பவர்ஸ்டாரின் அடுத்த நாயகி ஸ்ருதி ஹாசன்??

sruthi hasan

பொலிவுட்டில் “லக்” என்ற படத்தின் மூலம் முதல் முறையாக வெள்ளித் திரையில் காலடி எடுத்து வைத்தார் ஸ்ருதி ஹாசன்.

ஆனால், “லக்” திரைப்படம் ஸ்ருதிக்கு லக்கைத் தேடித் தரவில்லை. இந்தநேரத்தில் தெலுங்குத் திரையுலகில் பவர்ஸ்டார் என அழைக்கப்படும் பவன் கல்யாணுடன் நடித்த, “கப்பர் சிங்” என்ற தெலுங்கு படம் ஆந்திராவின் மூலை முடுக்குகளிலெல்லாம் வசூலை அள்ளிக் குவித்ததால் தெலுங்கில் முன்னணி நடிகையாகி விட்டார் ஸ்ருதி.

தற்போது பலுபு, யெவடு, ராமய்யா வஸ்தாவய்யா, டி-டே போன்ற படங்களில் பரபரப்பாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், “கப்பர் சிங்” படத்தின் இரண்டாம் பாகத்தை படமாக்க திட்டமிட்டு உள்ளனர். இதிலும் பவன் கல்யாண் தான் கதாநாயகன். காஜல் அகர்வாலை கதாநாயகியாக்க பேச்சு நடத்தப்பட்டது. ஆனால் அவர்கேட்ட சம்பள தொகையால் தலை தெறிக்க ஓடி வந்து விட்டாராம், படத் தயாரிப்பாளர்.

இதனால், மீண்டும் ஸ்ருதி ஹாசனை ஓப்பந்தம் செய்துள்ளனர்.

 

சிறந்த இயக்குனருக்கான ஒஸ்கார் விருது பெற்ற சுந்தர் சி.!

இயக்குனர் சுந்தர் சி.க்கு சிறந்த இயக்குனருக்கான ஒஸ்கார் விருது கிடைத்துள்ளது. சுந்தர் சி.க்கு நமக்குத் தெரியாமல் எப்பொழுது ஒஸ்கார் விருது கொடுத்தார்கள் என்று நினைக்கிறீர்களா?

அவரின் தீயா வேலை செய்யணும் குமாரு படம் ரிலீஸாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதால் மகிழ்ச்சியில் உள்ளார். இந்நிலையில் அவரது மகிழ்ச்சி அதிகரித்துள்ளதற்கு அவரது மகள் தான் காரணம்.

சுந்தரின் மகள் சிறந்த தந்தை மற்றும் இயக்குனருக்கான ஒஸ்கார் விருதை ஒரு பேப்பரில் வரைந்து அதை அவருக்கு அளித்து சந்தோஷப்படுத்தியுள்ளார்.

இது குறித்து குஷ்பு ட்விட்டரில் கூறியிருப்பதாவது சிறந்த தந்தை மற்றும் இயக்குனருக்கான ஒஸ்கார் விருதை சுந்தர் சி. அவரது மகளிடம் இருந்து பெற்றார். இதை விட அவருக்கு வேறு எதுவும்வேண்டியதில்லை என்று தெரிவித்துள்ளார்.

oscar

 

மென்மையான உதடுகளை பெற வழிகள்.

 

lips-care-in-winter

நம்முடைய எண்ணங்களை, உணர்வுகளை வெளிப்படுத்த கண்கள் எப்படி முக்கியமோ அப்படியேதான் உதடுகளும்.
ஒரு பெண்ணின் முழு அழகும் வெளிப்பட உதடுகளும் ஒரு காரணம். எனவே உதட்டில் வெடிப்பு, பிளவு ஏற்படாத வண்ணம் பாதுகாக்க வேண்டும்.

இளஞ்சூடான நீர், குளிர்ந்த நீர் இவற்றை மாறி மாறி 10 நிமிடங்களுக்கு உதடுகளில் ஒத்தடம் கொடுக்க வேண்டும். இப்படி கிழமைக்கு இரண்டு மூன்று முறை கொடுத்து வந்தால் உதடுகள் மென்மையாகவும், மிருதுவாகவும் மாறும்.

சிலருக்கு உதடுகளின் இரு ஓரங்களிலும் புண்கள் போல் வெள்ளையாக இருக்கும். இது விட்டமின் குறைவினால் ஏற்படக்கூடியது. விட்டமின் “பி” உள்ள உணவு பொருட்களை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால் இதை நிவர்த்தி செய்யலாம்.

உதடுகளில் காணப்படும் வெடிப்பிற்கு நெய் அல்லது வெண்ணெயை தொடர்ந்து பூசி வந்தால் நிவாரணம் கிடைக்கும்.

பத்து கிராம் ரோஜா இதழை 10 கிராம் தேயிலை உடன் சிறிது தண்ணீரில் கொதிக்க விட வேண்டும். ஆறியதும் உதடுகளுக்கு அந்த நீரை ஒத்தடம் கொடுத்தால் உதடுகளிலுள்ள கருப்பு மறையும்.

அதி வேகம் கொண்ட உலங்கு வானூர்தி தயாரிப்பு..

தற்போது காணப்படும் உலங்கு வானூர்திகளிலேயே அதி வேகம் கொண்ட புதிய உலங்கு வானூர்தி உருவாக்கப்பட்டுள்ளது.

Eurocopter X3 எனப்படும் இப்புதிய உலங்கு வானூர்தியானது Eurocopter EC155 எனும் பழைய உலங்கு வானுர்தியின் தொழில்நுட்பத்தை உள்ளடக்கியதாக வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் இது 263 நொட்ஸ் அல்லது மணிக்கு 300 மைல்கள் எனும் வேகத்தில் பயணிக்கக்கூடியதாகக் காணப்படுகின்றது.

தற்போது இது 19 இருக்கைகளைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் 2020ம் ஆண்டளவில் 30 தொடக்கம் 40 வரையான இருக்கைளை உடையதாக மெருகூட்டப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


eurocopter_X31 eurocopter_X3

பவர்ஸ்டார் வேடத்தில் நடிக்கிறார் டி.ஆர்!!!

T_Rajendar

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் ஏற்படுத்திய பரபரப்பு காரணமாக மளமளவென்று புதிய படங்களில் ஒப்பந்தமானார் பவர்ஸ்டார் என்கிற சீனிவாசன். இதில், கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தை சந்தானத்துடன் இணைந்து தயாரித்த டைரக்டர் இராம.நாராயணன் பவர்ஸ்டாரை நாயகனாக்கி ஆர்யா சூர்யா என்றொரு படத்தை இயக்கினார்.

படமும் வேகமாக வளர்ந்து வந்தது. ஆனால் பாதி வழியில் சென்று கொண்டிருந்தபோது மோசடி வழக்கில் பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதனால் இப்போது பவர்ஸ்டார் நடித்த வேடத்துக்கு டி.ஆரை ஒப்பந்தம் செய்து மீதி படத்தை படமாக்கி வருகிறார் இராமநாராயணன். சின்னத்திரை தொடர்களில் இனி அவர் வேடத்தில் இவர் நடிப்பார் என்பது போன்று, இப்படத்திலும் கார்டு போடப்படுகிறதாம். மேலும், இதில் பவர் ஆடவிருந்த ஒரு குத்துப்பாட்டு இப்போது டிஆருக்கு கிடைத்திருக்கிறது.

அவரை நடிக்க வைக்கலாம் என்று யோசித்த இராமநாராயணன். டி.ஆரே பாடலாசிரியர் பாடகர் என்பதால் அந்த பாட்டை நீங்களே எழுதி பாடிவிடுங்கள் என்று சொல்ல படு உற்சாகமாக பாட்டெழுதி பட்டைய‌‌ை‌ கிளப்பும் வகையில் பாடி அமர்க்களப்படுத்தியுள்ளாராம் தாடிக்காரர். ஆக அடுத்து, டி.ஆரின் குத்தாட்ட ரவுண்ட் ஸ்டார்ட் ஆகிறதாம்.

 

இந்தியாவில் தொடரும் சீரற்ற காலநிலை -131 பேர் பலி!

nature

இந்தியா முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக உத்தரகாண்ட், இமாசலப்பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட வடமாநிலங்களில் இதன் பாதிப்பு அதிகமாக உள்ளது.

ஆங்காங்கு ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம், நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு போன்றவற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 131 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், வெள்ளம் காரணமாக இமயமலைத் தொடரில் உள்ள கேதாரநாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி உள்ளிட்ட புண்ணிய தலங்களிலும், சமோலி, ருத்ரபிரயாக், உத்தரகாசியிலும் மொத்தம் 71,440 யாத்ரீகர்கள் சிக்கி உள்ளனர்.

அவர்களை மீட்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தவிர, 500-க்கும் மேற்பட்ட யாத்ரீகர்களைக் காணவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை மழை, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இமாசலப்பிரதேசம், உத்தரகாண்ட்டில் தேவையான நிவாரணப் பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அறிவுறுத்தி உள்ளார்.

 

சென்னையில் இருந்து கொழும்புக்கு புறப்பட்ட விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு – பயணிகள் பதற்றம்..

plane

சென்னை விமான நிலையத்திலிருந்து கொழும்புக்கு புறப்பட்ட விமானம் பறப்பதற்கு தயாராகி ஓடுபாதைக்கு வந்தபோது திடீரென விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்தார். அதனால் பயணிகள் தெய்வாதீனமாக தப்பினர்.

சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்புக்கு நேற்று மாலை 5 மணிக்கு 182 பயணிகளுடன் விமானம் ஒன்று புறப்பட்டது. இந்த விமானம் புறப்பட தயாராகி ஓடுபாதைக்கு வந்தபோது விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு ஏற்பட்டதை உடனே விமானி கண்டுபிடித்தார்.

இது குறித்து விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அவர் தொடர்பு கொண்டு விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டு உள்ளதாகவும், அதனால் விமானத்தை தொடர்ந்து இயக்க முடியாது என்றும் தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து விமானத்தை புறப்பட்ட இடத்திற்கே கொண்டு செல்ல உத்தரவிடப்பட்டது. பின்னர் பொறியாளர்கள் குழுவினர் விரைந்து வந்து விமானத்தில் ஏற்பட்ட கோளாறை சரி செய்தனர்.அதன் பின்னர் சுமார் 3 மணி நேரத்திற்கு பிறகு இரவு 8 மணி அளவில் விமானம் கொழும்பு புறப்பட்டு சென்றது.

 

வவுனியாவில் வயல் விழாவும் கண்காட்சியும்

vayal

வவுனியா மாவட்ட விவசாயத் திணைக்களத்தினுடைய விரிவாக்கல் பிரிவின் ஏற்பாட்டில் வயல் விழாவும் கண்காட்சியும் கனகராயன்குளத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

ஒருங்கிணைந்த பீடை முகாமைத்துவம், இயற்கை பசளைகளை பயன்படுத்தி பயிர்ச்செய்கை மேற்கொள்வதால் ஏற்படும் பீடை தாக்கக் குறைவு, பயிராக்கல் முறையினூடாக நோய்த்தாக்கத்திலிருந்து பாதுகாத்தல், தூவல் நீர்ப்பாசனத்தினூடாக நோய்த்தாக்கத்தை குறைத்தல் என்பவற்றை முன்வைத்து கண்காட்சி நடைபெற்றது.

பயிர்களை பயிரிடும் முறை, குறைந்த செலவில் அதிக இலாபம் பெறும் வகையில் தாவரங்களை நாட்டும்; முறை, வாழை இலையினால் வேலி அடைக்கும் முறை, கோழி வளர்ப்பு, பன்றி வளர்ப்பு ஆகியன தொடர்பில் இதன்போது விளக்கமளிக்கப்பட்டன.

கனகராயன்குளத்திலுள்ள கருமூல தாய் தாவர பழத்தோட்டத்தில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் வடமாகாண விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ்.சிவகுமார், வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சரஸ்வதி மோகநாதன், வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க.பரந்தாமன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மரணம் தொடும்போது..

எட்டு வயது காதலும் எட்டாத நேசமும்
பட்டு மாமியும் சிட்டு சிலுமிசமும்..

கொட்டும் அருவியும் கூவும் குயிலும்
கொடுத்த கடனும்கொடுக்காத முத்தங்களும்
கெடுத்த குடியும் கேட்டவன் சொல்லும்..

பள்ளியின் கடைசி நாளும் பட்டத்தின் பாராட்டும்
வள்ளி திருமணமும் வடிவேலன் தீர்த்தமும்
அம்மா அன்பும் ஆச்சி கொளுக்கட்டையும்..

எட்டிய வெற்றிகளும் எட்டா முடிவுகளும்
கட்டிய மனைவியும் கட்டில் அனுபவமும்
தொட்டில் தரு சுகமும் வாழ மகளும்..

தேடா உறவும் நிலையா
வாழ்வும் நில்லா உயிரும்
மூத்தவள் திருமணமும் பேத்தியின் பிறந்தநாளும்..

அப்பா சாவும்அடுத்தநாள் பாலுாற்றும்
அடுத்து கடா வெட்டும் அந்தியேட்டி அழைப்பும்..
அரையாண்டு மாசியமும் பறையும் சங்கும்..

பாடைப் பவணியும் எரியும் நெருப்பும்
உருகும் ஊனமும் கூடும் ஊரும்
கூத்தாடும் கும்பலும்
இவையெல்லாம் நினைவோடும்
மரணம் தொடும்போது..

-திசா.ஞானசந்திரன்-

 

ஆசிய அழகு ராணியாக இலங்கைப் பெண் தெரிவு!

திருமணமான பெண்களின் ஆசிய அழகு ராணி – 2013 போட்டியில் இலங்கையைச் சேர்ந்த நிலங்கா சேனாநாயக்க, இந்த ஆண்டுக்கான ஆசிய சர்வதேச அழகு ராணியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் கடந்த 13ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை இந்த போட்டி நடைபெற்றது. 30 ஆசிய நாடுகளைச் சேர்ந்த பெண்கள் இந்த அழகு ராணி போட்டியில் கலந்துக் கொண்டனர்.

இப்போட்டியிலேயே இலங்கையைச் சேர்ந்த நிலங்கா சேனாநாயக்க, ஆசிய சர்வதேச அழகு ராணியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் நுகேகொடை சமுத்ராதேவி மகளிர் வித்தியாயலயத்தின் பழைய மாணவியாவார்.

கடந்த வருடமும் இலங்கையைச் சேர்ந்த ஸ்ரீமாலீ பொன்சேகாவே இந்த அழகு ராணி கிரீடத்தை சுவீகரித்துக் கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

miss srilanka
Miss-Srilanka22Miss SriLanka-11

12 கோடிக்கு வியாபாரமான சிவகார்த்திகேயன் படம்!

Sivakarthikeyan

சினிமா உலகில் படங்களின் வியாபாரத்தைப் பொறுத்துதான் நடிகர்களின் சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில், கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல் படங்களில் நடித்த சிவகார்த்திகேயன் தற்போது நடித்துள்ள வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் ரூ. 12 கோடிக்கு வியாபாரமாகியுள்ளதாம். இது இதுவரை அவர் நடித்த படங்களில் அதிக விற்பனையான முதல் படமாகும். இதனால், கொலரை தூக்கிவிட்டபடி நடிக்கத் தொடங்கியிருக்கும் சிவகார்த்திகேயன் தனது சம்பளத்தையும் 1.5 கோடியாக உயர்த்தியுள்ளாராம்.

மேலும், சம்பள விஷயத்தில் ஆரம்பத்திலிருந்தே படாதிபதிகளை மிரட்டும் வகையில் பேசும் அவர், இப்போது இன்னும் எகிறிப் பேசி வருகிறாராம். அதனால் சிவகார்த்திகேயனிடம் கால்சீட் கேட்டு வட்டம் போட்டு வந்த பட்ஜெட் படாதிபதிகள், அவர் மேல்தட்டு ஹீரோவாகி விட்டார் என்று முடிவு செய்து டிராக்கை மாற்றிக்கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில், சிவகார்த்திகேயனும் இனி தான் நடிக்கும் படங்களில் பிரபல ஹீரோயினிகள்தான் தனக்கு ஜோடியாக வேண்டும் என்று புதிய கண்டிசன் போட்டு வருபவர், தன்னை இயக்கும் இயக்குனர்களும் ஹிட் கொடுத்தவர்களாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறார். சிவாவின் இந்த தாறுமாறான கண்டிசனால் சிலர் அவர் மீது அதிருப்தியில் உள்ளனர்.

 

சுவாரஸ்யமான மோட்டார் சைக்கிள் விபத்துக்கள்..

பேய்ப் பெண்ணை பார்த்ததுண்டா நீங்கள்??

பெண்ணெண்றால் பேயும் இரங்கும் என்பார்கள் ஆனால் ஒரு பெண்ணே பேய் உருவத்தில் மாறிய விநோதம் மெக்சிகோவில் அரங்கேறியுள்ளது. பொதுவாக அழகு விஷயத்தில் அதிக ஆர்வம் காட்டும் பெண்கள் தங்கள் அழகைக் கூட்டிக் கொள்ளத்தான் அதிக சத்திரசிகிச்சை செய்துள்ளார்கள் என நாம் கேள்விப் பட்டிருப்போம். ஆனால் அழகான உருவத்தை சிதைத்து அவலட்சணமான பேயாக தன்னை மாற்றிக் கொள்ள சத்திரசிகிச்சை செய்து கொண்டுள்ளார் இப்பெண். அதுவும் ஒன்றிரண்டு சத்திரசிகிச்சை அல்ல..

பேய்ப் பெண்..

மெக்சிகோவைச் சேர்ந்த மரியா ஜோஸ் கிறிஸ்டினா என்ற 37 வயதான பெண்ணே இப்படி சத்திரசிகிச்சை மூலம் தன்னை பேயாக்கியவர். இவருக்கு திருமணமாகி நான்கு குழந்தைகளும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

டட்டூஸ் பிரியை..

மரியா ஜோஸ்ன் உடலில் 90 சதவீதத்திற்கும் அதிக அளவில் டட்டூஸ் விதவிதமாக குத்தப்பட்டுள்ளது. மேலும் உடலின் பல பாகங்களை சத்திரசிகிச்சை மூலம் விகாரமாக மாற்றியுள்ளார்.

நீ உண்மையில் ரத்தக் காட்டேறியா??

தான் செல்லும் இடங்களிலெல்லாம் அவரை வழி மறித்து மக்கள் நீங்கள் ஒரு நிஜ ரத்தக் காட்டேறியா? எனக் கேட்பது இவரை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாம். ஆனால் இவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இவருடன் வெளியில் செல்லவே அஞ்சுகிறார்களாம். காரணம் வளைந்து கட்டி ரசிகர்கள் ஓட்டோகிராப் மற்ரும் போட்டோகிராப் கேட்டு அன்புத்தொல்லை கொடுக்கிறார்களாம்.

கலை ஆர்வம்..

தன் குழந்தைகளுக்கு சரியான தாயாக இருந்து சரியாக வழி நடத்துவதாக பெருமையுடன் கூறிக் கொள்ளும் மரியா ஜோஸ் தன் ஓய்வு நேரங்களில் தையல், சமையல் மற்றும் கலைப் பொருட்களைச் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுவாராம்.

அம்மா நினைவாக..

உடம்பில் குத்தியுள்ள நட்சத்திர டட்டூஸ் அவரது தாயின் நினைவாக குத்தியதாம். மரியா சிறு வயதாக இருக்கும் போது அவர் தாய் அதிக நட்சத்திரங்களைக் காட்டி கதை சொல்லியுள்ளாராம். அதன் தாக்கமாகத் தான் இந்த நட்சத்திர டட்டூஸ்.

வெற்றி நிச்சயம்..

டட்டூஸ் பார்லர் வைத்து பெரிய தொழிலதிபராக வர வேண்டும் என்பது தான் மரியாவின் எதிர்கால லட்சியமாம். அதற்கான முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ள மரியா அத்தொழிலில் தான் வெற்றி பெறுவது உறுதி என நம்பிக்கையுடன் பேசுகிறார்.

மறுவாழ்வு ஆலோசகர்..

மதுவுக்கு அடிமையான கணவருடன் பத்தாண்டு காலம் வாழ்ந்த துயர வாழ்க்கையின் பலனாக தான் கற்றுக் கொண்ட பாடத்தை தன்னைச் சுற்றியுள்ள பெண்களுக்கு சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார். மரியா ஒரு வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது.

230 சத்திரசிகிச்சைகள்..

தன்னை அகோரமாக்கிக் கொள்ள இதுவரை கிட்டத்தட்ட 230க்கும் மேற்பட்ட சத்திரசிகிச்சைகளைச் செய்து கொண்டுள்ள மரியா உடம்பின் பல பகுதிகளை மாற்றி அமைத்து விட்டார். பற்கள் கூட இவரது சத்திரசிகிச்சைக்கு தப்பவில்லை.

1 2 3 4 5 6 7 8 9

 

 

சந்தானத்தையே கலாய்க்கும் ஹீரோக்கள்!

santhanam

பொதுவாக சந்தானம்தான் காமெடி என்ற பெயரில் மற்றவர்களை கலாய்ப்பது வழக்கம். அதிலும், படப்பிடிப்பு தளங்களில் அப்பாவியாக நடிகைகள் யாராவது சிக்கிக்கொண்டால் போதும், அவர்களை அப்பளமாக்கி விடுகிற அளவுக்கு வறுத்து எடுத்து விடுவார். இதனால், சந்தானம் வருகிறார் என்றாலே சில இளவட்ட நடிகைகள் தலைதெறிக்க ஓடி ஒளிவார்கள்.

ஆனால், அப்படிப்பட்ட சந்தானத்தையே சில நடிகர்கள் கலாய்க்கத் தொடங்கி விட்டார்கள். அவர்களில் ஆர்யா, சித்தார்த் இருவரும் குறிப்பிடத்தக்கவர்கள். இதில் ஆர்யா, சந்தானத்தை நேரில் கலாய்ப்பதை விட போனில்தான் அதிகமாக கலாய்ப்பாராம். சந்தானம் படங்களில் பேசிய வசனங்களைக் கொண்டே, அதாவது அவர் வீசியெறிந்த பந்துகளையே அவர் மீது திருப்பி விடுகிறாராம். இதனால் ஆர்யாவின் போன் வருகிறது என்றாலே எமகண்டம் ஸ்டார்ட் ஆயிடுச்சே என்று அலறுகிறாராம் சந்தானம்.

ஆனால், இந்த கலாய்ப்பு விஷயத்தில் சித்தார்த் கொஞ்சம் டீசன்ட் பேர்வழியாம். சந்தானம் பேசினால் பதிலுக்கு அவரும் பேசுவாராம். ஆனால், கதாநாயகிகள் அருகில் இருந்தால் மட்டும், தான் ஹீரோவாச்சே என்று சந்தானம் ஒரு வார்த்தை பேசினால் சித்தார்த்திடமிருந்து ஒன்பது வார்த்தைகள் ஓட்டமாய் வருமாம். இதனால் சில சமயங்களில் போனால் போகட்டும் என்று சித்தார்த்துக்கு விட்டுக்கொடுத்து தான் தோற்றுவிட்டது போல் சரண்டர் ஆகி விடுவாராம் சந்தானம். அதைப்பார்த்து, இவர்களுக்கிடையே என்னதான் டீலிங்கோ, சித்தார்த்துக்காக ரொம்பதான் விட்டுக்கொடுக்கிறார் சந்தானம் என்கிறார்கள் யூனிட்வாசிகள்.

 

விமானம் போல் பறக்கும் மோட்டார் சைக்கிள் – இங்கிலாந்து விஞ்ஞானிகளின் சாதனை..

flying-bike

இங்கிலாந்தை சேர்ந்த விஞ்ஞானிகள் புதுவிதமான பறக்கும் மோட்டார் சைக்கிளை தயாரித்துள்ளனர். இந்த மோட்டார் சைக்கிளில் விமானம் மற்றும் கப்பலில் இருப்பது போன்று 6 முன்னோக்கி விசைகள் பொருத்தப்பட்டுள்ளன. அதில் 2 முன்புறமும், 2 பின்புறமும் மற்றும் ஓரங்களில் இருபுறமும் தலா ஒன்று என்ற வகையில் அவை உள்ளன.

95 கிலோ எடையுள்ள இந்த மோட்டார் சைக்கிள் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயங்க கூடியது. இது சக்தி வாய்ந்த 2 பேட்டரிகளால் இயக்கப்படுகிறது. இந்த பறக்கும் மோட்டார் சைக்கிளின் செய்முறை பயிற்சி பராகுவேயில் நடைபெற்ற கண்காட்சியில் நடத்தப்பட்டது.

அப்போது, இந்த மோட்டார் சைக்கிள் சில மீட்டர்கள் உயரம் பறந்து சாதனை படைத்தது. இந்த நிகழ்ச்சியின்போது மோட்டார் சைக்கிளில் பொம்மை மனிதன் உட்கார வைக்கப்பட்டிருந்தான். எதிர்காலத்தில் இந்த மோட்டார் சைக்கிளின் எந்திரத்தின் தரம் உயர்த்தப்பட உள்ளது. இதை விளையாட்டு, சுற்றுலா உள்ளிட்டவைகளுக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் உள்ள பேட்டரிகளை 2 மணி நேரத்துக்கு ஒருமுறை ரீசார்ஜ் செய்யவேண்டும். பறக்கும் மோட்டார் சைக்கிள் மூலம் 25 கிலோ எடையுள்ள பொருட்களை எடுத்து செல்ல முடியும். இது மணிக்கு 32 கி.மீட்டர் வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

 

முத்தரப்பு தொடரில் இருந்து சேவாக், கம்பீர், யுவராஜ் நீக்கம்..

sehwag-yuvraj-gambhir
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரையடுத்து, மேற்கிந்திய தீவுகளில் முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. வரும் 28-ம் திகதி ஆரம்பமாகி ஜூலை 11-ம் திகதி வரை நடைபெற உள்ள இத்தொடரில் இந்தியா, இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் விளையாடுகின்றன.

இத்தொடருக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. தற்போது சம்பியன்ஸ் கிண்ண தொடரில் இந்தியா சிறப்பாக விளையாடி வருவதால், அதே 15 வீரர்கள் முத்தரப்பு தொடருக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதனால் சேவாக், கம்பீர், யுவராஜ் சிங் மற்றும் ஜாகிர்கான் ஆகிய முன்னணி வீரர்களும் இடம்பெறவில்லை. சேவாக், கடைசியாக பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடினார். அந்த போட்டியில் அவர் மிகவும் மோசமாக விளையாடியதால் தற்போது வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இங்கிலாந்துக்கு எதிரான தொடர் மற்றும் பாகிஸ்தானுடன் ஒரு போட்டியில் யுவராஜூக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதனை அவர் சரியாக பயன்படுத்தாததால் தற்போது ஓரங்கட்டப்பட்டிருக்கிறார். இதேபோல் காயம் அடைந்துள்ள ஜாகீர்கான் கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் இருந்து ஒருநாள் போட்டியில் விளையாடவில்லை.

21 வீரர்கள் கொண்ட பட்டியலில் இடம்பெற்றிருந்த மூத்த வீரர் கம்பிருக்கு முத்தரப்பு தொடரில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் சம்பியன்ஸ் கிண்ண தொடரில் ஷிகார் தவான்-ரோகித் சர்மா ஜோடி சிறந்த துவக்க வீரர்களாக பிரகாசிப்பதால் காம்பிர் பெயரை பரிசீலிக்கவில்லை.

இந்திய அணி: டோனி, ஷிகார் தவான், முரளி விஜய், ரோகித் சர்மா, விராத் கோலி, தினேஷ் கார்த்திக், சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், புவனேஸ்வர் குமார், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், இர்பான் பதான், அமித் மிஸ்ரா, வினய் குமார்.