கமலிடம் மன்னிப்பு கேட்ட காஜல் அகர்வால்

விஸ்வரூபம்-2 படத்தினை தொடர்ந்து லிங்குசாமி தயாரிக்கும் படத்தினை இயக்கி நடிக்க திட்டமிட்டுள்ளார் கமல்ஹாசன்.

அவ்வை சண்முகி போன்று முழுநீள காமெடி படமாக உருவாகும் இப்படத்திற்கு உத்தம வில்லன் என தலைப்பு வைத்துள்ளனர்.

மேலும் இந்த படத்திற்கு கதை, வசனம் எழுத இருக்கிறார் கிரேஸி மோகன்.

முதல் முறையாக கமலுடன் கைகோர்க்கிறார் நடிகர் விவேக். படத்தின் தலைப்பு குறித்து பல தககவல்கள் வெளியாகியுள்ளன.

நகைச்சுவைப் படம் என்பதால் உத்தம வில்லன் என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க இருக்கிறார் என்று பரபரப்பாக பேசப்பட்டது.

ஆனால் தற்போது காஜல் அகர்வால் நடிக்கவில்லையாம்.

ஜில்லா, ஆல் இல் ஆல் அழகுராஜா உட்பட சில தெலுங்குப் படங்களிலும் பிஸியாக நடித்துக் கொண்டிருப்பதால், கால்ஷீட் பிரச்னை வந்துவிட்டதாம்.

எனவே நடிக்க முடியாமல் போனதற்காக, கமலிடம் மன்னிப்பு கேட்டுள்ளாராம்.

இதனையடுத்து நாயகி மற்றும் பிற கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜியா கான் தற்கொலைக்கு காரணமான நடிகர் சூரஜ் கைது

தற்கொலை செய்து கொண்ட பாலிவுட் நடிகை ஜியா கானை அவரது காதலர் கற்பழித்த விவரம் அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தின் மூலம் பொலிசுக்கு நேற்று தெரியவந்தது.

பாலிவுட் நடிகை ஜியா கான் கடந்த 3ம் திகதி மும்பை ஜுஹூ பகுதியில் உள்ள தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

காதல் தோல்வி காரணமாக விரக்தி அடைந்து அவர் தனது வாழ்வை முடித்துக் கொண்டார். அவர் சாகும் முன்பு தனது கையால் எழுதிய 6 பக்கம் கொண்ட கடிதத்தை அவரது குடும்பத்தார் கண்டுபிடித்து அதை பொலிசில் ஒப்படைத்தனர். அந்த கடித்தத்தில் அதிர்ச்சியூட்டும் பல தகவல்கள் உள்ளன.

ஜியா தனது காதலர் சூரஜ் பஞ்சோலி பிற பெண்களுடன் சேர்ந்து தன்னை ஏமாற்றியதை தாங்கிக் கொள்ள முடியாமல் இருந்தார். மேலும் சூரஜ் தன்னை தினமும் சித்ரவதை செய்ததாக கடிதத்தில் எழுதி வைத்துள்ளார்.

சூரஜ் தன்னை கற்பழித்ததாக கடிதத்தல் ஜியா தெரிவித்துள்ளார். மேலும் சூரஜின் குழந்தையை கருவிலேயே கலைத்ததையும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அதையடுத்து நடிகர் ‌ சூரஜ் மும்பை ‌பொலிசார்‌ நேற்று கைது ‌செய்தனர். இவர், பிரபல நடிகர் ஆதித்ய பன்சாலி, நடிகை ஜரினா வகாபின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பாய் நகரில் கட்டிடம் இடிந்து 4 பேர் பலி

mumbai

இந்தியாவின் மும்பாய் நகரில் கட்டிடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் குறைந்தபட்சம் 4 பேராவது கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அல்தாஃப் மன்ஷில் என்னும் 5 மாடிக்கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் மேலும் 6 பேர் காயமடைந்துள்ளனர்.

திங்களன்று மாலை நடந்த இந்தச் சம்பவத்தை அடுத்து தேடும் பணிகள் இரவிரவாகத் தொடர்ந்தன.

இடிபாடுகளில் வேறு யாராவது இன்னமும் அகப்பட்டிருக்கிறார்களா என்று மீட்புப் பணீயாளர்கள் தேடி வருகிறார்கள்.

இந்தக் கட்டிடம் இடிந்து விழுந்ததற்கான காரணம என்னவென்று இன்னமும் தெரியவில்லை, ஆனால், நிர்மாணப் பணிகளில் உள்ள குறைபாடு காரணமாக கட்டிடங்கள் இடிந்துவீழ்வது என்பது இந்தியாவில் வழக்கமான ஒன்று என்று செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.

கடுமையான மழை காரணமாக மீட்பு நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

மும்பாயில் கடந்த ஏப்ரலில் சட்டவிரோதமாக, அளவுக்கு அதிகமான உயரத்தில் கட்டப்பட்ட கட்டிடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 74 பேர் கொல்லப்படனர்.

அந்தச் சம்பவம் தொடர்பாக 9 பேரை பொலிஸார் கைது செய்திருந்தனர்.

இந்தியாவில் வீடுகளுக்கான தேவை மிகவும் அதிகமாக இருக்கும் அதேவேளை, நிர்மாணத்துறையிலும் கணிசமான ஊழல் காணப்படுகிறது.

காதல் சந்தியாவை துரத்தும் சந்தானம்!

Santhiya

தமிழ் சினிமாவில் மனோரமா, சச்சு போன்ற காமெடி நடிகைகளைத் தொடர்ந்து கோவை சரளா வந்தார். ஆனால் அவருக்குப்பிறகு காமெடிக்கு சரியான நடிகை இல்லை. அதனால், பிரதான காமெடியன்களே தங்களுடன் ஜோடியாக நடிக்க நல்ல காமெடி நடிகை கிடைக்காமல் அல்லாடுகிறார்கள். வடிவேலு பிசியாக இருந்த நேரத்தில் குண்டு ஆர்த்தியை சில படங்களில் நடிக்க வைத்தார். ஆனால் இப்போது அவரையும் காணவில்லை.

இந்தநிலையில் தற்போது காமெடியில் முன்னணி வகித்து வரும் சந்தானம், சில நடிகைகளை தன்னுடன் நடிக்க வைத்து வந்தார். அதில் தனக்கு ஈடு கொடுத்து நடிக்கக்கூடிய நடிகையாக இருந்தால் அவர்களுக்கு தொடர்ந்து சான்ஸ் கொடுக்கலாம் என்று நினைத்தார். அப்படி பார்த்ததில் காதல் சந்தியாவின் காமெடி சந்தானத்துக்கு ரொம்ப பிடித்து விட்டதாம்.

ஏற்கனவே மலையாளத்தில் நிறைய காமெடி படங்களில் நடித்து தேர்ச்சி பெற்றிருந்த சந்தியா, யா யா படத்தில் அற்புதமாக காமெடி செய்தாராம். அதனால், அவரை தொடர்ந்து தன்னுடன் கூட்டணி அமைக்குமாறு இழுத்து வருகிறார் சந்தானம்.

ஆனால் சந்தியாவோ மலையாளத்தில் இப்போதும் வெயிட்டான கதாபாத்திரங்களில் நான் நடித்து வருகிறேன். இந்த நேரத்தில் முழுநேர காமெடி நடிகையாக மாறினால் எனது குணச்சித்திர நடிகை என்ற இமேஜ் போய்விடும் என்று சந்தானத்துக்கு வளைந்து கொடுக்காமல் தொடர்ந்து இழுத்தடித்து வருகிறாராம். இருப்பினும் நடிகையை விடாமல் துரத்துகிறாராம் சந்தானம்.

தனிமையில் இருந்த மூதாட்டி கொலை செய்யப்பட்டு நகைகள் கொள்ளை: யாழில் சம்பவம்..

தனிமையில் வீட்டிலிருந்த வயோதிபப் பெண் கொலை செய்யப்பட்டு அவரிடமிருந்த 20 பவுண் பெறுமதியான தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவமானது வல்வெட்டித்துறை, ஊரணிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சோதிலிங்கம் தெய்வமலர் (வயது 69) என்ற மூதாட்டியே கொலை செய்யப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் தெரிவிக்கையில், நேற்று அதிகாலை இவரது மகள் தொழில் நிமித்தம் வெளியில் சென்றுள்ளார். இதன்போது குறித்த மூதாட்டி தனிமையில் இருந்துள்ளார்.

இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் மூதாட்டியைக் கொலை செய்து அவர் அணிந்திருந்த தங்க நகைகளை கொள்ளை இட்டுச் சென்றுள்ளனர்.

சம்பவ இடத்துக்குச் சென்ற பருத்தித்துறை மாவட்ட நீதிபதி திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன் விசாரணைகளை மேற்கொண்டதுடன் பிரேத பரிசோதனைக்காக சடலத்தை யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டார்.

இக் கொலை சம்பவம் தொடர்பில் யாரும் கைது செய்யப்டவில்லை எனவும் குறித்த வயோதிபப் பெண்ணின் மகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 

இந்திய கிரிக்கெட் அணி தலைவர் டோணியிடம் விசாரணை நடத்தும் பிசிசிஐ

Dhoni

இந்திய கிரிக்கெட் அணி தலைவர் டோணிக்கு சில நிறுவனங்களில் இருக்கும் பங்குகள் குறித்து அவரிடம் விசாரணை நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை முடிவு செய்துள்ளது.
இது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் இடைக்கால தலைவர் ஜக்மோகன் டால்மியா கூறுகையில் டோணிக்கு எதிராக எழுந்துள்ள புகார்கள் குறித்து சபை விசாரணை நடத்தும்.

சம்பியன்ஸ் கிண்ண போட்டிகள் நடக்கையில் அணியை தொந்தரவு செய்ய விரும்பவில்லை என்றார். டோணி விவகாரம் தொடர்பாக சபை உறுப்பினர்களிடையே இரு வேறு கருத்துகள் நிலவி வருகின்றது.

ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் அனைத்து வீரர்களின் வங்கி கணக்குகள், வருமானம், பண பரிமாற்றம் உள்ளிட்ட விவரங்களை கேட்டு வாங்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை முடிவு செய்துள்ளது. மேலும் ஐபிஎல் போட்டிகள் ஆரம்பிப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு வீரர்கள் தங்களுடைய தொலைபேசி எண்களை கிரிக்கெட் சபையிடம் அளிக்க வேண்டும்.

 

எவ்வளவு உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று தெரியுமா?

ex

கழிவு மண்டலங்களின் இயக்கம், செரிமானம் மற்றும் கழிவு மண்டலங்களின் இயக்கம் முதலிய அனைத்து இயக்கங்களுக்கும் சுமார் 400க்கும் மேற்பட்ட தசைகள் காரணமாக உள்ளன.

இதற்கு ஒரு நாளில் 30 நிமிடங்களாவது நாம் உடற்பயிற்சி செய்வது மிகவும் அவசியம். நாம் செய்யும் உடற்பயிற்சி இந்த 400 தசைகளுக்கும் நீட்டவும், மடக்கவும் பயிற்சி கொடுப்பதாக இருக்க வேண்டும்.

இதற்கு 5 அல்லது 10 நிமிடங்கள் மட்டுமே உடற்பயிற்சி செய்வது போதாது. குறைந்தது 30 நிமிடங்களாவது இந்த தசைகளுக்கு பயிற்சி கொடுத்தால் தான் நமது உடல் உறுப்புகளுக்கு தேவையான சக்தி கிடைக்கும்.

வனப்பான உடல் பொலிவைப் பெறுவது என்பது, நாம் உடற்பயிற்சி ஆரம்பித்த போது நமது ஆரோக்கியம், உடல் தகுதி முதலியவை(Physical Fitnes) எப்படி இருந்தது என்பதைப் பொறுத்து அமையும். சிலருக்கு சில வாரங்களோ வேறு சிலருக்கு சில மாதங்களோ கூட ஆகலாம்.

ஆனால் ஒன்று நிச்சயம் எவராக இருப்பினும் நாளை, நாளை மறுநாள் என்று தள்ளிப் போடாமல் உடற்பயிற்சியை மிதமாகவும், தவறாமலும், ஒழுங்காகவும் செய்து வந்தால் வாழ்நாள் முழுவதும் கட்டுடலுடனும், முழு உடல் தகுதியுடனும், ஆரோக்யமாக வாழலாம்.

மனநோய் – சில உண்மைகள்

mental

தற்பொழுதெல்லாம் மருத்துவ ரீதியாக மனநோயும் இதர நோய்களை போலவே ஒரு வியாதியாகவே கருதப்படுகிறது.ஏனெனில் இந்நோயை சிகிச்சை மூலமாக கட்டுப்படுத்தக் கூடும். சில சந்தர்ப்பங்களில் பூரணமாக குணப்படுத்தவும் முடியும் என்பதனாலேயே.

மனநோய் வெட்கப்பட வேண்டிய ஒன்றானதாகவோ குழப்பத்தையும், திகைப்பையும் உண்டு பண்ண கூடியதாகவோ தற்காலத்தில் எண்ணப்படுவதில்லை.மேலும் ஆபத்தை தருவது, தீராதது, சமூகத்தின் பார்வையிலிருந்து மறைத்து வைக்கப்பட்ட வேண்டிய நோய் மனநோய் என்பதும் உண்மையன்று.

மன நோயும், அறிவுத்திறன் குறைவும் ஒன்று என்று கொள்ளலாமா?

மன நோயும் அறிவுத்திறன் குறைவும் ஒன்றேயல்ல. அவை, வேறானவை. அறிவுத்திறன் குறைந்தவர்களிடையேயும் சில மன நோய்களும் ஏற்படுவதுண்டு. ஆனால் மனநோய் உள்ளவர்கள் யாவரும் அறிவுத்திறன் குன்றியவர்கள் ஆகமாட்டார்கள்.

அறிவுத்திறன் குன்றியவர்கள் கற்றுக் கொள்வதிலே சிரமும், தாமதமும் உள்ளவர்களாயிருப்பர். பொதுவாகவே குழந்தைப் பருவத்திலேயே இந்தக் கோளாறு இருப்பதைக் கண்டறியக் கூடும். இது மிகவும் கடுமையானதாகவும் அல்லது மத்தியதரமானதாகவும் இருக்கக்கூடும்.

இந்தக் கோளாறுக்கு காரணங்கள் மூளை பாதிக்கப்படுதல், சினை அணுக்களில் சீரழிவு, வளர்ப்பு ஏதுக்களில் கெடுதி முதலியனவாகும். ஆரம்பத்திலேயே அறிவுத்திறன் அளவை நிச்சயித்து அதற்குத் தகுந்த, உரிய பயிற்சிகள் தருவதன் மூலம் அறிவு நிலை குன்றியோர் வாழ்வில் நல்லதொரு திருப்பமும் மாற்றமும் கொண்டு வரக்கூடும்.

மனநோய் பாரம்பரியமாய் பெற்றோர்களிடமிருந்து குழந்தைகளுக்கு வழிவழியாய் வரக்கூடுமா?

சில வகையான மனநோய்கள் உதாரணமாக மனமுறி நோய், மன எழுச்சி நோய் போன்றவை சில குடும்பங்களில் அதிகமாய் தோன்றி பாதிக்கின்றன. பாரம்பரியக் கோளாறே இந்நிலைக்கு அடிப்படையாய் ஆதரவாய் இருக்கிறது எனக் கூறலாம்.

பாரம்பரியத்தால் வரும் தீங்கு என்னவென்றால் மனநோய் தோற்றுவாய்க்கு எளிதில் ஆளாக்கும் தன்மையை நிலையை உற்பத்தியாக்குவதேயாம்.எனினும், மற்ற பல காரணங்களும் நோய் விளைவுக்கு அவசியமாயிருப்பதனாலே ஓரிருவரைத் தவிர அக்குடும்பத்தைச் சேர்ந்த பெரும்பாலோர் இந்த நோயால் தாக்கப்படுவதில்லை.

மனநோய் தொற்று நோயா?

மனநோய் தொற்று நோய் அல்ல. அம்மை நோய், மண்ணை கட்டி நோய், அம்மை போன்று ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு தொற்றி பரவும் நோய் மனநோய் அல்ல.

மன நோயாளர் வன்முறையாளர்கள்?

சமூகத்தில் உள்ள பெரும்பாலரை விட மன நோயால் பாதிக்கப்பட்டவர், வன்முறைகளை கையாளுபவர் என கொள்ளுதல் சரியானதாகாது. எனினும் மன நோயாளர் அச்சமும் ஐயுறவும் கொண்டிருப்பதாலேயே குழப்பத்தோடு பயற்திற்கேற்ப சமூகத்தை பாதிக்கும் செயல்கள் ஆற்றுகிறார்கள் என கொள்ளலாம். அப்பேற்பட்ட சந்தர்ப்பங்களில் சமூகப் பாதுகாப்பிற்காகவும் நோயாளியின் நலனையும் கருதி அவர்களை கட்டுப்படுத்த வேண்டிய அவசியமேற்படுகிறது.

மனநோயாளிகளின் நலன்களைக் கருதி அவர்களை பூட்டி பாதுகாப்பில் வைக்க வேண்டுமா?

பெரும்பாலான மன நோயாளிகள் மருத்துவமனையில் சேர்க்கப்படாமலேயே வெற்றிகரமாய் குணப்படுத்தப்படுகிறார்கள். அதனால் அனேகருக்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட வேண்டிய அவசியமில்லாமல் போய் விடுகிறது.

எனினும் ஒரு சிலர் நோயின் கொடுமையால் மிகவும் பாதிக்கப்படுவதன் நிமித்தமாக மருத்துவமனையில் சேர்ந்து தீவிர சிகிச்சையும், ஆதரவும் பெற வேண்டியிருக்கிறது. என்றாலும், பெரும்பாலோர் முரட்டுத்தனமாக இருப்பதில்லை. மனநோய் மருத்துவமனையில் பெரும்பாலான அறைகள் பூட்டி வைக்கப்படுவதில்லை. மிகச் சிலரையே சமூகப் பாதுகாப்பிற்காகவும், நோயாளியின் சொந்த பாதுகாப்பிற்காகவும் பூட்டி வைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.

மனநோயை குணப்படுத்த முடியுமா?

மக்களில் பலர் தங்கள் வாழ்க்கையில் ஒரே ஒருமுறை தான் மனநோயால் அவதியுற்று பின்னர் எப்போதுமே அந்நோயால் பாதிக்கப்படாமலே இருக்கின்றார்கள். ஒருசிலர் பலதடவை மறுபடியும் மறுபடியுமாக மனநோயால் தாக்கப்படுகிறார்கள்.

மிகச் சிறுபான்மையினர் தங்கள் வாழ்நாள் முழுவதும் மனநோயால் கஷ்டப்படுகிறார்கள். உடலைப் பற்றிய நோய்களை போலவே மன நோய்களிலும் மறுபடியும் பிணிவாய்ப்படுதல் என்பது சகஜமாய் நிகழக்கூடியது தான். மேலும் பல வருடங்களாக நோயால் பாதிக்கப்பட்டவர்களும் குணமடையலாம்.

 

 

 

குடி போதையில் பெற்ற குழந்தையை 21 இடங்களில் குத்திக் கொன்ற தாய்..

child-murder

குடி போதையில் பொலீஸிடம் சிக்கிக் கொள்வோமோ என்ற பயத்தில் தனது 5 மாத குழந்தையை சரமாரியாக குத்திக் கொன்றுள்ளார் அமெரிக்க தாய் ஒருவர்.

அமெரிக்கா  இல்லினாய்ஸ் மாகாணத்தைச் சேர்ந்த இம்பர்லின் பலோனஸ் என்ற பெண்ணுக்கு இசாக் என்ற 5 மாத குழந்தை இருந்தது. ஏற்கனவே குடி போதைக்கு அடிமையான இம்பர்லின், சம்பவத்தன்றும் தன் குழந்தை இசாக்கை தூக்கிக் கொண்டு குடிக்கச் சென்றுள்ளார்.

அமெரிக்காவில் குடிக்கும் இடங்களுக்கு குழந்தைகளை தூக்கி வரக் கூடாது என்ற சட்டம் அமலில் உள்ளது. அப்படி அதை மீறுபவர்களின் குழந்தையை போலீஸார் தூக்கிச் சென்று விடுவர். இந்தச் சட்டத்தை நன்கு அறிந்திருந்தும், இம்பர்லின் தனது 5 மாத கைக்குழந்தை இசாக்கை, கூக்கவுண்டியில் உள்ள லிகைஸ்ன் சதுக்கத்தில் ரோட்டோர ஓட்டலுக்கு அழைதுச் சென்றுள்ளார்.

வயிறு முட்ட குடித்து விட்டு இம்பர்லின் புறப்பட தயாரான போது எதிர்பாராத விதமாக அங்கே போலீஸ் வந்துவிட்டது. குழந்தையும் அழத் தொடங்கியதால் என்ன செய்வது எனத் தெரியாமல் குழப்பத்தில் அருகிலிருந்த கத்தியை எடுத்து குழந்தையை 21 இடங்களில் குத்தியுள்ளார் இம்பர்லின். அத்தோடு நில்லாமல் கழுத்தையும் நெரித்துள்ளார். இதனால் சம்பவ இடத்திலேயே இசாக் பரிதாபமாக பலியானான். இதனால், இம்பர்லினை கைது செய்தது போலீஸ். தற்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார் அந்த தாய்(பேய் ).

 

பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி ராஜினாமா..

adwani

இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சியின் மூத்த தலைவரான எல்.கே.அத்வானி கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் ராஜினாமா செய்துவிட்டார். ஆனால் கட்சியின் உயர்மட்டக் கூட்டம் அவரது பதவி விலகலை ஏற்க மறுத்துவிட்டது. அவரது வழிகாட்டல் கட்சிக்கு இப்போதுதான் முன்னரைவிட கூடுதலாக தேவைப்படுகிறது என்று கட்சியின் அதியுயர் குழுவான நாடாளுமன்ற விவகாரங்கள் குழு கூறியுள்ளது.

கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற உயர்நிலைக் கூட்டத்திலேயே அத்வானியின் ராஜினாமாவை நிராகரிப்பது எனும் முடிவு எடுக்கப்பட்டது.
கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்நாத் சிங், கட்சியின் தலைவர் என்கிற முறையில் இந்த ராஜினாவை எந்த சந்தர்பத்திலும் தன்னால் ஏற்க முடியாது என்று தெரிவித்தார்.
ஆனாலும் தனது முடிவை மாற்றி கொள்ள அத்வானி மறுத்துவிட்டார் என்று டில்லியிலிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

கட்சியின் சர்ச்சைக்குரிய அரசியல்வாதி குஜராத் முதல் அமைச்சர் நரேந்திர மோடி எதிர்வரும் இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரக் கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்டதை அடுத்து அத்வானியின் முடிவு திங்கட்கிழமை காலை வெளியாகியது.

கட்சி போகும் திசையைப் பற்றி தான் அதிருப்தி அடைந்திருப்பதாகவும் கட்சியின் தலைவர்களில் பெரும்பாலானோர் தங்களது தனிப்பட்ட அரசியல் வாழ்க்கைக்கான திட்டங்களையே முன்கொண்டு செல்வது குறித்து தான் கவலை அடைவதாகவும் தனது ராஜினாமா கடிதத்தில் அத்வானி கூறியிருக்கிறார்.

பாஜவின் நிறுவனத் தலைவர்களில் ஒருவரான அத்வானி, இந்த வார இறுதியில் கோவாவில் நடந்த கட்சியின் செயற்குழுக் கூட்டத்துக்கு செல்லவில்லை. அவர் தான் உடல் நலமில்லாது இருப்பதாகக் கூறியிருந்தார்.

 

புருணையில் வேலை வாங்கித் தருவதாக வடக்கு இளைஞர்களிடம் மோசடி..

vavuniya

வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறியவரை நம்பிய பல நூறு பேர் ஏமாற்றமடைந்துள்ளனர். வேலை கிடைக்கும். வெளிநாட்டிற்குச் செல்லலாம். விசா கிடைக்கும் என்ற ஆவலோடு வந்த வட இலங்கையைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் வவுனியா நகர வீதிகளில் கைவிடப்பட்ட நிலையில் இருக்கின்றனர்.

புருணை நாட்டில் வேலை வாய்ப்பு பெற்றுத் தரலாம் எனக் கூறிய வேலை வாய்ப்பு முகவர் ஒருவரை நம்பி, மூன்று மாதங்களுக்கு முன்னர், ஐம்பதினாயிரம் ரூபாய் பணத்தைக் கட்டியதாக அவர்கள் தெரிவித்தனர்.

“திங்களன்று விசா தருவதாகக் கூறி நேர் முகப் பரீட்சைக்கு வருமாறு வவுனியா ஈரப்பெரியகுளத்தில் உள்ள விருந்தினர் விடுதியொன்றிற்கு வருமாறு எங்களை அழைத்திருந்தார்கள். காலையிலேயே அங்கு சென்று காத்திருந்தோம். வருவதாகக் கூறியவர்கள் வரவே இல்லை. மதியத்தின் பின்னர் அவர்கள் தொலைபேசிகளையும் துண்டித்துவிட்டார்கள். தொடர்பு கொள்ள முடியவில்லை. நாங்கள் பணம் செலுத்திய மதவாச்சி நகரில் உள்ள அலுவலகத்திற்குச் சென்று விசாரித்த போதிலும் சரியான பதில் எங்களுக்குக் கிடைக்கவில்லை” என பாதிக்கப்பட்ட இளைஞர்கள் தெரிவித்தனர்.

ஜயசிங்க என்பவர் தான் விமானப் படையில் பணியாற்றுவதாகவும் வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகத் தெரிவித்தாகவும் ஆனால் அவர் சொன்னபடி ஏதும் நடக்கவில்லை என்றும் அவர்கள் புலம்புகின்றனர்.
“இன்று காலை எட்டு மணிக்கெல்லாம் ஈரப்பெரியகுளத்திற்கு வாருங்கள். விசா தருவோம் என்றார்கள். அங்கு போய் காத்திருந்ததுதான் மிச்சம். ஒருவருமே வரவில்லை. அங்குள்ள ஓட்டல் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகக் கூறினார்கள்.

அங்கு எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை. ஏமாற்றத்தோடு திரும்பிய நாங்கள் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப் போனால், அவர்கள் மதவாச்சியில் பணம் கட்டியபடியால் அந்த பொலிஸ் நிலையத்தில் சென்ற முறையிடுமாறு கூறி அனுப்பி விட்டார்கள். இனி என்ன செய்வது என்று தெரியாமல் நடு வீதியில் நிற்கிறோம்” என்று அவர்கள் கவலை வெளியிட்டனர்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 150 பேர் இவ்வாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காகப் பணம் செலுத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. போர் முடிந்த பிறகும் வடக்குப் பகுதிகளில் வேலை வாயப்புகள் பெரிதாக உருவாகவில்லை. மேலும் அங்கேயிருக்கும் பல்வேறு நெருக்கடிகள் காரணமாகவும் பலர் இங்கையில் இருந்து வெளியேற முற்படுகின்றனர்.

 

ஐபிஎல் குற்றச்சாட்டுகள் : மூன்று வீரர்களுக்கும் பிணை கிடைத்தது

இந்தியாவின் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் முறைகேடான வழிகளில் ஈடுபட்டனர் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூன்று கிரிக்கெட் வீரர்களுக்கும் டில்லி நீதிமன்றம் ஒன்று பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.

இவர்களுக்கு பிணை வழங்கி உத்தரவிட்ட கூடுதல் அமர்வு நீதிபதி வினய் குமார் கண்ணா காவல்துறையினர் மீதும் கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளார்.

ஸ்ரீசாந்த், அக்னித் சவான் மற்றும் அஷோக் சண்டிலா ஆகியோர், ‘மராட்டிய மாநிலச் சட்டமான திட்டமிட்டு குற்றங்களைச் செய்யும் தடுப்புச் சட்டத்தின் கீழ்’ குற்றவாளிகள் என்று நம்புவதற்கு போதிய காரணங்கள் இல்லை என்றும் நீதிபதி தனது உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

திட்டமிட்டு குற்றங்களைச் செய்யும் கும்பல்களுடன் இந்த மூன்று வீரர்களுக்கும் தொடர்பு இருந்தது என்று கூறுவதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்றும் நீதிபதி கூறியுள்ளார்.

பின்னடைவு
நீதிதியின் பிணை உத்தரவும், கண்டனங்களும் வழக்கை விசாரித்து வரும் டில்லி காவல்துறையினருக்கு ஒரு பெரிய பின்னடைவு என்று கூறப்படுகிறது.

இந்த மூன்று விரர்கள் தவிர ஸ்பாட் ஃபிக்ஸிங் குற்றச்சாட்டுகளீன் கீழ் கைது செய்யப்பட்ட 14 புக்கிகளுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

தாவூத் இப்ராஹிம் மற்றும் சோட்டா ஷகீல் போன்றவர்களுடன் இவர்களுக்கு தொடர்புகள் இருந்தன என்று கூறி மராட்டிய மாநிலச் சட்டத்தை பயன்படுத்தியதற்கு போதிய காரணங்கள் மற்றும் நீதிமன்றத்துக்கு திருப்தியை ஏற்படும் வகையிலான ஆவணங்களையும் காவல்துறையினர் சமர்பிக்கவில்லை என்றும் நீதிபதி தமது உத்தரவில் சுட்டிகாட்டியுள்ளார்.

பிணை வழங்கப்பட்டுள்ள அனைவரும் தமது கடவுச் சீட்டுகளை நீதிமன்றத்தில் கையளிக்க வேண்டும் என்றும், நீதிமன்றத்தின் அனுமதியில்லாமல் நாட்டைவிட்டு வெளியேறக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

எனினும் இந்தியாவுக்குள் பயணத்தை மேற்கொள்வதற்கு அவர்களுக்கு எந்தத் தடையும் இல்லை எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஐபிஎல் போட்டிகளில் முறைகேடுகளில் ஈடுபட்டனர் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குருநாத் மெய்யப்பன் மற்றும் விந்து தாரா சிங் ஆகியோர் ஏற்கனவே பிணையில் வெளிவந்துள்ளனர்.

பறவைகளால் தரையிறங்க முடியாது வானிலேயே வட்டமிட்ட விமானங்கள்

flight

இன்று சென்னை விமான நிலையத்தில்  பறவைகளால் விமானங்கள் தரையிறங்க முடியாது வானிலேயே பல நிமிடங்களுக்கு வட்டமிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. சென்னை விமான நிலையத்திற்கு ஏராளமான பன்னாட்டு, உள்நாட்டு விமானங்கள் வந்து செல்கின்றன. அத்துடன் விமான நிலைய பகுதியில் ஏராளமான பறவைகள் பறக்கின்றன.

பறவைகள் கூட்டமாக பறக்கும்போது சில பறவைகள் விமானத்தின் மீது மோதுவதால் அதன் கண்ணாடி உடையவும் இயந்திரங்கள் சேதமடையவும் வாய்ப்பு உருவாகிறது. இதனால், விமானங்கள் விபத்தை சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. இந்த நிலையில் இன்று அதிகாலை சென்னைக்கு வந்த ஒரு விமானத்தின் இயந்திரத்தில் பறவைகள் சிக்கிக் கொண்டன.

இதனால் அந்த விமானம் ஓடுபாதையிலேயே நிற்கும் சூழல் உருவானது. இதைத் தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய பல விமானங்கள் தரையிறங்க இயலவில்லை. இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொழில்நுட்ப நிபுணர்கள் விரைந்து சென்று இயந்திரத்தில் சிக்கிய பறவைகளை அகற்றினார்கள்.

இதற்குள் சென்னை விமானத்தில் தரையிறங்க வேண்டிய பல விமானங்கள் கீழே இறங்க முடியாமல் வானத்திலேயே வட்டமிட்டன. இன்று அதிகாலை 3.30 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் விமானம் 50 நிமிடங்கள் வானத்தில் வட்டமடித்தது. நிலைமை சரியானபிறகே சரியாக 4.20 மணிக்கு தரையிரங்கியது.

இந்த சம்பவத்தால் சென்னை விமான நிலையத்தில் வெளிநாடு மற்றும் உள்நாட்டு விமானங்கள் வருவதிலும் புறப்படுவதிலும் காலதாமதம் ஏற்பட்டது. இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளானார்கள். இதையடுத்து பறவைகளை வெடி போட்டு கலைத்தனர். அதன்பிறகு விமான போக்குவரத்து சேவை வழக்கம்போல் நடந்தது.

இன்றையதினம் நடைபெற்றுவரும் புதூர் நாகதம்பிரான் ஆலய பொங்கல்விழா காட்சிகள் (படங்கள் இணைப்பு).

இன்றைய தினம்நடைபெற்றுவரும் வவுனியா, புளியங்குளம் புதூர் நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவத்தில் சுமார் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர்.

1

2

3

4

5

6

படங்கள்: -சுகுமார்-

காபூல் விமான நிலையம் அருகே தாலிபன்கள் அதிரடித் தாக்குதல்

afgan

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பிரதான சர்வதேச விமான நிலையத்துக்கு அருகே தாலிபன் இயக்கத்தினர் இன்று அதிகாலை அதிரடியாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனால் அந்நாட்டின் எல்லா பயணிகள் விமான சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

ஆப்கன் இராணுவ முகாமுக்கு அருகே இருந்த கட்டிமுடிக்கப்படாத- 5 மாடிக் கட்டிடமொன்றை ஆயுததாரிகள் கட்டுப்பாட்டில் வைத்திருந்துகொண்டு இந்தத் தாக்குதலை முன்னெடுத்துள்ளனர்.

மூன்று மணிநேரம் இந்த மோதல் நீடித்துள்ளது. குண்டுச் சத்தங்களால் அந்தப் பகுதியே அதிர்ந்துள்ளது.
ஆப்கன் பாதுகாப்புப் படையினரும் தாலிபன் ஆயுததாரிகளும் இயந்திரத் துப்பாக்கிகள், ராக்கெட் குண்டுகளைப் பயன்படுத்தி கடுமையான சண்டையில் ஈடுபட்டனர்.

பாதுகாப்புப் படையினர் 5 தாலிபன் ஆயுததாரிகளை இதன்போது சுட்டுக்கொன்றதாக காபூல் காவல்துறையினர் கூறுகின்றனர்.
மேலும் இருவர் தம்மைத்தாமே வெடிக்க வைத்து தற்கொலைத் தாக்குதல் நடத்தியதாகவும் அவர்கள் தெரிவித்தனர். தமது தரப்பில் ஆட்சேதங்கள் இல்லையென்றும் ஆப்கன் பாதுகாப்பு படையினர் கூறுகின்றனர்.

சர்வதேச படைகளின் உதவியின்றி ஆப்கன் படைகளே தனியாக இந்தத் தாக்குதலை முறியடித்துள்ளதாக காபூலில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

அமெரிக்காவிற்கு 16 அடி சரஸ்வதி சிலையை பரிசளித்த இந்தோனேஷியா..

sarasvathi

முஸ்லிம் நாடான இந்தோனேசியா அமெரிக்காவுக்கு சரஸ்வதி சிலை ஒன்றை பரிசளித்துள்ளது.

இந்தோனேசியாவின் மக்கள் தொகை 25 கோடி. இதில் மூன்று சதவீத மக்கள் இந்துக்கள். இதன்படி முஸ்லிம் நாடான இந்தோனேசிய சமீபத்தில், அமெரிக்காவுக்கு 16 அடி உயரமுள்ள சரஸ்வதி சிலையை பரிசளித்துள்ளது.

வாஷிங்டனில் உள்ள இந்தோனேசிய தூதரகத்தில் இந்த சிலை தற்போது வைக்கப்பட்டுள்ளது. பாலித்தீவைச் சேர்ந்த ஐந்து சிற்பிகள் இந்த சிலையை வடிவமைத்துள்ளனர்.

முறைப்படி இன்னும் இந்த சிலை, திறப்பு விழா நடக்கவில்லை. அதற்குள்ளாக அந்த வழியே செல்பவர்கள் இந்த சிலையை பார்த்து வியக்கின்றனர்.