வினோதமான ஆசைக்காக காதலியின் மகளை கொன்றவர் தற்கொலை!!

sucide

அமெரிக்காவில் வினோதமான ஆசை ஒன்றுக்காக தனது காதலியின் 24 வயது மகளைக் கொன்றவர் சிறையில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

அமெரிக்காவின் மிக்சிகன் மாகாணத்தில் உள்ள டீர்பீல்ட் என்ற சிறிய நகரத்தின் தேவாலயத்தில் நிர்வாகப் பதவியில் இருந்தவர் ஜோன் டி வைட் என்பவர் ஆவார். 56 வயதான இவர் தன் காதலியின் 24 வயது மகளைக் கொன்றதற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

கடந்த மார்ச் மாதம் தன்னுடைய குற்றத்தை ஒப்புக்கொண்ட வைட் , இந்தக் கொலைக்கு சொன்ன காரணம் விநோதமானது. இறந்தவருடன் உடலுறவு கொள்ளவேண்டும் என்ற ஆசையினால் தான் காதலியின் மகளை கொலை செய்யதாக கூறியுள்ளார்.

இந்தக் கொலைக்காக அவருக்கு 56 வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட வைட் மிக்சிகனில் உள்ள சீர்திருத்த சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

நேற்று இவர் தூக்கிலிட்டுக்கொண்டு இறந்துள்ளதாக சீர்திருத்த அலுவலகத்தின் தகவல் அதிகாரி ருஸ் மார்லன் பத்திரிகையாளரிடம் தெரிவித்துள்ளார்.

நேற்று அதிகாலை இந்த சம்பவம் நடந்துள்ளது. உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அவரைக் காப்பாற்ற மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்ததாகவும் ருஸ் மார்லன் தெரிவித்தார்.

தட்டைக் கழுவ மறுத்ததால் தலித் சிறுவன் சுட்டுக் கொலை!!

Shooting

தட்டைக் கழுவி உணவு பரிமாற மறுத்த தலித் சிறுவனை ஆத்திரத்தில் சுட்டுக் கொன்ற வாடிக்கையாளரை உத்திரப்பிரதேச பொலிசார் தேடி வருகின்றனர்.

இந்தியாவின் உத்தரப்பிரதேசம் முஜாபர்நகர் அருகில் உள்ள ஷாலி மாவட்டத்தில் உள்ள சிறிய ஹோட்டல் ஒன்றில் 11வயது சிறுவன் ஒருவன் வேலை பார்த்து வந்தான். அச்சிறுவன் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவன் எனச் சொல்லப்படுகிறது.

சம்பவத்தன்று ஹோட்டலுக்கு சாப்பிட வந்த ஜக்பால் என்ற வாடிக்கையாளர் தட்டு அசுத்தமாக இருப்பதாகக் கூறி தட்டை மீண்டும் கழுவி எடுத்து வருமாறு அச்சிறுவனிடம் கூறியுள்ளார்.

ஆனால் அதனைச் செய்ய சிறுவன் மறுத்ததாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஜக்பால் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அச்சிறுவனைச் சுட்டுக் கொன்றுள்ளான். இதில் சம்பவ இடத்திலேயே அச்சிறுவன் பரிதாபமாக பலியானான்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார், சிறுவனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் தலைமறைவாக உள்ள ஜக்பாலைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார் பொலிஸ் தலைமை கண்காணிப்பாளர் பிரகாஷ் குமார்.

எங்களை தாக்க நினைப்பவர்களுக்கு சமாதி நிச்சயம் : சிரியா எச்சரிக்கை!!

wael-al-halki-remplace-ryad-hidjab

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத் ஆட்சிக்கு எதிராக பொதுமக்களின் போராட்டம் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது.
ஆனால் பதவி விலக மறுக்கும் அவர் போராட்டக்காரர்கள் மீது ராணுவ தாக்குதல் நடத்தி வருகிறார்.

அதில், சுமார் 1 லட்சத்துக்கும் மேலானோர் கொல்லப்பட்டுள்ளனர். 7 லட்சம் பேர் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர்.
இந்த நிலையில் தலைநகர் டமாஸ்கசின் புறநகரமான கவுட்டா மற்றும் மொடமியே பகுதிகளில் சிரியா ராணுவம் கடந்த 21ம் திகதி ரசாயன குண்டு வீசி தாக்குதல் நடத்தியது.

அதில் இருந்து வெளியான நச்சு புகையில் சிக்கி குழந்தைகள், பெண்கள், முதியர்கள் உட்பட 1300க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் பலியாகி உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இக்கொடூர சம்பவத்துக்கு ஐ.நா. கடும் கண்டனமும், வருத்தமும் தெரிவித்துள்ளது.

மேலும் இது குறித்து காலதாமதமின்றி உடனடியாக சிரியா அரசிடம் விசாரணை நடத்த ஐ.நா பொதுச்செயலாளர் பான் கி மூன் தெரிவித்துள்ளார். மேலும் அதிகாரி ஏஞ்சலா கனே என்பவர் தலைமையில் ஒரு குழுவை ஐ.நா. சபை டமாஸ்கஸ் நகருக்கு அனுப்பியுள்ளது.

இந்த குழுவினர் சிரியாவில் ரசாயன ஆயுதங்கள் வீசப்பட்டதாக கூறப்படும் இடங்களில் ஆய்வு செய்தனர். ஆரம்பத்தில் ஐ.நா. அதிகாரிகளின் சோதனைக்கு ஆட்சேபனை தெரிவித்து வந்த சிரியா அரசு, பின்னர் ஒப்புதல் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

ஐ.நா. ஆய்வாளர்கள் தங்கியிருந்த ஹோட்டல் அருகே 2 மோர்டார் குண்டுகள் வெடித்தன. இது தீவிரவாதிகளின் சதிவேலை என்று அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், ஐ.நா. அதிகாரிகள் ரசாயன ஆயுதங்கள் உபயோகிக்கப்பட்ட இடத்தை சோதனையிடக் கூடாது என்று அதிபர் பஷர் அல்-ஆசாத்தின் ஆதரவாளர்கள் இந்த தாக்குதலை நடத்தியிருக்கக்கூடும் என்று ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.

இந்த தாக்குதலை பொருட்படுத்தாத ஐ.நா ஆய்வாளர்கள் ரசாயன ஆயுதங்கள் உபயோகிக்கப்பட்டதாக கூறப்படும் இடத்திற்கு கார்களில் புறப்பட்டு சென்றனர். போகும் வழியில் அவர்கள் சென்ற கார் மீது சிலர் வெடிகுண்டு வீசியும் துப்பாக்கிகளால் சுட்டும் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் ஒரு கார் சேதமடைந்தது. ஆய்வாளர்களில் யாரும் காயமடைந்தனரா என்பது தொடர்பான தகவல்களை வெளியிட ஐ.நா. அதிகாரிகள் மறுத்துவிட்டனர். இந்த தடைகளையும் மீறி மொடமியே பகுதிக்கு சென்ற ஐ.நா. ஆய்வாளர்கள் தாக்குதல் நடந்த இடத்தை ஆய்வு செய்தனர்.

தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஆஸ்பத்திரிக்கு சென்ற ஆய்வாளர்கள் அங்கு பணியாற்றும் டாக்டர்களிடமும், சிகிச்சை பெறும் நோயாளிகளிடமும் விசாரணை நடத்தினர். இந்நிலையில், எங்களை தாக்க நினைப்பவர்களுக்கு சிரியா சமாதியாக மாறிவிடும் என சிரியா பிரதமர் வயெல் அல்-ஹல்கி கூறியுள்ளார்.

சிரியா மீது அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற போர் மேகம் சூழ்ந்துள்ள வேளையில் நேற்று பேட்டியளித்த சிரியா பிரதமர் வயெல் அல்-ஹல்கி அமெரிக்காவில் தொடங்கி அனைத்து மேற்கத்திய நாடுகளும் சிரியா மீது தாக்குதல் நடத்துவதற்கு தங்களுக்கு ஏதாவது ஒரு காரணம் கிடைக்காதா என்று தேடி வருகின்றனர். அவர்களுக்கு வசதியாக சில காட்சியமைப்புகளை உருவாக்கவும் சிலர் துடிக்கின்றனர்.

எங்கள் மீது தாக்குதல் நடத்த நினைத்தால் 1973ல் யோம் கிப்பூர் போரின் போது கொடுத்த அதிர்ச்சி வைத்தியத்தை இப்போதும் அளித்து எங்களை தாக்க நினைப்பவர்களின் சுடுகாடாக சிரியாவை மாற்றுவோம் என்று கூறியுள்ளார்.

ஜாமினில் வெளிவந்து கலக்கல் பேட்டி கொடுத்த பவர் ஸ்டார்(வீடியோ)

powerstar

மோசடி வழக்குகளில் கைதான பவர் ஸ்டார் ஜாமினில் வெளிவந்து கலக்கல் பேட்டி கொடுத்துள்ளார். மோசடி வழக்குகளில் கைதான பவர் ஸ்டார் சீனிவாசன் ஜாமீனில் வெளியே வந்துவிட்டார் என்று பேஸ்புக்கில் செய்தி வெளியாகியுள்ளது.

பல்வேறு மோசடி வழக்குகளில் கைதான நடிகர் பவர் ஸ்டார் டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் பவர் ஜாமீனில் விடுதலையாகி இருப்பதாக பேஸ்புக்கில் செய்தி வந்துள்ளது.

இதையடுத்து முன்னணி நாளிதழ் ஒன்றும் அதன் இணையதளத்தில் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. தொப்பையும் தொந்தியுமாக இருந்த பவர் ஸ்லிம்மாக ஆகிவிட்டாராம்.

சென்னைக்கு வந்த மனிதர் தனது ஸ்டைலில் ரவுசு பேட்டி ஒன்றை வேறு கொடுத்துள்ளாராம். பேட்டியில் அவர் கூறுகையில், சிறை எனக்கு ஆசிரமம் போன்று இருந்தது. அங்கு பணிபுரியும் தமிழக பொலிசார் என்னைப் பார்த்ததும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

டெல்லியில் 1500 ரகிகர்கள் என்னை வந்து சந்தித்தனர். அவர்கள் எல்லாம் என் ரசிகர்கள். நான் சிறை சென்ற காலத்தில் கொலிவுட் என்னை மிஸ் பண்ணி இருக்கும்.

என் படமான ஆனந்த தொல்லை தீபாவளிக்கு வெளியாகும். நான் சிறைக்கு சென்றது சிலர் செய்த சதி. இந்த பிரச்சனைகளில் இருந்து நிச்சயம் மீண்டும் வருவேன் என்று பேட்டி கொடுத்துள்ளாராம்.

இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிக்க ஷேவாக் கடும் பயிற்சி!!

virendra_sehwag

இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரர் வீரேந்தர் ஷேவாக் மோசமான ஆட்டம் காரணமாக அவர் கடந்த 6 மாதமாக சர்வதேச போட்டியில் ஆட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2வது டெஸ்டுக்கு (மார்ச் மாதம்) பிறகு ஷேவாக் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

ஒருநாள் போட்டியை பொறுத்தவரை அதற்கு முன்பே அணியில் இருந்து கழற்றிவிடப்பட்டார். ஜனவரி 3ம் திகதி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியோடு நீக்கப்பட்டார்.

அதன்பிறகு அவர் தொடர்ந்து ஓரங்கட்டப்பட்டார். இளம் வீரர்களின் சிறப்பான ஆட்டத்தால் ஷேவாக் இந்திய அணியில் மீண்டும் இடம் பெறுவது கேள்வி குறியாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் இந்திய அணியில் மீண்டும் இடம் பெற்றுவிட வேண்டும் என்பதில் ஷேவாக் மிகுந்த ஆர்வமாக உள்ளார். உள்ளூர் போட்டியில் தன்னை நிலை நிறுத்திக்கொள்வதற்காக அவர் சென்னையில் உள்ள எம்.ஆர்.எப். இல் பயிற்சி பெறுகிறார்.

சென்னையில் ஒரு வாரம் தங்கி இருந்து பயிற்சி பெறுகிறார். எம்.ஆர்.எப். பயிற்சி மையத்தின் தலைமை பயிற்சியாளராக அவுஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீரர் மெக்ராத் உள்ளார்.

உள்ளூர் போட்டியில் திறமையை நிரூபிப்பதே ஷேவாக்கின் குறிக்கோளாக உள்ளது. என்.கே.பி. சாலவே சாலஜர் கிண்ண போட்டி செப்டம்பர் 26ம் திகதி தொடங்குகிறது. இதில் சிறப்பாக விளையாடி அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அல்லது தென்ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்துக்கான அணியில் இடம் பெறுவதை ஆர்வமாக கொண்டுள்ளார்.

அரபு, சீனமொழிகளில் வெளிவருகிறது திருக்குறள்!

thirukkural

உலகமொழிகளில் தமிழ் இலக்கிய படைப்புகளை கொண்டு வரும் வகையில் தமிழ் படைப்புகள் மொழி பெயர்க்கப்பட்டு வருகின்றன. அதன் முதற்கட்டமாக சீன, அரேபிய மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடும் வகையில் தயார் நிலையில் உள்ளது.

தமிழ் மொழி தமிழ் இலக்கிய சிறப்பை உலக நாடுகளுக்கு உணர்த்த தமிழின் மிகச்சிறந்த நூல்களை பல்வேறு மொழிகளில், மொழிபெயர்க்கும் பணிகளில் தமிழ் வளர்ச்சித்துறை ஈடுபட்டு வருகிறது. அதன் முதற்கட்டமாக திருக்குறள், பாரதியார், பாரதிதாசன் ஆகியோரின் படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றன.

திருக்குறளின் ஒட்டுமொத்த குறள்களும், பாரதியார், பாரதிதாசன் ஆகியோரின் தேர்ந்தெடுத்தப் படைப்புகளும், மொழிபெயர்க்கப்படுகின்றன. பாரதியார், பாரதிதாசன் ஆகியோரின் படைப்புகளை, சீன மொழிகளில் மொழிபெயர்க்க, 60 லட்சம் ரூபாய், அரபு மொழியில் மொழி பெயர்க்க, 10 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில் சீன, அரேபிய மொழிகளில் திருக்குறளை மொழிபெயர்க்கும் பணி முற்றிலும் முடிவடைந்து வெளியிட தயார் நிலையில் உள்ளது. கூடிய விரைவில், பாரதியார், பாரதிதாசன் படைப்புகளும் சீன, அரேபிய மொழிகளில் தயாராகி விடும்.

என் மகன் சாகவில்லையா : தந்தையின் பாசப் போராட்டம் (வீடியோ, படங்கள்)

சிரியாவில் இரசாயன தாக்குதலில் கொல்லப்பட்டதாக கருத்தப்பட்ட மகன் உயிருடன் திரும்பி வந்ததால் தந்தை அளவில்லா மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

சிரியாவில் ஜனாதிபதி அசாத்துக்கு எதிரான போரில் கடந்த 21ம் திகதி இராணுவம் நடத்திய இரசாயன தாக்குதலில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.

இதில் தனது மகனும் பலியானதாக கருதிய தந்தை மனமுடைந்து விட்டார். இந்நிலையில் தனது மகன் மீண்டும் உயிருடன் வந்தது அவருக்கு அளவில்லா மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனது மகனை கட்டித் தழுவி கண்ணீர் விட்டு அழுதுள்ளார். இந்த வீடியோ யூடியூப்பில் வெளியாகியுள்ளது.

12

34

5

தலைகீழாக 1 மணி நேரம் செஸ் விளையாடி சாதனை படைத்த வீரர்!!(படங்கள்)

தமிழ்நாட்டில் செஸ் பயிற்சியாளர் ஒருவர் தலைகீழாக ஒருமணிநேரம் தொங்கியபடி செஸ் விளையாடி சாதனை படைத்துள்ளார்.

வில்லிசேரி ஷீரடி சாய்பாபா ஞானத்திருக்கோவில் சக்திபாலா அறக்கட்டளை சார்பில் கோவில்பட்டி சுவாமிவிவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழகத்தின் செஸ் பயிற்சியாளர் தங்கமாரியப்பன் தழைலகீழாக கயிற்றில் தொங்கியபடி செஸ் விளையாடும் சாதனை விழா நடைபெற்றது.

விழாவிற்கு கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தலைமை வகித்தார். வில்லிசேரி ஷீரடி சாய்பாபா கோவில் நிறுவனர் வேலுச்சாமி, தொழிலதிபர் துரைராஜ், தலைவர் ராமசந்திரன், சுவாமி விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழக நிறுவனர் சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிவசங்கரி வரவேற்றார்.

விழாவில் சுவாமிவிவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழகத்தின் செஸ் பயிற்சியாளர் தங்கமாரியப்பன் தலைகீழாக கயிற்றில் தொங்கியபடி 1 மணி நேரம் செஸ் விளையாடி சாதனை புரிந்துள்ளார்.

இதனைக்கண்ட பார்வையாளர்கள் வியப்பு அடைந்ததுடன் அவரை வெகுவாக பாராட்டியுள்ளனர்.

கோவில்பட்டி சுவாமிவிவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழகத்தின் பயிற்சியாளர்கள் மற்றும் அங்கு யோகா பயிற்சி பெற்று வரும் மாணவ, மாணவியர்கள் இதுபோன்ற பல்வேறு வகையான சாதனை நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

s2 s1

நாயை கடித்துக் குதறிய மனிதனுக்கு பொலிசார் வலைவீச்சு!!

dog

தமிழ்நாட்டில் நாயை கடித்து மருத்துவமனைக்கு அனுப்பிய குடிகாரனை பொலிசார் தேடி வருகின்றனர்.

சென்னை ஆர்.ஏ.புரம் பக்ஸ் ரோடு பகுதியில் ஆட்டோ ஸ்டாண்ட் அருகே ஒரு நாய்க்குட்டியானது வாடிக்கையாக அந்த இடத்திலேயே இருக்கும்.

இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த குமார் என்பவர் போதையில் நடந்து சென்றபோது அவரைப் பார்த்து நாய்க்குட்டி குரைக்க ஆரம்பித்துள்ளது.

கடுப்பான குமார் நாய்க் குட்டியை கல்வீசி தாக்க முயன்றார். அப்போதும் விடாமல் நாய்க்குட்டி குரைத்துள்ளது. போதையில் இருந்த குமாருக்கு என்ன செய்கிறோம் என்பதே தெரியாமல் நாய்க்குட்டியை பிடித்து காதை கடித்து துப்பி நாய்க்குட்டியை தூக்கி வீசியுள்ளார்.

கீழே விழுந்த நாய்க்குட்டி வலியால் கூச்சலிட்டது. சத்தம் கேட்டதும் ஆட்டோ ஒட்டுனர் கிருஷ்ணமூர்த்தி ஓடிவந்து பார்த்தபோது நாய்க்குட்டி காதில் ரத்தம் வழிய அலறிக் கொண்டிருந்தது. உடனே கால்நடை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.

மேலும் பொலிசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் அபிராமபுரம் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

குழந்தையை கொன்று விட்டு ஜொலியாக குத்துச்சண்டை பார்த்த பெண்!!(படங்கள்)

அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் பிறந்த குழந்தையை கொன்று விட்டு ஜொலியாக குத்துச்சண்டை பார்த்துள்ளார்.

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தின் பெத்லகேம் நகரை சேர்ந்தவர் அமன்டா கேதரின் ஹெயின்(வயது 26). திருமணம் ஆகாமலேயே கர்ப்பிணியான கேதரின் யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 17ம் திகதி தனது ஆண் நண்பர்களுடன் சேர்ந்து குத்துச்சண்டை பார்த்து கொண்டிருந்தார். திடீரென அங்குள்ள குளியலறைக்கு சென்றுவிட்டு சுமார் 40 நிமிடங்களுக்கு பின் வெளியே வந்த ஹெயினின் உடைகளில் ரத்தக்கறை படிந்திருந்தது.

பின்னர் வெளியே சென்று ஒரு சிகரெட்டை புகைத்து விட்டு மீண்டும் உள்ளே வந்து போட்டியை பார்க்க ஆரம்பித்துள்ளார். மறுநாள் அந்த குளியலறையை சோதனையிட்ட ஊழியர் அங்கே ஒரு பிளாஸ்டிக் பையில் ஒரு ஆண் குழந்தையின் பிணம் இருந்ததை கண்டுபிடித்தார்.

இதைத்தொடர்ந்து ஹெயினிடம் பொலிசார் விசாரணை நடத்தியதில், தனக்கு குழந்தை பிறந்ததையும் உடனே அந்த குழந்தையை மூச்சடக்கி கொலை செய்து விட்டதையும் தெரிவித்துள்ளார்.

இவருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

b1 b2 b3 b4

இந்தியப் பெண்களே தனியாக வெளியே போகாதீர்கள் : நடிகை ஹேமமாலினி

hema-malini

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பாஜக எம்.பி ஹேமமாலினி கூறியுள்ளார்.
நாட்டு நிலைமை சரியில்லை என்பதால் பெண்கள் நிலை மோசமாக இருப்பதாகவும், பெண்கள் யாரும் வீட்டை விட்டுப் போக வேண்டாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் வெளியே போவதாக இருந்தால் தனியாக போக வேண்டாம், உற்ற துணையுடன் போகுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் புனேவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கூறுகையில், பெண்களுக்கு நான் தரும் அட்வைஸ் யாரும் வெளியே போக வேண்டாம். அப்படியே போவதாக இருந்தாலும் தனியே போகாதீர்கள்.

என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். நீங்கள் சிக்கிக் கொள்ள நேரிடும். எனவே தனியாக போவதைத் தவிருங்கள் என்று கூறியுள்ளார்.
ஹேமமாலியின் இந்த பேச்சானது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியா செட்டிக்குளத்தில் விபத்து – மூதாட்டி பலி..!

ACCIDENT_logoசெட்டிக்குளம் பொலிஸ் பிரிவின் செட்டிக்குளம் – மதவாச்சி வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 78 வயதான மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மதவாச்சியில் இருந்து செட்டிக்குளம் நோக்கி பயணித்த டிபர் வாகனம் ஒன்று குறித்த மூதாட்டி மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று இடம்பெற்ற இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மூதாட்டி பின் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் பலியானவர் நேரியக்குளம் செட்டிக்குளம் பகுதியைச் சேர்ந்த 78 வயதான நடராஜா வீரம்மா எனத் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, பிரேதப் பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தின்போது சிறு காயங்களுக்குள்ளான டிபர் வாகனத்தின் சாரதி பொலிஸ் பாதுகாப்பின் கீழ் மதவாச்சி வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றார்.

செட்டிக்குளம் பொலிஸார் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நிலவில் நீர் இருப்பது கண்டுபிடிப்பு..!

moonஇந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ அனுப்பிய, “சந்திரயான் – 1´ விண்கலம், நிலாவைப் பற்றிய பல அரிய தகவல்களை அனுப்பியுள்ளது. இதன் மூலம், நிலாவில், நீர் மூலக்கூறுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த தகவலை, அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம், “நாசா´ உறுதி செய்துள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், “இஸ்ரோ´, நிலாவைப் பற்றிய ஆய்வில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்காக, “சந்திரயான் – 1´ விண்கலம், விண்ணில் ஏவப்பட்டது. அது, நிலாவைப் பற்றிய பல அரிய தகவல்களை அனுப்பி வருகிறது. இதன் மூலம், நிலாவில் உள்ள பாறைகள், மலைகள் மற்றும் படிமங்கள் பற்றிய தகவல்களைப் பெற முடிகிறது.

இதனிடையே, சந்திரயான் -1, அனுப்பும் தகவல்களை, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் நாசா, தொடர்ந்து கவனித்து வருகிறது. இதற்கு முன், 2009ம் ஆண்டு, நிலாவில் நீர் மூலக்கூறுகள் இருப்பதாக, நாசா கூறியது. எனினும், நீர் படிமங்களாக இருப்பதாகவும், சூரியப் புயல் ஏற்பட்ட போது, நீர் மூலக்கூறுகள் உருவாகி, பின் படிமங்களாக மாறியதாகவும் கூறியது.

இந்நிலையில், புதிய ஆராய்ச்சியின் படி, சூரியப் புயலால், நீர் மூலக்கூறுகள் உருவாகியிருக்க வாய்ப்பு இல்லை என, ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். நிலாவின், சுற்று வட்டப்பாதை மற்றும் அதன் மேற்பரப்பில் மேற்கொண்ட ஆய்வில், நிலாவிலிருந்து சில துகள்கள் சேகரிக்கப்பட்டன. அந்த துகள்களை ஆய்விற்கு உட்படுத்தியதில், அதில், “ஹைட்ராக்சில்´ மூலக்கூறுகள் இருப்பது கண்டறியப்பட்டது. ஒரு “ஆக்சிஜன்´ அணுவும், ஒரு “ஹைட்ரஜன்´ அணுவும் இணைந்ததே, “ஹைட்ராக்சில்´ எனப்படுகிறது. இதன் மூலம், நிலாவில் நீர் மூலக்கூறுகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நிலாவின் மேற்பரப்பை ஆழமாக ஆராய்ந்து, சந்திரயான் – 1, அனுப்பிய தகவல்களின் மூலம், ஒரு காலத்தில் நிலாவில் நீர் இருந்ததும், தற்போது, படிம நிலையில் இருப்பதும் தெரிய வந்துள்ளது. சந்திரயான் அனுப்பிய தகவல்களின் மூலம், நிலாவில் நீர் மூலக்கூறுகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, அங்கு நிலவும் தட்ப வெட்ப நிலைக்கான காரணங்கள், நிலா உருவான விதம், அதில் நிலவும் குறைந்த ஈர்ப்பு விசைக்கான காரணம், அதன் ஆயுள் காலம் போன்ற தகவல்களை அறியும் முயற்சியில், “நாசா´ஈடுபட்டுள்ளது.

பேஸ்புக் கண்காணிப்பில் இரண்டாவது இடத்தில் இந்தியா..!

facebookபேஸ்புக் பயன்பாட்டாளர்கள் குறித்த தகவல்களை தரும்படி கோரும் உலக நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருப்பதாக முகநூல் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

பேஸ்புக் நிறுவனம் தனது செயற்பாடுகள் தொடர்பான வெளிப்படைத்தன்மை அறிக்கையில் இதை தெரிவித்திருக்கிறது. பேஸ்புக் நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் உலக அளவில் அதிகபட்சமாக பேஸ்புக் பயன்பாட்டாளர்களின் தகவல்களைக் கோரும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, கேனடா ஆகிய இருநாடுகளும் இணைந்து முதல் இடத்தில் இருக்கின்றன.

அடுத்த இரண்டாவது இடத்தில் இந்தியா இருப்பதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.2013 ஆம் ஆண்டின் முதல் ஆறுமாத காலத்தில் மட்டும் இந்தியா 3245 வேண்டுகோள்களை பேஸ்புக் நிறுவனத்திடம் வைத்திருக்கிறது. இதில் 4144 பேஸ்புக் பயன்பாட்டாளர்களின் தகவல்களை இந்திய அரசு கோரியிருக்கிறது. இவற்றில் சுமார் 50 சதவீத கோரிகைகளுக்கு பேஸ்புக் நிறுவனம் பதில் அளித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அமெரிக்கா மற்றும் இந்திய அரசுகளின் இந்த முயற்சிகள் இணையசுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரம் ஆகியவற்றை பாதிக்கும் என்கிற விமர்சனங்கள் எழுந்துள்ளன. பேஸ்புக்கின் இந்த அறிக்கை வரவேற்கத்தக்க முன்முயற்சி என்றாலும், இந்த அறிக்கை முழுமையானதுமல்ல,போதுமானதுமல்ல என்கிறார் லண்டன் பல்கலைக்கழகத்தின் தகவல்தொடர்பு மற்றும் சமூகம் தொடர்பான ஆய்வு மாணவர் முரளி ஷண்முகவேலன்.

பேஸ்புக் நிறுவனம் வெளியிட்டிருக்கும் இந்த அறிக்கையில், இந்திய அரசு என்னவிதமான தகவல்களைக் கோரியது என்பது குறித்தும், பேஸ்புக் நிறுவனம் என்னவிதமான தகவல்களை பகிர்ந்து கொண்டது என்பது குறித்தும் தெளிவான விவரங்கள் வெளியிடப்படவில்லை என்று கூறும் முரளி ஷண்முகவேலன், இந்தியா போன்ற ஜனநாயக நாடுகள், மற்ற நாடுகளைவிட தமது குடிமக்களை தமது நேரடி கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ளவேண்டும் என்கிற நோக்கிலேயே இத்தகைய முன்னெடுப்புக்களை மேற்கொள்வதாக கருதுகிறார்.

இந்திய தகவல் தொழில்நுட்பத்துறை என்பது இன்னமும் பெருமளவில் தொழிலாளர் சார்ந்த துறையாக மட்டுமே தொடர்வதாலும், அறிவுசார் துறையாக அது இன்னமும் முழுமையாக பரிணமிக்காமலிருப்பதாலும் இந்திய அரசின் மையப்படுத்தப்பட்ட இணைய கண்காணிப்பு கட்டமைப்பு மற்றும் நடைமுறைகள் குறித்து, தகவல் தொழில்நுட்பத்துறையிலிருந்து உரிய அளவில் எதிர்ப்பு உருவாகவில்லை என்றும் அவர் கூறினார்.

மேலும், தனிமனித அந்தரங்கம் மதிக்கப்பட வேண்டும் என்பது தொடர்பில் இந்தியா உள்ளிட்ட தெற்காசிய சமூகங்களிடம் போதுமான புரிதலும் உரிய விழிப்புணர்வும் வளர்க்கப்படவில்லை என்று கூறும் முரளி ஷண்முகவேலன், இத்தகைய சூழலை இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் அரசுகள், இணைய கண்காணிப்பு தொடர்பிலான தமது கட்டுப்பாட்டை அதிகப்படுத்திக்கொள்ள பயன்படுத்திக்கொள்வதாகவும் தெரிவித்தார். அரசுகளின் இத்தகைய முயற்சிகளுக்கு, தகவல் தொழில்நுட்பத் துறைக்குள்ளிருந்தே மேலதிகமான விமர்சனங்கள் வரவேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.

பீட்சா நிறுவனத்துடன் இணைந்த நந்திதா!!

nanthitha

அட்டகத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை நந்திதா. இதையடுத்து, சிவகார்த்திகேயனுடன் எதிர்நீச்சல் படத்தில் நடித்தார்.

இந்த இரண்டு படமும் அவருக்கு வெற்றியைத் தேடித்தந்தது. தற்போது இவர் நளனும் நந்தினியும், விஜய்சேதுபதியுடன் இணைந்து இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் பீட்சா படத்தை தயாரித்த திருக்குமரன் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் சி.வி.குமார் தயாரிக்கும் புதிய படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு இவருக்கு வந்துள்ளது.

இப்படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ நிறுவனத்துடன் இணைந்து சி.வி.குமார் தயாரிக்கிறார். நாளைய இயக்குநர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த ராம் இயக்குகிறார். இப்படத்திற்கு முண்டாசுபட்டி என பெயர் வைத்துள்ளனர். விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்க உள்ளனர்.

மெட்ராஸ் கபே விநியோகஸ்தர்களுக்கு 1 கோடி நஷ்டம்!!

madras cafe

ஜோன் ஆப்ரஹாம், நர்கிஸ் பக்ரி, ரஷிகன்னா ஆகியோர் நடிப்பில் உருவான மெட்ராஸ் கபே திரைப்படம் கடந்த 23ம் திகதி இந்தியாவில் தமிழகத்தை தவிர பிற மாநிலங்களில் வெளியானது. இந்த படத்தை ஷூஜித் சர்கார் இயக்கியிருந்தார்.

இந்தியில் உருவான இப்படம் தமிழிலும் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியிடத் தயாராக இருந்த நிலையில் படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. 1980களின் இறுதியிலும் 90களின் துவக்கத்திலும் இலங்கையில் நடந்த உள்நாட்டு கலவரத்தை மையமாக வைத்து இப்படத்தை எடுத்திருந்தனர்.

இதனால் இப்படம் தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நீதிமன்றம் படத்தை தமிழகத்தில் வெளியிட தடை செய்தது. திரையரங்கு உரிமையாளர்களும் படத்தை வெளியிட மறுத்தனர்.

தமிழகத்தில் இப்படம் வெளியிட முடியாமல் போனதால் தமிழ்நாட்டில் விநியோக உரிமையை வாங்கியவர்கள் சுமார் 1 கோடி ரூபாய் வரை நஷ்டம் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால், இப்படம் வெளியிட்ட இடங்களில் எல்லாம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. முதல் வாரத்தில் மட்டும் 21 கோடி வசூல் செய்துள்ளது. கூடிய விரைவில் படத்தை தமிழகத்திலும் வெளியிட்டு விடலாம் என்ற நம்பிக்கையில் தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.