டாட்டம் இன்று வளர்ச்சியடைந்து புகைப்படக்கண்காட்சி, உணவு திருவிழா, மராத்தான் ஓட்டம் என பல்வேறு பரிமாணங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.
சிறப்பு மிக்க சென்னை தினம் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னைக்கு இன்று வயது 375. மெட்ராஸ் டேயை முன்னிட்டு பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து “நம்ம சென்னை” என்ற தலைப்பில் சென்னை நகரின் வரலாறு தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி இன்று காலை மைலாப்பூர் பி.எஸ்.சீனியர் செகன்ட்டரி பள்ளியில் புகைப்பட கண்காட்சி நடந்தது. பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள தியாகராயர் கல்லூரியில் வினாடி வினா போட்டியும் நடத்தப்பட்டது.
இதே போல், இன்று மாலை 5.30 மணிக்கு சென்னை தரமணி சி.பி.டி. வளாகத்தில் உள்ள பிரஸ் இன்ஸ்டிடியூட் ஒப் இந்தியா அரங்கத்தில் சென்னை வரலாற்றை விளக்கும் ஆவணப் படங்கள் திரையிடப்படவுள்ளன.
இதே போல், ஒரு வாரத்துக்கு சென்னையின் வரலாறு தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
சூரியனில் இருந்து நேற்று அதிகாலை வெளிப்பட்ட சூரியப் புயல் பூமியை நோக்கி வருவதாக நாசா ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சூரிய காந்தப் புயல் மூன்று விதத்தில் நிகழும், முதலில் மின்காந்தத் தூண்டல் கதிர்வீச்சும், இரண்டாவதாக புரோட்டான்கள் நிறைந்த அதிர்வலையால் கதிர்வீச்சும், மூன்றாவதாக சூரியனின் கரோனா என்ற மேற்புறத்தில் இருந்து எழும் பிளாஸ்மா கதிர்வீச்சும் அடுத்தடுத்து பூமியை நோக்கி வரும்.
இதன்படி நேற்று சூரியனில் இருந்து அதிக வாய்ந்த வெப்பம் வெளிப்பட்டு, வினாடிக்கு 570 மைல் வேகத்தில் பூமியை நோக்கி வருகிறது. இது பூமியை வந்தடைவதற்கு ஒன்று முதல் மூன்று நாட்கள் ஆகும் என்றும், இதனால் பூமிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும் நாசா அறிவித்துள்ளது.
ஆனால் உலக நாடுகள் விண்வெளியில் அதிகளவிலான செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தியுள்ளன. இச்செயற்கைக்கோள்கள் மூலம் தான் தொழில்நுட்ப பயன்பாட்டை நாம் பெற்றுக்கொண்டிருக்கிறோம்.
பூமியில் இருந்து வெளிவரும் சூரியப்புயலால் செயற்கைக்கோள்கள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்னரும் சிறிய அளவிலான சூரியப்புயல் பூமியை தாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவிக்கு கையடக்கத் தொலைபேசியில் ஆபாச படத்தை காண்பித்து சில்மிஷம் செய்த வாலிபருக்கு தர்ம அடி விழுந்தது.
கிருஷ்ணகிரி அருகேயுள்ள பீர்ப்பள்ளி கிராமத்தை சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க இளம் பெண் கிருஷ்ணகிரியில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு படித்து வருகிறார்.
இவர் தினமும் பஸ்சில் கல்லூரிக்கு வருவது வழக்கம். இதே பஸ்சில் மேலுமலை கிராமத்தை சேர்ந்த திம்மராயன் என்பவரது மகன் கார்த்திகேயனும் தினமும் வருவார். அவர் எந்த வேலைக்கும் செல்லாமல் ஊர் சுற்றித் திரிந்ததாக தெரிகிறது.
இவர் கடந்த ஒரு மாதமாக தினமும் அந்த கல்லூரி மாணவி செல்லும் பஸ்சில் ஏறி அவரது இருக்கை அருகே நின்று கொண்டு, தனது கையடக்கத் தொலைபேசியில் உள்ள ஆபாச படத்தை காண்பித்து சில்மிஷம் செய்ததாக தெரிகிறது.
நேற்று முன்தினம் வழக்கம் போல் அந்த மாணவி பஸ்சில் கல்லூரிக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது பஸ்சில் ஏறிய வாலிபர் கார்த்திகேயன் அதேபோல் மீண்டும் கையடக்கத் தொலைபேசியில் ஆபாச படத்தை எடுத்து காண்பித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி தனது தொலைபேசி மூலம் சித்தி மற்றும் உறவினர்களுக்கு தகவல் கொடுத்தார்.
இதைத்தொடர்ந்து அந்த மாணவியின் உறவினர்கள் குருபரப்பள்ளி பேருந்து நிறுத்தத்தில் தயாராக காத்திருந்தனர். பஸ் நின்றவுடன் அவர்கள் வாலிபர் கார்த்திகேயனை பஸ்சை விட்டு வெளியே இழுத்து வந்தனர். அனைவரும் அவருக்கு தர்ம அடி கொடுத்தனர். பிறகு கார்த்திகேயனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விடுதலைப்புலிகளை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் மெட்ராஸ் கபே திரைப்படத்தை வெளியிடக்கூடாது என்று தமிழக கட்சிகளை சேர்ந்த சீமான், வைகோ உள்ளிட்டோர் தடை கோரியுள்ளனர். இந்நிலையில் நேற்று அப்படத்தின் கதாநாயகனும் தயாரிப்பாளருமான ஜோன் ஆபிரகாம் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்தார். அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:-
சென்சார் போர்ட் அனுமதியளித்த பிறகு இவர்கள் ஏன் எதிர்க்கிறார்கள். யூகங்களின் அடிப்படையில் நிறைய பேர் இத்திரைப்படத்தை எதிர்க்கிறார்கள். மக்கள் இந்த திரைப்படத்தை பார்க்கட்டும். பிறகு முடிவு செய்வோம்.
கதை எப்படி இருக்கிறதோ அதை அப்படியேதான் சொல்ல வேண்டும். எனது படம் பலிகடா ஆக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறது. நான் மாநில அரசிடமிருந்தும் ரசிகர்களிடமிருந்தும் ஆதரவை பெற்றுள்ளேன்.
இத்திரைப்படம் எந்த ஒரு அரசுக்கும் எதிராகவோ, ஆதரவாகவோ இருக்கவில்லை. இப்படம் மனித உயிர்களின் இழப்பை வலியுறுத்துகிறது. எனவே, இத்திரைப்படத்திலிருந்து எந்த ஒரு காட்சியையும் நான் நீக்கப்போவதில்லை.
இத்திரைப்படம் குழப்பத்தை ஏற்படுத்த உருவாக்கப்படவில்லை. ஒரு நல்ல படம் மக்கள் மத்தியில் நிச்சயம் வரவேற்பை பெறும். என்று அவர் பேட்டியளித்துள்ளார்.