யானை தாக்கி ஒருவர் பலி – மக்கள் அதிகாரியை தாக்கி ஆர்ப்பாட்டத்தில்..!

வடமேல் மாகாணத்தில் வில்பத்து சரணாலயத்தை ஒட்டிய புத்தளம் மாவட்டத்தில், குருநாகல் வீதியில் ஆனமடுவ, கல்லடி பகுதியில் நேற்று இரவு யானை தாக்கி உயிரிழந்த ஒருவரின் சடலத்தை வீதியில் வைத்துக்கொண்டு நூற்றுக்கணக்கான மக்கள் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

தமது பிரதேசத்தில் யானைகள் பொதுமக்களின் குடிமனைப் பிரதேசங்களுக்குள் நுழைந்து அட்டகாசம் புரிந்துவருவதாகவும் பல உயிரிழப்புகள் ஏற்பட்டும் அரசாங்கத் தரப்பில் அதனைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோசமிட்டனர்.

இதன்போது நிலைமையை கேட்டறியச்சென்ற பிரதேசத்துக்குப் பொறுப்பான உதவி அரசாங்க அதிபர் மொஹமட் மாலிக்கையும் அவரது வாகன ஓட்டுநரையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்கியுள்ளனர்.

யானை தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் விரக்தியடைந்திருந்த காரணத்தினால், அங்கு சென்ற அரசாங்க அதிகாரியான தன்மீது தாக்குதல் நடத்தியதாக உதவி அரசாங்க அதிபர் மலிக் கூறினார்.

அரசாங்கம் கடந்த காலங்களில் பல இடங்களில் யானைகளைத் தடுக்க மின்சார வேலிகளை அமைத்திருந்தாலும் மின்சார வேலிகள் இல்லாத இடங்களினூடாக குடிமனைகளுக்குள் புகுந்துவிடுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இன்றைய சம்பவத்திற்கு பின்னர், மற்ற இடங்களிலும் மின்சார வேலி அமைக்கும் பணிகளை வனவிலங்குத் துறை அதிகாரிகள் விரைவுபடுத்துவார்கள் என்று தன்னிடம் கூறியிருப்பதாகவும் புத்தளம் உதவி அரசாங்க அதிபர் மேலும் கூறினார்.

இந்தப் பகுதிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளில் யானை தாக்கி 10 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

இதே பிரதேசத்தில் கருவெலகஸ்வெவ என்ற இடத்தில் ஒன்றரை மாதங்களுக்கு முன்னரும் ஒருவர் யானை அடித்து உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

(BBC)

பிரதமராகும் தகுதியுடையவர் ஜெயலலிதாவே..

jayalalitha

இந்தியாவின் பிரதமராகும் தகுதி ஜெயலலிதாவுக்கே உள்ளது என, வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களிடம் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது.

டாக்டர் மொய்தீன்பிச்சை இந்தியாவில் பிரதமர் ஆகும் தகுதி ஜெயலலிதா, நரேந்திர மோடி, ராகுல்காந்தி இவர்களில் யாருக்கு அதிகம் என்று கருத்து கணிப்பு நடத்தினார். கருத்து கணிப்பு முடிவுகளை இன்று சென்னையில் வெளியிட்டார். அவர் கூறியதாவது,

சவுதிஅரேபியா, கட்டார், அரபுநாடுகள், ஏமன், பக்ரைன், அவுஸ்திரேலியா, குவைத், சிங்கப்பூர், மலேசியா, இங்கிலாந்து, தாய்லாந்து ஆகிய நாடுகளில் வாழும் இந்தியர்களிடம் ஈ.மெயில் மற்றும் தொலைபேசி மூலம் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.

மொத்தம் 500 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. இதில் 75 சதவீதம் பேர் ஜெயலலிதாவுக்குதான் பிரதமர் ஆகும் தகுதி அதிகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதேவேளை, 2-வது இடத்தை நரேந்திர மோடியும், 3-வது இடத்தை ராகுல் காந்தியும் பெற்று உள்ளனர்.

க.பொ.த உயர்தரப் பரீட்சை ஆகஸ்ட் 5ம் திகதி ஆரம்பம்..!

2013 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி தொடக்கம் 31 ம் திகதிவரை நடத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் மாதம் 25 ம் திகதி இடம்பெறும் எனவும், இன்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2013ம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைகளுக்காக 293,117 பரிட்சார்த்திகள் தோற்றவுள்ளதாகவும், புலமைப் பரிசில் பரிட்சைக்காக 328 ,614 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த பரீட்சைகளில் இடம்பெற்ற முறைகேடுகளை தவிர்த்து இம்முறை பரீட்சையை தக்க முறையில் நடத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாவும் அமைச்சர் பந்துல குணவர்த்தன இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அரச பொருட்களை விற்க சென்ற மூவர் கைது..!

அரசிற்கு சொந்தமான பொருட்களை சட்ட விரோதமாக விற்பனை செய்ய கொண்டு சென்ற மூவர் யாழ்ப்பாணத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

யாழ் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால், லொறி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே, ஒருதொகை பொருட்களுடன் சந்தேகநபர்கள் கைதாகியுள்ளனர்.

டி 56 ரக துப்பாக்கி மற்றும் அதற்கு பாவிக்கப்படும் ரவைகள், 120 மில்லி மீற்றர் துப்பாக்கி, துப்பாக்கி ரவைகள் உள்ளிட்ட பல பொருட்கள் இவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்பவத்தில் கைதான சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

அம்பலமான கோச்சடையான் இரகசியங்கள்..

kochadayan

கோச்சைடையான் படத்தில் இராட்சத சுறாவுடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சண்டை போடுவது போல காட்சி அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

இந்தியத் திரையுலகின் முதல் மோஷன் கேப்சரிங் படமாக தயாராகி வரும் திரைப்படம் கோச்சடையான். 3 டியில் வெளியாகும் இந்தப் படத்தின் காட்சிகள் குறித்த தகவல்கள் எதையும் வெளியிடாமல் இரகசியம் காக்கிறார்கள்.

அதே போல, படத்தின் ஸ்டில்கள், ட்ரைலர்கள் எதையும் இன்னும் வெளியிடவில்லை. படத்தின் வெளியீட்டு திகதி குறித்தும் தெளிவாக எந்த அறிவிப்பும் இல்லை.

இந்த நிலையில் படம் குறித்து ஒரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் ரஜினி ஒரு பிரமாண்ட சுறா மீனுடன் மோதுவது போன்ற காட்சியை ஹாலிவுட் தரத்துக்கு நிகராக உருவாக்கியிருக்கிறார்களாம்.

ஆனால் இதில் பெரும்பகுதி கிராபிக்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் காட்சி இரசிகர்களை மிரளவைக்கும் என கோச்சடையான் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

கோச்சடையானில் ரஜினி இரண்டு வேடங்களில் தோன்றுகிறார். அப்பா கதாபாத்திரத்தின் பெயர் கோச்சடையான். மகன் பெயர் ராணா. ரஜினிக்கு ஜோடியாக முதன்முறையாக தீபிகா படுகோனே நடிக்கிறார்.

சரத்குமார், ஆதி, ஷோபனா, ருக்மணி விஜயகுமார், ஜாக்கி ஷெராப் மற்றும் நாசர் ஆகியோர் நடிக்கின்றனர். ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

13வது திருத்தச் சட்ட மூலம் மாற்றங்களுக்கு உட்படுத்தப்படாது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் – திஸ்ஸ அத்தநாயக்க..!

13வது திருத்தச் சட்ட மூலம் மாற்றங்களுக்கு உட்படுத்தப்படாது உள்ளவாறே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

13வது திருத்தச் சட்ட மூலத்தை ஒரு சூதாட்டமாக அரசாங்கம் நியமித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று (25) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே திஸ்ஸ அத்தநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

ஜூன் மாதம் 12ஆம் திகதி கட்சி தலைவர் ஊடாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திற்கு பதில் கிடைக்கும் பட்சத்தில் மட்டுமே வடக்கு தேர்தல் தொடர்பில் நியமிக்கப்பட்ட தெரிவுக் குழுவிற்கு சமூகமளிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

அந்த கடிதத்தின் மூலமாக 3 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் எவ்வாறாயினும் அந்த கடிதத்திற்கு இதுவரையில் எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லை என திஸ்ஸ கூறினார்.

இதேவேளை ஊடகவியலாளர்கள் லசந்த விக்ரமதுங்க கொலை மற்றும் பிரகீத் எக்னெலிகொட காணாமற்போயுள்ள சம்பவங்கள் தொடர்பில் இதுவரை அறிக்கையிடப்படவில்லை என திஸ்ஸ அத்தநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

காயத்ரியை கன்னத்தில் அறைந்த நடிகர்..

gayathri

கவிஞர் கண்ணதாசன் பேரன் ஆதவ் கண்ணதாசன் ஹீரோவாக நடிக்கும் படம் பொன் மாலை பொழுது. காயத்ரி ஹீரோயினாக நடிக்கிறார். ஏ.சி.துரை டைரக்ஷன். அவர் கூறியதாவது: இப்படத்தில் தந்தை மகளுக்கு இடையே வாக்குவாதம் நடக்கும் காட்சி படமாக்கப்பட்டது. தந்தையாக அருள்தாஸ், மகளாக காயத்ரி நடித்தனர்.

வாக்குவாதம் முற்றிய காட்சியில் காயத்ரியை அறைவதுபோல் அமைந்தகாட்சியில் உண்மையிலேயே காயத்ரியை கன்னத்தில் அறைந்துவிட்டார் அருள்தாஸ். எதிர்பாராமல் நடந்த இந்த சம்பவத்தால் காயத்ரி அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். அவரிடம் அருள்தாஸ் மன்னிப்பு கேட்டார். அதன்பிறகே அவர் சமாதானம் அடைந்தார். இப்படத்தை அமிர்த கௌரி தயாரிக்கிறார்.

மறுபடியும் திரையில் ஜோதிகா!

jothika

திருமணத்துக்குப் பிறகு நடிக்க மாட்டேன். குடும்பத்தைப் பார்த்துக் கொள்வதிலேயே என் முழு நேரத்தையும் செலவிடுவேன், திருமணமாகப் போகும் எல்லா நடிகைகளும் இயக்குநர் உதவி இல்லாமல் சொந்தமாகச் சொல்லும் டயலாக் இது.

ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது என்பார்கள். அப்படித்தான் திருமணத்துக்குப் பிறகு நடிக்க மாட்டேன் என்று சொல்பவர்கள், 2 வருடங்களுக்குப் பிறகு மறுபடியும் கோடம்பாக்கத்துக்கு படையெடுப்பார்கள். ஸ்ரீதேவி முதல் சினேகா வரை யாரும் இதற்கு விதிவிலக்கு கிடையாது.

ஆனால், ரீஎண்ரியில் அவர்களுக்கு கிடைப்பதென்னவோ அக்கா, அண்ணி வேடங்கள் தான். சிலருக்கு அம்மா வேடத்துக்கான வாய்ப்புகள் கூட கதவைத் தட்டும். அதைப் பார்த்து பயந்த நடிகைகள், பின்னங்கால் பிடரியில்பட வீட்டுக்கே ஓடிவிடுவார்கள்.

இதுவரைக்கும் இருக்கிற நல்ல பெயரை வைத்து காலத்தை ஓட்டிவிடலாம் என்று நினைப்பார்கள். நாம் கேட்டால் மட்டும், நல்ல கேரக்டருக்காக வெயிட் பண்றேன் என்பார்கள். தமிழ்நாடே தூக்கிவைத்துக் கொண்டாடிய சிம்ரனுக்கு நடந்த கதை ஊர்உலகம் அறிந்த ரகசியம்.

இதனால்தான் திருமணத்துக்குப் பிறகு நடிப்பதில்லை என்ற முடிவில் இருந்தார் ஜோ. சூர்யாவுக்காக ஒரே ஒரு விளம்பரப் படத்தில் மட்டும் அவருடன் ஜோடியாக நடித்தார்.

தற்போது திருமணமான பிறகும் சினேகாவுக்கு வாய்ப்புகள் குவிவதைப் பார்த்து, ஜோதிகாவுக்கும் நடிப்பு ஆசை துளிர்விட்டிருக்கிறதாம். இன்றைக்கு டி.வி., பத்திரிகைகள் எதைப் பார்த்தாலும் எல்லா விளம்பரங்களிலும் பிரசன்னா – சினேகா ஜோடியாக இருப்பதைப் பார்த்து, நாமும் இப்படி நடித்திருக்கலாமே என்று சூர்யாவிடம் கேட்டதாகச் சொல்கிறார்கள்.

அதுக்கென்ன? இனிமேல் நடித்தால் போச்சு என சூர்யாவும் பச்சைக்கொடி காட்டிவிட்டாராம். தவிர, சினிமாவிலும் நடிக்கும் ஆசை இருப்பதை ஜோ தயக்கத்துடன் வெளிப்படுத்த, யோசித்த சூர்யா, நல்ல கேரக்டர்கள் என்றால் பார்க்கலாம் என சொல்லியிருக்கிறாராம்.

ஹரிதாஸ்-சினேகா, இங்கிலீஷ் விங்கிலீஷ்-ரீதேவி போல நடிப்பை வெளிப்படுத்தும் பாத்திரம் கிடைத்தால் சூர்யா – ஜோ இருவருக்கும் சம்மதமாம். குழந்தைகள் இருவரும் ஓரளவுக்கு வளர்ந்துவிட்டதால் விரைவில் ஜோதிகாவை திரையில் பார்க்கலாம் என்கிறார்கள்.

15 வயது காதலியை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 17 வயது காதலன்..!

சிறுமி ஒருவரை பாடசாலையில் வைத்து துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கை எடுத்துக்கப்பட்டுள்ளதாக புத்தளம், பல்லம பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி பல்லம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 15 வயதுடைவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுமி 17 வயதுடைய சிறுவன் ஒருவருடன் காதல் தொடர்பு வைத்திருந்ததாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

கடந்த 22ஆம் திகதி தனியார் வகுப்பிற்குச் செல்வதாக வீட்டாரிடம் கூறிவிட்டு சென்ற சிறுமி, தொலைபேசியில் தனது காதலனை பாடசாலைக்கு வருமாறு தெரிவித்துள்ளார்.

பாடசாலையில் தனது காதலனை சந்தித்ததாகவும் அதன்போது காதலன் தன்னை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகவும் சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

சந்தேகநபரான சிறுவன் ஊரிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் சிறுவனை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சொர்க்கம் யாருக்கு கிடைக்கும்?

large

சொர்க்கலோகத்தை “அமராவதி’ என்று அழைப்பர். இந்திரனும், இந்திராணியும் இந்த உலகை ஆட்சி செய்கின்றனர். சந்திரன், வாயு, வருணன், அக்னி போன்ற தேவர்களும் இங்கிருக்கின்றனர். யாகம் செய்தவர்கள், தீர்த்தயாத்திரை செல்பவர்கள், தானம், விரதம் மேற்கொள்பவர்கள் பிறவி முடிந்தபின் சொர்க்கத்தில் வாழ அனுமதிக்கப்படுவர்.

கற்பகவிருட்சம், ஐராவதம் யானை, உச்சிரவஸ் குதிரை, சயந்தம் என்னும் மண்டபம், நந்தவனம் என்னும் தோட்டம், காமதேனு, அமிர்தம், சிந்தாமணி என்பவை சொர்க்கத்தில் இருப்பதாகச் சொல்வர். மேனகா,ரம்பா, ஊர்வசி, திலோத்தமா என்னும் அப்சரஸ் பெண்களும் இங்கு வாழ்கின்றனர். நூறு அஸ்வமேத யாகம் நடத்தினால் ஒருவர் இந்திர பதவியை அடைந்து விடலாம் என்கின்றன புராணங்கள்.

ஐ.சி.சி. சம்பியன் கிண்ண கனவு உலக அணியில் இலங்கை சார்பில் குமார் சங்ககார..

ICC Dream Teamஐ.சி.சி. சம்பியன் கிண்ண 11 பேர் கொண்ட 2013 ஆம் ஆண்டுக்கான கனவு உலக அணியில் இலங்கை அணியின் சார்பில் குமார் சங்கக்கார தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

ஐ.சி.சி சம்பியன் கிண்ண கனவு உலக அணிக்கு டோனி அணித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவ் அணியில் இந்திய அணி சார்பாக டோனி, தவான், கோலி, ஜடேஜா மற்றும் புவனேஷ் குமார் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்து அணி சார்பாக ஜொனதன் ட்ரொட், ஜேம்ஸ் அண்டர்சன். பாகிஸ்தான் அணி சார்பாக மிஸ்பா உல்கஹ். நியூஸிலாந்து அணி சார்பாக மிச்செல் மெக்ளங்கன் மற்றும் தென்னாபிரிக்க அணி சார்பாக ரியன் மெக்ளரென் ஆகியோர் இம் முறை தெரிவு செய்யப்பட்டுள்ளனர். பன்னிரண்டாவது வீரராக இங்கிலாந்து அணியின் ரூட் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஹெடிவத்தை பிரதேசத்தில் மூன்று பஸ்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்து : 16 பேர் காயம்

ஹபராதுவ பொலிஸ் பிரிவின் ஹெடிவத்தை பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற பஸ் விபத்தில் 16 பேர் காயமடைந்துள்ளனர்.

மூன்று பஸ்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

ஊழியர்களை ஏற்றிச் சென்ற தனியார் பஸ் ஒன்றுடன், பின்னால் வந்த பயணிகள் பஸ்ஸொன்று மோதியுள்ளது.

இதனால் ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ் முன்னாள் சென்ற மற்றுமாரு பயணிகள் பஸ்ஸூடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் கராப்பிட்டிய மற்றும் ஹபராதுவ கலுகல கிராமிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய பயணிகள் பஸ் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, ஹபராதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

அட்லாண்டிக் கடலில் பாரிய நிலநடுக்கம்..!

அட்லாண்டிக் கடலில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் பிரென்ச் கயானாவிலிருந்து 772 கிலோமீட்டர் தொலைவில் அட்லாண்டிக் கடலில் மையம் கொண்டிருந்தது.

ரிக்டர் அளவுகோளில் 6.4 ஆகப் பதிவான நிலநடுக்கம் பூமிக்கடியில் 6.2 கிலோமீட்டரில் ஏற்பட்டது. இதன் அதிர்வுகள் நிலப்பரப்பில் உணரப்படவில்லை. இதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.

நீண்டநேரம் தொடர்ந்து உட்காருவதால் உயிருக்கு ஆபத்து ஆய்வில் தகவல்..

 

sitting

ஒரு நாளில் 11 மணி நேரம் வரை உட்கார்ந்து இருப்பவர்களில் 40 சதவீதத்தினர் அடுத்த 3 ஆண்டுகளில் உயிரை விடும் ஆபத்து அதிகம் என்று ஒரு ஆய்வு மிரட்டுகிறது.அவுஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழக பொதுநல மருத்துவ பிரிவு பேராசிரியர் ஹைட் வான் டெர் பிளாஜ் தலைமையில் ஒரு குழு நடத்திய ஆய்வில் 2 லட்சம் பேர் பங்கேற்றனர். அதன் அறிக்கை ஏஐஎம் என்ற மருத்துவ இதழில் வெளியானது.

அதில் இடம்பெற்ற விபரங்கள்:

நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதே பல்வேறு உடல் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது. பருமன், டயபடீஸ் ஆகியவை அவற்றில் முக்கியமானவை.

ஒரு நாளில் 4 மணி நேரத்துக்கு குறைவாக உட்கார்ந்தே இருப்பவர்களுடன் ஒப்பிடுகையில், 11 மணி நேரத்திற்கு அதிகமான நேரம் உட்கார்ந்து இருப்பவர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். இவர்களில் 40 சதவீதத்தினர் அடுத்த 3 ஆண்டுகளில் உயிரிழக்கும் அபாயம் இருக்கிறது.

2 லட்சம் பேரிடம் நடத்தப்பட்ட உடல் உழைப்பு, எடை, உடல் ஆரோக்கிய நிலை ஆகியவற்றின் அடிப்படையில் துல்லியமாக நடத்திய ஆய்வில் இது தெரிய வந்தது. ஜிம்முக்கு போய் உடற்பயிற்சி செய்வது நீண்ட நடைபயிற்சி ஆகியவையும் அவசியம்தான்.

ஆனால், அவற்றை விட மிக முக்கியமானது நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்காராமல் இருப்பது. உட்கார்ந்தே இருந்தால் பல உடல் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

அலுவலக நேரத்தில் எத்தனை முறை முடியுமோ 20 முதல் 30 வினாடிகள் வரை எழுந்து நிற்கலாம். போன் பேசும் போது நிற்கலாம். லிப்ட், எஸ்கலேட்டரை தவிர்த்து படிகளில் ஏறலாம். இமெயில், இன்டகொம் தகவல் பரிமாற்றம் தவிர்த்து நேரில் சென்று பார்க்கலாம்.

ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கு ஒருமுறை இருக்கையை விட்டு எழுந்து சில நிமிடங்கள் நடக்கலாம். குறைந்தபட்சம் உட்கார்ந்த பொசிஷனை மாற்றி தோள்பட்டையை அசைத்து, நீண்ட மூச்சிழுத்து விட்டு தசைகள் அழுத்தத்தை ரிலாக்ஸ் செய்யலாம்.

ஆய்வில் கவனிக்க வேண்டிய விடயங்கள்:

45 வயதுள்ள 2 லட்சம் பேரிடம் 2009 முதல் 2013 வரை, 5 ஆண்டுகள் ஆய்வு நடத்தப்பட்டது.

ஒரு நாளில் 3 மணி நேரம் வரை உட்கார்ந்திருப்பவரை விட 6 மணி நேரம் உட்கார்ந்திருப்பவர் 15 ஆண்டுகளுக்குள் இறக்க நேரிடலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பணி நேரம் மட்டுமின்றி ஓய்வை சேர்த்து ஒருநாளில் 90 சதவீத நேரத்தை பெரும்பாலோர் உட்கார்ந்தே செலவிடுகின்றனர். இது முற்றிலும் ஆபத்தானது.

 

 

ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி மாளிகை மீது தலிபான்கள் தாக்குதல்..!

ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி மாளிகையின் மீது இன்று (25) அதிகாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தலிபான் ஆயுததாரிகள் ஆப்கானிஸ்தான் நேரப்படி இன்று காலை 6.30 மணியளவில் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

ஜனாதிபதி மாளிகை பாதுகாப்பு படையினர் மற்றும் மாளிகைக்கு அருகிலுள்ள கட்டடங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் ஜனாதிபதியின் பாதுகாவலர்களுடன் தீவிரவாதிகள் மோதிக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த ஜனாதிபதி மாளிகைக்கு அருகாமையில் அமெரிக்க உளவுப் பிரிவான சீ.ஐ.ஏ வின் காரியாலயம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா சூடுவெந்தபுலவில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு..!

elec

சட்டவிரோதமாகன முறையிலும் பாதுகாப்பற்ற முறையிலும் மின்சாரம் பெற முயன்ற ஒருவர் மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளார்.

சட்டவிரோதமாக பொருத்தப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் சிக்குண்டே இவர் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

வவுனியா சூடுவெந்தபுலவு கிராமத்தில் அமைந்துள்ள வீட்டுத்திம் அமைந்துள்ள பகுதியில் நேற்றிரவு 8 மணியளவிலேயே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.  உயிரிழந்தவர் 38 வயதானசாருஹாசன் எனத் தெரியவருகிறது.