மீண்டும் அணியில் இடம் பிடிக்க போராடும் தமிழக வீரர் பத்ரிநாத்!!

bathrinath

உள்ளூர் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மீண்டும் தேசிய அணியில் இடம் பிடிப்பேன் என்று தமிழக வீரர் பத்ரிநாத் தெரிவித்தார்.
தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரரான பத்ரிநாத் கடந்த 2008ல் இலங்கைக்கெதிரான ஒருநாள் தொடரில் அறிமுகமானார்.

இவர், 2010ல் தென் ஆப்ரிக்காவுக்கெதிரான நாக்பூரில் நடந்த டெஸ்ட் போட்டியில் முதன்முதலில் களமிறங்கினார். 32 வயதான இவர் இதுவரை, 2 டெஸ்ட் (63 ஓட்டங்கள்), 7 ஒருநாள் (79 ஓட்டங்கள்), ஒரே ஒரு சர்வதேச T20 (43 ஓட்டங்கள்) போட்டிகளில் விளையாடி உள்ளார்.

தவிர இவர் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் டோனி தலைமையிலான சென்னை அணியில் இடம் பெற்றுள்ளார். கடைசியாக 2011ல் நடந்த ஒருநாள் போட்டியில் விளையாடிய இவர், தேசிய அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வருகிறார். இருப்பினும் இவர் ரஞ்சி கிண்ண உள்ளிட்ட உள்ளூர் தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறார்.

இது குறித்து பத்ரிநாத் கூறுகையில், மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிக்க விரும்புகிறேன். இதற்காக தெரிவுக்குழுவினரிடம் கேட்கப் போவதில்லை. மாறாக, அடுத்து வரவுள்ள உள்ளூர் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தெரிவுக்குழுவினரை என் மீது திசை திருப்ப செய்வேன்.

மூத்த வீரர் லட்சுமணின் ஓய்வுக்கு பின்னர், நியூசிலாந்துக்கெதிரான தொடருக்கு தெரிவு செய்யப்பட்டேன். ஆனால் ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.

அடுத்து நடந்த தொடரில் எனக்கு இடம் கிடைக்கவில்லை. அதன்பின் ஒரு முறை கூட இந்திய அணியில் இடம் பெறவில்லை. இதற்காக யார் மீது குறை கூற விரும்பவில்லை.

T20 போட்டியில் மட்டும் விளையாடுவது எனது இலக்கு அல்ல. டெஸ்ட், ஒருநாள் என்று அனைத்து விதமான போட்டிகளிலும் விளையாட விரும்புகிறேன். ஒவ்வொரு போட்டிக்கேற்ப ஆட்டத்தை மாற்றிக் கொள்ளும் திறமை என்னிடம் உள்ளது.

அணியின் வெற்றியில் எனது பங்களிப்பு எவ்வளவு என்பதை மட்டுமே பார்ப்பேன். நான் ஒன்றும் சுரேஷ் ரெய்னாவோ, டோனியோ கிடையாது. இதுவரை குறைந்த எண்ணிக்கையில் சர்வதேச போட்டிகளில் பங்கேற்றுள்ளேன்.

ஆனால் நிறைய முதல் தர போட்டிகளில் விளையாடி உள்ளேன். இந்த அனுபவம் அனைத்து விதமான போட்டியிலும் சாதிக்க உதவும் என்றும் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் சென்னை அணியை இக்கட்டான நிலையில் வெற்றி பெற செய்துள்ளேன் எனவும் கூறினார்.

இப்படியும் ஒரு வினோத திருட்டா : பெண்களுக்கு எச்சரிக்கை!!

HAIRCUT-PONYTAIL

வெனிசுலா நாட்டில் கூட்ட நெரிசலிலை பயன்படுத்தி நூதனமான முறையில் பெண்களின் கூந்தலை திருடும் பழக்கம் அதிகரித்து வருகிறது.

வெனிசுலாவின் மாராகைபோ நகரில் நூதனமாக முறையில் திருட்டு கும்பலொன்று நடமாடி வருகிறது. அதாவது கூட்டநெரிசலை பயன்படுத்தி பெண்களின் தலைமுடியை திருடுவது தான் அவர்களது பழக்கம்.

அதிலும் மிக நீளமான கூந்தல் உள்ள பெண்கள் என்றால், துப்பாக்கி முனையில் மிரட்டி திருடுகின்றனராம்.

இதற்கு காரணம் அழகு சாதன நிலையத்திற்கு சென்று செயற்கை சிகை அலங்காரம் செய்யும் பழக்கம் பெண்களிடையே அதிகரித்தது தான் என்று கூறப்படுகிறது.

எனவே இந்த விசித்திர திருட்டை தடுக்கவும், வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கவும் நடவடிக்கை எடுப்பதாக நகர மேயர் ரோகாலிஸ் வாக்குறுதி அளித்துள்ளாராம்.

கொழும்பு – மடு ரயில் சேவைகள் இன்று ஆரம்பம்!!

Madu

மன்னார் மடு மாத தேவாலய வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு, கத்தோலிக்க பக்தர்கள் அங்கு செல்ல வசதியாக கொழும்பு – மடு இடையிலான ரயில் சேவைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கடந்த போர் காலத்தில் சேதமடைந்த மதவாச்சி – மடு இடையிலான ரயில் பாதை இந்தியாவின் உதவியுடன் மீண்டும் புனரமைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் இந்த ரயில் பாதை புனரமைக்கப்பட்டு முடிக்கப்பட்டது. மதவாச்சியை ரயில் நிலையத்தை அடுத்து, நெல்லிக்குளம், செட்டிக்குளம், மடு ஆகிய ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மடு மாத தேவாலயத்தின் வருடாந்த உற்சவத்தில் கலந்துகொள்ளும் கத்தோலிக்க சமூகத்தினருக்கு இந்த ரயில் பாதை பேருதவியாக இருக்கும் எனவும் அவர் கூறினார்.

அதேவேளை இலங்கை ரயில் திணைக்களம் கொழும்பு – மதவாச்சி இடையில் 8 மேலதிக ரயில்களையும் சேவையில் ஈடுபடுத்தியுள்ளது. இன்று முதல் எதிர்வரும் 16ம் திகதி வரை இந்த ரயில் சேவைகள் தினமும் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மொரட்டுவ, அலுத்கம, கொழும்பு கோட்டை ஆகிய ரயில் பாதைகளில் இருந்து 12ம், 13ம், 14ம் திகதி வரை மடுவுக்கான ரயில் சேவைகள் நடத்தப்பட உள்ளன. இதனிடையே இலங்கை போக்குவரத்துச் சபையும் மடுவுக்கான விசேட பஸ் சேவைகளை ஆரம்பித்துள்ளது.

யாழ்.பல்கலைக்கழக வவுனியா வளாக பிரயோக பீட மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!!(படங்கள்)

யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாக பிரயோக பீடத்தில் கல்வி கற்கும் மாணவர்களை சிலரை வணிக பீடத்தை சேர்ந்த மாணவர்கள் தாக்கியதை கண்டித்தும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியும் இவ் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .

இது பற்றி தெரியவருவதாவது இரு பீடத்தை சேர்ந்த மாணவர்களுக்கிடையே அண்மைக்காலமாக கருத்து முரண்பாடுகள் காணப்பட்டிருந்தன இதன் விளைவாக வவுனியா குட்செட் வீதியில் வைத்து வணிக பீட மாணவர்கள் சிலரால் பிரயோக பீட மாணவர்கள் தாக்கப்பட்டனர்.

இதனால் நான்கு மாணவர்கள் காயங்களுக்குள்ளானர். இதில் ஒரு மாணவன் பலத்த தாக்குதலுக்கு உள்ளானதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மாணவர் ஒருவர் தெரிவித்தார்.

இவ்வாறு காட்டு மிராண்டித்தனமான தாக்குதல் மேற்கொண்டவர்கள் மீது பல்கலைக்கழக நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இவ் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

vavuniaya9 vavuniya1 vavuniya2  vavuniya3 vavuniya4 vavuniya5 vavuniya6 vavuniya7 vavuniya8

 

தலைவா படத்தை ரிலீஸ் செய்தால் தலை இருக்காது : மிரட்டும் தமிழ் இளைஞர் மாணவர் படை!!

Thalaivaa Movie Exclusive Posters

நடிகர் விஜயின் தலைவா திரைப்படத்தை திரையிட்டால் தலையை கொய்துவிடுவோம் என்று தமிழ் இளைஞர் மாணவர் படை என்ற அமைப்பு திரையரங்குகளுக்கு மிரட்டல் விடுத்துள்ளது.

தலைவா படத்தில் அரசுக்கு எதிரான வசனங்கள் இருப்பதாகவும் விஜயின் தந்தை எஸ்.ஏ.சியின் சில பில்டப் பேச்சுகளும்தான் படம் வெளியாகாமல் போனதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

அதே நேரத்தில் தமிழக இளைஞர் மாணவர் படை என்ற பெயரில் வேறு ஒரு காரணத்தை முன்வைத்து தலைவா படத்தை ரிலீஸ் செய்தால் தலை இருக்காது என்று மிரட்டியிருப்பதாக சொல்லப்படுகிறது.

அந்த அமைப்பு அனுப்பிய மிரட்டல் கடிதத்தில் தலைவா திரைப்படத்தை எஸ்.ஆர்.ஆம். கல்வி நிறுவனங்களின் தலைவர் புதிய தலைமுறை டிவி பச்சமுத்துவின் வேந்தர் மூவிஸ் வெளியிடுகிறது.

மாணவர்களிடம் கொள்ளையடித்த பணத்தில் அவர் வாங்கி வெளியிடுவதால் அவரை எதிர்க்கும் வகையில் இந்த படத்தை ரிலீஸ் செய்யக் கூடாது. அப்படி ரிலீஸ் செய்தால் தலை கொய்யப்படும் என்று எச்சரிக்கப்பட்டிருந்ததாம்.

நள்ளிரவில் பூமிக்கு வந்த தேவதை : சிசிடிவி கமராவில் பதிவான உருவத்தால் பரபரப்பு!!(வீடியோ)

இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் சுப்பர் மார்க்கெட் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கமராவில், இறக்கையுடன் கூடிய தேவதை போன்ற உருவம் நள்ளிரவில் பதிவானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் 2011ம் ஆண்டு செப்டம்பர் 11ம் திகதி இரவு நடந்ததாக கூறப்படுகிறது. அந்தக் கமராவில் பதிவானது உண்மையிலேயே தேவதையா அல்லது கிராபிக்ஸ் வேலையா என்று ஆய்வு செய்து வருகிறார்கள்.

வெள்ளை நிற உடையில், மிகவும் பிரகாசமான இறக்கையுடன் கூடிய உருவம் மேலிருந்து சடாரென கீழே வந்து சாலையில் இறங்கி பின்னர் அதே வேகத்தில் பறந்து போய் விடுவதாக அந்தக் காட்சியில் பதிவாகியுள்ளது.

இது தேவதைதான் என்று பலரும் கூறுகின்றனர். ஆனால் கிராபிக்ஸ் செய்து வீடியோவை வெளியிட்டுள்ளனர் என்று நம்பிக்கை இல்லாதவர்கள் தெரிவிக்கிறார்கள்.

அந்த தேவதை தரையில் இறங்கி பின்னர் மின்னல் வேகத்தில் மேலே எழும்பி பறந்து போவதைப் பார்த்து சாலையில் சென்ற சிலர் வேகமாக ஓடி வருவது வீடியோவில் பதிவாகியுள்ளது.

ஒரே ஒரு விநாடிதான் அந்த தேவதை காட்சி தந்தது. ஆனால் அந்த ஒரு விநாடியிலும் கூட தேவதை முழுமையாக காட்சி கொடுத்துள்ளது. இந்த வீடியோ 2011ல் பதிவானதாக இருந்தாலும் தற்போதுதான் இது யூடியூப் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் வேகமாகப் பரவ ஆரம்பித்துள்ளது.

இனி 1.5 கோடி கொடுத்தால் மட்டுமே ஸ்ருதி நடிப்பார்!!

sruthi

ஸ்ருதி ஹாஸன் தனது சம்பளத்தை 1 கோடியில் இருந்து ஒன்றரை கோடி ரூபாயாக உயர்த்தியுள்ளாராம். ஸ்ருதி ஹாஸன் நடித்த கப்பார் சிங் தெலுங்கு படம் ஹிட்டானது.

இதையடுத்து அவர் நடித்த பலுபு படத்திற்கு 1 கோடி சம்பளம் வாங்கினார். ஆந்திராவில் ஸ்ருதிக்கு மவுசு உள்ளது என்பதால் தயாரிப்பாளர்களும் அவர் கேட்கும் சம்பளத்தை தருகின்றனர்.

இந்நிலையில் ஸ்ருதி நடித்த டி டே மற்றும் ராமையா வஸ்தாவய்யா ஆகிய 2 இந்தி படங்கள் கடந்த மாதம் அதுவும் ஒரே திகதியில் வெளியாகின. ஸ்ருதியின் முந்தைய இந்திய படங்கள் ஊத்திக் கொண்டதால் அவர் இந்த படங்களை பெரிதும் எதிர்பார்த்தார்.

அவரது எதிர்பார்ப்பு வீண் போகவில்லை. இரண்டு படங்களும் ஓடிவிட்டது, மேலும் ஸ்ருதியின் நடிப்பும் பாராட்டப்பட்டுள்ளது. இதனால் ஸ்ருதி தனது சம்பளத்தை 1.5 கோடியாக உயர்த்தியுள்ளாராம்.

சிம்புவை கல்யாணம் பண்ணாதீங்க : ஹன்சிகாவின் பேஸ்புக்கில் கதறும் ரசிகர்கள்!!

simbu

நடிகர் சிம்பும் தாமும் கட்டியணைத்தபடி இருக்கும் புகைப்படத்தை ஹன்சிகா தமது பேஸ்புக் பக்கத்தில் போட்டதும் போட்டார்…அப்படி ஒரு கொந்தளிப்பை எதிர்ப்பைக் காட்டியிருக்கின்றனர் ஹன்சிகாவின் ரசிகர்கள்.

ஹன்சிகாவின் பேஸ்புக் பக்கத்தில் “என்ன கொடுமை சரவணா இது” என்று ஒரு ரசிகர் பதிவிட அதற்கு ஹன்சிகாவும் “ஆமா கொடுமைதான் என்ன செய்யுறது” என பதிலிட்டிருக்கிறார்.

அதேபோல் ஹன்சிகா சிம்புவை திருமணம் செய்ய வேண்டாம் என்பதை வலியுறுத்தியே அதிக கருத்துக்கள்போடப்பட்டிருக்கின்றன.

‘Hansika. please dont marry simbu.’, Hansika ne avana marrg pannikatha, Onnu parthu tiruntanum, Illana.. Patthu tiruntanum… hansika vendam plz vanthudu, hansika vaazhkaiyum pocha?.

இவையெல்லாம் ஹன்சிகாவின் பேஸ்புக் பக்கத்தில் இடம்பெற்றுள்ளவைதான். தனது காதலன் சிம்புவுக்கு எதிரான கருத்துக்களை ஹன்சிகாவும் அனுமதித்து அப்படியே விட்டு வைத்திருக்கிறார்.

அடுத்த ஆண்டு ஐபிஎல் தலைவர் பதவி வகிக்க மாட்டேன் : ராஜீவ் சுக்லா!!

rajivஅடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கு தலைவராக இருக்க மாட்டேன் என ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த ஐபிஎல் போட்டிகளில் சூதாட்ட பிரச்னை சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து ஐபிஎல் தலைவர் பதவியை சுக்லா ராஜினாமா செய்தார். இந்நிலையில் அவருடைய ராஜிநாமா கடிதம் இதுவரை ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில் அடுத்த ஆண்டு நிச்சயம் தலைவர் பதவி வகிக்க மாட்டேன் என சுக்லா தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில் எனது ராஜிநாமா கடிதம் இன்னும் ஏற்கப்படாததால் தான் சம்பியன்ஸ் கிண்ண, T20 கிரிக்கெட் போட்டி தொடர்பான கூட்டங்களுக்கு தலைமையேற்று வருகிறேன்.

ஆனால் அடுத்த ஆண்டு ஐபிஎல் தலைவராக இருக்கமாட்டேன் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.அந்த பதவிக்கு மீண்டும் வரும் எண்ணமில்லை என்று தெரிவித்துள்ளார்.

திருநீற்றின் மகிமை!!

thiruneeru

அறுகம்புல்லை உண்ணுகின்ற பசுமாட்டின் சாணத்தை எடுத்து உருண்டையாக்கி வெயிலில் காயவைக்க வேண்டும். பின் இதனை உமியினால் மூடி புடம் போட்டு எடுக்க வேண்டும். இப்போது இந்த உருண்டைகள் வெந்து நீறாகி இருக்கும். இதுவே உண்மையான திருநீறாகும்.

இது நல்ல அதிர்வுகளை மட்டும் உள்வாங்கும் திறன் கொண்டது. எம்மைச் சுற்றி அதிர்வுகள் இருக்கின்றன என்பது யாவரும் அறிந்ததே.
எம்மை அறியாமலே அதிர்வுகளின் மத்தியில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எமது உடலானது இவ் அதிர்வுகளை ஏற்றுக் கொள்ளுகின்றது. திருநீறானது நல்ல அதிர்வுகளை ஏற்றுக் கொள்ளும் தன்மை வாய்ந்தது. அந்தவகையில் உடலின் முக்கிய பாகங்களில் திருநீறு இட்டுக் கொள்ளும் வழக்கம் இந்து மதத்தவர்களிடம் காணப்படுகின்றது.

இதைவிட மனித உடலிலே நெற்றி முக்கிய பாகமாகக் கருதப்படுகின்றது. அந்த நெற்றியிலேயே வெப்பம் அதிகமாகவும் வெளியிடப்படுகின்றது, உள் இழுக்வும்படுகின்றது. சூரியக்கதிர்களின் சக்தியை இழுத்து சரியான முறையில் உள்ளனுப்பும் அற்புதமான தொழிலை திருநீறு செய்யும் அதனாலேயே திருநீறை நெற்றியில் இடுவார்கள்.

தனது உடலிலே சாம்பல் சத்துக் குறைந்துவிட்டால் இலங்கை போன்ற வெப்பமான நாடுகளில் வளரும் கோழி இனங்கள் சாம்பலிலே விழுந்து குளிப்பதைக் கண்டிருப்பீர்கள். புறவை இனமே தன் தேவை தெரிந்து சாம்பலை நாடுகின்றதல்லவா. அதே போல்த்தான் மனிதனும் தன் மூட்டுவலி தோற்றுவிக்கும் இடங்களில் நீர்த்தன்மையை உறிஞ்சவல்ல திருநீற்றை அணிகின்றான்.

பசுமாட்டுச்சாணத்தை எரித்து திருநீறு செய்கின்றார்கள். மாடு அறுகம்புல் போன்ற பலவகையான புல்வகைகளை உண்டு தனது உடலைத் தேற்றிச் சாணம் போடும். அச்சாணம் தீயிலிடப்படும் போது ஏற்படும் இரசாயண மாற்றங்கள் உடலுக்கு மருத்துவத்தன்மையைக் கொடுக்கின்றது.

இதைவிட இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள பகுதியில் மிக நுண்ணிய நரம்பு அதிர்வலைகளை உள்ளன. அதனால் அந்த இடத்தைப் பயன்படுத்தி மனவசியம் இலகுவாகச் செய்யமுடியும். அதனாலேயே மனவசியத்தைத் தடுக்க அந்த இடத்தில் திருநீறு, சந்தனம் போன்றவை இடப்படுகின்றன.

சந்தனம் நெற்றியில் வெளியிடப்படும் வெப்பத்தை நீக்குகின்றது. அதிகமான வெப்பம் கூடிய நாடுகளில் ஞாபகங்கள் முதலில் பதியப்படல், திட்டமிடல் போன்றவற்றிற்குத் தொழிற்படுகின்ற நெற்றிப்பகுதியிலுள்ள frontal cortex என்னும் இடத்தில் அணியப்படும் சந்தனமானது வெப்பம் மிகுதியால் ஏற்படும் மூளைச்சோர்வை நீக்குகின்றது.

சந்தனம் இரு புருவங்களுக்கும் இடையில் இடுகின்ற போது, முளையின் பின்பகுதியில் ஞாபகங்கள் பதிவுசெய்து வைத்திருக்கும் Hippocampus என்னும் இடத்திற்கு ஞாபகங்களை சிறப்பான முறையில் அனுப்புவதற்கு இந்த frontal cortex சிறப்பான முறையில் தொழிற்படும். உடலுக்குக் குளிர்ச்சியூட்டும் சந்தனத்தை நெற்றியிலும் உடலின் பல பாகங்களிலும் இந்து சமயத்தவர் அணிந்திருக்கும் காட்சி நகைச்சுவையாகப் பார்வைக்குத் தோன்றினாலும் அற்புதமான காரணமும் அதில் உண்டு பார்த்தீர்களா!

நெற்றியின் இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள நெற்றிப் பொட்டிலே பட்டும்படாமலும் சுண்டுவிரலை நேராகப்பிடித்தால் மனதில் ஒருவகை உணர்வு தோன்றும். அந்த உணர்வை அப்படியே வைத்துத் தியானம் செய்தால் மனஒருமைப்பாடு தோன்றும், சிந்தனை தெளிவுபெறும், எதையும் தெளிவாகப் புரிந்து கொள்ளும் நிலை தோன்றும். அந்த நெற்றிப் பொட்டு குளிர்ச்சியுடன் இருக்க வேண்டாமா? இதற்குச் சந்தனம் சரியான மருந்து.

இந்த உண்மைகளைச் சாதாரணமாகக் கூறி விளங்கவைக்க முடியாத மக்களுக்கு நிலையில்லா வாழ்வின் நிலையை உணர்த்தி திருநீற்றை உடலில் அணிய வைத்திருக்கின்றார்கள். மதத்தைக் காட்டி விஞ்ஞான விளக்கத்தை மறைத்துக் கூறிய விளக்கங்களினால் மதம் வென்றது விளக்கம் மறைந்தது.

விபூதி இட்டுக் கொள்ளும் இடங்களும், பலன்களும்..

1. புருவ மத்தியில் (ஆக்ஞா சக்கரம்) வாழ்வின் ஞானத்தை ஈர்த்துக் கொள்ளலாம்.

2. தொண்டைக்குழி (விசுத்தி சக்கரம்) நமது சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம்.

3. நெஞ்சுக்கூட்டின் மையப்பகுதி தெய்வீக அன்பைப் பெறலாம். மேலும், பூதியை எடுக்கும் போது, மோதிரவிரலால் எடுப்பது மிகவும் சிறந்தது. ஏனென்றால், நம் உடலிலேயே மிகவும் பவித்ரமான பாகம் என்று அதைச் சொல்லலாம். நம் வாழ்வையே கட்டுப்படுத்தும் சூட்சுமம் அங்கு உள்ளது.

உங்கள் புகைப்படங்களை பாதுகாக்கும் இணையத்தளம்!!

picture

தற்போதைய சூழலில் கைபேசி மற்றும் டிஜிட்டல் கமெராக்களின் பயன்பாடு அதிகமாக இருப்பதால் புகைப்படங்கள் எடுப்பதும் அதிகமாக வருகிறது. மேலும் இதனை கணனியில் பதிந்து வைப்பதால் வன்தட்டுக்கள் (Hard disk) அதிகமான இடத்தை எடுத்துக் கொள்கிறது.

இந்நிலையில் திடீரென Hard Disk இயங்காமல் போனால் இந்த புகைப்படங்களை மீளப்பெறுவது கடினம். இதற்கு மாற்றுத் தீர்வாக புகைப்படங்களை Cloud Computing முறையில் சேமிக்க பல்வேறு இணையத்தளங்கள் செயல்படுகின்றன.

குறித்த இணையத்தளத்தில் நுழைந்தவுடன் உங்களுக்கான கணக்கு ஒன்றை தொடங்கவும். உடனே லொக்கின் செய்தவுடன் Start Backing Up Your Photographs என்ற பட்டனை நீங்கள் கிளிக் செய்தவுடன், Setup File தரவிறக்கம் செய்யப்படும்.

இதனை இயக்கி படங்களை ஒருங்கிணைக்கும் Picturelife Sync அப்ளிகேஷனை உங்கள் கணனியில் நிறுவிட வேண்டும். இந்த தளத்தின் மூலம் இலவசமாக 5 GB வரையிலான புகைப்படங்களை பதிவேற்றம் செய்யலாம்.

அனைத்தும் முடிந்தவுடன் உங்களது புகைப்படங்களை அல்பங்களாக பிரிக்கலாம்.எந்நிலையில் நீங்களும் பதிவேற்றம் செய்த புகைப்படங்களை மீண்டும் எடுத்து பார்க்க முடியும்.

இணையத்தளத்திற்கு செல்ல..

உணவுக்கு பின் குளிர்பானம் அருந்துவது சரியா?

cool-drinks1

உணவு உட்கொண்ட உடன் குளிரிந்த தண்ணீரோ, குளிர்பானமோ குடிப்பவர்களுக்கு இதயபாதிப்பு ஏற்படும் ஆபத்து அதிகம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதற்கு காரணம் உண்ட உணவில் உள்ள எண்ணெய். கொழுப்புகளை ரத்த நாளங்களில் இந்த கொழுப்பு படியச் செய்வதே இதற்கு காரணம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

ஆசியா கண்டத்தைச் சேர்ந்தவர்களான ஜப்பானிய பெண்களின் சராசரி அதிகபட்ட ஆயுட்காலம் 92. ஆண் ஜப்பானியர்கள் 84 வயது வரை உயிர் வாழ்கின்றனர். இதற்குக் காரணம் அவர்களின் உணவுப் பழக்கம். பச்சைக் காய்கறிகளையும், பழங்களையும் உணவில் சேர்த்துக்கொள்கின்றனர். உணவு உண்ட உடன் வெதுவெதுப்பான வெந்நீர் உட்கொள்வதும், கிரீன் டீ அருந்துவதும் அவர்களின் ஆரோக்கியத்திற்கு காரணமாக அமைந்துள்ளது.

நம் நாட்டைச் சேர்ந்தவர்கள் இன்றைக்கு பெரும்பாலும் குளிர்சாதனப் பெட்டியில் வைத்த குளிர்ந்த தண்ணீரை அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். கிராமமோ, நகரமோ இன்றைக்கு குளிர்ந்த நீர்தான். கோடை காலம் தொடங்கிவிட்டது இனி காலை உணவில் தொடங்கி இரவு உணவு வரைக்கும் நம் நாட்டவர்கள் உபயோகிப்பது குளிர்ந்த தண்ணீர்தான் தான். இவ்வாறு குளிர்ந்த நீர் அருந்துவது ஆபத்தானது என்கின்றனர் மருத்துவர்கள். இது இதயத்தை பாதிக்கிறது. புற்றுநோய்க்கும் வழி வகுக்கிறது என்கின்றனர் மருத்துவர்கள்.

உணவு உண்டவுடன் குளிர்ச்சியான தண்ணீரை குடித்தால், அது நாம் சாப்பிட்ட உணவில் உள்ள எண்ணெய்த் துகள்களை கெட்டியாக்கி விடுகிறது. இதனால், சாப்பிட்ட உணவு ஜீரணம் ஆவதில் சிக்கல் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி உடலில் இருக்கும் கொழுப்பின் அளவு அதிகரிக்கவும் அது காரணமாகி விடுகிறது. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் இதயம், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பல பிரச்சினைகள் வரலாம் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

மாரடைப்பு நோய் உள்ளிட்ட இதயநோய்க்கு ஆளானவர்கள் சாப்பிடும்போதுகுளிர்ந்த தண்ணீறை தொடவேக் கூடாது என்றும் அவர்கள் அறிவுறுத்துகிறார்கள். குளிர்ந்த தண்ணீர் குடிப்பதனால் வேறு பல தீமைகளும் ஏற்படுத் என்றும் அவர்கள் பட்டியலிட்டுள்ளனர்.

நெஞ்செரிச்சல், உயர் ரத்த அழுத்தம், சரும பாதிப்பு, பக்கவாதம், வயிற்றுவலி, மைக்ரேன் தலைவலி, மூளை உறைவு நோய், பற்கள் பாதிப்பு போன்றவையும் ஏற்படுகின்றன. எனவே குளிர்ந்த தண்ணீர் அருந்துவதை தவிர்த்துவிடுங்கள் அதற்கு பதிலாக வெதுவெதுப்பான நீர் அருந்துங்கள் என்று அறிவுறுத்தியுள்ளனர் மருத்துவர்கள்.

அய்யய்யோ நான் அரசுக்கு எதிராக பேசவே இல்லை : அலறும் தனுஷ்!!

Danush

ஒரு படத்திற்கு (தலைவா) தடை விதிப்பதில் காட்டும் முயற்சியை நாட்டின் வளர்ச்சிக்கு காட்டினால் நாடு நன்றாக இருக்கும் என்று இரு தினங்களுக்கு முன் கருத்து தெரிவித்திருந்த தனுஷ் இப்போது நான் அரசுக்கு எதிராக பேசவே இல்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.

தலைவா படம் தமிழகத்தில் வெளிவராத சூழல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நடிகர்கள் சிலரும் கருத்து தெரிவித்திருந்தனர். சிம்பு, பிரகாஷ்ராஜ் போன்றவர்கள் தங்கள் எதிர்ப்புகளைத் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் தன் பங்குக்கு கருத்துத் தெரிவித்த தனுஷ் ” தலைவா படத்திற்கு நிகழ்ந்த பிரச்சனை நியாயமற்றது. ஒரு படத்திற்கு தடை விதிப்பதில் காட்டும் முயற்சியை நாட்டின் வளர்ச்சிக்கு காட்டினால் நாடு நன்றாக இருக்கும்,” என்று டுவிட் செய்திருந்தார்.

அரசுக்கு எதிரான விமர்சனமாக இது பார்க்கப்பட்டதால் இந்த குறித்து பலரும் பலவிதமாக எழுத ஆரம்பித்தனர். அலறிய தனுஷ் இவற்றைக் கவனித்த தனுஷ் உடனடியாக தனது டுவிட்டர் பக்கத்தில் மறுப்பு தெரிவித்ததோடு அதை எஸ்எம்எஸ் மூலமாகவும் அறிக்கை வடிவிலும் மீடியாவுக்கு அனுப்பியுள்ளார்.

நான் அப்படி சொல்லவே இல்லை அதில் “ஊடக நண்பர்களுக்கு வணக்கம். சுவிட்சர்லாந்திலிருந்து தனுஷ். எனது ட்விட்டரில் தலைவா படம் பற்றிக் கூறியிருந்த கருத்தின் ஒரு பகுதி மட்டும் ஒரு சில நாளிதழ்களில் பிரசுரிக்கப்பட்டிருந்தது.

ஒரு பகுதி மட்டுமே பிரசுரிக்கப்பட்டிருந்ததால் அது வேறு அர்த்தத்தைத் தருகிறது. தமிழக அரசுக்கு எதிரான கருத்துக்களை நான் தெரிவிக்கவில்லை. நான் அரசுக்கு எதிரானவன் அல்ல,” என்று குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அகதிகள் முகாமில் தீவிர கண்காணிப்பு!!

Refugee_India

அவுஸ்திரேலியா செல்லும் ஆசையில் உள்ள அகதிகளை குறிவைத்து, தமிழக அகதிகள் முகாம்களில் முகவர்களின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இவற்றை கியூ பிரிவு பொலிஸார் தீவிரமாக கண்காணித்து, புதியவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர். இருப்பினும், உள்ளூர் முகவர்களை பிடிப்பதில், தொடர்ந்து தொய்வு ஏற்பட்டு உள்ளது.

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளில் பெரும்பாலானோர், அவுஸ்திரேலியா செல்ல விருப்பமாக உள்ளனர். அதற்காக பல லட்சம் ரூபாய் வரை கொடுக்க தயாராக உள்ளனர். இதை அறிந்த முகவர்கள் முகாம்களில் உள்ள வசதியான அகதிகளை கண்டறிந்து, அவர்களிடம் ஆசை வார்த்தை கூறி பணம் பெறுகின்றனர்.

பின் விசைப்படகில் அவர்களை அழைத்துச் சென்று ஏதாவது ஒரு கடற்கரை பகுதியில் இறக்கிவிட்டு அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துவிட்டு தப்பி விடுகின்றனர். சில முகவர்கள் விசைப் படகுகளில் 10 முதல் 15 நாட்கள் வரை ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர்.

கடந்த மாதம் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் அவுஸ்திரேலியா செல்லும் படகிற்கு வழங்குவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த குடிநீர், டீசல், உணவு தயாரிக்க பயன்படும் பொருட்கள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அவற்றை பாதுகாத்த இருவர் மட்டுமே பிடிபட்டனர்.

சில நாட்களுக்கு முன் மண்டபம் முகாமைச் சேர்ந்த சிலரை முகவர்கள் ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று வேளாங்கண்ணி விடுதியில் தங்க வைத்திருந்தனர். அவர்களை அங்குள்ள கியூ பிரிவு பொலிஸாரர் பிடித்தனர்.

இதனால் அனைத்து முகாம்களிலும் முகவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியை, கியூ பிரிவு பொலிஸார் முடுக்கிவிட்டு உள்ளனர். ஆனாலும் முகவர்களுக்கு பொருட்கள் வினியோகம் செய்யும் உள்ளூர் முகவர்களை பிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில் வேளாங்கண்ணியில் பிடிபட்ட முகவர்களிடம் நடத்திய விசாரணையை தொடர்ந்து தற்போது, முகாம்களில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது என்றார்.

கவனிப்பாரற்ற நிலையிலுள்ள வவுனியா கோயில்குளம் சிறுவர் பூங்கா..!

வவுனியா கோயில்குளம் சிவன் ஆலயத்திற்கு முன்னாள் உள்ள சிறுவர் பூங்கா கைவிடப்பட்டநிலையில் உள்ளது. இதனை பனரமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விட்டுள்ளனர்.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வவுனியா கோவில்குளம் சிவன் ஆலயத்திற்கு முன்னாள் உள்ள சிறுவர் பூங்கா புனரமைக்கப்படாது பற்றைகளாகவும் முட்புதர்களாகவும் காணப்படுகின்றன.

இப் பகுதியில் ஏராளமான சிறுவர்கள் வசிக்கின்ற போதும் அதனை பயன்படுத்த முடியாத நிலை காணப்படுவதாகவும் அதனை புனரமைத்து தருமாறும் கோயில்குளம், தெற்கிலுப்பைக்குளம், சமனங்குளம், எல்லப்பர்மருதங்குளம் உள்ளிட்ட கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வவுனியா நகரசபை எல்லைக்குள் காணப்படுகின்ற இச் சிறுவர் பூங்கா முன்னைய காலப்பகுதியில் வவுனியா நகரசபையை புளொட் நிர்வகித்த போது சிறப்பாக பராமரிக்கப்பட்டதாகவும் தற்போது வவுனியா நகரசபையால் கைவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இப் பூங்காவில் நிறுவப்பட்டுள்ள தமிழ் பெரியார் ஒருவரின் சிலையும் கவனிப்பாரற்று காணப்படுவதாகவும் தெரிவிக்கும் மக்கள் எமது கலாசாரமும் அடையாளங்களும் அழிக்கப்படுவதாக குரல் கொடுப்பவர்களுக்கும் பொறுப்பு வாய்ந்த நகரசபைக்கும் இது கண்ணில் படவில்லையா? எனவும் கேள்வியெழுப்பியுள்ளனர்.

vavuniya vavuniya2 vavuniya3 vavuniya4 vavuniya5

முன்னேஸ்வரம் சிவன் கோயில் வளாகத்திலிருந்து மனித எச்சம் மீட்பு..!

vavuniyaமுன்னேஸ்வரம் சிவன் கோவில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் இருந்த மனித எச்சம் ஒன்று தோண்டி எடுக்கப்பட்டு, மரபணு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த மனித எச்சம் ஏற்கனவே 3 வருடங்களுக்கு முன்னதாகவே ஆலயத்தின் திருத்தப் பணிகளுக்காக மண்ணை தோண்டும் போது கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

எனினும் பரிசோதனைகளுக்காக இந்த இடத்தை மீண்டும் தோண்ட வேண்டாம் என்று ஆலய நிர்வாகத்திடம் இலங்கை புதைப்பொருள் ஆய்வு திணைக்களம் கோரி இருந்தது.

ஆனால் அண்மையில் இடம்பெற்ற ஆலயத்தின் பூஜைகளை முன்னிட்டு, மீண்டும் அந்த இடத்தில் மண் தோண்டப்பட்டதைத் தொடர்ந்து, அதில் இருந்து எச்சம் மீட்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அந்த எச்சத்தை மரபணு பரிசோதனைக்கு உட்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சம் கடந்த 1605ம் ஆண்டில் போர்த்துக்கேயரால் கொல்லப்பட்டதாக கூறப்படும் பிக்கு ஒருவருடையதாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.