குடிபோதைக்கு அடிமையானதாக வதந்தி பரப்புகிறார் என் தந்தை : கனகா ஆவேசம்!!

kanaka

கனகா உடல்நிலை குறித்து சமீபத்தில் பரபரப்பு செய்திகள் வெளியானது. இதையடுத்து பத்திரிகையாளர்களும், புகைப்படக்காரர்களும் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அவரது வீட்டில் திரண்டனர்.

திடீரென்று அவர்கள் முன் கனகா ஆஜராகி நான் இறந்து போனதாக யாரோ பொய் செய்தி பரப்பி உள்ளனர். உயிருடன் தான் இருக்கிறேன் என்றார். ஆலப்புழாவில் புற்றுநோய்க்கு சிகிச்சை எடுக்க போய் இருந்ததாக செய்தி பரப்பி உள்ளனர். நான் அங்கு போகவே இல்லை என்றார். ஏழை குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க போவதாகவும் மீண்டும் சினிமாவில் நடிக்க திட்டமிட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

பிறகு அவரது தந்தை வீட்டுக்கு போய் சண்டையும் போட்டார். இந்த நிலையில் கனகாவின் தந்தை தேவதாஸ் பொலிஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு சென்று புகார் மனு அளித்தார்.

அதில் ‘கனகா என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதுபோல் பேட்டி கொடுத்து வருகிறார். அவர் இறந்து போனதாக நான் வதந்தி பரப்பினேன் என்கிறார். அவரது சொத்துக்களை அபகரிக்க முயற்சிக்கிறேன் என்கிறார். எனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று புகார் மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

இதையடுத்து தந்தை மீது கனகா மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது என் அப்பா என்னிடம் பாசமாக இருந்ததே இல்லை. எனக்கும் அவருக்கும் பாசம் வருவதற்கு இனி வாய்ப்பே இல்லை. நான் போதைக்கு அடிமையாகி இருப்பதாக என்னைப் பற்றி இப்போதும் அவர் வதந்தி பரப்பி வருகிறார். அவரை நான் மதிப்பது கிடையாது. அதனால் என்னை பழிவாங்க துடிக்கிறார் என்றார்.

தமிழ், இந்தி திரையுலக கனவு கன்னி ஸ்ரீதேவிக்கு 50 வயது..!!

sridevi

நடிகை ஸ்ரீதேவி நேற்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடினார். நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினரிடம் இருந்து அவருக்கு வாழ்த்துகள் குவிந்தவண்ணம் உள்ளது.

தமிழகத்தில் உள்ள சிவகாசியில் பிறந்தார். நான்கு வயதில் முருகா என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். எம்.ஜி.ஆருடன் நம்நாடு, துணைவன், அகத்தியர், பாபு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.

13 வயதில் பாலச்சந்தர் இயக்கிய மூன்று முடிச்சு படத்தில் கதாநாயகியானார். 1976ல் இப்படம் வந்தது. பின்னர் 16 வயதினிலே, சிவப்பு ரோஜாக்கள், மூன்றாம் பிறை, வறுமையின் நிறம் சிவப்பு, பிரியா, கல்யாண ராமன், குரு, மூன்றாம் பிறை என பரபரப்பாக பேசப்பட்ட ஹிட் படங்களில் நடித்தார்.

தெலுங்கு, மலையாள மொழிகளிலும் நிறைய படங்களில் நடித்தார். இந்திக்கு போய் முன்னணி கதாநாயகியானார். அங்கு இந்தி தயாரிப்பாளர் போனிகபூரை மணந்து மும்பையில் செட்டில் ஆனார். ஜானவி, குஷி என இரு மகள்கள் உள்ளனர்.

இந்தியில் அறிமுகமானபோது ஸ்ரீதேவிக்கு அந்த மொழி தெரியாது. நடிகை ரேகா டப்பிங் குரல் கொடுத்தார். சாந்தினி படத்தில் தான் முதன் முதலாக சொந்த குரலில் பேசினார். நீண்ட இடைவெளிக்கு பின் தற்போது இங்கிலீஸ் விங்கிலீஸ் படத்தில் நடித்தார். தமிழ், இந்தியில் இப்படம் வந்தது.

இன்னும் வேகமாக ஓடி சாதனைகள் படைக்க வேண்டும்: உசைன் போல்ட்..!!

usain

ரஷ்யாவில் நடந்த உலக தடகள போட்டியில், நட்சத்திர வீரர் உசைன் போல்ட் தங்கப் பதக்கம் வென்றார். ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் உலக தடகள போட்டிகள் நடந்து வருகிறது.

இதில் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில், பந்தய தூரத்தை 9.77 விநாடிகளில் கடந்து நட்சத்திர வீரரான உசைன் போல்ட் முதலிடம் பிடித்தார்.

இதுகுறித்து உசைன் போல்ட் கூறுகையில் தங்கம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் இதை விடவும் வேகமாக ஓட என்னால் முடியும் என நம்புகிறேன். இதற்காக அடுத்து வரும் போட்டிகளில் கடுமையாக முயற்சிப்பேன்.

உலக சாதனை படைக்காவிட்டாலும், முதலிடம் பிடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். ஜமைக்கா ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப களத்தில் ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெறுவேன் என்று தெரிவித்துள்ளார்.

இணையத்தில் ஆபாச படம் : நடிகை ஹன்சிகா அதிர்ச்சி..!

hansika111

நடிகை ஹன்சிகா ஆபாசமாக இருப்பது போன்ற படம் இணையத்தில் பரவி உள்ளது. இதனால் அவர் அதிர்ச்சியாகியுள்ளார்.

மதுபான பார் ஒன்றில் சிம்புவை ஹன்சிகா அரைகுறை ஆடையில் இறுக்கமாக கட்டி அணைத்தபடி நிற்பது போன்று இப்படம் உள்ளது. இப்படங்களை இணையத்தில் பரவவிட்டது யார் என்று தெரியவில்லை.

நயன்தாராவுடன் சிம்பு தொடர்பில் இருந்தபோதும் இதுபோல் படங்கள் வந்தன. ஆபாச படம் பற்றி ஹன்சிகா கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதும் அதிர்ந்தார். அப்போது படத்தில் இருப்பது நான் இல்லை என்றார்.

இருவர் படங்களையும் கிரபிக்ஸ் செய்து ஒட்ட வைத்துள்ளதாக குற்றம் சாட்டினார். இதுகுறித்து பொலிசில் புகார் அளிக்க யோசித்து வருவதாகவும் தெரிவித்தார்.

ஹன்சிகா சமீபத்தில் தான் பிறந்தநாளை கொண்டினார். ஆதவரற்ற பெண் குழந்தையொன்றை தத்தெடுக்கவும் செய்தார். இந்த நிலையில் ஆபாச படம் வந்துள்ளதால் சங்கடத்தில் இருக்கிறார்.

இரண்டு பேரை காதலித்தேன் : அமலா பால்!!

amalapaul

அனகா என்ற பெயரில் சினிமாவில் அறிமுகமானேன். அந்த பெயரை வைத்து அழைக்க கஷ்டமாக உள்ளது என்றனர். அதன் பிறகு அமலாபால் என மாற்றினேன். அது ராசியாக அமைந்தது. நிறைய பட வாய்ப்புகள் வந்தன.

பள்ளியில் படித்தபோது ஒரு பையனை பிடித்தது. அது காதலா? என்று புரியவில்லை. அவனை அடிக்கடி பார்க்க வேண்டும், பேச வேண்டும் என்று ஆசைப்பட்டேன். கொஞ்ச நாள்தான் அந்த ஈர்ப்பு இருந்தது. கல்லூரிக்கு போனதும் இன்னொருவன் மேல் காதல் வந்தது. அறிவு முதிர்ச்சி இல்லாததால் அது காதலா? கவர்ச்சியா? என்று உணர முடியவில்லை. இப்போது அந்த காதலும் போய் விட்டது.

எனக்கு கணவராக வருபவர் எல்லோருக்கும் உதவுபவராக இருக்க வேண்டும். அடுத்தவர் கஷ்டங்களையும் புரிந்து கொள்ள வேண்டும்.

நான் படித்த குடும்பத்தில் இருந்து வந்தவள். நிறைய படிக்க வைக்க பெற்றோர் விரும்பினர். ஜொலியாக மொடலிங் பண்ணப் போய் மலையாள இயக்குனர் கண்ணில்பட்டு நடிகையாகி விட்டேன். நான் நடித்த முதல் மலையாள படத்தை பார்க்க தியேட்டருக்கு போனேன்.

என்னையும் சேர்த்து ஐந்து பேர்தான் இருந்தோம். கதையை தேர்வு செய்து நடிப்பது முக்கியம் என்று அப்போது புரிந்து கொண்டேன். மைனா படம் பெரிய திருப்பு முனை ஏற்படுத்தியது.

தமிழில் சர்ச்சைக்குரிய கதையம்சம் உள்ள படமொன்றில் நடித்தேன். அந்த படத்துக்காக என்னை ஆபாசமாக சித்தரித்து போஸ்டர் ஓட்டினர். அதை பார்த்து வருத்தப்பட்டேன். சினிமாவில் பணம்தான் முக்கியமாக உள்ளது என்று அமலாபால் கூறினார்.

நடுவானில் குழந்தையை பிரசுவித்த பெண்..!

planeவிமானம் வானில் பறந்துக்கொண்டிருந்த போது, கர்ப்பிணிப் பெண் ஒருவர் பெண் பயணிகளின் உதவியுடன் அழகான ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார்.

வட ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மொராக்கோ நாட்டின் காசாபிளாங்கா நகரில் இருந்து இத்தாலியில் உள்ள பொலோக்னா சென்ற ராயல் ஏர் மொராக் விமானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று 39 வயது மதிக்கத்தக்க நிறைமாத கர்ப்பிணி பயணம் செய்தார்.

விமானம் வானில் பறந்துக்கொண்டிருந்த போது அந்த பெண்ணுக்கு பிரசவ வலி அதிகரித்தது.

உடனடியாக விமானிக்கு தகவல் அளிக்கப்பட்டது. பார்சலோனா விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட விமானி அவசரமாக தரையிறங்க அனுமதி கேட்டார்.

அதற்குள், விமானத்தில் இருந்த பெண் பயணிகள் துணையுடன் அந்த பெண் அழகான ஆண் குழந்தையை ஈன்றெடுத்தார்.

பார்சலோனா விமான நிலையத்தில் தயாராக நின்ற ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு சண்ட் ஜோன் டி டியு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தாயும், சேயும் நலமாக உள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

பிரசவித்த பெண் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவரது பெயர் என்ன? என்ற தகவல்களை கூற விமான சேவை நிறுவனம் மறுத்துவிட்டது.

பார்சலோனாவில் 50 நிமிடம் தாமதிக்கப்பட்ட அந்த விமானம் மீண்டும் பொலோக்னாவிற்கு புறப்பட்டு சென்றது.

ஒஸ்கார் விருதுக்கு ஆசைப்படக்கூடாது : நடிகர் நாசர்..!!

naasar

ஈரோடு வ.உ.சி. பூங்காவில் நடந்த புத்தகத் திருவிழாவில் நேற்று மாலை நடந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் ராஜேஷ், நாசர் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். நடிகர் நாசர் வாசகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது..

அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட நிறுவனம் தயாரிக்கும் படங்களுக்கு அமொக்கா அரசு கொடுக்கும் விருதுதான் ஒஸ்கர் விருது. வெளிநாட்டை சேர்ந்த சினிமா நடிகர்கள் யாராவது தனக்கு இந்திய நாட்டின் விருது கிடைக்கவில்லை என்று கூறுகிறார்களா? இல்லையே. பிறகு ஏன் நாம் ஒஸ்கார் விருதுக்கு ஆசைப்பட வேண்டும். கவலைப்பட வேண்டும்.

சினிமாவின் போக்கை மாற்றி அமைத்தவர் சிவாஜி கணேசன். அவருக்கே சிறந்த நடிகர் விருது கிடைக்கவில்லை. தற்போது நடிப்பு பற்றி 4 ஆண்டுகளாக ஒரு புத்தகம் எழுதி வருகிறேன். இது நாளைய சமுதாயம் பயன்பெறும் வகையில் இருக்கும்.

ஒருமுறை இயக்குனர் பாலசந்தர் என்னை அழைத்து நாசர் என்ற பெயர் மிக சிறியதாக இருக்கிறது. பெயரை மாற்றிவிடலாமா? என்று கேட்டார். ரஜினி போன்றோருக்கு பெயர் வைத்து வாழவைத்த சிகரம் பாலசந்தர். ஆனால் அவரிடம் நான் என் பெற்றோர் ஆசையுடன் வைத்த பெயரை மாற்ற விரும்பவில்லை என்று தாழ்மையுடன் கூறினேன் என்று அவர் கூறினார்.

வெலிவேரிய, கிரான்ட்பாஸ் சம்பவங்கள் குறித்து பக்கச்சார்பற்ற விசாரணை தேவை – ஐரோப்பிய ஒன்றியம்..!

euவெலிவேரிய மற்றும் கிரான்ட்பாஸ் சம்பவங்கள் குறித்து உரிய விசாரணை நடாத்தப்பட வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இவ்விரு சம்பவங்கள் குறித்தும் கூடிய கவனம் செலுத்தி வருவதாக ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.

அனைத்து இலங்கை பிரஜைகளினதும் அடிப்படை உரிமைகளை உறுதி செய்யக் கூடிய வகையில் பக்கச்சார்பற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

ஒகஸ்ட் 1ம் திகதி வெலிவேரிய பிரதேசத்தில் இடம்பெற்ற போராட்டத்தில் இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் கொல்லப்பட்டதுடன், பலர் காயமடைந்திருந்தனர்.

ஒகஸ்ட் மாதம் 10ம் திகதி கிரான்ட்பாஸ் பகுதியில் பள்ளிவாசல் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சிலர் காயமடைந்திருந்தனர்.

அமைதியான முறையில் மக்கள் ஒன்று கூடுதல், சுதந்திரமாக மத வழிபாடுகளில் ஈடுபடுதல் உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

கடைசிவரை துடுப்பெடுத்தாடியிருந்தால் 300 ஓட்டங்கள் எடுத்திருப்பேன் : தவான்..!!

Shikhar_Dhawan

A அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 150 பந்துகளில் 248 ஓட்டங்கள் விளாசி இந்தியா A அணியை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறச் செய்த ஷிகர் தவானின் அதிரடி ஆட்டம் உலகையே மூக்கின் மேல் விரல் வைக்கச் செய்துள்ளது.

இது குறித்து அவர் கூறுகையில், 44வது ஓவரில் நான் அவுட் ஆகும் போது நினைத்தேன், என் மனதில் வந்து போன எண்ணம் என்னவெனில் கடைசி வரை துடுப்பெடுத்தாடியிருந்திருந்தால் ஒருநாள் கிரிக்கெட்டில் 300 ஓட்டங்கள் என்ற அரிய சாதனையை நிகழ்த்தியிருக்கலாம் என்பதே.

இருப்பினும் இந்த இன்னிங்ஸே மகிழ்ச்சியளிக்கிறது. சச்சின், ஷேவாக் ஆகியோரது சாதனைகளை நான் கடந்தேன் என்பது என் மனதில் தோன்றியது.

ஆனால் அவர்கள் சர்வதேச அரங்கில் இரட்டைச் சத சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்கள். எனவே ஒப்பிடக்கூடாது. அவர்களுடையது இந்த இன்னிங்ஸை காட்டிலும் பன் மடங்கு உயர்ந்தது.

50 ஓவர் போட்டியில் இரட்டை சதம் அடித்தது மகிழ்ச்சியளிக்கிறது என்றும் இது தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படவில்லை என்பது சிறிய வருத்தமளிக்கிறது எனவும் கூறியுள்ளார்.

வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய பிரஜை யாழ் கோப்பாயில் கைது..!

arrest1கோப்பாய் பொலிஸ் பிரிவில் கல்வியங்காடு நகரில் வைத்து இந்திய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சந்தேகநபர் இன்று யாழ் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.

வெலிக்கடை சிறையிலிருந்து நான்கு சிறைக்கைதிகள் தமிழகத்திற்கு மாற்றம்..!

velikadaஇலங்கையின் வெலிக்கடைச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நான்கு தமிழக கைதிகள் தமிழகத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக பொலிஸாரின் பாதுகாப்புடன் இரண்டு பெண் கைதிகள் உட்பட்ட நான்கு பேரும் நேற்று ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் விமானத்தி;ல் அழைத்து செல்லப்பட்டு பின்னர் திருச்சியின் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டனர்.

இந்திய இலங்கை நாடுகளுக்கு இடையிலான சிறைக்கைதிகள் மாற்று உடன்படிக்கையின்கீழ் இவர்கள் தமிழகத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

போதைவஸ்து உட்பட்ட குற்றங்களுக்காக கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இவர்களில் இருவர்; தமது தண்டனைக்காலமான சுமார் 10 வருடங்களில் பாதிகாலத்தையும் சிலர் பெருமளவு காலத்தையும் கழித்துள்ளனர்.

இந்தநிலையில் மீதமுள்ள தண்டனைக் காலம் முடியும் வரை இவர்கள் தமிழக சிறைகளில் தடுத்து வைக்கப்படவுள்ளனர்.

வீராத் கோலிக்கு அர்ஜூனா விருது!!

kohli_sindhu_award

இந்திய அணியின் வீரர் வீராத் கோலிக்கு விளையாட்டு துறையின் உயரிய விருதான அர்ஜூனா விருது வழங்கப்படவுள்ளது.

விளையாட்டுத் துறையில் சாதனை படைத்த வீரர்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் கடந்த உலக கிண்ண போட்டியில் துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் பெற்றுக் கொடுத்த ரஞ்சன் சோதி, கேல் ரத்னா விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அதேபோல் கோலி, சிந்து ஆகியோர் அர்ஜூனா விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இந்திய கிரிக்கெட் அணிக்கு தலைமை ஏற்று சிம்பாவே அணியுடனான தொடரை 5-0 என்ற கணக்கில் கைப்பற்றியவர் கோலி.

சமீபத்தில் நிறைவடைந்த உலக பட்மிண்டன் போட்டியில் இந்தியா சார்பில் முதல் முறையாக ஒற்றையர் பிரிவில் வெண்கலம் வென்றவர் பி.வி. சிந்து. இவர்களுக்கான விருதுகள் வரும் 29ம் திகதி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியால் வழங்கப்பட உள்ளன.

சிறந்த வீரர்களுக்கான கனவு அணியில் கும்ப்ளே, டிராவிட்..!!

kumble

சிறந்த வீரர்கள் அடங்கிய கனவு அணியில் கும்ளே, டிராவிட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். கர்நாடக கிரிக்கெட் சங்கம் சார்பில் பிளாட்டினம் விழா நேற்று கொண்டாடப்பட்டது.

இந்த விழாவின் சிறப்பம்சமாக கர்நாடகாவை சேர்ந்த 12 சிறந்த முன்னாள் வீரர்கள் அடங்கிய கனவு அணி தெரிவு செய்யப்பட்டது.
இந்த அணியை இந்திய அணியின் முன்னாள் விக்கெட் காப்பாளர் கிர்மானி தெரிவு செய்தார்.

கனவு அணியின் அணித்தலைவராக வெங்கட்ராமன் சுப்ரமணியா தெரிவு செய்யப்பட்டுள்ளார். மேலும் ஓய்வு பெற்ற கும்ளே, டிராவிட் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

அணி விவரம்: சுப்ரமணியா(அணித்தலைவர்), ரோஜர் பின்னி, டிராவிட், விஸ்வநாத், பிரிஜேஷ் படேல், கிர்மானி(விக்கெட் காப்பாளர்), சுனில் ஜோஷி, கும்ளே, பிரசன்னா, சந்திரசேகர், ஸ்ரீநாத், வெங்கடேஷ் பிரசாத்.

தலைவா படம் வெளிவரவில்லையெனில் குண்டு வைப்பேன்: பொலிசாருக்கு மர்மநபர் மிரட்டல்!!

Vijay Thalaivaa Photos

தலைவா படத்தை உடனடியாக திரையிட வேண்டும், தாமதப்படுத்தினால் தியேட்டர்களுக்கு குண்டு வைப்பேன் என மிரட்டிய மர்ம நபரை பொலிசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இயக்குனர் விஜய் இயக்கத்தில், இளைய தளபதி விஜய் நடிப்பில் திரைக்கு வரத் தயாராக உள்ள திரைப்படம் தலைவா. கடந்த வெள்ளியன்றே திரைக்கு வரவேண்டிய தலைவா சில காரணங்களால் வெளியாகமல் உள்ளது.

முதலில் படத்தை திரையிட்டாக் தியேட்டரில் குண்டு வெடிக்கும் என வந்த மிரட்டல்களைத் தொடர்ந்து தற்போது படத்தை வெளியிட தாமதப்படுத்தினால் தியேட்டருக்கு குண்டு வைப்போம் என மிரட்டல் விடுத்துள்ளார் ஒரு மர்மநபர்.

சென்னை உதயம் தியேட்டருக்கு நேற்று முந்தினம் வந்த தொலைபேசி அழைப்பில் தலைவா படத்தை வெளியிட தாமதமானால் தியேட்டருக்கு குண்டு வைக்கப்போவதாக மிரட்டியுள்ளார் மர்ம நபர் ஒருவர். பிறகு மீண்டும் குறித்த நபரே பொலிசைத் தொடர்பு கொண்டு கோயம்பேட்டிலும் குண்டு வைத்துள்ளதாகக் அச்சுறுத்தியுள்ளான்.

சென்னை உதயம் தியேட்டரிலும், சென்னை கோயம்பேட்டிலும் குண்டு வைத்துள்ளதாக அடுத்தடுத்து வந்த மர்மப் போனைத் தொடர்ந்து பொலிசார் சம்பந்தப்பட்ட இடங்களில் தீவிர சோதனைகளில் ஈடுபட்டனர்.

ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. மர்மபோன் வந்த தொலைபேசி எண்ணை பொலிசார் ஆராய்ந்தபோது, அது மூன்று தினங்களுக்கு முன்னர் காணாமல் போன வடபழனியைச் சேர்ந்த ஒருவருடையது எனத் தெரிய வந்தது. மிரட்டல் விடுத்த மர்ம நபரைப் பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தொடர்ந்து வரும் மிரட்டல்களால் தியேட்டர் அதிபர்கள் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர். ஒரு தரப்பினர் படத்தை வெளியிடக்கோரியும், மற்றொரு தரப்பினர் படத்தை வெளியிடக்கூடாது எனவும் மாறி, மாறி வரும் மிரட்டல்களால் குழப்பத்தில் உள்ளனர் தியேட்டர் முதலாளிகள்.

நம்ப முடியாத அட்டகாசமான படைப்புக்கள்!!( படங்கள்)

நாம் உபயோகப்படுத்தும் பென்சிலை வைத்து எதனை விதமான வடிவங்களை செதுக்கியுள்ளார்கள் என்று பாருங்கள். மிகவும் நுண்ணிய வேலைப்பாடுகள் செய்ததன் மூலமே இத்தகைய உருவங்களை செதுக்கியுள்ளார்கள்..

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16

பூமியை தாக்க வரும் 20 இராட்சத விண்கற்கள்!!

BA00776

20 இராட்சத விண்கற்கள் பூமியை தாக்க பாய்ந்து வருவதாக ஸ்பெயின் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

வானில் ஏராளமான விண்கற்கள் மிதக்கின்றன. அவற்றில் சில பூமியை நோக்கி வருகின்றன. வரும் வேகத்தில் எரிந்து சாம்பலாகின்றன. அதே நேரத்தில் ஓரிரு விண்கற்கள் பூமியை தாக்கி கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மிகப்பெரிய இராட்சத விண்கல் பூமியை தாக்கியது. 18 மீட்டர் அகலமும், 11 ஆயிரம் டன் எடையுடன் கூடிய அக்கல் ரஷியாவை நோக்கி வந்தது.

விஞ்ஞானிகளின் முயற்சியில் அந்த இராட்சத விண்கல் 460 டன்னாக உடைக்கப்பட்டு சிதறல்களாக பூமியில் விழுந்தது. அதன் தாக்குதலில் 1000க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.

இக்கல் செலியாபின்ஸக் என அழைக்கப்படுகிறது. அது போன்ற 20 மிகப்பெரிய இராட்சத விண்கற்கள் பூமியை தாக்க பாய்ந்து வருகின்றன.
ஸ்பெயினில் உள்ள மாட்ரிட் கம்புலுடன்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானி கார்லோஸ் டி லா புயன்டா மஸ்கோஸ் தலைமையிலான குழுவினர் இதை கண்டறிந்து எச்சரித்துள்ளனர்.

கடந்த 20 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மிகப்பெரிய இராட்சத விண்பாறை ஒன்று சூரிய குடும்பத்துக்குள் வந்தது. சூரியன் அருகே வந்த போது கடும் வெப்பம் மற்றும் புவிஈர்ப்பு விசையால் அந்த இராட்சத விண்பாறை பல துண்டுகளாக நொறுங்கியது.

தற்போது அவற்றில் சில விண்வெளியில் மிதிக்கின்றன. அவற்றை கடந்த 2011ம் ஆண்டில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்து அதற்கு 2011 EO 40 என பெயரிட்டனர். அவ்வாறு மிதக்கும் 20 இராட்சத விண்கற்கள்தான் பூமியை தாக்கும் நிலையில் அச்சுறுத்தி வருகின்றதாம்.