இன்றைய அறிவியல் வளர்ச்சியில் கணனியின் பங்கு மிக மிக முக்கியமானது. இப்படிப்பட்ட கணனியுடன் ஒட்டிப்பிறந்தது தான் மௌஸ் எனப்படும் சுட்டி. மௌசை கண்டுபிடித்த டக்லஸ் என்கேல்பட் நேற்று (04.06) மரணமடைந்தார்.
எதிர்காலத்தில் வெளிவரவுள்ள மௌஸ்களின் சுவாரஸ்ய புகைப்படங்களை இங்கே காணலாம்..
அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக புகலிடம் கோரிச் சென்ற 15 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று நாடு கடத்தப்பட்டதாக அவுஸ்திரேலிய குடிவரவு திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
குறித்த 15 பேரும் கிறிஸ்மஸ் தீவில் இருந்து இலங்கைக்கு விமானத்தின் மூலம் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி கடந்த வருடம் ஒகஸ்ட் தொடக்கம் இதுவரையில் 1285 இலங்கை அகதிகள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இவர்களில் 1072 பேர் சுய விருப்பின் பேரில் நாடு திரும்பியுள்ளதாக அவுஸ்திரேலிய குடிவரவு திணைக்களப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம்.இவர் சூர்யா, கார்த்தியின் உறவுக்காரர் ஆவார்.
சூர்யாவின் கால்ஷீட் திகதிகள் கேட்டு வரும் முன்னணி இயக்குனர்களை, அப்படியே கார்த்தியின் கால்ஷீட் திகதிகள் கொடுத்து படத்தை தயாரித்து விடுகிறதாம் ஸ்டுடியோ க்ரீன்.
அதாவது முதலில் வெங்கட்பிரபுவும், ராஜேஷும் சூர்யாவின் திகதிகள் கேட்டு தான் சென்றார்களாம்.
ஆனால் இருவருமே தற்போது கார்த்தி நடிக்கும் படத்தை இயக்கி வருகின்றனர்.
அத்துடன் இயக்குனர் ஹரி இயக்கும் அடுத்த படத்திற்கும் கார்த்தி தான் நாயகனாம்.
இதற்கிடையே நடிகர் சூர்யாவும் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்க இருக்கிறார்.
இந்நிறுவனத்திற்கு D – Diya, D – Dev என தனது இரண்டு குழந்தைகளின் முதல் எழுத்தையும் வைத்து 2D Entertainment என்று பெயரிட்டு இருக்கிறார்.
இதன் மூலம் சிறு பட்ஜெட் படங்களை தயாரிக்கவும் முடிவு செய்துள்ளாராம்.
ஆஞ்சநேயருக்கும் பைரவருக்கும் வடைமாலை அணிவிக்கும் வழக்கம் பக்தர்களிடம் உள்ளது. ராம பட்டாபிஷேகத்தின் போது, சீதாதேவி ஆஞ்சநேயருக்கு முத்துமாலை ஒன்றைப் பரிசளித்தாள். இதை வடக்கே “வடமால்யா’ என்று சொல்வார்கள். இது தென்னகத்தில் வடைமாலையாகி விட்டது.
போதாக்குறைக்கு ஆஞ்சநேயர் வானரமுகம் கொண்டவர் என்பதால், வானரத்துக்குப் பிடித்த வடைமாலை அணியும் வழக்கம் வந்துவிட்டது. எப்படியிருப்பினும், பக்தியுடன் இதை அணிவிப்பதால் பலன் உண்டு. பைரவருக்கு வாகனம் நாய். அதற்கும் வடை பிடிக்கும் என்பதால், வடைமாலை அணிவிக்கும் வழக்கம் வந்து விட்டது.
உலகில் முதன்முறையாக செயற்கை முறையில் மூல உயிரணுவிலிருந்து (ஸ்டெம் செல்) கல்லீரலை உருவாக்கி ஜப்பான் விஞ்ஞானிகள் சாதனை புரிந்துள்ளனர்.
கல்லீரல் பாதிக்கப்பட்டு, மாற்று அறுவைச் சிகிச்சையை எதிர்நோக்கியுள்ளோருக்கு இது புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பானின் யோகோஹாமா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் டாகானோரி டகேபே, ஹிதேகி டானிகுச்சி ஆகியோர் நிகழ்த்திய ஆராய்ச்சியில் உயிரணுவிலிருந்து வெற்றிகரமாக கல்லீரல் உருவாக்கப்பட்பட்டுள்ளது.
மனிதனின் உடலிலிருந்து எடுக்கப்படும் உயிரணுக்கள், பல்வேறு உடல் உறுப்புகளாக வளரக் கூடிய ஆற்றல் உள்ளதாக இருக்கிறது. இதை தகுந்த முறையில் தூண்டிவிடுவதன் மூலம், நமக்கு தேவைப்படும் உறுப்பை வளர்த்தெடுக்க முடியும். பெரும்பாலும், மூளைச்சாவு அடைந்தோரின் முக்கிய உடல் பாகங்கள் நல்ல நிலையில் இருந்தால், அவை தானமாகப் பெறப்பட்டு பிறருக்குப் பொருத்தப்படும்.
இம்முறையில் கல்லீரலை தானமாகப் பெற நோயாளிகள் நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.
அதோடு, ஒரே பிரிவைச் சேர்ந்த ரத்தம் மற்றும் திசு வகை உள்ளவர்களிடமிருந்து கல்லீரலை தானமாகப் பெற்று பொருத்தினாலும், சில சமயங்களில் ஒவ்வாமை ஏற்பட்டு நோயாளிக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
இந்நிலையில், பாதிக்கப்பட்டவரின் உயிரணுவிலிருந்து கல்லீரலை செயற்கை முறையில் வளர்த்தெடுத்து, அதை அவருக்குப் பொருத்துவதால் எந்தவிதமான பக்கவிளைவும் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
யுடோபியா கிரகத்தில் மக்கள் முப்பது வெவ்வேறு வண்ணங்களில் தோல் நிறங்கள் கொண்ட முப்பது சாதிகளாக வாழ்ந்து வந்தார்கள். அவர்களுள் தலைவரை தேர்ந்தெடுப்பது ஜனநாயக முறையில் நடந்தது.
சாதி விட்டு சாதி திருமணம் செய்தால் எட்டு கைகள் ஏழு கால்களுடன் ஆரியக் கடவுளைப் போல ஒரு அவலட்சணமான குழந்தை பிறக்குமென அவர்களின் மூதாதையர்கள் எழுதிவைத்திருந்ததால் அந்த பயத்தில் இயல்பாகவே வேறு சாதியைச் சேர்ந்த மனிதரின் மேல் இன்னொரு சாதி மனிதருக்கு காதல் வந்தாலும் மனதிற்குள்ளேயே வைத்து அடக்கிக்கொண்டார்கள்!
அங்கே வாழ்க்கை மிகவும் அமைதியாகப் போய்க்கொண்டிருந்தது. அழகான குழந்தைகள் பிறந்துகொண்டேயிருந்தன.
இப்படியான அந்த கிரகத்தில் வெவ்வேறு சாதியில் ஆண், பெண் என இரண்டு சேட்டைக்காரர்கள் பிறந்தார்கள். ஆரம்பத்தில் இருந்தே அவர்களுக்கு கேள்விகள் மேல் தீராக்காதல். பதில்களின் மேல் கொள்ளைக் காமம். இரண்டையும் சேர்த்து ஆனந்தத்தில் திளைப்பதென்பது அவர்களின் இயற்கை புத்தி. பின் என்ன? இருவேறு சாதிகளைச் சேர்ந்த அவர்களுக்குள் காதல் வந்தது.
அந்த கிரகத்தின் எட்டு லட்ச ஆண்டுகள் வரலாற்றில் மனதிற்குள்ளேயே அழுத்தாமல் வெளிப்படுத்தப்பட்ட சாதி மறுப்பு காதல் அது! கிரகம் அல்லோலகல்லோலப்பட்டது! தலைவர்கள் திமிறினார்கள், கொதித்தார்கள், கொந்தளித்தார்கள். சாதியை மறுத்து உறவு கொள்வதென்பது கிரகத்தையே அழிக்கும் என தீர்க்கமாக வாதிட்டார்கள்.
காட்டுக்குள் ஓடிய அவர்கள் சில மாதங்கள் குடும்பம் நடத்திவிட்டு மீண்டும் நாட்டுக்குள் வந்தார்கள். அவர்கள் கையில் மெல்லிய துணியால் போர்த்தப்பட்ட ஒரு பச்சிளங்குழந்தை இருந்தது. இரண்டு கைகள் இரண்டு கால்களுடன் தோற்றமளித்த அந்தக் குழந்தை தன் தந்தை தாயின் லட்சணங்களைத் தாங்கி அழகாக இருந்தது.
கிரகத்தாருக்கு அதிர்ச்சி! இத்தனை லட்சம் ஆண்டுகளாக ஒரு பொய்யை நம்பி வாழ்ந்துவிட்டோமே இயற்கையாய் ஊறிய காதலை மரபால் அடக்கி வாழ்ந்தோமே என்ற வெட்கத்திலும், இப்போதாவது நம் இனத்தில் இரு அறிவுடையவர்கள் பிறந்தார்களே என்ற மகிழ்ச்சியிலும் ஒரே நேரத்தில் அந்த கிரகம் இருவிதமான உணர்வுகளுடன் விழாக்காலம் பூண்டது.
எங்கும் வானவேடிக்கைகளும், விருந்துகளும் நடந்தன. அன்றோடு அந்த பைத்தியக்காரத்தனமான மரபு பிய்த்தெறியப்பட்டது. வழமையில் இருந்து மாறி புரட்சி செய்த அந்தக் காதலர்கள் உடோபியா கிரகத்தின் புரட்சியாளர்களுள் மிக முக்கியமானவர்களாகக் கருதப்பட்டார்கள்.
அந்த கிரகத்தில் இருந்து சரியாக ஒன்பது லட்சம் மைல் தொலைவில் பூமி என்ற கிரகம் இருந்தது. சாதி மாறி காதலித்ததற்காக ஒரு இளைஞனை சிலர் காட்டுக்குள் கூட்டிச் சென்று கற்றாழையை அவன் கழுத்தில் வைத்து அழுத்தினார்கள். முள் நிறைந்த அந்த கற்றாழை அவன் கழுத்தை அறுத்து நரம்புகளைக் கடந்து ரத்தத்தை ஆறுபோல் வெளியேற்றிக் கொண்டிருந்தது.
விஜய் இதுவரை நடித்த படங்களில் மிக பிரமாண்டமான பட்ஜெட்டில், அதிரடியான விளம்பரங்களுடன் வெளியாக இருக்கிறது தலைவா. அதேபோல், தமிழில் வெளியாகிற அதே நாளில் தெலுங்கிலும் தலைவா படத்தை வெளியிடப்போகிறார்களாம்.
ஏற்கனவே விஜய் நடித்த நண்பன், துப்பாக்கி ஆகிய படங்கள் அங்கு பெரிய அளவில் வசூல் சாதனை புரிந்ததால், தெலுங்கு ரைட்ஸே பெரிய தொகைக்கு விற்பனை செய்துள்ளார்களாம். அதேபோல் மலையாளத்திலும் விற்பனை செய்யப்பட்டிருக்கிறதாம்.
இந்தநிலையில், தலைவா படத்தை இந்தியிலும் அடுத்து ரீமேக் செய்ய அப்படத்தின் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் திட்டமிட்டுள்ளாராம்.
தற்போது தனுஷ் ராஞ்சனாவில் இந்தியில் கால்பதித்ததைத் தொடர்ந்து அடுத்து ஜாக்பாட் என்ற படம் மூலம் பரத்தும் பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கிறார்.
இதையடுத்து விஜய்யும் தலைவா ரீமேக் மூலம் இந்தியில் என்ட்ரி கொடுப்பார் என்று கூறப்படுகிறது. ஆனால், தலைவா படம் ரிலீசான பிறகுதான் இந்தி பதிப்பில் யார் யார் நடிக்கிறார்கள் என்கிற விவரம் முழுமையாக வெளியிடப்படுமாம்.
வட மாகாண சபைத் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேர்தல்கள் ஆணையாளருக்கு பிரகடனம் வெளியிட்டுள்ளார்.
ஈழப்போரை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு, இலங்கை – இந்திய ஒப்பந்தம் 1987 அக்டோபர் 29இல் கைச்சாத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சம் இலங்கை அரசு அதன் மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதாகும்.
இதன்படி 1987 நவம்பர் 14இல் இலங்கை பாராளுமன்றம் தனது அரசியலமைப்பில் 13வது திருத்தம் மற்றும் மாகாணசபைச் சட்டம் இல. 42 (1987) ஆகியவற்றை அறிவித்தது. 1988 பெப்ரவரி 3 ஆம் திகதி ஒன்பது மாகாணசபைகள் உருவாகக்ப்பட்டன.
மாகாண சபைகளுக்கான முதலாவது தேர்தல்கள் 1988 ஏப்ரல் 28ஆம் திகதி வடமத்திய, வடமேல், சபரகமுவா, மற்றும் ஊவா ஆகிய மாகாணங்களுக்கு இடம்பெற்றன. 1988 சூன் 2 இல் மத்திய, தெற்கு, மற்றும் மேற்கு மாகாணங்களுக்கு தேர்தல்கள் நடத்தப்பட்டன. அன்று இலங்கையின் ஆளும் கட்சியாக இருந்த ஐக்கிய தேசியக் கட்சி ஏழு மாகாண சபைகளினதும் ஆட்சியைக் கைப்பற்றியது.
இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் படி கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்கள் ஒன்றிணைக்கப்பட்டு ஒரு நிருவாகத்தின் கீழ் கொண்டுவர இணக்கம் காணப்பட்டது. இவ்விணைப்பு நிரந்தர இணைப்பாக இருப்பதற்கு கிழக்கு மாகாணத்தில் 1988 டிசம்பர் 31 இற்குள் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
ஆனாலும், இந்த பொது வாக்கெடுப்பை ஒத்திவைக்க இலங்கை அரசுத்தலைவருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. 1988 செப்டம்பர் 2 இல் அரசுத் தலைவர் ஜே. ஆர். ஜயவர்தன இரு மாகாணங்களையும் இணைத்து வடக்கு கிழக்கு மாகாண சபை என்ற ஒரு மாகாணசபையாக நிருவகிக்க உத்தரவு பிறப்பித்தார்.
இந்த இணைந்த மாகாணசபைக்கான தேர்தல் 1988 நவம்பர் 19 இல் நடத்தப்பட்டது. இந்தியாவின் ஆதரவில் இயங்கிய ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி இத்தேர்தலில் வெற்றி பெற்றது. தமிழர் விடுதலைக் கூட்டணி இத்தேர்தலில் பங்கேற்கவில்லை.
1993 ஆம் ஆண்டில் வட-கிழக்குத் தவிர்ந்த ஏழு மாகாணங்களுக்கு 2வது தேர்தல்கள் இடம்பெற்றன. ஆறு மாகாணங்களில் ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது. மேற்கு மாகாணசபையை முக்கிய எதிர்க்கட்சிக் கூட்டணியான மக்கள் கூட்டணி கைப்பற்றியது.
தெற்கு மாகாணத்தில் ஐதேகவின் சில உறுப்பினர்கள் கட்சி மாறியதை அடுத்து அங்கு 1994 ஆம் ஆண்டில் சிறப்புத் தேர்தல் நடத்தப்பட்டது. மக்கள் கூட்டணி வெற்றி பெற்றது.
3வது மாகாணசபைத் தேர்தல்கள் 1999 இல் வடகிழக்குத் தவிர்ந்த 7 மாகாணங்களுக்கு நடத்தப்பட்டன. ஆளும் மக்கள் கூட்டணி வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணசபைகளைக் கைப்பற்றியது. ஏனைய மாகாணங்களில் சிறிய கட்சிகளின் துணையுடன் ஆட்சியமைத்தது.
2002ஆம் ஆண்டில் மத்திய மாகாண சபையின் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர்கள் மக்கள் கூட்டணிக்கான ஆதரவை விலக்கிக் கொண்டதை அடுத்து ஐதேக அங்கு ஆட்சியை மீண்டும் கைப்பற்றியது.
4வது மாகாணசபைத் தேர்தல்கள் ஏழு மாகாணங்களுக்கு 2004 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டன. இலங்கையின் ஆளும் கூட்டணியான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி அனைத்து சபைகளையும் கைப்பற்றியது.
வடக்கு மாகாணம் தவிர்ந்த எட்டு மாகாணங்களுக்கு 5வது மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்பட்டன. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி அனைத்து சபைகளையும் கைப்பற்றியது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இத்தேர்தல்களில் பங்கேற்கவில்லை.
காதலில் ஏற்பட்ட தகராறில், இலங்கை அகதி இளைஞரால் கல்லூரி வாலிபர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
திண்டுக்கல்லை சேர்ந்த பழனியப்பனின் மகன் செல்லபாண்டியன், 22. இவர், ஈரோடு மாவட்டம், கணபதிபாளையம் அருகே அறை எடுத்து தங்கி, விஜயமங்கலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வந்தார்.
இந்நிலையில் செல்லபாண்டியன் மர்மமான முறையில், கொடுமுடி ஈஞ்சம்பள்ளி அகதிகள் முகாம் அருகே உள்ள கிணற்றில், இறந்து கிடந்தார். மலையம்பாளையம் பொலிஸார் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
விசாரணையில், செல்லபாண்டியனின் தாய்மாமன் மகளுக்கு திருமண பேச்சுவார்த்தை நடந்தது. அந்த பெண்ணை, இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த விஜயனின் மகன் கஜேந்திரன், 23, என்பவர் விரும்பியதாக தெரியவந்தது.
இதில் ஆத்திரமடைந்த, கஜேந்திரனுக்கும், செல்லபாண்டியனுக்கும் தகராறு ஏற்பட்டது. இத்தகராறில் கஜேந்திரன், செல்லபாண்டியனை இரும்பு ஆயுதத்ததால் தாக்கி கொலை செய்து, கிணற்றில் வீசி சென்றது தெரியவந்தது.
தலைமறைவாக இருக்கும் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த கஜேந்திரனை, பொலிஸார் தேடி வருகின்றனர்.
மலையம்பாளையம் பொலிஸ் பொறுப்பதிகாரி சிவக்குமார் கூறியதாவது, காதலில் ஏற்பட்ட தகராறில், இரும்பால் தாக்கியதில் செல்லபாண்டியன் கொலை செய்யப்பட்டார். தலைமறைவாக இருக்கும் கஜேந்திரனை தேடி வருகிறோம், என்றார்.
யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த இரு தனியார் பஸ்கள் மீது இனம் தெரியாத நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியள்ளனர்.
யாழில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று (04) இரவு கொழும்பு நோக்கி ஒன்றன்பின் ஒன்றாக சென்று கொண்டிருந்த இரு பஸ்கள் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
யாழ். எழுதுமட்டுவாள் பகுதியில் இரு மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு இனம்தெரியாத நபர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இத் தாக்குதலால் ஒரு பஸ்ஸின் முன் பக்க கண்ணாடி முற்றாக சேதமடைந்துள்ளது.
இத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக தாக்குதலுக்கு உள்ளான பஸ்ஸில் பயணித்த பயணி ஒருவர் தெரிவிக்கையில்,
யாழ். நகரில் இருந்து குறித்த பஸ் புறப்பட முன்னர் அதன் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் ஆகியோருடன் வேறு சிலர் வாக்குவாதப்பட்டனர்.
அதன் பின்னர் பஸ் புறப்பட்டு எழுதுமட்டுவாள் பகுதியில் சென்று கொண்டிருந்த போதே இத் தாக்குதல் நடத்தப்பட்டது என குறித்த பயணி குறிப்பிட்டார்.
இத் தாக்குதல் சம்பவம் பற்றி பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டதாகவும் அவர்கள் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்ட பிறகே தம்மை மேற்கொண்டு பயணிக்க அனுமதித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இத் தாக்குதல் சம்பவத்தால் 50க்கும் மேற்பட்ட பயணிகள் ஒரு மணித்தியாலத்திற்கு மேல் காத்திருந்தே பயணத்தை தொடர்ந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.
யாழ். கொழும்பு பஸ்களில் பயணிகளை முன் பதிவு செய்தல், பஸ்களை உரிய நேரத்திற்கு செலுத்துதல், இருக்கைகள் பிரச்சினை குறித்து தொடர்ச்சியான முறைப்பாடுகள் எழுந்த வண்ணமுள்ளன.
இவ்வாறான கற் தாக்குதல் இதற்கு முன்னதாகவும் பல சந்தர்ப்பங்களில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் அரசியல் சாசனத்தின் 13ஆவது சட்டத் திருத்தம் நீர்த்துப் போவதற்கு இந்தியா அனுமதிக்காது என்று பிரதமர் அலுவலகத் துணை அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
இந்திய இலங்கை உடன்பாட்டின் கீழ் மாகாண சபைகளை அமைக்கவும் அவற்றுக்கு அதிகாரங்களை பகிர்ந்து அளிக்கவும் ஏற்பட்ட அந்த உடன்பாட்டையும், சட்டத் திருத்தத்தையும் இலங்கை அரசு ஒருதலைபட்சமாக திருத்த முடியாது என்று பிபிசிக்கு வழங்கிய சிறப்புப் பேட்டியில் அவர் தெரிவித்தார்.
அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு,இலங்கையிலுள்ள அனைத்து மக்களும் சம உரிமையுடன் வாழ்வதையே இந்தியா விரும்புகிறது என்றும் கூறும் அவர் இது இலங்கை அரச தரப்பினரிடம் பல முறை கூறப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
ராஜீவ் காந்தி மற்றும் ஜெயவர்தன ஆகியோரிடையே ஏற்பட்ட ஒப்பந்தமும் அதன் மூலம் ஏற்படுத்தப்பட்ட இலங்கை அரசியல் சாசனத்தின் 13 ஆவது சட்டத் திருத்தமும் நீர்த்துப் போக நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகக் கூறப்படுவது குறித்து இந்தியா அதிருப்தி அடைந்துள்ளது எனவும் அவர் கூறுகிறார்.
இலங்கை அரசு ஒரு நாடாளுமன்றத் தேர்வுக் குழுவை அமைத்து அதன் மூலம் இந்தச் சட்டத் திருத்தம் குறித்து விவாதிக்கவுள்ளது என்பதே, அந்தச் சட்டத் திருத்தத்தை நீர்த்துப் போகச் செய்யும் ஒரு நடவடிக்கையாகவே இந்தியாவால் பார்க்கப்படுகிறது என்றும் கூறுகிறார் அமைச்சர் நாராயணசாமி.
சில மாதங்களுக்கு முன்னர் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவுக்கு விஜயம் செய்தபோது கூட, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், இலங்கையில் அதிகாரப் பகிர்வை கொண்டுவரும் 13ஆவது சட்டத் திருத்ததை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் எனவும் அமைச்சர் நாராயணசாமி தமிழோசையிடம் சுட்டிக்காட்டினார்.
தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
தர்மபுரி மாவட்டம் செல்லன் கொட்டாயை சேர்ந்தவர் திவ்யா. இவரும் நாயக்கன் கொட்டாய் நத்தம் காலனியை சேர்ந்த இளவரசனும் காதலித்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 8ம் திகதி இளவரசன், திவ்யா இருவரும் பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர் பெண் கடத்தப்பட்டதாக திவ்யா தரப்பில் புகார் செய்யப்பட்டது. இதனை விசாரித்த பொலிசார் இருவரையும் சேர்ந்து வாழும்படி கூறி அனுப்பினர். இதையடுத்து, திவ்யாவின் தந்தை நாகராஜ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதை தொடர்ந்து, தர்மபுரியில் சாதி கலவரம் மூண்டு வடமாவட்டம் முழுவதும் பற்றி எரிந்தது. இந்த சம்பவம் நடந்து 10 மாதங்கள் கடந்த நிலையில், இளவரசன் வீட்டில் இருந்து திவ்யா, மருத்துவமனையில் இருக்கும் உறவினரை பார்த்துவிட்டு வருவதாகக் கூறி வெளியேறியுள்ளார்.
ஆனால் வீடு திரும்பவில்லை. மனைவியை காணவில்லை என்று பொலிசில் இளவரசன் புகார் கொடுத்தார். இதற்கிடையில் திவ்யாவின் தாய் தேன்மொழி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த ஆட்கொணர்வு மனுவின்படி கடந்த மார்ச் மாதம் இளவரசனும், திவ்யாவும் நீதிபதிகள் முன் ஆஜராயினர்.
அப்போது கணவனுடன் செல்வதாக கூறி திவ்யா சென்றார். பின்னர் மீண்டும் இந்த வழக்கு கடந்த மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது காதலனுடன் செல்ல விருப்பம் இல்லை. தாயுடன் செல்கிறேன் என்று திவ்யா நீதிபதிகளிடம் கூறினார். இதனால் காதல் ஜோடிகள் பிரிந்தனர். திவ்யா தாயுடன் செல்ல உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இதை தொடர்ந்து அந்த மனு நேற்று மீண்டும் நீதிபதிகள் ஜெயசந்திரன், எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது திவ்யா தாயுடன் நேரில் ஆஜரானார். திவ்யா சார்பாக வக்கீல் கே.பாலு ஆஜராகி, மகள் தாயுடன் செல்ல நீதிமன்றம் அனுமதி கொடுத்ததால் நாங்கள் மனுவை வாபஸ் பெற்றுக்கொள்கிறோம். இதற்கு அனுமதி தர வேண்டும் என்றார்.
இளவரசனின் வக்கீல் சங்கரசுப்பு ஆஜராகி, இந்த மனுவை வாபஸ் பெற அனுமதிக்க கூடாது. திவ்யா வன்னியர் சங்க வக்கீல்கள் வசம் உள்ளார். எனவே வக்கீல்கள் கூறுவதை திவ்யா அப்படியே நீதிமன்றத்தில் கூறுகிறார். அவருக்கு அறிவுசார் கவுன்சலிங் நடத்த உத்தரவிட வேண்டும் என்றார். இதை கேட்ட நீதிபதிகள் இந்த வழக்கில் நாளை தீர்ப்பு கூறுவதாக அறிவித்தனர்.
பின்னர் நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த திவ்யா கதறி அழுதார். பின்னர் கண்ணீருடன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, என் தந்தை இறந்துவிட்டார், தாய் தனியாக இருக்கிறார். அதனால் நான் அவருடன் செல்லவே விரும்புகிறேன். இளவரசனுடன் சேர்ந்து வாழ விரும்பவில்லை. என்னால்தான் எனது தந்தை தற்கொலை செய்து கொண்டார். இதனால் எனக்கு மன உளைச்சலாக உள்ளது.
எனது தந்தையின் நினைவாகவே உள்ளது. இதற்கு காரணமான நான் எனது தாயுடன் இருந்து எனது காலத்தை கழிக்க விரும்புகிறேன். என்னால் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்யவே விரும்புகிறேன். எக்காரணத்தை கொண்டும் இளவரசனுடன் செல்ல விரும்பவில்லை. இவ்வாறு அவர் பேட்டி அளித்தார்.
இந்தநிலையில் இளவரசனின் சடலம் தருமபுரி அரசக் கலைக்கல்லூரி பின்புறம் உள்ள தண்டவாளம் அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளது. தருமபுரி திவ்யாவின் காதல் கணவரான இளவரசன் தற்கொலை செய்து கொண்டாரா என்று பொலிஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தண்டவாளத்தின் அருகிலிருந்து இளவரசனின் மோட்டார் சைக்கிள் மற்றும் கைப்பையும் மீட்கப்பட்டுள்ளன. இளவரசனின் சட்டைப் பையிலிருந்து 2 கடிதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிசார் கூறியுள்ளனர்.
சிங்கம் 2 படத்தில் அனுஷ்காவுடன் சேர்ந்து டூயட் பாடியுள்ளாராம் சந்தானம்.
சிங்கம் பட வெற்றியை தொடர்ந்து, ஹரி- சூர்யாவின் கூட்டணியில் உருவான சிங்கம்-2 நாளை வெளிவர உள்ளது.
இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அனுஷ்கா, ஹன்சிகா நடித்துள்ளனர்.
இதுகுறித்து இயக்குனர் ஹரி கூறுகையில், படத்தில் அனுஷ்கா, ஹன்சிகா இருவருக்குமே சமமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதால், அவர்களுக்கு இடையே எந்தவித மோதலும் ஏற்படவில்லை.
ஆபத்தான காட்சிகளில் கூட சூர்யா டூப் வேண்டாம் என்று கூறி தானே நடித்தாராம்.
கடலில் 40 கிமீ தூரத்தில் மோட்டார் போட்டில் சென்று சூர்யா சேஸ் செய்யும் காட்சி ரசிகர்களை சீட்டின் நுனிக்கு வரவழைக்கும் என்று தெரிவித்துள்ளார்.
குறிப்பாக படத்தில் அனுஷ்காவும், சந்தானமும் டூயட் பாடுகிறார்களாம்.
Call Record செய்வது என்பது இன்று பல வழிகளில் பயன்படக்கூடிய ஒன்று. பல பிரச்சினைகளுக்காக Customer Care போன்றவற்றில் பேசும் போது இது நமக்கு கட்டாயம் தேவை.
Android போன்களை பயன்படுத்துவர்களுக்கு அதில் Call Record செய்ய முடியவில்லையே என்ற குறை இருக்கும். அந்த குறையை போக்க நாம் சில Application களை பயன்படுத்தலாம்.
1. RMC: Advance Call Recorder
இந்த Application உங்களின் அனைத்து Incoming மற்றும் Outcoming Call களையும் Record செய்து உங்கள் Memory Card – இல் Save செய்திடும். இதன் Record Quality நீங்கள் Loud Speaker பயன்படுத்தும் போது அதிகமாக இருக்கும்.
Record ஆனவற்றை எப்போது வேண்டுமானாலும் கேட்கலாம். விரும்பினால் Drop Box, Google Drive போன்றவற்றுடன் Sync செய்து கொள்ளலாம். அதே போல Manual Record வசதியும் இதில் உள்ளது.
2. Call Recorder
இதுவும் மேலே சொன்னது போலவே உங்களின் அனைத்து Incoming மற்றும் Outcoming Call களையும் Record செய்து உங்கள் Memory Card – இல் Save செய்திடும். இதில் உள்ள சிறப்பம்சம் ரெகார்ட் ஆனவற்றை நீங்கள் Lock செய்து கொள்ளலாம்.
3. Automatic Call Recorder
இந்த Application மூலம் குறிப்பிட்ட Contact Call களை மட்டும் Record செய்யலாம். இதனால் எல்லாவற்றையும் Record செய்து Save ஆகும் ஆகும் வேலை இருக்காது. Ignore contacts என்ற வசதி மூலம் எந்த Contact Call எல்லாம் Record ஆகவேண்டாம் என்று நாம் செட் செய்து விடலாம்.
அமெரிக்காவில் உரிய சான்றுகள் இல்லாமல்,சட்ட விரோதமாக பலர் குடியேறியுள்ளனர். இதே போல் 43 வயதான ஆன்டோனியோ லோபெஸ் சஜ் அமெரிக்காவில் குடியேறி லாஸ் ஏஞ்சல்சில் வாழ்ந்து வந்தார்.
கடந்த 2010-ம் ஆண்டு பாரில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் ‘பவுன்சர்கள்‘இவரை கொடூரமாக தாக்கினர். அப்போது ஒரு பவுன்சர் அவரை கீழே தள்ளி,தலையை மாறி மாறி தரையில் மோதினான். இந்த அசுர தாக்குதலில் அவரின் 25சதவீத மண்டையோடு நொறுங்கியது.
இந்த அளவுக்கு கொலை வெறி தாக்குதல் நடந்தும், உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை. ஆனால் நீண்ட கால தீவிர மருத்துவ சிகிச்சை பிறகு மறு பிறவி எடுத்த போதும், அவர் தனது பேச்சு திறனை இழந்து விட்டார். இந்த தாக்குதல் அவரின் நரம்பு மண்டலத்தில் நிரந்தர பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. இதனால் அவர் 24மணிநேர மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டியுள்ளது.
இதை அடுத்து தனக்கு நேர்ந்த கொடுமைக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறி,பவுன்சர்களை பணியில் அமர்த்தும் பாதுகாப்பு சேவை நிறுவனத்தின் மீது ஆன்டோனியோ வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு லாஸ் ஏஞ்சல்சில் உள்ள கோர்ட்டில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
தாக்குதலுக்கு உள்ளான ஆன்டோனியோவுக்கு 58மில்லியன் டாலர் (சுமார் ரூ. 5 கோடியே80 லட்சம்) வழங்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனை எதிர்த்து பாதுகாப்பு நிறுவனம் மேல்முறையீடு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தாக்குதலை நடத்திய பவுன்சர் தற்போது தலைமறைவாக உள்ளார். அவர் எந்த வித முறையான பயிற்சியும் பெற்றவரில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எகிப்தின் கடைசி அரச குடும்பத்தின் உறுப்பினரும், பதவியிறக்கப்பட்ட ஈரான் அரசரின் முதல் மனைவியுமான இளவரசி பாவ்சியா நேற்று முன்தினம் மரணம் அடைந்தார்.
அவருக்கு வயது 92. 1936-ல் எகிப்தை ஆண்ட அரசர் முதலாம் பாத்தின் மகள்தான் பாவ்சியா. பாவ்சியாவின் சகோதரரும், மருமகனும் வாரிசுகளாக தொடர்ந்து அரியணை ஏறினர்.
1953-ம் ஆண்டு அரச குடும்ப ஆட்சி கவிழ்க்கப்பட்டு, எகிப்து நாடு குடியரசு நாடாக பிரகடனம் செய்யப்பட்டது. 1939-ம் ஆண்டு ஈரான் இளவரசர் முகமது ரெசா பாலவியை பாவ்சியா மணந்தார்.
அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 1945-ல் விவாகரத்து பெற்றனர்.இதையடுத்து 1949-ம் ஆண்டு எகிப்து நாட்டைச் சேர்ந்த ராணுவ அதிகாரியை மணந்த பாவ்சியா எகிப்திலேயே தங்கியிருந்தார்.
எகிப்தின் அலெக்சாண்டிரியா நகரில் மரணம் அடைந்த பாவ்சியாவின் உடல் கெய்ரோவில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அரச குடும்பத்து உறுப்பினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.