வீராட்கோலி கேப்டனாக நீடிப்பார்?

virat

இந்திய கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகளில் 3 நாடுகள் போட்டியில் விளையாடி வருகிறது. இந்தப்போட்டிக்கு பிறகு இந்திய அணி சிம்பாப்வே சென்று 5ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த தொடர் வருகிற 24-ந் திகதி முதல் ஆகஸ்ட்3-ந் திகதி வரை நடக்கிறது.

முதல் போட்டி 24-ந் திகதியும், 2-வது ஒருநாள் போட்டி 26-ந் திகதியும், 3-வது ஆட்டம் 28-ந் திகதியும் ஹராரேயில் நடக்கிறது. 4-வது போட்டி 31-ந் திகதியும், 5-வது மற்றும் கடைசி ஆட்டம் ஆகஸ்ட் 3-ந் திகதியும் புலவாயோவில் நடக்கிறது.

சிம்பாப்வே தொடருக்கான இந்திய அணி நாளை அறிவிக்கப்படுகிறது. சந்தீப் பட்டில் தலைமையிலான தேர்வு குழுவினர் மும்பையில் கூடி வீரர்களை தேர்வு செய்கின்றனர். காயம் அடைந்த டோனி அதில் இருந்து குணமடைந்து விட்டாரா என்பது தெரியவில்லை. அவர் உடல் தகுதியுடன் இல்லையென்றால் கோலியே கேப்டனாக நீடிக்கப்படுவார். கோலி தலைமையில் இந்திய அணி 2 ஆட்டத்திலும் தோற்றாலும் அவரே கேப்டனாக நீடிக்கப்படலாம்.

சிம்பாப்வே தொடரில் கோலிக்கு ஓய்வு கொடுக்க முதலில் திட்டமிட்டதாக தெரிகிறது. அந்த முடிவை தற்போது தேர்வு குழுவினர் கைவிட்டதாக கூறப்படுகிறது. ஒருவேளை கோலிக்கும் ஓய்வு அளிக்கப்பட்டால் ரெய்னா அல்லது ரோகித்சர்மா கேப்டனாக நியமிக்கப்படலாம். இந்திய அணியில் மாற்றம் எதுவும் இருக்காது. மேற்கிந்திய தீவுகளில் விளையாடும் வீரர்களே இடம் பெற வாய்ப்பு உள்ளது.

ஹன்சிகா நடிப்பதால் அனுஷ்காவுக்கு கோபமா?

சிங்கம் 2 படத்தில் ஹன்சிகா நடிப்பதால் அனுஷ்காவுக்கு கோபமா என்பதற்கு பதில் அளித்தார் சூர்யா. சூர்யா நடிக்கும் படம் சிங்கம் 2.

அனுஷ்கா, ஹன்சிகா மோத்வானி நடிக்கின்றனர். ஹரி இயக்கியுள்ளார். இது பற்றி சூர்யா கூறியதாவது: எல்லோரும் திருப்தி அடையும் வகையில் சிங்கம்2உருவாகி இருக்கிறது. இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடந்தபோது அதில் ஹன்சிகா கலந்துகொண்டார். அனுஷ்காவால் பங்கேற்க முடியவில்லை.

இப்படத்தில் ஹன்சிகா நடிப்பதால் அனுஷ்காவுக்கு கோபம் அதனால்தான் அவர் பங்கேற்கவில்லை என்று இணையதளங்களில் தகவல் வெளியாகி உள்ளது. அதில் உண்மை இல்லை. இப்படத்தில் இரண்டு பேருக்கும் சமமான அளவில் வாய்ப்பு தரப்பட்டிருக்கிறது. அனுஷ்கா தெலுங்கில் நடிக்கும் படம் ஒன்றிற்காக குதிரை ஏற்ற பயிற்சி,வாள் சண்டை பயிற்சி மேற்கொண்டிருக்கிறார்.

இதனால் அவருக்கு முதுகு வலி ஏற்பட்டிருந்தது. இதனால்தான் அவரால் அன்றைக்கு வரமுடியவில்லை. சிங்கம் 2 நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடந்தபோது அதில் பங்கேற்றார். டி.வி நேரடி நிகழ்ச்சியிலும் பங்கேற்று பேட்டி அளித்திருக்கிறார்.

வடமாகாண தடகளப் போட்டி இன்று ஆரம்பம்..!

வடமாகாண கல்வித் திணைக்களத்தின் மாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான தடகளப்போட்டி ஆரம்ப நிகழ்வு இன்று காலை 9.30 மணியளவில் வடமாகாண கல்வி, கலாசார பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தலைமையில் யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் ஆரம்பமானது.

பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுனர் ஜி.ஏ.சந்திரசிறி கலந்து கொண்டு விளையாட்டு நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார். மேலும் வடமாகாணத்திலுள்ள 12 வலயங்களைச் சேர்ந்த பாடசாலைகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட வீர, வீராங்கனைகள் மட்டுமே இந்த தடகளப் போட்டிக்கு பங்குபற்றவுள்ளனர்.

மேலும் இந்த நிகழ்வில் பிரதம விருந்தினர் உரையாற்றுகையில்,

கடந்த வருடம் ஆறாவது இடத்தில் இருந்த வடமாகாணம் இந்த முறை குறைந்தது நான்காம் இடத்திற்கு முன்னேற வேண்டும். அத்தோடு இந்தப் போட்டிக்கு தகுந்த பயிற்சிகளை மேற்கொண்ட வீர,வீராங்கனைகள் சிறந்த பெறுபேற்றை ஈட்டி தமது பாடசாலைகளுக்கும், வடமாகாணத்திற்கும் பெருமையை தேடித்தர வேண்டும் என்றார்.

மேலும் இந்த நிகழ்வுக்கு யாழ் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா, வடமாகாண செயலாளர் இளங்கோவன், வலயக்கல்வி பணிப்பாளர்கள், கோட்டக் கல்விப்பணிப்பாளர்கள்,விளையாட்டு நடுவர்கள், பாடசாலை அதிபர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Jaffna1 Jaffna2 Jaffna3 Jaffna4

எகிப்தின் புதிய இடைக்கால ஜனாதிபதியாக அட்லி மொன்சூர்..!

adly-mansour

எகிப்தின் புதிய இடைக்கால ஜனாதிபதியாக, அந்த நாட்டின் தலைமை நீதிபதி அட்லி மொன்சூர் பதவியேற்றுள்ளார்.

எகிப்தில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியான முகமது முர்ஸி, அந்நாட்டின் இராணுவ புரட்சியால் பதவியில் இருந்து நீக்கப்பட்டதையடுத்து இடைக்கால ஜனாதிபதியாக மொன்சூர் பொறுப்பேற்றுள்ளார்.

 

சித்தார்த்துடன் என்ன உறவு? சொல்கிறார் சமந்தா..!

Samantha

இயக்குனர் யார் என்பதை பார்த்தே படங்களை ஒப்புக்கொள்கிறேன் என்றார் சமந்தா. இதுபற்றி அவர் கூறியது:

என்னை பொறுத்தவரை இயக்குனர்களைத்தான் முழுமையாக நம்புகிறேன். ஒரு படத்தின் ஸ்கிரிப்ட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அதேவேளையில், அதை இயக்குபவரை பொறுத்துதான் அதில் நடிப்பது பற்றி முடிவு செய்வேன். அந்த வகையில்தான் ‘நான் ஈ’ஸ்கிரிப்டை இயக்குனர் ராஜமவுலி மீதான நம்பிக்கையில் ஏற்றேன்.

அது உண்மை என நிரூபணமானது. ‘மற்ற ஹீரோயின்கள் இந்திக்கு செல்வதுபோல் நீங்கள் செல்வீர்களா?’ என்று கேட்கிறார்கள். நிறைய இந்தி பட வாய்ப்புகள் வருகின்றன. ஆனால்,தென்னிந்திய படங்களில் நடிப்பதில்தான் எனக்கு மகிழ்ச்சி கிடைக்கிறது. இந்தி படத்தில் நடிக்கும் எண்ணம் எதுவும் இதுவரை இல்லை. நடிகர் சித்தார்த்துடனான உறவு பற்றி கேட்கிறார்கள். அவர் எனது நெருங்கிய நண்பர்.

இதனால் பொது இடங்களுக்கு ஜோடியாக வந்தேன். எங்கள் உறவு பற்றி சரியான நேரம் வரும்போது சொல்வேன். இதற்கிடையே, இயக்குனர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் ஒன்றை தெளிவாக சொல்லிக் கொள்கிறேன். எனது திருமணம் 3 ஆண்டுகளுக்கு பிறகுதான் நடக்கும்.

இலங்கையின் யுத்த சூனிய வலய கொலைக்களம் காண்பித்த மூவர் கைது..!

இலங்கையின் உள்நாட்டுப் போர் பற்றிய சர்ச்சைக்குரிய ஆவணப்படத்தை அனுமதி இன்றி பொதுமக்களுக்குத் திரையிட்டுக் காட்டியதற்காக மூவர் மலேசியாவில் நேற்றிரவு கைது செய்யப்பட்டனர்.

‘No Fire Zone: In the Killing Fields of Sri Lanka’ என்ற அந்த ஆவணப்படத்தின் திரையீட்டுக்கு இரண்டு அரசசார்பற்ற நிறுவனங்கள் – கோலாலும்பூர், சிலாங்கூர் சீன அசெம்ளி மண்டபத்தின் சிவில் உரிமை குழுவும் கோமாஸும் – ஏற்பாடு செய்திருந்தன.

படத்தைத் திரையிட்ட 10 நிமிடங்களில் உள்துறை மற்றும் குடிநுழைவுத் துறை அதிகாரிகள் 30 பேர் சென்று படத்தையும் படத்தைத் திரையிட உதவிய கணினியையும் பறிமுதல் செய்ய முற்பட்டனர்.

ஏற்பாட்டாளர்கள் பேச்சு நடத்தியதை அடுத்து படத்தைத் திரையிட அனுமதித்த அவர்கள்,பின்னர் ஏற்பாட்டாளர்களில் மூவரை பொலிஸ் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

இலங்கையின் உள்நாட்டுப் போரின் கடைசி நாள்களில் இழைக்கப்பட்ட குற்றச்செயல்களை அப்பட்டமாக சித்திரிக்கும் இந்த ஆவணப்படம் உலகெங்கும் திரையிடப்பட்டு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதைத் தயாரித்த குழுவினரின் பெயர்கள் 2012 நோபெல் பரிசுக்கும் பரிந்துரைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மௌஸைக் கண்டுபிடித்தவர் காலமானார்..

m

கணினிக்கான மௌஸைக் கண்டுபிடித்தவரான அமெரிக்க தொழில்நுட்ப வல்லுநர் டக்ளஸ் எங்கெல்போட் காலனானார். “வீடியோ கொன்ஃபரன்ஸிங்” எனப்படும் காணொளி தொடர்பாடலையும் கண்டுபிடித்திருந்தவரான டக்ளஸ் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இயற்கை எய்தினார். அவருக்கு வயது 88.

மின்னஞ்சல், இணையம் எல்லாம் நடைமுறைக்கு வருவதற்கு நெடுங்காலம் முன்பாகவே இப்படியான வசதிகள் வரும் என்று கணித்துச் சொன்னவர் அவர்.1968ஆம் ஆண்டு கணினி விஞ்ஞானிகள் ஆயிரம் பேர் முன்னிலையில் உரையாற்றியதில் பிரபலமானவர் டக்ளஸ் எங்கெல்போட் ஆவார். அவரது அந்த உரை பெரும் உற்சாகத்தையும் வரவேற்பையும் பெற்றிருந்தது.

கணினியில் பயன்படுத்தப்படுகின்ற மௌஸ் எனப்படும் சுட்டுக் கருவியை உலகிற்கு முதன் முதலாக அறிமுகம் செய்ததோடு ஐம்பது கிலோமீட்டர் தொலைவில் இருந்த ஒரு இடத்துடன் காணொளி இணைப்புடன் கூடிய தொடர்பாடல் வலயமைப்பையும் அவர் செயல்படுத்திக் காட்டினார்.
தனது இந்தக் கண்டுபிடிப்புகளால் அவர் செல்வந்தர் ஆகவில்லை.

மௌஸுக்கு இவர் பெற்றிருந்த அறிவுசார் காப்பீட்டு உரிமையின் காலம் முடிந்த பின்னர்தான், நாம் அன்றாடம் கணினியில் பயன்படுத்தும் ஒரு கருவியாக அது உருவெடுத்திருந்தது.

ஆரம்ப காலத்து மௌஸின் தோற்றம்

m1

மீண்டும் பாகிஸ்தான் அணியில் இடம் பிடித்த அப்ரிடி!!

Afridi

பாகிஸ்தான் அணியிலிருந்து நீக்கப்பட்டு மீண்டும் அணியில் இடம் பிடிக்க கடுமையாக போராடிய அப்ரிடிக்கு மீண்டும் பாகிஸ்தான் அணியில் இடம் கிடைத்துள்ளது.

அதே நேரம் சோயிப் மாலிக் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அப்ரிடியுடன் உமர் அக்மல், அஹ்மத் சாஷாத் ஆகியோருக்கும் இடம் கிடைத்துள்ளது.

மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ள ஒரு நாள் தொடருக்கான அணியில் அப்ரிடி மீண்டும் இடம் பிடித்துள்ளார். அணியில் இடம் பிடித்துள்ள மற்றவர்கள் விக்கெட் காப்பாளர் ரிஸ்வான் அஹ்மத் , ஹரிஸ் சொஹைல், ஜுல்பிகர் பாபர் ஆகியோர் ஆவர்.

முன்னாள் அணித் தலைவரான சோயப் மாலிக் சமீபத்தில் நடந்த ஐசிசி சம்பியன் கிண்ண போட்டியில் மோசமாக விளையாடியதால் நீக்கப்பட்டுள்ளார். அத்தொடரில் அவர் 25 ஓட்டங்களை மட்டுமே எடுத்திருந்தார்.

அதேபோல் விக்கெட் காப்பாளர் கம்ரான் அக்மல், தொடக்க ஆட்டக்காரர் இம்ரான் பர்ஹத் ஆகியோரும் நீக்கப்பட்டுள்ளனர்.

அப்ரிடிக்கு மீண்டும் இடம் கிடைத்திருப்பது அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 6 மாதமாக அணியில்இடம் பிடிக்க போராடி வந்தார் அப்ரிடி.

இவர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து பின்னர் மீண்டும் விளையாட வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாசிக்குடா கடற்கரைப் பகுதியில் தீ விபத்து..!

வாழைச்சேனை பாசிக்குடா முனை முருகன் கோவில் பகுதியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தினால் பாசிக்குடா கடற்கரைப் பகுதியில் இரண்டு கிலோ மீற்றர் தூரம் சேதமடைந்துள்ளது.

நேற்று இரவு 7.30 மணயிளவில் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இத்தீயினால் தனியாருக்குச் சொந்தமான தென்னந் தோட்டங்கள் மற்றும் அரச காணிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக கல்குடாப் பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

தீயினை கல்குடா பொலிஸாரும்,இராணுவத்தினரும், பொது மக்களும் இணைந்து கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

Fire

வித்தியாசமான புகைப்பட தொகுப்பு..

சமூக வலைத் தளங்களில் வெளிவந்துள்ள பிரபலமான, வித்தியாசமான புகைப்படங்களின் தொகுப்பை இங்கே காணுங்கள் ..

1 19 5 4 3 2 6 7 8 9 10 11 12 13 17 16 15 14 18 20 21 25 23 22 24 28 29 27 26

அஜீத், விஜய்க்கு ஒரு நியாயம் எனக்கொரு நியாயமா?? – விஷால்..

vishal

அஜீத், விஜய்க்கு ஒரு நியாயம், எனக்கு ஒரு நியாயமா என்று விஷால் கோபத்தில் உள்ளாராம். விஜய், அமலா பால் நடித்துள்ள தலைவா படத்தை வேந்தர் மூவிஸ் வெளியிடுகிறது.

இந்நிலையில் அஜீத்தின் பெயரிடப்படாத படத்தையும் வேந்தர் மூவீஸ் தான் ரிலீஸ் செய்கிறதாம். அந்த 2 படங்களையும் பார்க்காமலே வாங்கியுள்ளனர். இந்நிலையில் விஷால், ஐஸ்வர்யா அர்ஜுன் நடித்துள்ள பட்டத்து யானை படத்தை வெளியிடுவது குறித்து வேந்தர் மூவீஸுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

ஆனால் அவர்களோ முதலில் படத்தைப் போட்டுக் காட்டுங்கள் அதன் பிறகு வாங்குவது பற்றி முடிவு செய்யலாம் என்றார்களாம். இதைக் கேட்ட விஷால் கடுப்பாகிவிட்டாராம். விஜய், அஜீத் படங்களை மட்டும் பார்க்காமல் வாங்கியுள்ளீர்கள். அதே போன்று என் படத்தையும் வாங்கிக்கொள்ள வேண்டிது தானே என்றாராம் விஷால்.

அதற்கு வேந்தர் மூவிஸ் தரப்பில் அஜீத், விஜய் இருவருக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்கள். அவர்கள் படத்தை வெளியிட்டால் போட்ட பணத்தை எடுத்துவிடலாம். உங்களுக்கு அப்படி இல்லையே என்று கூறினார்களாம். இதையடுத்து விஷால் படத்தை வாங்கும் முயற்சியை வேந்தர் மூவிஸ் கைவிட்டுவிட்டதாம். இப்போது ரெட்ஜெயன்ட் உள்ளிட்ட நிறுவனங்களிடம் பேச்சு நடத்தி வருகிறார்களாம் பட்டத்து யானை தரப்பில்.

 

இத்தாலியில் உணவளித்த வயோதிபரை கடித்துக் கொன்ற 3 புலிகள்..

tiger

இத்தாலியில் கூண்டில் அடைக்கப்பட்டிருந்த புலிகளுக்கு உணவளிக்கச் சென்ற 72 வயது முதியவரை 3 புலிகள் கடித்துக் கொன்றன. இத்தாலியின் வடக்கே உள்ள மலைப் பகுதியில் இருந்த பினெரோலோ வனவிலங்கு காப்பகம் பொருளாதார நெருக்கடியால் 2009ம் ஆண்டு மூடப்பட்டது. ஆயினும் காப்பகத்தில் இருந்த விலங்குகள் அனைத்தும் அதே இடத்தில் வைத்து பராமரிக்கப் பட்டு வருகின்றன.

தற்போது அங்கு நிறைய புலிகள் உள்ளன. இந்தக் காப்பகத்தில் 72 வயது நபர் ஒருவர் புலிகளுக்கு உணவளிக்கும் பணியைச் செய்து வருகிறார். சம்பவத்தன்று, வழக்கம் போல் உணவளிக்கச் சென்ற அவரை கூண்டுக்குள் இருந்த 3 புலிகள் திடீரென தாக்கின.

புலிகள், முதியவரின் கழுத்தைக் கடித்துக் குதறுவதைப் பார்த்து அதிர்ந்து போன அவரின் மனைவி உடனடியாக, மீட்புப் படையினருக்கு தகவல் அளித்தார். ஆனால், எவ்வளவோ போராடியும் இறந்து போன முதியவரின் சடலத்தை மட்டுமே அவர்களால் மீட்க முடிந்தது.

 

யாழில் 6 மாதங்களில் 142 பேருக்கு காசநோய்..!

யாழ். குடாநாட்டில் கடந்த 6மாத காலப் பகுதியில் 142 பேர் காசநோய்க்கு இலக்காகி சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று மாவட்டக் காசநோய் கட்டுப்பாட்டு அதிகாரி டாக்டர் எஸ்.யமுனானந்தா தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது: யாழ்ப்பாணத்தில் உள்ள மார்பு நோய் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் இந்த வருடத்தில் 6மாத காலப் பகுதியில் 11 ஆயிரத்து 340 பேர் சிகிச்சை பெற்றனர்.

சிகிச்சைக்கு உட்படுத்தியோரில்142 பேருக்கு காச நோய் அறிகுறி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதில் பாதிக்கப்பட்ட142 பேரும் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

முற்றாக துண்டிக்கப்பட்ட கையை பொருத்தி சாதனை..!

திருகோணமலை பொது வைத்தியசாலையில் முற்றாகத் துண்டிக்கப்பட்டிருந்த கையினை சத்திர சிகிச்சை மூலம் மீண்டும் பொருத்தி இவ் வைத்தியசாலை வைத்தியர்கள் சாதனை புரிந்துள்ளனர்.

இச் சத்திர சிகிச்சை சம்பவம் கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்டது. அறுவைச் சத்திர சிகிச்சை நிபுணர் ரொகான் சிறிசேன தலைமையிலான வைத்தியர் குழுவே மேற்படி சிகிச்சையினை வெற்றிகரமாக மேற்கொண்டு நிறைவு செய்தது.

இதுவரை காலமும் இப்பொது வைத்தியசாலைக்கு இவ்வாறான சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவோர் கண்டி மற்றும் கொழும்பு போன்ற மருத்துவ மனைகளுக்கு மாற்றப்பட்டே சத்திர சிகிச்சை  மேற்கொள்ளப்பட்டு வந்தனர்.

திருகோணமலை பொது வைத்தியசாலையில் தற்போது சகல சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பான் கீ மூனின் விசேட பிரதிநிதி இலங்கை வருகை..!

ஐக்கிய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின், இளைஞர் விவகாரங்களுக்கு பொறுப்பான பிரதிநிதி அஹமட் அல்கெந்தாவி நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார்.

இளைஞர் பாராளுமன்றில் உரை நிகழ்த்தும் வகையில் அவர் இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கையின் இளைஞர் விவகார செயற்பாடுகள் குறித்து ஐநாவிற்கு அறிக்கை சமர்பிப்பதும் இவரது விஜயத்தின் நோக்கம் என கூறப்பட்டுள்ளது.

இளைஞர்கள் செயற்பாடு குறித்து இன்று (04) லக்ஷமன் கதிர்காமர் சர்வதேச கல்வி நிலையத்தில் செயலமர்வு இடம்பெறவுள்ளது.

இலங்கை வந்துள்ள அஹமட் அல்கெந்தாவி நாளைய தினம் அமைச்சர்களான டளஸ் அழகப்பெரும, ஜி.எல்.பீரிஸ் மற்றும் பா.உ நாமல் ராஜபக்ஷ ஆகியோரை சந்திக்கவுள்ளார்.

2014இல் நடைபெறவுள்ள உலக இளைஞர் மாநாட்டு குறித்து இந்த சந்திப்புக்களின் போது கவனம் செலுத்தப்படவுள்ளது.

வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகள் நாளை நள்ளிரவுடன் கலைக்கப்படுகிறது..!

வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகள் நாளை நள்ளிரவுடன் கலைக்கப்படவுள்ளதாக அரச தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதற்காக அந்தந்த மாகாண முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்கள் அனுமதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி இந்த இரண்டு மாகாண சபைகளுக்கும் மற்றும் வடமாகாண சபைக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த அரசு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெரும்பாலும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி அல்லது 28ஆம் திகதி சனிக்கிழமை நடத்த திட்டமிட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய இதற்கு முன்னர் தெரிவித்திருந்தார்.

மத்திய மற்றும் வடமேல் மாகாணசபைகளின் கால எல்லை அடுத்த வருடம் மார்ச் மாதத்துடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த மாகாண சபைகளின் முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடினர்.

இந்த சந்திப்பின்போது குறித்த மாகாணசபைகளின் அமைச்சர்கள் முதலமைச்சர்கள் அதனை முன்கூட்டியே கலைப்பதற்கான அனுமதியை வழங்கியுள்ளதா அரச தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.