இங்கிலாந்தில் விசா விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டதால், விசா விதிமுறைகளை பிரான்ஸ் அரசு தளர்த்தியுள்ளது.
இங்கிலாந்து அரசு சமீபத்தில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், நைஜீரியா, கானா ஆகிய 6 நாடுகளை சேர்ந்தவர்கள் வரும் நவம்பர் மாதம் முதல் விசாவுக்கு விண்ணப்பிக்கும் போது ரூ.2.5 லட்சம் டெபாசிட் செலுத்த வேண்டும் என்று அறிவித்தது.
மேலும் இங்கிலாந்தில் படித்து முடிக்கும் மாணவர்களுக்கு வேலை உத்தரவாதம் அளிக்க முடியாது, விசா பெற ஆங்கில தேர்வு எழுத வேண்டும் என்று பல விதிகளை அறிவித்தது.
இந்நிலையில் மேற்படிப்புக்காக பிரான்ஸ் செல்லும் மாணவர்களுக்கு விசா விதிகளை தளர்த்தி பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து பிரான்ஸ் தூதர் பிரங்காய்ஸ் ரெய்ச்சர் கூறுகையில், ஒவ்வொரு நாடும் அவர்களுக்குரிய விசா கொள்கைகளை கடைபிடிக்கின்றனர். இதில் எந்த நாட்டுக்கும் எவ்வித போட்டியும் கிடையாது.
தற்போதைய நடைமுறைப்படி, இங்கு உயர் கல்வி படிக்க வரும் மாணவர்களுக்கு பல்வேறு வசதிகளையும் செய்து தர திட்டமிட்டுள்ளோம் என்று அறிவித்துள்ளார்.
ஐக்கிய ராஜ்ஜியத்தில் அரசியல் தஞ்சம் கோரும் இலங்கையர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்கும்போது, போரின்போது அவர்களின் செயல்பாடு மற்றும் புலம் பெயர்ந்த நாடுகளில் அரசியல் நடவடிக்கைகளில் அவர்கள் காட்டிய ஈடுபாடு போன்ற காரணிகளை கருத்தில் கொள்ள வேண்டும் என்று பிரிட்டிஷ் நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது.
தஞ்சம் கோரிகளின் மனுக்களை தீர்மானிக்கும் முக்கிய அம்சமாக மனுதாரரின் நாடு குறித்த பரிந்துரையின்படி (country guidance) அதிகாரிகள் செயல்பட வேண்டும்.
சமீபத்தில் அளிக்கப்பட்ட தீர்ப்பில் விடுதலைப் புலிகள் அமைப்போடு தொடர்புடையவர்கள் மட்டுமல்லாது வெளிநாடுகளிலிருந்தபடி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள்கூட இலங்கைக்கு அனுப்பப்பட்டால் துன்புறுத்தப்படலாம் என்று குடியேற்றம் தொடர்பான உயர் தீர்பாயம் தீர்ப்பளித்துள்ளதாக வழக்கறிஞர் அருண் கணநாதன் பிபிசியிடம் தெரிவித்தார்.
தஞ்சம்கோரிகள் தொடர்பாக நீதிமன்றங்கள் அளிக்கும் தீர்ப்புகள் பெரும்பாலான சமயங்களில் அந்தக் குறிப்பிட்ட வழக்குக்கு மட்டுமே பொருந்தக் கூடியது என்று பிரிட்டிஷ் அதிகாரிகள் கூறிவருகின்றனர்.
இந்த தீர்ப்பை எதிர்த்து ஐக்கிய ராஜ்ஜியத்தின் உள்துறை அமைச்சு மேன்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது. இந்த வழக்கு விசாரணையின்போது, தஞ்சம் கோரிகள் குறித்த பரிந்துரையை வழங்க 9 நாட்கள் விசாரணை நடந்ததாகவும், இந்த வழக்கின் தீர்ப்பு மற்றவர்களுக்கும் பொருந்தக் கூடியது என்றும் அருண் கணநாதன் தெரிவித்தார்.
நிராகரிக்கபப்பட்ட தஞ்சம்கோரிகளை இலங்கைக்கு திரும்ப அனுப்பக் கூடாது என்றும் மனித உரிமை அமைப்புகள் அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றன.
இந்தியா, மேற்கிந்திய தீவுகள், இலங்கை ஆகிய நாடுகள் பங்கேற்கும் முத்தரப்பு கிரிக்கெட் போட்டி, மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வருகிறது. 4-வது போட்டியில் இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகள் நேற்று மோதின. நாணயச்சுழற்சியில் வென்ற மேற்கிந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் சிகார் தவான் களமிறங்கினார்கள். இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இவர்கள் ஜோடியில் இந்திய அணி 123 ஓட்டங்கள் சேர்த்தது. சிறப்பாக விளையாடிய தவான் 69 ஓட்டங்களுடனும், சர்மா 46 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.
அடுத்து வந்த ரெய்னா (10), கார்த்திக் (6), விஜய் (27), சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். மறுமுனையில், அணித்தலைவர் விராட் கோலி அதிரடியாக விளையாடி 102 ஓட்டங்களை எடுத்து, கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். இதில் 13 பவுண்டரி, 2 சிக்சர்கள் அடங்கும். இதனால் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 311 ஓட்டங்கள் எடுத்தது.
இதை அடுத்து 312ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மேற்கிந்திய தீவுகள் அணி ஆட்டத்தை ஆரம்பித்தது. 10 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 56 ஓட்டங்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது.
மழை ஓய்ந்த பிறகு ஆட்டம் 39 ஓவராக குறைக்கப்பட்டது. அதே போல் 274 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் விளையாடிய நடுவரிசை வீரர்கள், நிதானமாக விளையாடத் தவறினார்கள். இதனால் மேற்கிந்திய தீவுகள் அணி 39 ஓவர் முடிவில் அனைத்து விக்கட்டுளையும் இழந்து 171ஓட்டங்ளை மட்டுமே எடுத்தது. எனவே இந்தியா அணி 102 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
குவைத் – ரிக்கா பகுதியில் வைத்து தனது தொழில் தருணரின் காரில் இருந்து 6,500 குவைத் தினார் பணத்தை திருடிய இலங்கை ஆண் பணியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த திருட்டுச் சம்பவம் குறித்து ரிக்கா பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பணத்தை வாகனத்தில் வைத்துவிட்டு ஆடை மாற்றுவதற்கு வீட்டுக்குள் சென்றவேளை தனது பணம் திருடப்பட்டதாக தொழில் தருணர் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட இலங்கையர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
நாளை (07) நள்ளிரவு தொடக்கம் 48 மணித்தியாலங்கள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக ரயில் தரப்படுத்தல் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.
சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து இந்த பணிப்பகிஸ்கரிப்பு மேற்கொள்ளப்படும் என ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் ஜானக பெனாண்டோ தெரிவித்தார்.
ரயில் தரப்படுத்தல் தொழிற்சங்க ஒன்றியத்துடன் தொடர்புடைய 11 தொழிற்சங்கங்கள் இந்த பணிப்பகிஸ்கரிப்பில் பங்கேற்கவுள்ளதாக அவர் கூறினார்.
தமது பிரச்சினைகள் தொடர்பில் நேற்று (05) அதிகாரிகளுடன் மூன்று மணிநேர பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போதும் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டார்.
எனினும் இதற்கு முன்னரும் பல தடவைகள் பணிப்பகிஸ்கரிப்பு மேற்கொள்ளப் போவதாக ரயில் தரப்படுத்தல் தொழிற்சங்க ஒன்றியம் அறிவித்த போதும் பின்னர் அவற்றை கைவிட்டமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை – இந்திய உடன்படிக்கையை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.
வடக்கு மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படவுள்ள செய்தியை பஷில் ராஜபக்ஷ குர்ஷித்திடம் தெரிவித்துள்ளார்.
13வது அரசியலமைப்பு சட்ட மூலத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும் சல்மான் குர்ஷித் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் 13வது அரசியலமைப்பு சட்டமூலத்தை வலுவிலக்கச் செய்யும் வகையில் இலங்கை செயற்படக் கூடாது என சல்மான் குர்ஷித் வலியுறுத்தியுள்ளார்.
தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் இலங்கை அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக் குழுவில் அனைத்து அரசியல் கட்சிகளும் அங்கம் வகிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
நேபாளத்தின் முன்னாள் பிரதமரும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவருமான மாதேவ் குமார் நேபால் இன்று வவுனியாவில் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
யாழ்ப்பாணத்தில் நாளை இடம்பெறவுள்ள இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் 70ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வுகள் இடம்பெறவுள்ள நிலையில் விசேட விருந்தினராக கலந்து கொள்ளும் பொருட்டு இலங்கை வந்திருந்த அவர் இன்று வவுனியாவில் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளை சந்தித்திருந்தார்.
இதன்போது உரையாற்றிய அவர் நோபளத்தில் 125இற்கும் மேற்பட்ட சமூகங்கள் வாழ்ந்த போதிலும் முரண்பாடுகள் தோற்றம் பெறவில்லை. முரண்பாடுகளுக்கு வன்முறையோ யுத்தமோ தீர்வாகாது.
அனைவரையும் மதித்தும் ஒவ்வொருவருடைய சமய கலாசாரங்களைள மதித்து மனிதாபிமானத்துடன் அனைவரும் நடத்தப்படவேண்டும். இனக்குழுமங்களுக்கிடையில் விரோத தன்மை அற்றதாக உருவாக்கப்படும் போது மனிதாபிமானம் வளரும் என தெரிவித்திருந்தார்.
இதேவேளை, நோபாளத்தில் இடம்பெற்ற அரசியல் நிலைமைகள் தொடர்பிலும் கலந்து கொண்டிருந்த சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு விளக்கமளித்திருந்தார். இதனையடுத்து வவுனியா நகரசபையின் முன்னாள் நகரபிதா எஸ்.என்.ஜி.நாதன் கருத்து தெரிவிக்கையில்,
தற்போது யுத்தம் நிறைவு பெற்றதன் பின்னராக காலத்தில் தமிழ் மக்களின் பிரதேசங்களில் பௌத்த சிலைகளை வைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுபான்மை சமூகங்கள் அரசிடம் எடுத்தியம்பியும் எவ்வித பலனும் இன்றி அரசு மௌனியாக உள்ளது என தெரிவித்ததுடன் இலங்கை அரசியல் நிலைமைகள் தொடர்பில் விளக்கமளித்திருந்தார்.
இச்சந்திப்பில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர், நேபாள முன்னாள் பிரதமரின் குடும்பத்தினர் உட்பட வவுனியா சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் போட்டி கிண்ணத்தை இந்தியா வென்றது. இந்த வெற்றி இந்திய கிரிக்கெட் அணியின் உற்சாகத்தை மட்டுமில்லாமல், அவர்களின் பயிற்சியாளர் டன்கன் பிளட்சரின் மதிப்பையும் உயர்த்தியுள்ளது.
கடந்த 2011-ம் ஆண்டின் உலகக் கிண்ண வெற்றிக்குப் பின்னர் பிளட்சர் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றவுடன் தொடர்ந்த தோல்விகள் குறித்து விமர்சனம் செய்யப்பட்டார். ஆயினும்,தற்போது அணியின் வெற்றிகள் இவரது பதவிக்காலத்தை நீட்டிக்கும் என்று கூறப்படுகின்றது. கடந்த 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், இரண்டு ஆண்டு கால ஒப்பந்தத்தில் ஜிம்பாபாவேயின் முன்னாள் கிரிக்கெட் வீரரான பிளட்சர் இந்தியாவின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
அதன்பின்னர், இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவுடனான டெஸ்ட் போட்டிகளிலும், உள்நாட்டில் விளையாடிய இங்கிலாந்து நாட்டுடனான போட்டியிலும் இந்தியா தோல்வியைத் தழுவியது. பிளட்சருக்கு பதிலாக வேறு பயிற்சியாளர் நியமிக்கப்படலாம் என்ற யூகத்தின் நடுவே, அவுஸ்திரேலியாவுடனான உள்நாட்டுப் போட்டியில் இந்தியா 4-0 என்ற கணக்கில் வெற்றியைப் பெற்றது.
அப்போது, பிளட்சரின் பதவிக்காலம் ஒரு வருடம் நீட்டிக்கப்பட்டது. இப்போது சாம்பியன் கிண்ணத்தை பெற்ற வெற்றி, பிளட்சரின் பதவிக்காலத்தை மேலும் ஒரு வருடம் நீட்டிக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பிளட்சர் தனது பணியைத் திறம்பட செய்துவருவதாக இந்திய கிரிக்கெட் சங்கம் நேற்று பத்திரிகையாளர் செய்தியில் தெரிவித்துள்ளது. கேப்டன் டோனியும் இவரது செயல்பாடுகள் குறித்து மகிழ்ச்சி தெரிவித்ததாகக் குறிப்பிடப்படுகிறது. வரும் செப்டெம்பரில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
50 ஓவர் உலகக் கிண்ண போட்டிக்கு இன்னும் ஒன்றரை வருடங்களே இருக்கும்போது புதிய பயிற்சியாளரை நியமிக்க வேண்டிய அவசியமில்லை. பிளட்சரின் வித்தியாசமான அணுகுமுறை நல்ல பலனைத் தந்துள்ளது. அது இங்கிலாந்தின் சாம்பியன் போட்டியில் வெளிப்பட்டது என்று இந்திய கிரிக்கெட் போர்டு உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
அதேபோல், பயிற்சியாளரும் அவரது உதவியாளர்களும் குறைந்த கால ஒப்பந்தத்தில் செயல்படுவதைவிட, குறைந்தது நான்கு வருட ஒப்பந்தத்தில் செயல்பட்டால் நல்லதொரு அணியை உருவாக்கமுடியும் என்ற எண்ணமும் குழுவின் அங்கத்தினர்களுக்குத் தோன்றியுள்ளது. தங்களது பணியின் நிரந்தரத் தன்மையினால் அவர்கள் திறமையுடன் செயல்படமுடியும் என்று கிரிக்கெட் போர்டு கருதுகின்றது. ஆயினும், பயிற்சிக் குழுவினர் அனைவரும் இதில் ஒத்துப்போனால் மட்டுமே இந்த எண்ணத்தை செயல்படுத்த முடியும்.
கடந்த 13 ஆண்டுகளில் சர்வதேச அளவில் வறுமையில் வாடுவோர் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. கடந்த 2000ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.நா. உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட உலக நாடுகளின் தலைவர்கள், ஆயிரமாண்டு வளர்ச்சி இலக்கை நிர்ணயிக்க ஒப்புக் கொண்டனர்.
இந்த இலக்கை 2015ஆம் ஆண்டுக்குள் எட்டுவது என முடிவு செய்யப்பட்டது.வறுமை ஒழிப்பு, கல்வி மேம்பாடு, பாலின சமத்துவம், தாய், சேய் நலம், சுற்றுச்சூழல் ஸ்திரத்தன்மை, எய்ட்ஸ் மற்றும் மலேரியா கட்டுப்பாடு மற்றும் வளர்ச்சிக்கான சர்வதேச ஒத்துழைப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
ஆயிரமாண்டு இலக்கு தொடர்பாக இந்த ஆண்டுக்கான அறிக்கையை ஐ.நா. வெளியிட்டுள்ளது. இந்த இலக்குகளில் சில முழுமையாக எட்டப்பட்டுள்ளன. அதை அடைவதற்காக அரசு, சமுதாயம் மற்றும் தனியார் துறை ஆகியவற்றின் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் எந்த வகையில் உதவின என்பது குறித்து இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரம், இன்னமும் எட்டப்படாமல் உள்ள சில இலக்குகளை அடைவதற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வறுமையில் வாடுவோரின் எண்ணிக்கையை பாதியாகக் குறைத்தல் மற்றும் 200 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு தூய்மையான குடிநீர் வழங்குதல் உள்ளிட்ட சில இலக்கு ஏற்கெனவே எட்டப்பட்டுள்ளன. 2010 நிலவரப்படி70 கோடி பேர் மட்டுமே வறுமையில் உள்ளனர். இது 1990இல் இருந்த அளவில் பாதிதான். மலேரியா, காச நோய் ஆகியவற்றால் ஏற்படும் உயிரிழப்பைக் குறைத்தல்,எய்ட்ஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துதல் உள்பட சுகாதாரத் துறையில் நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கை அடைய தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2015ஆம் ஆண்டுக்குள் இலக்கை எட்ட முடியும்.
கடந்த 2000 முதல்2010ஆம் ஆண்டுக்குள் மலேரியா நோய்க்கு உயிரிழப்போர் எண்ணிக்கை 25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. 1.1லட்சம் பேர் இந்த நோயிலிருந்து விடுபட்டுள்ளனர்.கடந்த 1995மற்றும்2011க்கு இடைப்பட்ட காலத்தில்5.1 கோடி காச நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 2 கோடி உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது. எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை3.4 கோடியிலிருந்து80 லட்சமாகக் குறைந்துள்ளது. 2000 முதல்2010 வரையிலான காலத்தில் குடிசைகளில் வசிக்கும் 20 கோடி பேர் சுத்தமான குடிநீர், கழிப்பிட வசதி, போதுமான தங்குமிட வசதி பெற்றுள்ளனர். இது 10 கோடி என்ற இலக்கைப்போல 100 சதவீதம் அதிகம் ஆகும்.
தாய்சேய் நலம், அனைவருக்கு கல்வி, கழிப்பிட வசதி மற்றும் பாலின சமத்துவம் ஆகியவற்றில் இலக்கு எட்டப்படவில்லை என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பான் கி மூன் கூறுகையில்,ஒரு சில இலக்குகள் இன்னும் எட்டப்படவில்லை. எனினும், அவை எட்டக்கூடிய தூரத்தில் தான் உள்ளன. இதற்காக
சௌந்தர்ராஜன் தயாரிப்பில், “சில்லுன்னு ஒரு காதல்” கிருஷ்ணா இயக்கத்தில் ஆரி, ஷிவதா நடிக்கும் படம் ‘நெடுஞ்சாலை’.
சத்யா இசையமைத்துள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை, வடபழனியில் உள்ள கமலா திரையரங்கில் நடைபெற்றது.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்துகொண்டு பாடல் சி.டி.யை வெளியிட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பெற்றுக்கொண்டார்.
பின்னர் பேசிய ஏ.ஆர்.ரஹ்மான், “இயக்குநர் கிருஷ்ணாவை தாணு சார் தான் என்கிட்ட அறிமுகப்படுத்தி வைத்தார். அவர் கதை சொல்லும்போது எமோஷனாக சொல்வார். அது எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.
பெரிய நடிகர்களின் படத்தைப் போல ‘நெடுஞ்சாலை’ படத்தை தரமாக எடுத்திருக்கிறார்கள் . படம் பண்ணினால் தரமா பண்ணனும்.
இப்போது ரெண்டு, மூணு படம் பேசிக்கிட்டு இருக்கேன். இந்தியில் பத்து படம் தயாராக இருந்தாலும் புதுசா, குவாலிட்டியா படம் இருந்தால்தான் போறேன். இந்தப் படத்துல கடுமையான உழைப்பு தெரிகிறது” என்றார்
ஜெயம் ரவி நடிக்கும் “பூலோகம்” படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. ஒஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் இப்படத்தினை தயாரித்து வருகிறார்.
வடசென்னையில் வசிக்கும் ஒரு குத்துச்சண்டை வீரனின் கதை தான் இந்தப் படம். இதனால் ஜெயம் ரவியுடன் மோதுவதற்காக 7 அடி உயரம், 150 கிலோ எடையுள்ள ஹொலிவுட் நடிகர் நேதன் பிரன்டன் ஜோன்ஸ் சென்னை வருகிறார்.
இவர் “டிராய்”, ஜாக்கிசானுடன் “போலீஸ் ஸ்டோரி 4”, டோனி ஜாவுடன் “தூம் யூம் கோங்”, ஜெட்லியுடன் “பியர்லெஸ்” ஆகிய படங்கள் உட்பட பல ஹொலிவுட் படங்களில் நடித்தவர்.
“பூலோகம்” படத்தில் ஜெயம் ரவியுடன் மோதும் ஒரு சண்டைக் காட்சியில் நடிப்பதற்காக மட்டும் அவருக்கு 1 கோடியே 50 லட்சம் சம்பளம் பேசப்பட்டுள்ளது.
இருவரும் மோதுவது போல் நடிக்கும் குத்துச்சண்டைப் போட்டியை சென்னையில் படமாக்க இருக்கிறார்கள். இதற்காக, பிரசாத் ஸ்டுடியோவில் இரண்டு ஏக்கர் நில பரப்பளவில், 3 கோடி ரூபாய் செலவில் மிகப் பிரம்மாண்டமான உள் விளையாட்டு அரங்கு அமைக்கப்பட்டு வருகிறது.
இதற்காக கலை இயக்குனர் மோகன் தலைமையில், 140 தொழிலாளர்கள் இரவு பகலாக பணிபுரிந்து வருகிறார்கள். இந்த சண்டைக் காட்சியை ஹொலிவுட் ஸ்டன்ட் மாஸ்டர் லார்னல் ஸ்டோவல் படமாக்க இருக்கிறார்.
திருமணமாகி இரண்டு மாதங்களில் பெண்ணொருவர் குழந்தையைப் பிரசவித்துள்ளார். இந்த விபரீதச் சம்பவம் வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் வவுனியாவைச் சேர்ந்த ஒருவரை கடந்த மே மாதம் திருமணம் செய்துள்ளார்.
இந்நிலையில் குடும்ப வாழ்க்கையை தொடர முன்னர் தனது வயிற்றில் கட்டி உள்ளதாகவும் அதனை சத்திரசிகிச்சை செய்து அகற்றவுள்ளதாகவும் அவர் கணவனுக்கு கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனைத் தொடர்ந்து குறித்த பெண் திடீரென்று நேற்று முன்தினம் அதிகாலை வவுனியாவில் குழந்தையென்றை பிரசவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியுள்ள கணவன் உடனடியாகவே குழந்தையையும் குறித்த பெண்ணையும் வாகனம் ஒன்றில் யாழ்ப்பாணம் அழைத்து வந்து மாமியார் வீட்டில் நடந்தவற்றைக் கூறி மனைவியையும் அவர் பிரசவித்த குழந்தையையும் விட்டுச் சென்றுள்ளார்.
அத்தோடு அவர் சீதனங்களாக பெற்ற நகை பணம் என்பவற்றையும் திரும்ப கொடுத்துள்ளார்.இதுதொடர்பாக பெண்ணின் வீட்டார் தீவிரமாக விசாரித்த போது யாழ்ப்பாணத்திலுள்ள ஆச்சிரமமென்றிலுள்ள துறவியொருவரே காரணமென்று தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்து பெண்ணின் வீட்டார் குறித்த துறவியை சென்று விசாரித்த போது ஆரம்பத்தில் அதனை ஏற்க மறுத்த அவர் பின்னர் ஒருவழியாக அதனை ஏற்றுக் கொண்டு குழந்தைக்கு தானே தகப்பன் என்றும் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து உடனடியாகவே அவர் தனது ஆச்சிரமத்தை பூட்டிவிட்டு திறப்புக்களை அருகிலுள்ளவர்களிடம் ஒப்படைத்து விட்டு தலைமறைவாகி விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தனுஷின் இந்தி படமான ராஞ்சனாவுக்கு பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்டுள்ளது.தனுஷ்- சோனம் கபூர் ஆகியோரின் நடிப்பில், ஆனந்த் ராய் இந்தியில் தயாரித்துள்ள படம் ராஞ்சனா.
இப்படம் கடந்த வாரம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்திற்கு பாகிஸ்தான் சினிமா தணிக்கை குழு தடை விதித்துள்ளது.
இதுகுறித்து தணிக்கை குழு அனுப்பிய கடிதத்தில் ராஞ்சனா படத்தில் முஸ்லிம் பெண் ஒருவர் இந்து பையனை காதலிப்பது போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்றுக் கொள்ள முடியாது, எனவே இப்படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை பாகிஸ்தானில் வெளியிட உரிமை பெற்ற ஐ.எம்.ஜி.சி. குளோபல் என்டடெயின்மென்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி அம்ஜத் ரஷீத் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணியின் மசாஜ் நிபுணர் பாலியல் குற்றச்சாட்டின் பேரில் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.சம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பியன்ஸ் கிண்ணத்திற்காக பாகிஸ்தான் அணி இங்கிலாந்திற்குச் சென்றிருந்த வேளையில் லண்டனில் தங்கியிருந்த ஹோட்டல் ஒன்றிலேயே பாகிஸ்தானின் மசாஜ் நிபுணர் இந்தக் குற்றத்தில் ஈடுபட்டுள்ளார்.
குறித்த ஹோட்டலில் பாகிஸ்தான் அணி தங்கியிருந்த போது, மலாங் அலி என்ற குறித்த மசாஜ் நிபுணர் அந்த ஹோட்டலில் பெண் ஊழியர் ஒருவரை பாலியல் ரீதியாக தொல்லை செய்ததாகவும், அவ்விடயம் தொடர்பாக அந்தப் பெண் அதுகுறித்து முறைப்பாடு செய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதன் பின்னர் அது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நிர்வாகம் அது குறித்து விசாரணைகளை மேற்கொண்டதாகவும், அதில் அவர் குற்றம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அதன் காரணமாக அவர் உடனடியாக இங்கிலாந்தை விட்டுத் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அவர் பாகிஸ்தானுக்குத் திரும்பியதும் அவர் மீது பாகிஸ்தான் கிரிக்கெட் சபை விசாரணை மேற்கொண்டதாகவும், அதன் பின்னர் அவர் இந்தப் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
எல்லை பிரச்னையில் சீனாவின் கோபத்தை இந்தியா தூண்டக்கூடாது என சீன இராணுவ தளபதி லுயோ யுவான் தெரிவித்துள்ளார்.சீனாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி, இந்தியா- சீனா எல்லை பிரச்னை உள்ளிட்ட விஷயங்கள் குறித்து அந்நாட்டு இராணுவ அமைச்சருடன் இன்று அவர் பேச்சு வார்த்தை நடத்த உள்ளார்.
இதற்கிடையே சீன இராணுவ தளபதி லுயோ யுவான் நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில், இரு நாட்டுக்கிடையே உள்ள எல்லை பகுதியில் 90 ஆயிரம் சதுர கி.மீ பரப்பு இந்தியாவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எல்லை பகுதியில் இராணுவ வீரர்களின் எண்ணிக்கையை இந்தியா அதிகரித்து, சீனாவின் கோபத்தை தூண்டக்கூடாது
சீனாவின் அச்சுறுத்தலால் தான் இராணுவ செலவை அதிகரித்துள்ளதாக இந்தியா கூறுகிறது.எதைக் கூற வேண்டும், எதை கூறக்கூடாது என்ற விஷயத்தில் இந்தியா எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.