உலகை உலுக்கிய புகைப்படங்கள்..

உலகை உலுக்கிய பல படங்கள் வெளிவந்திருக்கிறன.அவையனைத்தும் உலக சரித்திரத்தை மாற்றியும் உள்ளது. இங்கு ஒருவர் தான் எடுத்த புகைப்படத்தை எண்ணி தற்கொலையே செய்துகொண்டுள்ளார் அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது பற்றிய மர்மம் இது.

கெவின் கார்ட்டர்- தென்னாப்பிரிக்காவின் அழகிய ஊரான ஜோஹன்ஸ்பர்க்கைச் சேர்ந்தவர் உலகப் புகழ்பெற்ற புகைபபடக்காரர். எல்லா சிறந்த புகைப்படக்காரர்களைப் போன்றே இவருக்கும் நல்ல புகைப் படங்களை எடுக்க வேண்டுமென்ற ஆசையும் ஆர்வமும் இருந்தன. இந்த ஆர்வம் அவரை நாடு,நகரம்,கிராமம்,காடு, மலை என்று கொண்டு சென்றது.

1993 இல் இந்த ஆர்வம் அவரைத் தனது சக புகைப்படப் பத்திரிக்கையாளர்களுடன் சூடானுக்குக் கொண்டு சென்றது. அப்போது சூடான் வரலாறு காணாத பஞ்சத்தில் சிக்கித் தவித்துக் கொண்டு இருந்தது. குறிப்பாக சூடானின் தென்பகுதி மக்கள் உண்ண உணவின்றி, பருக நீரின்றி பசி, தாகத்தில் தவித்துக் கொண்டிருந்தனர்.

பசி பஞ்சத்தில் தவிக்கும் மக்களின் நிலைகளைக் காமிராவில் பதிவு செய்ய கெவின் தொலைதூர கிராமங்கள் வரை சென்றார். இறுதியாக அவர் முயற்சி கைகூடியது. ஒரு நாள் தன் காமிராவை தோளில் தொங்க விட்டுக் கொண்டு உள்ளத்தை உலுக்கக் கூடிய படத்துக்கான காட்சியைத் தேடியலைந்து கொண்டிருந்தபோது அப்படிப்பட்ட காட்சி தென்பட்டது அவரது நற்பேறு என்றுதான் கூற வேண்டும்…

1

பசி பஞ்சத்தால் அடிபட்ட நோஞ்சான் நிலையில் உள்ள ஒரு சிறுமி நடக்கக் கூட இயலாத நிலையில் இ எலும்புக் கூடு போன்ற தன்னுடலை தவழ்ந்து இழுத்துக் கொண்டு மெல்ல மெல்ல ஊர்ந்து செல்வதைக் கண்டார்.

2

அந்தச் சிறுமி ஐக்கிய நாடுகளின் சபையின் சார்பாக அமைக்கப்பட்டு இருந்த உணவு வழங்கும் முகாமை நோக்கி தள்ளாடியபடி தவழ்ந்து கொண்டிருந்தது உண்மையிலேயே இதயத்தைப் பிழியக் கூடியதாக இருந்தது.

3

தோளில் இருந்து காமிராவை இறக்கி கோணம் பார்த்த கெவினுக்கு இன்னொரு வியப்பும் காத்திருந்தது. ஆம் அந்த எலும்பும் தோலுமான சிறுமிக்கும்ப் பின்னாலேயே சிறிது தொலைவில் ஒரு பிணம் தின்னிக்கழுகும் சிறுமியின் மீது பார்வையை நிலை நிறுத்திக் கொண்டு இருந்தது.

4
எப்போது சிறுமியின் உடலை விட்டு உயிர் பிரியும் மீதியுள்ள அந்தத் தோலையும் அதைச் சுற்றி இருக்கும் சிறிது மாமிசத்தையும் எப்போது சாப்பிடலாம் எனக் காத்திருந்தது பிணம் தின்னிக்கழுகு. கெவின் கேமரா லென்சை கண்ணுக்கு ஒத்திக் கொண்டார் சிறுமியையும் கழுகையும் ஒரு பிரேமில் அடக்கிக் கொண்டு ‘க்ளிக்’ செய்தார்.

5

அரிதான படம் பதிவாகி விட்டது. இதை விற்றால் நல்ல விலை கிடைக்கும் என்ற மகிழ்ச்சியில் கமிராவைத் தோளில் மாட்டிக் கொண்டு தனது வண்டியை ஸ்டார்ட் செய்தார்; பறந்து விட்டார். இந்த அரிதான படத்தை நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கைக்கு விற்று விட்டார்.

 

6

இந்தப் புகைப்படம் 1993 மார்ச் திங்கள் 26 ஆம் நாள் காலை நாளிதழில் முதல் பக்கத்தில் வெளியானது. இந்தப் படத்தைப் பார்த்ததும் ஆயிரக்கணக்கான வாசகர்கள் பத்திரிக்கை அலுவலகத்திற்கு தொலைப்பேசி மூலம் தொடர்புக் கொண்டனர்.

7

அனைவரும் ஒரே கேள்வியைத்தான் கேட்டனர். புகைப்படத்தில் உள்ள சிறுமி என்ன ஆனாள்? அவள் உயிருடன் பிழைத்தாளா அல்லது இறந்து விட்டாளா? இந்தக் கேள்விக்கான பதில் பத்திரிக்கையின் தொலைப் பேசி ஆப்ரேட்டரிடமோ படத்தை எடுத்த கெவின் கார்ட்டர்டமோ இல்லை. 1994இமே 23 அன்று பெரும் கை தட்டல்களுக்கு இடையே கெவின் கார்ட்டர் கொலம்பியப் பல்கலைக்கழகத்தின் பிரமாண்டமான அரங்கத்தில் இந்த அரிதான புகைப்படத்திற்கான புலிட்சர் விருதப் பெற்றுக்கொண்டார் இந்த விருது புகைப்படத் துறையில் நோபல் விருதுக்கு இணையானது.

8

விருது பெற்ற சில நாட்களுக்குப்பின் கெவின் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானார். கெவினுக்கும் அங்கு இருந்த பிணம்தின்னிக் கழுகுக்கும் என்ன வேற்றுமை? இரண்டும் ஒரே விதமாகத்தான் செயல்பட்டுள்ளனர்.குறைந்தபட்சம் புகைப்பட நிபுனர் கெவின் அந்த சிறுமிக்கு ஒரு வாய் தண்ணீர் அல்லது சாண்ட்விச் தந்து உயிரைக் காப்பாற்றி இருக்கலாம்.

அல்லது தனது வலுவான கைகளினால் அந்தச் சிறுமியைத் தூக்கிச் சென்று உணவளிக்கும் அமைப்பு அலுவலகத்தின் வாயிலிலாவது சேர்த்து இருக்கலாம்; கல்லெடுத்து வீசி அந்தக் கழுகையாவது விரட்டி இருக்கலாம். ஆனால் இவற்றில் எதையும் செய்யாமல் வெறும் ஒரு படத்தை எடுத்தார்; அதை அதிக விலை தந்த பத்திரிக்கைக்கு விற்று விட்டார் என்று ஒருவர் அவர் மீது குற்றம் சாட்டியதுதான் காரணம்.

9

புகைப்பட வல்லுநர் கெவின் விரைவில் ஜோஹன்ஸ்பேர்க் திரும்பி விட்டார். இரண்டு மாதங்களுக்குப் பின் கடற்கரைக்கு அருகில் அவரது கார் நின்று கொண்டிருந்தது. அதில் அவர் பிணமாகக் கிடந்தார். கெவின் தற்கொலை செய்துகொண்டார். அவரது பிணத்திற்கு அருகில் காவல்துறைக்கு ஒரு கடிதம் கிடைத்தது. அதில் சில வரிகளே இருந்தன. முதல் முதல் வரி I am Really, Really Sorry.

மனிதனுக்கு மனிதத்தன்மை என்பது நிச்சயம் வேண்டும் என்பதை கெவின் மரணம் நிருபித்துவிட்டது.

 

வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம் நடாத்தும் TM.சௌந்தரராஜன் நினைவு நாள்..!

soundarajan

வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம் மாதம்தோறும் நடாத்தி வரும் மாதாந்தமுழு நிலா கருத்தாடல் நிகழ்வின் 158 வது நிகழ்வாக தமிழ் திரை இசைஉலகின் முடிசூடாமன்னன் ரி.எம்.

சௌந்தரராஜனின் நினைவு நிகழ்வு கலாநிதி தமிழ்மணி அகளங்கன் தலைமையில் வவுனியா சுத்தானந்த இளைஞர் சங்க கலாசார மண்டபத்தில் காலை பத்து மணிக்கு நடை பெறவுள்ளது.

வரவேற்புரையினை சி.நாகராஜா அவர்கள் வழங்க சௌந்தரராஜன் பற்றிய நினைவு குறிப்பினை நா.தியாகராஜா அவர்கள் வழங்கவுள்ளார். விசேட நிகழ்வாக இசை செல்வர் ,கலா பூஷணம் ஈழத்து சௌந்தரராஜன் இ.சிவசோதி அவர்களால் காலத்தால் அழியாத சௌந்தரராஜனின் பாடல் இசை நிகழ்வாக நடைபெறவுள்ளது.

தமிழக முகாமில் உள்ள 60 இலங்கை அகதிகள் ஆஸி. தப்பிச்செல்ல முயற்சி?

refugee

தமிழகத்தில் நெல்லை மாவட்டம் தோகை மலைநல்லூர் கிராமம், வேலூர் மாவட்டம் வாலஜாப்பேட்டை, குடியாத்தம், காஞ்சிபுரம் மாவட்டம் கும்மிடிப் பூண்டி போன்ற பல்வேறு இடங்களில் அகதிகளுக்கு அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் இலங்கை தமிழர்கள் ஆயிரக்கணக்கானோர் வசித்து வருகிறார்கள்.

இலங்கையில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக தமிழர்கள் பலர் அந்நாட்டில் இருந்து அகதிகளாக வெளியேறி தமிழக முகாம்களில் குடியேறி உள்ளனர். இந்த முகாம்களில் வசிக்கும் இலங்கை அகதிகள் அடிக்கடி வெளிநாடுகளில் தஞ்சம் புகும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

முகாம்களில் இருந்து தப்பிச்சென்று விசைப்படகுகள் மூலமாக கடலிலேயே பயணம் செய்து அவுஸ்திரேலியா நாட்டில் தஞ்சம் அடைகின்றனர்.

முகாம்களில் இருந்து அவுஸ்திரேலியாவிற்கு தப்பிச்செல்ல முயற்சிக்கும் இலங்கை அகதிகளுக்கு உதவ பல முகவர்கள் உள்ளனர். முகவர்களிடம் இலங்கை அகதிகள் பல லட்சம் பணம் கொடுத்து அவுஸ்திரேலியா நாட்டுக்கு செல்கின்றனர்.

கடந்த ஏப்ரல் மாதம் 6ந் திகதி புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அருகே ஒரே விசைப்படகில் தப்பிச்செல்ல முயன்ற 120 பேரை கடற்படையினர் பிடித்தனர். அவர்கள் கோர்ட்டு நடவடிக்கைகளுக்குப் பின் மீண்டும் முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர்.

இந்த நிலையில் தமிழக முகாம்களில் வசிக்கும் இலங்கை அகதிகள் 60 பேர் விசைப்படகு மூலம் நாகை கடல் பரப்பு வழியாக அவுஸ்திரேலியாவிற்கு தப்பிச் செல்ல இருப்பதாக கியூ பிரிவு பொலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதன் அடிப்படையில் கியூ பிரிவு பொலிசார் நாகை மாவட்ட கடற்கரை பகுதிகளில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின்போது நாகை கீச்சாங்குப்பம் பகுதியில் மீன்பிடி விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்தில் புதிதாக இருந்த மர்ம படகு ஒன்றை பொலிசார் கைப்பற்றினர். இதுகுறித்து விசாரணை நடத்தினர்.

அந்த படகில் தான் அகதிகள் அவுஸ்திரேலியா நாட்டிற்கு தப்பிச் செல்ல முயன்றிருக்கலாம் என்று பொலிசாருக்கு சந்தேகம் எழுந்ததால், படகு உரிமையாளர் குறித்த விசாரணையில் இறங்கியுள்ளனர்.

இதுபற்றி பொலிஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தமிழக முகாம்களைச் சேர்ந்த இலங்கை அகதிகள் 60 பேர் நாகை கடல் பரப்பு வழியாக அவுஸ்திரேலியா தப்பிச் செல்ல முயல்வதாக ரகசிய தகவல் கிடைத்து. இதன் அடிப்படையில் நடைபெற்ற விசாரணையில் நாகையில் ஒரு விசைப்படகு சிக்கி உள்ளது.

அந்த படகு செருதூர் மீனவகிராமத்தைச் சேர்ந்த ஒருவரின் படகு என்பது தெரியவருகிறது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். இலங்கை அகதிகள் அவுஸ்திரேலியா செல்வதற்கு தரகராக வேலை பார்த்த சென்னை, மதுரை ஆகிய இடங்களைச் சேர்ந்த 2 பேரை பிடித்து விசாரித்து வருகிறோம்.

இவ்வாறு பொலிசார் கூறினர்.

நாகை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக ஆபரேசன் ஆம்லா ஒத்திகை நடைபெற்றது. இதில் பொலிசார் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த கண்காணிப்பு பணியின்போது தான் தமிழக முகாம்களைச் சேர்ந்த இலங்கை அகதிகள் அவுஸ்திரேலியா தப்பிச்செல்ல முயன்ற தகவல் கிடைத்ததாக பொலிசார் கூறினர்.

 

மீண்டும் முருகதாஸ் கூட்டணியில் விஜய்..!

கொலிவுட்டில் துப்பாக்கி வெற்றிக்கு பின்பு மீண்டும் ஒரு புதிய படத்தில் முருகதாஸ் கூட்டணியில் இணைகிறார் விஜய்.

கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் துப்பாக்கி.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இந்தப் படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

இந்நிலையில் விஜய்-முருகதாஸ் கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைய உள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்னும் பெய‌ரிடப்படாத இந்தப் படத்திற்கு முதலில் தீபிகா படுகோனிடம் திகதி கேட்கப்பட்டது.

ஆனால் தற்போது அவர் மிகவும் பரபரப்பாக இருப்பதால் சமந்தாவை தெரிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படத்தின் ஒளிப்பதிவாளராக ஜார்ஜ் சி வில்லியம்ஸும், கலை இயக்குனராக தேசிய விருது பெற்ற லால்குடி இளையராஜாவும் பணியாற்ற உள்ளனர்.

ஜில்லா படத்தை முடித்த கைகோடு விஜய் இந்தப் படத்தில நடிக்க வருகிறார். இப்படம் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டோனியின் பலத்தை பிராவோவிடம் கேட்டறிந்த பிரையன் லாரா..

lara

மேற்கிந்திய தீவுகளின் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் பிரையன் லாரா மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியதாவது…

நான் எதிர்த்து விளையாடிய இந்திய தலைவர்களில், சவுரவ் கங்குலிதான் எனக்கு பிடித்தமான தலைவர். அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் அவரது தலைமை பிரமிப்பாக இருந்தது. அவர் மீது நான் மிகவும் மரியாதை வைத்திருக்கிறேன்.

இதேபோல் கபில்தேவின் தலைமைப் பண்பும் சிறப்பாக இருந்தது. சச்சின் டெண்டுல்கர் எனது நண்பர். அவர் இந்திய கிரிக்கெட்டுக்கும், உலக கிரிக்கெட்டுக்கும் செய்த பங்களிப்பை அளவிட முடியாது.

தற்போதுள்ள தலைவர் டோனியின் தலைமை பற்றி அவருடன் விளையாடிய பிராவோவிடம் கேட்டேன். அப்போது மற்றவர்கள் சொல்வதை கேட்டு நடப்பதுதான டோனியின் மிகப்பெரிய பலம் என்று பிராவோ கூறினார்.

 

 

மீண்டும் அண்ணனுடன் கைகோர்க்கும் ஜெயம் ரவி..!

கொலிவுட்டில் ரவி மற்றும் அவரது அண்ணன் ராஜா ஆகிய இருவரும் ஜெயம் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்கள்.
ரீமேக் இயக்குனர்களில் மிகவும் பிரபலமானவராகிய ஜெயம் ராஜா, இவர் அறிமுகமான ஜெயம் படத்திலிருந்து கடைசியாக இயக்கிய வேலாயுதம் படம் வரை அனைத்துப் படங்களும் ரீமேக் படங்களே.

இவை அனைத்தும் தெலுங்கில் ஹிட் அடித்த படங்கள். அதில் பெரும்பாலான படங்களை தம்பி ரவியை வைத்து இயக்கி இருந்தார்.

ஒரே ஒரு படத்தில் மட்டும் விஜய் நடித்திருந்தார். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பின்பு ஜெயம் ராஜா மீண்டும் ஒரு புதிய படத்தில் தம்பியுடன் இணைகிறார்.

கடைசியாக 2010ம் ஆண்டில் ஜெயம் ராஜா – ஜெயம் ரவி கூட்டணியில் தில்லாலங்கடி திரைப்படம் வெளியானது.

சுமார் 3 ஆண்டு இடைவெளிக்குப் பின்பு மீண்டும் இந்தக் கூட்டணி கைகோர்க்க இருக்கிறது. இதற்காக ஒரு சூப்பரான கதையை தயார் செய்த ஜெயம் ராஜா அதனை தம்பி ஜெயம் ரவியிடம் கூறி சம்மதம் வாங்கி விட்டாராம்.

இதில் ஜெயரம் ரவிக்கு ஜோடியாக நயன்தாராவை நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

கல்பாத்தி எஸ். அகோரம் தயாரிக்கவிருக்கும் இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் பேசத்தெரியாமை குறித்து நான் வெட்கப்படுகின்றேன்! -அபிவிருத்தி லொத்தர் சபை பணிப்பாளர்

Gamini Ekanayaka_KF
இலங்கையில் பிறந்த மனிதராக இருந்துகொண்டு தமிழ் பேசத்தெரியாமை குறித்து நான் வெட்கப்படுகின்றேன் – இவ்வாறு அபிவிருத்தி லொத்தர் சபையின் தேசிய பணிப்பாளர் சட்டத்தரணி காமினி ஏக்கநாயக்க தெரிவித்தார். மட்டக்களப்பு வை. எம். சீ. ஏ. மண்டபத்தில் நடைபெற்ற அபிவிருத்தி லொத்தர் சபையின் 30ஆவது ஆண்டு நிறைவு விழாவையொட்டி மக்கள் நலனோம்பல் நிகழ்வில் கலந்து கொண்டு பேசும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றும்போது அவர், இப்போதுதான் முதன்முறையாக தமிழ் பேசும் மக்களுக்கு முன்னால் உரையாற்றுகின்றேன். அதுவும் அந்த மக்களின் மொழியான தமிழ் மொழியில் பேசமுடியாமை மிகுந்த வேதனை தருகிறது. இதுகுறித்து வெட்கப்படுகின்றேன். பல தியாகங்களுக்கு மத்தியில் வடக்கும் தெற்கும் கிழக்கும் இணைக்கப்படடிருக்கிறது. இந்த அமைதியின் மூலம் நாம் விரும்பிய இடங்களுக்கு விரும்பிய நேரத்தில் செல்லும் வாய்ப்பு கிட்டியுள்ளது என்றார்.

இவ்வைபவத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி. எஸ். எம். சார்ள்ஸ், மாநகர ஆணையாளர் கே. சிவநாதன் அபிவிருத்தி லொத்தர் சபையின் மட்டக்களப்பு மாவட்ட விநியோகத்தர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

 

பாகிஸ்தானில் கிறிஸ்தவ பெண்களை தாக்கி நிர்வாணமாக அழைத்துச் சென்ற கும்பல்!

pakistan-day பாகிஸ்தான் ஆளும் கட்சியின் ஆதரவோடு ஒரு கும்பல் கிறிஸ்தவ பெண்களை தாக்கி நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளது என்று ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவது, பாகிஸ்தானில் ஆளும் கட்சியான பிஎம்எல்-என் கட்சியின் ஆதரவுள்ள நிலச் சொந்தக்காரர் அப்துல் ராஷீத் என்பவரின் மகன் மொஹமட் முனீர். அவரால் அனுப்பப்பட்ட அடியாட்கள் சிலர் கடந்த 3ம் திகதி இரவு கிறிஸ்தவ குடும்பம் ஒன்று வசிக்கும் வீட்டுக்குள் புகுந்தனர். அப்போது அந்த வீட்டு ஆண்கள் வேலை நிமித்தமாக வெளியே சென்றிருந்தனர். வீட்டில் அர்ஷத் பீபி, சாஜிதா பீபி மற்றும் சௌரியா பீபி ஆகிய 3 பேர் மற்றும் அவர்களது மாமனார் சாதிக் மாசிஹ் மற்றும் மாமியார் ராணி பீபி ஆகியோர் தூங்கிக் கொண்டிருந்தனர்.

அந்த அடியாட்கள் சாதிக்கின் மகன்களைத் தேடினர். அவர்கள் இல்லாததால் மருமகள்கள் 3 பேரையும் அடித்து உதைத்து அவர்களின் ஆடைகளை கிழித்து நிர்வாணமாக்கினர். பின்னர் அவர்களை வெளியே இழுத்து வந்து ஊராருக்கு அவர்கள் கோலத்தை காட்டினர்.

இதைப் பார்த்து அக்கம்பக்கத்தினர் அதிர்ந்து போயினர். அந்த 3 பெண்களும் உதவி கேட்டு அலறியதையடுத்து ஊர் பெரியவர்கள் தங்கள் தலைப்பாகையை கழற்றி அந்த அடியாட்களின் பாதங்களில் வைத்து பெண்களை விட்டுவிடுமாறு கெஞ்சினர். இதையடுத்து அடியாட்கள் அங்கிருந்து சென்றனர். ஆனால் பொலிஸாரிடம் சென்றால் அவ்வளவு தான் என்று ஊர் மக்களை மிரட்டிவிட்டு சென்றனர்.

முன்னதாக சாதிக்கின் வீட்டு ஆடுகள் முனீரின் வயல்களில் புகுந்துவிட்டதாம். ஆடுகள் பயிர்களை சேதப்படுத்தியதாக முனீர் தெரிவித்து அவற்றை பிடித்து வைத்துக் கொண்டார். இந்நிலையில் சம்பவத்தன்று காலை சாதிக்கின் மகன் சௌகத் முனீரை சந்தித்து ஆடுகளை விடுமாறு கேட்டுள்ளார். அதற்கு முனீர் சௌகத்தை அறைய பதிலுக்கு அவர் முனீரை அறைந்துவிட்டார். இதனால் தான் முனீர் ஆட்களை அனுப்பி பெண்களை அவமானப்படுத்தியுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

யூலை 5ம் திகதி வெளிவரும் சிங்கம் 2..!

கொலிவுட் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம் சிங்கம் 2.
பரபர விறுவிறு காட்சிகளில் கவனம் ஈர்ப்பவர் அருவா இயக்குநர் ஹரி. சிங்கம் கதையின் தொடர்ச்சியை சிங்கம் 2வில் தொடர்ந்தாலும், சூர்யாவுக்கு இது ரொம்பவே முக்கியமான படமாக இருக்கும்.

சிங்கம் படத்தில் உள்ளூர் அரசியல்வாதிகளைப் புரட்டி எடுத்த சூர்யா, சிங்கம் 2வில் தூத்துக்குடியில் உலாவும் கடத்தல்காரர்களையும், பெரிய பெரிய டான்களையும் துவாம்சம் பண்ணுகிறாராம்.

பள்ளிக்கூட மாணவியாக நடிக்கும் ஹன்சிகா தான் சர்வதேசக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க சூர்யாவுக்கு உதவி செய்கிறாராம்.

இதைத் தெரிந்து கொண்ட பெரிய டான் ரகுமான், அண்ணன் மகள் என்று கூட பார்க்காமல் ஹன்சிகாவைக் கொன்று விடுகிறார்.

ஹன்சிகா இறந்த பின்பு சூர்யா வெறித்தனமாக வேட்டையாடி ரகுமான் நெட்வொர்க்கைக் கண்டுபிடித்து எல்லா டான்களின் சதிச் செயல்களையும் முறியடிப்பதே சிங்கம் 2வின் கதையாம்.

சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சிங்கம் 2’ படம் யூலை 5ம் திகதி உலகமெங்கும் வெளியாக உள்ளது.

தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திராவிலும் இப்படம் வெளியாகிறது. ஆந்திராவில் யமுடு 2 என்ற பெய‌ரில் வெளியிட இருக்கின்றனர்.

சிங்கப்பூர் மாசு மண்டலம் 3-வது நாளாக ‘அளவு கடந்து’ செல்கிறது

சிங்கப்பூரைச் சூழ்ந்துள்ள மாசு மண்டலம் வயோதிபர்களுக்கும் நோய்வாய்ப்பட்டவர்களுக்கும் தீங்கு ஏற்படுத்தும் அளவுக்கு காற்றினை மாசுபடுத்தியுள்ளது.

மாசு மண்டலத்தின் அளவு இன்று வெள்ளிக்கிழமை நண்பகலின்போது 401-PSI ஐ தாண்டியிருந்தது.

300 PSI-ஐ தாண்டிவிட்டால் அது ஆபத்தான அளவைத் தாண்டிவிட்டதாக கருதப்படும்.

தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக இந்த அளவு அதிகரித்துக்கொண்டே போகிறது.

இந்தோனேசியாவில் சட்டவிரோதமாக காடுகள் எரிக்கப்படுவதால் இந்த மாசு மண்டலம் உருவாகியுள்ளதாக சிங்கப்பூர் குற்றஞ்சாட்டிவருகிறது.

முடியுமானவரை மக்களை வீடுகளுக்குள்ளேயே முடங்கியிருக்குமாறும் சிங்கப்பூர் அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்தப் பிரச்சனை சிங்கப்பூர் மற்றும் இந்தோனேசியா இடையே கடுமையான அரசியல் முறுகல்நிலையை தீவிரப்படுத்தியுள்ளது.

தமது காற்று மண்டலம் மாசடைவதைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்று சிங்கப்பூர் இந்தோனேசியாவிடம் கேட்டுள்ளது.

இதேவேளை, மலேசியாவிலும் நிலைமை மோசமடைந்துவருகிறது.

அங்கும் ஆபத்தான அளவுக்கு காற்று மாசடைந்துவிட்டதால் சுமார் 300 பள்ளிக்கூடங்களுக்கு அதிகாரிகள் விடுமுறை அளித்துள்ளனர்.

singapore

ஒளிப்பதிவாளர் இல்லை – மீண்டும் மதுரைக்கே திரும்பிய வடிவேலு..

vadivelu

ஜெகஜால புஜ பல தெனாலிராமன் படத்திற்கு ஒளிப்பதிவாளர் கிடைக்காததால் வடிவேலு மதுரைக்கே சென்றுவிட்டாராம்.

அரசியல் கட்சிக்காக தீவிர பிரச்சாரத்தில் இறங்கி தேமுதிக தலைவர் விஜயகாந்தை தாறுமாறாகப் பேசி வாங்கிக் கட்டிக் கொண்டார் வடிவேலு.

தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சிக்கு வர தேமுதிக எதிர்கட்சியானதால் வடிவேலுவின் சினிமா வாழ்க்கைக்கு பெரும் பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து அவர் சினிமாவை விட்டு விலகி இரண்டு ஆண்டுகளாக மதுரையில் இருந்தார்.

இந்தநிலையில் இரண்டு ஆண்டுகள் கழித்து ஜெகஜால புஜ பல தெனாலிராமன் படத்தில் நடிக்க சென்னைக்கு வந்தார். அந்த படத்தை ஒழுங்காக திட்டமிடாததால் ஒரே குளறுபடியாம். முதலில் படத்தை ஒளிப்பதிவு செய்த சகாதேவன் படப்படிப்பில் நடந்த குளறுபடிகளால் டாட்டா காட்டிவிட்டு சென்றுவிட்டாராம்.

அடுத்ததாக கோபிநாத் வந்தார் அவரும் வந்தவேகத்தில் சென்றுவிட்டார். மூன்றாவதாக விஜய் மில்டன் ஒளிப்பதிவை கவனிக்க வந்தார். என்ன நடந்ததோ அவரும் சென்றுவிட்டார். இதனால் தற்போது ஒளிப்பதிவாளர் கிடைக்காமல் திணறுகிறார்களாம்.

இதையெல்லாம் பார்த்த வடிவேலு அதிருப்பதி அடைந்து மீண்டும் மதுரைக்கே சென்றுவிட்டாராம்.

 

இந்தியா-சிம்பாப்வே ஒரு நாள் தொடர்..

Zim-vs-ind

இந்திய கிரிக்கெட் அணியின் சிம்பாப்வே சுற்றுப்பயணத்திற்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி இந்திய அணி ஜூலை 24-ந் திகதி முதல் ஒகஸ்டு 3-ந் திகதி வரை சிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது.

ஜூலை 24-ந் திகதி, ஜூலை 26, ஜூலை 28, ஜூலை 31 மற்றும் ஒகஸ்டு 3-ந் திகதி ஆகிய நாட்களில் ஒரு நாள் போட்டிகள் நடக்கின்றன. இதில் முதல் 3 ஆட்டங்கள் ஹராரே நகரிலும், கடைசி இரு ஆட்டங்கள் புலவாயோவிலும் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கு, முன்னணி வீரர்களுக்கு ஓய்வு கொடுத்து விட்டு 2-ம் தர அணியை அனுப்ப இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.

2010-ம் ஆண்டு அங்கு நடந்த முத்தரப்பு தொடரில் இந்திய அணி சுரேஷ் ரெய்னா தலைமையில் பங்கேற்றது நினைவு கூறத்தக்கது.

 

 

மும்பையில் கட்டிட விபத்து: 9 பேர் பலி..!

இந்தியாவில் மும்பை நகரின் புறநகர்ப்பகுதியொன்றில் கட்டிடமொன்று இடிந்துவிழுந்ததில் குறைந்தது 9 பேர் உயிரிழந்துள்ளனர். 14 பேர் காயமடைந்துள்ளனர்.

மேலும் பலர் இடிபாடுகளுக்குள்ளே சிக்கிக்கொண்டுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்கின்றன.

மும்பை நகரிலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவில், தானே மாவட்டத்தில் அமைந்திருந்த மூன்று மாடி வீட்டுமனைக் கட்டிடமே இன்று அதிகாலை இடிந்துவிழுந்துள்ளது.

கட்டிடம் இடிந்தமைக்கான காரணம் சரியாகத் தெரியவில்லை. ஆனால் பொதுவாக இந்த நகரங்களில் அமைந்துள்ள கட்டிடங்களில் மோசமான கட்டுமான குறைபாடுகள் காணப்படுவதாக செய்தியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தானே மாவட்டத்தில் இதற்கு முன்னரும் கடந்த ஏப்ரல் மற்றொரு கட்டிடம் இடிந்துவிழுந்ததில் 74 பேர் பலியானார்கள்.

இம்மாதத்தின் ஆரம்பத்திலும் மும்பை நகரில் 5மாடிக் கட்டிடமொன்று இடிந்து விழுந்ததில் 4 பேர் கொல்லப்பட்டனர்.

இன்று காலை இடிந்துவிழுந்த கட்டிடத்தில் 9 குடும்பங்களின் வீட்டுமனைகள் அமைந்துள்ளன. பலரும் தூக்கத்தில் இருந்தபோது கட்டிடம் இடிந்துள்ளது.

கடந்த சில நாட்களாக பெய்துவரும் பருவமழையால் இந்தப் பழைய கட்டிடம் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

mumbai

வரலாறு காணாத அளவு சம்பளத்தை உயர்த்திய அனுஷ்கா, நயன்தாரா..

nayantara-anushka

நயன்தாரா, அனுஷ்கா சம்பளம் ரூ.2 கோடியாக உயர்ந்துள்ளது. இதுவரை எந்தவொரு தமிழ், தெலுங்கு நடிகையும் இவ்வளவு தொகை வாங்கியது இல்லை. இருவருக்கும் மார்க்கெட் உச்சத்தில் உள்ளது. எனவே சம்பளத்தை வரலாறு காணாத அளவு ஏற்றி உள்ளனர்.

நயன்தாரா தெலுங்கில் நடிக்கும் அனாமிகா படத்துக்காக இந்த சம்பளம் வழங்கப்படுகிறது. இப்படம் ஹிந்தியில் ஹிட்டான கஹானி என்ற படத்தின் ரீமேக் ஆகும்.

ஹிந்தியில் வித்யாபாலன் கர்ப்பிணி வேடத்தில் நடித்து இருந்தார். அதே கதாபாத்திரத்தில் தான் நயன்தாரா நடிக்கிறார். கர்ப்பிணியாக நடிப்பதற்காகவே ரூ.2 கோடியை அள்ளி கொடுத்துள்ளனர்.

தமிழில் நயன்தாரா அஜித் ஜோடியாக பெயரிடப்படாத படமொன்றிலும் ஆர்யாவுடன் ராஜாராணி படத்திலும் மற்றும் உதயநிதியுடன் இது கதிர்வேலன் காதலி படத்திலும் நடிக்கிறார்.

இப்படங்களுக்கு இரண்டு கோடிக்கு குறைவாகவே சம்பளம் பேசி உள்ளார். தெலுங்கில் சம்பளம் ரூ.2 கோடியானதால் அடுத்து ஒப்பந்தமாகும் புதுப் படங்களுக்கு ரூ.2 கோடி கேட்க முடிவு செய்துள்ளாராம்.

இதுபோல் அனுஷ்கா ருத்ரமாதேவி என்ற சரித்திர படத்தில் நடிக்க ரூ.2 கோடி பெற்றுள்ளார். இதில் அனுஷ்கா மகாராணி வேடத்தில் வருகிறார். இதற்காக வாள் சண்டையும் கற்றார்.

தமிழ், தெலுங்கு இரசிகர்கள் இரு நடிகைகளையும் கனவு கன்னியாக வைத்து கொண்டாடுவதை சம்பள உயர்வு வெளிப்படுத்தி உள்ளது என்கின்றனர்.

 

 

பஸ் கட்டணம் உயருமா? திங்களன்று பேச்சுவார்த்தை..!

பஸ் கட்டண உயர்வு குறித்த தீர்மானமிக்க பேச்சுவார்த்தை ஒன்று எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறும் என தனியார் போக்குவரத்து அமைச்சர் சிபி.ரத்நாயக்க தெரிவித்தார்.

இலங்கை போக்குவரத்து சபை, மாகாண போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் பஸ் சங்க உறுப்பினர்கள் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.

பஸ் கட்டண உயர்வு குறித்து மட்டுமன்றி நேர்த்தியான போக்குவரத்து சேவை, ஒன்றிணைந்த கால அட்டவணை உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் இங்கு பேசப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

எனினும் பஸ் கட்டண உயர்வு குறித்து பேச சம்பந்தம் இல்லாத நபர்களை அழைத்துள்ளமைக்கு இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.

வட இந்திய வெள்ளம்: ஐநூறுக்கும் மேற்ப்பட்டோர் உயிரிழப்பு..!

வட இந்தியாவில் கடுமையான பருவ மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கிலும் நிலச்சரிவிலும் சிக்கி ஐநூறுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய அரசாங்கம் கூறுகிறது.

பாலங்களும் சாலைகளும் வீடுகளும் அடித்துச் செல்லப்பட்டிருப்பதை அடுத்து ஐம்பதாயிரம் பேர் வரையிலானோர் சிக்குண்டுள்ளனர்.

உத்தராகண்ட் மாநிலத்திலுள்ள கேதர்நாத் என்ற புனித நகரமும் அதனைச் சுற்றியுள்ள இடங்களும் மிக அதிகமான பாதிப்புகளைச் சந்தித்திருக்கின்றன.

இங்குள்ள கோயில்களுக்கு யாத்திரை வந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை இந்திய ராணுவம் முன்னின்று செயல்படுத்துகிறது.

மிகவும் ஒதுக்குப்புறமான மலைப் பகுதிகளை இன்னும் சென்று சேர முடியவில்லை என அதிகாரிகள் கூறுகின்றனர்.

Flood_india_PTI