ஆண்ட்ரியா, அனிருத் இடையே மீண்டும் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. அனிருத் 3 படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமானார். இந்த படத்தின் கொலை வெறி பாடல் ஹிட்டானதால் அனிருத் பிரபலமானார் நிறைய படங்கள் குவிந்தது.
எதிர்நீச்சல் படத்துக்கு இசையமைத்தார். தற்போது வணக்கம் சென்னை படத்துக்கு இசையமைத்து வருகிறார். அனிருத்தும், ஆண்ட்ரியாவும் காதலிப்பதாக கிசு கிசுக்கள் கிளம்பின.
அனிருத்தை விட ஆண்ட்ரியா வயதில் மூத்தவர். வயது வித்தியாசத்தை அவர்கள் கண்டு கொள்ளவில்லை. விருந்து நிகழ்ச்சிகளில் ஜோடியாக பங்கேற்று வந்தனர்.
இந்த நிலையில் இருவரும் கட்டிப் பிடித்து முத்தமிடுவது போன்ற படங்கள் இண்டர்நெட்டில் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தின. இது ஆண்ட்ரியாவை சங்கடப்படுத்தியது. படங்களை இண்டர்நெட்டில் வெளியிட்டது கேவலமான செயல் என்றார். பல மாதங்களுக்கு முன் விருந்தில் இப்படம் எடுக்கப்பட்டது என்றார்.
அனிருத்தும் நானும் பிரிந்து விட்டோம் என்றும் அறிவித்தார். அனிருத் முத்த படங்கள் வெளியானதற்காக ஆண்ட்ரியாவிடம் மன்னிப்பு கேட்டதாக கூறப்பட்டது. பிறகு நீண்ட நாட்கள் இருவரும் பேசிக் கொள்ளவில்லை.
ஆனால், தற்போது இருவரும் சண்டை சமரசமாகியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. தான் இசையமைக்கும் படங்களில் ஆண்ட்ரியாவை பாட வைக்க அனிருத் முடிவு செய்துள்ளாராம். இதையடுத்து இருவருக்கும் மீண்டும் நெருக்கம் ஏற்பட்டு உள்ளது.
பரதேசி படத்தில் வித்தியாசமான வேடத்தில் அனைவரையும் ரசிக்கவைத்த அதர்வா இப்பொழுது நடித்துக்கொண்டிருக்கும் படம் இரும்பு குதிரை. எதிர்நீச்சல் படத்தில் நடித்த பிரியா ஆனந்த் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இப்படம் தற்பொழுது பாண்டிச்சேரியில் பரபரப்பாக படமாக்கப்பட்டு வருகின்றது. யுவராஜ் போஸ் இந்தப் படத்தை இயக்கி வருகின்றார். பைக் ரேஸ் சூழலில் நல்ல பொழுதுபோக்கு அம்சத்துடன் கூடிய ஆக்ஷன் கலந்த படமாக இருக்கும் என்று இயக்குனர் கூறுகிறார். இப்படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரித்து வருகிறது.
அதர்வாவின் முற்பொழுதும் உன் கற்பனைகள், பரதேசி படங்களில் இசை அமைத்த ஜி.வி பிரகாஷ் இந்தப் படத்திலும் இசையமைக்கின்றார். 7ஆம் அறிவு படத்தில் நடித்துப் புகழ் பெற்ற ஜானி இதில் வில்லனாகத் தோன்றுகிறார்.
மேலும், இப்படத்தில் கேமராமேனாக பீட்சா கோபி அமர்நாத் பணியாற்றுகிறார்.
கச்சத்தீவு பற்றி இந்திய பாராளுமன்றில் விவாதம் நடத்துவதற்கு, வெளியுறவுத் துறை அமைச்சகம் முட்டுக்கட்டை போட்டுள்ளது.
நட்பு நாடாக, இலங்கை இருப்பதால், கச்சத்தீவு பற்றி இனிமேல் பேசுவது, பெரும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் என, வெளியுறவுத் துறை கவலை தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
எனினும், கச்சத்தீவை மீட்பது குறித்து, பாராளுமன்றில் விவாதம் நடத்தப்படும் என, தமிழக எம்.பி.,க்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே, ராமேஸ்வரம் அருகே, கச்சத்தீவு உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே, 1974ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் படி, கச்சத்தீவு, இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது.
அதையடுத்து, அந்த தீவு அருகில், நம் மீனவர்கள் மீன் பிடிக்கவோ, அந்தத் தீவில் வலைகளை உலர்த்தவோ கூடாது என, இலங்கை கடற்படை தடை விதித்து வருகிறது. அந்தப் பகுதிக்குச் செல்லும், நம் மீனவர்கள் தாக்குதலுக்கு ஆளாகின்றனர்.
நீண்ட நெடுங்காலமாக, கச்சத்தீவில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் வழிபாடு நடத்தக் கூட, இலங்கை அரசிடம் அனுமதி பெற்றே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கச்சத்தீவு, இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதால், ராமேஸ்வரம் பகுதி மீனவர்களுக்கு பெரும் பாதிப்பாக உள்ளது. எனவே, அந்தத் தீவை, மீண்டும் இந்தியா வசம் கொண்டு வர வேண்டும்; அதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என, தமிழக மீனவர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது.
எனினும், மத்திய அரசு மௌனம் சாதித்து வருகிறது. கச்சத்தீவு விவகாரம் குறித்து, பாராளுமன்றில் சிறப்பு விவாதம் நடத்த வலியுறுத்தி, தி.மு.க., எம்.பி.,யான இளங்கோவன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி., லிங்கம் ஆகிய இருவரும், சபாநாயகரிடம், கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
நடப்பு மழைக்கால கூட்டத்தொடர் முடிவதற்குள், இதுகுறித்து விவாதம் நடத்த வேண்டுமென்று, கேட்டு இருந்தும், அதற்கான அறிகுறிகள் இதுவரை தென்படவில்லை. இந்த சூழ்நிலையில் தான், கச்சத்தீவு பற்றி பாராளுமன்றில் பேசுவதற்கு, வெளியுறவுத்துறை அமைச்சகம், முட்டுக்கட்டை போட்டுள்ள விவகாரம் அம்பலமாகியுள்ளது.
எம்.பி.,க்கள் சார்பில், இதுபோன்ற கோரிக்கைகளுக்காக, மனு அளிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட துறைக்கு கடிதம் மூலம், சபாநாயகர் அலுவலகம் கருத்துக் கேட்பது வழக்கம். அது போல், கச்சத்தீவு நோட்டீஸ் குறித்து, வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் கருத்து கேட்கப்பட்டிருந்தது.
அதற்கு பதிலளித்து, கடந்த, 5ம் திகதி, வெளியுறவுத் துறை அமைச்சகத்தின், இணைச் செயலர் அந்தஸ்த்தில் உள்ள ஹர்ஷ் வர்தன் சிரிங்லா என்பவர், பார்லிமென்ட் செயலகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், கூறப்பட்டுள்ளதாவது:இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான, கடல் எல்லைகள் எவை என்பது குறித்து, ஏற்கனவே வரையறுக்கப்பட்டு விட்டது. இதுகுறித்து, இரண்டு ஒப்பந்தங்களில், இரு நாடுகளும் கையெழுத்தும் இட்டுள்ளன. 1974 மற்றும் 1976ம் ஆண்டுகளில், இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகியுள்ளன.
தன் கடல் எல்லைப் பரப்பில், எதையும் இந்தியா விட்டுக் கொடுக்கவில்லை. இருதரப்பும், ஒப்புக் கொண்ட படியே, எல்லைகள் நிர்ணயிக்கப்பட்டு, முடிவு செய்யப்பட்டது. அவ்வாறு செய்ததில், கச்சத்தீவு, இலங்கை கடல் பரப்புக்குள் அமையும் படி ஆனது.எனவே, கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமான பகுதி; இந்த விஷயம், முடிந்துபோன ஒன்று; அதை திரும்பவும் பரிசீலனை செய்ய முடியாது.
இலங்கை, இந்தியாவின் நட்பு நாடு; நெருக்கமான நட்பு கொண்ட அண்டை நாடாக, இலங்கை இருக்கும் போது, கச்சத்தீவு குறித்து, பாராளுமன்றில் விவாதம் நடத்துவது, ஏற்புடையது அல்ல. அவ்வாறு, விவாதம் செய்தால், இருநாடுகளின் நட்புறவில், மிகப்பெரிய தர்மசங்கடத்தை, ஏற்படுத்தும்.
எனவே, எம்.பி.,க்களின் கோரிக்கையை ஏற்க கூடாது. தவிர, இந்த தகவல்கள் எல்லாமே, வெளியுறவுத் துறை அமைச்சர், சல்மான் குர்ஷித்தின் ஒப்புதலின் படியே தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு, அந்த கடிதத்தில், கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து, இளங்கோவன் எம்.பி.,யிடம் கேட்ட போது, ஏற்கனவே நடைபெற்ற, அலுவல் ஆய்வுக்குழுவில், டி.ஆர்.பாலு இப்பிரச்னை குறித்து எழுப்பினார். இன்னொரு முறை, நானும் எழுப்பினேன். எனவே, இந்த பிரச்னையை விட மாட்டோம். இன்னும், நாட்கள் உள்ளன. எப்படியும், பாராளுமன்றில், இந்த பிரச்னையை கிளப்புவோம், என்றார்.
மற்றொரு எம்.பி.,யான லிங்கம், நானும் இப்பிரச்னை குறித்து, விவாதம் நடத்த வேண்டுமென்று, மறுபடியும் வலியுறுத்துவேன், என்றார்.
பெண் கல்விக்காக போராடி பாகிஸ்தான் தலிபான்களின் துப்பாக்கி குண்டுகளால் சிதைக்கப்பட்ட மலாலாவுக்கு சர்வதேச குழந்தைகளின் அமைதிக்கான உயரிய பரிசு வழங்கப்படுகிறது.
நெதர்லாந்து நாட்டின் அம்ஸ்டர்டாம் நகரில் இயங்கி வரும் “கிட்ஸ் ரைட்ஸ்” என்ற குழந்தைகளின் உரிமைகளுக்கான அமைப்பு இந்த விருதினை வழங்கி கவுரவிக்கிறது.
பெண் கல்வியை ஊக்குவித்த பாகிஸ்தான் மாணவி மலாலா(15) என்பவரை தலிபான்கள் கடந்த அக்டோபர் மாதம் 9ம் திகதி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர்.
தலை உள்பட பல இடங்களில் குண்டுபாய்ந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவ ஆஸ்பத்திரியில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அவருக்கு இலவச உயர்சிகிச்சை அளிக்க இங்கிலாந்து அரசு முன்வந்தது.
இதனையடுத்து, தனி விமானம் மூலம் கொண்டுசெல்லபட்டு லண்டனில் உள்ள ராணி எலிசபத் ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பெற்று வந்த மலாலாவுக்கு இதுவரை 3 சத்திரசிகிச்சைகள் நடந்துள்ளன.
மேற்கொண்டு சில சத்திரசிகிச்சைகள் செய்ய வேண்டியுள்ளதாகவும் அவற்றை பிறகு செய்து கொள்ளலாம் எனவும் வைத்தியர்கள் அறிவுரை வழங்கினர்.
கடந்த டிசம்பர் மாதம் தனது மகளுடன் லண்டன் சென்று மலாலாவை ஆஸ்பத்திரியில் சந்தித்து ஆறுதல் கூறிய பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி அவருக்கு மேல் சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளதால் குடும்பத்தாருடன் மலாலா லண்டனிலேயே தங்கியிருக்க ஏற்பாடு செய்தார்.
லண்டனில் உள்ள பள்ளி ஒன்றில் மலாலா தற்போது படித்து வருகிறார். லண்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரக பள்ளியில் மலாலாவின் தந்தைக்கு வேலை வழங்கவும் சர்தாரி உத்தரவிட்டார்.
அவர்களின் குடும்பம் லண்டனில் உள்ள வெஸ்ட் மிட்லேண்ட்ஸ் என்ற இடத்தில் வசித்து வருகிறது. இதற்கிடையில் உலகின் உயரிய விருதான நோபல் விருதுக்கு இந்த ஆண்டு பரிந்துரைக்கப்பட்டவர்களின் பெயர்களில் மலாலாவின் பெயரும் இடம் பெற்றுள்ளது.
இந்நிலையில், நெதர்லாந்து நாட்டின் அம்ஸ்டர்டாம் நகரில் இயங்கி வரும் கிட்ஸ் ரைட்ஸ் என்ற குழந்தைகளின் உரிமைகளுக்கான அமைப்பு இந்த விருதினை வழங்கி கவுரவிக்கிறது.
தனது உயிரை பணயம் வைத்து உலகில் உள்ள பெண் குழந்தைகள் கல்வியறிவை பெறும் உரிமைக்காக போராடியவர், மலாலா. 2013ம் ஆண்டுக்கான சர்வதேச குழந்தைகளுக்கான அமைதி பரிசை மலாலாவுக்கு வழங்குவதன் மூலம் குழந்தைகளின் உரிமைக்காக சிறப்பு அர்ப்பணிப்புடன் போராடிய இந்த வீரமும் திறமையும் வாய்ந்த சிறுமியின் மீது கிட்ஸ் ரைட்ஸ் இயக்கம் ஒளி வெள்ளத்தை பாய்ச்சுகிறது’ என கிட்ஸ் ரைட்ஸ் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
டச்சு நாட்டில் துவங்கப்பட்ட கிட்ஸ் ரைட்ஸ் இயக்கத்தின் சார்பில் சர்வதேச அமைதி பரிசு வழங்கும் திட்டத்தை 2005ம் ஆண்டு ரோம் நகரில் நடைபெற்ற நோபல் பரிசாளர்கள் மாநாட்டின் போது ரஷ்ய நாட்டின் முன்னாள் அதிபர் மிக்கய்ல் கோர்பச்சேவ் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அனாதையாக தெருவில் திரிந்தபோதும் தன்னைப்போன்று தெருக்களில் தவித்த பிலிப்பைன்ஸ் நாட்டு அனாதை குழந்தைகளின் நல்வாழ்வுக்காக பாடுபட்ட 13 வயது சிறுவனுக்கு கடந்த ஆண்டு இந்த பரிசு வழங்கப்பட்டது நினைவிருக்கலாம்.
ஒரு லட்சம் யூரோ மற்றும் சான்றிதழ் கொண்ட இந்த பரிசு தெற்கு ஹொலந்தின் தலைநகர் ஹாக் நகரில் அடுத்த (செப்டம்பர்) மாதம் நடைபெறும் விழாவில் வழங்கப்படுகிறது.
ஏமன் நாட்டின் பெண்ணுரிமை போராளியும், பத்திரிகையாளரும், அரசியல்வாதியும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான தவக்கோல் கர்மன் மலாலாவுக்கு சர்வதேச குழந்தைகளுக்கான அமைதி பரிசை வழங்குகிறார்.
சம்பியன்ஸ் லீக் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சென்னை அணி கிண்ணத்தை வெல்ல உதவுவோம் என சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் சமீபத்தில் மேற்கிந்திய தீவுகளில் நடந்த முத்தரப்பு கிரிக்கெட் தொடருக்கு பின் ஓய்வில் உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் சமீபத்தில் கிடைத்த ஓய்வை குடும்பத்துடன் செலவிட்டேன்.
தற்போது மீண்டும் களத்துக்கு திரும்பியுள்ளேன். எனது முழுத்திறமையை வெளிப்படுத்தி சிறப்பாக செயல்பட பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். அடுத்த மாதம் தொடங்கும் சம்பியன்ஸ் லீக் தொடரில் சென்னை அணிக்கு எனது பங்களிப்பை கொடுக்க வேண்டும்.
மிக உற்சாகத்துடன் விளையாடி கிண்ணத்தை கைப்பற்ற வேண்டும்.
சிம்பாவே தொடரில் அமித் மிஸ்ரா, ரவிந்திர ஜடேஜா இருவரும் சிறப்பாக செயல்பட்டனர். இதில் சமீபத்தில் ஜடேஜா மிகவும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார்.
நாங்கள் மூவரும் ஒருங்கிணைந்து அணியின் வெற்றிக்கு உதவுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.
கடந்தாண்டு அங்கு விளையாடிய போது 3 டெஸ்டில் 10 விக்கெட் மட்டுமே வீழ்த்தினேன். இம்முறை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டுமென தெரிவித்துள்ளார்.
கனடாவில் மேயர் ஒருவரிடம் பேட்டி எடுத்துக் கொண்டிருந்த பெண் நிருபர் தன்னுடைய மேலாடையை திடீரென கழட்டி போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள கெலோவ்னா நகர மேயர் வால்டர் கிரேவுக்குத்தான் இந்த தர்மசங்கடமான நிலைமை ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் பிரிட்டிஷ் கொலம்பியாவில் Go Topless Day என்ற தினம் கடைபிடிக்கப்பட்டது.
இந்நிலையில் மேயர் வால்டரை பெண் நிருபர் லோரி வெல்போர்ன் பேட்டி எடுக்க சென்றுள்ளார். அப்போது, நான் தெருவில் டொப் லெஸ்ஸாக நடந்து போனால் எப்படி இருக்கும் என்று வால்ட்டரிடம் சிரித்தபடி கேட்டார் லோரி.
அதற்கு வால்ட்டர் பதிலளிக்க முற்பட்டபோது திடீரென தனது மைக்கை வால்ட்டரிடம் கொடுத்து விட்டு தான் அணிந்திருந்த டாப்ஸை அப்படியே கழற்றிக் கீழே வைத்தார்.
அரைநிர்வாணமாக காணப்பட்ட லோரியை பார்த்து என்ன செய்வதென்றே தெரியாமல் தர்மசங்கடத்திற்கு ஆளாகியுள்ளார் மேயர்.
பின்னர் சுதாரித்துக் கொண்டு லோரியிடம் என்ன செய்றீங்க என்று கேட்டார். அதற்கு லோரி, ‘it’s really hot in here’ என்று பதிலளித்தார்.
பின்னர் வால்ட்டர் பேசுகையில் இப்படி திறந்த மார்புடன் தெருவில் நடப்பது இங்குள்ள சட்டப்படி குற்றமில்லை என்பதால் இதைப் பெரிய விஷயமாக நான் கருதவில்லை என்று கூறினார்.
அதற்கு லோரி அப்படியென்றால் நான் கெலோவ்னா நகர வீதிகளில் இப்படி திறந்த மார்புடன் நடக்க முடியுமா என்று கேட்க அதற்கு மேயரோ, நிச்சயமா போகலாமே நீங்கள் இப்படிச் செய்வது நிச்சயம் சட்டவிரோதம் இல்லை என்று மட்டும் என்னால் கூற முடியும் என்று பதிலளித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவிலிருந்து மேலும் 48 பேர் கொழும்புக்கு நேற்று திருப்பியனுப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய குடிவரவு மற்றும் பிரஜாவுரிமை திணைக்களம் கூறியுள்ளது.
இவர்கள் அவுஸ்திரேலியாவின் அகதிகள் மற்றும் புகலிடம் கோருவோர் தொடர்பான சர்வதேச கடப்பாடுகளினுள்ளே வராதவர்கள் என்றும் திணைக்களம் கூறியுள்ளது.
இந்த குழுவிலிருந்த 35 ஆண்களும் 7 பிள்ளைகள் உட்பட 13 பேரும் கிறிஸ்மஸ் தீவிலிருந்து பிற்பகல் 1 மணிக்கு கொழும்புக்கு விமானம் மூலம் அனுப்பிவைக்கப்பட்டனர் என்றும் திணைக்களம் அறிவித்துள்ளது.
இவர்களோடு அவுஸ்திரேலியாலிருந்து கொழும்புக்கு திருப்பியனுப்பிவைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1300 ஐ தாண்டியுள்ளது.
விஸாவின்றி அவுஸ்திரேலியாவுக்கு மக்கள் வரும்போது அவர்கள் அவுஸ்திரேலியாவுக்கு வந்தமைக்கு கூறும் காரணங்கள் நன்கு மதிப்பிடப்பட்டுத்தான் தீர்மானங்கள் எடுக்கப்படுமென பேச்சாளர் ஒருவர் கூறினார்.
அவுஸ்திரேலியாவுக்கெதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 3-0 என்று கைப்பற்றியது. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆஷஸ் கிண்ணம் வென்ற உற்சாகத்தில், இங்கிலாந்து அணியின் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது உற்சாக மிகுதியில் பீட்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், அண்டர்சன் ஆகியோர் ஓவல் மைதானத்தின் ஆடுகளத்தில் சிறுநீர் கழித்தனர். அப்போது அவுஸ்திரேலிய வீரர்கள் மற்றும் ஊடகத்தினர் மைதானத்தில் தான் இருந்தனர்.
இதனால் இவ்விடயம் வெளிப்பட்டு விட்டது. கிரிக்கெட் வீரர்களின் புனித இடமான ஆடுகளத்தை அசிங்கப்படுத்திய வீரர்களின் செயல் குறித்து, விசாரணை நடக்கிறது.
இது குறித்து அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வோர்ன் கூறுகையில் வீரர்களின் கொண்டாட்டம் என்பது டிரசிங் ரூமிற்குள் இருப்பது தான் சிறந்தது என்றும் மிகவும் பழமை வாய்ந்த ஓவல் ஆடுகளத்தில் சிறுநீர் கழித்தது, இங்கிலாந்து வீரர்களில் மிதமிஞ்சிய முட்டாள்தனமான திமிர் பிடித்த செயல் எனவும் கூறினார்.
இங்கிலாந்து வீரர்கள் ஆடுகளத்தில் சிறுநீர் கழித்தது குறித்து, இங்கிலாந்து கிரிக்கெட் சபை விசாரணையை ஆரம்பித்தது. தவிர தங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஓவல் மைதானத்துக்கு உரிமையான சர்ரே கவுன்டி கிளப் தெரிவித்துள்ளது.
இது குறித்து சர்ரே தலைமை நிர்வாகி ரிச்சட் கோல்டு கூறுகையில், வீரர்களின் செயல் மிகுந்த ஏமாற்றமாக உள்ளது. மிகுந்த பாரம்பரியமிக்க ஆடுகளத்தில் இப்படி நடந்தது அற்பத்தனமானது என்றார்.
ஆஷஸ் தொடரை வென்ற உற்சாகத்தில் மைதானத்தில் சிறுநீர் கழித்தது தவறான ஒன்று தான் என இங்கிலாந்து வீரர்கள் மன்னிப்பு கேட்டுள்ளனர்.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரை 3-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி வென்றதைத் தொடர்ந்து லண்டன் ஓவல் மைதானத்தில் அமர்ந்து கொண்டாடினர். அப்போதுதான் பிட்ச்சில் சில வீரர்கள் சிறுநீர் கழித்து அநாகரிகமாக நடந்து கொண்டனர்.
இந்த நிலையில் தங்களது செயலுக்காக இங்கிலாந்து வீரர்கள் மன்னிப்பு கோரியுள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில்..
எங்களது கொண்டாட்டத்தில் கிரிக்கெட் போட்டிக்கும், மைதானத்திற்கும் கிரிக்கெட் ரசிகர்களுக்கும் அவமரியாதை ஏற்படுத்தும் எந்தவிதமான உள்நோக்கமும் இல்லை. நாங்கள் கிரிக்கெட்டை நேசிக்கிறோம், கிரிக்கெட்டுக்கு மரியாதை செலுத்துகிறோம்.
எதிராளிகளையும் நேசிக்கிறோம் நாங்கள் விளையாடும் மைதானத்தையும் நேசிக்கிறோம். இருப்பினும் எங்களில் சிலரின் நடத்தை பொருத்தமற்றது என்பதை ஒத்துக் கொள்கிறோம்.
அவர்களின் நடத்தை யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் நாங்கள் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். இது எதேச்சையாக நடந்ததே தவிர திட்டமிட்டு எதுவும் நடக்கவில்லை என்று கூறியுள்ளனர்.
இதற்கிடையே இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஸ்வான் எங்களது வீரர்கள் மைதானத்தின் நடுவே பிட்ச் பகுதியில் அமர்ந்து பியர் சாப்பிட்டது உண்மைதான் என்றும் இருட்டாக இருந்ததால் சரியாக தெரியாமல் போயிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
சிரியாவின் மீது போர் தொடுக்க மேற்கத்திய நாடுகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சிரியாவில் ஜனாதிபதிக்கு எதிராக போராடி வரும் மக்கள் மீது, கடந்த 21ம் திகதி இராணுவம் இரசாயன தாக்குதல் நடத்தியதில் நூற்றுக்கணக்கான மக்கள் பலியாயினர்.
இதற்கு ஐ.நா சபை உட்பட பல்வேறு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும் இரசாயன தாக்குதல் நடந்த இடத்தை ஐ.நா அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர்.
இந்நிலையில் சிரியா மீண்டும் இரசாயன தாக்குதல் நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், அமெரிக்க படைகள் விரைந்துள்ளதாகவும் இராணுவ அமைச்சர் சக்கேகல் தெரிவித்துள்ளார்.
இதற்கு ஐரோப்பிய மற்றும் கிழக்கு ஆசிய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கவும் சிரியா தயாராகி வருகிறது.
இதுகுறித்து சிரியா வெளிவிவகாரத்துறை அமைச்சர் வாலித் முயல்லம் கூறுகையில் இப்பிரச்சினையை சமாளிக்க எங்களுக்கு 2 வழி உள்ளது, ஒன்று நாங்கள் சரண் அடைய வேண்டும்.
மற்றொன்று எதிர்த்து போரிட வேண்டும். ஆனால் நாங்கள் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளுடன் எதிர்த்து போரிட்டு பதிலடி கொடுக்க தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல். கிரிக்கெட் பாணியில் இந்திய பேட்மின்டன் லீக் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
ஐ.பி.எல். போலவே இந்திய கால்பந்து சம்மேளனம் கால்பந்து‘லீக் போட்டியை நடத்துகிறது. அடுத்த வருடம் ஜனவரி 18ம் திகதி முதல் மார்ச் 30ம் திகதி வரை இந்த போட்டி நடக்கிறது. இதில் 8 அணிகள் பங்கேற்கின்றன.
இந்தப்போட்டிக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் நடக்கிறது. ஒவ்வொரு அணியில் 22 வீரர்கள் இடம்பெறுவார்கள். 10 வெளிநாட்டு வீரர்கள் உள்பட ஒரு முன்னணி வீரரும் ஒவ்வொரு அணியிலும் இடம் பெறுவார்கள்.
ஐ.பி.எல். அணிகளில் ஒன்றான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான நடிகர் ஷாருக்கான் கொல்கத்தா கால்பந்து அணியை வாங்க முடிவு செய்து உள்ளார்.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணி தலைவர் டோனியும் கால்பந்து அணியை வாங்குகிறார். ஹிந்தி நடிகரும் நெருங்கிய நண்பருமான ஜோன் ஆப்ரகாமுடன் இணைந்து அவர் கால்பந்து அணியை வாங்குகிறார்.
கால்பந்து போட்டியில் டோனிக்கு இருக்கும் ஆர்வம் காரணமாகவே அவர் இந்தப்போட்டியில் முதலீடு செய்ய இருக்கிறார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.
பாலியல் பலாத்காரங்களுக்கு என்ன தீர்வு காண்பது என்று எல்லோரும் கைபிசைந்து நிற்கிற நேரம் ஜில்லென்று ஒரு தீர்வு சொல்லியிருக்கிறார் பூனம் பாண்டே.
பீர் பார்களை திறவுங்கள் பாலியல் வன்கொடுமைகள் குறைந்திடும் இதுதான் பூனத்திண் கண்டுபிடிப்பு. மும்பை பெண் புகைப்பட கலைஞர் பாலியல் பலாத்காரத்தால் இந்தியா கொந்தளித்துப் போயுள்ளது.
பூனம் பாண்டேயை போல் கவர்ச்சியாக போஸ் கொடுப்பதும், நடிப்பதும்தான் பாலியல் பலாத்காரங்கள் பெருக காரணம் என ஒரு கலாச்சார காவலர் குரூப் குற்றம்சாட்டியதும், உடம்பில் இருக்கிற ஒன்றரையடி துணியையும் வரிந்துகட்டி சண்டைக்கு வந்துவிட்டார் பூனம்.
நான் போடுற ஆடைதான் பாலியல் பலாத்காரங்களுக்கு காரணம் என்றால் நான் ஊடகத்துக்கு வர்றதுக்கு முன்னாடி மட்டும் கற்பழிக்காமலா இருந்தாங்க? பெண்கள் போடுற ஆடைதான் ஆண்களை செடியூஸ் பண்றதுங்கிறது எந்த விதத்தில் நியாயம்?
அஞ்சு வயசு குழந்தையைக்கூட துஷ்பிரயோகம் பண்றாங்களே. நான் சும்மா பேசுவேன், எதுவும் செய்ய மாட்டேன். ஆனா இங்க நிறைய பிரபல நடிகைகள் இருக்காங்க. என்னைவிட ஐட்டம் டான்சில் அவங்கதான் அதிகம் எக்ஸ்போஸ் பண்றாங்க என்று ஒரேயடியாக போட்டு வாங்கியிருக்கிறார்.
பிரச்சினையை பேசினால் போதுமா? தீர்வு சொல்ல வேண்டாமா? பீர் பார்களை திறந்தால் இந்த பாலியல் வன்னொடுமைகள் எல்லாம் ஒரேயடியா குறைஞ்சிடும் என்றிருக்கிறார் பூனம்.
குழந்தைகளை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தி வந்த நபர் ஒருவரை பெங்களூர் பொலிசார் இன்று கைது செய்தனர்.
பெங்களூரைச் சேர்ந்த 30 வயது நபர் ஒருவர் 6 முதல் 10 வயது வரை உள்ள சிறுமிகளாக பார்த்து கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து வந்தார்.
அவர் தொடர்ந்து பலாத்காரத்தில் ஈடுபட்ட அவர் மீது ஒரு பலாத்கார வழக்கு மட்டுமே பதிவு செய்யப்பட்டிருந்தது. மீதமுள்ளவை கடத்தல் வழக்குகளாக பதிவானது.
அந்த நபர் சிறுமிகளை கடத்தி ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு கொண்டு சென்று பலாத்காரம் செய்து வந்துள்ளார். அதன் பிறகு சிறுமிகள் எப்படியோ வீட்டுக்கு வந்து சேர்ந்துள்ளனர்.
இந்நிலையில் அந்த நபரை பெங்களூர் பொலிசார் இன்று கைது செய்தனர். பொலிஸ் விசாரணையில் தான் 31 சிறுமிகளை கடத்தியதாக அவர் ஒப்புக் கொண்டுள்ளார். இது தவிர அவர் பைக்குகள், நகை, பணம் உள்ளிட்டவற்றை திருடியது, பலரை ஏமாற்றியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த 2 மாதங்களில் மட்டும் 16 சிறுமிகளை கடத்தியதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அருணாச்சல பிரதேச மாநிலம் மேற்கு சியாங் மாவட்டம் லிகாபாலியில் ஒரு தனியார் பள்ளி விடுதி உள்ளது. இங்கு தங்கியிருக்கும் 4 வயது முதல் 14 வயது வரையிலான சிறுமிகள் 14 பேரை விடுதி வாடன் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமிகள் 13 பேர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விடுதி வாடன் விபின் விஸ்வானை கைது செய்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் 2 ஊழியர்களிடமும் பொலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த மூன்று ஆண்டுகளாக விடுதி வாடன் மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், தலைமை ஆசிரியரிடம் இதுபற்றி முறையிட்டும் அவர் கண்டுகொள்ளவில்லை என்றும் மாணவிகள் தெரிவித்தனர்.
நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் சொல்லக்கூடாது என்று வாடனும், பள்ளி நிர்வாகிகளும் மிரட்டியுள்ளனர். இதன் காரணமாக மாணவிகள் வெளியில் தெரிவிக்காமல் இருந்துள்ளனர். பின்னர் சுவர் ஏறி குதித்து தப்பி வந்த மாணவிகள், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அதன்பிறகே இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மாணவிகள் கற்பழிப்பு பற்றி கேள்விப்பட்டு கடும் அதிர்ச்சியிடைந்த பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் தெருவில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கும் அதேவேளை தமிழ்மக்கள்சார் நியாயங்களை சிங்கள மக்களுக்கும் உணர்த்தவேண்டிய தேவை இருப்பதாக எதிர்வரும் வடமாகாணத் தேர்தலில் வவுனியா மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் பிரசாத் அவர்கள் தெரிவித்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை வவுனியா காத்தார்சின்னக்குளம் பிரதேச மக்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது கருத்து தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்:
“எமது இனம் காலங் காலமாக வாழ்வதற்காகப் போராடியும், போராடுவதற்காக வாழ்ந்தும்வரும் இனமாக எல்லையற்ற துன்பங்களையும் பொருளாதார நெருக்கடிகளையும் சந்தித்து வருவதுடன் ஆட்சியில் இருப்பவர்களின் அலட்சியப் போக்கினாலும் சீரற்ற பொருளாதாரக் கொள்கையினாலும் எமது மக்கள் போக்கிடம் இன்றி கடன் சுமைகளைச் சுமந்துகொண்டு தற்கொலைகளை நோக்கி ஓடிக்கொண்டிருக்கின்றார்கள்.
ஒரு புறத்திலே உரிமைகள் மறுக்கப்பட்டும் மறுபுறத்திலே பொருளாதார, கலாச்சார, சமய விழுமியங்களும் நலிவுற்றுள்ள இத்தருணத்தில் மாகாணத்திலும் தமிழ்மக்களுக்காகக் குரல்கொடுக்கக் கூடியதும் தமிழ்மக்கள்சார் நியாயங்களை சிங்கள மக்களுக்கு உணர்த்தக்கூடியதும் சகல இன மக்களையூம் சமமாக மதிக்கும் ஒரே ஒரு தேசியக்கட்சி ஐக்கியதேசியக்கட்சி மட்டுமே” எனத் தெரிவித்தார்.
அத்தோடு தம் பிரதேசசபை உறுப்பினராக மக்களுக்கு ஆற்றிய சேவைகளையும், அபிவிருத்திப் பணிகளையும் பட்டியலிட்ட அவர் தன்னை மாகாணசபை உறுப்பினராக மக்கள் தெரிவுசெய்யுமிடத்து பிரதேச சபையின் ஊடாக வழங்கிய அபிவிருத்திப் பணிகளையும் விட பலமடங்கு பணிகளையும் சேவையிகளையும் வழங்கத் தயார் எனவும் தெரிவித்தார்.