இளவரசன் மரணமானது எப்படி? – நாளை மர்ம முடிச்சுகள் அவிழும்..!

ilavarasanதர்மபுரி இளவரசன் தற்கொலை செய்து கொண்டதாக போலீசும், சாவில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் மற்றும் உறவினர்களும் கூறினார்கள். எனவே இளவரசன் பிணத்தை மீண்டும் பரிசோதனை செய்ய உத்தரவிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையின் முடிவில், இளவரசன் உடலை தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிலேயே எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் 3 பேர் மூலம் மறு பிரேதபரிசோதனை நடத்த வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி கடந்த13ந் திகதி இளவரசனின் உடலை எய்ம்ஸ் டாக்டர்கள் மறு பிரேத பரிசோதனை செய்தனர்.

இந்த மறு பிரதே பரிசோதனை அறிக்கையை இன்று உயர்நீதிமன்ற பதிவாளரிடம் மருத்துவக் குழு தாக்கல் செய்தது. உயர்நீதிமன்ற பதிவாளர் கலையரசன் இந்த அறிக்கையை பெற்றுக் கொண்டார். நாளை இந்த அறிக்கை உயர்நீதிமன்ற நீதிபதி முன்பு சமர்பிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. அதன்பிறகே, இளவரசன் சாவு தொடர்பான மர்ம முடிச்சுகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரத்தக் கண்ணீர் வடிக்கும் யுவதி – வீடியோ இணைப்பு..

மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கும் போது ஆனந்த கண்ணீர் வருவதை கேள்விப்பட்டிருக்கிறோம் ஆனால் அமெரிக்காவைச் சேர்ந்த யுவதியொருவருக்கு சாதாரணமாகவே இரத்தக் கண்ணீர் வருகிறது. ஹீமோலக்ரியா என்ற நோயினா பாதிக்கப்பட்ட 20 வயதாக ஒலிவியா என்ற பெண்ணுக்கே இவ்வாறு இரத்தக் கண்ணீர் வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது, குறித்த பெண்ணுக்கு இம்மாதத்தின் ஆரம்பத்தில் கண்ணில் இரத்தம் வடிய ஆரம்பித்துள்ளது. இவரை பரிசோதித்த் வைத்தியர்கள் கண் வலியை குறைக்க சில மருந்துகளை கொடுத்துள்ளனர்.

இருப்பினும் தொடர்ந்தும் ஒலிவியாவின் கண்ணில் ஒவ்வொரு நாளும் சில தடவைகள் இரத்தம் வடிந்துகொண்டே இருந்துள்ளது. இதனால் வசதி குறைந்த ஒலிவியாவின் குடும்பத்தினர் ஏனையோரிடமிருந்து பெற்ற நன்கொடை பணத்தினைக் கொண்டு கண் வைத்திய நிபுணரை நாடியுள்ளனர்.

இதனையடுத்து இரத்தக் கசிவுக்கான காரணத்தை கண்டுபிடித்து ஒலிவியாவுக்கு வைத்தியர்கள் சிகிச்சையளித் வருகின்றனர். ஆனாலும் இரத்தக் கண்ணீர் ஏற்படுவதற்கான முறையான அறிகுறிகளை வைத்தியர்கள் தெரிவிக்கவில்லை.

ஹீமோலக்ரியா எனும் பாதிப்பு மிக அரிதாகவே மனிதர்களில் ஏற்படுவதுண்டு. இதேபோன்றதொரு பாதிப்பு 2009ஆம் ஆண்டில் சிறுவன் ஒருவருக்கு ஏற்பட்டிருந்தது. அச்சிறுவனுக்கு ஒரு நாளில் மூன்று முறை இரத்தக் கண்ணீர் வந்துள்ளது.

சூர்யாவுக்கு பிடித்த நடிகர் விஜயா? அஜீத்தா?

surya

தல, தளபதி இந்த இருவரில் யாரை பிடிக்கும் என்று சூர்யாவிடம் கேட்டதற்கு அவர் தனக்கு பிரச்சினை வராத பதிலை அளித்துள்ளார்.

ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா, சந்தானம் நடித்துள்ள சிங்கம் 2 வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. படத்தை பார்ப்பவர்கள் அனைவரும் சூர்யா படத்தை தன் தோளில் தாங்குகிறார் என்று தெரிவித்துள்ளனர்.

ஊடகங்களும் சூர்யாவின் நடிப்பை வெகுவாக பாராட்டியுள்ளன. இந்நிலையில் சூர்யா கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சிக்கு தொலைக்காட்சி ஒன்று ஏற்பாடு செய்திருந்தது. அந்த நிகழ்ச்சிக்கு ஹரியுடன் வந்த சூர்யாவிடம் மாணவிகள் பல்வேறு கேள்விகள் கேட்டனர்.

ஹிந்தி படமான தோஸ்தானாவை தமிழில் ரீமேக் செய்தால் அதில் யாருடன் சேர்ந்து நடிக்க விரும்புகிறீர்கள் என்று கேட்டதற்கு சூர்யா சட்டென்று மாதவன் பெயரை தெரிவித்தார். தல, தளபதி ஆகியோரில் உங்களுக்கு யாரைப் பிடிக்கும் என்று மாணவிகள் கேட்க, வம்பே வேண்டாம் என்று நினைத்த சூர்யா இருவரையும் பிடிக்கும் என்று கூறி நைசாக நழுவிவிட்டார்.

சூர்யா கௌதம் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் படத்திலும், லிங்குசாமியின் படத்திலும் நடிக்கிறார். இதில் துருவ நட்சத்திரம் படத்திற்கு நாயகி தேர்வு இழுத்துக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஈழப் போரின் பின்னணியில் வெளியாகும் ஹிந்திப்படம்!!

madras cafe

ஜோன் ஆபிரஹாம் தயா‌ரித்து நடித்திருக்கும் புதிய படத்துக்கு ஜப்னா என்று பெயர் வைத்திருந்தனர். பிறகு மெட்ராஸ் கஃபே என பெயர் மாற்றப்பட்டது. இலங்கை யுத்தத்தின் பின்னணியில் இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கிறதாம்.

இதில் இந்திய உளவுப்பி‌ரிவின் அதிகா‌ரியாக ஜோன் ஆபிரஹாம் நடித்திருக்கிறார். சர்வதேச பத்தி‌ரிகையாளராக நர்கீஸ் பக்‌ரி.
விக்கி டோனர் படத்தை இயக்கிய Shoojit Sircar மெட்ராஸ் கஃபேயை இயக்கியுள்ளார்.

நாயகன் இந்திய உளவுப்ப‌ரிவு அதிகா‌ரியாக இருக்கும் படத்தில் இந்தியாவுக்கு சார்பானதாகவே காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். படத்தின் ரெய்லர் அதனை உறுதி செய்கிறது.

இந்தநிலையில் போரை நியாயப்படுத்தியும் போராளிகளை இழிவு செய்தும் காட்சிகள் இருப்பதாக சந்தேகம் உள்ளதாக தமிழீழ ஆதரவாளர்கள் கருதுகிறார்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க போராளிகள் அதே பெய‌ரில், அதே ஆடையில் படத்தில் வருகிறார்களாம். இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் தீவிரவாதியும் அங்கு இருப்பதாக காட்சிகள் உள்ளன.

ஒகஸ்ட் 23 ல் படம் வெளியாகும் போது கடும் சர்ச்சைகள் கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

வெளிவருகிறது சிங்கம்-3..!

singamநடிகர் சூர்யா நடித்த ‘சிங்கம்–2’ படம் தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

கோவையில் இந்த திரைப்படம் ஓடும் திரையரங்கிற்கு திடீரென்று தோன்றி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

அதன் பின்பு சூர்யா கூறுகையில், எந்த ஒரு திரைப்படத்திற்கும் 2–ம் பாகம் வந்தால் அந்த படத்திற்கு அவ்வளவாக வரவேற்பு இருக்காது.

ஆனால் சிங்கம்–2 படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதற்கு காரணம் இப்படத்தின் இயக்குனர் ஹரி மற்றும் ரசிகர்களே ஆவர்.

இப்படம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு காட்சியமைப்பு, வசனம் அனைத்தையும் நீண்டநேரம் யோசித்து படைத்தார்.

அதன் காரணமாகவே படம் வெற்றியடைந்துள்ளது. இயக்குனர் ஹரியுடன் எனக்கு இது 4வது படம்.

ஆனால் மற்ற படங்களை காட்டிலும் இந்த படம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

நல்ல கதையம்சம் அமைந்தால் சிங்கம்–3 பாகம் கண்டிப்பாக வெளிவரும் என்று கூறியுள்ளார்.

நடிகை ஸ்ருதி தற்கொலை முயற்சி?

sruthi

நடிகை ஸ்ருதி, நேற்று தனது வீட்டில் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ளார். தற்போது அவர் கவலைகிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிகின்றன.

பிரபல கன்னட நடிகை ஸ்ருதி, தமிழில் கல்கி என்ற படத்தில் கே.பாலச்சந்தாரல் அறிமுகப்படுத்தப்பட்டார். தொடர்ந்து பல படங்களில் நடித்த அவர் கன்னட திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தார். தற்போது தமிழ் தொலைக்காட்சி நாடகம் ஒன்றிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் கன்னட பட இயக்குனர் எஸ்.மகேந்தரை திருமணம் செய்து சில ஆண்டுகள் வாழ்க்கை நடத்தினார். 3 வருடத்துக்கு முன் பிரிந்து விவாகரத்து பெற்றார். பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து செயல்பட்ட அவர், முன்னாள் முதல்வர் எடியூரப்பா பாஜவில் இருந்து விலகி, கர்நாடக ஜனதா கட்சியை தொடங்கியதும், அதில் இணைந்து தீவிர தேர்தல் பிரசாரம் செய்தார்.

சில ஆண்டுகளாக பத்திரிக்கையாளர் சந்திரசேகருடன் பழகி வந்தார். அவர்கள் நட்பு நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர். நேற்று ஊடகங்களில் நடிகை ஸ்ருதி தற்கொலை முயற்சி செய்ததாகவும், அவரை கர்நாடக மருத்துமனையில் கவலைகிடமான நிலையில் அனுமதித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. ஸ்ருதியின் வாழ்க்கையில் ஏற்பட்ட ஏமாற்றங்கள் இதற்கு காரணம் என்று யூகிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஸ்ருதி தற்கொலை செய்துகொள்ளவில்லை என்றும், அவர் சாப்பிட்ட உணவு சரிமானமின்மையால் மயங்கிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இது குறித்து நடிகை ஸ்ருதி ஊடகங்களுக்கு அளித்துள்ள விளக்கத்தில்,

எனக்கு நிறைய பிரச்சினைகள் இருப்பது உண்மை என்றாலும் தற்கொலை செய்யும் அளவு கோழை நான் இல்லை என்று கூறியுள்ளார்.

இந்தியா- இலங்கை இறுதிப் போட்டியில் மைதானத்தில் போட்டில் வீசிய ரசிகருக்கு 5 ஆண்டுகால தடை!!

srilanka

இந்தியா-இலங்கை இடையேயான இறுதி கிரிக்கெட் போட்டியின் போது மைதானத்துக்குள் போட்டிலை வீசி எறிந்த ரசிகருக்கு டிரினாட் அண்ட் டொபாகோ கிரிக்கெட் வாரியம் 5 ஆண்டுகால தடை விதித்துள்ளது.

இந்தியா- இலங்கை இடையேயான இறுதிப் போட்டி கடந்த வியாழக்கிழமையன்று நடைபெற்றது. அப்போது விஜய் அவுடிம் என்பவர் போட்டிலை மைதானத்துக்குள் வீசிவிட்டு தப்பி ஓட முயன்றார்.

அந்த போட்டில் இலங்கை வீரர் மலிங்க மீது பட்டது. இதைத் தொடர்ந்து போட்டிலை வீசிய ரசிகரை கடுமையாக எச்சரித்திருக்கும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம், அவர் உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிகள் நடைபெறும் மைதானங்களில் நுழைய 5ஆண்டுகாலத்துக்கு அவருக்கு தடையும் விதித்திருக்கிறது.

கரீபியன் தீவுகளில் சர்வதேச கிரிக்கெட் போட்டி ஒன்றில் மேற்கொள்ளப்படும் முதலாவது ஒழுங்கு நடவடிக்கை இதுவாகும்.

சஞ்சீவ பண்டார பல்கலைக்கழகங்களுக்குள் செல்ல தடை..!

sanjiwaஅனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளரான சஞ்சீவ பண்டார பல்கலைக்கழக வளாகங்களிற்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடுசெய்திருந்த ஆர்ப்பாட்டத்தின் போது பொது மக்களுக்கு இடையூறு விளைவித்ததாக  குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட சஞ்ஜீவ பண்டார கோட்டை நீதவானால் எதிர்வரும் காலங்களில் எந்த வித ஆர்ப்பாட்டங்களுக்கும் கலந்து கொள்ளக்கூடாது என விதிக்கப்பட்ட சட்டத்தை மீறியதாலேயே கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் இன்று பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டதனாலேயே கொழும்பு கோட்டை நீதவானினால் இந்த தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டிலுள்ள எந்தவொரு பல்கலைக்கழகத்திற்குள்ளும் பிரவேசிக்கக் கூடாது எனவும் நீதவானால் உத்தரவிடப்பட்டுள்ளது.

காணாமல்போனோரின் உறவினர்களை ஒப்படைக்குமாறு வவுனியாவில் போராட்டம்..!

vavuniyaகாணாமல்போனோரின் உறவினர்கள் இன்று வவுனியா நீதிமன்ற வளாகத்தின் முன்னால் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இறுதி யுத்தத்தின்போது காணாமல்போன உறவுகளின் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை இன்று வவுனியா மேல் நீதி மன்றத்தில் எடுத்துக்ககொள்ளப்பட்டபோது காணாமல் போனோரின் உறவினர்கள் இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தால் கைது செய்யப்பட்டு காணாமல் போனார் ஆறு பேரின் உறவினர்கள் வவுனியா மேல் நீதி மன்றில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர்.
இந் நிலையில் இம் மனு மீதான விசாரணை இன்று மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது அரச தரப்பில் இது தொடர்பான அறிக்கை முழுமையாக சமர்ப்பிக்கப்பட்மையால் இவ் வழக்கினை ஆகஸ்ட் 26ம் திகதிக்கு ஒத்தி வைப்பதாக வவுனியா மேல் நீதிமன்றம் தெரிவித்தது.

இவ் வழக்கில் பாதிக்கப்பட்டோர் சார்பாக சட்டத்தரணி கே.எஸ் ரட்ணவேலும், வடபகுதி காணாமல் போனோர் சங்க பிரதிநிதிகளும், மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு பிரதிநிதிகளும் பாதிக்கப்பட்டவரின் உறவினர்களும் மன்றில் ஆயராகியிருந்தனர்.

இதேவேளை, காணாமல் போனோர் தொடர்பாக அரசு முறையான பதிலை வழங்க கோரி வவுனியா பிரதான தபாலகத்திற்கு முன்பாக அமைதியான பேரணி ஒன்று ஆரம்பமாகி நீதிமன்றம் வரை சென்றிருந்தது.

நீதிமன்றத்தின் முன்னால் சில மணி நேரம் அமைதியான முறையில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் பாதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டதன் பின்னர் போராட்டம் நிறைவடைந்தீருந்தது.

ஒரே நாயுடன் போதைப்பொருளை கண்டுபிடித்து கலக்கும் நபர்..!

Dogஜேர்மனியில் நாயுடன் இணைந்து போதை மருந்து செயல்களில் ஈடுபடும் சிறுவர்களை கண்டுபிடித்து வருகின்றார் ரெய்னர் ரூதர் (Reiner Reuther).

ரெனிர் ரூதர் (Reiner Reuther) மற்றும் அவரது நாய் தோர் (Thor) ஆகிய இருவரும் இணைந்து பெற்றோர்களை மறந்து போதை மருந்து பழக்கங்களுக்கு அடிமையாவதில் இருந்து குழந்தைகளை தடுக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.

25 ஆண்டுகளாக ஹோட்டல் உரிமையாளராக இருந்த இவர் விலங்குகளுடன் பணியாற்ற விரும்பி அமெரிக்க பொலிஸ் அகாடமியில் நாய் கையாளுதல் பயிற்சியில் ஈடுபட்டார்.

அங்கு பயிற்சியை முடித்துவிட்டு ஜேர்மன் வந்த இவர் குழந்தைகள் போதை காப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் அவரது பணியில் சந்தித்த அனுபவங்கள் குறித்து கூறுகையில், நான் பல்வேறான அனுபவங்களை இந்த பணியில் சந்தித்துள்ளேன்.

அவற்றில் ஒரு அனுபவமாக தனது மகள் போதையில் ஈடுபடுவதாக சந்தேகித்த பெற்றோர்கள் இவர்கள் மூலமாக வீட்டில் சோதனை செய்ததில் கழிவுகளை பயன்படுத்தும் இடத்தில் கோகைன் போதை பொருளை மறைத்து வைத்து பயன்படுத்துவைதை கண்டுபிடித்துள்ளனர்.

மற்றுமொரு அனுபவமாக பெற்றோரே தன்னுடைய மகன் தனது இளமைப் பருவத்தை புறக்கணித்து விட்டு தவறான வழியில் செல்கிறான் என்று பொலிசில் புகார் கொடுத்துள்ளனர் என்றும் தனது அனுபவங்களை கூறியுள்ளார்.

மேலும், தனியார் நாய் கையாளர்கள் இந்த மாதிரியான செயல்களில் பொறுப்புடன் ஈடுபடுவதில்லை. ஆனாலும், தனது சேவைகளை திறம்பட செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து பெற்றோர்கள் அனைவரும் மனநல ஆலோசனை பெறுவது என்பது முக்கியமாகும். நான் இந்த மாதிரியான பிரச்சனைகளை சந்திக்கும் பெற்றோர்களுக்கு உதவி செய்ய விரும்புகின்றேன்.

ஆனால் அவர்கள் தங்கள் குழுந்தைகள் குறித்த விடயங்களை தெரிவிப்பது இந்த பிரச்சனைக்கு உதவியாக இருக்கும்.

மேலும், போதை பிரச்சனையானது அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் பரவலாக பேசப்படுகின்ற விடயம் என்றும் ஆனால் ஜேர்மனியில் இதனை ஒரு மறைமுக பிரச்சனையாக கையாளுகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

இவர் ஒரு தேடலுக்கு 95 யூரோ பணம் வாங்குகின்றார். மேலும் இந்த பணி குறித்து கூறுகையில், தனியாக வேலை பார்க்கும் நாங்கள் எங்களது தொழிலை மேலும் வளரச் செய்ய விரும்புகின்றோம் என்று தெரிவித்துள்ளார்.

கார் மோதி சிறுமி பலி – நகைச்சுவை நடிகர் கைது!!

balaமதுரை அருகே கார் மோதி, சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இளம் நகைச்சுவை நடிகர் பாலா கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுரை அருகே உள்ள பரவையை சேர்ந்த ரங்கநாதன் மகன் பாலா என்ற பாலசரவணன். “குட்டிப்புலி” படத்தில் நகைச்சுவை நடிகராக நடித்தவர்.

இவர் இப்போது “பண்ணாயாரும் பத்மினியும்” என்ற படத்தில் நடித்து வருகிறார். ஞாயிற்றுக்கிழமை தனது காரில் அழகர்கோவில் சாலையில் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது செட்டியார்பட்டி அருகே சாலையை கடக்க முயன்ற உமாமகேஸ்வரி என்ற 4 வயது சிறுமி மீது கார் மோதியது.
இதில் படுகாயமடைந்த உமாமகேஸ்வரி மேலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டுவரும் வழியில் உயிரிழந்தார். இது குறித்து மேலவளவு பொலிஸார் வழக்குப் பதிவு செய்து நடிகர் பாலசரவணனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

அப்ரிடி அதிரடியால் பாகிஸ்தான் வெற்றி..!

afridiபாகிஸ்தான் கிரிக்கெட் அணி 5 ஒருநாள் போட்டி மற்றும் இரண்டு 20ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது.

இரு அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி கயானாவில் நேற்று நடந்தது. முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி  50  ஓவரில் 9  விக்கெட் இழப்புக்கு 224 ஓட்டங்கள் எடுத்தது.

அப்ரிடியின் ஆட்டம் அதிரடியாக இருந்தது. அவர்  55  பந்தில்  76 ஓட்டங்கள் எடுத்தார். இதில் 6 பவுண்டரி,  5 சிக்சர் அடங்கும்.

கேப்டன் மிஸ்பா–உல்–ஹக்52 ஓட்டங்கள்   எடுத்தார். ஹோல்டர் 4 விக்கெட்டும், கேமர் ரோச், பிராவோ தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

225 ஓட்டங்கள்  இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி ஆடியது. பேட்டிங்கில் முத்திரை பதித்த அப்ரிடி பந்து வீச்சுலும் சாதித்தார். அவரது அபாரமான பந்து வீச்சால் வெஸ்ட் இண்டீஸ் விக்கெட்டுகள் சரிந்தன.

வெஸ்ட் இண்டீஸ் அணி 41 ஓவரில்98 ஓட்டங்களில் சுருண்டது. இதனால் பாகிஸ்தான் அணி 126 ஓட்டங்கள்  வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அப்ரிடி 9 ஓவர் வீசி 12 ஓட்டங்கள்  கொடுத்து7 விக்கெட் கைப்பற்றினார். முகமது இர்பானுக்கு 2 விக்கெட் கிடைத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் சாமுவேல்ஸ் அதிகபட்சமாக25 ஓட்டங்கள்  எடுத்தார். கிறிஸ் கெய்ல் உள்பட 7 வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டம் இழந்தனர்.

76 ஓட்டங்கள்  குவித்து, 7 விக்கெட் வீழ்த்திய அப்ரிடி ஆட்டநாயகனாக தேர்வு பெற்றார்.

இந்த வெற்றி மூலம் 5 போட்டிக் கொண்ட தொடரில் பாகிஸ்தான் 1–0என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது. 2–வது ஒருநாள் போட்டி கயானாவில் நாளை நடைபெறுகிறது.

சீமான் ரகசியத் திருமணம்??

seeman

பிரபல இயக்குநரும், நடிகரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான‌ சீமான் ரகசியத் திருமணம் செய்துள்ளதாக பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளன‌.

சீமானின் திருமணம் குறித்து கடந்த சில ஆண்டுகளாகவே பல வதந்திகள் கிளம்பின. ஈழத்தைச் சேர்ந்த விதவைப் பெண் போராளி ஒருவரை திருமணம் செய்யப்போவதாகவும் கூறப்பட்டது. ஆனால் இது பொய் என்று பின்னர் உறுதியானது.

ஆனால் தற்போது, முன்னாள் சபாநாயகர், மறைந்த காளிமுத்துவின் மகள் கயல்விழியைதான் சீமான் திருமணம் செய்துள்ளாராம்.

இவர்கள் இருவரது திருமணமும் ஏற்கனவே சீமான் கூறிய படி, சென்ற ஆண்டு தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரன், மதிவதனி திருமணம் நடந்த தினம் அக்டோபர் 1ம் திகதி நடந்ததாக சொல்லப்படுகிறது.

இன்னமும் சீமான் திருமணம் முறைப்படி அறிவிக்கப்படவில்லை. நெருக்கமான சிலரை தவிர வேறு யாருக்கும் தெரியாது என்கிறார்கள்.

இதை ஏன் ரகசியமாக வைத்திருக்க வேண்டும்? எல்லோரும் அறிய சொல்லிவிட வேண்டியது தானே என்று அவரின் நண்பர்கள் வலியுறுத்தி வந்ததை அடுத்து வரும் ஆகஸ்ட் 27ஆம் திகதி தனது திருமண வரவேற்பு விழாவுக்கு ஏற்பாடு செய்ய ஏற்பாடு செய்ய போகிறாராம்.

இது பற்றிய அறிவிப்பை விரைவில் வெளிடுவார் என்றும் சொல்கிறார்கள்.

இந்திய வெள்ளம்: காணாமல்போன 5700 பேரும் இறந்துவிட்டனர்!!

utarkand

இந்தியாவில் உத்தராகண்ட் மாநிலத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட பெரும் மழைவௌ்ளம் மற்றும் மண்சரிவுகளில் சிக்கி காணாமல்போயிருந்த 5700க்கும் அதிகமானவர்கள் இறந்துவிட்டதாகவே கருதப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பணஉதவி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. காணாமல்போனவர்களின் குடும்பங்களுக்கு மரணச்சான்றிதழ்களை வழங்கும் பணிகளை துரிதப்படுத்துவதன்மூலம் இழப்பீடு வழங்கும் வேலைகளை வேகமாக முன்னெடுக்க முடியும் என்று உத்தாராகண்ட் முதல்வர் விஜய் பாஹுகுணா தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த ஒவ்வொருவருக்கும் 5 லட்சம் ரூபா படி அவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படுகிறது. முன்னதாக, 600 பேர் வரையிலேயே இந்த இயற்கை அழிவில் கொல்லப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

ஹிமாலய மலையை ஒட்டியிருந்த 4,000க்கும் அதிகமான கிராமங்களைப் பாதித்த மழைவௌ்ளத்திலும் மண்சரிவுகளிலும் சிக்கியிருந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் மீட்புப் பணியாளர்களால் காப்பாற்றப்பட்டனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒட்டுமொத்தமாக எத்தனை என்பது இன்னும் அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

-BBC தமிழ்-

கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக விக்னேஸ்வரன் அறிவிப்பு..!

tnaவடமாகாண சபைத் தேர்தலுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் பிரதம நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

பம்பலப்பிட்டியிலுள்ள கூட்டமைப்பின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற விசேட கூட்டத்தில் இத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

ஸ்ரீசாந்துடன் நடிக்க மறுத்த அசின்..!

asinபாலச்சந்திர குமார் இயக்க பிக் பிக்சர் எனும் மலையாளப் படத்தில் நாயகனாக சர்ச்சைக்குரிய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் நடிக்கிறார்.

ஊழல் புகாரில் கைதாகி, தற்போது பிணையில் வெளிவந்துள்ள இவர் தான் இழந்த பெயரை மீண்டும் பெற சினிமாவில் களமிறங்கியுள்ளார்.

இப்படத்தில் ஸ்ரீசாந்த் ஜோடியாக மலையாளத்திலிருந்து இந்தி திரையுலகிற்கு சென்ற அசினை கேட்டுள்ளனர்.

ஆனால் இதற்கு அசின் மறுத்துவிட்டதால், அவருக்குப் பதிலாக வேறு பிரபலமான பாலிவுட் நடிகையை ஒப்பந்தம் செய்வதாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தில் ஸ்ரீசாந்துடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார் நடிகர் பிரகாஷ்ராஜ்.

சுரேஷ் கோபி உள்ளிட்ட சில முக்கிய நடிகர்களிடமும் பேசி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.